TnpscTnpsc Current Affairs

26th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

26th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பிரேசிலின் ஆண்டறிக்கையின்படி, அமேசான் மழைக்காடுகளில், காடழிப்பு, ஓராண்டில் எத்தனை சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது?

அ) 2

ஆ) 22 

இ) 42

ஈ) 62

 • பிரேசில் அரசாங்கத்தின் ஆண்டறிக்கையின்படி, அமேசான் மழைக் காடுகளில் காடழிப்பு ஓராண்டில் 22% அதிகரித்துள்ளது. இது 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவுயர்ந்த அதிகரிப்பாகும். தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘PRODES’ கண்காணிப்பு அமைப்பு, அமேசான் 13,235 சகிமீட்டர் மழைக்காடுகளை இழந்ததாகக் சுட்டிக்காட்டுகிறது.
 • கிளாஸ்கோவில் நடந்த ஐநா காலநிலை உச்சிமாநாட்டின்போது பிரேசில் அரசு 2028’க்குள் சட்டவிரோத காடழிப்பைத்தடுப்பதாக அறிவித்தது.

2. “Ex-சக்தி 2021” என்ற இந்தோ-பிரான்ஸ் கூட்டு இராணுவப் பயிற்சி தொடங்கிய இடம் எது?

அ) அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஆ) டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு டெக்னாலஜி, புனே

இ) டிராகுய்னனின் இராணுவப் பள்ளி, பிரான்ஸ் 

ஈ) விசாகப்பட்டினம்

 • இந்தோ-பிரான்ஸ் கூட்டு இராணுவப் பயிற்சியின் ஆறாவது பதிப்பு “Ex-சக்தி-2021” என்ற பெயரில் பிரான்சின் டிராகுய்னனின் இராணுவப் பள்ளியில் தொடங்கியது. இந்தப் பயிற்சியில் செயல்பாடுகளின் நடத்தை பற்றிய பரஸ்பர புரிதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் கூட்டாக செயல்பட தேவையான ஒருங்கிணைப்பு அம்சங்களை அடையாளம் காணுதல் ஆகியவை அடங்கும்.

3. சர்வதேச உத்திசார் ஆய்வுகள் நிறுவனமானது ஆண்டுதோறும் எந்த நாட்டில் சர்வதேச உரையாடலை நடத்துகிறது?

அ) பஹ்ரைன் 

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) ரஷ்யா

ஈ) UK

 • சர்வதேச உத்திசார் ஆய்வுகள் நிறுவனம் (IISS) மனமா உரையாடலை பஹ்ரைனில் உள்ள மனமாவில் நடத்துகிறது. 2021ஆம் ஆண்டின் உச்சி மாநாடு நவம்பர்.19-21’க்கு இடையில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் முக்கியமான பாதுகாப்பு சவால்களைப் பற்றி விவாதிக்கும் IISS மனமா உரையாடல் என்பது அரசாங்க அமைச்சர்கள், வல்லுநர்கள் மற்றும் வணிக சமூகங்களுக்கான ஒரு தனித்துவமான மன்றமாகும்.
 • 2002ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் IISS ஷாங்ரி-லா உரையாடலை நடத்துகிறது. IISS ‘தி மிலிட்டரி பேலன்ஸை’ வெளியிடுகிறது. இது நாடுகளின் இராணுவ திறன்களின் வருடாந்திர மதிப்பீடாகும்.

4. எந்த நாட்டின் தேசிய இளையோர் மற்றும் குழந்தைகள் இசைக் குழுவான “El Sistema”, உலகின் மிகப்பெரிய இசைக்குழுவிற்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது?

அ) ரஷ்யா

ஆ) வெனிசுலா 

இ) இஸ்ரேல்

ஈ) பிரான்ஸ்

 • வெனிசுலாவின் “எல் சிஸ்டெமா” என அழைக்கப்படும் தேசிய இளை
  -யோர் மற்றும் குழந்தைகள் இசைக்குழுவானது உலகின் மிகப்பெரிய இசைக்குழுவிற்கான புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
 • 8,573 இசைக்கலைஞர்கள் பியோட்ர் சாய்கோவ்ஸ்கியின் லா மார்ச்சே ஸ்லேவை ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக வாசித்தனர். இதற்குமுன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், 8097 இசைக்கலைஞர்கள் இணைந்து இசைத்ததே சாதனையாக இருந்தது.

5. 2021 – உலக கழிப்பறை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Valuing Toilets 

ஆ) Importance of Sanitation

இ) Global Sanitation Crisis

ஈ) Collective Action

 • ஐநா அவையால் ஆண்டுதோறும் நவம்பர்.19ஆம் தேதி அன்று ‘உலக கழிப்பறை நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய சுகாதார நெருக்க -டியைச் சமாளிக்க கூட்டு நடவடிக்கையை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Valuing Toilets” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

6. CAATSA என்பது எந்த நாட்டுடன் தொடர்புடைய செயலாகும்?

அ) அமெரிக்கா 

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) UK

 • CAATSA-Countering America’s Adversaries Through Sanctions Act (அமெரிக்க எதிரிகளை பொருளாதாரத்தடைச்சட்டம்மூலம் எதிர்கொள்வ -து என்பது 2017ஆம் ஆண்டின் சட்டமாகும். இது ரஷ்யா உட்பட சில நாடுகளுடன் வணிகம் மேற்கொண்ட நாடுகளைத் தண்டிப்பதை நோக்கமாகக்கொண்டது.
 • ரஷ்யாவின் S400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான தடைகளிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும் சட்டத்தை மூன்று குடியரசுக் கட்சி அமெரிக்க செனட்டர்கள் தாக்கல் செய்தனர். இது CAATSA விதித்த பொருளாதாரத் தடைகளிலிருந்து QUADஇன் உறுப்பு நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு 10 ஆண்டு வரை விலக்கு அளிக்கும்.

7. தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) அசோக் பூஷன் 

ஆ) A K சிக்ரி

இ) ரஞ்சன் கோகோய்

ஈ) J முகோபாதயா

 • ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூசன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) புதிய தலைவராக நான்கு ஆண்டுகள் அல்லது அவர் 70 வயது எய்தும்வரை நியமிக்கப்பட்டுள்ளார்.
 • 2020 மார்ச்சில் அப்போதைய தலைவரான S J முகோபாதயா ஓய்வு பெற்றதிலிருந்து அந்தப்பதவி காலியாகவே இருந்தது. மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராமலிங்கம் சுதாகரையும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக அரசாங்கம் நியமித்தது.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற லேண்ட்சாட் 9’ஐ ஏவிய அமைப்பு எது?

அ) இஸ்ரோ

ஆ) NASA 

இ) ஸ்பேஸ் X

ஈ) புளூ ஆர்ஜின்

 • NASA’இன் புவியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் லேண்ட்சாட் 9 செப்.27 அன்று ஏவப்பட்டது. இது NASA மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் ஆகியவற்றின் கூட்டுப்பணியாகும். இச்செயற்கைக்கோள் புவியின் முதல் ஒளிப்படங்களைச்சேகரித்தது. காலநிலை நெருக்கடியை புரிந்துகொள்ளவும், வேளாண்மை நடைமுறைகளை நிர்வகிக்கவும், வளங்களைப் பாதுகாக்கவும் மற்றும் இயற்கைப் பேரிடர்களுக்கு பதிலளிக்கவும் இந்தப் படங்கள் உதவும்.

9. பந்தி சோர் திவாஸுடன் (விடுதலை நாள்) தொடர்புடைய மதம் எது?

அ) இந்து மதம்

ஆ) இஸ்லாம்

இ) சீக்கியம் 

ஈ) சமணம்

 • தீபாவளி நாளோடு ஒத்துப்போகும் பந்தி சோர் திவாஸ் (விடுதலை நாள்) சீக்கியர்களின் கொண்டாட்ட நாளாகும். குவாலியர் கோட்டையிலுள்ள முகலாய சிறையிலிருந்து குரு ஹர்கோவிந்த்ஜி விடுவிக்கப்பட்ட நாளை இது நினைவுபடுத்துகிறது. முகலாய பேரரசர் ஜஹாங்கீர், இஸ்லாம் மதத்திற்கு மாறமறுத்ததற்காக ஹர்கோவிந்த்ஜியின் தந்தை குரு அர்ஜன் தேவ்ஜியைக் கொன்று ஆறாவது குரு ஹர்கோவிந்த்ஜியை சிறையில் அடைத்தார்.
 • தீபாவளி நாளன்று, குரு ஹர்கோவிந்த்ஜி விடுவிக்கப்படுவார் என்று முடிவெடுக்கப்பட்டபோது, அவரைப் போல் தவறாக நடத்தப்பட்ட 52 மன்னர்களும் விடுதலையாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “பந்தி” என்றால் அரசியல் காரணங்களுக்காக சிறையிலடைக்கப்பட்ட “கைதி” என்று பொருள்.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற பார்க்கர் சோலார் ஆய்வூர்தியை ஏவிய நாடு எது?

அ) இந்தியா

ஆ) அமெரிக்கா 

இ) சீனா

ஈ) ரஷ்யா

 • சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டில் NASA’இன் அதிவேக விண்கலமான பார்க்கர் சோலார் ஆய்வூர்தி ஏவப்பட்டது. இந்த விண்கலம் மற்ற விண்கலங்களைக் காட்டிலும் சூரியனுக்கு மிக அண்மையில் சென்றுள்ளது. மிக அதிவேகத்தில் நகரும் வகையிலும், அதிக வெப்பநிலையைத் தாங்கும் வகையிலும் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • சமீபத்தில், அதிவேக தூசி தாக்கங்கள் பார்க்கர் சோலார் ஆய்வூர்தியில் பிளாஸ்மா வெடிப்புகளுக்கு வழிவகுத்தது எனக் கண்டறியப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல்: உத்தர பிரதேசத்தில் அமைக்கப்படுகிறது

ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக அமையவுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

3 ஆண்டுகளில்: 1330 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அமைக்கப்படும் நொய்டா சர்வதேச விமான நிலையம் 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

2. கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு ADB `11,000 கோடி கடனுதவி

கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதற்காக, இந்தியாவுக்கு 11 ஆயிரத்து 185 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியான, ADB ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இயங்கி வரும் ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்குகிறது. கடந்த ஆண்டு இந்த வங்கி இந்திய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், எதிர்கால தொற்று நோய் தாக்குதல்களை தடுக்கவும் 2,250 கோடி ரூபாய் கடன் வழங்கியது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதற்காக 11 ஆயிரத்து 185 கோடி ரூபாய் கடன் வழங்க ADB ஒப்புதல் அளித்துள்ளது.

3. யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் உறுப்பினரானது இந்தியா

யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் உறுப்பினராக நான்கு ஆண்டுகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இடத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பாரம்பரிய குழுவே இறுதி முடிவெடுக்கும். ஏற்கனவே பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடம் முறையாகப் பராமரிக்கப்படுவதை ஆராய்வது, அதுதொடர்பான நிதியை ஒதுக்குவது, சம்பந்தப்பட்ட நாடுகளு -க்கு வலியுறுத்தல்களை வழங்குவது உள்ளிட்டவற்றையும் அந்தக் குழு மேற்கொள்ளும். ஆண்டுக்கு ஒருமுறை கூடி முக்கிய முடிவுகளை யுனெஸ்கோ பாரம்பரிய குழு மேற்கொள்ளும். 2025ஆம் ஆண்டு வரை அக்குழுவின் உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது.

யுனெஸ்கோ நிர்வாகக் குழுவின் உறுப்பினராகக் கடந்த 17ஆம் தேதி இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4. இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய குடும்பநல சர்வேயில் தகவல்: பெரும்பாலான மாநிலங்களில் பெண்கள் எண்ணிக்கை அதிகம்

இந்தியாவில் ஆண்கள் எண்ணிக்கையைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக 5-வது தேசிய குடும்ப நல சர்வே (NFHS) தெரிவித்துள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு சர்வே தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது 1,000 ஆண்களுக்கு, 1,020 பெண்கள் உள்ளனர். கடைசியாக 2015-16ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1,000 ஆண்களுக்கு 991 பெண்கள் என்ற ரீதியில் இருந்தனர்.

இந்தியாவில் மக்கள் தொகை எவ்வாறு இருக்கிறது, எந்த வீதத்தில் இருக்கிறது என்பதை பரவலாக அறிந்து கொள்ள தேசிய குடும்ப நல சர்வே பயன்படுகிறது. நாடுமுழுவதும் 707 மாவட்டங்களில் இருந்து 6.1 லட்சம் வீடுகளில் இருந்துமாதிரிகள் திரட்டப்பட்டன.

ஆனால், இந்த சர்வே பரந்த அளவில் நடத்தப்படாமல் மாவட்ட அளவில் நடத்தப்பட்டும். ஆனால், எதிர்காலசூழலை அறிய காரணியாக இருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் அதாவது கடந்த 2015-16ம் ஆண்டில் பாலின விகிதத்தில் ஆண் குழந்தைகள் பிறப்பு என்பது ஆயிரத்தில் 919 என்ற விகித்திலிருந்து 929 ஆக அதிகரித்துள்ளது.

பிறக்கும் குழந்தைகளில் நோய் உள்ளிட்ட பிற சிக்கல்களில் இருந்து மீண்டும் உயிர்பிழைத்திருப்பதில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் சிறப்பாக இருக்கிறார்கள்.

பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண்கள் எண்ணிக்கையைவிட பெண்கள் எண்ணிக்கையே அதிகரித்துள்ளது என்று தேசிய குடும்ப நல சர்வே-5 தெரிவிக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா, அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், சண்டிகர், டெல்லி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, லடாக் போன்ற யூனியன் பிரதேசங்களில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாகப்பார்க்கும்போது, பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாநிலங்கள் அடிப்படையில் மொத்த கருவுறுதல் விகிதம் (டிஎப்ஆர்) என்பது 2க்கும் குறைவாக இருக்கிறது. இதன்மூலம் இந்தியா மக்கள் தொகையை நிலைப்படுத்தி வருகிறது. அதாவது மொத்த கருவுறுதல் விகிதம் 2.1’க்கு குறைவாக இருந்தாலே பெண்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் இரு குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்பது கணக்காகும்.

அதேநேரம் 2 க்கும் குறைவாகச் சரியும்போது, மக்கள் தொகையும் சரியத் தொடங்கும். ஆனால், இந்தியாவில் பிஹார், மேகாலயா, மணிப்பூர், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் மட்டும்தான் மொத்த கருவுருதல் 2 க்கும் அதிகமாக இருக்கிறது.

உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. 2040 முதல் 2050ம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடி முதல் 180 கோடியை எட்டும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. வரும் 2031ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை முந்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதில் கேரளா மட்டுமே விதிவிலக்காக இருக்கிறது. கேரளாவில் கடந்த 4-வது சர்வேயில் ஆயிரம் ஆண்களுக்கு 1,049 பெண் குழந்தைகள் என இருந்த நிலையில் தற்போது 1,121 பெண்கள் என அதிகரித்துள்ளது. கேரளாவில் மொத்த கருவுருதல் விகிதமும் 1.6 லிருந்து 1.8 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பாலின விகிதத்தைப் பொறுத்தவரை பெண் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. அதாவது, 2015-16ல் 1,000 ஆண்களுக்கு 1,047 பெண்கள் இருந்த நிலையில் தற்போது 1,000 ஆண்களுக்கு 951 ஆக குறைந்துள்ளது.

5. துறைமுக இணைப்புக்கு 101 புதிய திட்டங்கள்

டெல்லியில் தொழில்துறை கூட்டமைப்புகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சரான சர்பானந்தா சோனோவால் பேசுகையில், “நாட்டில் 24 மாநிலங்களில் பரவியுள்ள 111 நீர்வழிகள் தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தளவாட செலவுகளை குறைப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. நாடு முழுவதும் தளவாட சூழலை வலுப்படுத்த கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். எனவே, இத்திட்டத்தின் கீழ் நுகர்வு மற்றும் உற்பத்தி மையங்களுடன் துறைமுக இணைப்பை மேம்படுத்த 101 திட்டங்களை அடையாளம் கண்டுள்ளோம். ஒன்றிய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன” என்றார்.

6. 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டம் காஞ்சிபுரம்

தமிழகத்தில் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக காஞ்சிபுரம் உருவெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அதுபோன்ற நிலையை மாநிலம் முழுவதும் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 76 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை தகவல்படி மொத்தம் 6.47 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதத்தை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் வாயிலாக 100 சதவீதம் முதல் தவணை செலுத்திய மாவட்டமாக அது உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கோவையில் 90.81 சதவீதம் பேரும், சென்னையில் 82 சதவீதம் பேரும், கரூா் 82.50 சதவீதம் பேரும், நீலகிரி 85.53 சதவீதம் பேரும், திருப்பூா் 85.65 சதவீதம் பேரும், கடலூா் 86.06 சதவீதம் பேரும் முதல் தவணை செலுத்தியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அரியலூரில் 88.70 சதவீதம், திருப்பத்தூரில் 60.33 சதவீதம், ராணிப்பேட்டை 60.69 சதவீதம் என மாநிலம் முழுவதும் 76.03 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தவணையும் செலுத்தப்பட்ட மாவட்டங்களில் முதன்மையாக நீலகிரி உள்ளது. அங்கு மொத்தம் 71.32 சதவீதம் பேருக்கு இரு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 54.95 சதவீதமும், சென்னையில் 54.29 சதவீதமும் இரு தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

7. ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைப்பு

கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பல் கடந்த 21-ஆம் தேதி இந்தியக் கடற்படையுடன் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே வாரத்துக்குள் INS வேலா நீர்மூழ்கிக் கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.

‘புராஜெக்ட் 75’ திட்டத்தின் கீழ் ஸ்கார்பீன் இரக நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பில், முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் INS வேலா. பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மஸகான் டாக் கப்பல்கட்டும் நிறுவனம் வேலா நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்கியது.

அக்கப்பலை கடற்படையில் இணைப்பதற்கான நிகழ்ச்சி மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கடற்படை தலைமைத் தளபதி கரம்வீர் சிங் பேசியதாவது:

‘புராஜெக்ட் 75’ திட்டத்தின் வாயிலாக இந்திய கடற்படையின் தாக்குதல் திறன் வரும் காலங்களில் அதிக அளவில் அதிகரிக்கும். நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் தன்னிறைவு அடைவதற்கான நடவடிக்கைகள் அத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டின் கப்பல்கட்டும் திறன்: கடலுக்கடியில் அனைத்துவிதமான பாதுகாப்புசார் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் திறன் ஐஎன்எஸ் வேலாவுக்கு உள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழலை ஆராயும்போது, வேலாவின் தாக்குதல் திறன், நாடு எதிர்கொள்ளும் கடல்சார் அச்சுறுத்தலைத் திறம்பட எதிர்கொள்ள உதவும்.

இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் ஐஎன்எஸ் வேலா முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கட்டும் திறனை INS வேலா உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலை இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையில் இருந்து அவற்றைக் கட்டும் நாடு என்ற நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது என்றார் அவர்.

ஏவுகணைகளும் கருவிகளும்: ஐஎன்எஸ் வேலா குறித்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய கடற்படையின் மேற்குப் பிரிவில் இணைந்து ஐஎன்எஸ் வேலா செயல்படும். நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளும், போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் ஐஎன்எஸ் வேலாவில் இணைக்கப்பட்டுள்ளன.

ஒலியின் மூலமாக கடலுக்கடியில் உள்ள பொருள்களின் தொலைவைக் கண்டறிவதற்காகப் பொருத்தப்பட்டுள்ள ‘சோனாா்’ கருவி, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. மேலும், பல நவீன கருவிகளும் உணா்விகளும் (சென்சாா்) வேலாவில் பொருத்தப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த அமைப்பு: கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அனைத்துக் கருவிகளும் ‘சப்டிக்ஸ்’ என்ற அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எதிரிகளின் இலக்குகளைக் கண்டறிந்த பிறகு, அவற்றின் மீது எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதை அந்த அமைப்பு முடிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘புராஜெக்ட் 75’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஐஎன்எஸ் கல்வரி, ஐஎன்எஸ் கண்டேரி, ஐஎன்எஸ் கரஞ்ஜ் ஆகிய மூன்று நீா்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கெனவே இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8. இந்தியாவில் முதன் முறையாக பெண்கள் கருவுறுதல் 2.1க்கும் கீழ் குறைவு: ஆண்- பெண் விகிதம் பாதிக்கும் அபாயம்

கடந்த 2019-2020ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பு குறித்த 2வது கட்ட தரவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

பெண்களின் மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது 2.1 என்ற சராசரிக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்தியாவில் 3 மாநிலங்கள் மட்டுமே கருவுறுதல் வீதம் அதிகம் கொண்டவையாக காணப்படுகின்றன. பீகார் (3.0), உத்தர பிரதேசம் (2.4), ஜார்க்கண்ட் (2.3) என்ற அளவில் உள்ளன.

கடந்த 2005-2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட 3வது தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பின்படி மொத்த கருவுறுதல் சதவீதம் 2.7 ஆக இருந்தது. இது, 2015-2016ம் ஆண்டில் 2.2 ஆக குறைந்தது. தற்போது, 2.1 என்ற சராசரி அடிப்படையில் உள்ளது. 3வது தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு மற்றும் தற்போது எடுக்கப்பட்ட 5வது சுகாதார கணக்கெடுப்பின்படி பல மாநிலங்களில் பெண்களின் கருவுறும் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு, கருத்தடை மருந்துகள், சாதனங்களை பயன்படுத்தும் விகிதம் அதிகமாகி இருப்பதே முக்கிய காரணம். 2.1 என்ற விகிதத்துக்கு கீழ் மக்கள் தொகை மாற்று கருவுறுதல் விகிதம் குறைந்தால், இந்த நிலையில், பெண்கள் கருவுறும் விகிதம் குறைந்து இருப்பதால், இந்த பாலின சமன்பாட்டில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக” கூறப்பட்டுள்ளது.

1. As per Brazil’s annual report, Deforestation in Amazon rainforest has increased by what percent in a year?

A) 2

B) 22 

C) 42

D) 62

 • As per the Brazil Government’s annual report, Deforestation in Amazon rainforest has increased by 22 per cent in a year, which is the highest level since 2006. The National Institute for Space Research’s ‘PRODES’ monitoring system showed that Amazon lost 13,235 square kilometers of rainforest during the 12–month period.
 • Brazil’s government announced a two–year deadline to halt illegal deforestation by 2028 during the UN Climate Summit in Glasgow.

2. “Ex–SHAKTI 2021” the Indo–France joint military exercise commenced at which place?

A) Andaman & Nicobar Islands

B) Defence Institute of Advanced Technology, Pune

C) Military School of Draguignan, France 

D) Vishakhapatnam

 • The Sixth Edition of Indo–France joint military exercise “Ex–SHAKTI 2021” has commenced at the Military School of Draguignan, France. The training includes mutual understanding of conduct of operations, and identification of coordination aspects required for jointly operating in a Counter–Terrorism environment.

3. International Institute for Strategic Studies (IISS) holds an international Dialogue in which country annually?

A) Bahrain 

B) UAE

C) Russia

D) UK

 • The International Institute for Strategic Studies (IISS) holds the Manama Dialogue, at Manama, Bahrain. The 2021 summit took place between 19–21 November. The IISS Manama Dialogue is a unique forum for government ministers, experts and business communities, to discuss the Middle East’s important security challenges.
 • Since 2002 the Institute has hosted the annual IISS Shangri–La Dialogue in Singapore. The IISS publishes ‘The Military Balance’, an annual assessment of nations’ military capabilities.

4. Which country’s National Youth and Children’s Orchestras “El Sistema”, set a Guinness record for the world’s largest orchestra?

A) Russia

B) Venezuela 

C) Israel

D) France

 • Venezuela’s National System of Youth and Children’s Orchestras – called as “El Sistema”, has set a new Guinness record for the world’s largest orchestra. As many as 8,573 musicians played La Marche Slave by Pyotr Tchaikovsky for more than five minutes.
 • The previous record was for an orchestra of 8,097 musicians who played together in St. Petersburg, Russia.

5. What is the theme of the ‘World Toilet Day’ 2021?

A) Valuing toilets 

B) Importance of sanitation

C) Global sanitation crisis

D) Collective action

 • ‘World Toilet Day’ is observed on November 19 every year by the United Nations. The day aims to raise awareness about the importance of sanitation and ensure collective action to tackle the global sanitation crisis. This year, the theme is ‘Valuing Toilets’.

6. CAATSA, which was seen in sometimes, is an act related to which country?

A) USA 

B) Russia

C) China

D) UK

 • CAATSA–Countering America’s Adversaries Through Sanctions Act is a 2017 law, which intends punish countries that did business with some countries including Russia. Three Republican U.S. senators filed legislation to exempt India from sanctions for purchasing a Russian S400 missile defense system. This would create a 10–year exemption for member countries of the QUAD – Australia, Japan and India – from sanctions imposed by CAATSA.

7. Who has been appointed as the new Chairperson of the National Company Law Appellate Tribunal (NCLAT)?

A) Ashok Bhushan 

B) A K Sikri

C) Ranjan Gogoi

D) J Mukhopadhaya

 • Retired Supreme Court Judge–Justice Ashok Bhushan has been appointed as the new Chairperson of the National Company Law Appellate Tribunal (NCLAT), for four years or till he attains 70 years. The post was left vacant by the retirement of the then chairperson, Justice S J Mukhopadhaya, in March 2020.
 • The government also appointed retired Chief Justice of Manipur High Court, Justice Ramalingam Sudhakar, as the chairperson of the National Company Law Tribunal (NCLT).

8. Landsat 9, which was seen in the news recently, was launched by which organisation?

A) ISRO

B) NASA 

C) SpaceX

D) Blue Origin

 • NASA’s Earth–observing satellite Landsat 9 was launched on September 27. It is a joint mission between NASA and the US Geological Survey (USGS). The satellite has collected its first light images of Earth, capturing critical. The images would help to understand climate crisis, manage agricultural practices, preserve resources and respond to natural disasters.

9. Bandi Chhor Divas (Day of Liberation) is associated with which religion?

A) Hinduism

B) Islam

C) Sikhism 

D) Jainism

 • Bandi Chhor Divas (“Day of Liberation”), which coincides with Diwali Day, is a Sikh day of celebration. It commemorates the day Guru Hargobindji was released from Mughal jail at Gwalior Fort. Mughal Emperor Jahangir had imprisoned the sixth guru Hargobindji after killing his father Guru Arjan Devji for refusing to convert to Islam.
 • On Diwali Day, when it was decided that Guru Hargobindji would be released, he insisted that the 52 kings wrongfully held like him, shall walk out. “Bandi” means an inmate held in prison for political reasons.

10. Parker Solar Probe, which was seen in the news recently, was launched by which country?

A) India

B) USA 

C) China

D) Russia

 • NASA’s fastest spacecraft ever flown – the Parker Solar Probe was launched in the year 2018 to investigate the sun. This spacecraft has gotten closer to the sun than any other missions.
 • The craft has been designed to move at a very high speed and withstand very high temperatures. Recently, it has been found that hypervelocity dust impacts have led to plasma explosions on Parker Solar Probe.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button