Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

26th August 2020 Current Affairs in Tamil & English

26th August 2020 Current Affairs in Tamil & English

26th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

26th August 2020 Current Affairs Pdf Tamil

26th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அவசர கடன் உறுதித்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு என்ன?

அ. ரூ.1 இலட்சம் கோடி

ஆ. ரூ.2 இலட்சம் கோடி

இ. ரூ.3 இலட்சம் கோடி

ஈ. ரூ.5 இலட்சம் கோடி

  • `20 இலட்சம் கோடி பொருளாதார உதவியின் ஒருபகுதியாக, இந்திய அரசாங்கம், ‘அவசர கடனுறுதித் திட்டம்’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு அக்.31 வரையிலான ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து `3 இலட்சம் கோடியாகும். அண்மைய செய்திகளின்படி, இந்த 100% அவசர கடனுறுதித்திட்டத்தின்கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18 வரை `1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன. இவற்றில், `1 இலட்சம் கோடிக்கான கடனுதவிகள் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டன.

2.எந்த நாடு, ‘தியாகி காசிம் சுலைமானி’ என்ற தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எறிகணையை அறிமுகப்படுத்தியுள்ளது?

அ. ஈராக்

ஆ. ஈரான்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. இஸ்ரேல்

  • புதிய எறிகணை மற்றும் சீர்வேக ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி, அந்த ஏவுகணைகளை ஈரான் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அவற்றை ஈரான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ‘தியாகி காசிம் சுலைமானி’ எனப் பெயரிடப்பட்டுள்ள எறிகணை, தரையிலிருந்து பாய்ந்து சென்று 1400 கிமீ தொலைவு இலக்கை தாக்கும் வல்லமை உடையதாகும். ‘தியாகி அபு மஹதி’ எனப் பெயரிடப்பட்ட சீர்வேக ஏவுகணை 1000 கிமீ தொலைவு இலக்கை தாக்கும் வல்லமை கொண்டதாகும். ஈரானின் குத்ஸ் படையின் தலைவர் சுலைமானியும் ஈராக் தளபதி அபு மஹதி அல் முகந்திசும் ஐக்கிய அமெரிக்க நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாவர்.

3.தொழிலாளர் அமைச்சகத்தின் எந்த அமைப்புக்கு புதிய இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது?

அ. பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியகம் (EPFO)

ஆ. வேலைவாய்ப்பு இயக்குநரகம்

இ. தொழிலாளர் தகவல் பிரிவு

ஈ. பணியாளர்கள் அரசுக் காப்பீட்டுத் திட்டம் (ESIC)

  • தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழிலாளர் தகவல் பிரிவுக்கான புதிய இலச்சினையை தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சந்தோஷ்குமார் கங்வார் ஷ்ரம் அறிமுகஞ்செய்துவைத்தார்.
  • தொழிலாளர் தகவல் பிரிவு என்பது தொழிலாளர் நலன் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தேசிய அளவிலான அமைப்பாகும். இது, அகில இந்திய அளவில் தொழிலாளர்களின் பல்வேறு நிலைகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு செய்தல் மற்றும் வெளியில் தெரிவித்தல் ஆகிய பணிகளில் இந்த அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. இப்புதிய இலட்சினை தரமான தகவல் தொகுப்பை உருவாக்குவதில் துல்லியத்தன்மை, செல்லத்தக்க நிலை & நம்பகத்தன்மை என்ற 3 இலக்குகளை அடையாளப்படுத்துவதாக உள்ளது.

4. ‘நிதியியல் கல்விக்கான தேசிய உத்தி’யைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ. RBI

ஆ. NPCI

இ. SEBI

ஈ. SBI

  • இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், ‘நிதியியல் கல்விக்கான தேசிய உத்தி’யை வெளியிட்டது. இது, அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த உத்தியானது, நம் நாட்டின் அனைத்து மக்களிடையேயும் நிதிசார் கல்வியறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, பொது மக்கள் தங்கள் நிதிசார் நோக்கங்களை அடைவதற்கு நிதியியல் சந்தைகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கும். முறையான வங்கி மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நிதிசார் சேவைகளைப் பயன்படுத்த மக்களை இது ஊக்குவிக்கும்.

5. ‘Grandparents’ Bag of Stories’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. சுதா மூர்த்தி

ஆ. ரஸ்கின் பாண்ட்

இ. பரோ ஆனந்த்

ஈ. அனுஷ்கா இரவிஷங்கர்

  • மூத்த இந்திய எழுத்தாளரான சுதா மூர்த்தியின் அண்மைய சிறுகதைத் தொகுப்பான, ‘Grandparents’ Bag of Stories’ வரும் நவம்பரில் வெளியிடப்படவுள்ளது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா தனது அண்மைய வெளியீடான, ‘Grandparents’ Bag of Stories’இன் தொடர்ச்சியாக வெளிவரும் இந்த நூலில், 20 கதைகள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. சுதா மூர்த்தி, குறிப்பாக குழந்தைகளுக்காக ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.

6. ASEAN-இந்தியா மதியுரையகங்களின் வலையமைப்பு–2020’ வட்டமேசைமாநாட்டில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது யார்?

அ. நரேந்திர மோடி

ஆ. S ஜெய் சங்கர்

இ. பியுஷ் கோயல்

ஈ. சக்திகாந்த தாஸ்

  • அண்மையில் நடந்த, ‘ASEAN-இந்தியா மதியுரையகங்களின் வலையமைப்பு–2020’ வட்டமேசை மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். “ASEAN-India: Strengthening Partnership in the Post-COVID Era” என்பது மெய்நிகராக நடந்த இந்த ஆறாம் மாநாட்டின் கருப்பொருளாகும். அமைச்சரின் கூற்றுப்படி, COVID-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய இழப்பு என்பது $5.8 முதல் $8.8 டிரில்லியன் டாலர் அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5-9.7 சதவீதம் வரையாகும்.

7. ‘இந்திரா ரசோய் யோஜனா’ என்ற பெயரில் மலிவுவிலை உணவுத்திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?

அ. பஞ்சாப்

ஆ. இராஜஸ்தான்

இ. நாகாலாந்து

ஈ. சிக்கிம்

  • இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ‘இந்திரா ரசோய் யோஜனா’ என்ற மலிவு விலை உணவுத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மாநிலத்தில் உள்ள வறியோர்க்கும் தேவையுள்ளோர்க்கும் ஒரு தட்டு உணவுக்கு `8 என்ற விலையில் உணவு வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, ‘அன்னபூர்ணா ரசோய் யோஜனா’ என்ற பெயரில் இதேபோன்றதொரு திட்டத்தை 2016 முதல் அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவான, ‘சத்பவனா திவாஸ்’ அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

8.ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், இந்தியாவின் எந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன?

அ. ரிலையன்ஸ் தொழிற்சாலைகள்

ஆ. TATA குழுமம்

இ. ஷபூர்ஜி பல்லோஞ்சி

ஈ. அதானி எண்டர்பிரைசஸ்

  • ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை பொது-தனியார் கூட்டணியின்கீழ் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்துக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • லக்னோ, ஆமதாபாத் & மங்களூரு வானூர்தி நிலையங்களுடன் கூடுதலாக இந்த மூன்று வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், அதானி எண்டர்பிரைசஸுக்கு போட்டி ஏலம்மூலம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த ஆறு விமான நிலையங்களும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமானவையாக உள்ளன.

9.கரும்புக்கான நியாயமான மற்றும் இலாபகரமான விலை எவ்வளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது?

அ. ரூ.10/குவிண்டால்

ஆ. ரூ.20/குவிண்டால்

இ. ரூ.30/குவிண்டால்

ஈ. ரூ.40/குவிண்டால்

  • கரும்புக்கான நியாயமான மற்றும் இலாபகரமான விலையை (Fair & Renumerative Price) குவிண்டால் ஒன்றுக்கு `10 உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய FRP, எதிர்வரும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும். இது, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க உள்ளது.

10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Supply Chain Resilience Initiative (SCRI) உடன் தொடர்புடைய 3 நாடுகள் எவை?

அ. இந்தியா, நேபாளம் & சீனா

ஆ. இந்தியா, பிரேசில் & தென்னாப்பிரிக்கா

இ. இந்தியா, ஜப்பான் & ஆஸ்திரேலியா

ஈ. இந்தியா, வங்கதேசம் & இலங்கை

  • சீனாவைச்சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆசுதிரேலியா ஆகிய மூன்று நாடுகள் முத்தரப்பு ‘விநியோகச் சங்கிலி நெகிழ்திறன் முன்னெடுப்பைத் (SCRI)’ தொடங்குவதற்கான விவாதங்களைத் தொடங்கியுள்ளன. இந்த முன்னெடுப்பை முதன்முதலில் ஜப்பான் முன்மொழிந்தது. இம்முன்னெடுப்பை முன்னோக்கி நகர்த்துவதற்காக இந்தியாவை அது அணுகியது. இதற்காக, மூன்று நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் பங்கேற்கும் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

1. What is the allocation made for ‘Emergency Credit Line Guarantee Scheme’(ECLGS)?

[A] Rs 1 Lakh crore

[B] Rs 2 Lakh core

[C] Rs 3 Lakh crore

[D] Rs 5 Lakh crore

  • The Government launched ‘Emergency Credit Line Guarantee Scheme’(ECLGS), as a part of the Rs 20 lakh crore economic stimulus package. The allocation made for the ECLGS scheme was Rs 3 lakh crore for five months till October 31st. As per the recent news, public and private sector banks have sanctioned loans worth over Rs 1.5 lakh crore, as of August 18, 2020 and more than Rs 1 lakh crore was already disbursed.

2. Which country has displayed its locally made ballistic missile ‘martyr Qassem Soleimani’?

[A] Iraq

[B] Iran

[C] UAE

[D] Israel

  • Iran has displayed a surface–to–surface ballistic missile, that has a range of 1,400 kilometres, named martyr Qassem Soleimani. The country also displayed a new cruise missile called martyr Abu Mahdi, with a range of over 1,000 km, amidst the demand from the United States to stop its missile programme. The head of Iran’s Quds Force, Soleimani and Iraqi commander Abu Mahdi al–Muhandis were killed in a U.S. strike.

3. A new logo has been launched for which organisation of Labour Ministry?

[A] Employees Provident Fund Organisation (EPFO)

[B] Directorate General of Employment (DGE)

[C] Labour Bureau

[D] Employees State Insurance Scheme (ESIC)

  • Union Labour and Employment Minister Santosh Kumar Gangwar has recently released the new logo of the Labour Bureau. Labour Bureau is an apex national–level organization under the Labour Ministry, that is involved in labour statistics, research and training. The new logo represents the statistical nature and its three goals of accuracy, validity and reliability.

4. Which organisation launched the ‘National strategy for Financial Education’?

[A] RBI

[B] NPCI

[C] SEBI

[D] SBI

  • The Reserve Bank of India (RBI) has recently released a National strategy for Financial Education’, which is to be implemented in the next five years. The strategy aims to inculcate financial literacy among all the people of our country. It will also encourage the common people to participate in the financial markets for achieving their financial goals. It will encourage people to use formal banking and safe digital financial services.

5. Who is the author of the book ‘Grandparents’ Bag of Stories’?

[A] Sudha Murty

[B] Ruskin Bond

[C] Paro Anand

[D] Anushka Ravishankar

  • Veteran Indian author Sudha Murty’s latest collection of short stories, ‘Grandparents’ Bag of Stories’ is to be released in the month of November. The Penguin Random House India announced the collection which is a sequel of her recent release ‘Grandma’s Bag of Stories’ and will have 20 stories. Sudha Murty has authored several books in English and Kannada especially for children.

6. Who represented India in the 2020 roundtable of ASEAN–India Network of Think Tanks?

[A]  Narendra Modi

[B] S Jai Shankar

[C] Piyush Goyal

[D] Shaktikanta Das

  • Union External Affairs Minister S Jai Shankar has represented India in the roundtable of ASEAN–India Network of Think Tanks (AINTT) held recently. The 6th Roundtable of AINTT was held through a webinar and its theme was “ASEAN–India: Strengthening Partnership in the Post–COVID Era”. As per the Minister, the global loss due to Covid–19 is in the range of USD 5.8 to 8.8 trillion or 6.5 to 9.7 per cent of the global GDP.

7. Which state launched a subsidised meal scheme named ‘Indira Rasoi Yojana’?

[A] Punjab

[B] Rajasthan

[C] Nagaland

[D] Sikkim

  • The Chief Minister of Rajasthan, Ashok Gehlot has launched a subsidised meal scheme named ‘Indira Rasoi Yojana’. It aims to provide subsidised meals to the poor and needy in the state at Rs 8 per plate with dignity. Earlier, the state was implementing a similar scheme named Annapurna Rasoi Yojana from 2016. The scheme was launched on the birth anniversary of former Prime Minister Rajiv Gandhi, the ‘Sadbhavana Diwas’.

8. The rights to run airports at Jaipur, Guwahati and Thiruvananthapuram have been awarded to which business major of India?

[A] Reliance Industries

[B] TATA Group

[C] Shapoorji Pallonji

[D] Adani Enterprises

  • A proposal for leasing out Jaipur, Guwahati and Thiruvananthapuram airports through public–private partnership (PPP) has been cleared by the Union Cabinet. The rights to run these airports in addition to Lucknow, Ahmedabad and Mangaluru airports have been awarded to Adani Enterprises by way of competitive bidding. Presently, these six airports are owned by the Airports Authority of India (AAI).

9. By what amount, the Fair and Remunerative Prices (FRP) of sugarcane has been increased?

[A] Rs.10 per quintal

[B] Rs.20 per quintal

[C] Rs.30 per quintal

[D] Rs.40 per quintal

  • The Cabinet Committee on Economic Affairs (CCEA) has approved an increase in Fair and Remunerative Prices (FRP) of sugarcane by Rs.10 per quintal from the existing Rs 275 to Rs.285 per quintal. The new FRP would come into force from October 2020. This is in line with the recommendations of the Commission of Agricultural Costs and Prices (CACP).

10. The Supply Chain Resilience Initiative (SCRI) that is in news recently, is related to which three countries?

[A] India, Nepal & China

[B] India, Brazil & South Africa

[C] India, Japan & Australia

[D] India, Bangladesh & Sri Lanka

  • In order to reduce the dependency of China, three countries namely India, Japan and Australia have begun discussions to launch a trilateral “Supply Chain Resilience Initiative” (SCRI).
  • The initiative was originally proposed by Japan, which had approached India to take forward the initiative. The first meeting of the commerce and trade ministers of the three countries will be held next week.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!