Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

27th & 28th September 2020 Current Affairs in Tamil & English

27th & 28th September 2020 Current Affairs in Tamil & English

27th & 28th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

27th & 28th September Tamil Current Affairs 2020

27th & 28th September English Current Affairs 2020

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Which country has introduced penalties on companies in its “Unreliable entity list”?

[A] India

[B] China

[C] Russia

[D] USA

  • China has introduced a system of penalizing companies that appears on its “Unreliable entity list”. As per an official statement, the country will impose penalties including restricting trade, investment and visas to any company that pose a threat to China’s sovereignty, national security, development and business interests. The list also contains list of firms that discriminate against or harm Chinese businesses.

2. On which date, World Alzheimer’s Day is observed?

[A] September 21

[B] September 22

[C] September 23

[D] September 24

  • Alzheimer’s is a progressive disease which leads to memory loss. The condition worsens with time and makes it difficult to perform day to day functions. Since 1994, each year 21st September is observed as the World Alzheimer’s Day. September is the month which is observed each year as the World Alzheimer’s Month in order to enable national and local Alzheimer associations worldwide to extend their reach of awareness programmes over a longer period of time.

3. Which mountain climber is known as ‘Snow Leopard’?

[A] Jimmy Chin

[B] Nirmal Purja

[C] Malavath Purna

[D] Ang Rita Sherpa

  • Ang Rita Sherpa was the mountain climber who climbed the Mount Everest 10 times even without the use of supplemental oxygen. He was also known as the ‘Snow Leopard’. He died on Monday, 21st September 2020.

4. Rohtang Tunnel is renamed after which Former Prime Minister of India?

[A] Atal Bihari Vajpayee

[B] Man Mohan Singh

[C] Jawaharlal Nehru

[D] Indira Gandhi

  • Rohtand Tunnel is renamed after former Indian Prime Minister Atal Bihari Vajpayee as the Atal Tunnel. It is the highway tunnel built under the Rohtang Pass in the eastern Pir Panjal range of the Himalayas on the Leh–Manali Highway and is the world’s longest highway tunnel above 10000 feet.

5. Krushi Bhavan, which recently won the Global Architecture and Design Award, is located in which State?

[A] Gujarat

[B] Odisha

[C] Madhya Pradesh

[D] Telangana

  • On September 18, ‘Krushi Bhavan’, a facility developed for the State’s Department of Agriculture & Farmers’ Empowerment located in Bhubaneswar, Odisha won 10th annual AZ Awards 2020 as People’s Choice Winner under the category ‘social good’. The awards were revealed at its first–ever virtual AZ Awards Gala. The 12,077 sq.m ‘Krushi Bhavan’ is one among 20 winners and the only winner from India.

6. Recently, Lok Sabha passed bill to set up National Forensic Sciences University by upgrading which among the following institutions?

[A] Gujarat Forensic Sciences University

[B] Jayaprakash Narayan National Institute of Criminology and Forensic Sciences

[C] Both [A] and [B]

[D] Neither [A] nor [B]

  • The bill to upgrade the University of Forensic Science in Gujarat and establish a National University of Forensic Science was passed in the Lok Sabha. The University of Forensic Science, located in Gandhinagar, Gujarat, is being upgraded to a National University.
  • The bill also proposes to give national status to the Lok Nayak Jayaprakash Narayan Institute of Criminal & Forensic Sciences in Delhi.

7. Recently, Ministry of Road Transport and Highways advised the States and UT’s to stamp “International Convention of Road Traffic” on the first page of International Driving Permit (IDP) issued by them. In which year, this convention was concluded?

[A] 1949

[B] 1959

[C] 1969

[D] 1979

  • The Ministry of Road Transport and Highways has advised the States and Union Territory administrations to stamp “International Convention of Road Traffic of 19th September 1949” on the first page of International Driving Permit (IDP) issued by them. It has been brought to the notice of the Ministry through various public grievances that many countries are not accepting the International Driving Permit issued to Indian citizens, and that officials there ask for the validation of IDP in accordance of International Convention of Road Traffic of 19th September 1949.

8. Janak and BSS–793 are two varieties of which crop?

[A] Bt – Cotton

[B] Bt – Brinjal

[C] Bt – Tomato

[D] Bt – Paddy

  • The Bt–brinjal varieties approved for field testing by the Genetic Engineering Appraisal Committee (GEAC) recently are “Janak” and “BSS–793”. They contain an insect–killer gene Cry1Fa1 (event 142), derived from the soil–dwelling bacterium, Bacillus thuringiensis (Bt).

9. Which country remains in the top spot in the latest FIFA rankings released?

[A] India

[B] France

[C] Belgium

[D] France

  • The International Football Federation FIFA has released its global FIFA ranks recently. Belgium retained its top spot in the list. Belgium is followed by France and Brazil. The fourth and fifth positions are occupied by England and Uruguay respectively.
  • Indian football team has retained the 108th spot in the ranking. The Covid–19 pandemic has remained an obstacle to the staging of international matches and the ranking remains unchanged.

10. “Project Shield” which is a unique initiative aimed at combating crimes against women and children and to create safe and violence–free communities for them in the five districts of which state?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Telangana

[D] Assam

The Project Shield is launched in five districts of Tamil Nadu – Tiruchi, Pudukottai, Karur, Perambalur and Ariyalur in order to combat crimes against women and children and to create a sage and violence free communities for them in these five districts along in collaboration with the International Justice Mission and stakeholders working for the welfare of women and children in Tiruchi range.

நடப்பு நிகழ்வுகள்

1.கீழ்க்காணும் எந்த நாடு தனது “நம்பத்தகாத நிறுவனங்கள் பட்டியலில்” உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. இத்தாலி

சீனா தனது “நம்பத்தகாத நிறுவனங்கள் பட்டியலில்” உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவல்பூர்வ அறிக்கையின்படி, சீனத்தின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் வணிக நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் வர்த்தகம், முதலீடு மற்றும் நுழைவு இசைவுகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட அபராதங்களை சீனா விதிக்கும். சீன வணிகங்களுக்கு பாகுபாடு காட்டும் (அ) தீங்கு விளைவிக்கும் நிறுவனங்களின் பட்டியலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

2.உலக அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர் 21

ஆ. செப்டம்பர் 22

இ. செப்டம்பர் 23

ஈ. செப்டம்பர் 24

அல்சைமர் என்பது ஞாபக மறதிக்கு வழிவகுக்கிற ஒரு நாட்பட்ட நோயாகும். காலப்போக்கில் இதன் நிலை மிக மோசமடைந்து அன்றாட பணிகளைச் செய்வதுகூட கடினமாகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் செப்.21 அன்று உலக அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தேசிய மற்றும் உள்ளூர் அல்சைமர் சங்கங்கள், இந்நோய் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை அடைய உதவும் வகையில், ஆண்டுதோறும் உலக அல்சைமர் மாதமாக செப்டம்பரை அனுசரிக்கின்றன.

3.சமீபத்தில் உலகளாவிய கட்டடக்கலை & வடிவமைப்பு விருதை வென்ற ‘கிருஷி பவன்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. ஒடிசா

இ. மத்திய பிரதேசம்

ஈ. தெலுங்கானா

செப்.18 அன்று, ஒடிச மாநிலம் புவனேசுவரில் அமைந்துள்ள மாநில வேளாண்மை மற்றும் உழவர் அதிகாரமளித்தல் துறைக்காக உருவாக்கப்பட்ட கிருஷி பவன், ‘சமூக நலன்’ என்ற பிரிவின்கீழ் 10ஆம் ஆண்டு AZ விருதுகள் 2020’இன் விருதினை வென்றது.

இந்த விருதுகள், மெய்நிகராக நடத்தப்பட்ட AZ விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்பட்டன. 12,077 சமீ பரப்பளவில் அமைந்துள்ள ‘கிருஷி பவன்’, விருது பெற்ற இருபது வெற்றியாளர்களுள் ஒருவராகவும் இந்தியாவிலிருந்து இவ்விருதைப் பெற்ற ஒரே வெற்றியாளராகவும் உள்ளது.

4.கீழ்க்காணும் நபர்களுள் ‘பனிச்சிறுத்தை’ என அழைக்கப்பட்ட மலையேற்ற வீரர் யார்?

அ. ஜிம்மி சின்

ஆ. நிர்மல் பூர்ஜா

இ. மாளவத் பூர்ணா

ஈ. ஆங் ரீதா ஷெர்பா

மிகை ஆக்ஸிஜனின் துணையின்றி 10 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய, ‘பனிச்சிறுத்தை’ என்றும் அழைக்கப்படுகிற மலையேற்ற வீரரான ஆங் ரீட்டா ஷெர்பா, செப்டம்பர்.21 அன்று காலமானார்.

5.ரோதங் சுரங்கப்பாதைக்கு எந்த முன்னாள் பிரதமரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

அ. அடல் பிகாரி வாஜ்பாய்

ஆ. மன்மோகன் சிங்

இ. ஜவஹர்லால் நேரு

ஈ. இந்திரா காந்தி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் விளங்குமாறு ரோதங் சுரங்கப்பாதை -க்கு ‘அடல் சுரங்கப்பாதை’ என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இது, லே-மணாலி நெடுஞ்சாலையில் இமயம -லையின் கிழக்கில் அமைந்துள்ள பிர் பாஞ்சல் மலைத்தொடரில், ரோதங் கணவாயின் கீழ் கட்டப்பட்டு உள்ள நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும். இது, 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும்.

6.பின்வரும் எந்த நிறுவன(த்தை)ங்களை தரமுயர்த்தி, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதாவை மக்களவை அண்மையில் நிறைவேற்றியது?

அ. குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம்

ஆ. ஜெயபிரகாஷ் நாராயண் தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் நிறுவனம்

இ. (அ) மற்றும் (ஆ) இரண்டும்

ஈ. (அ) அல்லது (ஆ) இரண்டும் இல்லை

குஜராத் மாநிலத்தில் உள்ள தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை தரமுயர்த்தி தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் குஜராத் மாநிலம், காந்தி நகரில் அமைந்துள்ள தடய அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது. இந்த மசோதாமூலம், தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் குற்றவியல் & தடய அறிவியல் நிறுவனத்துக்கு தேசிய அந்தஸ்து அளிப்பதற்கும் முன்மொழியப்படுகிறது.

7.சமீபத்தில், மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படும், பன்னாட்டளவில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தின் முதல் பக்கத்தில், ‘சாலைப்போக்குவரத்திற்கான பன்னாட்டு மரபு’ என முத்திரையிட வேண்டும் என்று மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கு சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மரபு நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

அ. 1949

ஆ. 1959

இ. 1969

ஈ. 1979

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை வழங்கும்போது, அதன் முதல் பக்கத்தில் “சாலைப்போக்குவரத்திற்கான 1949 செப்.19’இன் பன்னாட்டு மரபு” என முத்திரையைப் பதிக்குமாறு மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை, இந்த முத்திரை இல்லாத காரணத்தாலேயே பல நாடுகள் ஏற்க மறுப்பதாக அமைச்சகத்திற்கு வந்த புகார்களை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

8.ஜனக் & BSS-793 ஆகிய இரண்டும், கீழ்க்காணும் எந்தத் தாவரத்தின் இருவேறு வகைகளாகும்?

அ. Bt – பருத்தி

ஆ. Bt – கத்தரி

இ. Bt – தக்காளி

ஈ. Bt – நெல்

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவால் அண்மையில் புலச்சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பெற்ற “ஜனக்” மற்றும் “BSS-793” ஆகிய இரண்டும் Bt-கத்தரிக்காய் வகைகளாகும். அவற்றில் பூச்சியைக் கொல்லும் ‘Cry1Fa1 (நிகழ்வு 142)’ மரபணு உள்ளது; இது, மண்ணில் வசிக்கும் பாக்டீரியமான பாசிலஸ் துரிங்ஜென்சிஸ் (Bt)’இலிருந்து பெறப்பட்டதாகும்.

9.அண்மையில் வெளியிடப்பட்ட FIFA தரவரிசையில், முதலிடத்தில் உள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. பிரான்ஸ்

இ. ஜப்பான்

ஈ. பெல்ஜியம்

பன்னாட்டு கால்பந்து கூட்டமைப்பான (FIFA) தனது உலகளாவிய FIFA தரவரிசைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பெல்ஜியம் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. பெல்ஜியத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் பிரேசில் உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆக்கிரமித்துள்ளன.

தரவரிசையில், இந்திய கால்பந்து அணி, 108ஆம் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. COVID-19 தொற்றுநோய், பன்னாட்டளவிலான போட்டிகளை நடத்துவதற்கு ஒரு தடையாக இருந்து வருகின்ற காரணத்தால், தரவரிசையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உள்ளது.

10.பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும், அவர்களுக்காக பாதுகாப்பான மற்றும் வன்முறையற்ற சமூகங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்ட ஒரு தனித்துவமான முன்னெடுப்பான, ‘கேடயம் திட்டம்’, எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படவுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. தெலுங்கானா

ஈ. அஸ்ஸாம்

திருச்சிராப்பள்ளி சரகத்திற்கு உட்பட்ட திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தவும், இதுதொடர்பாக பெண்கள் & சிறார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோக்கம் கொண்டு திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை, ‘கேடயம்’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

பன்னாட்டு நீதிக் குழுமம் என்றவொரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!