Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

27th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

27th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கிழக்கு திமோர், எந்த ஆண்டு ஐநாவால் அங்கீகரிக்கப்பட்டது?

அ) 1982

ஆ) 1992

இ) 2002 

ஈ) 2012

  • கடந்த 2002ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, ‘திமோர் லெஸ்டே’ என்றும் அழைக்கப்படுகின்ற கிழக்கு திமோர் சமீபத்தில் அதன் அதிபர் தேர்தலை நடத்தியது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற அல்-அக்சா பள்ளிவாசல் அமைந்துள்ள நகரம் எது?

அ) ரோம்

ஆ) ஜெருசேலம் 

இ) ரியாத்

ஈ) மஸ்கட்

  • இசுலாமியர்கள் இரம்ஜான் கொண்டாடும் வேளையில், யூதர்களின் ‘பாஸ்கா’ என்ற பண்டிகையின்போது ஏற்பட்ட வன்முறையில் 17-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர். ஜெருசேலமின் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

3. இந்தியாவின் புதிய இராணுவத் தளபதி யார்?

அ) லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ராவத்

ஆ) லெப்டினன்ட் ஜெனரல் எம் எம் நரவனே

இ) லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே 

ஈ) லெப்டினன்ட் ஜெனரல் பிக்ரம் சிங்

  • Lt Gen மனோஜ் பாண்டே புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜெனரல் M M நரவனேவை அடுத்து அவர் பதவியேற்பார். இராணுவப் பொறியாளர் பதவியில் இருந்து இராணுவத் தளபதியான முதல் அதிகாரி இவர் ஆவார். ஜம்மு-காஷ்மீரின் பல்லன்வாலா பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், ‘ஆபரேஷன் பராக்ரமுக்கு’ அவர் தலைமை தாங்கினார்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘மகர்’ சார்ந்த இனம்?

அ) பாம்பு

ஆ) முதலை 

இ) ஆமை

ஈ) மரப்பல்லி

  • ‘மகர்’ (அ) ‘சதுப்புநில முதலைகள்’ என்பன (Crocodylus palustris) நன்னீர் முதலைகளாகும். அவை தெற்காசியா & தென்கிழக்கு ஈரான் முழுவதும் காணப்படுகின்றன. இந்தியாவில், மத்திய கங்கைப் படுகை மற்றும் சம்பல் படுகைகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
  • சமீபத்தில், இராஜஸ்தானின் ஜவாய் அணையில் உள்ள 350க்கும் மேற்பட்ட சதுப்புநில முதலைகள், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக உயிர் பிழைக்க போராடி வருகின்றன. பல நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், இந்திய இரயில்வே மேற்கு ராஜஸ்தானுக்கு நீர் விநியோகம் செய்து வருகிறது. ஜவாய் ஆறானது லூனி ஆற்றின் துணை ஆறு ஆகும்.

5. இந்தியாவில், ‘WHOஇன் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம்’ அமையவுள்ள இடம் எது?

அ) மும்பை

ஆ) வாரணாசி

இ) ஜாம்நகர் 

ஈ) கொச்சி

  • குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் அமையவுள்ள WHOஇன் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், மொரீஷியசு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

6. ஆண்டுதோறும், ‘உலக கலை நாள்’ அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) ஏப்ரல் 15 

ஆ) ஏப்ரல் 16

இ) ஏப்ரல் 17

ஈ) ஏப்ரல் 18

  • ஆண்டுதோறும், ஏப்.15 அன்று, UNESCO பங்காளரான பன்னாட்டு கலை சங்கத்தால் (IAA) ‘உலக கலை நாள்’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • கலையின் வளர்ச்சி, பரவல் மற்றும் அதன் இன்பத்தை மேம்படுத்துவதற்கான கொண்டாட்டம், 2019ஆம் ஆண்டு UNESCO மாநாட்டின் 40ஆம் அமர்வில் அறிவிக்கப்பட்டது.

7. ஆண்டுதோறும், ‘உலக சாகஸ் நாள்’ அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) ஏப்ரல் 14 

ஆ) ஏப்ரல் 20

இ) ஏப்ரல் 24

ஈ) ஏப்ரல் 28

  • ‘அமெரிக்க டிரிபனோசோமியாசிஸ்’ என்றுமழைக்கப்படும் உயிருக்கு ஆபத்தான நோயைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஏப்.14 அன்று உலக சாகஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது. டிரிபனோசோமா கிரிசு என்ற ஒட்டுண்ணியால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் கடந்த 2020 ஏப்ரல்.14 அன்று அனுசரிக்கப்பட்டது.

8. ‘கிருபான் சக்தி’ ஒருங்கிணைந்த தீ ஆற்றல் பயிற்சி நடைபெற்ற மாநிலம் எது?

அ) உத்தரகாண்ட்

ஆ) மகாராஷ்டிரா

இ) மேற்கு வங்கம் 

ஈ) கேரளா

  • மேற்கு வங்காளத்தில் சிலிகுரிக்கு அருகில் உள்ள டீஸ்டா பீல்ட் பைரிங் ரேஞ்சில் (TFFR) ஒருங்கிணைந்த தீ ஆற்றல் பயிற்சியான கிருபான் சக்தி பயிற்சியை திரிசக்தி கார்ப்ஸ் நடத்தியது. இந்தப் பயிற்சியானது இந்திய இராணுவம் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் திறன்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த போரை நடத்துவதை நோக்கமாகக் கொண்டது.

9. உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களுக்கு $2.2 மில்லியன் டாலர்களை காலநிலை நடவடிக்கை மானியமாக வழங்குவதாக அறிவித்துள்ள நிறுவனம் எது?

அ) UNDP 

ஆ) UNEP

இ) IMF

ஈ) உலக வங்கி

  • ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் அடாப்டேஷன் இன்னோவேசன் மார்க்கெட்பிளேசின் (AIM) பங்காளர்கள் இந்தியா உட்பட 19 நாடுகளில் உள்ள 22 உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களுக்கு $2.2 மில்லியன் டாலர்களை காலநிலை நடவடிக்கை மானியமாக அறிவித்துள்ளனர்.
  • இந்நிதியானது உள்ளூர் காலநிலை நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதை துரிதப்படுத்தும்.

10. ‘2022 – ரெய்க்ஜாவிக் போட்டியை’ வென்ற இந்திய செஸ் வீரர் யார்?

அ) பரத் சுப்ரமணியம்

ஆ) மித்ரபா குகா

இ) பிரக்ஞானந்தா R 

ஈ) இராஜா ரித்விக்

  • அண்மையில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற, ‘2022 – விகா ரெய்க்ஜாவிக் ஓபன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா R வெற்றி பெற்றார். 16 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர், இறுதிச்சுற்றில் தனது சகநாட்டவரான GM குகேஷ் D (15)-க்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் வென்றார். கடந்த 2018-இல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்த உலகின் ஐந்தாவது மிக இளைய நபரானார் பிரக்ஞானந்தா R ஆவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாற்றுத்திறனாளிகள் துறையில் இந்தியா – சிலி நாடுகளிடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்

மாற்றுத்திறனாளிகள் துறையில் இந்தியா – சிலி நாடுகளி -டையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மாற்றுத்திறனாளிகள் துறையில் பரஸ்பரம் இருநாடுகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா – சிலி இடையே மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள்மூலம் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான நடவடிக்
-கைகளுக்கு ஊக்கமளிக்கும். இது இந்தியா மற்றும் சிலி இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியா-சிலி நாடுகளிடையேயான உறவுகள் பல்வேறு விவகாரங்களில் பொதுவான பார்வையின் அடிப்படையில் நட்புரீதியில் அமைந்துள்ளது. 2019-20ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது.

2. 540 MW உற்பத்தித் திறனுள்ள குவார் புனல்மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே `4526.12 கோடி முதலீட்டில் 540 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள குவார் புனல்மின் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கா -ன அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய புனல்மின் கழகம், ஜம்மு-காஷ்மீர் மாநில மின் உற்பத்தி மேம்பாட்டு கழகமும், செனாப் பள்ளத்தாக்கு மின் உற்பத்தி திட்டத்திற்கான தனியார் நிறுவனமும் இணைந்து இதனை அமலாக்கும். இதில் 51% தனியார் பங்களிப்பாகவும், 49% அரசு கழகங்களின் பங்காகவும் இருக்கும். இந்த மின்திட்டம் ஆண்டுக்கு 1975.54 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

இந்தத் திட்டத்திற்கு அடிப்படை கட்டமைப்பு செலவுக்காக மத்திய அரசு `69.80 கோடி மானியமாக வழங்குகிறது. மேலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உதவியாக `655.08 கோடி மானியமாக வழங்கப்படும். இம்மின்திட்டம் 54 மாத காலத்தில் செயல்படத்தொடங்கும்.

3. 5-12 வயது சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி – மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்

சிறார்களிடையே கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு ஊக்கம் தரும் வகையில், 5 வயது முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த 2 தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

6-12 வயது வரையிலான சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியையும், 5-12 வயது வரையிலான சிறார்களுக்கு பயாலஜிகல்-இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசியையும் அவசர காலத்தில் நிபந்தனைகளுக்கு உள்பட்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

தற்சமயம், மத்திய அரசின் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், 12-15 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு பயாலஜிகல்-இ நிறுவனத்தின் தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோவேக்ஸின் தடுப்பூசியை சிறார்களுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளை ஆய்வுசெய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, கோவேக்ஸின் தடுப்பூசியை 2-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயன்படுத்த கடந்தாண்டு அக்டோபர் மாதம் பரிந்துரை செய்தது. இருப்பினும், 12-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே அந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த டிஜிசிஐ ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை 5-12 வயதுக்கு உள்பட்டவர்களுக்குப் பயன்படுத்த டிசிஜிஐயின் மருத்துவ நிபுணர் குழு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பரிந்துரை செய்தது. 12-15 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு அந்தத் தடுப்பூசி தற்போது பயன்பாட்டில் உள்ளது.

தற்சமயம், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

சைடஸ் நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்த டிசிஜிஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால், அந்தத் தடுப்பூசி இன்னும் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

4. இந்தியா-அமெரிக்கா நட்புறவின் 75-ஆவது ஆண்டு விடியோ வெளியீடு

இந்தியா-அமெரிக்கா நட்புறவின் 75 ஆண்டுகள் கொண்டாட்டத்தையொட்டி, அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் விடியோ பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.

5. 27-04-2022 – ‘வெள்ளுடை வேந்தர்’ சர். பிட்டி. தியாகராயர் அவர்களின் 171-ஆவது பிறந்தநாள்.

1. East Timor, which was seen in the news, was recognised by the UN in which year?

A) 1982

B) 1992

C) 2002 

D) 2012

  • East Timor, also known as Timor Leste, which has recently held its presidential election, was officially recognised by the United Nations in the year 2002.

2. Al–Aqsa Mosque, sometimes seen in the news, is located in which city?

A) Rome

B) Jerusalem 

C) Riyadh

D) Muscat

  • In a recent violence occurred during the Jewish festival of Passover which coincided with the Muslims observing Ramzan, over 17 Palestinians wounded. The incident occurred at Jerusalem’s al–Aqsa Mosque compound.

3. Who is the new Chief of Army Staff (COAS) of India?

A) Lt Gen Bipin Rawat

B) Lt Gen M M Naravane

C) Lt Gen Manoj Pande 

D) Lt Gen Bikram Singh

  • Lieutenant General Manoj Pande appointed the new Chief of Army Staff and he will succeed General M M Naravane.
  • The Vice Chief of Army Staff, Lt General Pande is the first officer from the Corps of Engineers to become the COAS. He has commanded the Operation Parakram in the Pallanwala Sector of Jammu and Kashmir, along the Line of Control.

4. ‘Mugger’, which was seen in the news, is the name of which species?

A) Snake

B) Crocodile 

C) Turtle

D) Gecko

  • Muggers or marsh crocodiles (Crocodylus palustris) are freshwater crocodiles. They are found all over south Asia and South–eastern Iran. In India, they are found more in middle Ganges Basin and Chambal Basins.
  • Recently, over 350 mugger crocodiles in Rajasthan’s Jawai dam, are struggling to survive due to extreme and early heat in the months of March and April. The Indian Railways has been delivering water to Western Rajasthan as several water bodies dried up. Jawai River is a tributary of Luni River.

5. Where is the ‘WHO Global Centre for Traditional Medicine (GCTM)’ located in India?

A) Mumbai

B) Varanasi

C) Jamnagar 

D) Kochi

  • Prime Minister Narendra Modi laid the foundation stone of ‘WHO Global Centre for Traditional Medicine (GCTM)’ in Jamnagar, Gujarat. The event was attended by Prime Minister of Mauritius Pravind Jugnauth, Dr. Tedros Ghebreyesus, Director–General, WHO.

6. When is the ‘World Art Day’ observed every year?

A) April 15 

B) April 16

C) April 17

D) April 18

  • Each year, on 15 April, World Art Day is being celebrated across the world by the International Association of Art (IAA), a UNESCO partner. The celebration to promote the development, diffusion and enjoyment of art, was proclaimed at the 40th session of UNESCO’s General Conference in 2019.

7. When is the ‘World Chagas Day’ observed every year?

A) April 14 

B) April 20

C) April 24

D) April 28

  • April 14 is observed as World Chagas Day every year, to raise awareness about a life–threatening disease also called American trypanosomiasis. The disease is caused by a parasite Trypanosoma crizu. World Chagas Disease Day was first observed on April 14, 2020.

8. ‘Kripan Shakti’ Integrated Fire Power exercise was held in which state?

A) Uttarakhand

B) Maharashtra

C) West Bengal 

D) Kerala

  • The Trishakti Corps conducted Exercises Kripan Shakti, an Integrated Fire Power exercise at Teesta Field Firing Ranges (TFFR) near Siliguri in West Bengal. The exercise was aimed at combining the capabilities of the Indian Army and the Central Armed Police Forces to fight an integrated battle.

9. Which institution has announced that USD 2.2 million in climate action grants for local innovators?

A) UNDP 

B) UNEP

C) IMF

D) World Bank

  • The United Nations Development Programme (UNDP) and partners of the Adaptation Innovation Marketplace (AIM) have announced USD 2.2 million in climate action grants for 22 local innovators across 19 countries, including India.
  • The funding will enhance local climate action and accelerate the delivery of targets of the Paris Agreement and Sustainable Development Goals.

10. Which Indian chess player won the ‘2022 Reykjavik Open Tournament’?

A) Bharath Subramaniyam

B) Mitrabha Guha

C) Praggnanandhaa R 

D) Raja Rithvik

  • Indian Grandmaster Praggnanandhaa R recently won the ‘2022 Kvika Reykjavik Open Tournament’ in Iceland. The 16–year–old Indian grandmaster won a crucial game against his compatriot GM Gukesh D. (15) in the final round.
  • Praggnanandhaa is the fifth–youngest person in the world to achieve the title of Grandmaster in 2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!