26th & 27th October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள, நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக தாக்கியழிக்கும் போர்க்கப்பலின் பெயர் என்ன?

அ. INS கவச்

ஆ. INS கவராட்டி

இ. INS கமோர்தா

ஈ. INS கில்தான்

 • விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான INS கவராட்டி போர்க்கப்பலை, ராணுவ தலைமைத்தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கடற்படையில் இணைத்து வைத்தார். நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக தாக்கியழிக்கும் கமோர்தா வகையைச் சேர்ந்த 4 சிறிய போர்க்கப்பல்கள் உள்நாட்டு தொழினுட்பத்தில் உருவாக்கப்பட்டன. இவற்றில் கடைசி போர்க்கப்பலான INS கவராட்டி, கடற்படையில் இணைந்துள்ளது. இவை அனைத்தும் ‘Project 28’இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
 • INS கவராட்டி போர்க்கப்பலை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள் என்ற நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2. 80,000 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கரும்பலகை திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. ஒடிஸா

ஈ. ஆந்திர பிரதேசம்

 • 80,000 அரசாங்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கரும்பலகை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் கரும்பலகை திட்டத்தின்கீழ், ஒலி-ஒளி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும். இதற்கு விரலிகளும், கணினித் திரைகளும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டம் சிறந்த கற்பித்தல் சூழலை உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. ICMR’ஆல் அங்கீகரிக்கப்பட்ட மலிவுவிலை COVID-19 பரிசோதனை அலகான, ‘COVIRAP’ என்பதை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. IIT சென்னை

ஆ. IIT கரக்பூர்

இ. AIIMS

ஈ. JIPMER

 • கரக்பூரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமம், ‘COVIRAP’ என்ற பெயரில் குறைந்த விலையில் COVID-19 பரிசோதனை அலகை உருவாக்கியுள்ளது.
 • COVID-19’இன் விரைவான நோயறிதலுக்கான ஒரு சிறிய அலகான இது, ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளைத் தருகிறது. இந்த அலகு துல்லியமான மூலக்கூறு கண்டறியும் செயல்முறையை உள்ளடக்கியதாகும். இதில் ஒருமுறை பரிசோதிக்க `500 மட்டுமே செலவாகும்.

4. ‘இ-தர்தி ஜியோ’ வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. சுற்றுச்சூழல் அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

 • மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில், ‘இ-தர்தி ஜியோ’ வலைதளத்தை அறிமுகப்படுத்தினார். இ-தர்தி என்ற பெயரிலான இம்மேலாண்மை தகவலமைப்பில், வரைபடங்கள் மற்றும் குத்தகைத் திட்டங்கள் போன்ற வரைபடங்களை ஒருங்கிணைத்து, புவியியல் தகவலமைப்புடன் (GIS) அவற்றை ஒருங்கிணைத்த ஒரே அமைப்பாக மாற்றுவதை இந்தத் வலைதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. ‘The Future of Jobs Report 2020’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. ILO

ஆ. WEF

இ. WTO

ஈ. UNCTAD

 • சுவிச்சர்லாந்தைச் சார்ந்த உலக பொருளாதார மன்றம் (WEF) அண்மையில், ‘The Future of Jobs Report 2020’ என்ற தலைப்பிலான ஓரறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, ரோபாட்டிக்ஸ் & செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் அதிக பணிவாய்ப்புகளை உருவாக்கும். COVID-19 கொள்ளைநோய், தொழிலாளர்களுக்கு, “இரட்டை இடையூறு” ஏற்படுத்தும் என்பதையும் அவ்வறிக்கை வெளிப்படுத்தியது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Right of First Refusal (RoFR)’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. மருத்துவம்

ஆ. கப்பல் வாணிபம்

இ. சுற்றுச்சூழல்

ஈ. கல்வி

 • நடுவணரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ கொள்கையை பின்பற்றுவதற்காக, ஒப்பந்த முறையில் கப்பல்களை வாடகைக்கு அமர்த்தும் உரிமம் நிபந்தனையை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் மீளாய்வுசெய்து திருத்தியுள்ளது. இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களுக்கான தேவையை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப உரிமம் நிபந்தனை வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யப்பட்டது.

7. தொழிலாளர் அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி தொழிற்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணுக்கான அடிப்படை ஆண்டு எது?

அ. 2010

ஆ. 2012

இ. 2016

ஈ. 2018

 • தொழிற்துறை ஊழியர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட நுகர்வோர் குறியீட்டு எண்ணை மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொழிற்துறையினருக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணின் புதிய பதிப்பு, 2001 = 100 என்ற அடிப்படையிலிருந்து 2016 = 100 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உடல்நலம், கல்வி மற்றும் பிற இதர செலவுகளுக்கு அதிக பங்கை கொடுப்பதற்காக மாறிவரும் நுகர்வு முறைக்கு ஏற்ற வகையில் இது செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை பாதிக்காது.

8. கோல்கொண்டா கோட்டை அமைந்துள்ள இந்திய நகரம் எது?

அ. அமிர்தசரஸ்

ஆ. ஜான்சி

இ. ஹைதராபாத்

ஈ. அயோத்தியா

 • அண்மையில் ஹைதராபாத்தில் பெய்த கனமழையின் காரணமாக 500 ஆண்டுகள் பழமையான கோல்கொண்டா கோட்டை சேதமடைந்துள்ளது. இது, குதுப் ஷாஹி வம்சத்தின் தொடக்ககால தலை நகரமாகும். இந்திய தொல்பொருள் ஆய்வறிக்கையின்படி, அரசப்பாதையின் படிகள் மற்றும் பாறைகள், ஜகதாம்பிகை கோவிலுக்கு அருகிலுள்ள சுவர், பின்புற சுவர் மற்றும் இரண்டாவது கிணற்றுக்கு அருகிலுள்ள ஓர் அமைப்பு ஆகியவை கடுஞ்சேதமடைந்துள்ளன.

9. பிணைமுறிகளை முன்மொழிந்துள்ள IRDAI பணிக்குழுவின் தலைவர் யார்?

அ. G ஸ்ரீநிவாசன்

ஆ. அசோக் மேத்தா

இ. இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ்

ஈ. உதய் கோடக்

 • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை & மேம்பாட்டு ஆணையமானது (IRDAI) நியூ இந்தியா அஷ்யூரன்சின் முன்னாள் தலைவர் G ஸ்ரீநிவாசன் தலைமையில் செயற்குழுவொன்றை அமைத்துள்ளது. இந்திய காப்பீட்டுத் துறையால் பிணைமுறிகளை வழங்குவதற்கான பொருத்தத்தை ஆய்வு செய்ய இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை பத்திரங்களின் அடிப்படை கடமைகளை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக பிணைமுறி ஒரு பயனாளியைப் பாதுகாக்கின்றது. காப்பீட்டுத்துறையில் பிணைமுறிகளை அறிமுகப்படுத்துவதற்கு இந்தக் குழு ஆதரவளித்துள்ளது.

10. மலேசியா & பப்புவா நியூ கினியாவில் உள்ள அமைப்புக்கும், இந்தியாவில் உள்ள அதற்கிணையான எவ்வமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு இந்திய நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. இந்திய விண்வெளி ஆய்வு மையம்

ஆ. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்

இ. இந்திய உணவுப் பாதுகாப்பு & தரப்படுத்தல் ஆணையம்

ஈ. இந்திய புவியியல் ஆய்வு மையம்

 • இந்தியாவின் ICAI மற்றும் மலேசியாவின் MICPA ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம், தகுதியுடைய ICAI உறுப்பினர் MICPA’இலும், தகுதியுடைய MICPA உறுப்பினர் ICAI’இலும் இணைந்துகொள்ள வழிவகுக் -கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களோடு இருதரப்பு கூட்டு ஏற்படுத்திக்கொள்ள ICAI விரும்புகிறது. அதன் ஒருபகுதியாக MICPA உடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 • இந்த ஒப்பந்தத்தின்மூலம், உரிய முறையில் ICAI சான்றளித்த நபர்களை MICPA’உம், அதேபோன்று MICPA சான்றளித்த உறுப்பினர்களை ICAI’உம் ஏற்றுக்கொள்ளும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

 • 2020 செப்டம்பர் மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கு அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்களை மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில் 1234 புள்ளிகளுடனும், ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில் 1218 புள்ளிகளுடனும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
 • கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கோயம்புத்தூரில் ‘கிராமிய புதல்வன்’ கலைக்குழுவை நடத்தி வருபவரும், தமிழ்நாடு அரசாங்கத்தின் கலைப்பிரிவில் தூதராகவும் உள்ள கலையரசனுக்கு, ஐநா அவையின் பவளவிழாவையொட்டி கலைஞர்களை கெளரவப்படுத்தும் விதமாக, ‘கிராமிய விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கலையரசனுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

1. What is the name of the Anti–Submarine Warfare stealth corvette commissioned into the Indian Navy?

[A] INS Kavach

[B] INS Kavaratti

[C] INS Kamorta

[D] INS Kiltan

 • INS Kavaratti, Anti–Submarine Warfare (ASW) stealth corvette built under Project 28 (Kamorta Class) was commissioned into the Indian Navy by General Manoj Mukund Naravane, Chief of the Army Staff at a ceremony held at Naval Dockyard, Visakhapatnam. INS Kavaratti is the last of the four indigenously built ASW stealth corvettes under ‘Project 28’. It has been built by the Garden Reach Shipbuilders & Engineers Ltd.

2. Which state has implemented Smart Black Board scheme in 80,000 Government schools?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Odisha

[D] Andhra Pradesh

 • Tamil Nadu state government has started implementing the Smart Black Board scheme in 80,000 government schools. Under the Smart Black Board scheme, audio visual teaching material is used that can be fed into the computer screens using pen drives. This project is expected to ensure better teaching environment.

3. Low cost COVID–19 test unit ‘COVIRAP’, which was approved by ICMR, was developed by which institution?

[A] IIT Chennai

[B] IIT Kharagpur

[C] AIIMS

[D] JIPMER

 • A team of researchers at the Indian Institute of Technology in Kharagpur has developed a low–cost COVID–19 test unit named ‘COVIRAP’. It is a portable unit for rapid diagnostics of coronavirus and produces results in less than an hour.
 • It involves accurate molecular diagnostic procedure and costs only around Rs 500 per test. The team also developed a mobile application for finding the results.

4. Which Union Ministry has launched ‘e–Dharti Geo portal’?

[A] Ministry of Housing and Urban Affairs

[B] Ministry of Agriculture

[C] Ministry of Environment

[D] Ministry of Home Affairs

 • Union Housing and Urban Affairs Minister Hardeep Singh Puri has recently launched the ‘e–Dharti Geo Portal’. The portal aims to integrate legacy drawings such as maps and lease plans in the management information system named e–Dharti and make it a geographic information system (GIS) enabled system.

5. ‘The Future of Jobs Report 2020’ has been released by which organisation?

[A] ILO

[B] WEF

[C] WTO

[D] UNCTAD

 • Switzerland–based World Economic Forum (WEF) has recently released a report titled ‘The Future of Jobs Report 2020’. As per the report, advances in robotics and artificial intelligence will lead to a net increase in jobs over the next five years. It also revealed that the Covid–19 pandemic will result in “double–disruption” for workers.

6. ‘Right of First Refusal (RoFR)’, that was seen in news recently, is associated with which field?

[A] Medicine

[B] Shipping

[C] Medicine

[D] Education

 • In pursuance of ‘Make in India’ policy of the Government of India, Ministry of Shipping has reviewed the ROFR (Right of First Refusal) licensing conditions for chartering of vessels/Ships through tender process for all types of requirements. To promote the demand of the ships built in India, priority in chartering of vessels is given to vessels built in India, flagged in India and owned by Indians under the amendments in the guidelines of ROFR (Right of First Refusal).

7. Which is the base year of the Consumer Price Index for Industrial Workers (CPI–IW), as per the recent announcement of Labour Ministry?

[A] 2010

[B] 2012

[C] 2016

[D] 2018

 • The Labour and Employment Ministry has recently revised the base year of the Consumer Price Index for Industrial Workers (CPI–IW) from 2001 to 2016. This has been done to reflect the changing consumption pattern, to give more weightage to spending on health, education and other miscellaneous expenses, while reducing the weight of food and beverages. However, this will not affect the DA of government employees.

8. Golconda Fort is located in which Indian city?

[A] Amritsar

[B] Jhansi

[C] Hyderabad

[D] Ayodhya

 • The devastating rains over Hyderabad in the recent past have caused damage to the 500–year–old Golconda Fort. It is an early capital of the Qutab Shahi Dynasty. As per the Archaeological Survey of India, steps and rocks of the Kingsway, the wall near the Jagadambika temple, the rear wall and a structure near the second well have suffered damage.

9. Who is the head of the IRDAI working group that has proposed Surety Bonds?

[A] G Srinivasan

[B] Ashok Mehta

[C] Injeti Srinivas

[D] Uday Kotak

 • Insurance Regulatory and Development Authority of India (IRDAI) has set up a working group headed by former New India Assurance Chairman G Srinivasan. The committee has been set up to study the suitability of offering surety bonds by Indian insurance industry. Surety bonds protect the beneficiary against events that impair the underlying obligations of the principal. The committee has favoured the introduction of Surety Bonds in the insurance sector.

10. The Cabinet has approved MoUs between which organisation and its counterparts in Malaysia and Papua New Guinea?

[A] Indian Space Research Organization

[B] Institute of Chartered Accountants of India

[C] Food Safety and Standards Authority of India

[D] Geological Survey of India

 • The Union Cabinet has approved Memorandum of Understanding between the Institute of Chartered Accountants of India (ICAI) and the Certified Practising Accountants, Papua New Guinea, to work together in capacity building in Financial and Audit Knowledge base in the island country. Mutual Recognition Agreement between the ICAI and the Malaysian Institute of Certified Public Accountants was also approved.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *