Tnpsc

26th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

26th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பின்வரும் எந்த மாநிலத்திலிருந்து, இந்தியாவிலேயே முதன் முறையாக ஓர் அரியவகை மந்தாரை இனம் கண்டுபிடிக்கப்பட்டது?

அ) உத்தரகண்ட் 

ஆ) இமாச்சல பிரதேசம்

இ) சிக்கிம்

ஈ) மிசோரம்

  • Cephalanthera erecta var. oblanceolata’ என்ற ஓர் அரியவகை மந்தாரை இனம், இந்தியாவிலேயே முதன்முறையாக உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் 1870 மீ உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. BSIஇன் 6 மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் இதழான நெலும்போவில் இந்திய தாவரங்களின் புதிய இனங்கள்பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய மந்தாரை இனங்கள் குறித்த தகவல்களைக்கொண்ட தொகுதிகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

2. வடகிழக்கு மாநிலங்களில் அதிவேக இணையசேவையினை வழங்குவதற்காக, கீழ்காணும் எந்த நிறுவனத்துடன், யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்ட் கூட்டுசேர்ந்துள்ளது?

அ) BSNL 

ஆ) MTNL

இ) ஏர்டெல்

ஈ) வி

  • வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிவேக இணைய சேவை பெறுவதற்கு, யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேசன் பண்ட் (USOF) BSNL நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்தது. இதன்மூலம் அகர்தலாவுக்கு இணைய இணைப்புக்கு 10 ஜிபிபிஎஸ் பன்னாட்டு அலைவரிசை, காக்ஸ் பஜார் வழியாக வங்க தேசத்தின் BSCCL நிறுவனத்திடமிருந்து வாடகை அடிப்படையில் பெறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், மேற்கண்ட பன்னாட்டு அலை வரிசையை, மூன்றாண்டுகளுக்கு வாடகைக்குப்பெற, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு, USOF நிதியுதவி அளிக்கும். இதன்மூலம் வடகிழக்குப் பகுதி மக்கள் அதிவேக இணைய இணைப்புடன் பல இ-சேவைகளை பெறுவர்.

3. தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புப்பயிற்சியைத் தொட -ங்கியுள்ள நாடு எது?

அ) ஜப்பான் 

ஆ) சீனா

இ) சிங்கப்பூர்

ஈ) இந்தோனேசியா

  • ஜப்பான் இராணுவ அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானின் கடல்சார் தற்காப்புப்படை தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சியில், உலங்கூர்தி விமானந்தாங்கி மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் உட்பட மூன்று கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. முழு தென்சீனக்கடலையும் உரிமை கோரும் சீனா, அங்கு செயற்கைத்தீவுகளை அமைத்து அதில் இராணுவ புறக்காவல் நிலையங்களை நிறுவியுள்ளது. தென்சீனக்கடலை சீனா இராணுவமயமாக்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

4. சமீபத்தில், COVID தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக COVIDஆல் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார ஆதரவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ) மணிப்பூர் 

ஆ) புதுச்சேரி

இ) மகாராஷ்டிரா

ஈ) ஒடிஸா

  • மணிப்பூரில் COVIDஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக, COVIDஆல் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார ஆதரவுத்திட்டத்தை மணிப்பூர் முதல்வர் என் பீரன் சிங் தொடங்கினார். இத்திட்டத்தின்கீழ் 6,276 பயனாளிகளுக்கு ஒரு பயனாளருக்கு `2500 வீதம் மொத்தமாக `1.56 கோடி வழங்கப்பட்டது.

5. தொலையுணரி & புவியியல் தகவலமைப்பு அடிப்படையிலான தரவைப்பயன்படுத்தி MGNREGA திட்டத்தின் புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும் தளத்தின் பெயர் என்ன?

அ) பூமி இராசி

ஆ) மதத்

இ) யுக்தாரா 

ஈ) இ-சனத்

  • ‘யுக்த்தாரா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள புதிய புவிசார் திட்டமிடல் இணையதளம், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் கருவி (GIS) அடிப்படையிலான தகவல்மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும்.
  • பல்வேறு தேசிய ஊரக மேம்பாட்டு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட ஜியோடேக் (நிழற்படம் & காணொளிகள் அடங்கிய புவியியல் இடங்கள்) தகவல்கள் களஞ்சியமாக இந்தப் புவிசார் திட்டமிடல் இணையதளம் செயல்படும். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சொட்டுநீர்ப்பாசனத்திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டம் குறித்த தகவல்கள் நிழற்படங்களுடன் இருக்கும்.

6.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ‘ARMY-2021’இல் இந்தியா அறிமுகஞ்செய்தது. கீழ்கண்ட எந்த நாட்டில், ‘ARM-2021’ நடைபெறுகிறது?

அ) இந்தியா

ஆ) ரஷ்யா 

இ) இஸ்ரேல்

ஈ) அமெரிக்கா

  • மாஸ்கோ பிராந்தியத்தில் நடைபெறும் பன்னாட்டு இராணுவ-தொழில் நுட்ப மன்றமான ‘ARMY-2021’இல் இந்தியா தனது உள்நாட்டுப்போர் விமானமான LCA தேஜஸ், பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், அர்ஜுன் முதன்மை போர் பீரங்கி (MK1A) ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
  • ஆகஸ்ட்.22-28 வரை மாஸ்கோவின் குபின்காவில் நடைபெறும் பன்னாட்டு இராணுவ-தொழில்நுட்ப மன்றமான ‘ARMY-2021’இல் DRDO பங்கேற்கிறது. DRDO என்பது இந்திய காட்சியரங்கின் ஒருபகுதி ஆகும். அங்கு அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் அமைப்புகளும் இந்திய பாதுகாப்புத் தொழில்களான கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL), ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) ஆகியவற்றுடன் இணைந்து காட்சிப்படுத்தப்படும்.

7. சமீபத்தில், 34 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய அமைப்பு எது?

அ) ISRO

ஆ) ஸ்பேஸ் X

இ) NASA

ஈ) ஒன்வெப் 

  • பாரதி குழுமத்தின் ஆதரவில் இயங்கும் தாழ்புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான ஒன்வெப், பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து அரியான்ஸ்பேஸ்மூலம் 34 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியதை உறுதிசெய்துள்ளது. OneWeb’இன் ‘ஐந்து முதல் 50’ திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒன்வெபின் செயற்கைக்கோள்களை 288ஆக மாற்றியுள்ளது.

8. ஜெர்மனியில் பயிலவிரும்பும் மாணவர்களுக்காக டிஜிட்டல் & உடனடி தடுக்கப்பட்ட கணக்கை தொடங்கியுள்ள வங்கி எது?

அ) சிட்டி வங்கி

ஆ) ICICI வங்கி ஜெர்மனி 

இ) டாய்ச் வங்கி

ஈ) பாரத வங்கி

  • ஜெர்மனியில் பயில விழையும் மாணவர்களுக்காக டிஜிட்டல் மற்றும் உடனடி தடுக்கப்பட்ட கணக்கை தொடங்குவதாக ICICI வங்கி ஜெர்மனி அறிவித்துள்ளது. தடுக்கப்பட்ட கணக்கு (Blocked Account) என்பது ஒரு சிறப்பு வகை வங்கிக்கணக்காகும்; அதில் மாணவர்கள், ஒரு இருப்பு உறுதிப்படுத்தல் சான்றிதழை (Balance Confirmation Certificate (BCC)) பெறுவதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருக்க வேண்டும். ஜெர்மனியில் மாணவ விசா பெறுவதற்கு இந்தக் கணக்கு கட்டாயமாகும். இக்கணக்கு, மாணவர்களுக்கு ஜெர்மனியில் பயன்படுத்தக்கூடிய ஒரு நடப்பு கணக்கை வழங்குகிறது. இது, உலகில் எங்கும் பயன்படுத்தக்கூடிய விசா பற்றட்டையுடன் வருகிறது.

9. தேசிய வேளாண் சந்தையில் (eNAM) வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) இராஜஸ்தான் 

இ) மேற்கு வங்கம்

ஈ) கேரளா

  • தேசிய வேளாண் சந்தையில் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக இராஜஸ்தான் உருவெடுத்துள்ளது. வேளாண்பொருட்களின் இ-வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக அனைத்து தனித்தனி வர்த்தக உரிமங்களையும் ஒருங்கிணைந்த உரிமமாக மாற்ற அனுமதித்த முதல் மாநிலம் இராஜஸ்தான் ஆகும். தற்போதுவரை, மொத்தம் 37346 வர்த்தகர்கள் ஒருங்கிணைந்த உரிமதாரர் வர்த்தகர்களாக பணியாற்றுகின்றனர்.

10. அண்மையில், அமெரிக்க சட்டமன்றத்தின் தங்கப்பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார்?

அ) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

ஆ) மகாத்மா காந்தி 

இ) பகத் சிங்

ஈ) B R அம்பேத்கர்

  • நியூயார்க் காங்கிரஸ் பெண்மணி கரோலின் மாலோனி, ‘மகாத்மா’ காந்திக்கு, அமெரிக்க சட்டமன்றத்தின் தங்கப்பதக்கத்தை, அவரது இறப்பி -ற்குப்பின் வழங்குவதற்காக, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதற்கான சட்டத்தை மீண்டும் அறிமுகம்செய்தார். அகிம்சைமுறைகளின் மூலம் அவராற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப் -படுகிறது. அவர், அமெரிக்காவின் மிகவுயர்ந்த குடிமகன் விருதான காங்கிரஸ் தங்கப்பதக்கத்தை பெறும் முதல் இந்தியர் ஆவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2021-22-ஆம் ஆண்டுக்கான கரும்புப் பருவத்தில் சர்க்கரை ஆலைகள், கரும்புக்கு அளிக்கவேண்டிய நியாயமான மற்றும் லாபகரமான விலையை நிர்ணயிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22 கரும்புப் பருவத்திற்கு (அக்டோபர் -செப்டம்பர்) சர்க்கரை ஆலைகள் அளிக்கும் கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலைக்கு (எஃப் ஆர் பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கரும்பின் எஃப் ஆர் பி, அடிப்படை மீட்பு விகிதம் 10% உடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 290 வழங்கப்படும். மீட்பு விகிதம் 10%க்கு மேல் அதிகரித்தால் ஒவ்வொரு சதவிகிதத்திற்கும் ஒவ்வொரு குவின்டாலுக்கும் 0.1% அதிகமாக அதாவது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2.90 கூடுதல் தொகை அளிக்கப்படும்.

விகிதம் குறைய நேரிட்டால், ஒவ்வொரு குவிண்டாலுக்கும் 0.1% குறைவாக, அதாவது எஃப் ஆர் பி விலையிலிருந்து ரூ. 2.90 குறைவாக வழங்கப்படும். 9.5%க்கு குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு விலை குறைக்கப்படாது என்ற முடிவின் மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசின் ஆக்கபூர்வமான அணுகுமுறை வெளிப்படுகிறது. அத்தகைய விவசாயிகள் கரும்பு பருவம் 2021- 22 இல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 275.50 பெறுவார்கள். தற்போதைய கரும்பு பருவம் 2020-21 இல் இந்தத் தொகை ரூ. 270.75 ஆக உள்ளது. கரும்பு பருவம் 2021-22 க்கான உற்பத்தித் தொகை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 155 ஆகும். 10% மீட்பு விகிதத்துடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 290 என்ற இந்த எஃப் ஆர் பி, உற்பத்தி தொகையைவிட 87.1% அதிகம். இதன் வாயிலாக தங்கள் தொகையையும் விட கூடுதலாக 50% மீட்புத் தொகையை விவசாயிகள் பெறுவார்கள்.

தற்போதைய கரும்பு பருவம் 2020-21 இல் ரூ. 91,000 கோடி மதிப்பில் 2,976 லட்சம் டன் கரும்புகளை சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்துள்ளன. இதுவரையிலான கொள்முதலில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கரும்பு பருவம் 2021-22- ல் கரும்பின் உற்பத்தி அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சுமார் 3,088 லட்சம் டன் கரும்புகள் சர்க்கரை ஆலைகளால் கொள்முதல் செய்யப்படக்கூடும். கரும்பு விவசாயிகளுக்கு சுமார் ரூ. 1,00,000 கோடி கிடைக்கும். விவசாயிகளுக்கு உகந்த நடவடிக்கைகளின் வாயிலாக, உரிய காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கான தொகை அவர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

கரும்பு பருவம் 2021-22 இல் (அக்டோபர் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது) சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்புகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் லாபகரமான விலையில் கரும்புகள் வழங்கப்படும். சுமார் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய வேளாண் அடிப்படையிலான துறையாக கரும்புத் துறை விளங்குகிறது. சுமார் 5 லட்சம் பணியாளர்கள் சர்க்கரை ஆலைகளில் நேரடியாக பணியாற்றுவதோடு ஏராளமானோர், வேளாண் தொழில் மற்றும் போக்குவரத்து சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

2. அமெரிக்கா: சராசரி வருவாயில் இந்திய வம்சாவளியினர் முதலிடம்

அமெரிக்காவில் சராசரி குடும்ப வருவாய் மற்றும் கல்லூரிப் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த அமெரிக்கா்களை இந்திய வம்சாவளியினர் விஞ்சியுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அந்த நாட்டின் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் மற்றும் அங்கு பிறந்த இந்திய வம்சாவளியினரின் சராசரி குடும்ப வருவாய் 1,23,700 டாலராக (சுமார் `91.78 இலட்சம்) உள்ளது. கல்லூரி பட்டதாரிகளில் 79% பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்க -ளாக உள்ளனர். இதன்மூலம், குடும்ப வருவாய் மற்றும் கல்லூரிக் கல்வியில் ஒட்டுமொத்த அமெரிக்கர்களை இந்திய வம்சாவளியினர் விஞ்சியுள்ளனர்.

கடந்த முப்பது ஆண்டுகளில் ஆசியர்களாக அடையாளம் காணப்படும் நபர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டின் நான்கு பெரிய இனக் குழுக்களில் ஆசியர்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் குழுவினராக ஆகியுள்ளனர். அமெரிக்காவில் தற்போது சுமார் 40 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 16 லட்சம் பேர் நுழைவு இசைவு பெற்று அந்த நாட்டில் வசிப்பவர்கள். 14 லட்சம் பேர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள். 10 லட்சம் பேர் அந்த நாட்டிலேயே பிறந்தவர்கள் ஆவர்.

அந்தப் பிரிவினரின் சராசரி குடும்ப வருமானமான 1,23,700 டாலர்கள், நாடுதழுவிய சராசரி குடும்ப வருவாயான 63,922 டாலரைவிட இரு மடங்காகும். அறிக்கையின்படி, நாடு முழுவதும் சராசரியாக 34 சதவிகித -த்தினர் பட்டம் பெற்றுள்ள நிலையில், இந்திய வம்சாவளியினரில் 79% பேர் கல்லூரிகளில் பட்டம்பெற்றுள்ளவர்களாக உள்ளனர். சராசரி குடும்ப வருவாயில் இந்திய வம்சாவளியினருக்கு அடுத்தபடியாக தைவான் வம்சாவளியினரும் ($97,129), 3ஆமிடத்தில் பிலிப்பின்ஸ் நாட்டவர்களும் ($95,000) உள்ளனர் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

3. BSF புதிய இயக்குநராக பங்கஜ் சிங் நியமனம்

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) இயக்குநர் ஜெனரலாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் சிங் (58) நியமிக்கப்பட்டுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பதவியை இவரின் தந்தை பிரகாஷ் சிங் வகித்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தின் 1988ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த பங்கஜ் சிங், ஆக.31ஆம் தேதி BSF இயக்குநராகப் பதவியேற்றுக்கொள்வார் என அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தில்லியிலுள்ள BSF தலைமையகத்தில் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். தற்போது BSF இயக்குநர் ஜெனரலாக இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு காவல் படை இயக்குநர் S S தேஸ்வால் கூடுதல் பொறுப்பு வகித்துவருகிறார். அவர் ஓய்வுபெறவுள்ளதையொட்டி புதிய இயக்குநர் ஜெனரலாக பங்கஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்கஜ் சிங்கின் தந்தை பிரகாஷ் சிங், 1993-94’இல் BSF இயக்குநர் ஜெனரலாகப் பணிபுரிந்தார். காவல்துறையில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியதற்காக அறியப்படும் பிரகாஷ் சிங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் புதிய தலைவராக தமிழ்நாட்டின் 1988ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா, காவல் ஆராய்ச்சி & மேம்பாட்டுப் பிரிவு புதிய தலைவராக பாலாஜி வத்சவா ஆகியோரை நடுவணரசு நியமித்துள்ளது.

4. இந்தியா – கஜகஸ்தான் 5ஆம் கட்டகூட்டுப்பயிற்சி 30’இல் தொடக்கம்

இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான ஐந்தாவது கட்ட இராணுவ கூட்டுப்பயிற்சி ஆக.30ஆம் தேதி தொடங்குகிறது. இராணுவ ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் கஜகஸ்தானுடனான வளர்ந்துவரும் உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

கஜகஸ்தானில் உள்ள ஆயிஷா பிபியில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் செப்.11 வரை நடக்கவுள்ள இக்கூட்டுப்பயிற்சியில், இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் இருநாட்டு ராணுவங்களும் பயிற்சிகளை மேற்கொள்ளும்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து இந்தியா மற்றும் கஜகஸ்தான் ராணுவத்தினருக்கு இந்தக் கூட்டு நடவடிக்கையின்போது பயிற்சியளிக்கப்படும். இந்தியா & கஜகஸ்தான் இராணுவங்களுக்கு இடையே நிலவிவரும் பரஸ்பர நம்பிக்கை, கூட்டு செயல்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்தல் ஆகியவற்றை இந்தப் பயிற்சி வலுப்படுத்தும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. முதல் தங்கத்தை ஆஸ்திரேலியா வென்றது

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், முதல் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய சைக்கிளிங் வீராங்கனை பெய்ஜ் கிரேகோ வென்றார்.

மகளிருக்கான சைக்கிளிங் போட்டியில் ‘C1-3’ 3000 மீ பிரிவில் பெய்ஜ் கிரேகோ 3 நிமிஷம் 50.81 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். சீனாவின் வாங் ஜியாவ்மெய் 3 நிமிஷம் 54.97 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஜெர்மனியின் டெனிஸ் ஷின்ட்லர் 3 நிமிஷம் 55.12 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனர். கிரேகோவுக்கு இது முதல் பாராலிம்பிக் பதக்கமாகும். டோக்கியோ பாராலிம்பிக்கில் முதல் நாளில் 7 விளையாட்டுகளில் 24 பதக்க போட்டிகள் நடைபெற்றன.

1. From which State, a rare orchid species has been found for the first time in India?

A) Uttarakhand 

B) Himachal Pradesh

C) Sikkim

D) Mizoram

  • A rare orchid species –– Cephalanthera erecta var. oblanceolata –– has been found for the first time in India in Uttarakhand’s Chamoli district at an altitude of 1870 metres. A research paper on the new addition to Indian flora has been published in Nelumbo, the six–monthly journal of BSI and volumes listing the orchid species of India will soon be updated.

2. With which organization, Universal Service Obligation Fund has partnered for high–speed internet access to North Eastern States?

A) BSNL 

B) MTNL

C) Airtel

D) Vi

  • For making available high quality and high–speed internet access to the States of North Eastern Region of the country, Universal Service Obligation Fund (USOF) has signed an Agreement with Bharat Sanchar Nigam Limited for hiring of 10 Gbps International Bandwidth for Internet Connectivity to Agartala from Bangladesh Submarine Cable Company Limited BSCCL Bangladesh through Cox Bazar and Kuakata.
  • Under the Agreement, USOF will provide financial support to BSNL for a period of three years for hiring the International Bandwidth. The availability of high–speed internet access will help the citizens in accessing various e–services such as e–governance, e–education, e–health, e–commerce, e–banking, etc.

3. Which country has commenced anti–submarine drills in the South China Sea?

A) Japan 

B) China

C) Singapore

D) Indonesia

  • Japan’s Maritime Self–defense Force has commenced anti–submarine drills in the South China Sea, as per the recent statement from the Japanese Defence Ministry. The exercise deployed three vessels including a helicopter aircraft carrier and a submarine.
  • The entire South China Sea is claimed by China, which has established military outposts on artificial islands. The United States has been accusing China of militarising the South China Sea.

4. Recently, which state has launched COVID Affected Livelihood Support Scheme to provide assistance to those who had been severely affected by the COVID–19 pandemic?

A) Manipur 

B) Puducherry

C) Maharashtra

D) Odisha

  • Manipur Chief Minister N Biren Singh has launched COVID–19 Affected Livelihood Support Scheme to provide assistance to those who had been severely affected by the COVID–19 pandemic in the State.
  • The distribution of a total amount of Rs 1.56 crore to 6,276 beneficiaries of the scheme at the rate of Rs 2500 per beneficiary marked the launch function.

5. What is the name of the portal that has been launched by the government to help in facilitating new MGNREGA assets using remote sensing and geographic information system–based data?

A) Bhoomi Rashi

B) Madad

C) Yuktdhara 

D) eSanad

  • The government has launched a new geospatial planning portal, ‘Yuktdhara’, which will help in facilitating new MGNREGA assets using remote sensing and geographic information system–based data. The portal will serve as a repository of geotags created under various national rural development programmes.
  • This platform will serve as a repository of assets (geotags) created under various national rural development programmes.

6. India has pitched indigenously built fighter aircraft, anti–tank missiles at ‘ARMY– 2021.’ In which country ARMY–2021 is being held?

A) India

B) Russia 

C) Israel

D) United States of America

  • India has pitched its indigenously built fighter aircraft LCA Tejas, Anti–Tank Guided Missiles, Arjun Main Battle Tank (MK1A) at the International Military–Technical Forum “ARMY–2021” which is being held in the Moscow region.
  • DRDO is participating in the International Military–Technical Forum “ARMY–2021” at Kubinka, Moscow from Aug.22–28. DRDO is the part of India’s pavilion where advanced defence technologies and systems will be displayed along with Indian Defence Industries namely Goa Shipyard Limited, Ordnance Factories and Bharat Earth Movers Limited etc.

7. Recently, which organization has launched 34 satellites?

A) ISRO

B) Space X

C) NASA

D) OneWeb 

  • Bharti Group–backed OneWeb, a low earth orbit (LEO) satellite communications company has confirmed the launch of 34 satellites by Arianespace from the Baikonur Cosmodrome. The launch follows the successful completion of OneWeb’s ‘Five to 50’ mission. This launch brings OneWeb’s total in–orbit constellation to 288 satellites.

8. Which bank has launched a digital and instant Blocked Account for students aspiring to study in Germany?

A) Citibank

B) ICICI Bank Germany 

C) Deutsche Bank

D) State Bank of India

  • ICICI Bank Germany has announced the launch of a digital and instant Blocked Account for students aspiring to study in Germany. A Blocked Account is a special type of account wherein students are required to keep a certain amount of money in order to get a Balance Confirmation Certificate (BCC). This account is mandatory for getting a student Visa in Germany.
  • This account offers students a complimentary Current Account that the students can use in Germany. It also comes with a VISA debit card which can be used anywhere in the world.

9. Which state has emerged as a leading state in trading at National Agriculture Market (eNAM)?

A) Tamil Nadu

B) Rajasthan 

C) West Bengal

D) Kerala

  • Rajasthan has emerged as a leading state in trading at National Agriculture Market (eNAM). Rajasthan was the first state to allow conversion of all single trading licenses into unified license to promote e–Trade of farm products. Till now, total 37346 traders are working as unified licensee traders.

10. Recently, who has become the first Indian to receive Congressional Gold Medal?

A) Netaji Subhash Chandra Bose

B) Mahatma Gandhi 

C) Bhagat Singh

D) B R Ambedkar

  • New York Congresswoman Caroline Maloney re–introduced legislation in the U.S. House of Representatives to posthumously award the Congressional Gold Medal to Mahatma Gandhi. He has been awarded for his contributions made through his methods of non–violence. He would become the first Indian to receive the Congressional Gold Medal, which is the highest civilian award in the US.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!