Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

26th & 27th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

26th & 27th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 26th & 27th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th & 27th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘Sonzal–2022’ என்பது கீழ்க்காணும் எம்மாநிலம்/UTஇல் ஆண்டுதோறும் நிகழும் ஓர் இளையோர் விழாவாகும்?

அ. ஜம்மு & காஷ்மீர்

ஆ. ஒடிஸா

இ. கேரளா

ஈ. இராஜஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஜம்மு & காஷ்மீர்

  • ஜம்மு–காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இளையோர் திருவிழாவான, ‘சோன்சல்–2022’ஐ தொடக்கிவைத்தார். இளம் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக இவ்விழா அமைகிறது. மேலும், ‘ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற கனவை அடைவதற்கான ஒரு தளத்தை ‘சோன்சல்’ விழா வழங்குகிறது.

2. யாரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ‘தேசிய பால் நாள்’ அனுசரிக்கப்படுகிறது?

அ. M S சுவாமிநாதன்

ஆ. Dr வர்கீஸ் குரியன்

இ. சரண் சிங்

ஈ. மொரார்ஜி தேசாய்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Dr வர்கீஸ் குரியன்

  • “இந்தியாவின் பால்காரர்” என்று அழைக்கப்படும் “இந்தியாவின் வெண்மைப்புரட்சியின் தந்தை” Dr வர்கீஸ் குரியன் அவர்களின் 101ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ‘தேசிய பால் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின்போது மதிப்புமிக்க, ‘தேசிய கோபால் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் நடக்கும் இந்தத் தேசிய நிகழ்வில், வர்கீஸ் குரியன் வாழ்க்கை குறித்த வரலாற்று நூல் மற்றும் பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்த சிறுநூலும் வெளியிடப்படவுள்ளது.

3. இந்தியாவின் முதலாவது இரவு வான் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. சிக்கிம்

இ. உத்தரகாண்ட்

ஈ. லடாக்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. லடாக்

  • இந்தியாவின் முதல் இரவு வான் சரணாலயம் லடாக்கின் ஹான்லேயில் நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள அறிவியல் & தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலால் நிறுவப்படுகிறது. திட்டமிடப்பட்ட இந்த இரவு வான் சரணலாயத்தின் காப்பகம், சாங்தாங் வனவுயிரிகள் சரணாலயத்தின் ஒருபகுதியாக ஹான்லேயில் அமைக்கப்படும். இது இந்தியாவில் வானவியல்–சுற்றுலாவை மேம்படுத்தும். ஆப்டிகல், அகச்சிவப்புக்கதிர் மற்றும் காமா கதிர் தொலைநோக்கிகளுக்கான உலகின் மிகவுயர்ந்த தளங்களுள் ஒன்றாக இது இருக்கும்.

4. 27 ஆண்டுகால இயற்கை எரிவாயு வழங்கல் ஒப்பந்தத்தில் சீனாவுடன் கூட்டு சேர்ந்துள்ள நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. கத்தார்

இ. ஈரான்

ஈ. ரஷ்யா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கத்தார்

  • கத்தார் ஆற்றல் நிறுவனமானது சீனாவுடனான 27 ஆண்டுகால இயற்கை எரிவாயு வழங்கல் ஒப்பந்தத்தை அறிவித்தது. இன்றுவரை கையெழுத்திடப்பட்ட மிகநீண்ட கால எரிவாயு வழங்கல் ஒப்பந்தம் இதுவாகும். கத்தார் ஆற்றல் நிறுவனமானது அதன் புதிய வடகள கிழக்குத் திட்டத்திலிருந்து ஆண்டுதோறும் நான்கு மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை சீன பெட்ரோலியம் & கெமிக்கல் கார்ப்பரேஷனுக்கு (சினோபெக்) அனுப்பும்.

5. இந்தியாவில், ‘அரசியலமைப்பு நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.24

ஆ. நவம்பர்.26

இ. நவம்பர்.30

ஈ. டிசம்பர்.01

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நவம்பர்.26

  • கடந்த 1949ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதன் நினைவாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நவ.26 அன்று அரசியலமைப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. முன்னர் இந்த நாள் சட்ட நாளாக அனுசரிக்கப்பட்டது. இந்த நாளின்போது, ‘விர்ச்சுவல் ஜஸ்டிஸ் கடிகாரம்’, ‘JustIS’ திறன்பேசி செயலி 2.0, டிஜிட்டல் கோர்ட் மற்றும் ‘S3WaaS’ இணையதளங்கள் உள்ளிட்ட இ–கோர்ட் திட்டத்தின் கீழ் புதிய முயற்சிகளை பிரதமர் தொடங்குவார்.

6. 2022இல் 26ஆவது சர்வதேச மலபார் கடற்படை பயிற்சியை நடத்தும் நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஜப்பான்

இ. இந்தியா

ஈ. அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜப்பான்

  • ஜப்பானின் யோகோசுகாவில் தொடங்கும் 26ஆம் சர்வதேச மலபார் கடற்படை பயிற்சியில் இந்தியா பங்கேற்கிறது. மலபார் கடற்படை பயிற்சியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன. மலபார் பயிற்சியானது கடந்த 1992ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே தொடங்கப்பட்டது. இந்திய கடற்படைக் கப்பல்களான INS ஷிவாலிக் மற்றும் INS கமோர்டாவுடன் இந்தியா இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

7. ‘நங்கனா சாஹிப்’ என்பது கீழ்க்காணும் எந்த நாட்டில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத்தலமாகும்?

அ. இந்தியா

ஆ. பாகிஸ்தான்

இ. நேபாளம்

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பாகிஸ்தான்

  • குருபுரப் பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப்பிற்கு இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் வருகை தருவதற்கு நடுவண் உள்துறை அமைச்சகம் வசதி செய்துள்ளது. மொத்தம் 2420 இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் பத்து நாள் பாகிஸ்தான் யாத்திரை நுழைவு இசைவுடன் குருநானக் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு புறப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவிற்கு குருபுரப் பண்டிகையையொட்டி இந்தியாவில் இருந்து மொத்தம் 433 யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர்.

8. ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. மேற்கு வங்கம்

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • ஆனைமலை புலிகள் காப்பகமானது யானைகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசு சாரா நிறுவனங்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அல்லது தனிநபர்கள் வனத்துறையின் முகாம் யானைகளின் செலவுகளுக்கு நிதியுதவி செய்யலாம். உணவுகள், மருந்துகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் பிற தற்செயலான செலவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வர். யானைகளைத் தத்தெடுக்க விரும்புவோர்க்கு வருமான வரிச்சட்டம், 1961இன் 80ஜி பிரிவின்கீழ் விலக்களிக்கப்படும்.

9. மதுரா–பிருந்தாவனம் என்ற புனித யாத்திரை தலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. உத்தரகாண்ட்

இ. உத்தர பிரதேசம்

ஈ. பஞ்சாப்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உத்தர பிரதேசம்

  • இந்தியாவின் முக்கிய புனித யாத்திரை தலங்களுள் ஒன்றான மதுரா–பிருந்தாவனம், 2041ஆம் ஆண்டுக்குள், ‘நிகர சுழிய கரியமிலவாயு (CO2) உமிழ்வு’ சுற்றுலாத்தலமாக மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசாங்கத்தின்படி, வரைவு மறுவடிவமைப்புத் திட்டத்தில் சுற்றுலா வாகனங்களுக்குத் தடைவிதிக்கவும், பொதுமக்களை மின்சார வாகனங்களில் வரச்சொல்லி ஊக்கப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரா–பிருந்தா வனத்திற்கு ஆண்டுதோறும் வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த எண்ணிக்கை 2041ஆம் ஆண்டுவாக்கில் ஆறு கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. ‘முதலமைச்சர் தேவதர்ஷன் யாத்ரா யோஜனா’வைத் தொடங்கியுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கோவா

ஆ. புது தில்லி

இ. உத்தர பிரதேசம்

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கோவா

  • கோவா மாநில அரசாங்கம், ‘முதலமைச்சர் தேவதர்ஷன் யாத்ரா யோஜனா’ என்ற பெயருடைய மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் புனித யாத்திரைத்திட்டத்தை முறையாகத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். சுற்றுலாவின்போது யாத்ரீகர்களின் உணவு மற்றும் தங்குவதற்கு மாநில அரசு நிதியுதவி அளிக்கும். இந்தத் திட்டத்தின்கீழ் திருப்பதிக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தை முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘பத்மஸ்ரீ’, ‘கேல் இரத்னா’ விருதுபெற்ற முனைவர் (கௌரவ பட்டம்) தீபா மாலிக், காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் தேசிய தூதராகி உள்ளார்.

‘பத்மஸ்ரீ’, ‘கேல் இரத்னா’ விருதுபெற்ற, இந்தியாவின் முதலாவது மகளிர் பாராலிம்பிக் பட்டம் வென்ற, இந்திய பாரா லிம்பிக் குழுவின் தலைவரான முனைவர் (கௌரவ பட்டம்) தீபா மாலிக், காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் தேசிய தூதராகி உள்ளார். இந்த இயக்கத்திற்கு முழு ஆதரவளிக்க அவர் உறுதிபூண்டுள்ளார்.

2. “ஆஸ்த்ரா ஹிந்த்-22” கூட்டு இராணுவப்பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வருகை

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய இராணுவத்திற்கு இடையே, “ஆஸ்த்ரா ஹிந்த்-22” என்ற கூட்டு பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் 2022 நவ.28 முதல் டிச.11 வரை நடைபெறவுள்ளது. இரு இராணுவங்களின் அனைத்து படைகளும் கலந்து கொள்ளும் முதல் பயிற்சி, இது. இந்திய இராணுவத்தின் டோக்ரா படை, இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளது. ஆஸ்த்ரா ஹிந்த் பயிற்சி, ஆண்டுதோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறிமாறி நடைபெற்று வருகிறது. நேர்மறையான இராணுவ உறவைக் கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் இணைந்து பணியாற்றும் திறனை ஊக்குவிப்பது முதலியவை இந்தப்பயிற்சியின் நோக்கமாகும்.

3. எழுத்தாளர் இமையத்துக்கு குவெம்பு விருது

‘குவெம்பு இராஷ்டிரிய புராஸ்கர்’ தேசிய விருதைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்ற எழுத்தாளர் இமையம்.

‘குவெம்பு’ என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே வி புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பளி வெங்கடப்ப கௌடா புட்டப்பா அவர்கள், கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரின் நினைவைப் போற்றும் வகையில் குவெம்பு அவர்களின் நினைவு அறக்கட்டளை சார்பாக, 2013ஆம் அண்டு முதல் ‘குவெம்பு இராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டிற்கான (2022) ‘குவெம்பு இராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது’ சாகித்திய அகாதெமி விருதுபெற்ற இமையம் என்கிற வெ அண்ணாமலை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதுடன் பரிசுத்தொகையாக `5 இலட்சமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கப்படவிருக்கிறது. இந்த விருதைப் பெறுவதன்மூலம் ‘குவெம்பு இராஷ்டிரிய புராஸ்கர்’ தேசிய விருதைப்பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையையும் பெறுபவராவார் எழுத்தாளர் இமையம்.

4. 9 செயற்கைக்கோள்களின் முக்கியப் பயன்கள் என்ன?

பிஎஸ்எல்வி சி54 ஏவுகலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

புவி கண்காணிப்புக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ள இஓஎஸ்-06 செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ள அதி நவீன ஆர்கோஸ் தொழில்நுட்பம் மற்றும் கு-பேண்ட்மூலம் கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், காற்றின் வேகம் ஆகியவை கண்காணிக்கப்படும். மேலும், இது கடல் நிறம், காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும்.

ஐஎன்எஸ் 2பி: இந்தியா-பூடான் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐஎன்எஸ் 2பி இரண்டு நானோ செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.

ஆனந்த் சாட்: பெங்களூரைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப துளிர் நிறுவனமான, ‘பிக்செல்’, ஆனந்த் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. நாட்டின் முதல் தனியார் புவி கண்காணிப்புச் செயற்கைக்கோள் இதுவாகும். இந்தச் செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், பூமியை விரிவாக படம்பிடிக்க முடியும். குறைந்த வட்டப்பாதையில் செயற்கைக்கோள் சுற்றிவரும்.

தைபோல்ட்: ஹைதராபாதைச் சார்ந்த துளிர் நிறுவனமான துருவா ஸ்பேஸ் உருவாக்கிய தைபோல்ட் 2 செயற்கைக் கோள்கள், தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக ஏவப்பட்டுள்ளன. இச்செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஓராண்டு ஆகும்.

ஆஸ்ரோகாஸ்ட் நான்கு செயற்கைக்கோள்: அமெரிக்காவின் ஸ்பேஸ் ப்ளைட்டின் செயற்கைக்கோள். தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ஆஸ்ரோகாஸ்ட் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

5. கோதுமை, எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு 10%-க்கு மேல் அதிகரிப்பு

நடப்பு இஇரபி பருவத்தில் கோதுமை மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து உள்ளது என்று நடுவண் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபரில் பிரதான இஇரபி பயிரான கோதுமை சாகுபடி தொடங்குகிறது. அதன் அறுவடை மார்ச்-ஏப்ரலில் நடைபெறுகிறது. 2022-23ஆம் பயிராண்டின் (ஜூலை முதல் ஜூன்) இரபி பருவத்தில் கோதுமையைத்தவிர, பயறு, கடுகு ஆகிய வேறு முக்கிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், நடுவண் வேளாண் அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த ஆண்டின் இஇரபி பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பு 10.5 சதவீதம், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு 13.58 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் கடந்த ஆண்டு சாகுபடி பரப்பு நிகழாண்டு சாகுபடி பரப்பு (நவ.25 வரை)

கோதுமை 138.35 இலட்சம் ஹெக்டேர் 152.88 இலட்சம் ஹெக்டேர்

நெல் 8.33 இலட்சம் ஹெக்டேர் 9.14 இலட்சம் ஹெக்டேர்

எண்ணெய் வித்துக்கள் 66.71 இலட்சம் ஹெக்டேர் 75.77 இலட்சம் ஹெக்டேர்

பயறு வகைகள் 94.37 இலட்சம் ஹெக்டேர் 94.26 இலட்சம் ஹெக்டேர்

சோளம், வாற்கோதுமை போன்ற தானியங்கள் 26.70 இலட்சம் ஹெக்டேர் 26.54 இலட்சம் ஹெக்டேர்

நிகழாண்டு அதிக அளவில் கோதுமை சாகுபடி செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் (நவ.25 வரை)

மத்திய பிரதேசம்-6.40 இலட்சம் ஹெக்டேர்

இராஜஸ்தான்-5.67 இலட்சம் ஹெக்டேர்

பஞ்சாப்-1.55 இலட்சம் ஹெக்டேர்

எண்ணெய் வித்துக்களில் இந்த ஆண்டு 70.89 இலட்சம் ஹெக்டேர் பரப்பில் கடுகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 61.96 இலட்சம் ஹெக்டேராக இருந்தது.

நடப்பு பருவத்தில், இதுவரை அனைத்து இரபி பயிர்களின் சாகுபடி பரப்பு 358.59 இலட்சம் ஹெக்டேராகும். இது கடந்த ஆண்டின் 334.46 இலட்சம் ஹெக்டேரைளவிட 7.21 சதவீதம் அதிகம்.

இரபி பயிர்கள் சாகுபடி பரப்பு 24 இலட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு:

கடந்த ஆண்டு இரபி பருவத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு பருவத்தில் இரபி பயிர்களின் சாகுபடி பரப்பு இதுவரை 24.13 இலட்சம் ஹெக்டேர் உயர்ந்துள்ளது.

26th & 27th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Sonzal–2022’ is an annual youth festival held in which state/UT?

A. Jammu and Kashmir

B. Odisha

C. Kerala

D. Rajasthan

Answer & Explanation

Answer: A. Jammu and Kashmir

  • Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha inaugurated the annual youth festival ‘Sonzal–2022’ at the University of Kashmir. The festival is an opportunity for young artists to showcase their talents and ‘Sonzal’ provides them with a platform to achieve the dream of ‘Ek Bharat, Shreshta Bharat’.

2. ‘National Milk Day’ is observed to commemorate the birth anniversary of which personality?

A. M S Swaminathan

B. Dr Verghese Kurien

C. Charan Singh

D. Morarji Desai

Answer & Explanation

Answer: B. Dr Verghese Kurien

  • ‘National Milk Day’ is observed to commemorate 101st birth anniversary of the ‘Father of the White Revolution in India’, Dr Verghese Kurien also known as the ‘Milkman of India’. The prestigious National Gopal Ratna Awards 2022 will also be conferred on the day. In the national event in the state of Karnataka, a book on the life of Varghese Kurian and a booklet on Milk Adulteration is to be released.

3. India’s first–ever Night Sky Sanctuary is located in which state/UT?

A. Himachal Pradesh

B. Sikkim

C. Uttarakhand

D. Ladakh

Answer & Explanation

Answer: D. Ladakh

  • India’s first–ever Night Sky Sanctuary is being set up by Council of Scientific & Industrial Research under Union Ministry of Science & Technology, in Ladakh’s Hanle. The proposed Dark Sky Reserve will be located at Hanle as a part of Changthang Wildlife Sanctuary. It will boost Astro–tourism in India and will be one of the world’s highest–located sites for optical, infra–red, and gamma–ray telescopes.

4. Which country has partnered with China for a 27–year natural gas supply deal?

A. UAE

B. Qatar

C. Iran

D. Russia

Answer & Explanation

Answer: B. Qatar

  • Qatar Energy announced a 27–year natural gas supply deal with China. It is the longest such gas agreement signed till date. The state energy company will send four million tonnes of liquefied natural gas annually from its new North Field East project to China Petroleum and Chemical Corporation (Sinopec).

5. When is the ‘Constitution Day’ celebrated in India?

A. November.24

B. November.26

C. November.30

D. December.01

Answer & Explanation

Answer: B. November.26

  • Since 2015, November 26 is observed as Constitution Day to commemorate the adoption of the Constitution of India by the Constituent Assembly in 1949. Earlier, the day was observed as Law Day. During the programme, the prime minister will launch new initiatives under the e–court project including the ‘virtual justice clock’, ‘JustIS’ mobile app 2.0, digital court and ‘S3WaaS’ websites.

6. Which country is the host of 26th International Malabar Naval Exercise in 2022?

A. Australia

B. Japan

C. India

D. USA

Answer & Explanation

Answer: B. Japan

  • India is participating in 26th International Malabar Naval Exercise beginning in Yokosuka of Japan. Australia, Japan and the USA are also participating in the Malabar Naval Exercise. The MALABAR Exercise was initiated in 1992 between the navies of India and the United States. India is participating in the exercise with Indian Naval Ships (INS) Shivalik and Kamorta.

7. ‘Nankana Sahib’ is a Sikh pilgrimage place located in which country?

A. India

B. Pakistan

C. Nepal

D. Bangladesh

Answer & Explanation

Answer: B. Pakistan

  • The Union Home Ministry has facilitated the visit of Indian Sikh pilgrims to Nankana Sahib in Pakistan on the occasion of Gurupurab. A total of 2420 Indian Sikh pilgrims departed for Pakistan to participate in the Guru Nanak Jayanti celebrations with a ten–day Pakistani Pilgrim Visa. A total of 433 pilgrims from India visited Sri Kartarpur Sahib Gurdwara in Pakistan on the occasion of Gurupurab.

8. Anamalai Tiger Reserve is located in which state?

A. Tamil Nadu

B. Kerala

C. West Bengal

D. Gujarat

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • The Anamalai Tiger Reserve has launched an elephant adoption programme, under which non–governmental organisations, institutions, trusts or individuals can sponsor the expenses of Forest Department’s camp elephants. The sponsor will bear expenses of the feeds, medicines, health supplements and other incidental expenses. Any donor who is willing to adopt the elephants will get an exemption under section 80 G of the Income Tax Act 1961.

9. Mathura–Vrindavan is a pilgrimage centre in which state?

A. Gujarat

B. Uttarakhand

C. Uttar Pradesh

D. Punjab

Answer & Explanation

Answer: C. Uttar Pradesh

  • Mathura–Vrindavan, one of India’s major pilgrimage centres, aims to become a ‘net zero carbon emission’ tourist destination by 2041. As per the Uttar Pradesh government, the draft redevelopment plan calls for ban on tourist vehicles and switch to electric vehicles for public transport.  Annual tourist footfall to Mathura–Vrindavan is expected to grow to 6 crores by 2041.

10. Which state/UT has launched ‘Mukhyamantri Devdarshan Yatra Yojana’?

A. Goa

B. New Delhi

C. Uttar Pradesh

D. Gujarat

Answer & Explanation

Answer: A. Goa

  • Goa government has formally launched a state–sponsored pilgrimage scheme for people named ‘Mukhyamantri Devdarshan Yatra Yojana’. Under the scheme, people over the age of 50 years are eligible to apply and the state government funds the meals and boarding of pilgrims during the tours. Chief Minister Pramod Sawant flagged off a bus carrying passengers to Tirupati under the scheme.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!