Tnpsc

26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. NDHM பயிற்சியக சூழலானது சமீப செய்திகளில் காணப்பட்டது. NDHM’இல் ‘H’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) Health

ஆ) Horticulture

இ) Hurricane

ஈ) Hospital

  • ‘NDHM’ என்பது தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தைக் குறிக்கிறது. NDHM பயிற்சியக சூழலானது நலவாழ்வுச் சேவை வழங்குநர்கள் முதல் செயலி உருவாக்குநர்கள் வரை அனைவருக்குமானதாகும். NDHM’இன் பயிற்சியக சூழல் சேவையானது, NDHM சேவைகளுடன் ஒருங்கிணை -க்கப்படவேண்டிய மென்பொருள் சேவைகள் & செயலிகள் உருவாக்க விரும்பும் எவருக்கும் பயனுள்ள கட்டமைப்புச் சூழலை வழங்குகிறது.

2. ‘Threadit’ என்பது கீழ்காணும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான வலைத்தளமாகும்?

அ) இன்டெல்

ஆ) மைக்ரோசாப்ட்

இ) சாம்சங்

ஈ) கூகிள்

  • ‘Threadit’ என்பது கூகிள் அதன் பணியிடங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான வலைத்தளமாகும். தொலைநிலையிலிருந்து ஒரு பணியை மிகத்திறமையாக செய்வதற்காக இப்புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. பணிதொடர்பான சிக்கல்களை, குழு உறுப்பினர்களுக்கு சிறு காணொளிகளாகப் பதிவுசெய்து அனுப்ப, ‘Threadit’ பயனர்களுக்கு உதவுகிறது. இது டிக்-டாக் செயலியைப்போல உருவாக்கப்பட்டுள்ளது.

3. NIT’களில் மூன்று விண்வெளி அடைவு மையங்களை தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ) NASA

ஆ) DRDO

இ) ISRO

ஈ) BARC

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமான (ISRO) அண்மையில் NIT – நாக்பூர், போபால் மற்றும் ரூர்கேலா ஆகியவற்றில் மூன்று விண்வெளி அடைவு தொழில்நுட்ப மையங்களை திறந்துவைத்தது.
  • இது இந்தியாவில் உள்ள விண்வெளிதுறைசார் தொழில்முனைவோருக்கு ஊக்கமளிப்பதற்கு ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ISRO, ஏற்கனவே NIT அகர்தலா, திருச்சி மற்றும் ஜலந்தரில் இதுபோன்ற மூன்று மையங்களைத் திறந்துள்ளது.

4. “பப்பி-ஆன்டிடெரர்-2021”, என்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தவுள்ள அமைப்பு எது?

அ) ஐக்கிய நாடுகள் அவை

ஆ) SCO

இ) BIMSTEC

ஈ) ASEAN

  • இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பி -ன் உறுப்பினர்கள் இந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்துவார்கள். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பு கவுன்சிலின் 36ஆவது கூட்டத்தின்போது, ‘பப்பி-ஆன்டிடெரர்-2021’ என்ற கூட்டுப்பயிற்சி அறிவிக்கப்பட்டது. SAARC என்பது காத்மாண்டுவை தலைமையிடமாகக்கொண்ட எட்டு உறுப்பு நாடுகளின் பலதரப்பு சங்கமாகும்.

5. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையத்தின் 116ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ) லாகூர்

ஆ) புது தில்லி

இ) ஜெய்ப்பூர்

ஈ) ஜலந்தர்

  • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையக்கூட்டத்தின் 116ஆவது கூட்டம் சமீபத்தில் புது தில்லியில் நடந்தது. இந்தச் சந்திப்பு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பின்னர் நடந்தது. பாகிஸ்தான் தேசிய நாளுடன் இச்சந்திப்பு ஒத்துப்போனது. இரண்டு நாள் நடைபெற்ற இக்கூட்டம், இந்திய தரப்பில் சிந்து நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையில் நடைபெற்றது.

6. நடப்பாண்டில் (2021) வரும் இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Disqualify Racism

ஆ) Racial profiling and incitement to hatred,
including in the context of migration

இ) Mitigating and countering rising nationalist
populism and extreme supremacist ideologies

ஈ) Youth standing up against racism

  • சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அனைத்து வகையான இனவெறி மற்றும் இனப்பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குமாக, ஐநா அவை, மார்ச்.21’ஆம் தேதியை இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச நாளாகக் கடைபிடித்து வருகிறது. “Youth standing up against racism” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

7. உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 20

ஆ) மார்ச் 21

இ) மார்ச் 22

ஈ) மார்ச் 23

  • ஆண்டுதோறும், மார்ச்.23 அன்று உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது, 1950 மார்ச்.23 அன்று உலக வானிலை அமைப்பு (WMO) உருவாக்கப்பட்டதை நினைவுகூர்கிறது. புவியின் வளிமண்டலத்தைப் பாதுகாப்பதில் மனிதர்களும், அமைப்புகளும் ஆற்றிய பங்கையும் இந்தச் சிறப்பு நாள் எடுத்துக்காட்டுகிறது. “The Ocean, Our Climate and Weather” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

8. உலக காசநோய் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 21

ஆ) மார்ச் 22

இ) மார்ச் 23

ஈ) மார்ச் 24

  • ஒவ்வோர் ஆண்டும், உலக நலவாழ்வு அமைப்பு இந்த நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச்.24 அன்று உலக காசநோய் நாளை நினைவுகூர்கிறது. 1882ஆம் ஆண்டு இதேநாளில், மருத்துவர் இராபர்ட் கோச், காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தார். “The Clock is Ticking” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

9. அட்லாண்டிக் பகுதிகளில் நிகழும் அடிமைத்தனம் மற்றும் அடிமைகள் வர்த்தக முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 23

ஆ) மார்ச் 24

இ) மார்ச் 25

ஈ) மார்ச் 26

  • ஆண்டுதோறும் மார்ச்.25 அன்று, அட்லாண்டிக் பகுதிகளில் நிகழும் அடிமைத்தனம் மற்றும் அடிமைகள் வர்த்தக முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் அனுசரிக்கப்படுகிறது. மிருகத்தனமான அடிமை முறையின் கைகளில் துன்பப்பட்டு இறந்தவர்களை இந்த நாள் நினைவுகூர்கிறது. இனவெறி மற்றும் ஓரவஞ்சனையின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “Ending Slavery’s Legacy of Racism: A Global Imperative for Justice” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

10. கைதுசெய்யப்பட்ட மற்றும் காணாமல்போன பணியாளர்களுக் -கான பன்னாட்டு ஒன்றிணையும் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 23

ஆ) மார்ச் 24

இ) மார்ச் 25

ஈ) மார்ச் 26

  • ஆண்டுதோறும் மார்ச்.25 அன்று, “கைதுசெய்யப்பட்ட மற்றும் காணாமல்போன பணியாளர்களுக்கான பன்னாட்டு ஒன்றிணையும் நாள்” ஐநா அவையால் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளானது ஒவ்வோர் ஆண்டும் அலெக் கோலெட் என்பவர் கடத்திச்செல்லப்பட்ட நாளினை நினைவுகூரும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது. அவர், கடந்த 1985’இல், துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டபோது, பாலசுதீனத்தில் ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாளை (மார்ச் 26) வங்கதேசம் செல்கிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மார்ச்.26 அன்று வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார். வங்கதேசத்தின் தேசிய நாள் நாளை கொண்டாடப் -படவுள்ளது. இந்த நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். இதனையடுத்து கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு, முதன்முறையாக வெளிநாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

2. முகநூல் அரசியல் விளம்பர செலவினம்: இரண்டாமிடத்தில் தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலமே முகநூல் அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக அந்த மாநில தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகள் கடந்த 90 நாள்களில் `3.74 கோடியை செலவ -ழித்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முகநூல் அரசியல் விளம்பரத்துக்காக தமிழக அரசியல் கட்சிகள் `3.3 கோடியை செலவழித்துள்ளன.

சமூக ஊடக வலைதளம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் கடந்த 22’ஆம் தேதி வரையிலான 90 நாள்களில், முகநூலில் அரசியல் விளம்பரத்துக்கு செலவழித்த விவரங்களின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு வங்க மாநில அரசியல் கட்சிகள் `3.74 கோடியை செலவழித்துள்ளன. இதில், மாநிலத்தில் புதிதாக ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டிவரும் பாஜகவைக் காட்டிலும், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்துவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முகநூல் அரசியல் விளம்பரத்துக்கு அதிகம் செலவழித்துள்ளது. இந்தக்கட்சி மட்டும் `1.69 கோடி செலவழித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் டிஜிட்டல் விளம்பரங்களை, தேர்தல் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

‘மேற்கு வங்கத்தின் பெருமை மம்தா’ என்பன உள்ளிட்ட விளம்பரங்களை இந்த கட்சி செய்து வருகிறது. இந்த கட்சியின் முகநூல் பக்கத்தை 13 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

அதுபோல, பாஜக மேற்கு வங்கத்தில் முகநூல் அரசியல் விளம்பரத்துக்காக `25.31 இலட்சம் செலவழித்துள்ளது. ‘எனது குடும்பம் பாஜக குடும்பம்’ என்பன உள்ளிட்ட விளம்பரங்களை இந்த கட்சி செய்து வருகிறது. மேற்கு வங்க பாஜகவின் முகநூல் பக்கத்தை 17 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். இந்த மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி முகநூல் விளம்பரத்துக்கு `5 லட்சம் செலவழித்துள்ளது. இடதுசாரி கட்சிகள் மிகக்குறைந்த அளவில் செலவழித்துள்ளன. மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு `3.3 கோடியும், அஸ்ஸாம் `61.77 இலட்சமும், கேரளம் `38.86 இலட்சமும், புதுச்சேரி `3.34 இலட்சமும் முகநூல் அரசியல் விளம்பரங்களுக்கு செலவழித்துள்ளன.

மாநிலம் – கட்சிகள் செலவழித்த தொகை

மேற்கு வங்கம் – `3.74 கோடி

தமிழ்நாடு – `3.3 கோடி

அஸ்ஸாம் – `61.77 இலட்சம்

கேரளம் – `38.86 இலட்சம்

புதுச்சேரி – `3.34 இலட்சம்

3. சூயஸ் கால்வாய் போக்குவரத்துத் தடை: மணிக்கு ரூ.2,900 கோடி இழப்பு

சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் குறுக்கே திரும்பி சிக்கி, அந்த கடல்வழிப்பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதன் கார
-ணமாக மணிக்கு 40 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1869’ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப்பட்ட அக்கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் 12% நடைபெற்றுவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குறுக்கே சிக்கிக்கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சர்வதேச வர்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்பு கோரினார். 400 மீட்டர் நீளமும் 2 இலட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர்.

4. மூன்று ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன: விமானப்படை பலம் அதிகரிக்கும்

பிரான்ஸ் நாட்டில் இருந்து அடுத்த வாரம் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன. அடுத்த மாதம் 9 விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இவற்றின்மூலம் இந்திய வான்படையின் பலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோல்ட் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016இல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

`59, 000 கோடியில் இந்த விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இதுவரை 11 ரபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அந்த விமானங்கள் அம்பாலா விமானப் படை தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

தவிர இந்திய வான்படை வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக 7 விமானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் 3 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இந்த விமானங்களும் அம்பாலா விமானப் படை தளத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அடுத்த மாதம் 9 ரபேல் விமானங்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் இந்திய வான்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும்.

அண்டைநாடுகள் சீனா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காமல் அவ்வப்போது உரசலில் ஈடுபட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில் அதிநவீன ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை கூடுவது, இந்திய வான்படைக்கு பெரும் பலமாக அமையும்.

தற்போது புதிதாக வரவுள்ள ரபேல் விமானங்கள், மேற்குவங்க மாநிலத்தி -ல் உள்ள ஹசிமாரா விமானப்படை தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இவற்றுடன் சேர்த்து ஹசிமாரா தளத்தில் ஐந்து போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும். இதன்மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

1. NDHM Sandbox environment has been seen in the news recently. What does H in NDHM stand for?

A) Health

B) Horticulture

C) Hurricane

D) Hospital

  • NDHM stands for National Digital Health Mission. NDHM sandbox is open to everyone from Health care providers to app builders. The sandbox service of NDHM hosts the building block environment that are useful to any one who wishes to create software services and apps meant to be integrated with NDHM services.

2. ‘Threadit’ is a standalone website created by which tech major?

A) Intel

B) Microsoft

C) Samsung

D) Google

  • Threadit is a standalone website that has been created by Google for its workspaces. This new tool has been built to make remote working more efficient. Threadit enables users to record and send small videos to team members on work related issues. It has been developed in lines of Tik Tok.

3. Which organisation has inaugurated 3 space incubator centres at NITs?

A) NASA

B) DRDO

C) ISRO

D) BARC

  • Indian Space Research Organisation (ISRO) has recently inaugurated three space incubation technology centres in NIT – Nagpur, Bhopal and Rourkela. This is aimed to encourage and give a platform for space entrepreneurs in India. ISRO has already opened three such centres at NIT Agartala, Trichy and Jalandhar.

4. “Pabbi–Antiterror–2021”, a joint anti–terrorism exercise is to be held by which organisation?

A) United Nations

B) SCO

C) BIMSTEC

D) ASEAN

  • Members of the Shanghai Cooperation Organisation (SCO) including India, Pakistan and China will hold a joint anti–terrorism exercise this year. The joint exercise ‘Pabbi–Antiterror–2021’ was announced during the 36th meeting of the Council of the Regional Anti–Terrorist Structure held in Uzbekistan. SAARC is an 8–membered multilateral association headquartered at Kathmandu.

5. Where was the 116th Meeting of the Permanent Indus Commission between India and Pakistan held?

A) Lahore

B) New Delhi

C) Jaipur

D) Jalandar

  • The 116th meeting of the Permanent Indus Commission meeting between India and Pakistan was held recently in New Delhi. This meeting took place after a gap of more than two and half years.
  • This meeting coincided with the National Day of Pakistan. It is a 2–day meeting which on the Indian side is headed by Indus Water Commissioner Pradeep Kumar Saxena.

6. What is the theme of “International Day for Elimination of Racial Discrimination 2021”?

A) Disqualify Racism

B) Racial profiling and incitement to hatred,
including in the context of migration

C) Mitigating and countering rising nationalist
populism and extreme supremacist ideologies

D) Youth standing up against racism

  • The United Nations observes March 21 as International Day for the Elimination of Racial Discrimination, to raise awareness about equality and to end all forms of racism and racial discrimination. The theme for International Day for the Elimination of Racial Discrimination 2021 is “Youth standing up against racism”.

7. When is the World Meteorological Day observed every year?

A) March 20

B) March 21

C) March 22

D) March 23

  • Every year, World Meteorological Day is observed on March 23rd. It commemorates the formation of the World Meteorological Organization (WMO) on March.23, 1950. This day also highlights the role played by humans and organizations in protecting Earth’s atmosphere. The theme for 2021 World Meteorological Day is, “The Ocean, Our Climate and Weather”.

8. When is the World Tuberculosis Day observed every year?

A) March 21

B) March 22

C) March 23

D) March 24

  • Every year, the World Health Organisation commemorates World Tuberculosis Day on March 24, to raise awareness among the general public about the disease.
  • On the same day in 1882, Dr Robert Koch announced that he had discovered the bacterium that causes Tuberculosis. This year, the theme of the World Tuberculosis Day is “The Clock is Ticking”.

9. When the International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade is observed?

A) March 23

B) March 24

C) March 25

D) March 26

  • Every year on 25th March, the International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade is observed by the United Nations. This day remembers those who suffered and died at the hands of the brutal slavery system. It also aims to raise awareness about the dangers of racism and prejudice. The 2021 is, “Ending Slavery’s Legacy of Racism: A Global Imperative for Justice”.

10. When the International Day of Solidarity with Detained and Missing Staff Members is observed?

A) March 23

B) March 24

C) March 25

D) March 26

  • Every year on the March 25th, “International Day of Solidarity with Detained and Missing Staff Members” is observed by the United Nations. It is marked every year on the anniversary of abduction of a former journalist – Alec Collett. He was working for the UN – Relief and Works Agency in Palestine when he was abducted by armed gunman in 1985.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!