Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

26th September 2020 Current Affairs in Tamil & English

26th September 2020 Current Affairs in Tamil & English

26th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

26th September Tamil Current Affairs 2020

26th September English Current Affairs 2020

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜிபூட்டி நன்னடத்தைக் கோட்பாடு’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. அறிவுசார் சொத்துரிமைகள்

ஆ. தகவல் தொழில்நுட்பம்

இ. வருமான வரி

ஈ. கடல்சார் விவகாரங்கள்

  • மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அண்மைய அறிக்கையின்படி, இந்தியா, ஜிபூட்டி நன்னடத்தைக் கோட்பாட்டில் (DCOC) இணைந்துள்ளது. DCOC என்பது கடல்சார் விவகாரங்கள் தொடர்பான ஒரு சங்கமாகும். அது, மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் உள்ள கப்பல்களில் மேற்கொள்ளபடும் திருட்டு/ஆயுதமேந்திய கொள்ளைகளை எதிர்ப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தியா ஒரு பார்வையாளராக இந்தக்குழுவில் இணைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 20 நாடுகள், இந்த நன்னடத்தைக் கோட்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

2. மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான ஒரு புதிய மானியத் திட்டத்தை அறிவித்துள்ள மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. இராஜஸ்தான்

  • குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, அண்மையில், மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான ஒரு புதிய மானியத்திட்டத்தை அறிவித்தார். இது, காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக, மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஐந்து வளர்ச்சித்திட்டங்களின், “பஞ்சசீல பரிசு” என்று முதலமைச்சர் இதனை அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு மின்-ஈருளிகள் வாங்குவதற்கு `12,000 மானியம் கிடைக்கும்.

3.மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீன மக்களை பாதித்துள்ள பாக்டீரியா நோய் எது?

அ. அடைப்பான் நோய் (Anthrax)

ஆ. கன்று வீச்சு நோய் (Brucellosis)

இ. கால் மற்றும் வாய் நோய்

ஈ. எலிக்காய்ச்சல்

  • அண்மையில், ‘புரூசெல்லோசிஸ்’ என்ற பாக்டீரியா தொற்றுநோய் பரவுவதாக சீனா அறிவித்தது. இது பெரும்பாலும், பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிப்பழகுவதன் காரணமாக ஏற்படுகிறது. இந்த நோய் காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஒருவரிடத்திருந்து ஒருவருக்கு, புரூசெல்லோசிஸ் நோய் பரவியதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை இல்லை என சீன சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். லான்ஷோவில் உள்ள அரசுக்கு சொந்தமான உயிரி-மருந்து ஆலையில் பணிபுரியும் ஊழியர்களிடையே இந்நோய் பரவியதாகக் கூறப்படுகிறது.

4.பயணிகளிடமிருந்து கூடுதல் “பயனர் கட்டணம்” வசூலிக்க முடிவுசெய்துள்ள அமைப்பு எது?

அ. இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம்

ஆ. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்

இ. இந்திய இரயில்வே

ஈ. உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம்

  • சில முக்கிய இரயில் நிலையங்களில், ரயில் கட்டணத்துடன் கூடுதலாக “பயனர் கட்டணம்” வசூலிக்க இந்திய இரயில்வே முடிவுசெய்துள்ளது. இதனை இரயில்வே வாரிய தலைமைச் செயல் அதிகாரி V K யாதவ் தெரிவித்துள்ளார். இக்கூடுதல் கட்டணம், இரயில் நிலையங்களை சீரமைக்கவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவற்றின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படும். மொத்த இரயில் நிலையங்களில், கிட்டத்தட்ட 10-15% வரையிலான இரயில் நிலையங்களில் மட்டுமே இந்தக்கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. 2020 செப்டம்பர்.24 அன்று நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. இலங்கை

ஈ. வங்கதேசம்

  • தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) கூட்டம், 2020 செப்.24 அன்று நடந்தது. காணொலிக்காட்சிமூலம் மெய்நிகர் முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி தலைமைதாங்கினார். அனைத்து உறுப்புநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர்களும் சந்தித்தனர்.

6.இந்தியாவில், ‘மருந்துக்குறிப்பெழுதுதல் நடைமுறை’களை மேம்படுத்துவதற்காக, இலவச ஆன்லைன் பாடத்தை தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ. AIIMS

ஆ. ICMR

இ. JIPMER

ஈ. ஆயூஷ் அமைச்சகம்

  • இந்தியாவின் மருத்துவ பட்டதாரிகளிடையே ‘மருந்துக்குறிப்பெழுதுதல் நடைமுறை’களை மேம்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஓர் இலவச இணையவழி பாடத்தை தொடங்கியுள்ளது. ‘இந்திய மருத்துவ பட்டதாரிகளுக்கான மருந்துக்குறிப்பெழுதும் திறன்கள்’ என்ற பெயரிலான இந்தப் பாடத்தை, சென்னையில் அமைந்துள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்திய மருத்துவக் கழகமானது முதுகலை பட்டதாரிகளுக்கு இந்தப்பாடத்தை கட்டாயமாக்கியுள்ளது.

7.நலவாழ்வுப் பணியாளர்கள் / மருத்துவர்களைத் தாக்கும் நபர்களை, தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் எந்த மசோதாவை, மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது?

அ. தொற்றுநோய்கள் (திருத்தம்) மசோதா, 2020

ஆ. தேசிய நேச & நலவாழ்வுத் தொழிற்துறையினர் ஆணைய மசோதா, 2020

இ. இந்திய மருத்துவ மையக் கழக (திருத்தம்) மசோதா, 2020

ஈ. நலவாழ்வுச் சேவை பணியாளர்கள் & மருத்துவ நிறுவனங்கள் மசோதா, 2019

  • நலவாழ்வுப் பணியாளர்கள் / மருத்துவர்களைத் தாக்கும் நபர்களை, தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் தொற்றுநோய்கள் (திருத்த) மசோதா, 2020’ஐ மாநிலங்களவை சமீபத்தில் நிறைவேற்றியது. COVID-19 அல்லது இதேபோன்ற பிறிதொரு சூழ்நிலையை எதிர்த்துப் போராடும் நலவாழ்வுப் பணியாளர்கள் அல்லது மருத்துவர்களைத் தாக்குபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை இந்தச் சட்டம் அளிக்கிறது.

8.நீலக்கொடி பன்னாட்டுச் சூழல் முத்திரைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் எத்தனை இந்திய கடற்கரைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன?

அ. ௨ – இரண்டு

ஆ. ௪ – நான்கு

இ. ௬ – ஆறு

ஈ. ௮ – எட்டு

  • “நீலக்கொடி” பன்னாட்டுச் சூழல் முத்திரை பெறுவதற்காக இந்தியத் திருநாட்டின் எட்டுக்கடற்கரைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 2020 செப்.19 அன்று தெரிவித்தார். கடந்த 1986ஆம் ஆண்டு முதல் சுமார் 100 நாடுகளில் கொண்டாடப்பட்டுவரும், “சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாளை’ முன்னிட்டு அமைச்சர் இதனைக் கூறினார்.
  • சிவராஜ்பூர் (குஜராத்), கோக்லா (டாமன் & டையூ), காசர்கோடு & பதுபித்ரி (கர்நாடகா), கப்பாடு (கேரளா), ருஷிகொண்டா (ஆந்திர பிரதேசம்), தங்கக்கடற்கரை (ஒடிசா) மற்றும் இராதாநகர் கடற்கரை (அந்தமான் & நிக்கோபார்) ஆகிய எட்டுக்கடற்கரைகள் இந்த ‘நீலக்கொடி’ முத்திரைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

9.பன்னாட்டு சம ஊதிய நாள் (International Equal Pay Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர் 15

ஆ. செப்டம்பர் 16

இ. செப்டம்பர் 17

ஈ. செப்டம்பர் 18

  • செப்டம்பர்.18ஆம் தேதியை பன்னாட்டு சம ஊதிய நாளாக ஐக்கிய நாடுகள் அவை கொண்டாடுகிறது. இந்நாள் முதன்முறையாக இவ்வாண்டு (2020) கொண்டாடப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக்கொண்டுவருதற்காக ஐநா அவை இச்சிறப்புநாளை அனுசரிக்கிறது. ஐநா அவையைப் பொறுத்தவரை, உலகின் அனைத்து பகுதிகளிலும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. பாலின ஊதிய இடைவெளி 23% எனவும் ஐக்கிய நாடுகள் அவை மதிப்பிட்டுள்ளது.

10. NGDRS என்ற புதிய நில ஆவணப் பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. புதுச்சேரி

இ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஈ. ஜம்மு & காஷ்மீர்

  • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசானது, ‘தேசிய பொது ஆவணப் பதிவு முறை’யைத் (NGDRS) தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு, தற்போதுள்ள கைமுறை பதிவு முறையிலிருந்து இணையவழி பதிவு முறைக்கு நில விற்பனை அல்லது வாங்கும் செயல்முறையை மாற்றுவதைக் குறிக்கிறது. இந்தப் புதிய அமைப்பு வெளிப்படையான மற்றும் பொறுப்புள்ள நிலப்பதிவு பொறிமுறையை நிறுவுவதன்மூலம் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் மின்னாளுகைக்கு பலம் சேர்க்கும்.

1. ‘Djibouti Code of Conduct (DCOC)’, that was seen in news recently, is associated with which field?

[A] Intellectual Property Rights

[B] Information Technology

[C] Income Tax

[D] Maritime Affairs

  • As per the recent statement of the External affairs ministry, India had joined the Djibouti Code of Conduct (DCOC). DCOC is an association on Maritime affairs that aims to piracy and armed robbery against ships in the western Indian Ocean and the Gulf of Aden. India has joined the grouping as an observer. As of now, a total of 20 countries have signed the conduct.

2. Which state / UT has announced a new subsidy scheme for e–vehicles?

[A] Andhra Pradesh

[B] Gujarat

[C] Karnataka

[D] Rajasthan

  • The Chief Minister of Gujarat, Vijay Rupani has recently announced subsidy schemes for electric two–wheelers and e–rickshaws. The schemes aim to encourage the use of electric vehicles to prevent air pollution.
  • The Chief Minister announced the subsidy as a “Panchsheel gift” of five development schemes in Gujarat. Under the scheme, Students will get a subsidy of Rs 12,000 to buy e–scooters.

3. Which bacterial disease has hit China affecting over 3000 people?

[A] Anthrax

[B] Brucellosis

[C] Foot & Mouth Disease

[D] Plague

  • China has recently reported the spread of Brucellosis, a bacterial infection. It is often caused by close contact with infected animals or animal products. The disease causes fevers, joint pain and headaches. The Health authorities of China have said there has been no evidence of person–to–person transmission of Brucellosis so far in the country. It is said to have spread among people working in a state–owned biopharmaceutical plant in Lanzhou.

4. Which organization has decided to charge additional “User fee” from passengers?

[A] NHAI

[B] AAI

[C] Indian Railways

[D] Ministry of Civil Aviation

  • Indian Railways has decided to levy ‘User fee’ in addition to train fares in some major stations. This has been stated by the Railway board CEO VK Yadav. The additional fee would be used to revamp railway stations and modernize their infrastructure in order to attract investments. It has been decided that only 10 to 15 % of the total stations would be charged with this additional fee.

5. Which country chaired the South Asian Association for Regional Cooperation (SAARC) meeting, that is held on September 24, 2020?

[A] India

[B] Nepal

[C] Sri Lanka

[D] Bangladesh

  • The meeting of the South Asian Association for Regional Cooperation (SAARC) was held on 24th September 2020. The meeting was held in a virtual mode via video–conferencing. The meeting was chaired by Nepalese Foreign Minister Pradeep Kumar Gyawali. The Foreign Ministers of all the member states attended the meeting. Ministers of India and Pakistan also met.

6. Which organization has launched a free online course for improving the ‘Prescription practices’ in India?

[A] AIIMS

[B] ICMR

[C] JIPMER

[D] Ministry of AYUSH

  • In order to improve the prescription practices among India’s medical graduates, a free online course has been launched by Indian Council of Medical Research (ICMR).
  • The course named ‘Prescribing Skills for Indian Medical Graduates’ will be offered by National Institute of Epidemiology, Chennai. Medical Council of India (MCI) has made the course compulsory for post–graduates.

7. Which bill is passed in Rajya Sabha to bring a law that punishes those who attack Health workers or Doctors?

[A] Epidemic Diseases (Amendment) Bill, 2020

[B] National Commission for Allied and Healthcare Professions Bill, 2020

[C] Indian Medicine Central Council (Amendment) Bill, 2020

[D] Healthcare Service Personnel and Clinical Establishments Bill, 2019

  • The Epidemic Diseases (Amendment) Bill, 2020 has been recently passed in the Rajya Sabha, to bring a law, that punishes those who attack Health workers or Doctors who are fighting the coronavirus outbreak or a similar situation. It provides for up to five years in jail for the act.

8. How many indian beaches have been recommended by the union environment ministry for blue flag international eco–label?

[A] 2

[B] 4

[C] 6

[D] 8

  • Environment Minister Prakash Javadekar said on September 19, 2020 that eight beaches of the country have been recommended for the ‘Blue Flag’ international eco–label. The minister said this on the eve of ‘International Coastal Clean–Up Day’ that is being celebrated across 100 countries since 1986. The eight beaches that have been recommended includes – Shivrajpur in Gujarat, Ghoghla in Daman and Diu, Kasarkod and Padubidri in Karnataka, Kappad in Kerala, Rushikonda in Andhra Pradesh, Golden in Odisha and Radhanagar in Andaman and Nicobar Islands.

9. When is the International Equal Pay Day observed?

[A] September 15

[B] September 16

[C] September 17

[D] September 18

  • September 18 is observed as the International Equal Pay Day by the United Nations. It has been celebrated for the first time this year. The day is observed by the United Nations to throw light and end discrimination against women and girls. As per the UN, women are paid less than men in all parts of the world, with the gender pay gap estimated at 23 %.

10. Which state / UT has launched a new Land document registration system named NGDRS?

[A] Tamil Nadu

[B] Puducherry

[C] Andaman & Nicobar Islands

[D] Jammu & Kashmir

  • The Union Territory of Jammu & Kashmir has launched “National Generic Document Registration System” (NGDRS). This system marks a shift from the existing manual registration system to online registration for sale or purchase of land. The new system would add extra strength to the UT’s
    e–governance by establishing a transparent and accountable land registration mechanism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!