27th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீபத்தில் 2021 ஏப்ரலில், S&P குளோபல் மதிப்பீடுகள் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி முன்கணிப்பு சதவீதம் என்ன?

அ) 6 சதவீதம்

ஆ) 8 சதவீதம்

இ) 11 சதவீதம்

ஈ) 14 சதவீதம்

 • S & P குளோபல் மதிப்பீடுகள், ஆசிய-பசிபிக் நிதி நிறுவனங்கள் குறித்த தனது அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 11 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 2020-21ஆம் நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 8 சதவீத அளவுக்கு சுருங்கும்.

2. ‘COVIRAP’ தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனம் எது?

அ) NIT திருச்சிராப்பள்ளி

ஆ) AIIMS

இ) MIT

ஈ) IIT கரக்பூர்

 • கரக்பூர் – இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தனது சுகாதார தயாரிப்பான ‘COVIRAP’ஐ வணிகமயமாக்கியுள்ளது. இது, COVID நோய்த்தொற்றை கண்டறியும் தொழில்நுட்பமாகும். எளிய முறையில், மலிவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இப்பரிசோதனையின் முடிவுகளை, 45 நிமிடத்தில் திறன்பேசியின் செயலியின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

3. ஏப்ரல்.1 அன்று எந்த மாநிலத்தின் உதய நாள், ‘உத்கல் திவாஸ்’ எனக் கொண்டாடப்படுகிறது?

அ) தெலங்கானா

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) ஒடிஸா

ஈ) கர்நாடகா

 • இந்திய மாநிலமான ஒடிஸா, 1936 ஏப்ரல்.1 அன்று உருவாக்கப்பட்டது. அதன் மாநில நாள், ‘உத்கல் திவாஸ்’ என அழைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. முந்தைய பீகார் மற்றும் ஒடிஸா மாகாணத்திலிருந்து ஒடிஸா ஒரு தனி மாநிலமாக உருவான நினைவாக, அந்த நாள் கொண்டாடப்படுகிறது.

4. உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 10

ஆ) ஏப்ரல் 11

இ) ஏப்ரல் 12

ஈ) ஏப்ரல் 13

 • ஆண்டுதோறும் ஏப்.10 உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்பாடுகிறது. “Homeopathy- Roadmap for Integrative Medicine” என்பது நடப்பு ஆண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தை என்று அழைக்கப்படும் மருத்துவர் சாமுவேல் ஹேன்மேனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

5. தேசிய பாதுகாப்பான தாய்மைப்பருவ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 10

ஆ) ஏப்ரல் 11

இ) ஏப்ரல் 12

ஈ) ஏப்ரல் 13

 • கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு மகப்பேறு பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பான தாய்மைப் பருவ நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
 • இந்தியாவின் பாதுகாப்பான தாய்மைப்பருவத்துக்கான வெண்ணாடா கூட்டணியின் (White Ribbon Alliance for Safe Motherhood, India) ஒரு முன்னெடுப்பாக இந்நாள் கொண்டாடப்பாடுகிறது. “Stay at Home during Coronavirus, keep Mother and Newborn Safe from Coronavirus” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

6. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?

அ) 1919

ஆ) 1820

இ) 1819

ஈ) 1857

 • ஜாலியன்வாலா பாக் படுகொலை (1919): பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக் -குமுறைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிராயுதபாணியான மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று கூடியிருந்தனர். மக்கள் கிளர்ச்சியை அடக்குவதற்காக, ஜெனரல் டயர் தனது துருப்புக்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டான்.
 • அத்தோட்டத்தில் பிரிட்டிஷ்காரர்களால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்த
  -னமான செயல், வரலாற்றில், ஜலியன்வாலா பாக் படுகொலை (அல்லது அமிர்தசரஸ் படுகொலை) என்று அறியப்பட்டது.

7. தேசிய குடிமைப் பணிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 20

ஆ) ஏப்ரல் 21

இ) ஏப்ரல் 22

ஈ) ஏப்ரல் 23

 • 1947 ஏப்.21 அன்று இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தர் வல்லபாய் படேல், தகுதிகாண் பருவத்திலிருந்த நிர்வாக சேவை அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றினார். தில்லியின் மெட்கால்ப் மாளிகையில் நடந்தேறிய அவ்வரலாற்றுச் சிறப்புமிக்க உரைநிகழ்த்தலி -ன்போது, அரசு ஊழியர்களை “இந்தியாவின் எஃகு சட்டகம்” என அவர் விவரித்தார். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் ஏப்.21 அன்று குடிமைப்பணிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது.

8. தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 23

ஆ) ஏப்ரல் 24

இ) ஏப்ரல் 25

ஈ) ஏப்ரல் 26

 • ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.24 அன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சிகளை சட்டரீதியாக வலுப்படுத்த 1993ஆம் ஆண்டு இதே நாளில், அரசியலமைப்பு (73ஆவது சட்டதிருத்தம்) சட்டம், 1992 அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

9. உலக நூல் & பதிப்புரிமை நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 22

ஆ) ஏப்ரல் 23

இ) ஏப்ரல் 24

ஈ) ஏப்ரல் 25

 • உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக நூல் நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரி -மையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐநா கல்வி, அறிவியல் & பண்பாட்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்.23 அன்று நடத்தும் ஒரு நிகழ்வாகும்.
 • உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்ப -ட்டதாக UNESCO அறிவித்துள்ளது. 1616ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள்.
 • ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வசதிகளைக்கொண்ட, அனைத்து நூல் -களும் கிடைக்கும் வகையில் ஒரு நூல் தலைநகரத்தை உருவாக்கும் திட்டத்தை கடந்த 2001’இல் UNESCO தொடங்கியது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நகரத்தை நூல்களின் தலைநகரமாகத் தேர்வு செய்யும். 2021ஆம் ஆண்டுக்கான நூல்களின் தலைநகரமாக ஜார்ஜியா நாட்டின் தலைநகரமான திபிலீசி நகரம் தெரிவாகியுள்ளது.

10. உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 24

ஆ) ஏப்ரல் 25

இ) ஏப்ரல் 26

ஈ) ஏப்ரல் 27

 • ஆண்டுதோறும் ஏப்.25 அன்று உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்படு -கிறது. “Reaching the 0-malaria target” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக மலேரியா நாளுக்கானக் கருப்பொருளாகும்.
 • உலக நலவாழ்வு அமைப்பின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, இந்தியா, உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் மூன்று சதவீத பாதிப்புக்கு காரணமாக அமைகிறது. மேலும், 2017ஆம் ஆண்டின் சூழலை ஒப்பிடும்போது, இந்தியா, 49% அளவுக்கு மலேரிய பாதிப்புகளை குறைத்ததோடு அதுசார்ந்த இறப்புகளையும் 50.5% அளவுக்கு குறைத்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் இரும்பு உருக்கும் கட்டமைப்பு கண்டுபிடிப்பு

கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் மண் அடுப்புகளால் செய்யப்பட்ட இரும்பு உருக்கும் கட்டமைப்பு இருந்ததற்கான தரவுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், கொடுமணல் நொய்யல் ஆற்றின் கரையோரம் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் தமிழக தொல்லியல் துறை மூலம் பத்தாவது முறையாக அகழ்வாராய்ச்சி கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கியது. தொல்லியல் துறை அகழாய்வுத் திட்ட இயக்குநர் ஜெ ரஞ்சித் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தொல்லியல் நிபுணர்கள் கூறியதாவது: இப்பகுதியில் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு குடியிருப்புக -ள், பயன்பாட்டுப் பொருள்கள், நாணயம், மண்பானை ஓடுகள், குறிப்புகள் போன்ற தரவுகள் கிடைத்து வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த அகழாய்வில் 1,999 தமிழ் பிராமி எழுத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதில் 1,000க்கும் மேற்பட்டவை இங்கு கிடைத்தவை. இதன்மூலம் இப் பகுதியில் பொ ஆ மு 400’க்கு முன்பே பண்டமாற்றுகள், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டது தெரியவருகிறது.

தற்போதைய அகழாய்வில் கருப்பு, செம்மண் அடர்ந்த இப்பகுதியில் இரும்பு -க்கான மூலப்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றை எடுத்து கரையோர -ம் 10’க்கும் மேற்பட்ட மண் அடுப்புகளில் 1,800° செல்சியசுக்கு மேல் சூடு -படுத்தி இரும்பை பிரித்து எடுத்துள்ளனர். இரும்பை உருக்கி, மண் பாத்திரத்தில் சேகரித்து, கத்தி, ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்கள், ஆணி, கம்பி போன்ற பயன்பாட்டுப் பொருள்கள் செய்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு தோண்டப்பட்ட 30 குழிகளில் 12’க்கும் மேற்பட்ட குழிகளில் அடுப்பு மூலம் ஆலை போன்று இரும்பு உருக்கியதற்கான அடையாளமும், பிரித்து எடுத்தபின் விட்டுச்செல்லப்பட்ட இரும்புக்கழிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ள -ன. ஆய்வுதொடரும்போது மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் செம்பு நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், பானை ஓடுகள், கல்லறைகள், இரும்பு மூலப்பொருள், கழிவுகள் கிடைத்துள்ளன.

இங்கு வசித்த மக்கள் ஆரம்பத்தில் ஆற்றங்கரையை ஒட்டியும், அதன்பின் பேரழிவுக்குப்பின் உயரமான பகுதிகளிலும் வசித்துள்ளனர். அவா்கள் குடியிருப்புக்கு கிழக்கே கல்லறைகள் அமைத்துள்ளனர். இங்குள்ள கல்லறைகள் பலகை கற்களால் அறை ஏற்படுத்தப்பட்டு, அதில் பெரிய மண் பானைக்குள் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் நேரடியாக பானைக்குள் எலும்புகள் கிடைத்துள்ளன.

புதைக்கப்பட்டவாறு எலும்பு அமைப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு இவற்றை அனுப்பி எந்த காலத்தைச் சேர்ந்த எலும்புகள் எனக் கேட்டுள்ளோம். இந்த அகழாய்வு வரும் ஜூலை வரை தொடர வாய்ப்புள்ளது என்றனர்.

2. மணலுரில் இன்று அகழாய்வு தொடக்கம்

கீழடியில் நடந்துவரும் ஏழாம்கட்ட அகழாய்வின் ஒருபகுதியாக மணலூரில் அகழாய்வுப்பணிகள் தொடங்குகின்றன. சிவங்கை மாவட்டம் திருபுவனம் அருகேயுள்ள கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி ஏழாம்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று இடங்களில் அகழாய்வு நடந்துவருகிறது. ஆறாம்கட்ட அகழாய்வுப்பணிகள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் நடந்தன.

ஏழாம்கட்ட அகழாய்வும் மேற்கண்ட நான்கு இடங்களிலும் நடைபெறும் என தொல்லியல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. பணிகள் தொடங்கி இரு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் மணலூரில் மட்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

மணலூரில் இடம் தேர்வுசெய்வதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பணிக -ள் தொடங்கப்படவில்லை. ஆறாம்கட்ட அகழாய்வில் மணலூரில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு 39 பொருள்கள் மட்டுமே கண்டறியப்பட்டதால் 7 ஆம் கட்ட அகழாய்வில் சரியான இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகள் கவனமாக இருந்தனர். தற்போது மணலூரைச் சேர்ந்த ஜானகி அம்மாள் என்பவரின் 1 ஏக்கர் நிலத்தை அகழாய்வுக்காக தொல்லியல்துறையினர் தேர்வு செய்துள்ளனர்.

மணலூர், அகரம், கழுகேர்கடை உள்ளிட்ட கிராமங்களில் முளைப்பாரி உற்சவம் உள்ளிட்டவைகள் நடைபெறும் போது நிறைவாக மணலூர் முனியாண்டி கோயிலில் முடிவடையும். தற்போது வரை இந்த நிகழ்வு தொடர்வதால் பண்டையகாலத்திற்கும் இம்முளைப்பாரி உற்சவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் எனக்கருதி மணலூரில் அந்த இடத்தில் அகழாய்வுப் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதால் அதற்குள் விரைவாக அகழாய்வுப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை 3 குழிகள் மட்டும் தோண்டப்பட்டு சுடுமண்ணால் செய்யப்பட்ட தாயகட்டை, கல் உழவு கருவி, பானை ஓடுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது மேலும் இரு குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தலா மூன்று குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

3. தமிழில் புதிய கல்விக் கொள்கை வெளியானது

புதிய கல்விக் கொள்கையின் உள்ளூர் மொழிபெயாப்பு 17 மொழிகளில் வெளியாகி, தமிழில் மட்டும் வெளியிடப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழ்மொழிபெயர்ப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் 2019ஆம் ஆண்டு கஸ்தூரி இரங்கன் கல்விக்குழு தாக்கல்செய்த கல்விக்கொள்கையை அடிப்படையாகக்கொண்டு 2020ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29’இல் ஒப்புதல் அளித்தது.

10+2 என்ற பள்ளிப்பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காகப் பாடமுறை மாற்றப்படும், மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்றுமொழியாக இருக்கவேண்டும், பல்கலைகள், உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும், மாணவர்களின் பள்ளிப்பாட அளவு குறைக்கப்படும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்ப -டுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டன.

ஆரம்பத்தில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு கடந்த ஏப். 24 வெளியாகி இருந்தது. கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நிலையில், தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை.

இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 155 பக்கங்களுடன் கூடிய மொழிபெயர்ப்பை இணையதள முகவரியில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

4. ஆஸ்கர் விருதுகள் 2021: சிறந்த திரைப்படமாக ‘நோமேட்லேண்ட்’ தேர்வு

93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் இம்முறை நடைபெற்றது. இதில் குளோயி ஸாவோ இயக்கிய ’நோமேட்லேண்ட்’ சிறந்த திரைப்படமாகவும், ஸாவோ சிறந்த இயக்குநராகவும் வெற்றிபெற்றனர்.

சிறந்த இயக்குநர் என்கிற ஆஸ்கரை வெல்லும் இரண்டாவது பெண் ஸாவோ என்பது குறிப்பிடத்தக்கது.

விருது வென்றவர்கள் பட்டியல்

சிறந்த இயக்குநர் – குளோயீ ஸாவோ

சிறந்த திரைப்படம் – நோமேட்லேண்ட்

சிறந்த நடிகை – பிரான்சிஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லேண்ட்)

சிறந்த நடிகர் – ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி பாதர்)

சிறந்த உறுதுணை நடிகர் – டேனியல் கலூயா (Judas and the Black Messiah)

சிறந்த உறுதுணை நடிகை – யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த சர்வதேசத் திரைப்படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த தழுவல் திரைக்கதை – தி பாதர்

சிறந்த திரைக்கதை – பிராமிஸிங் யங் வுமன்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஸோல்

சிறந்த பாடல் – பைட் பார் யூ (Judas and the Black Messiah)

சிறந்த இசை – ஸோல்

சிறந்த படத்தொகுப்பு – சவுண்ட் ஆஃப் மெடல்

சிறந்த ஒளிப்பதிவு – மேங்க்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – மேங்க்

சிறந்த வரைகலை – டெனட்

சிறந்த ஆவணப்படம் – மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த ஆவணக் குறும்படம் – கோலெட்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த குறும்படம் – டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்

சிறந்த ஒலி – சவுண்ட் ஆஃப் மெடல்

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் – மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்

சிறந்த ஆடை வடிவமைப்பு – மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்

1. As per the recent report released by the S&P Global Ratings in April 2021, what is the growth forecast of India in 2021?

A) 6 percent

B) 8 percent

C) 11 percent

D) 14 percent

 • The S&P Global Ratings in its report on Asia–Pacific Financial Institutions, highlighted that the Indian economy is projected to grow at 11% in the current fiscal year. The agency also revealed that some more targeted lockdowns will likely be needed and the impact of broader lockdowns on the economy could be substantial. As per official estimates, the Indian economy contracted 8% in 2020–21 fiscal.

2. ‘COVIRAP’ technology has been developed by which institute?

A) NIT Tiruchirappalli

B) AIIMS

C) MIT

D) IIT Kharagpur

 • The Indian Institute of Technology – Kharagpur has commercialized its healthcare product COVIRAP. This is a diagnostic technology to zero on Covid infections. Using this technology, the COVID test results can be obtained within 45 minutes of sampling and the results can be seen using a smartphone application.

3. The statehood day of which Indian state is celebrated as ‘Utkal Divas’ on April 1?

A) Telangana

B) Andhra Pradesh

C) Odisha

D) Karnataka

 • The Indian state of Odisha was formed on 1st April 1936. Its statehood day is called as ‘Utkal Divas’, which is celebrated in the state and across the country.
 • On the memory of the formation of Odisha as a separate state from the earlier Bihar and Orissa province, the day has been celebrated.

4. The World Homeopathy Day is celebrated on which day, every year across the world?

A) April 10

B) April 11

C) April 12

D) April 13

 • Every year April 10th is observed as World Homeopathy Day. The theme of this year’s World Homeopathy Day is selected as “Homeopathy– Roadmap for Integrative Medicine”. This day is celebrated to commemorate the birth anniversary of Dr. Samuel Hahnemann, the father of the Homeopathy system of medicines.

5. The National Safe Motherhood Day is observed on which date in India?

A) April 10

B) April 11

C) April 12

D) April 13

 • The National Safe Motherhood Day is observed every year on April 11 to create awareness on maternity care for pregnant and lactating women. The NSMD is an initiative of White Ribbon Alliance for Safe Motherhood, India (WRAI). The theme of this year’s NSMD is selected as “Stay at home during coronavirus, keep mother and newborn safe from coronavirus”.

6. When did Jallianwala Bagh Massacre took place?

A) 1919

B) 1820

C) 1819

D) 1857

 • Jallianwalla Bagh Massacre (1919): To protest against the repressive policies of the British Government, the unarmed peaceful people were gathered at the Jallianwala Bagh in Amritsar on April 13, 1919.
 • To suppress mass agitation, General Dyer ordered his troops to open fire on them without warning. That act of cruelty and barbarism by the britishers in that bagh was known in history as Jallianwalla Bagh Massacre (or Amritsar Massacre).

7. National Civil Services Day is celebrated on which date?

A) April 20

B) April 21

C) April 22

D) April 23

 • On April 21, 1947 the first Home Minister of India Sardar Vallabhbhai Patel addressed the probationers of Administrative Services Officers in 1947. While delivering the historical address at the Metcalf House, Delhi, he described the Civil servants as ‘Steel frame of India’.
 • To commemorate this occasion, April 21 has been observed as the Civil Services Day every year, across the country.

8. The 2021 National Panchayat Raj Day is celebrated on which date in India?

A) April 23

B) April 24

C) April 25

D) April 26

 • The National Panchayat Raj Day is celebrated every year in India on April 24 by the Ministry of Panchayat Raj. On this day, in 1993, the Constitution (73rd Amendment) Act, 1992 came into force that has institutionalized Panchayat Raj through the village, Intermediate and District level Panchayats.

9. The World Book and Copyright Day is observed on which date?

A) April 22

B) April 23

C) April 24

D) April 25

 • The World Book and Copyright Day is observed every year on April 23 to raise public awareness of books and reading and pay tribute to authors in the book industry, professionals or volunteers. The day is being organized by the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) to promote reading, publishing and copyright. It is a symbolic date for world literature.
 • In 1616, on this date, Miguel de Cervantes, William Shakespeare and Inca Garcilaso de la Vega died. The day is also known as International Day of the Book or World Book Days. Tbilisi, the capital of Georgia, has been designated as the UNESCO World Book Capital – 2021.

10. When is World Malaria Day observed?

A) April 24

B) April 25

C) April 26

D) April 27

 • The World Malaria Day for the year 2021 was observed on 25th April this year. The theme for this year’s World Malaria Day was “Reaching the zero–malaria target”.
 • As per a WHO Report 2019, India represents 3% of the global malaria burden and it has registered a reduction in malaria cases by 49% and reduction in deaths by 50.5% compared with 2017 levels.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *