Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

26th February 2020 Current Affairs in Tamil & English

26th February 2020 Current Affairs in Tamil & English

26th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

26th February 2020 Current Affairs in Tamil

26th February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. பிப்ரவரி, 2020 நிலவரப்படி, இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளர் (trade partner) நாடு எது?

அ. சீனா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. இரஷ்யா

ஈ. பிரான்ஸ்

  • இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளராக அமெரிக்கா சீனாவை விஞ்சியுள்ளது. வர்த்தக அமைச்சக தரவுகளின்படி, 2018-19 நிதியாண்டில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் கிட்டத்தட்ட $88 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் $87.1 பில்லியன் டாலராக இருந்தது.
  • இதேபோல், 2019-20ஆம் ஆண்டு ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் $68 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே காலகட்டத்தில், சீனாவுடனான வர்த்தகம் $65 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவில் மிகைவர்த்தகம் புரியும் சில நாடுகளுள் அமெரிக்காவும் ஒன்றாகும். மறுபுறம், சீனாவுடன் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை இந்தியா கொண்டுள்ளது.
  • 2018-19இல், இந்தியா, அமெரிக்காவுடன் $16.9 பில்லியன் டாலர் அளவுக்கு மிகை வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், சீனாவுடன் $53.6 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. 2013-14 முதல் 2017-18 வரை, சீனா, இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளராக இருப்பதாக இந்தத் தரவு காட்டுகிறது.

2.புது தில்லியில் நடைபெற்ற 2020 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் ஒட்டுமொத்த தரவரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்?

அ. இரண்டாவது

ஆ. மூன்றாவது

இ. நான்காவது

ஈ. ஐந்தாவது

  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள், 2020 பிப்.18 முதல் 23 வரை புது தில்லியின் இந்திரா காந்தி அரங்கில் உள்ள KD ஜாதவ் உட்புற மைதானத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, சீனா, இந்தப்போட்டிகளில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டது.
  • இந்தத்தொடரில் ஜப்பான், ஈரான், இந்தியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகள் முறையே முதல் 4 இடங்களைப் பெற்றன. ஜப்பான் 8 தங்கம் உட்பட மொத்தம் 16 பதக்கங்களை வென்றது. இந்தியா, 5 தங்கம் உட்பட மொத்தம் 20 பதக்கங்களை வென்றது.

3.அண்மையில், சர்வதேச நீதித்துறை மாநாட்டை நடத்திய நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. போபால்

இ. மும்பை

ஈ. சண்டிகர்

  • இரு நாள் நீடித்த சர்வதேச நீதி மாநாடு-2020, புது தில்லியில் அமைந்துள்ள உச்சநீதிமன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. “நீதித்துறையும் மாறிவரும் உலகமும் – Judiciary and the Changing World” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

4. PM-KISAN திட்டத்தின்கீழ் நிதியுதவி தகுதி பெறுவதற்கு, அதிகபட்ச நிலம் வைத்திருக்கும் வரம்பு என்ன?

அ. 1 ஹெக்டேர்

ஆ. 2 ஹெக்டேர்

இ. 3 ஹெக்டேர்

ஈ. வரம்பு இல்லை

  • கடந்த 24 பிப்ரவரி 2019 அன்று PM-கிசான் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர்களின் குடும்பங்களுக்கும் வருமான ஆதரவை வழங்குகிறது. மேலும், விவசாயம் மற்றும் குடும்பத்தேவைகள் தொடர்பான செலவுகளை பூர்த்திசெய்ய அவர்களுக்கு உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ், 3 தவணைகளில் ஆண்டுக்கு `6000 நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
  • இந்தத்திட்டம், தொடக்கத்தில், நாடு முழுவதுமுள்ள, இரண்டு ஹெக்டேர் நிலம் வரை வைத்திருந்த அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் வருமான ஆதரவை வழங்கியது. பின்னர் அதன் வரம்பு, நாட்டின் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் அவர்களின் நிலங்களின் அளவைப் பொருட்படுத்தாமல் விரிவுபடுத்தப்பட்டது.

5.அண்மையில் அமைக்கப்பட்ட சஞ்சீவ் பூரி நிபுணர் குழு, எந்தக் களத்தை ஆராய்கிறது?

அ. அமைப்புசாரா துறை

ஆ. பண்ணை ஏற்றுமதிகள்

இ. உற்பத்தி தொழில்கள்

ஈ. சேவைத்துறை

  • 15ஆவது நிதி ஆணையம் விவசாய ஏற்றுமதியை ஆராய்வதற்காக ஓர் உயர்மட்ட வல்லுநர் குழுவை நிறுவியுள்ளது. இக்குழு ITC தலைவர் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளது. விவசாய ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியும் நோக்கில் சஞ்சீவ் பூரி வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

6.அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, C.gretathunbergae என்பது ______?

அ. மீன்

ஆ. பாம்பு

இ. நத்தை

ஈ. தவளை

  • சுவீட காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கின் பெயரை, புருனேயில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதியவகை நில நத்தைக்கு நெதர்லாந்தில் உள்ள அறிவியலாளர்கள் வழங்கியுள்ளனர். Craspedotropis gretathunbergae என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்நிலநத்தைக்கான பெயராக வழங்கப்பட்டுள்ளது. வறட்சி, வனச்சீரழிவு மற்றும் வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு உணர்திறன் கொண்டவை இந்நத்தைகள். இது, ‘Caenogastropods’ எனப்படும் நத்தைகள் குடும்பத்தைச் சார்ந்தவையாகும்.

7.அண்மையில், ‘தாய் மங்கூர்’ மீன் வளர்ப்பு மையங்களை அழிப்பதற்கு உத்தரவிட்ட மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. குஜராத்

ஈ. கோவா

  • நன்னீர் மங்கூர் போன்ற தோற்றத்தைக்கொண்ட தாய்மங்கூர் மீன், மாநிலத்தில் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் வளர்க்கப்படுகிறது. இதன் நுகர்வின் காரணமாக மக்களுக்கு நோய் ஏற்படுகிறது. எனவே, தாய்மங்கூர் மீன்களின் இனப்பெருக்க மையங்களை அழிப்பதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது. மீன் விற்பனைக்கு தடைவிதிக்க, மாநில மீன்வளத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர், கடந்த 2000ஆம் ஆண்டில் இவ்வகை மீனினங்களை விற்பனை செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

8.எந்த மாநில அரசாங்கத்தால், NRI சபா தன்னார்வ தொண்டு நிறுவனம் கட்டுப்படுத்தப்படுகிறது?

அ. இராஜஸ்தான்

ஆ. ஹரியானா

இ. பஞ்சாப்

ஈ. உத்தரபிரதேசம்

  • 5 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு, பஞ்சாப் NRI சபா தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. NRI சபா உறுப்பினர்கள் மட்டுமே இந்தத்தேர்தலில் வாக்களிக்க முடியும். NRI சபா என்பது பஞ்சாப் மாநில அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். எந்தவொரு NRI’உம், `10,500 கட்டணஞ்செலுத்துவதன்மூலம் இதன் உறுப்பினராகலாம். இந்த அமைப்பில், சுமார் 23,000 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • NRI சபா உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்தலில் போட்டியிட உரிமையுண்டு. வாக்களிப்பில் பங்கேற்பதற்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. NRI சபா, கடந்த 1998இல், சங்கங்கள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டது. NRI சபாவின் தலைவருக்கு எந்தச் சட்ட அதிகாரமும் கிடையாது.
  • சபையின் அலுவலர்களுக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. பல்வேறு நாடுகளின் தூதர்களுடன் NRI’கள் தொடர்பான சிக்கல்களை எடுத்துக்கொள்வதே அவர்களின் செயல்பாடு. NRI’கள் தொடர்பான அரசாங்கப்பணிகளை விரைவுபடுத்துவதற்கும் இவர்கள் அழுத்தம் தருவார்கள்.

9. “JavaScript Sniffers” என்ற சொல், பின்வரும் எதனுடன் தொடர்புடையது?

அ. அங்கீகார மென்பொருள்

ஆ. தீம்பொருள்

இ. குறியாக்க மென்பொருள்

ஈ. தீயரண்

  • இருண்ட வலையில் (Dark Web) விற்கப்படும் வரவு அட்டை குறித்த தகவல்களில், சுமார் 98%, இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டதாக சிங்கப்பூரைச்சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், JS ஸ்னிஃபர்களின் பயன்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.
  • JS ஸ்னிபர்கள் அல்லது ஜாவாஸ்கிரிப்ட் ஸ்னிபர்கள் என்பது சிறப்பு தீம்பொருளாகும்; அவை, இணைய குற்றவாளிகளால் முக்கியமான வரவு அட்டைத் தகவல்களைத் திருடப்பயன்படுகின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த குரூப் IB’இன் அண்மைய அறிக்கை, இணைய குற்றவாளிகளால் இந்த மென்பொருட்களின் வளர்ந்துவரும் பயன்பாட்டை எடுத்துக்கூறுகிறது. திருடப்பட்ட தகவல்கள் பின்னர் இருண்டவலையில் விற்கப்படுகின்றன.

10.எத்னோலோக் (Ethnologue) என்றால் என்ன?

அ. மொழிகளின் தரவுத்தளம்

ஆ. பாரம்பரிய கட்டடங்களின் தரவுத்தளம்

இ. உள்ளூர் சுங்கங்களின் தரவுத்தளம்

ஈ. பழங்குடிகளின் தரவுத்தளம்

  • பிப்ரவரி.21 அன்று கொண்டாடப்படும் சர்வதேச தாய்மொழி நாளில் உலகின் மிகப்பெரிய மொழி தரவுத் தளமான ‘எத்னோலோக்’இன் 23ஆவது பதிப்பு வெளியிடப்பட்டது. ‘எத்னோலோக்: உலகின் மொழிகள்’ என்பது வருடாந்திர வெளியீடாகும். இது, உலக மொழிகளின் பெரும் தரவுத்தளமாக செயல்படுகிறது. மொழியியலாளர்களால் ஆராய்ச்சிக்காகவும், மாணவர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது.
  • அமெரிக்காவைச் சார்ந்த SIL இன்டர்நேஷனல் என்ற இலாப நோக்கற்ற அமைப்பால், ‘எத்னோலோக்’ வெளியிடப்படுகிறது. இது, கடந்த 1951ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. உலக மொழிகளை ஆவணப்படுத்துவதும், கல்வியறிவை மேம்படுத்துவதுமே இந்த வெளியீட்டின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!