TnpscTnpsc Current Affairs

27th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

27th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அனைத்து மகளிர் கூட்டுறவு வங்கியை அமைப்பதற்காக தெலுங்கானாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. இராஜஸ்தான் 

இ. கர்நாடகா

ஈ. பஞ்சாப்

 • தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் ஸ்திரீ நிதி கடன் கூட்டுறவு கூட்டமைப்புடனான இராஜஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தெலுங்கானா மாநிலத்தின் ஸ்திரீ நிதி மாதிரியில், ராஜஸ்தானில் முதல் அனைத்து மகளிர் கூட்டுறவு வங்கியை அமைப்பதே இதன் நோக்கம். ‘இராஜஸ்தான் மகிளா நிதி’ நிதியமானது சுய-உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்காக மட்டும் மகளிர் சுய உதவிக்குழுக்களால் இயக்கப்படுகிறது.

2. குஜராத் மாநிலத்தில் நடைபெறும் 36ஆவது தேசிய விளையாட்டு – 2022இல் இடம்பெறுகிற விலங்கு எது?

அ. காண்டாமிருகம்

ஆ. சிங்கம் 

இ. புலி

ஈ. யானை

 • 2022ஆம் ஆண்டு செப்.27 முதல் அக்.10ஆம் தேதி வரை 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த குஜராத் மாநிலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டிகளின் கடைசிப் பதிப்பு 2015ஆம் ஆண்டு கேரளாவில் நடத்தப்பட்டது. கிர் சிங்கம் மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை ஆகியவை இதன் இலச்சினையில் காணப்படுகின்றன. இந்திய ஒலிம்பிக் சங்கமானது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியை நடத்துவதற்கான குஜராத் மாநிலத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.

3. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா பிரிவின் (UNRWA) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. ஜெனீவா

ஆ. பாரிஸ்

இ. அம்மான் மற்றும் காசா 

ஈ. ஏருசலேம்

 • பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா பிரிவின் (UNRWA) தலைமையகம் பாலஸ்தீனிய ஆணையத்தின் அம்மான், ஜோர்டான் மற்றும் காசாவில் உள்ளது. இது 1949இல் நிறுவப்பட்டது. பாலஸ்தீனிய அகதிகளின் நிவாரணம் மற்றும் மனித வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் இந்த ஐநா பிரிவிற்கு இந்தியா சமீபத்தில் $2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. 2018 முதல், இந்திய அரசு, UNRWA-க்கு $20 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.

4. உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளாதார நிபுணர் யார்?

அ. இரகுராம் இராஜன்

ஆ. உர்ஜித் படேல்

இ. இண்டர்மிட் கில் 

ஈ. விரால் ஆச்சார்யா

 • உலக வங்கியானது இண்டர்மிட் கில்லை தலைமைப் பொருளாதார நிபுணராகவும், வளர்ச்சிப் பொருளாதாரத்திற்கான மூத்த துணைத் தலைவராகவும் நியமித்துள்ளது. கௌசிக் பாசுவுக்குப் பிறகு, உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணரான இரண்டாவது இந்தியர் இண்டர்மிட் கில் ஆவார். இது நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன் வழங்கும் ஒரு சர்வதேச நிதி நிறுவனம் ஆகும்.

5. பள்ளிக்கரணை சதுப்புநிலம் மற்றும் பிச்சாவரம் சதுப்புநிலம் ஆகியவை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. குஜராத்

 • தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம் பள்ளிக்கரனை சதுப்புநிலக்காடு, பிச்சாவரம் சதுப்புநிலக்காடு ஆகியவை உட்பட 5 இடங்களை, ராம்சர் எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த புதிய இடங்களாக இந்தியா அறிவித்துள்ளது. மிசோரமில் பாலா சதுப்புநிலம், மத்திய பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்புநிலம் ஆகியவை மற்ற இரண்டு புதிய இடங்களாகும். இத்துடன் ராம்சர் இடங்களின் எண்ணிக்கை 49-லிருந்து 54-ஆக அதிகரித்துள்ளது.

6. அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகமானது (DGFT) சமீபத்தில் PIMS-ஐ அறிமுகப்படுத்தியது. இதில், ‘PIMS’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ. Product Import Monitoring System

ஆ. Paper Import Monitoring System 

இ. Prior Information Monitoring System

ஈ. Prohibited Goods Import Monitoring System

 • அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகமானது (DGFT) Paper Import Monitoring System (PIMS)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. DGFT முதன்மை காகிதப் பொருட்களுக்கான இறக்குமதிக் கொள்கையை ‘கட்டற்றது’ என்பதிலிருந்து ‘PIMS-இன் கீழ் கட்டாயப்பதிவுக்குட்பட்டு கட்டற்றது’ என்று திருத்தியுள்ளது. இம்முறை 2022 அக்.1 முதல் நடைமுறைக்கு வரும். PIMS-இன்படி, ஒரு இறக்குமதியாளர் இணைய முறைமையில் தானியங்கி பதிவு எண்ணைப்பெறவேண்டும்.

7. அயல்நாட்டு வர்த்தகக் கொள்கைக்கான ஆலோசனைக் குழுவான ‘வர்த்தக வாரியம்’ யார் தலைமையின் கீழ் உள்ளது?

அ. பிரதமர்

ஆ. வெளிவிவகார அமைச்சர்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் 

ஈ. நிதி அமைச்சர்

 • அயல்நாட்டு வர்த்தகக் கொள்கை குறித்த ஆலோசனைக் குழுவான ‘வர்த்தக வாரியம்’ ஆனது வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரின் தலைமையில் உள்ளது. இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்பாளர்களாக உள்ளனர். பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 29 அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களை வர்த்தக வாரியத்திற்கு இந்திய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

8. பிரதமர் மோடி எந்த மாநில சட்டசபையின் நூற்றாண்டு நினைவுத்தூணை சமீபத்தில் (ஜூலை 2022) திறந்து வைத்தார்?

அ. உத்தர பிரதேசம்

ஆ. பீகார் 

இ. குஜராத்

ஈ. மகாராஷ்டிரா

 • பீகார் சட்டமன்றக் கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில், பீகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டு நினைவுத்தூணைப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். நூற்றாண்டு தூணுக்கான அடிக்கல்லை இந்தியக் குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு அக்.21 அன்று நாட்டினார். தூணின் அருகில் அமைந்துள்ள தோட்டத்திற்கு, ‘சதாப்தி ஸ்மிருதி உதயன்’ எனப்பிரதமர் அதிகாரப்பூர்வமாக பெயர்சூட்டுவார்.

9. அண்மையில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்ற அர்ஜுன் பாபுதா, மெஹுலி கோஷ் மற்றும் துஷார் மானே ஆகியோர் சார்ந்த விளையாட்டு எது?

அ. பளு தூக்குதல்

ஆ. துப்பாக்கி சுடுதல் 

இ. குத்துச்சண்டை

ஈ. வாள்சண்டை

 • டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற அமெரிக்காவின் லூகாஸ் கோசெனிஸ்கியை வீழ்த்தி இந்தியாவின் அர்ஜுன் பாபுதா தனது முதல் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) உலகக்கோப்பை அரங்கில் தங்கம் வென்றார். கொரியாவின் சாங்வான் நகரில் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பை 10 மீ ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் மெஹுலி கோஷ் மற்றும் துஷார் மானே ஆகியோர் தங்கம் வென்றனர்.

10. எம்மி விருதுகளில் சிறந்த நாடகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆங்கிலம் மொழி சாராத தொடர் எது?

அ. ஸ்குவிட் கேம் 

ஆ. ஃபோர்ப்ரைடெல்சென்

இ. ஸ்பைரல்

ஈ. எல்’இம்போஸ்ஷர்

 • 74ஆவது பிரைம் டைம் எம்மி விருதுகளுக்கான பரிந்துரைகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. கலை மற்றும் பொழுதுபோக்கிற்கான அமெரிக்க விருது இது. இதில் ‘சக்ஷஷன்’ அதிக பரிந்துரைகளைப் (25) பெற்றது. தென் கொரிய நாடகமான ஸ்குவிட் கேம் 14 பரிந்துரைகளைப் பெற்றது மற்றும் எம்மி விருதுகளில் சிறந்த நாடகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆங்கிலம் மொழி சாராத தொடராகவும் அது ஆனது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. `28,732 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

இலகுரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (டிரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை `28,732 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதலளித்தது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத்துறை கொள்முதல் கவுன்சில் (டிஏசி) இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு நிலவிவரும் சூழலில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2. 240 கலைச் சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல்

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்க் கலைக்கழகத்தின் 114-ஆவது கூட்டத்தில் 240 கலைச் சொற்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Actinotherapy – கதிரிய மருத்துவம்; Airbyte – தரவல் தொகுப்பி; Awesome sauce – நறுஞ்சுவைச் சாறு; Blogpost – வலைப்பூப்பதிவு; Depth sensor – ஆழம் உணரி; Hospitality staff – விருந்தோம்பல் ஊழியர்; Jumpsuit – காப்புடை ஆகியவை உள்பட 240 தமிழ்க்கலைச்சொற்களுக்கு வல்லுநர் குழு ஏற்பளித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. சிங்கப்பூரில் 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும்

உலகத்தமிழாராய்ச்சி மன்றம் சார்பில் 11-ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு மே மாதம் 26, 27, 28 ஆகிய நாள்களில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான அறிமுகக் கூட்டம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் 10-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது.

4. பள்ளிக்கரணை, பிச்சாவரம் சதுப்புநிலங்கள் ‘ராம்சர்’ பட்டியலில் இணைப்பு

தமிழ்நாட்டின் பள்ளிக்கரணை, பிச்சாவரம், கரிக்கிளி உள்ளிட்ட ஐந்து சதுப்புநிலங்கள் சர்வதேச பாதுகாப்புக்கான ‘ராம்சர்’ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சதுப்புநிலங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அச்சதுப்புநிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஈரானில் உள்ள ராம்சர் நகரில் 1971-ஆம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின்கீழ் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களைக் கூடுதல் கவனஞ்செலுத்தி பாதுகாக்க உறுதியேற்கப்பட்டது. முக்கியமாக, சதுப்புநிலங்களின் அழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடுகள் உறுதியேற்றன.

ராம்சர் பட்டியலில் இந்தியாவில் உள்ள 49 சதுப்புநிலங்கள் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் சதுப்புநிலம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம் ஆகியவையும் மிஸோரத்தின் பாலா சதுப்புநிலம், மத்திய பிரதேசத்தின் சாக்யநகர் சதுப்புநிலம் ஆகியவையும் ராம்சர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்தியாவில் உள்ள ராம்சர் சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது.

ராம்சர் ஒப்பந்தம் கையொப்பமான பிப்ரவரி 2-ஆம் தேதியானது ‘சர்வதேச சதுப்புநில தினமாக’ கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1. Which state has signed MoU with Telangana to set up all women–run cooperative bank?

A. Andhra Pradesh

B. Rajasthan 

C. Karnataka

D. Punjab

 • Rajasthan signed a memorandum of understanding (MoU) with the Telangana government’s Stree Nidhi Credit Cooperative Federation. The aim is to set up the first all women–run cooperative bank in Rajasthan, on the lines of the Stree Nidhi model of Telangana. ‘Rajasthan Mahila Nidhi’ fund would be operated by the women Self Help Groups for the women of SHG only.

2. Which animal features in the 36th National Games 2022, to be held in Gujarat?

A. Rhino

B. Lion 

C. Tiger

D. Elephant

 • Gujarat has been approved to host the 36th National Games between September 27 and October 10, in 2022. The last edition of the National Games was organised in Kerala in 2015. Gir Lion and Statue of Unity with Sardar Vallabhbhai Patel are seen in the logo of the Games. IOA (Indian Olympic Association) accepted the proposal of Gujarat for hosting the event after 7 years.

3. Which is the headquarters of the ‘United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)’?

A. Geneva

B. Paris

C. Amman and Gaza 

D. Jerusalem

 • ‘United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)’ is headquartered at Amman, Jordan and Gaza, Palestinian Authority. It was founded in 1949. India recently contributed USD 2.5 million to this UN agency that supports the relief and human development of Palestinian refugees. Since 2018, the Government of India has contributed 20 million US dollars to UNRWA.

4. Which Indian economist has been appointed the chief economist of World Bank?

A. Raghuram Rajan

B. Urjit Patel

C. Indermit Gill 

D. Viral Acharya

 • The World Bank has appointed Indermit Gill as the chief economist and senior vice president for development economics. Indermit Gill will be the second Indian, after Kaushik Basu, to become the chief economist of the World Bank. It is an international financial institution that grants loan to middle and lower–income countries.

5. Pallikaranai Marsh Reserve Forest and Pichavaram Mangrove, which were designated as ‘Ramsar sites’ are located in which state?

A. Tamil Nadu 

B. Himachal Pradesh

C. Assam

D. Gujarat

 • India has designated five new wetlands of international importance, as the Ramsar sites in the country have been increased from 49 to 54. The new sites include three wetlands (Karikili Bird Sanctuary, Pallikaranai Marsh Reserve Forest and Pichavaram Mangrove) in Tamil Nadu, one (Pala wetland) in Mizoram and one wetland (Sakhya Sagar) in Madhya Pradesh.

6. Directorate General of Foreign Trade (DGFT) introduced PIMS recently. What is the expansion of PIMS?

A. Product Import Monitoring System

B. Paper Import Monitoring System 

C. Prior Information Monitoring System

D. Prohibited Goods Import Monitoring System

 • The Directorate General of Foreign Trade (DGFT), has introduced Paper Import Monitoring System (PIMS). DGFT has amended the import policy of major paper products from ‘Free’ to ‘Free subject to compulsory registration under PIMS’. The system shall come into effect from 1st October, 2022. As per PIMS, an importer will be required to obtain an automatic registration number through online system.

7. Who heads the ‘Board of Trade’, the advisory body on foreign trade policy?

A. Prime Minister

B. External Affairs Minister

C. Commerce and Industry Minister 

D. Finance Minister

 • Board of Trade, the advisory body on foreign trade policy, is headed by the Commerce and Industry Minister. It includes participants from states, Union Territories, and senior officials from public and private sectors. The Government has nominated 29 non–official members from different sectors, including large and small enterprises, to the Board of Trade.

8. Prime Minister Narendra Modi unveiled the centenary memorial pillar of which state assembly recently (July 2022)?

A. Uttar Pradesh

B. Bihar 

C. Gujarat

D. Maharashtra

 • Prime Minister Narendra Modi unveiled the centenary memorial pillar of Bihar Assembly recently, to mark the conclusion of the one–year centennial celebration of the state legislature building. The foundation stone for the centenary pillar was laid by President Ram Nath Kovind on October 21 last year. The PM will also officially christen the garden located near the pillar as ‘Shatabdi Smriti Udyan’.

9. Arjun Babuta, Mehuli Ghosh and Tushar Mane, who recently won gold medals for India, play which sports?

A. Weight Lifting

B. Shooting 

C. Boxing

D. Fencing

 • India’s Arjun Babuta won his first International Shooting Sport Federation (ISSF) World Cup stage gold, by beating Tokyo Olympics silver medallist Lucas Kozeniesky of the USA. The championship is being held in Changwon, Korea. Mehuli Ghosh and Tushar Mane have won the 10m Air Rifle Mixed team gold at the World Cup.

10. Which is the first non–English language series to be nominated for the best drama at the Emmy Awards?

A. Squid Game 

B. Forbrydelsen

C. Spiral

D. L’Imposteur

 • The nominations for the 74th Primetime Emmy Awards were announced recently. It is a major American award for performing arts and entertainment. ‘Succession’ got the highest nominations at 25. The South Korean survival drama Squid Game bagged 14 nominations and also became the first non–English language series to be nominated for the best drama at the Emmy Awards.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!