27th & 28th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th & 28th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th & 28th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th & 28th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. இந்திய ரிசர்வ் வங்கியானது 371 F பிரிவின்கீழ், எந்த வங்கியை அதன் ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது?

அ) பஞ்சாப் தேசிய வங்கி

ஆ) HDFC வங்கி

இ) சிக்கிம் வங்கி

ஈ) இந்தியன் வங்கி

 • சிக்கிம் மாநிலம் இந்திய ஒன்றியத்தில் இணைவதற்கு ஐந்து ஆண்டுக -ளுக்கு முன்பு, கடந்த 1968’இல் சிக்கிம் வங்கி (State Bank of Sikkim) நிறுவப்பட்டது. சிக்கிம் மாநில அரசின் கருவூல நடவடிக்கைகளை அம் மாநில அரசுக்குச் சொந்தமான இவ்வங்கி வழங்கிவருகிறது. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, சிக்கிம் ஸ்டேட் வங்கியை அதன் ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் இவ்வங்கி மற்ற வங்கி -களுக்கு இணையாக கட்டுப்படுத்தப்படும் என்றாலும், அவ்வங்கியின் உரிமைத்துவ அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

2. அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் தங்கள் மாநில நாளை, பின்வரும் எந்தத் தேதியில் கொண்டாடுகின்றன?

அ) பிப்ரவரி 15

ஆ) பிப்ரவரி 20

இ) பிப்ரவரி 25

ஈ) பிப்ரவரி 28

 • 1986ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் 53ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து, 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் மாநில அந்தஸ்தைப் பெற்றன. 1972 ஜன.20 அன்று, வடகிழக்கு எல்லைப்புற முகமையானது அருணாச்சல பிரதேச யூனியன் பிரதேசம் என, மறுபெயரிடப்பட்டது. 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மாநில அந்தஸ்தை அடைவதற்கு முன், 1972-1987 வரை மிசோரம் ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது.

3. உலகில் அதிகம் கடத்தப்படும் பாலூட்டி இனம் எது?

அ) நீலத்திமிங்கலம்

ஆ) எறும்புண்ணி

இ) வெளவால்

ஈ) கடற்பசு

 • உலகில் அதிக அளவில் கடத்தப்படும் பாலூட்டிகள் எறும்புண்ணிகள் ஆகும். இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமானது உலகில் உள்ள எண்வகை எறும்புண்ணிகளையும், “அச்சுறுத்தல்” நிலையில் உள்ளவை என்று வகைப்படுத்தியுள்ளது. அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமையன்று உலக எறும்புண்ணிகள் நாள் கொண் -டாடப்படுகிறது. நடப்பாண்டில் (2021), பிப்.20 அன்று இந்த நாள் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலமைப்பில், எறும்புண்ணிகள்கள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் காரணிகளாக கருதப்படுகின்றன.

4. பின்வரும் எந்த யூனியன் பிரதேசத்தில், “அடல் பர்யவரன் பவன்” திறக்கப்பட்டுள்ளது?

அ) புதுச்சேரி

ஆ) லடாக்

இ) இலட்சத்தீவுகள்

ஈ) தில்லி

 • இலட்சத்தீவுகள் வனத்துறையின் தலைமையகத்தை ‘அடல் பர்யவரன் பவன்’ என்ற பெயரிள் மத்திய வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்துவைத்தார்.
 • இந்தியாவின் மூன்று தீவுகளுக்கான NITI ஆயோக் திட்டத்தின்படி, இலட்சத்தீவுகளில் பல்வேறு சுற்றுலாத்திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன; அவை, இலட்சத்தீவின் வளர்ச்சி & வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில் உள்ளன.

5. தேசிய பட்டியலின சாதிகள் (SC) ஆணையத்தின் புதிய தலைவர் யார்?

அ) போரிக்கா நாயக் பால்ராம்

ஆ) விஜய் சம்ப்லா

இ) அருண் ஹல்தார்

ஈ) அஞ்சு பாலா

 • முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சம்ப்லா, அண்மையில் இந்தியக் குடி -யரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட பின், தேசிய பட்டியலின சாதிகள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர், 2014 முதல் 2019 வரை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவருக்கு முன், ராம்சங்கர் கேத்ரியா இந்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.

6. அண்மையில் வெளியிடப்பட்ட, ‘ராஷ்டிர பிரதம்-82 வர்ஷோன் கி சுவர்னிம் கதா’ என்பது பின்வரும் எவ்வாயுதப்படையை விவரிக்கும் நூலாகும்?

அ) CRPF

ஆ) ITBP

இ) இந்திய கடலோரக் காவல்படை

ஈ) SSB

 • மத்திய சேமக்காவல்படையின் (CRPF) வரலாற்றை விவரிக்கும் நூலை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். ‘ராஷ்டிர பிரதம் – 82 வர்ஷோன் கி ஸ்வர்னிம் கதா’ என்று பெயரிடப்பட்ட இந்நூல், CRPF’இன் பயணம், சவால்கள் மற்றும் வெற்றிகள் பற்றிய முழுமையான ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கியது. CRPF உருவாக்கப்பட்ட கடந்த 1939ஆம் ஆண்டில் இருந்து அதன் வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது.

7. கணவரின் பரம்பரைச்சொத்தில் பெண்களுக்கு இணை உரிமையை வழங்கும் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) உத்தரகண்ட்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

 • உத்தரகண்ட் மாநில அரசு ஓர் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ளது. இந்த அவசர ஆணை, கணவரின் பரம்பரைச்சொத்தில் பெண்களுக்கு இணைஉரிமைகளை வழங்குகிறது. இந்த உத்தரவு உத்தரகண்ட் ஜமீன்தாரி ஒழிப்பு & நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தியமைக்கிறது.

8. 2021 பிப்ரவரியில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்திய நாடு எது?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) வங்காளதேசம்

ஈ) இந்தோனேசியா

 • ஏரோ இந்தியா – 2021 நிகழ்வின் ஒருபகுதியாக, இந்தியா, 2021 பிப்.4 அன்று இந்தியப்பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்தியது. “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இம்மாநாட்டின் போது, இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகள், LCA மற்றும் பிற ஆயுத அமைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்தது.

9. செவ்வாய் கோளிலிருந்து ஒலியைக்கைப்பற்றி வெளியிட்ட முதல் நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) அமெரிக்கா (USA)

இ) ஐக்கியப்பேரரசு (UK)

ஈ) இந்தியா

 • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA செவ்வாய் கோளின் முதல் ஒலியை வெளியிட்டுள்ளது. இது ‘Perseverance’ ஊர்தியால் பதிவு செய்யப்பட்டதாகும். இவ்வொலி செவ்வாய் கோளில் உள்ள காற்றின் மங்கலான முறிவொலியாகும்.
 • இந்த ஊர்தி, செவ்வாய் கோளின் மேற்பரப்பில் இறங்கும்போது அதன் ஒலிவாங்கி வேலைசெய்யவில்லை என்றாலும், அது தரையிறங்கியபின் ஒலியைக்கைப்பற்றியது. இந்த ஊர்தியின் தரையிறங்கல் காணொளியையும் NASA வெளியிட்டுள்ளது.

10. நடப்பாண்டில் வரும் (2021) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Children in Science

ஆ) Youth in Science

இ) Future of STI: Impacts on Education, Skills, and Work

ஈ) Artificial Intelligence in Science

 • சர் CV ராமன் நோபல் பரிசுபெறுவதற்கு வழிவகுத்த, “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்ட நாளை (28-02-1928) நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்.28 அன்று தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படு -கிறது. “Future of STI: Impacts on Education, Skills, and Work” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

 • மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (MBC) இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் MBC இட ஒதுக்கீட்டுப் பிரிவில் MBC-V என்ற உட்பிரிவு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. இந்த மசோதாவுக்கு, தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

1. The Reserve Bank of India (RBI) has brought which bank covered under Article 371F, under its regulatory purview?

A) Punjab National Bank

B) HDFC Bank

C) State Bank of Sikkim

D) Indian Bank

 • State Bank of Sikkim was established in 1968, five years before Sikkim acceded to the Indian Union. The state–owned bank provides treasury operations for the state government of Sikkim. Recently, the Reserve Bank of India has brought the State Bank of Sikkim under its regulatory purview. Though the bank will be regulated on par with other banks, the bank’s ownership structure will not change.

2. Arunachal Pradesh and Mizoram celebrate their Statehood day on which date?

A) February 15

B) February 20

C) February 25

D) February 28

 • Arunachal Pradesh and Mizoram received their statehood on February 20, 1987, following the 53rd Amendment of the Indian Constitution in 1986. On 20th January 1972, the North East Frontier Agency was renamed as Union Territory of Arunachal Pradesh and on 20th February 1987 statehood was granted to Arunachal Pradesh. Mizoram was also a Union Territory from 1972 to 1987 before achieving statehood.

3. Which is the most trafficked mammal in the world?

A) Blue Whale

B) Pangolin

C) Bat

D) Platypus

 • Pangolins are the most trafficked mammals in the world. The International Union for Conservation of Nature (IUCN) classified all eight species of pangolin as “threatened”.
 • The World Pangolin Day is celebrated on the third Saturday of February, to raise awareness on their importance. This year, it has been celebrated on Feb.20. Pangolins are considered as the pest controllers in the ecosystem.

4. “Atal Paryavaran Bhavan” has been inaugurated in which UT?

A) Puducherry

B) Ladakh

C) Lakshadweep

D) Delhi

 • The Union Minister for Forests, Environment, Climate Change Prakash Javadekar has inaugurated Lakshadweep forest department’s headquarters as ‘Atal Paryavaran Bhavan’. He stated that as per NITI Aayog’s scheme for three islands of India, many permits have been issued for different tourism projects in Lakshadweep that are aimed at growth and increase employment opportunities in the island.

5. Who is the new Chairman of National Commission for Scheduled Castes (NCSC)?

A) Porika Naik Balram B) Vijay Sampla

C) Arun Haldar D) Anju Bala

 • Vijay Sampla, former Union Minster recently took charge as the chairman of the National Commission for Scheduled Castes (NCSC), after being appointed by the President of India. He served as the Union Minister of state for Social Justice and Empowerment from 2014 to 2019. Ram Shankar Katheria was earlier the head of NCSC.

6. ‘Rashtra Pratham – 82 varshon ki Swarnim Gatha’ which was released recently, is a book narrating which armed force?

A) CRPF

B) ITBP

C) Indian Coast Guard

D) SSB

 • Home Minister Amit Shah released a book narrating the history of the Central Reserve Police Force (CRPF).
 • Titled as the ‘Rashtra Pratham – 82 Varshon Ki Swarnim Gatha’, it includes thorough–researched articles on the journey, challenges and successes of CRPF, since 1939, the year of its raising.

7. Which state has passed an ordinance giving co–ownership rights to women in husband’s ancestral property?

A) Tamil Nadu

B) Kerala

C) Uttarakhand

D) Himachal Pradesh

 • In a landmark move, the state government of Uttarakhand has passed an ordinance, which gives co–ownership rights to women in their husband’s ancestral property. This ordinance amends the Uttarakhand Zamindari abolition and land reforms act.

8. Which country hosted the Indian Ocean Region (IOR) Defence Ministers’ Conclave in February 2021?

A) India

B) Sri Lanka

C) Bangladesh

D) Indonesia

 • India hosted the Indian Ocean Region (IOR) Defence Ministers’ Conclave on February 4, 2021 on the side–lines of Aero India 2021 event. The broad theme of the conclave is ‘Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean’. During the conclave, India announced that it is ready to supply missile systems, LCA and other weapons systems to the countries in Indian Ocean Region.

9. Which is the first country to have captured and released the audio from Mars?

A) United Arab Emirates

B) United States of America

C) United Kingdom

D) India

 • The US space agency NASA released the first audio from Mars, captured by the Perseverance rover. The audio sounded like a faint crackling recording of a gust of wind in the red planet.
 • Though a microphone did not work during the rover’s descent to the surface, it could capture audio after it landed on Mars. NASA also released the first video of the landing of the rover.

10. What is the theme of the ‘National Science Day’ 2021?

A) Children in Science

B) Youth in Science

C) Future of STI: Impacts on Education, Skills, and Work

D) Artificial Intelligence in Science

 • National Science Day is celebrated across the country on February 28 each year, to commemorate the discovery of the great Indian physician C V Raman – the Raman’s effect. Raman had received the Nobel Prize for the effect, which he discovered in 1928.
 • This year (2021), the theme of the National Science Day is, “Future of STI: Impacts on Education, Skills, and Work”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *