TnpscTnpsc Current Affairs

27th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

27th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் மிகப்பெரிய லித்தியம் அயன் மின்கல ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத் 

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

  • இந்தியாவின் மிகப்பெரிய லித்தியம் அயன் மின்கல ஆலை குஜராத் மாநிலத்தில் உள்ளது. நெக்ஸ்சார்ஜ், இந்திய பேட்டரி தயாரிப்பாளரான எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சுவிச்சர்லாந்தின் லெக்லாஞ்ச் எஸ்ஏ ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் ஆலையில் பெருமளவு உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பயன்பாடுகளுக்கான மின்கலங்களை உற்பத்தி செய்ய மொத்தம் 1.5 GW மணிநேரம் என்ற நிறுவப்பட்ட திறன்கொண்டதாகும் இது. நெக்ஸ்சார்ஜ் நிறுவனம் இதுவரை 2.5 பில்லியன் ரூபாயை ஆலையைக் கட்டுவதற்கும் அமைப்பதற்கும் முதலீடு செய்துள்ளது.

2. வடகிழக்குத் திறனுருவாக்கம் (NECB) 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம்/நிறுவனம் எது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்

இ. NASSCOM

ஈ. NITI ஆயோக்

  • மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ஐந்து தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் (NEILIT) தொடங்கியுள்ளது. வடகிழக்குத் திறன் உருவாக்கம் (NECB) 2.0 திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் திறன் தொகுப்புகள் மற்றும் தொழிற்துறைக்குரிய தொழில் நுட்பங்கள்பற்றிய பயிற்சிக்காக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி திமாபூரில் உள்ள தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NEILIT) நடைபெற்றது.

3. 2022 – ‘வடகிழக்கு உணவுக்கண்காட்சி’யை நடத்தும் நகரம் எது?

அ. கௌகாத்தி

ஆ. ஷில்லாங் 

இ. திஸ்பூர்

ஈ. கோகிமா

  • ஷில்லாங்கில் வடகிழக்கு உணவுக் கண்காட்சியை மேகாலய மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா மற்றும் சிக்கிம் மாநில முதளமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவ்வுணவுக்கண்காட்சியானது, வடகிழக்கு பகுதிகளைச்சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு சர்வதேச சந்தைகளுக்கான ஒரு தளத்தை வழங்குகிறது. மேகாலயா, SIAL உணவு கண்டுபிடிப்பு நெட்வொர்க்குடன் இணைந்து, 2019-இல் இதன் முதல் நிகழ்வை ஏற்பாடு செய்தது. தற்போது இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பு நடைபெறுகிறது.

4. 2022-இல் நடைபெறவுள்ள 19ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ள இடம் எது?

அ. டோக்கியோ, ஜப்பான்

ஆ. ஹாங்சோ, சீனா 

இ. கொழும்பு, இலங்கை

ஈ. புது தில்லி, இந்தியா

  • சீனாவின் ஹாங்சோவில் 2022 செப்.10 முதல் 25 வரை நடைபெறவிருந்த 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி, சீனாவில் COVID-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிய ஒலிம்பிக் கழகம் இந்த விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைத்துள்ளது. ஒலிம்பிக்கிற்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘மால்பே மிதக்கும் பாலம்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா 

இ. மேகாலயா

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

  • கர்நாடகாவின் முதல் மிதக்கும் பாலம் உடுப்பியில் உள்ள மால்பே கடற்கரையில் சமீபத்தில் திறக்கப்பட்டது. ஒரு பார்வையாளர் பாலத்தின்மீது நடக்கும்போது கடலலையின் அசைவை அவர் உணரும் வண்ணம் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் 100 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்டது மற்றும் சுமார் 100 பார்வையாளர்கள் வரை இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் நடக்க முடியும். பாலம் நிரந்தரமாக இணைக்கப்படாததால், இதனை எளிதாக வேறு இடத்திற்கு மாற்றவும் முடியும்.

6. 2022 – தேசிய கயிறு வாரிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?

அ. கொச்சி

ஆ. கோயம்புத்தூர் 

இ. திருநெல்வேலி

ஈ. தென்காசி

  • தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில், ‘அமுதப்பெருவிழாவி’ன்கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசிய கயிறு வாரிய மாநாட்டை’ மத்திய MSME அமைச்சர் நாராயண் ரானே தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது, 44 தென்னை நார் மற்றும் தென்னைநார் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அலகுகளுக்கு தென்னைநார் தொழிற்சாலைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் புவிசார் கயிறு ஜவுளி பொருட்கள், நார் மரம், நார் மெத்தை, தரை விரிப்புகள் குறித்த நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

7. அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு என்ன?

அ. 35 ஆண்டுகள்

ஆ. 40 ஆண்டுகள் 

இ. 45 ஆண்டுகள்

ஈ. 50 ஆண்டுகள்

  • பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா (PMJJBY), பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMSBY), மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) ஆகியவை சமூகப்பாதுகாப்பு வலையை வழங்குவதில் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடல் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமான நபர்கள் குழுசேர்ந்துள்ளனர். ஓய்வூதியத் திட்டத்தில் சேர, ஒருவர் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். மாதாந்திர தொகையைப் பொறுத்து மாதம் 1000 முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.

8. 8000 மீட்டருக்கும் அதிக உயரமுடைய ஐந்து சிகரங்களை ஏறிய முதல் இந்தியப் பெண்மணி யார்?

அ. பிரியங்கா மோகிதே 

ஆ. அருணிமா சின்ஹா

இ. ஷிவாங்கி பதக்

ஈ. தாஷி யாங்ஜோம்

  • பிரியங்கா மோகிதே (30) என்பவர் 8000 மீட்டருக்கும் அதிக உயரமுடைய 5 சிகரங்களை ஏறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடல்மட்டத்திலிருந்து 8586 மீ உயரத்தில் உள்ளதும் பூமியின் 3ஆவது உயரமான மலையுமான கஞ்சஞ்சங்கா மலையில் ஏறியதுடன் அவர் இச்சாதனையைப் படைத்துள்ளார். 2013ஆம் ஆண்டில், மோகிதே உலகின் மிகவுயரமான சிகரமான எவரெஸ்ட் (8849 மீ) சிகரத்தை ஏறினார். மோகிதே, 2020ஆம் ஆண்டுக்கான ‘டென்சிங் நோர்கே அட்வெஞ்சர்’ விருதையும் பெற்றுள்ளார்.

9. உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் ரோட்ரிகோ சாவ்ஸ், எந்த நாட்டின் அதிபராக பதவியேற்றார்?

அ. ஸ்பெயின்

ஆ. கோஸ்ட்டா ரிக்கா 

இ. பிரேசில்

ஈ. பிரான்ஸ்

  • கோஸ்டா ரிகாவின் புதிய அதிபராக ரோட்ரிகோ சாவ்ஸ் சமீபத்தில் பதவியேற்றார். உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணரான இவர் கடந்த மாதம் முன்னாள் அதிபர் ஜோஸ் மரியா பிகியூரஸை எதிர்த்து வென்றார். சுமார் ஐந்து மில்லியன் மக்கள்தொகைகொண்ட கோஸ்டாரிகா, மத்திய அமெரிக்காவில் அரசியல் ரீதியாக மிகவும் நிலையான நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

10. ‘ரோமைன் ரோலண்ட்’ நூல் பரிசானது கீழ்காணும் எம்மொழி நூலை இந்திய மொழி/ஆங்கிலத்தில் சிறப்புற மொழிபெயர்ப்பதற்காக வழங்கப்படுகிறது?

அ. செருமானிய மொழி

ஆ. பிரெஞ்சு மொழி 

இ. சுபானிய மொழி

ஈ. ஜப்பானிய மொழி

  • ‘ரோமைன் ரோலண்ட்’ நூல் பரிசென்பது ஒரு பிரெஞ்சு நூலை இந்திய மொழி அல்லது ஆங்கிலத்தில் சிறப்புற மொழிபெயர்த்தோர்க்கு வழங்கப்படுகிற பரிசாகும். பிரெஞ்சு நாவலான “Meursault, contre-enquête” (The Meursault Investigation)-இன் பெங்காலி மொழிபெயர்ப்பு ஐந்தாவது ‘ரோமைன் ரோலண்ட்’ நூல் பரிசை வென்றுள்ளது. அல்ஜீரிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கமெல் தாவூதின் முதல் நாவல் இது. இவ்விருது மொழிபெயர்ப்பாளர் திரினஞ்சன் சக்ரவர்த்தி மற்றும் பதிப்பாளர் பத்ர பாரதி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. சர்வதேச தடகளம்: முரளிக்கு தங்கம்

கிரீஸில் நடைபெற்ற 12-ஆவது சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

காலிதியா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முரளி, 8.31 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். சுவீடன் வீரர் தோபியாஸ் மான்ட்லர் (8.27 மீ) வெள்ளியும், பிரான்ஸின் ஜூல்ஸ் போமெரி (8.17 மீட்டர்) வெண்கலமும் பெற்றனர். நீளந்தாண்டுதலில் தற்போதைய தேசிய சாதனை முரளி ஸ்ரீசங்கரிடமே உள்ளது. கடந்த மாதம் பெடரேஷன் கோப்பை போட்டியின்போது 8.36 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்தார் முரளி.

2. 2020-இல் சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்

நாடு முழுவதும் கடந்த 2020-இல் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,20,806 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் 3,48,279 பேர். இதில் அதிகப்படியாக சாலை விபத்துகளில் (45,484) தமிழ்நாடும், அதிகப் படியான உயிரிழப்பில் (19,149) உத்தர பிரதேச மாநிலமும் முதலிடத்தில் வகிக்கின்றன என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிகப்படியான விபத்துகள் நிகழும் மாநிலமாக நீடித்து வருகிறது.

‘இந்தியாவில் 2020-இல் பதிவான சாலை விபத்துகள்’ என்ற தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ் சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், நாட்டில் கடந்த 2020-இல் 1,20,806 அபாயகரமான விபத்துகள் நடைபெற்றதாகவும் இதில் 43,412 (35.9 சதவீதம்) தேசிய நெடுஞ்சாலையிலும், 30,171 (25 சதவீதம்) மாநில நெடுஞ்சாலைகளிலும், 47,223 (39.1 சதவீதம்) பிற சாலைகளிலும் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019-இல் பதிவான 1,37,689 விபத்துகளைக் காட்டிலும் 2020-இல் 12.23 சதவீதம் குறைவாகவே விபத்து வீதம் பதிவாகியுள்ளது. சாலை விதிகளைப் பின்பற்றாததால், 85,032 (64%) விபத்துகள் நிகழ்ந்தன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2020-ஆம் ஆண்டு சாலை விபத்தில் முதல் ஐந்து மாநிலங்கள்

மாநிலம் விபத்துகள் (சதவீதம்) உயிரிழப்பு

தமிழ்நாடு 45,484 (12.4%) 7,039

மத்திய பிரதேசம் 45,266(12.36%) 11,141

உத்தர பிரதேசம் 34,176 (9.3%) 19,149

கர்நாடகம் 34,176 (9.3) 9,760

கேரளம் 27,877 (7.6%) 2,979

பலியானவர்களின் வயது

18-45 69%

18-60 87.4%

விபத்துகள் நிகழ்ந்த இடம்

தேசிய நெடுஞ்சாலை 1,16,496 (31.8%)

மாநில நெடுஞ்சாலை 1,58,887 (43.4%)

பிற சாலைகள் 90,755 (24.8%)

ஊரக பகுதி விபத்துகள் – 68%

நகர்ப்புற விபத்துகள் – 32%

1. India’s largest lithium–ion battery plant is located in which state?

A. Tamil Nadu

B. Gujarat 

C. Maharashtra

D. Karnataka

  • India’s largest lithium–ion battery plant is located in the state of Gujarat. Nexcharge, the joint venture of Indian battery maker Exide Industries and Switzerland’s Leclanche SA have started mass production in the plant. It has a total installed capacity of 1.5 Gigawatt hours (GWh) to produce batteries for automobiles and energy storage applications. Nexcharge has so far invested 2.5 billion rupees in building and setting up the plant.

2. Which Ministry/institution launched North East Capacity Building (NECB) 2.0 Project?

A. Ministry of Electronics and IT 

B. Ministry of Skill Development and Entrepreneurship

C. NASSCOM

D. NITI Aayog

  • The Ministry of Electronics and IT launched five National Institute of Electronics and Information Technology (NEILIT).
  • North East Capacity Building (NECB) 2.0 Project was also launched for training in digital skill sets and industry–demanding technologies for people in the North–East states. The event was held at the National Institute of Electronics and Information Technology (NEILIT), Dimapur.

3. Which is the host of the ‘Northeast Food Show’ 2022?

A. Guwahati

B. Shillong 

C. Dispur

D. Kohima

  • Meghalaya Chief Minister Conrad K Sangma and Sikkim Chief Minister Prem Singh Tamang inaugurated the Northeast Food Show at Shillong. The Food Show provides a platform for the entrepreneurs and farmers of the State and the North–East access to international markets. Meghalaya, in collaboration with SIAL food innovation network, organized the first event in 2019 and this is the second edition of the mega food exhibition show.

4. Which is the venue of the 19th Asian Games scheduled to be held in 2022?

A. Tokyo, Japan

B. Hangzhou, China 

C. Colombo, Sri Lanka

D. New Delhi, India

  • The 19th Asian Games, which was originally scheduled to be held in Hangzhou, China from September 10 to 25, 2022, has been postponed amid a surge in COVID–19 cases in China. The Olympic Council of Asia has postponed the Games, which is also the second biggest sporting event after the Olympics in size.

5. ‘Malpe Floating Bridge’ which was seen in the news, is located in which state?

A. Kerala

B. Karnataka 

C. Meghalaya

D. Himachal Pradesh

  • Karnataka’s first floating bridge has been recently inaugurated on the Malpe Beach in Udupi. A visitor can feel the sea wave movement while walking on the bridge. The bridge is 100–metre–long and 3–metre–wide and around 100 visitors will be allowed to walk on the bridge. As the bridge is not permanently attached, it could be easily relocated to another place easily.

6. ‘Enterprise India National Coir Conclave 2022’ was organised at which city?

A. Kochi

B. Coimbatore 

C. Tirunelveli

D. Tenkasi

  • Union Minister for MSME Narayan Rane inaugurated the ‘Enterprise India National Coir Conclave 2022’ being organised under the “Azadi ka Amrit Mahotsav” at Coimbatore, Tamil Nadu. During the event, Coir industry awards were distributed to 44 coir & coir products manufacturing and exporting units. Coir Board also introduced new coir products like coir composite fruit bowl, geo–textile shadow lamp among others.

7. What is the maximum age to enrol in the Atal Pension Yojana (APY)?

A. 35 years

B. 40 years

C. 45 years

D. 50 years

  • Pradhan Mantri Suraksha Bima Yojana (PMJJBY), Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMSBY), and Atal Pension Yojana (APY) have completed seven years of providing social security net. More than 4 crore individuals have subscribed to Atal Pension Yojana so far. To enrol in the pension scheme, a person must be in the age group of 18 to 40. One can get a monthly pension of Rs 1000 to Rs 5000 depending on the monthly premium.

8. Who is the first Indian woman to climb five peaks above 8000 m?

A. Priyanka Mohite 

B. Arunima Sinha

C. Shivangi Pathak

D. Tashi Yangjom

  • A 30–year–old woman, named Priyanka Mohite is now known as the first Indian woman to climb five peaks above 8000 m. She has achieved this success after ascending Mount Kanchenjunga, which is 8586 m above sea level and also the third highest mountain on the planet. In 2013, Mohite scaled the highest peak in the world, the Mount Everest, which stands at 8849 m. Mohite has also received the Tenzing Norgay Adventure Award 2020.

9. Former World Bank economist Rodrigo Chaves sworn in as the President of which country?

A. Spain

B. Costa Rica 

C. Brazil

D. France

  • Costa Rica’s new President Rodrigo Chaves was sworn in recently. The former World Bank economist won a four–year term last month against former President Jose María Figueres. Costa Rica, with a population of around 5 million, is considered as one of the most politically stable countries in Central America.

10. ‘Romain Rolland’ Book Prize is awarded to the best translation of which language book into Indian language/ English?

A. German

B. French 

C. Spanish

D. Japanese

  • ‘Romain Rolland’ Book Prize is awarded to the best translation of a French book into Indian language or English. The Bengali translation of French novel “Meursault, contre–enquête” (The Meursault Investigation) has won the fifth Romain Rolland Book Prize. It was the debut novel of Algerian writer and journalist Kamel Daoud. The award was given to translator Trinanjan Chakraborty and publisher Patra Bharati.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!