Tnpsc

27th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. அடிமை வர்த்தகத்துடன் தொடர்புடைய வில்லியம் பெக்போர்ட் மற்றும் சர் ஜான் காஸ் ஆகியோரின் சிலைகளை அகற்றுவதாக அறிவித்துள்ள நகரம் எது?

அ) வாஷிங்டன்

ஆ) லண்டன்

இ) ரோம்

ஈ) மாஸ்கோ

  • கில்ட்ஹால் சிலைகளின் இல்லத்திலிருந்து வில்லியம் பெக்போர்ட் மற்றும் சர் ஜான் காஸ் ஆகியோரின் சிலைகளை அகற்ற லண்டன் ஒப்புதல் அளித்தது. பிளாக் லிவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, நகரக்கழகம் இனவெறியைக் கையாள்வதற்காக ஒரு பணிக்குழுவை அமைத்தது; அது, இவ்விரு நபர்களின் சிலைகளை அகற்ற பரிந்துரைத்தது. நகரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இம்முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2. உலக பொருளாதார மன்றத்தின் அண்மைய, ‘உலகளாவிய இடர் அறிக்கை’யின்படி, பின்வரும் எது மிகப்பெரிய நீண்டகால இடராகும்?

அ) வணிக அச்சுறுத்தல்கள்

ஆ) காலநிலை அச்சுறுத்தல்கள்

இ) ஆயுத அச்சுறுத்தல்கள்

ஈ) மருத்துவ அச்சுறுத்தல்கள்

  • உலக பொருளாதார மன்றம் (WEF) சமீபத்தில் தனது அறிக்கையின் 15 வது பதிப்பை “உலகளாவிய இடர் அறிக்கை” என்ற தலைப்பில் வெளியிட்டது. வரலாற்றில் முதல்முறையாக, ‘காலநிலை அச்சுறுத்தல்கள்’, அறிக்கையில் உள்ள அனைத்து நீண்டகால இடர்களிலும் முதன்மையானதாக உள்ளது.
  • சைபர் தாக்குதல்கள் மற்றும் தரவு திருட்டு போன்ற தொழில்நுட்ப இடர்கள், உலகளாவிய ஆளுமை தோல்வி போன்ற அரசியல் இடர்கள் மற்றும் நீர் நெருக்கடி போன்ற சமூக இடர்கள் ஆகியவை பிற நீண்டகால இடர்களுள் அடங்கும். ‘பொருளாதார மோதல்கள்’ மற்றும் ‘உள்நாட்டு அரசியல் துருவ முனைப்பு’ ஆகியவை குறுகிய கால இடர்களாகும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘SAMVAD’ மாநாடு, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?

அ) ஜப்பான்

ஆ) இலங்கை

இ) வங்காளதேசம்

ஈ) ஆஸ்திரேலியா

  • இந்தியாவும் ஜப்பானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக புது தில்லி, டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்வாத் மாநாட்டுத் தொடர்களை ஏற்பாடு செய்து வருகின்றன. இந்தத் தொடர் மாநாடு, இருநாடுகளின் பகிரப்பட்ட மதிப்புகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆறாவது இந்திய-ஜப்பான் சம்வாத் மாநாட்டின்போது, பிரதமர் மோடி பெளத்த இலக்கியம் மற்றும் வேதங்களின் நூலகத்தை உருவாக்குவதாக முன்மொழிந்தார்.

4. ‘மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்’ என்பது பின்வரும் எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்பு ஆகும்?

அ) இராஜஸ்தான்

ஆ) நாகாலாந்து

இ) ஜம்மு & காஷ்மீர்

ஈ) அஸ்ஸாம்

  • ‘மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்’ என்பது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இது முதன்முதலில் 2020 அக்டோபர் மாதம் உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
  • இது, ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து இராஜ் சட்டம், 1989ஆல் வசதி செய்யப்பட்டு, இந்திய அரசியலமைப்பின் 1996 ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து இராஜ் விதியின்கீழ் உருவாக்கப்பட்டது. அண்மையில், ஜம்மு-காஷ்மீரின் முதல் ‘மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்’ தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது.

5. நாட்டின் முதல் அதிநவீன ஹைப்பர்சோனிக் காற்றுப்புழை சோதனை வசதி, பின்வரும் எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?

அ) சென்னை

ஆ) மும்பை

இ) ஹைதராபாத்

ஈ) திருவனந்தபுரம்

  • ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) Dr APJ அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் அதிநவீன Hypersonic Wind Tunnel (HWT) சோதனை வசதியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் திறந்துவைத்தார்.
  • இவ்வளவு பெரிய HWT சோதனை வசதியைக்கொண்ட மூன்றாவது நாடு இந்தியாவாகும். இந்திய தொழிற்சாலைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, எதிர்கால விண்வெளி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற களரிப்பயிற்று, பின்வரும் எந்த மாநிலத்தின் பிரபலமான விளையாட்டாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • ஹரியானாவில் நடைபெறவிருக்கும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு – 2021 போட்டிகளில், யோகாசனத்துடன் கட்கா, களரிப்பயிற்று, தங்-டா, மல்லர்கம்பம் உள்ளிட்ட 4 ஆட்டங்களும் சேர்க்கப்படும்.
  • களரிப்பயிற்று கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மல்லர்கம்பம் அதிகம் பயிற்சி செய்யப்படுகிறது, அதே வேளையில், பஞ்சாபின் கட்கா மற்றும் மணிப்பூரின் தங்-டா ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

7. 2021ஆம் ஆண்டுக்கான மைக்கேல் மற்றும் ஷீலா ஹெல்ட் பரிசை வென்ற இந்திய கணிதவியலாளர் யார்?

அ) கண்ணன் செளந்திரராஜன்

ஆ) அக்ஷய் வெங்கடேஷ்

இ) நிகில் ஸ்ரீவஸ்தாவா

ஈ) நீனா குப்தா

  • இந்திய இளம் கணிதவியலாளர் நிகில் ஸ்ரீவஸ்தாவா, 2021ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க மைக்கேல் மற்றும் ஷீலா ஹெல்ட் பரிசை வென்றவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடிசன்-சிங்கர் கணக்கு மற்றும் இராமானுஜன் வரைபடங்கள் குறித்த நீண்டகாலம் தீர்வு காணப்படாமலிருந்த கேள்விகளுக்கு தீர்வு கண்டதற்காக, அவர், மேலும் இருவருடன் சேர்ந்து $100,000 டாலர் விருதை வென்றவர் என அறிவிக்கப்பட்டார்.
  • இவர் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிதத் துறை இணை பேராசிரியராக உள்ளார்.

8. இந்திய ரிசர்வ் வங்கியானது எவ்வகை நிதி நிறுவனங்களுக் -கான 4 அடுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பை முன்மொழிந்தது?

அ) கட்டண வங்கிகள்

ஆ) NBFC’கள்

இ) சிறு நிதிய வங்கிகள்

ஈ) அயல்நாட்டு வங்கிகள்

  • ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (NBFC) திருத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பற்றிய விவாதக் கட்டுரையை வெளியிட்டது. இந்தக் கட்டுரையின்படி, NBFC’களின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை கட்டமைப்பானது அடிப்படை அடுக்கு, நடுத்தர அடுக்கு, மேல் அடுக்கு மற்றும் சாத்தியமிருந்தால் அதற்கும் மேல் ஓர் உயர் அடுக்கு ஆகிய நான்கு அடுக்கு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
  • மூலதனம் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றில் NBFC வாரியங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கலாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி அதில் பரிந்துரைத்துள்ளது.

9. ‘டெசர்ட் நைட் – 21’ என்ற பயிற்சி நடைபெற்ற இடம் எது?

அ) அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஆ) கோவா

இ) ஜோத்பூர்

ஈ) கொல்கத்தா

  • இந்திய வான்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண்படை ஆகியவை இணைந்து ‘டெசர்ட் நைட் – 21’ என்ற பெயரில், கூட்டுப்பயிற்சியை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வான்படை தளத்தில் ஜனவரி 24ஆம் தேதி வரை மேற்கொண்டன. பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்துகொண்டன. இந்திய வான்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், IL-78, அவாக்ஸ் மற்றும் AEW&C விமானங்கள் பங்கேற்றன.

10. சாலைப் போக்குவரத்து அமைச்சகமானது தனது ஆய்வுப் பிரிவை தொடங்குவதற்காக பின்வரும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ) IIT ரூர்க்கி

ஆ) NIT வாரங்கல்

இ) மத்திய சாலைப்போக்குவரத்து நிறுவனம்

ஈ) IIT சென்னை

  • நெடுஞ்சாலைத் துறை கட்டமைப்பு மேம்பாடு குறித்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்காக ரூர்கி IIT’இல் தொடங்கப்பட்ட பிரிவை தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மற்றும் ரூர்கி IIT ஆகியவை கையெழுத்திட்டன.
  • சாலைப் போக்குவரத்து மற்றும் ரூர்கி IIT’உடன், நெடுஞ்சாலை அமைச்சகம் வைத்துள்ள இந்தக் கூட்டு, சாலை துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை வலுப்படுத்தும். நெடுஞ்சாலை கட்டமைப்பு மேம்பாட்டில் ஆய்வுப்பணிகளை ஒருங்கிணைந்து நடத்துவது மற்றும் கல்வி கற்பிப்பது போன்றவற்றில், பேராசிரியர் பதவியுடன் கூடிய இந்தப் பிரிவு சிறந்த தலைமையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. Which city has announced to remove the Statues of William Beckford and Sir John Cass, associated with slavery trade?

A) Washington

B) London

C) Rome

D) Moscow

  • London approved the removal of the Statues of William Beckford and Sir John Cass from its iconic Guildhall home of statues. After the Black Lives Matter protests, the city corporation set up a task force on tackling racism, which recommended removing the statues of the two figures. The city’s elected representatives voted for the decision.

2. According to the recent “Global Risks Report” of the World Economic Forum, which is the biggest long–term risk?

A) Business threats

B) Climate threats

C) Weapon threats

D) Medical threats

  • The World Economic Forum (WEF) recently released the 15th edition of its report titled “Global Risks Report”. For the first time in the history, Climate threats accounted for all of the top long–term risks in the report.
  • Other long–term risks include technological risks such as Cyber attacks and data theft, Political risks like Global governance failure and Societal risks like water crisis. ‘Economic confrontations’ and ‘Domestic political polarization’ were reported to be the top short–term risks.

3. SAMVAD conference, which was seen in the news recently, is held between India and which country?

A) Japan

B) Sri Lanka

C) Bangladesh

D) Australia

  • India and Japan have been organising SAMVAD conference series for the past five years, in many places including New Delhi and Tokyo.
  • This series of conference aims to highlight the shared values of the two countries. During the 6th India–Japan Samvad conference, Prime Minister Narendra Modi proposed the creation of a library of Buddhist literature and scriptures.

4. ‘District Development Council (DDC)’, is a local government body of which state/UT?

A) Rajasthan

B) Nagaland

C) Jammu & Kashmir

D) Assam

  • ‘District Development Council (DDC)’ is a local government body of the Jammu and Kashmir Union territory. It was first introduced by the Ministry of Home Affairs in October 2020. It is facilitated by the Jammu and Kashmir Panchayati Raj Act, 1989 and created under Jammu and Kashmir Panchayati Raj Rule, 1996 of the constitution of India. Recently, the first DDC polls of the UT was held successfully.

5. The country’s first advanced Hypersonic Wind Tunnel (HWT) test facility was inaugurated in which city?

A) Chennai

B) Mumbai

C) Hyderabad

D) Thiruvananthapuram

  • Union Defence Minister Rajnath Singh inaugurated the advanced Hypersonic Wind Tunnel (HWT) test facility to Defence Research and Development Organisation’s (DRDO’s) Dr APJ Abdul Kalam Missile Complex in Hyderabad.
  • India is the third country to have such a large HWT Test facility. The system, which has been developed in collaboration with Indian industries, will play a major role on futuristic Aerospace and Defence Systems.

6. Kalaripayattu, which was seen in the news recently, is a famous game originating from which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Andhra Pradesh

D) Maharashtra

  • In the Khelo India Youth Games 2021 Games scheduled to take place in Haryana, four games including Gatka, Kalaripayattu, Thang–Ta and Mallakhamba will be included along with Yogasana. Kalaripayattu originated from Kerala and has been practised across the world.
  • Mallakhamba is practised more in Madhya Pradesh and Maharashtra, while Punjab’s Gatka and Manipur’s Thang–Ta are also included.

7. Which Indian mathematician has been named the winner of the 2021 Michael and Sheila Held Prize?

A) Kannan Soundararajan

B) Akshay Venkatesh

C) Nikhil Srivastava

D) Neena Gupta

  • Nikhil Srivastava, a young Indian mathematician, has been named winner of the prestigious 2021 Michael and Sheila Held Prize. He has been named the co–winner of the USD 100,000 award, along with two others for solving long–standing questions on the Kadison–Singer problem and on Ramanujan graphs. The mathematician is Associate Professor of Mathematics at the University of California, at present.

8. The Reserve Bank of India (RBI) proposed a four–tier regulatory framework for which type of financial institutions?

A) Payment Banks

B) NBFCs

C) Small Finance Banks

D) Foreign Banks

  • Reserve Bank of India recently released a discussion paper on revised regulatory framework for Non–Banking Financial Companies (NBFCs).
  • As per the paper, the regulatory and supervisory framework of NBFCs shall be based on a four–layered structure namely Base Layer, Middle Layer, Upper Layer and a possible Top Layer. RBI also recommended more power for the NBFC Boards on capital and risk management.

9. Which is the venue of the ‘Exercise Desert Knight 21’?

A) Andaman & Nicobar Islands

B) Goa

C) Jodhpur

D) Kolkata

  • The first edition of the exercise Desert Knight–21 was organised at Jodhpur Air Force Station, Rajasthan, from January 20 to 24, 2021.
  • Four French Rafale fighters, Airbus A–330 Multi–Role Tanker Transport (MRTT), A–400M Tactical Transport aircraft participated from the French side. Mirage 2000, Su–30 MKI, Rafale, IL–78 Flight Refuelling Aircraft, AWACS and AEW&C aircraft participated from the IAF.

10. Road Transport Ministry signed MoU with which institution for Research and Development?

A) IIT Roorkee

B) NIT Warangal

C) Central Institute of Road Transport

D) IIT Chennai

  • The Union Ministry of Road Transport & Highways (MoRTH) and Indian Institute of Technology (IIT), Roorkee has signed a Memorandum of Understanding (MoU) to continue the MoRTH Professorial Chair focusing on research and development.
  • The Chair focusses on teaching and training in the field of Development of Highway Infrastructure. The Ministry aims to develop indigenous technologies to lower cost of construction and reduce construction period of transport projects.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!