TnpscTnpsc Current Affairs

27th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

27th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஐநா பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.18

ஆ. ஜூன்.21

இ. ஜூன்.23 

ஈ. ஜூன்.25

  • உலகெங்கிலும் உள்ள அனைத்து துறைகளின் வளர்ச்சியை உறுதிசெய்வதில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக ஐநா பொதுச்சேவை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.23 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Building back better from COVID-19: Enhancing innovative partnerships to meet the Sustainable Development Goals” என்பது 2022-இல் அனுசரிக்கப்பட்ட இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

2. ஐநா அவையின் பொதுச்சேவை விருதுகளால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட, ‘மோ பேருந்து சேவை’யை தொடங்கிய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தெலுங்கானா

ஆ. புது தில்லி

இ. மேற்கு வங்கம்

ஈ. ஒடிஸா 

  • ஒடிஸாவின் தலைநகர மண்டல நகர்ப்புற போக்குவரத்து (CRUT) ஆணையம், பெண் பயணிகளுக்கான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ‘மோ பேருந்து சேவை’யை கடந்த 2018 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான ஐநா-இன் பொதுச்சேவை விருதுகளால் இந்தச் சேவை அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

3. இந்தியா அண்மையில் எந்த நாட்டுடன் இணைந்து ‘காமன்வெல்த் டிப்ளமேடிக் அகாடமி’ திட்டத்தை அறிவித்தது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இங்கிலாந்து 

இ. இத்தாலி

ஈ. பிரான்ஸ்

  • இங்கிலாந்து (UK) மற்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்களால் இந்தியா-இங்கிலாந்து இணைந்த கூட்டுத் திட்டமான, ‘காமன்வெல்த் டிப்ளமேடிக் அகாடமி’ திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அனைத்து காமன்வெல்த் உறுப்புநாடுகளின் தூதரக அதிகாரிகளை உலக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் வளர்ந்துவரும் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திறன்களில் நிபுணத்துவம் வாய்ந்தவராக மாற்றுவதற்கு இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அகாடமி நிகழ்வு புதுதில்லியில் நடத்தப்படும்.
  • ஜூன்.24 முதல் ஜூன்.25 வரை கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் நடைபெற்ற 26ஆவது காமன்வெல்த் அரச தலைவர்கள் மாநாட்டின்போது (CHOGM) இது அறிவிக்கப்பட்டது.

4. நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985 ஆனது எந்த மத்திய அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு (ஜூன் 2022 நிலவரப்படி) உட்பட்டதாக உள்ளது?

அ. நிதி அமைச்சகம்

 ஆ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. சட்டம் & நீதி அமைச்சகம்

  • நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள வருவாய்த்துறை, 1985ஆம் ஆண்டின் நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டத்தை நிர்வகிக்கிறது. இந்தச் சட்டத்தின் நிர்வாகத்தை நிதியமைச்சகத்திடம் இருந்து நடுவண் உள்துறை அமைச்சகத்திற்கு மாற்ற நடுவணரசு திட்டமிட்டு, போதைப்பொருள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டுவர எண்ணுகிறது.

5. ‘MEDISEP’ என்ற விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்கவுள்ள மாநிலம் எது?

அ. கேரளா 

ஆ. பீகார்

இ. குஜராத்

ஈ. மத்திய பிரதேசம்

  • கேரள மாநில அரசு MEDISEP திட்டத்தை 2022 ஜூலை.1 முதல் தொடங்கவுள்ளது. இது மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஆண்டுக்கு `3 இலட்சம் வரையிலான விரிவான காப்பீட்டுடன் இலவச மருத்துவ உதவியை வழங்கும்.

6. ‘உலக முதலீட்டு அறிக்கை’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தின் முதன்மை அறிக்கையாகும்?

அ. IMF

ஆ. உலக வங்கி

இ. UNCTAD 

ஈ. WTO

  • அதன் சமீபத்திய உலக முதலீட்டு அறிக்கையில், வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐநா அமைப்பு (UNCTAD) இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு முந்தைய ஆண்டில் இருந்த $64 பில்லியன் டாலரிலிருந்து 2021-இல் $45 பில்லியன் டாலராக குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. 2021 ஆங்கில ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அதிகமாகப் பெறும் நாடுகளுள் இந்தியாவின் தரவரிசை ஓரிடம் முன்னேறி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா ($367 பில்லியன்) அந்நிய நேரடி முதலீட்டில் முதலிடத்தில் உள்ளது.

7. 2022-இல் ஐநா குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க்கால் குளோபல் SDG முன்னோடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?

அ. இராமகிருஷ்ணா முக்கவில்லி 

ஆ. P V சிந்து

இ. யாஷ் துல்

ஈ. சுமந்த் சின்ஹா

  • ஐதராபாத்தைச் சார்ந்த துளிர் நிறுவனமான மைத்ரி அக்வாடெக்கின் தலைவரான ராமகிருஷ்ணா முக்கவில்லி, ஐநா குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க்கால் (UNGC) குளோபல் SDG முன்னோடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டிற்கான 10 புதிய SDG முன்னோடிகளில் ஒருவராக UNGCஆல் அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்தியர் இவர். முன்னதாக ஐக்கிய நாடுகள் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவால் இந்தியாவின் SDG முன்னோடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வளிமண்டல நீர் உற்பத்தியைப் பயன்படுத்தி, அவரது நிறுவனம் வளியிலிருந்து 100 மில்லியன் லிட்டர் தூய நீரை உருவாக்கியுள்ளது.

8. இங்கிலாந்தால், ‘Companion of Honour’ என்று அறிவிக்கப்பட்ட இந்திய எழுத்தாளர் யார்?

அ. இரஸ்கின் பாண்ட்

. சல்மான் ருஷ்டி 

இ. அருந்ததி ராய்

ஈ. விக்ரம் சேத்

  • இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, இலக்கியத்திற்கான சேவைகளுக்காக இங்கிலாந்து, ‘மரியாதைக்குரிய தோழராக’ அறிவிக்கப்பட்டார். இராணியின் பவள விழாவைக் குறிக்கும் நான்கு நாட்கள் கொண்டாட்டத்தின்போது ‘மிட்நைட்ஸ் சில்ட்ரனின்’ ஆசிரியரான சல்மான் ருஷ்டி கௌரவிக்கப்பட்டார். அவர் இதற்கு முன்பு கடந்த 2007-இல் ‘நைட்ஹூட்’ பட்டம் பெற்றார். ‘கம்பேனியன் ஆப் ஹானர்’ என்பது இலக்கியத்திற்கான சேவைகளுக்காக எந்த நேரத்திலும் 65 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் ஒரு பிரத்யேக குழுமம் ஆகும்.

9. பன்னாட்டு செலவாணி நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ. உர்ஜித் படேல்

ஆ. நிர்மலா சீதாராமன்

இ. கிருஷ்ணா சீனிவாசன் 

ஈ. வைரல் ஆச்சார்யா

  • பன்னாட்டு செலவாணி நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குநராக இந்தியாவைச் சார்ந்த கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். IMFஇல் 27 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த அவர், சிறிய பசிபிக் மாகாணங்களான பிஜி மற்றும் வனுவாட்டு மற்றும் சீனா மற்றும் கொரியாபோன்ற அமைப்பு ரீதியாக முக்கியமான நாடுகளின் மீதான துறையின் கண்காணிப்புப் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

10. ‘தயா பே அணுவுலை நியூட்ரினோ பரிசோதனையகம்’ செயல்படுகிற நாடு எது?

அ. சீனா 

ஆ. உருசியா

இ. இஸ்ரேல்

ஈ. ஆஸ்திரேலியா

  • தயா விரிகுடா அணுவுலை நியூட்ரினோ பரிசோதனையகமானது சீனாவின் குவாங்டாங்கில் செயல்பட்டு வருகிறது. இது ஹாங்காங்கிலிருந்து வடகிழக்கே சுமார் 52 கிமீ தொலைவில் தயா விரிகுடாவில் அமைந்துள்ளது. பன்னாட்டு ஒத்துழைப்பின்கீழ் சீனா, சிலி, அமெரிக்கா, தைவான், உருசியா மற்றும் செக் குடியரசு ஆராய்ச்சியாளர்கள் இங்கு பணியில் உள்ளனர். இதன் உணர்கருவிகள் அருகிலுள்ள அணுமின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் செய்யும் ஆன்டிநியூட்ரினோக்களால் உருவாக்கப்பட்ட ஒளி சமிக்ஞைகளை பெற்றுக்கொள்கின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சுகாதாரக் கட்டமைப்பு: தமிழநாட்டுக்கு `404 கோடி: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

தமிழ்நாட்டின் சுகாதார உட்கட்டமைப்புத் திட்டத்துக்காக மத்திய அரசு `404 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ள 11 கோடியே 26 லட்சம் கரோனா தடுப்பூசிகளில் 94 சதவீதம் முதல் தவணை, 82 சதவீதம் இரண்டாவது தவணை.

காசநோய் பாதிப்பு: 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், பொதுநோக்கம் உள்ள எந்த ஒரு நபரும், அரசு சாராத அல்லது அரசு சார்ந்த, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களைச் சேர்ந்த தனிநபர்கள் காசநோயாளிகளைத் தத்தெடுக்கலாம்.

தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை. யானைக்கால் நோயை தமிழ்நாடு முற்றிலும் ஒழித்துள்ளது.

தேசிய டயாலிசிஸ் திட்டம்: 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து மலேரியாவை முற்றிலும் ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின்கீழ், ‘ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டத்தை பிரதமர் விரைவில் தொடக்கிவைப்பார். அதன்மூலம், டயாலிசிஸ் தேவை ஏற்படும் நோயாளி, நாட்டின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் அந்த வசதியைப்பெற முடியும்.

ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் திட்டத்தின் கீழ் 2022, டிசம்பருக்குள் 9,135 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 7,052 மையங்கள் (ஜூன் 2022 வரை) அந்தத் திட்டத்தின்கீழ் செயல்படுகின்றன. இந்த மையங்களில் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பொதுவான புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு இதுவரை (மார்ச் 2022 வரை) 542.07 இலட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

2. முகக்கவசம் அணியாவிடில் அபராதம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

முகக்கவசம் அணியாதவர்கள், COVID நோய்த்தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காதோர்க்கு அபராதம் விதிக்கப்படும்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், COVID-19 வழிமுறைகளை முறையாக கடைப் பிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொதுச்சுகாதாரச்சட்டம், 1939-இன்படி இனி அபராதம் விதிக்கப்படும்.

1. When is the ‘United Nations Public Service Day’ observed?

A. June.18

B. June.21

C. June.23 

D. June.25

  • Observed on June 23, UN Public Service Day aims to recognize the importance of public institutions and public servants in ensuring the development of all sectors across the globe. The 2022 theme is “Building back better from COVID–19: Enhancing innovative partnerships to meet the Sustainable Development Goals”.

2. Which state/UT launched ‘Mo Bus service’, which was recently recognized by the UN’s Public Service Awards?

A. Telangana

B. New Delhi

C. West Bengal

D. Odisha 

  • Odisha’s Capital Region Urban Transport (CRUT) authority introduced the ‘Mo Bus Service’ in November 2018 to promote smart technologies and safe transportation for women riders. It was recently recognised by the UN’s Public Service Awards for 2022.

3. India recently announced ‘Commonwealth Diplomatic Academy programme’ with which country?

A. Australia

B. UK 

C. Italy

D. France

  • A joint India–UK ‘Commonwealth Diplomatic Academy’ programme was recently announced by the foreign ministers of the UK and India. It aims to equip diplomats from all Commonwealth member states with expertise and skills required for addressing emerging challenges that have global–level impact. This academy programme will be hosted in New Delhi. This was announced during the 26th Commonwealth Heads of Government Meeting (CHOGM), which was held in Rwanda, East Africa from June 24 to 25.

4. Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 comes under the jurisdiction of which union ministry (as of June 2022)?

A. Ministry of Finance 

B. Ministry of Commerce and Industry

C. Ministry of Home Affairs

D. Ministry of Law and Justice

  • The Revenue Department under the Finance Ministry governs the Narcotic Drugs and Psychotropic Substance (NDPS) Act of 1985. The Central Government is planning the transfer of the administration of this Act from finance ministry to Home Ministry to bring all issues related to narcotics under one department.

5. Which state is set to roll out the comprehensive health insurance scheme, ‘MEDISEP’?

A. Kerala 

B. Bihar

C. Gujarat

D. Madhya Pradesh

  • Kerala government is set to launch MEDISEP scheme from July 1, 2022. It is a medical insurance scheme for state government employees, pensioners and their eligible family members. It will provide cashless medical assistance with a comprehensive coverage of up to Rs.3 lakhs per year.

6. ‘World Investment Report’ is the flagship report of which institution?

A. IMF

B. World Bank

C. UNCTAD 

D. WTO

  • In its latest World Investment Report, United Nations Conference on Trade and Development (UNCTAD) said FDI inflows to India declined to USD 45 billion in 2021 from USD 64 billion in the previous year. India’s rank jumped one place to 7th position among top recipients of foreign direct investment (FDI) in the 2021 calendar year even though the FDI inflows into the country is declining. The United States (USD 367 billion) remained the top recipient of FDI.

7. Which Indian has been selected as Global SDG Pioneer by the UN Global Compact Network in 2022?

A. Ramkrishna Mukkavilli

 B. P V Sindhu

C. Yash Dhul

D. Sumant Sinha

  • Ramkrishna Mukkavilli, the head of Hyderabad–based startup Maithri Aquatech, has been selected as Global SDG Pioneer by the UN Global Compact Network (UNGC). He is the first Indian to be recognised by the UNGC as one of the 10 new SDG Pioneers for 2022. He was previously selected as India’s SDG Pioneer by the UN Global Compact Network India. Using ‘atmospheric water generation’, his company generated 100 million litres of fresh water from air.

8. Which Indian author was named as ‘Companion of Honour’ by the United Kingdom?

A. Ruskin Bond

B. Salman Rushdie 

C. Arundhati Roy

D. Vikram Seth

  • Indian Author Salman Rushdie was appointed a Companion of Honour by the United Kingdom for services to literature. The 74–year–old author of ‘Midnight’s Children’ was named on the occasion of the four days of celebrations to mark the Queen’s platinum jubilee. He had earlier received a knighthood in 2007. Companion of Honour is an exclusive club with membership limited to just 65 people at any given time, for services to literature.

9. Which Indian has been appointed as the head of International Monetary Fund’s Asia and Pacific Department?

A. Urjit Patel

B. Nirmala Sitharaman

C. Krishna Srinivasan

D. Viral Acharya

  • India’s Krishna Srinivasan has been appointed as the director of the Asia and Pacific Department of the International Monetary Fund. With over 27 years of working at IMF, he oversees the department’s surveillance work on smaller Pacific states such as Fiji and Vanuatu, and systemically important nations such as China and Korea.

10. The ‘Daya Bay Reactor Neutrino Experiment’ is functional in which country?

A. China 

B. Russia

C. Israel

D. Australia

  • The Daya Bay Reactor Neutrino Experiment is functional in Guangdong, China. It is situated at Daya Bay, approximately 52 kilometers northeast of Hong Kong. The multinational collaboration includes researchers from China, Chile, the United States, Taiwan, Russia, and the Czech Republic. The detectors pick up light signals generated by antineutrinos streaming from nearby nuclear power plants.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!