Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

26th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

26th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. இதுவரை அறியப்பட்ட அனைத்து கழுகு-நச்சு மருந்துகளையும் தடைசெய்த உலகின் முதல் நாடு எது?

அ) மியன்மர்

ஆ) வங்காளதேசம்

இ) பூடான்

ஈ) இலங்கை

  • கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி கெட்டோபிரோஃபனை வங்காளதேசம் அண்மையில் தடை செய்தது. இதன்மூலம் கழுகுகளுக்கு நச்சுத்தன்மையுள்ளதாக இதுவரை அறியப்பட்ட அனைத்து மருந்துகளையும் தடைசெய்த முதல் நாடாக வங் -காளதேசம் மாறியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், அந்நாடு, கால்நடை மருந்தான டிக்ளோஃபெனாக்கை தடைசெய்தது.

2. அண்மையில் பதவி விலகிய V நாராயணசாமி, பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார்?

அ) புதுச்சேரி

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) கர்நாடகா

ஈ) லடாக்

  • புதுச்சேரி முதலமைச்சர் V நாராயணசாமி, சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, அம்மாநி -லத்தில் ஆட்சிசெய்துவந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசாங்கம் கவி -ழ்ந்தது. நாராயணசாமி தனது பதவி விலகல் கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கினார்.
  • புதுச்சேரி சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, கார்லாபட் வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) பீகார்

இ) ஒடிஸா

ஈ) சத்தீஸ்கர்

  • ஒடிஸா மாநிலத்தின் கார்லாபட் வனவுயிரி சரணாலயத்தில், இம்மாதத் -தில் மட்டும் ஆறு பெண் யானைகளும் ஒரு கன்றும் இறந்துள்ளது. அண்மையில், மத்திய அரசின் 3 உறுப்பினர்களைக்கொண்ட ஒரு குழு, அவ்வனவுயிரி சரணாலயத்திற்கு அருகே யானைக் கன்றின் சிதைந்த சடலத்தைக் கண்டறிந்து, யானைகளின் இறப்பு எண்ணிக்கையை ஏழு ஆக்கியது. குருதிக்கசிவுக் கிருமியேற்ற நோய் பரவுவதே யானைகளின் இறப்புக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

4. ‘யுத் அப்யாஸ்’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சியாகும்?

அ) ஜப்பான்

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) இலங்கை

ஈ) பிரான்ஸ்

  • இந்த ஆண்டு (2021), இந்தியா-அமெரிக்க கூட்டு இராணுவப்பயிற்சியின் (யுத் அப்யாஸ்) 16ஆவது பதிப்பு, பிப்.8 முதல் 21 வரை நடைபெற்றது. இந்த ஆண்டின் பயிற்சி, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்டது. இப் பயிற்சியானது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்ப -டுத்துவதை நோக்கமாகக்கொண்டது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இது சிறப்பு கவனம் செலுத்துகிறது.

5. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப்பிறகு, எந்த மாநில சட்டமன்றம் இந்திய தேசிய கீதத்தை இசைத்தது?

அ) சிக்கிம்

ஆ) மேகாலயா

இ) நாகாலாந்து

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

  • நாகாலாந்து, மாநில அந்தஸ்தை அடைந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுக -ளுக்குப்பிறகு, முதன்முறையாக அம்மாநில சட்டமன்றத்திற்குள் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாகாலாந்துக்கு 1963 டிச.1’இல் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. இது, இந்திய ஒன்றியத்தின் 16ஆவது மாநிலமாகும்.
  • மாநில சட்டமன்றத்திற்குள் இந்திய தேசியகீதத்தை இசைப்பது கட்டாயம் இல்லை என்றாலும், வழக்கமாக பல மாநிலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

6. “Fostering multilingualism for inclusion in education and society” என்பது பிப்ரவரி.21 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?

அ) பன்னாட்டு மொழிகள் நாள்

ஆ) பன்னாட்டு பத்திரிகை நாள்

இ) பன்னாட்டு தாய்மொழி நாள்

ஈ) பன்னாட்டு இலக்கிய நாள்

  • ஆண்டுதோறும் பிப்.21 அன்று பன்னாட்டு தாய்மொழி நாள் கொண்டாடப் -படுகிறது. “Fostering multilingualism for inclusion in education and society” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொ -ருளாகும். 1999ஆம் ஆண்டில், ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பிப்.21’ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. அதே தேதியில்தான், வங்காளதேசம் தனது வங்காள மொழிக்காக போ -ராடியது; அது மொழிசார்ந்த தேசிய பேரியக்கமாக மாறியது.

7. பறவைக்காய்ச்சல் திரிபான H5N8, மனிதர்களுக்கு பரவுவதாக அறிவித்துள்ள உலகின் முதல் நாடு எது?

அ) சீனா

ஆ) இரஷ்யா

இ) இந்தியா

ஈ) இந்தோனேசியா

  • பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் H5N8 என்ற பறவைக்காய்ச்சல் வைரஸின் முதல் பாதிப்பை இரஷ்யா சமீபத்தில் பதிவுசெய்தது. இந்த விஷயத்தை உலக நலவாழ்வு அமைப்புக்கு (WHO) இரஷ்யா தெரி வித்துள்ளது. அண்மையில், H5N8 திரிபின் பரவல் இரஷ்யா, ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள கோழிகளில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

8. எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், இந்திய கடற்படைக்கென சேதக்கட்டுப்பாட்டு பாவனையாக்கி அமைக்கப்படவுள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) அந்தமான் & நிகோபார் தீவுகள்

இ) ஒடிஸா

ஈ) இலட்சத்தீவுகள்

  • அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அமைந்துள்ள போர்ட் பிளேரில், இந்திய கடற்படைக்கென ஒரு சேதக்கட்டுப்பாட்டு பாவனையாக்கி (Dam -age Control Simulator) அமைக்கப்படும். அந்தமான் மற்றும் நிகோபாரின் தலைமைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, சேதக்கட் -டுப்பாட்டு பாவனையாக்கிக்கு அடிக்கல் நாட்டினார். இதனை, கோவா கப்பல்கட்டும் நிறுவனத்தால் நிறுவப்படவுள்ளது.

9. ‘மத்திய கலால் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 22

ஆ) பிப்ரவரி 23

இ) பிப்ரவரி 24

ஈ) பிப்ரவரி 25

  • ஆண்டுதோறும் பிப்ரவரி 24 அன்று இந்தியாவில் ‘மத்திய கலால் நாள்’ கொண்டாடப்படுகிறது. கலால் துறை ஊழியர்கள் தங்கள் கடமைகளை மிகவும் திறமையாக செய்ய ஊக்குவிக்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 1944 பிப்.24 அன்று இயற்றப்பட்ட மத்திய கலால் மற்றும் உப்புச்சட்டத்தை நினைவுகூரும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

10. அண்மையில், தனிமை அமைச்சரை நியமித்த ஆசிய நாடு எது?

அ) பூடான்

ஆ) பாகிஸ்தான்

இ) ஜப்பான்

ஈ) சீனா

  • பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான ஜப்பான் அரசு சமீபத்தில் டெட்சுஷி சகாமோட்டோவை ஜப்பான் நாட்டின் முதலாவது தனிமை அமைச்சராக நியமித்தது. COVID-19 நெருக்கடி காரணமாக தற்கொலை விகிதங்கள் அதிகரிப்பதை கையாளுவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜப்பானில் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்வை நிர்வகிக்கும் பொறுப்பும் அவ்வமைச்சருடையதாகும்.

தமிழ்நாட்டு நடப்பு நிகழ்வுகள்

  • திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் புதிதாக அமைக்கப்பட உள்ள உணவுப்பூங்காவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
  • பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாத்து பயிரிடும் உழவர்களை ஊக்குவிக்கும் வகையில், ‘பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர்’ விருது மூவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதானது `1 இலட்சம், `75,000 மற்றும் `50,000 காசோலைகள், சான்றிதழ்களைக் கொண்டது. இந்தப் பரிசு நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சக்திபிரகதீஷ், சேலம் மாவட்டத்தைச்சார்ந்த வேல்முருகன், சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த உ சிவராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • உள்நாட்டு, வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழினுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு சென்னை அருகில் உள்ள காவனூரில் நிதி தொழில்நுட்ப நகரத்தை தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக்கழகம் உருவாக்கி வருகிறது.
  • ‘தமிழ்நாடு மாநில எரிசக்தி கணிப்பான் – 2050’ இணையதளத்தை, மின்துறை அமைச்சர் பி தங்கமணி தொடக்கிவைத்தார். இதன்மூலம், தமிழ்நாட்டின் வருங்கால மின்சாரத் தேவை, விநியோகம், பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அறிந்துகொள்ளமுடியும்.
  • இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில் பயணிகளுக்குப் பிடித்த வானூர்தி நிலையங்கள் பட்டியலில் மதுரை வானூர்தி நிலையம் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது.
  • அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 59’இலிருந்து 60’ஆக உயர்த்தப்படுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க பழனிசாமி அறிவித்துள்ளார்.

1. Which is the world’s first country to ban all Vulture–Toxic Drugs known so far?

A) Myanmar

B) Bangladesh

C) Bhutan

D) Sri Lanka

  • Bangladesh has recently banned the painkiller ketoprofen used widely to treat the cattle. With this it became the first country to ban all the drugs known so far to be toxic to vultures. Over 10 years ago, the country banned the veterinary drug diclofenac.

2. Narayanasamy, who recently resigned, was the Chief Minister of which state/Union territory?

A) Puducherry

B) Andhra Pradesh

C) Karnataka

D) Ladakh

  • After the Puducherry Chief Minister V Narayanasamy lost the confidence vote on the Legislative Assembly, the UT’s Congress–DMK government collapsed. The Chief Minister tendered his resignation to the Lt Governor Tamilisai Soundararajan, with only around four months remaining for completion of its tenure.

3. Karlapat wildlife sanctuary, which was making news recently, is located in which state?

A) West Bengal

B) Bihar

C) Odisha

D) Chhattisgarh

  • In the month of February, it was reported that six female elephants and a calf were found dead in the Karlapat wildlife sanctuary, Odisha. Recently, a three–member Central team found the decomposed carcass of an elephant calf near the wildlife sanctuary, making the number of elephant deaths in the sanctuary seven. It is said that the spread of haemorrhagic septicemia (HS) is the reason for the elephant deaths.

4. The ‘Yudh Abhyas’ is a joint military exercise between India and which country?

A) Japan

B) United States of America

C) Sri Lanka

D) France

  • This year (2021), the 16th edition of India–USA joint military exercise – Yudh Abhyas held between February 8 and 21. This year’s exercise was conducted at Indio–Pakistan border. The exercise aims to enhance cooperation between the two countries and will have a special focus on counter–terrorism operations.

5. Which state assembly played the National Anthem after almost 60 years?

A) Sikkim

B) Meghalaya

C) Nagaland

D) Himachal Pradesh

  • The national anthem was played inside the Nagaland state assembly for the first time, almost 60 years after Nagaland attained statehood. Nagaland was accorded statehood on December 1, 1963, and it was the 16th state of the Indian Union.
  • Though playing the national anthem is not mandatory in state assemblies, the practice is usually followed in many states.

6. “Fostering multilingualism for inclusion in education and society” is the theme of which special day, celebrated on February 21?

A) International Languages Day

B) International Press Day

C) International Mother Language Day

D) International Day of Literature

  • International Mother Language Day is celebrated every year on February 21. The theme for this year is “Fostering multilingualism for inclusion in education and society”.
  • In 1999, the UN Educational, Scientific and Cultural Organization (UNES –CO) had declared 21st Feb as International Mother Language Day. It was on the same date, Bangladesh fought for their Bangla language, which transformed into a language–based national movement.

7. Which country reported the world’s first case of bird flu strain H5N8 being transmitted to human beings?

A) China

B) Russia

C) India

D) Indonesia

  • Russia has recently registered the first case of a strain of bird flu virus named A(H5N8) being passed to humans from birds. The country has reported the matter to the World Health Organization (WHO).
  • Recently, the outbreaks of the H5N8 strain were reported in several countries liek Russia, Europe, China, the Middle East and North Africa, in recent months but only in poultry so far.

8. In which state / UT, Damage Control Simulator (DCS) for the Indian Navy is to be set up?

A) Tamil Nadu

B) Andaman & Nicobar Islands

C) Odisha

D) Lakshadweep

  • A Damage Control Simulator (DCS) for the Indian Navy would be set up in Port Blair of Andaman and Nicobar Islands. The Commander in Chief of Andaman and Nicobar Command – Lt. Gen. Manoj Pande laid the foundation stone for the Damage Control Simulator. It would be established by Goa Shipyard Ltd.

9. When is the ‘Central Excise Day’ celebrated every year in India?

A) February 22

B) February 23

C) February 24

D) February 25

  • The ‘Central Excise Day’ is celebrated every year in India on February 24. The day is celebrated to encourage the employees of excise department to perform their duties more efficiently.
  • Various seminars, workshops and cultural events are organized all over the country, to mark the event. It is also observed to commemorate the Central Excise and Salt Act, which was enacted on February 24, 1944.

10. Which Asian country has recently appointed a Minister for Loneliness?

A) Bhutan

B) Pakistan

C) Japan

D) China

  • The Government of Japan headed by Prime Minister Yoshihide Suga has recently appointed Tetsushi Sakamoto as the country’s first ever Minister for Loneliness. This decision has been made to tackle the rise in suicide rates due to COVID–19 crisis. Also, the minister is responsible for managing the fall in birth rate in the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!