Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

27th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

27th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் முதல் சானிட்டரி நாப்கினற்ற கிராமமான ‘கும்பலாங்கி’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) கர்நாடகா

ஈ) ஒடிஸா

  • இந்தியாவிலேயே முதன்முறையாக சானிட்டரி நாப்கின் பயன்பாடற்ற கிராமமாக கும்பலாங்கி திகழ்கிறது. இது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது எர்ணாகுளம் தொகுதியில் செயல்படுத்தப்படும் ‘அவள் காயி’ (அவளுக்காக) என்ற திட்டத்தின் ஒருபகுதியாகும்.
  • இதன்கீழ் பதினெட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடை மகளிர்க்கு மாதவிடாய் கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. கும்பலாங்கி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக கேரள ஆளுநர் அறிவித்துள்ளார். இது இந்தியாவின் முதல் ‘மாதிரி சுற்றுலா கிராமம்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது.

2. Tu-160M / White Swan Bomber’ஐ உருவாக்கிய நாடு எது?

அ) இஸ்ரேல்

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) ரஷ்யா 

  • ரஷ்யா தனது ‘Tu-160M’ உத்திசார் குண்டுதாரியான ‘வைட் ஸ்வான்’ஐ உருவாக்கியுள்ளது. அண்மையில் இதன் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரஷ்ய இராணுவத்தின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட இக்குண்டு தாரியை சுமந்துசெல்லும் ‘Tu-160M’ ஏவுகணையின் 80% உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அணு மற்றும் வழமையான ஆயுதங்கள்மூலம் தொலைதூரத்தில் உள்ள எதிரி இலக்குகளையும் இது தாக்கும்.

3. எவ்வகையான LED, மின்னோட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஒளியை உமிழும் கரிம சேர்மத்தை படலமாகப் பயன்படுத்துகிறது?

அ) QLED

ஆ) OLED 

இ) பீட்டா LED

ஈ) மெட்டா LED

  • ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு (OLED) என்பது ஒரு வகை LED (ஒளி-உமிழும் டையோடு) ஆகும். இதில் உள்ள எமிசிவ் எலக்ட்ரோலுமினசென்ட் லேயர் என்பது மின்னோட்டத்திற்கு பதிலளிக்கும் ஓர் ஒளியை உமிழும் கரிம சேர்மத்தின் படலமாகும். இது Liquid Crystal Display -களுக்கு ஒரு மாற்றாக உள்ளது. சமீபத்தில், மினசோட்டா பல்கலை, எம்ஐடி, கொரிய இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் பூசன் தேசிய பல்கலை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு, முழுவதுமாக 3D-அச்சிடப்பட்ட ஒரு நெகிழ்வான OLED டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் ஓர் அச்சிடும் நுட்பத்தை செய்து காண்பித்தது.

4. ICANN-ஆதரவிலான யுனிவர்சல் அக்செப்டென்ஸ் வழி செலுத்து குழுவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ) விஜய் சேகர் சர்மா 

ஆ) சச்சின் பன்சால்

இ) பவிஷ் அகர்வால்

ஈ) தீபிந்தர் கோயல்

  • உலகளாவிய இணைய அமைப்பான ICANN-ஆதரவு யுனிவர்சல் அக்செப்டன்ஸ் வழிசெலுத்து குழுமமானது Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மாவை அதன் தூதராக நியமித்துள்ளது. இணையத்தை அணுகுவதற்கு தற்போது பயன்படுத்தப்படாத மொழிநிரல்களுக்கான தரநிலையை உருவாக்கி அதைப் பரிந்துரைப்பதில் குழு செயல்படுகிறது.

5. டிமிடர் கோவசெவ்ஸ்கி என்பவர் எந்த நாட்டின் புதிய பிரதமரானார்?

அ) கிரேக்கம்

ஆ) வடக்கு மாசிடோனியா 

இ) எகிப்து

ஈ) அர்ஜென்டினா

  • வடக்கு மாசிடோனியாவின் நாடாளுமன்றம் புதிய சமூக ஜனநாயகத் தலைவரான டிமிடர் கோவசெவ்ஸ்கியின்கீழ் புதிய அமைச்சரவையைத் தேர்ந்தெடுத்தது. அவர் தனது சமூக ஜனநாயக முன்னோடியான சோரன் ஜாவ்வை அடுத்து பதவியேற்றார். தற்போதைய எரிசக்தி நெருக்கடி மற்றும் பல்கேரியாவுடனான முக்கிய பேச்சுவார்த்தைகளை சமாளிப்பது தனது உடனடி பணிகள் என்று புதிய பிரதமர் அறிவித்தார். வடக்கு மாசிடோனியா குடியரசு என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும்.

6. உழவர்களின் உணவுப்பாதுகாப்பை மேம்படுத்துவதற் -காக உலக உணவுத் திட்டத்துடன் கைகோர்த்த இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஒடிஸா 

இ) தெலுங்கானா

ஈ) அஸ்ஸாம்

  • சிறு மற்றும் குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஐநாவின் உலக உணவுத்திட்டமும் ஒடிஸா மாநில அரசும் கைகோர்த்துள்ளன.
  • பருவநிலை மாற்றத்திற்கு ஏதுவாக உழவர்களின் நெகிழ் திறனை வலுப்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக உணவுத்திட்டமும் உழவுத்துறை -யும் சிறு உழவர்களுக்கு சேவைகளை வழங்குதற்கான கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கும்.

7. இராபர்ட்டா மெட்சோலா என்பவர் எந்தப் பன்னோக்கு நிறுவனத்தின் இளவயது தலைவராகியுள்ளார்?

அ) ஐரோப்பிய நாடாளுமன்றம் 

ஆ) யுனெஸ்கோ

இ) யுனிசெப்

ஈ) உலக வங்கி

  • மத்திய வலதுசாரி சட்டமியற்றுநர் இராபர்ட்டா மெட்சோலா ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 3ஆம் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகச்சிறிய நாடான மால்டாவைச் சேர்ந்த 43 வயதான இவர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மிக இளம் வயது தலைவராகவும் உள்ளார்.

8. ‘பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி’யை தொடக்கிய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ஆஸ்திரேலியா

இ) இந்தியா 

ஈ) சீனா

  • 2019ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஐநா காலநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டில் ‘பேரிடர் தாங்கக்கூடிய உட் கட்டமைப்புக்கான கூட்டணி’யை இந்தியா அறிவித்தது. தேசிய பேரிடர் மீட்புப்படை நாள் ஆண்டுதோறும் ஜன.19 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 2006’இல் இதே நாளில் உள்துறை அமைச்சகத்தின்கீழ், தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) உருவாக்கப்பட்டது.

9. இந்தியாவிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது?

அ) பிலிப்பைன்ஸ் 

ஆ) இஸ்ரேல்

இ) ரஷ்யா

ஈ) ஆஸ்திரேலியா

  • பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படைக்கு கரையில் இருந்து கப்பலை எதிர்க்கும் ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு $374 மில்லியன் ஒப்பந்தத்தை அந்நாடு வழங்கியுள்ளது.
  • இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியான ‘பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ்’, நீர்மூழ்கிக்கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் (அ) தரையிலிருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையான ‘பிரம்மோஸ்’ஐ தயாரிக்கிறது.

10. ‘Pandemic Billionaires’ என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) பிரதம் அறக்கட்டளை

ஆ) ஆக்ஸ்பாம் 

இ) பன்னாட்டு மன்னிப்பு அவை

ஈ) யுனிசெப்

  • ஆக்ஸ்பாமின் அண்மைய அறிக்கையின்படி, ஆசியாவில் உள்ள (இந்தியா, சீனா, ஹாங்காங் மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள்) 20 பேரின் (பெரும்பாலும் மருந்துத்துறை உடன் தொடர்புடையவர்கள்) செல்வநிலை தொற்றுநோய் காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது.
  • இவ்வறிக்கையின்படி, இப்பகுதியில் உள்ள ஏழ்மையான 90 சதவீதத்தினரைவிட 1 சதவீத பணக்காரர்கள் அதிக சொத்துவைத்திருந்தனர். 2020 மார்ச் மாதத்தில் 803ஆக இருந்த மொத்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1/3 பங்கு அதிகரித்து, கடந்த ஆண்டு நவம்பரில் 1,087 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரையும் இவ்வறிக்கை ‘தொற்றுநோய்கால பில்லியனர்கள்’ என அழைக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்.19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 வார்டு உறுப் பினர் பதவிகளுக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கான தேர்தல்கள் அனைத்தும் கட்சி அடிப்படையில் நடக்கும்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 28-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். பிப்.4-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை பிப்.5-ம் தேதி நடக்கும். மனுக்களை திரும்பப் பெற பிப்.7 கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

தேர்தல் நடக்கும் மாநகராட்சிகளில் 15,158, நகராட்சிகளில் 7,417, பேரூராட்சிகளில் 8,454 என மொத்தம் 31,029 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியில் 5,794 வாக்குச் சாவடிகள் உள்ளன.

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகையாக பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு `500, நகராட்சி வார்டு உறுப்பினருக்கு `1,000, மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு `2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகையாக பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு `1,000, நகராட்சி வார்டு உறுப்பினருக்கு `2,000, மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு `4,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

2. பொதுநூலக சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள முன்னாள் துணைவேந்தர் M ராஜேந்திரன் தலைமையில் குழு: தமிழக அரசு அரசாணை பிறப்பிப்பு

பொது நூலகச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்வதற்காக முன்னாள் துணைவேந்தர் M ராஜேந்திரன் தலைமையில் ஓர் உயர்நிலைக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப

பொது நூலகங்களுக்கான நிதிநிலையை மேம்படுத்துதல் மற்றும் நிதி ஆதாரத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய பொது நூலகச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப வாசகர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவும், நவீன தகவல் வளங்களை நூலகங்களுக்கு வழங்கவும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பொது நூலகச் சட்டத்தில் உரியதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுநூலக இயக்குநர் கூறியுள்ளார்.

நேரடி நியமன முறையில் பணி

மேலும், பொது நூலகங்களில்பணியாற்றும் நூலகர்களுக்கு பணிவிதிகளை முறைப்படுத்த வேண்டும். பொது நூலகங்களில்உள்ள அனைத்து பணியிடங்களிலும் நேரடி நியமன முறையில் பணியாளர்களை நியமிக்கும் வகையில்விதிகளை முறைப்படுத்த வேண்டும்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் புதிதாக அமையவுள்ள கலைஞர்நினைவு நூலகம் ஆகியவற்றைஒரே அலகாகக் கருதி பணியிடங்களை உருவாக்கி அவற்றை நிரப்ப உரிய திருத்தங்கள் மேற்கொள்வதும் அவசியம். எனவே, இத்திருத்தங்களை மேற்கொள்ள ஓர் உயர்நிலைக் குழுவை அமைக்கலாம் என்றும் பொதுநூலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இயக்குநரின் கருத்துருவை ஏற்று, தமிழ்நாடு பொதுநூலகச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்த உயர்நிலைக்குழு தனது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

3. நாஞ்சில் சம்பத், சுகி சிவம், பாரதி பாஸ்கர்: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

கடந்த 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார், பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது – சூர்யா சேவியர், சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக் கூர் இராமலிங்கம், தமிழ்த்தாய் விருது – மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கம், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா. சஞ்சீவிராயர், சி. பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை திங்களிதழ், தேவநேயப் பாவாணர் விருது – முனைவர் கு. அரசேந்திரன், உமறுப் புலவர் விருது – நா. மம்மது, கிஆபெ விருது – முனைவர் ம ராசேந்திரன், கம்பர் விருது – பாரதி பாஸ்கர், ஜி யு போப் விருது – AS பன்னீர்செல்வம், மறைமலையடிகள் விருது – சுகி சிவம், இளங்கோவடிகள் விருது- நெல்லைக் கண்ணன், அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.

இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை `1,00,000/-லிருந்து `2,00,000/- உயர்த்தியும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. காவல் ஆய்வாளர் உள்பட எட்டு பேருக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்:

பெண் காவல் ஆய்வாளர் உள்பட எட்டு பேருக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது.

அண்ணா பதக்கம்: பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை, களத்தில் இறங்கி வீர தீரத்துடன் காப்பாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில், எட்டு பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

சென்னை ஓட்டேரி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், காணாமல்போன மாற்றுத்திறனாளி சிறுவனையும் 3 மணி நேரத்துக்குள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார், கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் இராஜேஸ்வரி.

வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 2 நபர்களை மீட்டு கரை சேர்த்தார் விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் மூ ராஜீவ்காந்தி. பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் விளைவித்த யானைகளை யாருக்கும் எந்தப் பாதகமும் இல்லாமல் பிடிக்க பேருதவி புரிந்த கோவை மாவட்டம் அன்னூர் வட்ட வனக்கால்நடை உதவி மருத்துவர் கி அசோகன் ஆகிய அரசு ஊழியர்களுக்கு வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

பொதுமக்கள் பிரிவு: சாலைவிபத்தின்போது கண்மாய்க்கு -ள் விழுந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களை துணிச்சலுடன் போராடி காப்பாற்றினார் சிவகங்கை மாவட்டம் வைகை வடகரையைச்சேர்ந்த முத்துகிருஷ்
-ணன்.

குளிக்கச்செல்லும்போது நிலைதடுமாறி கிணற்றில்விழுந்த சிறுமியைக் காப்பாற்றினார் திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தைச் சேர்ந்த சிறுவன் லோகித்.

வாய்க்காலில் மூழ்கி உயிருக்குப்போராடிக்கொண்டிருந்த ஐந்து பேரைக் காப்பாற்றினார் திருப்பூர் மாவட்டம் வே கள்ளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சொக்கநாதன், சுதா என்ற பேச்சியம்மாள்.

திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுவதற்குள் மக்கள் அனைவரையும் வெளியேற்றி பேரிழப்பை தடுத்து நிறுத்தினார் திருவொற்றியூரைச் சேர்ந்த மு தனியரசு. வெவ்வேறு நிகழ்வுகளில் வீரதீரச் செயல்களின் மூலமாக உயிர்களைக் காத்த 8 பேருக்கும் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதானது தலா `1 லட்சக்கான காசோலை, `9,000 மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

கோட்டை அமீர் பதக்கம்: கோவை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்காக தொடர்ந்து பல்வேறு நற்செயல்களில் ஈடுபட்டு வருபவர், ஜே முகமது ரபி. கோவை கே கே புதூரைச் சேர்ந்த அவர், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். பதக்கமும், `25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் அடங்கிய கோட்டை அமீர்பதக்கத்தை முதல்வர் மு க ஸ்டாலினிடம் இருந்து பெற்றார் முகமது ரபி.

சிறந்த வேளாண்மை: செம்மை நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 800 கிலோ நெல் தானிய மகசூல் பெற்ற சேலம் மாவட்டம் பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செ ராமசாமி, முதலமைச்சரின் சி நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதினைப்பெற்றார். `5 இலட்சம், பதக்கம், சான்றிதழ் அடங்கியது இந்த விருது.

காந்தியடிகள் காவலர் பதக்கம்: கள்ளச்சாராய ஒழிப்பில் சிறந்த முறையில் பணியாற்றிவரும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குடியரசு தினத்தில் ஐவருக்கு இந்தப் பதக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விருது `40 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கம் அடங்கியது.

5. தனி மாவட்டமாக திருப்பதி உதயம்: ஸ்ரீ பாலாஜி மாவட்டமாக அரசு கெஜட்டில் வெளியீடு

ஆந்திராவில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக உருவாக்க ஜெகன் மோகன் தலைமையிலான அரசு முடிவுசெய்தது. இதன்படி அமைச்சரவை ஒப்புதலுக்குப்பிறகு புதிய மாவட்டங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் தொடர்பான அறிவிப்பை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டது.

இதன்படி ஆந்திராவில், ஸ்ரீகாகுளம், மன்யம், விஜயநகரம், அல்லூரி சீதாராம ராஜு, விசாகப்பட்டினம், அனகாபள்ளி, காக்கிநாடா, கோனசீமா, இராஜ மகேந்திர வரம், பீமவரம், ஏலூரு, கிருஷ்ணா, விஜயவாடா, குண்டூர், பல்நாடு, பாபட்லா, நெல்லூர், கர்னூல், நந்தியாலா, அனந்தபுரம், புட்டபர்த்தி, கடப்பா, இராயசோட்டி, சித்தூர், திருப்பதி (ஸ்ரீபாலாஜி) என மொத்தம் 26 மாவட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும். இதன் அடிப்படையில் இறுதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, உகாதி பண்டிகை முதல் புதிய மாவட்டங்கள் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்தூர் மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக திருப்பதி உதயமாகிறது. இதற்கு ஸ்ரீபாலாஜி மாவட்டம் என பெருமாளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சந்திரகிரி, ஸ்ரீகாளஹஸ்தி, வெங்கடகிரி, சூளுர் பேட்டை, நாயுடு பேட்டை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற உள்ளன.

பூகோள ரீதியாக முதலில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா தனியாக பிரிந்தது. அப்போது கர்னூல் தலைநகரமாக அமைக்கப்பட்டது. இந்த தருணத்தில், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடக எல்லையில் உள்ள சில பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. ஏற்கனவே இணையமாட்டோம் என அடம்பிடித்த தெலங்கானாவும் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. இதனால் 294 தொகுதிகளுடன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் 1956-ல் உருவானது.

இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 2014ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தனி தெலங்கானா மாநிலம் உருவானது. ஐதராபாத்துடன் தெலங்கானா பிரிக்கப்பட்டதால், ஆந்திராவுக்கு புதிய தலைநகரமாக அமராவதி நகரம் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2019-ல் ஜெகன் தலைமையில் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் போராட்டத்தால் அந்த அறிவிப்பை முதல்வர் ஜெகன் வாபஸ் பெற்றார். இந்நிலையில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கும் அறிவிப்பை ஜெகன் அரசு வெளியிட்டுள்ளது.

6. பிரேம் பிஹாரி நாராயண் ராய்ஜாதா உருவாக்கத்தில் சித்திர எழுத்துக்களில் அரசியலமைப்பு சட்ட நூல்: நாடாளுமன்ற நூலக கண்ணாடி பேழையில் பாதுகாப்பு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க நியமிக்கப் -பட்ட குழுவின் தலைவராக இருந்தவர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர். மற்றொரு சிறப்பாக அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை ஆங்கில சித்திர எழுத்துக்கள் வடிவில் 233 பக்கங்கள் கொண்ட நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உருவாக்கியவர் பிரேம் பிஹாரி நாராயண் ராய்ஜாதா. அந்த நிகழ்வு தற்போது 73ஆவது குடியரசு தினத்தில் வியப்புடன் நினைவுகூரப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தை சித்திர எழுத்துகளால் முடிக்க பிரேம் நாராயண் ராய்ஜாதாவுக்கு 6 மாதம் ஆகியுள்ளது. இதை உருவாக்க அவர் தனது பேனாவில் 432 ‘நிப்’புகளை பயன்படுத்தி உள்ளார். 13 கிலோ எடையுள்ள பக்கங்களை, நூல் வடிவில் தொகுத்து அதன் அட்டைகள் உள்ளிட்ட ஒவ்வொரு பக்கத்தையும், சாந்திநிகேதனின் பிரபல ஓவியர்கள், அஜந்தா வகை ஓவியங்களால் அழகுப்படுத்தி உள்ளனர். இதன் இந்தி மொழிபெயர்ப்பும் சித்திர எழுத்துகளால் பதிவாகி நூல் வடிவம் பெற்றுள்ளது. இதை 264 பக்கங்களில் வசந்த் கிருஷ்ண வேத் என்பவர் எழுதியுள்ளார்.

தில்லியில் கடந்த டிசம்பர் 16, 1901-ல் பிறந்தவர் பிரேம் பிஹாரி நாராயண் ராய்ஜாதா. இவர் சித்திர எழுத்துகள் எழுதுவதில் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் குடும்பத்தை சேர்ந்தவர். தனது இளம்வயதிலேயே பெற்றோரை இழந்த பிரேம் நாராயண், அவரது தாத்தா ராம் பிரசாத் சக்ஸேனா மற்றும் தாய்மாமன் சத்தூர் பிஹாரி நாரயண் சக்ஸேனாவால் வளர்க்கப்பட்டார்.

ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழி அறிஞராக வளர்ந்த பிரேம் நாராயண், ஆங்கில அரசின் அதிகாரிகளுக்கு பாரசீக மொழியை பயிற்றுவித்து வந்தார்.

டெல்லியின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், சித்திர எழுத்து கலையை தனதுதாத்தா ராம் பிரசாத் சக்ஸேனாவிடம் கற்றுக் கொண்டார். அதன்பிறகு சித்திர எழுத்துகள் எழுதுவதில் பிரேம் பிஹாரி புகழ் பெற்றார்.

இதனால், அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, பிரேம் நாராயணனை அழைத்து கவுரப்படுத்தினார்.

இவ்விரண்டு நூல்களும் தற்போது நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தோல் பைண்டிங் செய்யப்பட்ட நூல்கள் கருப்புநிற அட்டைகளில் தங்கவேலைபாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரு நூல்களும் கண்ணாடிப் பேழைகளில் வைத்து அவை கெடாமல் இருக்க நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு முறைக்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் 1992-ல் உதவி பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7. கெயிலும் ஜான்டி ரோட்ஸும் உண்மையான சிறப்பு தூதர்கள்: 73ஆவது குடியரசு தினத்தில் பிரதமர் மோடி பாராட்டு

நாட்டின் 73ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி, பிரபல கிரிக்கெட் வீரர்களான ஜான்டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோருக்கு அந்நாட்டுடனான ‘ஆழ்ந்த தொடர்பை’ வெளிப்படுத்தும் விதமாக கடிதம் எழுதியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். மேலும் அவர் தனது மகளுக்கு ‘இந்தியா’ எனவும் பெயர்சூட்டியுள்ளார். அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் கெயில், IPL தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவராவார்.

8. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ரஃபேல் போர் விமான முதல் பெண் விமானி

தில்லி ராஜபாதையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது இந்திய விமானப் படையின் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து விமானப் படையின் 75 விமானங்கள் பறந்து சாகசம் செய்தன. இதில் பிரான்ஸிடமிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமானங்களும் அடக்கம்.

அணிவகுப்பின்போது ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்ற ஷிவாங்கி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற 2ஆவது பெண் போர் விமானி ஷிவாங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங், இந்திய விமானப் படையில் 2017-ல் சேர்ந்தார். முதலில் மிக்-21 பைசன் ரக விமானத்தை இயக்கி வந்த ஷிவாங்கி தற்போது ரஃபேல் போர் விமானத்தை இயக்கி வருகிறார்.

8. 73ஆவது குடியரசு தின விழா கோலாகலம்: ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக சக்ரா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

அசோக சக்ரா விருது: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி மூன்று தீவிரவாதிகளை கொலை செய்துவிட்டு வீரமரணமடைந்த சிறப்பு காவல் ஆய்வாளர் பாபு ராமுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை அவருடைய மனைவி ரீனா ராணி, மற்றும் மகன் மாணிக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

9. காஷ்மீர்: லால் சவுக் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு பின் ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி…!

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிரபலமான லால் சவுக் பகுதியிலுள்ள மணிக்கூண்டு டவரில் 30 ஆண்டுகளுக்கு பின் நேற்று இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

10. ஐடி நிறுவனங்களில் டிசிஎஸ் பெரும் சாதனை: உலக அளவில் 2ஆவது இடம்

உலகளவில் ஐடி துறையைச்சேர்ந்த அதிக சொத்து மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தவிர முதல் 25 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மேலும் நான்கு நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

இதுகுறித்து பிராண்ட் பைனான்ஸ் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில், இந்திய மதிப்பில் சுமார் `2.71 லட்சம் கோடியுடன் அசென்ஸர் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையில் மிகவும் வலுவான இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த 2ஆவது இடத்தை இந்தியாவின் டிசிஎஸ் நிறுவனம் பிடித்துள்ளது.

டிசிஎஸ் முந்தைய ஆண்டை விட 12% மற்றும் 2020’ஐ விட 24% அதிகரித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. டிசிஎஸ் பிராண்ட் மதிப்பு 16.8 பில்லியன் டாலர் ஆகும்.

அதிக மதிப்புமிக்க நிறுவன பட்டியலில், இன்போசிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்போசிஸ், கடந்த ஆண்டை விட 52 சதவீத பிராண்ட் மதிப்பு மற்றும் 2020 இல் 80% வளர்ச்சியுடன் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஐடி சேவை வழங்கும் பிராண்டாக உருவெடுத்து உள்ளது. ஐபிஎம் நான்காவது இடத்தில் உள்ளது.

டிசிஎஸ் மற்றும் இன்போசிஸைத் தொடர்ந்து டாப் 25 நிறுவனங்களின் பட்டியலில் மேலும் நான்கு இந்திய நிறுவனங்கள் உள்ளன. விப்ரோ 7ஆவது இடத்திலும், HCL 8ஆவது இடத்திலும், டெக் மஹிந்திரா 15ஆவது இடத்திலும், எல்டிஐ 22ஆவது இடத்திலும் உள்ளன.

2020 முதல் 2022 வரையிலான காலத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் சராசரி வளர்ச்சி விகிதம் 51 சதவீதமாக இருந்தது. அதேசமயம், அமெரிக்க பிராண்டுகளின் வளர்ச்சி 7% குறைந்துள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

11. தமிழ்நாட்டில் 3 சிறந்த காவல் நிலையங்களுக்கு விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாட்டில் 3 சிறந்த காவல் நிலையங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார். இதில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் சார்பில் ஆய்வாளர் பிச்சையா விருதை பெற்றுக் கொண்டார். இரண்டாமிடம் பிடித்த திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாமாலினி, மூன்றாமிடத்தைப்பிடித்த மதுரை மாநகர E-3 அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சாதுரமேஷ் ஆகியோர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

1. Kumbalangi, India’s first–ever sanitary napkin–free village, is located in which state?

A) Tamil Nadu

B) Kerala 

C) Karnataka

D) Odisha

  • Kumbalangi became the first–ever sanitary napkin–free village in the country. It is located in the Ernakulam district of Kerala. It is part of ‘Avalkayi’ (for her) campaign being implemented in the Ernakulam constituency, under which menstrual cups are distributed to women aged 18 and above.
  • Kumbalanghi was declared a model village by the Kerala Governor. It also holds the title of India’s first model tourist village.

2. Which country has developed Tu–160M / White Swan Bomber?

A) Israel

B) India

C) China

D) Russia 

  • Russia has developed and unveiled its Tu–160M strategic bomber also known as White Swan. Recently, the debut flight of the bomber was conducted successfully.
  • As per the Russian Military sources, the newly built Tu–160M strategic missile–carrying bomber has 80% of its equipment upgraded and is capable to strike enemy targets in remote areas with nuclear and conventional weapons.

3. Which type of LED uses an organic compound as film which emits light in response to an electric current?

A) QLED

B) OLED 

C) Beta LED

D) Meta LED

  • Organic light–emitting diode (OLED) is a type of LED (Light–Emitting Diode) in which emissive electroluminescent layer is a film of organic compound that emits light in response to an electric current. This is a competitive alternative to liquid crystal displays (LCDs).
  • Recently, team of researchers from University of Minnesota, MIT, Korea Institute of Industrial Technology and Pusan National University have demonstrated a printing technique which produces fully 3D–printed flexible OLED displays.

4. Which Indian has been roped in as the Ambassador for ICANN–supported Universal Acceptance Steering Group?

A) Vijay Shekhar Sharma 

B) Sachin Bansal

C) Bhavish Aggarwal

D) Deepinder Goyal

  • Global internet body ICANN–supported Universal Acceptance Steering Group has roped in Paytm founder Vijay Shekhar Sharma as UA Ambassador.
  • The Group works on developing and recommending standards for languages script that are not currently used to access the internet.

5. Dimitar Kovacevski is the new Prime Minister of which country?

A) Greece

B) North Macedonia 

C) Egypt

D) Argentina

  • North Macedonia’s Parliament elected a new cabinet under a new Social Democratic leader, Dimitar Kovacevski. He succeeds his Social Democratic predecessor, Zoran Zaev.
  • The new Prime Minister announced that his immediate tasks are tackling the ongoing energy crisis and key talks with Bulgaria. The Republic of North Macedonia is a country in Southeast Europe.

6. Which Indian state has joined hands with the World Food Programme (WFP) to improve food security of farmers?

A) Tamil Nadu

B) Odisha 

C) Telangana

D) Assam

  • The United Nations World Food Programme (WFP) and the Odisha government have joined hands to improve the food security of small and marginal farmers. The agreement aims to strengthen the farmers’ resilience to climate change.
  • The WFP and the Agriculture Department will develop toolkits and guidelines to provide services to small farmers.

7. Roberta Metsola is the youngest President of which multilateral institution?

A) European Parliament 

B) UNESCO

C) UNICEF

D) World Bank

  • Centre–right lawmaker Roberta Metsola has been selected as the third woman to head the European Parliament. The 43–year–old from the European Union’s smallest nation Malta is also the youngest President of the European Parliament.

8. Which country initiated the ‘Coalition for Disaster Resilient Infrastructure’?

A) USA

B) Australia

C) India 

D) China

  • India announced ‘Coalition for Disaster Resilient Infrastructure’ at UN Climate Action Summit in New York in 2019. The National Disaster Response Force (NDRF) Raising Day is annually marked on January 19. NDRF was formed on the same day day in 2006. NDRF functions under the aegis of the Ministry of Home Affairs.

9. Which is the first country to approve purchase of BrahMos Missiles from India?

A) Philippines 

B) Israel

C) Russia

D) Australia

  • The Philippines has given a $374 million contract to BrahMos Aerospace to supply shore–based anti–ship missiles for the country’s navy. BrahMos Aerospace, an India–Russian joint venture, produces Supersonic cruise missile ‘BrahMos’ that can be launched from submarines, ships, aircraft, or land platforms.

10. Which institution recently released report on ‘Pandemic Billionaires’?

A) Pratham Foundation

B) Oxfam 

C) Amnesty International

D) UNICEF

  • As per a recent Oxfam report, 20 people in Asia (from India, China, Hong Kong, and Japan) mostly associated with the field of pharmaceuticals, saw their wealth zoom during the pandemic period.
  • As per the report, the richest 1 percent owned more wealth than the poorest 90 percent in the region. The total number of billionaires grew by almost a third from 803 in March 2020 to 1,087 by November last year, whom the report calls “Pandemic Billionaires”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!