TnpscTnpsc Current Affairs

26th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

26th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘இந்தியாவின் உயிரி பொருளாதார அறிக்கை – 2022’ஐ வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

இ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஈ. எரிசக்தி அமைச்சகம்

  • ‘இந்தியாவின் உயிரி பொருளாதார அறிக்கை – 2022’ஐ வெளியிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் உயிரி பொருளாதாரம் $80 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். 2020இல் $70.2 பில்லியன் டாலர்களைவிட 14.1% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 2025இல் $150 பில்லியன் டாலராகவும், 2030இல் $300 பில்லியன் டாலராகவும் அது இருக்கும் என்று அவர் கூறினார்.

2. முகவழி ஆதார் எண்ணை அங்கீகரிப்பதற்காக UIDAI அறிமுகப்படுத்திய புதிய செயலியின் பெயர் என்ன?

அ. Aadhaar Face RD 

ஆ. UIDAI Facetime

இ. Aadhar Authenticate

ஈ. Digi–Aadhar

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்போரின் முகத்தைப் பயன்படுத்தி அவர்களின் தனித்துவமான 12 இலக்க அடையாள எண்ணை அங்கீகரிப்பதற்காக, ‘ஆதார் ஃபேஸ் RD’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கீகார நோக்கத்திற்காக ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் முகத்தை பயன்படுத்த ஆதார் அங்கீகார பயனர் முகமைகளை UIDAI செயல்படுத்தியது. ஃபேஸ் அதெண்டிகேஷன் டெக்னாலஜியைப் பயன்படுத்தி அங்கீகாரத்திற்காக நபரின் முகம் படம்பிடிக்கப்படுகிறது.

3. ‘Family Doctor’ என்ற முன்னோடித் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம் 

ஈ. கர்நாடகா

  • ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பத்மநாபம் மண்டலத்தில், ‘குடும்ப மருத்துவர்’ திட்டத்தை சோதனை முயற்சியாக செயல்படுத்த அம்மாநில அரசு தேர்வுசெய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், மருத்துவ மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் ‘ஆரோக்யஸ்ரீ’ பயனாளிகள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு வாரகாலத்திற்குப் பிறகு அவர்களைச் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்து கருத்துகளைப் பெற வேண்டும்.

4. ‘வென்டியன் – Wentian’ என்ற தனது விண்வெளி நிலைய தொகுதியை வெற்றிகரமாக ஏவிய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. சீனா 

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • சீனா வென்டியன் என அழைக்கப்படும் தனது இரண்டாவது தொகுதியை அண்மையில் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக ஏவியது. சீனாவின் ஹைனானில் இருந்து லாங் மார்ச் – 5பி ஏவுகலத்தின் மூலம் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு வெண்டியன் ஏவப்பட்டது. தைகோனாட்ஸ் என்றும் அழைக்கப்படும் சீன விண்வெளி வீரர்கள் பல்வேறு அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் உபகரணங்களை இந்தத் தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளது.

5. மாவட்ட காலநிலை மாற்ற பணிகளை நிறுவியுள்ள இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. குஜராத்

  • தமிழ்நாடு அரசானது சமீபத்தில் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கங்களை (DCCM) நிறுவியுள்ளது. DCCM–களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ‘திட்ட இயக்குநர்கள்’ ஆகவும், மாவட்ட வன அலுவலர் –கள் ‘காலநிலை அதிகாரிகளாக’வும் செயல்படுவார்கள். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் தணிப்பு & தகவமைத் திட்டங்களை தயாரித்து, காலநிலை நெகழ்திறன்மிக்க வளர்ச்சித் திட்டங்களுக்கான உள்ளீடுகளை வழங்குவார்கள்.

6. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக மக்கள்தொகை நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.11 

ஆ. ஜூலை.09

இ. ஜூலை.10

ஈ. ஜூலை.12

  • உலக மக்கள்தொகை நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. “A world of 8 billion: Towards a resilient future for all – Harnessing opportunities and ensuring rights and choices for all” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் உலக மக்கள்தொகை நாளுக்கானக் கருப்பொருள் ஆகும். அதிகரிக்கும் மக்கள்தொகைப் பிரச்சினைகள் குறித்து கவனஞ்செலுத்துவதற்காக, 90–க்கும் மேற்பட்ட நாடுகளில் 1990ஆம் ஆண்டு ஜூலை.11ஆம் தேதி முதன்முதலில் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

7. ஜூட் மார்க் இந்தியா (JMI) திட்டத்தின் திட்டக்காலம் மற்றும் செலவினம் என்ன?

அ. FY 2021– 25; ரூ.485.58 கோடி

ஆ. FY 2022– 26; ரூ.485.58 கோடி 

இ. FY 2021– 25; ரூ.48.58 கோடி

ஈ. FY 2022– 26; ரூ.48.58 கோடி

  • ‘சணல் மார்க் இந்தியா’ இலச்சினையை வெளியிட்டதன்மூலம் சணல் பொருட்களுக்கான நம்பகத்தன்மைக்கான சான்றிதழை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இது இந்திய சணல் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியாகும். 2022 நிதியாண்டு மற்றும் 2026 நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சணல் துறையின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கான திட்டத்தின்கீழ் JMI செயல்படுத்தப்பட்டது. இதற்கான மொத்த நிதி `485.58 கோடி ஆகும்.
  • ஒவ்வொரு ஜூட் மார்க் லேபிளும் தயாரிப்பாளர் குறித்த முழு தகவலுடன் ஒரு தனித்துவமான QR குறியீட்டைக் கொண்டிருக்கும். தேசிய சணல் வாரியம் என்பது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் மைய முகமை ஆகும்; இது சணல் மற்றும் சணல் பொருட்களை மேம்படுத்துவதற்கு பொறுப்புடைய நிறுவனமாகும்.

8. 2022 காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ஹர்மன்ப்ரீத் கௌர் 

ஆ. ஸ்மிருதி மந்தனா

இ. மிதாலி ராஜ்

ஈ. ஜூலன் கோஸ்வாமி

  • 2022ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் விளையாடவுள்ள இந்திய பெண்கள் அணியின் அணித்தலைவியாக ஹர்மன்பிரீத் கௌர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அணியின் துணைத்தலைவியாக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒருநாள் போட்டிகள் நடைபெற்ற பிறகு, பெண்கள் T20 கிரிக்கெட் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

9. ஆசிய U–20 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற நாடு எது?

அ. கஜகஸ்தான்

ஆ. பஹ்ரைன் 

இ. மங்கோலியா

ஈ. சீனா

  • பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்ற ஆசிய U–20 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் U–20 மல்யுத்த அணி 4 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்றது. இந்தப் போட்டியில் இந்தியா ஒன்பது வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. 22 பதக்கங்களில், பெண்கள் அணி மூன்று தங்கப்பதக்கங்கள் உட்பட பத்துப்பதக்கங்களை வென்றது. U–15 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் எட்டுப் பதக்கங்களை வென்றனர்.

10. ‘சர்வதேச மலாலா நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.12 

ஆ. ஜூலை.15

இ. ஜூலை.25

ஈ. ஜூலை.26

  • உலகெங்கிலும் உள்ள பெண்களின் கல்வி உரிமைக்காக பாடுபடும் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயை கௌரவிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.12ஆம் தேதி ‘சர்வதேச மலாலா நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்விக்காக பிரச்சாரம் செய்ததற்காக மலாலா தலிபான்களால் சுடப்பட்டார்.
  • மலாலாவும் அவரது தந்தையும் இணைந்து மலாலா நிதியத்தை நிறுவினர்; அது பெண்களின் கல்வியை ஆதரிக்கும் ஒரு தளமாகும். 2014ஆம் ஆண்டில், மலாலா அமைதிக்கான நோபல் பரிசைப்பெற்றார் மற்றும் அப்பரிசைப்பெறும் மிக இளையவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவர் 2017இல் ஐநா அமைதி தூதராக நியமிக்கப்பட்டார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக இந்தியா அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம் பள்ளிக்கரனை சதுப்புநிலக்காடு, பிச்சாவரம் சதுப்புநிலக்காடு ஆகியவை உட்பட 5 இடங்களை, ‘ராம்சர்’ எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த புதிய இடங்களாக இந்தியா அறிவித்துள்ளது. மிசோரமில் பாலா சதுப்புநிலம், மத்திய பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்புநிலம் ஆகியவை மற்ற 2 புதிய இடங்களாகும். இத்துடன் ‘ராம்சர்’ இடங்களின் எண்ணிக்கை 49-லிருந்து 54-ஆக அதிகரித்துள்ளது.

2. குடியரசுத்தலைவருக்கான அதிகாரங்கள்

இந்திய நாட்டின் பதினைந்தாவது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்றுள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் குறித்த பார்வை:

நாட்டின் தலைவர்

அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்

முப்படைகளின் தலைவர்

நாட்டின் முதல் குடிமகன்

நிர்வாக அதிகாரங்கள்

பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம்.

அரசின் அனைத்து நடவடிக்கைகளும் குடியரசுத்தலைவரின் பெயரிலேயே மேற்கொள்ளப்படும்.

நடுவணரசின் தலைமை வழக்குரைஞரை (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கும் அதிகாரம்.

தலைமை கணக்குத்தணிக்கையாளர், தலைமைத் தேர்தல் ஆணையர், மற்ற ஆணையர்கள், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம்.

மாநிலங்களின் ஆளுநர்களை குடியரசுத்தலைவரே நியமிப்பார்.

நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் நிர்வாகிகளே நிர்வகிப்பர்.

அரசாங்கம் சார்ந்த எந்தவொரு தகவலையும் பிரதமரிடமிருந்து கோர முடியும்.

நாட்டின் எந்தப் பகுதியையும் பழங்குடியின, பட்டியலினப் பகுதியாக அறிவித்து, அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம்.

அமைச்சரவையின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு கூறும் அதிகாரம்.

சட்டம்சார்ந்த அதிகாரங்கள்

இந்திய நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரையும் உள்ளடக்கியது.

குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் சட்டவடிவு பெறும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கான அழைப்புவிடுக்கும் அதிகாரம்; முடித்துவைக்கும் அதிகாரம்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத சமயங்களில் அவசரச்சட்டங்களைப் பிறப்பிக்கும் உரிமை.

மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கும் அதிகாரம்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல்நாளிலும், புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடரிலும் குடியரசுத்தலைவர் சிறப்பு உரையாற்றுவார்.

மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம்.

மக்களவையைக் கலைக்கும் அதிகாரம்.

எம்.பி-க்களின் பதவிநீக்கம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் அதிகாரம்.

நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களைத் திருப்பி அனுப்பவும், காத்திருப்பில் வைக்கவும் அதிகாரம்.

மத்திய பணியாளர் தேர்வாணையம், நிதிக்குழுவின் ஆண்டறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அதிகாரம்.

மாநில ஆளுநர்கள் அனுப்பிவைக்கும் மாநில மசோதாக்களை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் காத்திருப்பில் வைக்கலாம்.

நிதிசார் அதிகாரங்கள்

பண மசோதாக்களை குடியரசுத்தலைவரின் ஒப்புதலின்றி தாக்கல் செய்ய முடியாது.

குடியரசுத்தலைவரின் பெயரிலேயே நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது.

அவசரகால நிதியில் இருந்து நிதியை விடுவிக்கும் அதிகாரம்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம்.

நீதிசார் அதிகாரங்கள்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை குடியரசுத்தலைவரே நியமிப்பார்.

குறிப்பிட்ட சட்டம் தொடர்பான கருத்துகளை உச்சநீதிமன்றத்திடம் கோரும் அதிகாரம்.

நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவும், தண்டனையைக் குறைக்கவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உண்டு.

பாதுகாப்புசார் அதிகாரங்கள்

இராணுவ தலைமைத் தளபதி, கடற்படை தலைமைத் தளபதி, விமானப்படை தலைமைத்தளபதி ஆகியோரை நியமிக்கும் அதிகாரம்.

எந்தவொரு நாட்டின் மீதும் போர்தொடுக்க உத்தரவிடும் அதிகாரம்.

நெருக்கடிநிலை அதிகாரங்கள்

நாடு முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமோ நெருக்கடி நிலையை அமல்படுத்தும் அதிகாரம்.

மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அதிகாரம்.

நிதிசார் நெருக்கடியை அமல்படுத்தும் அதிகாரம்.

கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவை

குடியரசுத் தலைவருக்குப் பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தையும் தன்னிச்சையாக அவர் செயல்படுத்த முடியாது. பெரும்பாலான அதிகாரங்களை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அவரால் செயல்படுத்த முடியும். மத்திய அமைச்சரவையின் அறிவுரைப்படியே செயல்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டம் குடியரசுத்தலைவருக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பதவி விலகலும் தகுதிநீக்கமும்:

குடியரசுத்தலைவர் பதவிவிலக விரும்பினால், இராஜிநாமா கடிதத்தை குடியரசு துணைத்தலைவரிடம் வழங்க வேண்டும்.

குடியரசுத்தலைவரை தகுதிநீக்கம் செய்வதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

3. மூன்று வேட்டைத்தடுப்புக் காவலர்களுக்கு விருது

நீலகிரி மாவட்டத்தில் ‘T-23’ எனப் பெயரிடப்பட்ட புலியை உயிருடன் பிடிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய மூன்று வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் விருது அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் ‘T-23’ எனப் பெயரிடப்பட்ட புலி அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், 20-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. அப்புலி 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, கர்நாடகம் மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இப்புலியைப் பிடிப்பதில் சிறப்பாகப் பணியாற்ற வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மூன்று பேருக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெகுமதியுடன் கூடிய விருதை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்களாகப் பணியாற்றும் பொம்மன், மாதன், மீனா காளன் ஆகிய மூவரும் ‘T-23’ புலியின் நடமாட்டத்தை நாள்தோறும் கவனித்து அளித்த தகவலின் அடிப்படையிலேயே அப்புலியை உயிருடன் பிடிக்க முடிந்தது. மூவரின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழக வனத்துறையால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதையேற்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மூவருக்கும் வெகுமதியுடன் கூடிய விருதை அறிவித்துள்ளது.

உலக புலிகள் நாளையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் சந்தரபூரில் உள்ள வனக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) நடைபெறும் விழாவில் அவர்களுக்கு விருது வழங்கப்படும்.

1. Which Union Ministry released the ‘India’s Bioeconomy Report 2022’?

A. Ministry of Science & Technology 

B. Ministry of Environment, Forest and Climate change

C. Ministry of Agriculture and Farmers welfare

D. Ministry of Power

  • Union Minister for Science & Technology Dr Jitendra Singh released the ‘India’s Bioeconomy Report 2022’ recently. India’s Bio–economy has reached over USD 80 billion in 2021 with 14.1% growth over 2020. It is likely to touch 150 billion dollars by 2025 and over 300 billion dollars by 2030.

2. What is the name of the new application launched by UIDAI to authenticate Aadhar number with face?

A. Aadhaar Face RD 

B. UIDAI Facetime

C. Aadhar Authenticate

D. Digi–Aadhar

  • The Unique Identification Authority of India (UIDAI) has launched ‘Aadhaar Face RD’ app to enable Aadhaar card holders to authenticate their unique 12–digit identity number using face. UIDAI enabled Aadhaar Authentication User Agencies (AUAs) to capture Aadhaar card holders face for authentication purpose. The App captures live person’s face for authentication using Face Authentication Technology.

3. Which state is associated with the ‘Family Doctor’ pilot project?

A. Tamil Nadu

B. Kerala

C. Andhra Pradesh 

D. Karnataka

  • Andhra Pradesh has selected Padmanabham mandal in Visakhapatnam district to implement the ‘Family Doctor’ project on a pilot basis. Under the scheme, Medical and health personnel should visit the Aarogyasri beneficiaries a week after being discharged from hospital to enquire about their health condition and get feedback.

4.  Which country successfully launched its space station module called ‘Wentian’?

A. Russia

B. Israel

C. China 

D. UAE

  • China successfully launched its second module, called Wentian, to the Tiangong space station recently. Wentian was launched aboard a Long March 5B rocket from Hainan, China docking at the Tiangong space station about 13 hours later. The module contains equipment that allows the Chinese astronauts, also known as taikonauts, to perform various scientific experiments.

5. Which Indian state has instituted district climate change missions (DCCM)?

A. Tamil Nadu 

B. Himachal Pradesh

C. Assam

D. Gujarat

  • The Tamil Nadu government recently instituted of district climate change missions (DCCM) across 38 districts in the state. The DCCMs will be administered by District Collectors as ‘Mission Directors’ while District Forest Officers (DFOs) will function as ‘climate officers’. The collectors will prepare district–level climate change mitigation and adaptation plans and provide inputs for low–carbon, climate–resilient development plans.

6. When is the ‘World Population Day’ observed every year?

A. July.11 

B. July.09

C. July.10

D. July.12

  • ‘World Population Day’ is observed every year on July 11. This year the theme is ‘A world of 8 billion: Towards a resilient future for all – Harnessing opportunities and ensuring rights and choices for all’. The day was first marked on 11 July 1990 in more than 90 countries, to focus attention on the urgency and importance of population issues.

7. What is the tenure and financial outlay of Jute Mark India (JMI) scheme?

A. FY 2021–25; Rs 485.58 crore

B. FY 2022–26; Rs 485.58 crore 

C. FY 2021–25; Rs 48.58 crore

D. FY 2022–26; Rs 48.58 crore

  • The government introduced certification of authenticity for jute products with the launch of “Jute Mark India” logo. It is an initiative to promote Indian jute products.
  • JMI was implemented under an umbrella scheme for development and promotion of the jute sector between FY 2022 and FY 2026 with a total financial outlay of Rs 485.58 crore. Each Jute Mark label will contain a unique QR code with information on producer. National Jute Board is the nodal agency of the Union textiles ministry, responsible for the promotion of jute and jute products.

8. Who has been named the captain of the Indian women’s cricket team in the 2022 Commonwealth Games?

A. Harmanpreet Kaur

B. Smriti Mandhana

C. Mithali Raj

D. Jhulan Goswami

  • Harmanpreet Kaur has been named captain of the Indian women’s team, which is set to play at the 2022 Commonwealth Games, Birmingham. Opener Smriti Mandhana was named as the deputy captain. This is the first time Women’s T20 cricket is participating in the Commonwealth Games after a men’s ODI tournament was played at the 1998 Kuala Lumpur Commonwealth Games.

9. Asian U–20 Wrestling Championships was held in which country?

A. Kazakhstan

B. Bahrain 

C. Mongolia

D. China

  • India’s U–20 wrestling team bagged 22 medals, including four gold in the Asian U–20 Wrestling Championship, held in Manama, Bahrain. India also claimed nine silver and nine bronze medals in the event. Among the 22 medals, the women’s team won 10 medals including three gold medals. Indian wrestlers clinched 8 medals in U–15 Asian Wrestling Championship.

10. When is the ‘International Malala Day’ observed?

A. July.12 

B. July.15

C. July.25

D. July.26

  • The ‘International Malala Day’ is observed on July 12 every year, to honour the Nobel Laureate Malala Yousafzai, who works for women’s right to education across the globe. In 2012, Malala was shot by the Taliban for her campaign for the education of girls.
  • Malala and her father co–founded the Malala Fund, a platform to support girls’ education. In 2014, Malala was awarded the Nobel Peace Prize and became the youngest ever recipient. She was designated as United Nations Messenger of Peace in 2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!