TnpscTnpsc Current Affairs

26th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

26th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 26th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட, ‘அனங் தால் ஏரி’ அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. கர்நாடகா

ஆ. புது தில்லி

இ. கேரளா

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி 

  • தென் தில்லியில் அமைந்துள்ள அனங் தால் ஏரி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக நடுவண் கலாச்சார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் குறித்த தேசிய இயக்கத்தின் இணையதளத்தின்படி, அனங் தால் பொது ஆண்டு 1,060–க்கு முந்தையது ஆகும்.

2. ‘இந்திய கனிமங்கள் மற்றும் உலோகத் தொழிற்துறை தொடர்பான சர்வதேச மாநாடு’ நடைபெறுகிற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. மைசூரு

ஈ. வாரணாசி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. புது தில்லி 

  • இந்தியாவின் சுரங்க நிறுவனமான NMDC ஆனது FICCI உடன் இணைந்து இந்திய கனிமங்கள் மற்றும் உலோகத் தொழிற்துறை குறித்த மாநாட்டை புது தில்லியில், ‘2030–ஐ நோக்கிய மாற்றம் & தொலைநோக்குப்பார்வை 2047′ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்தது. விடுதலை அமுதப்பெருவிழாவின் ஒருபகுதியாக, நடுவண் எஃகு அமைச்சகம் மற்றும் நடுவண் சுரங்க அமைச்சகத்துடன் இணைந்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தொலைநோக்குப் பார்வை–2047ஐ அடைவதற்கான கனிமங்கள் மற்றும் உலோகத் தொழிற்துறைக்கான செயல்திட்டம் குறித்து விவாதிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

3. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) தரவு சேமிப்பக விதிமுறைகளுக்கு இணங்கியதை அடுத்து கீழ்க்காணும் எந்தக் கடனட்டை சேவையின் மீதான கட்டுப்பாடுகளைத் திரும்பப்பெற்றது?

அ. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

ஆ. டிஸ்கவர்

இ. மாஸ்டர்கார்டு

ஈ. விசா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கிக் கழகம் மீதான கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற்றது. மேலும் தரவு சேமிப்பக விதிமுறைகளுடன் அதன் திருப்திகரமான இணக்கத்தைத் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் அந்நிறுவனத்தை அனுமதித்தது. ரிசர்வ் வங்கியின் தரவு சேமிப்பக விதிகளுக்கு, அமெரிக்காவைச் சார்ந்த கடனட்டை சேவை நிறுவனமான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இணங்காத காரணத்தால், கடந்த 2021ஆம் ஆண்டில், அந்நிறுவனத்திற்கு RBI தடை விதித்தது.

4. உக்ரைனின் விடுதலை நாளை $3 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவி அளித்து கொண்டாடிய நாடு எது?

அ. இங்கிலாந்து

ஆ. அமெரிக்கா

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன், உக்ரைனின் விடுதலை நாளை $3 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கி கொண்டாடினார். உருசியாவின் படையெடுப்பிற்குப் பிறகு, அமெரிக்காவால் அளிக்கப்படும் மிகப்பெரிய நிதியுதவி இதுவாகும். வரும் நாட்களில் புதிய தாக்குதல்களை நடத்த உருசியா திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. அப்புதிய தொகுப்பில் ‘NASAMS’ எனப்படும் ஆறு கூடுதல் ஏவுகணை அமைப்புகள், பீரங்கியை எதிர்க்கும் ரேடார்கள், பூமா டிரோன்கள் மற்றும் ‘VAMPIRE’ என்னும் டிரோன் எதிர்ப்பு அமைப்புகளும் அடங்கும்.

5. NHAI, IWAI மற்றும் RVNL ஆகியவை எந்தத் திட்டத்தின்கீழ் நவீன பன்மாதிரி போக்குவரத்துப் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?

அ. பாரத்மாலா பரியோஜனா

ஆ. PM கிராம சதக் யோஜனா

இ. சீர்மிகு நகரங்கள் திட்டம்

ஈ. அம்ருத் திட்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பாரத்மாலா பரியோஜனா

  • தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மேலாண்மை லிட் (NHLML), இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (IWAI) மற்றும் இரயில் விகாஸ் நிகாம் லிட் (RVNL) ஆகியவை நவீன பன்மாதிரி போக்குவரத்துப் பூங்காக்களை விரைவாக மேம்படுத்துவதற்காக ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நாடு முழுவதும் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்கீழ் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சரக்குப்போக்குவரத்து ஒருங்கிணைப்பை மையப்படுத்தவும், சரக்குச்செலவை 14%–லிருந்து 10%–க்கும் குறைவாக குறைக்கவும் இது உதவும்.

6. எந்த இந்தியத்தலைவரின் இல்லத்திற்கு லண்டனின், ‘நீலத்தகடு’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது?

அ. Dr B R அம்பேத்கர்

ஆ. தாதாபாய் நௌரோஜி

இ. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

ஈ. கான் அப்துல் கபார் கான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தாதாபாய் நௌரோஜி

  • இந்தியத்தலைவர் தாதாபாய் நௌரோஜியின் லண்டன் இல்லம், லண்டனில் வாழ்ந்து பணியாற்றிய குறிப்பிடத்தக்க நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட, ‘நீலத்தகடு’ பெறவுள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் தாதாபாய் நௌரோஜி ஆவார். கடந்த 1866ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘நீலத்தகடு’ திட்டம், தற்போது ஆங்கில பாரம்பரிய அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது.

7. ஜேம்ஸ் மராப் என்பவர் எந்த நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்?

அ. பப்புவா நியூ கினி

ஆ. சிங்கப்பூர்

இ. மலேசியா

ஈ. மாலத்தீவுகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பப்புவா நியூ கினி

  • தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற தேர்தலுக்குப்பிறகு, ஜேம்ஸ் மராப் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜேம்ஸ் மராப் இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார். இப்புதிய அரசாங்கத்தை மராபும் அவருக்கு முன் பிரதமராகப் பதவியிலிருந்து கடந்த 2019–இல் பதவி விலகிய பீட்டர் ஓ’நீலும் வழி நடத்துவர். பப்புவா நியூ கினியா என்பது பலதரப்பட்ட பழங்குடிகள் வாழும் ஒரு தீவு நாடாகும். இது, கடந்த 1975ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிலிருந்து விடுதலை அடைந்தது.

8. ‘SMILE–75’ என்ற முனைவுடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, விடுதலை அமுதப்பெருவிழா என்ற உணர்வின்கீழ், இரக்கும் செயலில் ஈடுபடுவோர்க்கு விரிவான மறுவாழ்வளிக்க 75 மாநகராட்சிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த முனைவானது. ‘SMILE: Support for Marginalised Individuals for Livelihood and Enterprise’ அல்லது ‘SMILE–75’ முனைவு என்று அழைக்கப்படுகிறது. மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், ஆலோசனை, விழிப்புணர்வு, கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பிற அரசின் நலத்திட்டங்களுடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இது கவனம் செலுத்தும்.

9. இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில், ‘விடுதலைச் சுவரோவியக் கலைத்திட்டத்தை’த் தொடங்கிய இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளா

  • இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ‘விடுதலைச் சுவரோவியக் கலைத் திட்டத்தை’ கேரள உயர்கல்வி அமைச்சகம் முறையாகத் தொடக்கி வைத்தது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அரசுக்கல்லூரிகளில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மற்றும் மாநில தேசிய சேவைத் திட்ட அலகு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20,000 அடி பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்தச்சுவரோவியம், நாட்டிலேயே வரையப்பட்ட சுவரோவியங்களின் மிகப்பெரிய தொகுப்பாகக் கூறப்படுகிறது.

10. ‘இளையோருக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் – 2022’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. WEF

ஆ. IMF

இ. உலக வங்கி

ஈ. ILO

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ILO

  • ‘இளையோருக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் – 2022’ என்ற அறிக்கை அண்மையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, இந்தியா, 2020 மற்றும் 2021இல் கடுமையான வேலைநேரம் மற்றும் வேலையிழப்புகளைச் சந்தித்தது; மேலும், 2020 உடன் ஒப்பிடும்போது 2021இல் இந்திய இளையோர்களின் வேலைவாய்ப்பு மிகவும் மோசமடைந்தது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, 15–24 வயதுக்குட்பட்ட இளையோர்கள் பெரியவர்களைவிட அதிக சதவீத வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். 2022ஆம் ஆண்டில், மொத்த உலகளாவிய வேலைவாய்ப்பற்ற இளையோர்களின் எண்ணிக்கை 73 மில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்  

1. தென்னை மேம்பாட்டு வாரியம் உலக தென்னை நாள் – 2022 மற்றும் விருது வழங்கும் விழாவை நடத்த உள்ளது

தென்னை மேம்பாட்டு வாரியம் வரும் செப்.2ஆம் தேதி 23ஆவது உலக தென்னை நாள் கொண்டாட்டங்களை நடத்தவுள்ளது. வேளாண் துறைக்கான நடுவண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த ஆண்டின் (2022) உலக தென்னை நாள் கொண்டாட்டங்களை குஜராத்தில் உள்ள ஜூனாகாட்டில் மெய்நிகர் முறையில் தொடக்கி வைக்க உள்ளார். இந்த ஆண்டுக்கான (2022) உலக தென்னை நாள் கொண்ட்டாட்டங்களுக்கான கருப்பொருளாக “நாளைய நன்மைக்காகவும், வாழ்க்கைக்காகவும் தென்னை வளர்ப்பு” அமைந்துள்ளது.

2. தமிழக, புதுவை ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

நிகழாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் 46 பேர்கொண்ட பட்டியலில், தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கே ராமச்சந்திரன், புதுவையைச் சேர்ந்த அரவிந்த் ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.

மறைந்த முன்னாள்குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்.5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு நடுவணரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். இந்த விருது `50,000 ரொக்கம், பாராட்டுச்சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

 3. IMF செயல் இயக்குநராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்

சர்வதேச நிதியத்தின் (IMF) செயல் இயக்குநராக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்படுவதாக நடுவண் பணியாளர் அமைச்சகம் தெரிவித்தது. இதன்மூலம் அந்த அமைப்புக்கான இந்திய பிரதிநிதியாக அவர் செயல்படுவார்.

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தற்போது இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸில் நிதித்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நவ.1-ஆம் தேதி முதல் சர்வதேச நிதியத்தில் இந்தியா சார்பில் செயல் இயக்குநராக அவர் பொறுப்பு ஏற்கவுள்ளார். அவரது நியமனத்துக்கு நடுவண் அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை இந்தப்பொறுப்பில் நீடிப்பார் என நடுவண் பணியாளர் அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச நிதியத்தில் இந்தியா சார்பில் செயல் இயக்குநராக செயல்பட்டு வரும் சுர்ஜித் எஸ் பல்லா கடந்த 2019 அக்டோபரில் இந்தப்பொறுப்பை ஏற்றார். அவரது பணிக்காலம் அக்.30-இல் நிறைவடைகிறது.

26th August 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. The Anang Tal Lake, which was declared a monument of national importance, is located in which state/UT?

A. Karnataka

B. New Delhi

C. Kerala

D. Telangana

Answer & Explanation

Answer: B. New Delhi

  • The Anang Tal Lake in South Delhi has been declared a monument of national importance by the Ministry of Culture. As per the website of National Mission on Monuments and Antiquities, Anang Tal dates back to 1,060 AD.

2. Where is the ‘International Conference on Indian Minerals and Metals Industry’ held?

A. New Delhi

B. Mumbai

C. Mysuru

D. Varanasi

Answer & Explanation

Answer: A. New Delhi

  • India’s mining major NMDC in association with FICCI organised a conference on Indian minerals and metal industry on the theme ‘Transition Towards 2030 & Vision 2047’ in New Delhi. As a part of Azadi Ka Amrit Mahotsav, the conference was organised in collaboration with the Ministry of Steel and the Ministry of Mines. The objective of the event was to discuss on the roadmap for the minerals and metal industry to achieve Vision 2047.

3. The Reserve Bank of India (RBI) withdrew the restrictions on which credit card service after compliance with data storage norms?

A. American Express

B. Discover

C. Mastercard

D. Visa

Answer & Explanation

Answer: A. American Express

  • The Reserve Bank of India (RBI) withdrew the restrictions on American Express Banking Corp and allowed the company to onboard new customers following satisfactory compliance with data storage norms. The RBI, in 2021, had restricted US–based credit card service from onboarding new domestic customers onto its card network for non–compliance with RBI’s rules on storage of payment system data.

4. Which country marked the Ukraine’s Independence Day with USD 3 billion in security assistance?

A. UK

B. USA

C. Australia

D. Germany

Answer & Explanation

Answer: B. USA

  • U.S. President Joe Biden marked Ukraine’s Independence Day with USD 3 billion in security assistance. This is the country’s largest aid package since Russia’s invasion six months ago. It is feared that Russia appeared to be planning to launch fresh attacks in coming days. The new package would include six additional surface–to–air missile systems known as NASAMS, counter–artillery radars, Puma drones, along with counter–drone systems known as VAMPIRE.

5. NHAI, IWAI and RVNL signed a tripartite MoU for development of modern Multi Modal Logistics Parks under which scheme?

A. Bharatmala Pariyojana

B. PM Gram Sadak Yojana

C. Smart City Scheme

D. AMRUT Scheme

Answer & Explanation

Answer: A. Bharatmala Pariyojana

  • A tripartite agreement was signed by National Highways Logistics Management Limited (NHLML), Inland Waterways Authority of India (IWAI) and Rail Vikas Nigam Limited (RVNL) for swift development of modern Multi Modal Logistics Parks (MMLP). The MoU was signed under the Bharatmala Pariyojna across the country with an objective to centralize freight consolidation and reduce logistics cost from 14% to less than 10% of GDP.

6. Which Indian leader’s home is conferred the London’s ‘Blue plaque honour’?

A. Dr B R Ambedkar

B. Dadabhai Naoroji

C. Mohandas Karamchand Gandhi

D. Khan Abdul Kabar Khan

Answer & Explanation

Answer: B. Dadabhai Naoroji

  • The London home of the Indian leader Dadabhai Naoroji is set to get a ‘Blue plaque’, an honour reserved for notable personalities who have lived and worked in London. Dadabhai Naoroji is the first Asian to be elected a British Member of Parliament. The Blue Plaque scheme was established in 1866, and is run by English Heritage at present.

7. James Marape was sworn in as Prime Minister of which country?

A. Papua New Guinea

B. Singapore

C. Malaysia

D. Maldives

Answer & Explanation

Answer: A. Papua New Guinea

  • Papua New Guinea’s Parliament has elected Prime Minister James Marape to power after elections in the South Pacific Island nation. Marape was sworn in as the Prime Minister for a second time. The contenders to lead the new government were Marape and Peter O’Neill, his predecessor who resigned in 2019. Papua New Guinea is a diverse tribal society, which gained independence from Australia in 1975.

8. Which Union Ministry is associated with ‘SMILE–75 Initiative’?

A. Ministry of Home Affairs

B. Ministry of Social Justice and Empowerment

C. Ministry of Law and Justice

D. Ministry of Commerce and Industry

Answer & Explanation

Answer: B. Ministry of Social Justice and Empowerment

  • Ministry of Social Justice & Empowerment has identified 75 Municipal Corporations to implement comprehensive rehabilitation of persons engaged in the act of begging, under the spirit of Azadi ka Amrit Mahotsav. The initiative is called ‘SMILE: Support for Marginalised Individuals for Livelihood and Enterprise’ or SMILE–75 Initiative. The initiative will focus on rehabilitation, provision of medical facilities, counselling, awareness, education, skill development and convergence with other Government welfare programmes etc.

9. Which Indian state kick started the ‘Freedom Wall mural art project’ to mark the 75th anniversary of Indian Independence?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Kerala

  • Kerala Higher Education Ministry formally inaugurated the Freedom Wall mural art project to mark the 75th anniversary of Indian Independence. The project is jointly organised in government colleges across the state by the Directorate of Collegiate Education and the State National Service Scheme (NSS) unit. The mural stretch, which will cover an area of 20,000 ft, is said to be the largest collection of murals painted in the country.

10. Which organisation released the ‘Global Employment Trends for Youth – 2022’ report?

A. WEF

B. IMF

C. World Bank

D. ILO

Answer & Explanation

Answer: D. ILO

  • The ‘Global Employment Trends for Youth 2022’ report was recently released by the International Labour Organisation. As per the report, India experienced severe working–hour and employment losses in 2020 and 2021, and Indian youth employment deteriorated in 2021 compared to 2020. Youngsters in 15–24 age group experienced a much higher percentage loss in employment than adults since early 2020. The total global number of unemployed youths is estimated to reach 73 million in 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!