Tnpsc

27th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பின்வரும் எந்த நகரத்தில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம் திறக்கப்பட்டுள்ளது?

அ) சென்னை

ஆ) ஹைதராபாத்

இ) திருவனந்தபுரம்

ஈ) பெங்களூரு

  • ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்துவைத்தார். பொருண்ம அறிவியல் மற்றும் உலோகவியற்பொறியியல் துறையின் கட்டடம், உயர் செயல்திறன்கொண்ட கணினி மையம் மற்றும் உயர்-தெளிவுத்திறன் கொண்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி வசதி ஆகியவற்றையும் அவர் திறந்துவைத்தார்.
  • செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையமானது ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்காக ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூஷன்சுடன் பல்கலை ஒப்பந்தம் செய்துள்ளது.

2. 2021 உலக தடகள U20 சாம்பியன்ஷிப்பை நடத்துகிற நாடு எது?

அ) கானா

ஆ) கென்யா 

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) ஜமைக்கா

  • 2021 உலக தடகள U20 சாம்பியன்ஷிப், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் என்றும் அழைக்கப்படுகிறது; இது கென்யாவின் நைரோபியில் உள்ள நயாயோ விளையாட்டு வளாகத்தில் 2021 ஆகஸ்ட் 17 முதல் 22 வரை நடைபெறுகிறது. U20 சாம்பியன்ஷிப் என்பது ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆக தகுதிபெறுவதற்கான ஒரு சர்வதேச தடகள போட்டியாகும்.

3. உலக கொசு நாளாக கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட்.18

ஆ) ஆகஸ்ட்.20 

இ) ஆகஸ்ட்.22

ஈ) ஆகஸ்ட்.24

  • மலேரியாவிற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட்.20 அன்று உலக கொசு நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவால் ஏற்படும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் சுகாதார அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் முன்னெடுப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் உலக கொசு நாளன்று, கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. “Reaching the zero-malaria target” என்பது நடப்பாண்டு (2021) வரும் உலக கொசு நாளுக்கானக் கருப்பொருளாகும். கடந்த 1897ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராஸ், பெண் கொசுக்கள் மனிதர்களிடையே மலேரியாவை பரப்புகின்றன என்று கண்டுபிடித்த நிகழ்வையும் இந்த நாள் நினைவுகூர்கிறது. 1902’இல், ராஸ், மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார் மற்றும் அதைப்பெற்ற முதல் பிரித்தானியர் ஆனார்.

4.கர்னால் ஏரி உல்லாச விடுதியில் முதல் சோலார் மின்சார வாகன மின்னேற்ற நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து, எந்த நெடுஞ்சாலை, இந்தியாவின் முதல் மின்-வாகனத்துக்குகந்த நெடுஞ்சாலையாக மாறியுள்ளது?

அ) தில்லி-சண்டிகர் நெடுஞ்சாலை 

ஆ) தில்லி-மும்பை நெடுஞ்சாலை

இ) தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை

ஈ) தில்லி-மீரட் நெடுஞ்சாலை

  • மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சின் FAME-1 (இந்தியாவில் மின்சார மற்றும் கலப்பு வாகனங்களுக்கு விரைவில் மாறுதல் மற்றும் உற்பத்தி) திட்டத்தின்கீழ் சூரிய ஆற்றல் அடிப்படையிலான வாகன மின்னேற்றி நிலையங்களை தில்லி-சண்டிகர் நெடுஞ்சாலையில் அதிகளவில் பாரத மிகுமின் நிறுவனம் நிறுவியிருப்பதால், இந்தியாவின் முதல் மின்சார வாகனங்களுக்கு தோழமையான நெடுஞ்சாலையாக அது உருவாகி இருக்கிறது.
  • கர்னால் ஏரி விடுதியில் அமைந்துள்ள சூரிய ஆற்றல் மின்சார வாகன மின்னேற்றி நிலையத்தை மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே காணொலிமூலம் திறந்துவைத்தார்.

5. உலகளவில் கிரிப்டோ ஏற்றலில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) முதலாவது

ஆ) இரண்டாவது 

இ) மூன்றாவது

ஈ) நான்காவது

  • பிளாக்செயின் தரவுதளமான செயினாலிசிஸின்படி, 2021 உலகளாவிய கிரிப்டோ ஏற்றல் குறியீட்டில் (Crypto Adoption), உலகளவில் கிரிப்டோ ஏற்றலில் வியத்நாமிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கிரிப்டோ ஏற்றலில் உள்ள முதல் 5 நாடுகளுமே ஆசியாவைச் சேர்ந்தவைதான். உலகளவில் 47,000 பயனர்களை அந்த நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்தியாவில், 30% பேர் தாங்கள் கிரிப்டோகரன்ஸிகள் வைத்திருப்பதாக கூறினர். அந்த அறிக்கையின்படி, பிட்காயின் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான நாணயமாகும். அதைத் தொடர்ந்து ரிப்பிள், எத்தேரியம் மற்றும் பிட்காயின் கேஷ் ஆகியவை உள்ளன.

6. அடிமை வர்த்தகம் & அதன் ஒழிப்பினை நினைவுகூருவதற்கான பன்னாட்டு நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட்.20

ஆ) ஆகஸ்ட்.21

இ) ஆகஸ்ட்.22

ஈ) ஆகஸ்ட்.23 

  • ஐநா அவையானது ஆண்டுதோறும் ஆக.23 அன்று “அடிமை வர்த்தகம் & அதன் ஒழிப்பினை நினைவுகூருவதற்கான பன்னாட்டு நினைவு நாளாக” அனுசரிக்கிறது. கொடூரமான நடைமுறை அல்லது முறையான இனவெறியால் மனிதாபிமானமற்ற முறையில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1791’இல் செயிண்ட்-டொமிங்குவில், அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர கலகம் செய்த ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவை இந்த நாள் கௌரவிக்கிறது.

7. சென்னை நாளாக கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட்.22 

ஆ) ஆகஸ்ட்.24

இ) ஆகஸ்ட்.25

ஈ) ஆகஸ்ட்.27

  • 2021 ஆகஸ்ட்.22 அன்று சென்னை தனது 382ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 1639 ஆக.22 அன்று, மதராசப்பட்டணம் கிராமத்தை கிழக்கிந்திய நிறுவனம் விசயநகரப்பேரரசிடமிருந்து வாங்கியது. சென்னை நாளைக்கொண்டாடும் கருத்து 2004இல் உருவாக்கப்பட்டது.

8. உலக மூத்த குடிமக்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட்.21 

ஆ) ஆகஸ்ட்.22

இ) ஆகஸ்ட்.24

ஈ) ஆகஸ்ட்.26

  • வயோதிகர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் மூத்தோருக்கான ஆதரவு, மரியாதை மற்றும் பாராட்டு மற்றும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மூத்த குடிமக்கள் நாள், ஆகஸ்ட்.21 அன்று கொண்டாடப்படுகிறது. 1990 டிச.14 அன்று ஐநா பொது அவையால் இந்நாள் அறிவிக்கப்பட்டது.

9. அண்மையில் காலமான O சந்திரசேகரன், ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவை எந்த விளையாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தினார்?

அ) ஹாக்கி

ஆ) மல்யுத்தம்

இ) நீளந்தாண்டுதல்

ஈ) கால்பந்து 

  • முன்னாள் இந்திய கால்பந்து வீரர் O சந்திரசேகரன் 2021 ஆகஸ்ட்.24 அன்று தனது 86ஆவது வயதில் கொச்சியில் காலமானார். 1960 ரோம் மற்றும் 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியில் சந்திரசேகரன் இருந்தார். 1962ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் உறுப்பினராகவும், அதே ஆண்டு டெல் அவிவில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் வெள்ளியும் பெற்றார். 1963 சந்தோஷ் கோப்பையை வென்ற மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார்.

10. தொற்றுநோய் ஆசியா மற்றும் பசிபிக் முன்னேற்றத்தை அச்சுறுத்துகிறது எனக்குறிப்பிடும், “ஆசியா & பசிபிக் 2021’க்கான முக்கிய சுட்டிகள்” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) ஆசிய வளர்ச்சி வங்கி 

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) ஐநா வளர்ச்சித் திட்டம்

  • ஆசிய வளர்ச்சி வங்கியின் ஒரு புதிய அறிக்கையின்படி, வளர்ந்துவரும் ஆசிய நாடுகளில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, தோராயமாக 75 முதல் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களை COVID-19 தொற்று, தீவிர வறுமையில் தள்ளியுள்ளது. ‘ஆசியா & பசிபிக்-2021க்கான முக்கிய சுட்டிகள்’, COVID-19 தொற்று ஆசியாவை அச்சுறுத்துவதாகவும், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் முக்கியமான இலக்குகளை நோக்கி பசிபிக் முன்னேறுவதாகவும் கூறுகிறது. பசி, நலவாழ்வு மற்றும் கல்வி போன்றவற்றிலும் முன்னேற்றம் தடைபட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உச்சநீதிமன்றத்துக்கு 9 புதிய நீதிபதிகள் நியமனம்

தலைமை நீதிபதி NV ரமணா தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, உச்சநீதிமன்றத்துக்கு 9 புதிய நீதிபதிகளைக் குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

புதிய நீதிபதிகளில் ஒருவரான பி வி நாகரத்னா, வரும் 2027ஆம் ஆண்டில் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 10 நீதிபதி பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 3 பெண்கள் உள்பட 9 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்குமாறு தலைமை நீதிபதி NV ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய சட்டத்துறை அமைச்சகம், புதிய நீதிபதிகளின் நியமனத்தை உறுதிசெய்து அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது. அவர்களது நியமனக் கடிதத்தில் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.

அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிடி ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளில் பி வி நாகரத்னா (கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி), ஹிமா கோலி (தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி), பெலா எம் திரிவேதி (குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் பெண்கள் ஆவர்.

உச்சநீதிமன்றத்தில் தற்போது இந்திரா பானர்ஜி மட்டுமே பெண் நீதிபதியாக உள்ளார். புதிதாக மூன்று பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த எண்ணிக்கை 4ஆக அதிகரிக்கும். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சேர்த்து 34 நீதிபதிகள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதல் பெண் தலைமை நீதிபதி வாய்ப்பு:

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு நீதிபதி பி வி நாகரத்னாவுக்கு ஏற்பட்டுள்ளது. அவர் 2027ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சுமார் 1 மாதத்துக்குத் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற வாய்ப்புள்ளது.

நீதிபதியாகும் வழக்குரைஞர்:

மூத்த வழக்குரைஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பி எஸ் நரசிம்மா உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்குரைஞர் சங்கத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ள 6ஆவது வழக்குரைஞர் இவர் ஆவார். நீதிபதி நாகரத்னாவின் ஓய்வுக்குப் பிறகு, அடுத்த தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு பி எஸ் நரசிம்மாவுக்கு உள்ளது. அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

2. கீழடி அகழாய்வில் தந்தத்தினாலான பகடை கண்டெடுப்பு

கீழடியில் நடைபெற்றுவரும் 7ஆம் கட்ட அகழாய்வில், தந்தத்தில் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 7ஆம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, அகரத்தில் 8 குழிகள், மணலூரில் 3 குழிகள், கொந்தகையில் 5 குழிகள், கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதில், சுடுமண் முத்திரை, உறை கிணறுகள், காதணிகள், முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் என ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தந்தத்தினாலான பகடை அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொல்லியலாளர்கள் தெரிவித்தது:

கீழடி உள்ளிட்ட 4 பகுதிகளில் செப்டம்பர் மாதம் வரை அகழாய்வுப் பணிகள் நடைபெறும். அதேநேரம், இந்த ஆய்வில் கண்டெடுக்கப்படும் தொல்பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வில், தந்தத்தில் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட சதுர வடிவிலான பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்பகடையில் ஒவ்வொரு பக்கத்தின் முகங்களும் ஒரு புள்ளியைச் சுற்றி 2 வட்டக் கீறல்கள் முத்திரையிடப்பட்டுள்ளன. மிக நேர்த்தியாக ஒன்றன் மேல் ஒன்றாக வரையப்பட்டுள்ள இப்பகடையானது, 4 புறமும் 1.5 செமீ அளவுடையதாகவும், 4 கி எடையுடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்கால மக்கள் பொழுதுபோக்குக்காக பகடை ஆடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கலாம் என்றனர்.

3. தமிழ்நாட்டில் பத்து புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும்‌ அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆக.26 அன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் உயர்கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்பு: “தமிழ்நாட்டின்‌ அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்‌, மாணவர்‌ சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்‌, 10 புதிய அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளைத்‌ தொடங்குவதற்கும் வரவு செலவுத்‌திட்டத்தில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்காணும்‌ இடங்களில்‌ புதிய கல்லூரிகள்‌ தொடங்கப்படும்.

விருதுநகர்‌ – திருச்சுழி, கள்ளக்குறிச்சி – திருக்கோவிலூர்‌, ஈரோடு – தாளவாடி, திண்டுக்கல்‌ – ஒட்டன்சத்திரம்‌, திருநெல்வேலி – மானூர்‌, திருப்பூர்‌ – தாராபுரம்‌, தருமபுரி – ஏரியூர்‌, புதுக்கோட்டை – ஆலங்குடி, வேலூர்‌ – சேர்க்காடு ஆகிய இடங்களில்‌ புதிய இருபாலர்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளும்‌, திருவாரூர்‌ – கூத்தாநல்லூரில்‌ புதிய அரசு மகளிர்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியும்‌ தொடங்கப்படும்”. இவ்வாறு உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது‌.

4. செப்.1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

செப்.1ஆம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ‘பம்பர் டூ பம்பர்’ என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்குக் காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல்லில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்துக்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, ‘நியூ இந்தியா அஷுரன்ஸ்’ நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை ஆக.26 அன்று நீதிபதி எஸ் வைத்தியநாதன் விசாரித்தார். வாகனத்திற்கான ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வாகனத்துக்குக் காப்பீடு எடுக்கப்பட்டதாகவும், ஓட்டுநர் அல்லாத ஒருவர் இறப்புக்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியுமென காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

சடையப்பன் வாகன ஓட்டுநராக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும் விபத்து நடந்தபோது அவர் வாகனத்தை இயக்கவில்லை என்றும், அவர் சம்பளம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றை ஏற்றுக்கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேசமயம் புதிய வாகனத்தை வாங்கும்போது அது எவ்வாறு செயல்படும் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், காப்பீடு நடைமுறைகளை முழுமையாகத் தெரிந்து கொள்வதில்லை என வேதனை தெரிவித்தார்.

வாகனங்கள் வாங்குபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையாகத் தெரிவிப்பதில்லை என்று விற்பனையாளர்களைக் குற்றம் சாட்டினார். வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்துப் புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில், வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்குக் காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக, செப்டம்பர் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

5. காச நோய் தடுப்பு கூட்டுக் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்பு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காசநோய் தடுப்பு குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2024ஆம் ஆண்டு வரை அமைச்சர் இந்த பொறுப்பை வகிப்பார். ஐக்கிய நாடுகளின் காசநோய் இலக்கை 2022ஆம் ஆண்டிற்குள் அடையவும், 2030ஆம் ஆண்டிற்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல் கல் தருணத்தை அடையவும், காசநோய் தடுப்பு கூட்டு செயலகம், கூட்டாளிகள் மற்றும் காசநோய் சமூகத்தின் முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார்.

6. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் மலபார் கூட்டு போர் பயிற்சி தொடங்கியது

மலபார் கூட்டு போர் பயிற்சி, கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது, அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகள் மட்டும் பங்கேற்றன. பின்னர், ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் இதில் இணைந்தன. மேற்கண்ட 4 நாடுகளும் ‘குவாட்’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நடக்கும் ‘குவாட்’ நாடுகளின் மலபார் கடற்படை கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. குவாட் நாட்டு கடற்பகுதியில் 4 நாட்களுக்கு இப்பயிற்சி நடக்கிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அது சுதந்திரமான, வெளிப்படையான பிராந்தியமாக நீடிக்கும்வகையில், 4 நாடுகளும் ஒத்துழைப்பை அளிப்பதற்காக, இந்த பயிற்சி நடக்கிறது. அமெரிக்க கடற்படை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதில், 4 நாடுகளின் போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்று சிக்கலான பயிற்சிகளில் ஈடுபடுகின்றன. இந்திய கடற்படை தனது ஐ என் எஸ் சிவாலிக் போர்க்கப்பல், நீர்மூழ்கி தகர்ப்பு கப்பலான ஐ என் எஸ் கட்மட், கடல்சார் உளவு விமானம் ஆகியவற்றை பயிற்சியில் பங்கேற்க வைத்துள்ளது.

26-08-2021 – ‘தமிழ்த்தென்றல்’ திரு. வி. க’இன் 138ஆவது பிறந்தநாள்.

1. In which city, the Centre for Research and Innovation in Artificial Intelligence has been inaugurated?

A) Chennai

B) Hyderabad 

C) Thiruvananthapuram

D) Bengaluru

  • Union Education Minister Dharmendra Pradhan has virtually inaugurated the Centre for Research and Innovation in Artificial Intelligence set up at the Indian Institute of Technology–Hyderabad. He also inaugurated the first Academic Building of the Department of Materials Science & Metallurgical Engineering, High–Performance Computing Centre and High–Resolution Electron Microscopy Facility.
  • Centre for Research and Innovation in Artificial Intelligence is being set up in collaboration with Japan International Cooperation Agency–JICA. The University has an agreement with Honeywell Technology Solutions for setting up the lab.

2. Which country is hosting the 2021 edition of the World Athletics U20 Championships?

A) Ghana

B) Kenya 

C) South Africa

D) Jamaica

  • The 2021 World Athletics U20 Championships, also known as the World Junior Championships, are an international athletics competition for athletes qualifying as juniors taking place from 17 to 22 August 2021 at the Nyayo Sports Complex in Nairobi, Kenya.

3. Which date is observed as World Mosquito Day?

A) August.18

B) August.20 

C) August.22

D) August.24

  • World Mosquito Day is observed on 20 August annually to raise awareness about the causes of malaria and how it can be prevented. This day is observed to highlight the efforts of health officials, non–governmental organizations and other organizations in the fight against the disease caused by malaria. On World Mosquito Day every year, awareness is created around diseases caused by mosquitoes.
  • This year the theme of World Mosquito Day 2021 is “Reaching the zero–malaria target”. The day also commemorates the discovery by British physician Sir Ronald Ross in 1897 that female mosquitoes transmit malaria between humans. In 1902 Ross won the Nobel Prize in Medicine and became the first Briton to receive it.

4. With the inauguration of the first solar electric vehicle charging station at the Karnal lake resort, which highway has become the first e–vehicle friendly highway in India?

A) Delhi–Chandigarh Highway 

B) Delhi–Mumbai Highway

C) Delhi–Jaipur Highway

D) Delhi–Meerut Highway

  • The Union Heavy Industries Minister Dr. Mahendra Nath Pandey inaugurated the country’s very first Solar Electric Vehicle (EV) Charging Station at the Karnal Lake Resort. With the inauguration of the first solar electric vehicle charging station at the Karnal lake resort, the Delhi–Chandigarh Highway has become the first e–vehicle friendly highway in India. The EV charging station at the Karnal lake resort is strategically located at the midpoint of the Delhi–Chandigarh highway and is equipped to cater to all types of E–cars plying currently in the country.
  • The network of Solar–based Electric Vehicle Charging stations (SEVCs) is set up by Bharat Heavy Electricals Limited (BHEL) under the FAME–1 [Faster Adoption and Manufacturing of (Hybrid) & Electric Vehicles in India] scheme of the Ministry of Heavy Industries.

5. What is India’s rank in terms of crypto adoption worldwide?

A) First

B) Second 

C) Third

D) Fourth

  • India ranks second in terms of crypto adoption worldwide behind Vietnam, according to the 2021 Global Crypto Adoption Index by blockchain data platform Chainalysis. A report by US–based research platform Finder released this month corroborated that the top five countries in terms of crypto adoption were all from Asia.
  • The company surveyed 47,000 users worldwide and 30% of those surveyed in India said they owned cryptocurrencies. Bitcoin is the most popular coin in India, followed by Ripple, Ethereum and Bitcoin Cash, according to the report.

6. Which date is observed as International Day for the Remembrance of the Slave Trade and its Abolition?

A) August.20

B) August.21

C) August.22

D) August.23 

  • United Nations observes 23 August every year as “International Day for the Remembrance of the Slave Trade and its Abolition”. This day is intended to remember and honour the tragedy of the slave trade in the memory of all peoples who were dehumanised by the cruel practice or systemic racism. It is a day to honour the memory of the men and women who, in Saint–Domingue in 1791, revolted and paved the way for the end of slavery and dehumanization.

7. Which date is observed as Chennai Day?

A) August.22 

B) August.24

C) August.25

D) August.27

  • Chennai celebrated its 382nd birthday on August 22. It was on August 22, 1639, that the village of Madrasapatnam was purchased by the East India Company from the Vijayanagar Empire. The concept of celebrating Madras Day was conceptualized in 2004.

8. Which day is observed as World Senior Citizen Day in 2021?

A) August.21 

B) August.22

C) August.24

D) August.26

  • The World Senior Citizen Day is celebrated to raise awareness about issues affecting older people and support, honour and show appreciation to seniors and to recognize their achievements.
  • The day was proclaimed by the United Nations General Assembly on December 14, 1990.

9. O. Chandrasekharan, who passed away recently, represented India in the Olympics in which sport?

A) Hockey

B) Wrestling

C) Long Jump

D) Football 

  • Former Indian Footballer O. Chandrasekharan passed away in Kochi on August 24, 2021 at the age of 86.
  • Chandrasekharan was part of the Indian team that participated in the 1960 Rome and the 1964 Tokyo Olympics. He was also a member of the Indian team that won the gold in 1962 Asian Games in Jakarta and the silver medal in Asian Cup in Tel Aviv the same year. He captained the Maharashtra team that won the 1963 Santosh Trophy.

10. Which organization has released the report ‘Key Indicators for Asia and the Pacific 2021’ which states that the pandemic is threatening Asia and the Pacific’s progress?

A) World Bank

B) Asian Development Bank 

C) International Monetary Fund

D) United Nations Development Programme

  • The COVID–19 pandemic has pushed an estimated 75 million to 80 million more people in developing Asia into extreme poverty as of last year compared with what would have happened without COVID–19, according to a new report by the Asian Development Bank (ADB).
  • The ‘Key Indicators for Asia and the Pacific 2021’ says the pandemic is threatening Asia and the Pacific’s progress toward critical targets under the Sustainable Development Goals (SDGs). Progress has also stalled in areas such as hunger, health and education where earlier achievements across the region had been significant.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!