Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

27th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. உலக தொலைக்காட்சி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 18

ஆ) நவம்பர் 21 

இ) நவம்பர் 23

ஈ) நவம்பர் 25

  • சமகால உலகில் தொலைக்காட்சியின் தாக்கத்தைக்குறிக்கும் வகையில் நவம்பர்.21ஆம் தேதி உலக தொலைக்காட்சி நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1996ஆம் ஆண்டு நவம்பர் 21-22 தேதிகளில் முதல் உலக தொலைக்காட்சி மன்றம் நடத்தப்பட்டதிலிருந்து நவ.21ஆம் தேதியை உலகத் தொலைக்காட்சி நாளாகக் கொண்டாட ஐநா பொதுச் சபை முடிவு செய்தது.

2. ABU – UNESCO அமைதி ஊடக விருதுகள் – 2021’ஐ வென்ற ‘DEAFinitely Leading the Way’ என்பது எவ்வூடகத்தின் திட்டமாகும்?

அ) தூர்தர்ஷன் 

ஆ) என்டிடிவி

இ) டைம்ஸ் நௌ

ஈ) ஜீ டிவி

  • ஆசிய பசிபிக் பிராட்காஸ்டிங் யூனியன் (ABU) – UNESCO Peace Media Awards 2021’இல், தூர்தர்ஷனின் ‘DEAFinitely Leading the Way’ ‘Living Well with Super Diversity’ பிரிவில் விருதை வென்றது. அகில இந்திய வானொலியின் ‘Living on the edge – The coastal lives’ என்ற நிகழ்ச்சியானது ‘Ethical & Sustainable Relationship with Nature’ பிரிவில் விருதைவென்றது. மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இதன் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘ஜிக்யாசா நிகழ்ச்சி’, எந்தத் துறையுடன் தொடர்புடையதாகும்?

அ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

ஆ) பொருளாதாரம்

இ) விளையாட்டு

ஈ) ஊட்டச்சத்து

  • ‘CSIR ஜிக்யாசா’ திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் மெய்நிகர் அறிவியல் ஆய்வகம் சமீபத்தில் மத்திய அறிவியல் & தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் தொடங்கப்பட்டது.
  • பள்ளி மாணவர்களுக்கான ஆய்வக ஆராய்ச்சியுடன் கூடிய வகுப்பறை கற்றலை செயல்படுத்தும் ‘CSIR ஜிக்யாசா’ திட்டத்தின்கீழ் மெய்நிகர் ஆய்வகத்தை உருவாக்க CSIR, ஐஐடி பாம்பேயுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மெய்நிகர் ஆய்வகத்திற்கான இலக்கு 6-12 வகுப்பு மாணவர்கள் ஆகும்.

4. தனிநபர் தரவுப்பாதுகாப்பு மசோதா-2019’க்கான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர் யார்?

அ) V முரளீதரன்

ஆ) N இரவி

இ) P P சௌத்ரி 

ஈ) S ஜெய்சங்கர்

  • தனிநபர் தரவுப்பாதுகாப்பு மசோதா–2019’க்கான நாடாளுமன்றக் கூட்டு குழுவானது, அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனத்தையும் சட்டத்தின் எல்லைக்கு வெளியே வைத்திருக்க அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய விலக்கு விதியை ஆதரித்துள்ளது. P P சௌத்ரி தலைமையிலான குழு, சிறிய மாற்றத்துடன் இந்தச் சரத்தை தக்கவைத்துள்ளது. அந்த அறிக்கை இப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

5. கனக தாசா என்பவர் எந்த மாநிலத்தைச் சார்ந்த பதினைந்தாம் நூற்றாண்டின் கவி, துறவி மற்றும் சமூக சீர்திருத்தவாதியாவார்?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) ஒடிஸா

  • 15ஆம் நூற்றாண்டின் கவிஞர், துறவி மற்றும் சமூக சீர்திருத்தவாதி கனகதாசருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘கனகதாச ஜெயந்தி’ கர்நாடகாவில் கொண்டாடப்படுகிறது.
  • புனித கனக தாசரின் பிறந்த இடமான காகினேலே, பொதுமக்களின் வருகைக்காக அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கனகதாசா மற்றும் புராணதாசா, விஜயதாசா & கோபாலதாசா உள்ளிட்ட பக்தி இயக்கத்தின் பிற தாசர்கள் பாடிய கீர்த்தனைகள் கன்னட இலக்கியத்தில் ‘தாச சாகித்தியம்’ மற்றும் ‘தேவரநாமங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

6. அமெரிக்கா & இங்கிலாந்துடனான அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் கூட்டணியில், முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) ஆஸ்திரேலியா 

இ) இத்தாலி

ஈ) இஸ்ரேல்

  • அமெரிக்கா & இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் புரிந்துள்ளது. இம்முத்தரப்பு ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் தொழில்நுட்பத்தை வழங்குகிறது. மூன்று நாடுகளும் AUKUS என்ற பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்குவதாக அறிவித்த பிறகு, தொழில்நுட்பத்தில் வெளிப்படையாக கையெழுத்திடப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

7. ‘கர்நாடகா ராஜ்யோத்சவா’ மற்றும் ‘கேரள பிறவி நாள்’ ஆகியன ஒவ்வோர் ஆண்டும் எந்த நாளில் கொண்டாடப்படுகின்றன?

அ) அக்டோபர் 3

ஆ) நவம்பர் 1 

இ) நவம்பர் 3

ஈ) நவம்பர் 5

  • கேரளா, கர்நாடகா மத்திய பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நவ.1 அன்று மாநில நாளைக் கொண்டாடுகின்றன. கேரளாவில் இந்நாள் ‘கேரள பிறவி நாள்’ என்றும், கர்நாடக மாநிலத்தில் இந்த நாள் ‘கர்நாடக இராஜ்யோத்சவா’ என்றும் கொண்டாடப்படுகிறது.

8. COP26 மாநாட்டில் ‘சோலார் காம்பஸ்’ இதழைத் தொடங்கிய பன்னாட்டு அமைப்பு எது?

அ) பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி 

ஆ) பன்னாட்டு ஆற்றல் நிறுவனம்

இ) பன்னாட்டு அணுசக்தி நிறுவனம்

ஈ) பன்னாட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம்

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) மற்றும் நெதர்லாந்தைச் சார்ந்த வெளியீட்டு நிறுவனமான ‘எல்செவியர்’ COP26 காலநிலை மாநாட்டில் தூதர் ஸ்டீபன் குரூஸுடன் இணைந்து ‘சோலார் காம்பஸ்’ என்ற இதழைத்தொடங்கின. ISA என்பது இந்தியாவால் தொடங்கப்பட்ட பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்த அடிப்படையிலான ஒரு பன்னாட்டு அமைப்பாகும். பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் தலைமை இயக்குநர் அஜய் மாத்தூர், உலகெகுமுள்ள ஆசிரியர்களுக்கு ஆவணங்களுக்கான முதல் அதிகாரப்பூர்வ அழைப்பை வெளியிட்டார்.

9. சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காக மத்திய சட்டம் & நீதித் துறை அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திறன்பேசிச் செயலியின் பெயர் என்ன?

அ) Citizen’s Tele-Law 

ஆ) Bharat Tele-Law

இ) Atmanirbhar Nyayalay

ஈ) Nyay For All

  • மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ‘சிட்டிசன் டெலி-லா’ திறன்பேசிச் செயலியை வெளியிட்டார். இந்தச் செயலி அதன் பயனாளிகளை நேரடியாக சட்ட ஆலோசனை வழங்கும் வழக்கறிஞர்க -ளுடன் இணைக்கும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 75,000 கிராமப் பஞ்சாயத்துகளில் டெலி-லாவை விரிவுபடுத்தவுள்ளதாகவும் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

10. இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட இடம் எது?

அ) வாரணாசி

ஆ) காசியாபாத்

இ) புனே

ஈ) தஞ்சாவூர் 

  • மத்திய வணிகம், தொழிற்துறை, உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியக -த்தை தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் திறந்து வைத்தார். இந்திய உணவுக் கழகமும் விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சி -யகங்களும் இணைந்து `1.10 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த அருங்காட் -சியகத்தை உருவாக்கியுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வர்கீஸ் குரியன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா

‘இந்தியாவின் பால் மனிதர்’ என்றுபோற்றப்படும் Dr வர்கீஸ் குரியனின் பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக ஆவின் நிறுவனம் தனது பால் பாக்கெட்களில் அவரது படத்தை அச்சிட்டு, பெருமைப்படுத்தி உள்ளது.

வர்கீஸ் குரியன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1926ஆம் ஆண்டு நவ.26ஆம் தேதி பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, கிண்டி பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர், அரசு உதவித் தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் பொறியியலில் எம் எஸ் பட்டம் பெற்றார்.

இதையடுத்து, இந்தியா திரும்பிய குரியன், 1949ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் ஆனந்த் அரசு பால்பண்ணையில் பொறியாளராக பணியில் சேர்ந்தார். அந்தச் சமயத்தில், புதிதாக தொடங்கப்பட்ட கூட்டுறவு பால் பண்ணைகள், குஜராத் மாநில கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வந்தன. அப்போது, கைராபால் சங்கத்தலைவர் திரிபுவன்தாஸ் படேலுக்கு, பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவத் தேவையான உதவிகளை செய்ய முன்வந்தார் குரியன். இதுதான் இந்தியாவில் புகழ்பெற்ற அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது.

நவீன பால் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் குரியன். பன்னாட்டு நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட ஏழை பால் கூட்டுறவு சங்கத்தை, ஆசியாவிலேயே மிகப்பெரிய, வெற்றிக -ரமான நிறுவனமாக உயர்திய பெருமை வர்கீஸ் குரியனையே சாரும்.

அமுலின் வெற்றி திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் விதமாக, ‘Operation Flood’ என்ற பெயரிலான திட்டத்தை 3 கட்டங்களில் செயல்படுத்த மத்தியஅரசு முன்வந்தது. அதுவே புகழ்மிக்க வெண்மைப் புரட்சியானது. தமிழக அரசு நிறுவனமான ஆவினும் வெண்மைப் புரட்சியின் வழித் தோன்றல்தான். வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியன் பிறந்தநாளை ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி தேசிய பால் நாளாக மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை சிறப்பாக கொண்டாடி வருகிறது. அந்த வகையில், அவரது நூற்றாண்டு பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆவின் பால் நிறுவனம் தனது பால் பாக்கெட்களில் ‘சேவையே வாழ்க்கை’ என்ற வரிகளுடன் Dr வர்கீஸ் குரியனின் புகைப்படத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

வர்கீஸ் குரியனின் வெண்மைப்புரட்சி, நாட்டு மாடுகளின் அழிவுக்குக் காரணம் என்று ஒரு தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், இந்தியாவில் பால் உற்பத்தி குறைவாக இருந்ததால், பால் பவுடர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பால், பவுடர் ரேஷன் முறையில் வழங்கப்பட்ட முறையை மாற்றி, இன்று எங்கும், எப்போதும் பால் வாங்கும் நிலைக்கு நாம் முன்னேறியுள்ளதற்கு வர்கீஸ் குரியனின் புரட்சிதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

2. அரசின் கொள்கைகளால் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையமாக தமிழகம் மாறும்: ‘கனெக்ட் 2021’ கருத்தரங்கை தொடங்கிவைத்து முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை, தமிழக அரசின் எல்காட் நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) இணைந்து நடத்தும் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ‘கனெக்ட் 2021’ என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:

1996’க்கு முன்பு தமிழகத்தில் 34 மென்பொருள் நிறுவனங்கள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை திமுக அரசுதான் 666 ஆக மாற்றியது. ஒரு மாநிலத்துக்கு மிகப்பெரிய முன்னேற்றம், முதலீடுகளை கொண்டு வருவதில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னணி வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் முன்னணி மாநிலமாக, உலக அளவில் கவனம் ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டிலேயே மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

கணினி, மின்னணுவியல், ஆப்டிகல் தயாரிப்புகள் தயாரிப்பில் நாட்டில் 2ஆம் இடத்திலும், எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் 3ஆம் இடத்திலும் உள்ளோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, முதல் இடத்தை தக்கவைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

தரவு மையங்களை அமைப்பதில் தமிழகம் சிறந்து விளங்கும்நிலையில், அதில் முதலீடுகளை ஈர்க்க ஒரு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, தரவுகளை அடிப்படையாக கொண்ட கொள்கை வடிவமைத்தலில், மாநிலத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கில், சென்னை கணிதவியல் கழகத்துடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தொழிற்துறை, நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப மாநிலத்தின் உட்கட்டமைப்
-பை மேம்படுத்த, புறவழிச் சாலைகள், சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்கம், புதிய விமான நிலையம் போன்ற குறிப்பிடத்தக்க உட்கட்டமைப்பு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறைகளில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். தொழில்களுக்கு தேவையான முழு ஆதரவை தமிழக அரசு வழங்கும் என்று உறுதி அளிக்கிறேன். நவீன ஒற்றைச் சாளர முறை மூலம், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்த அரசு பல சீர்திருத்தங்களை செய்து வருகிறது.

எங்களது புதிய கொள்கைகள், முன்முயற்சிகள் தமிழகத்தை சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றும். மாநிலத்தின் பொருளாதாரம், தொழில் துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்து பிரச்சினைக
-ளுக்கும் தீர்வு காண்பதில் தொழில் துறையுடன் இணைந்து செயல்படு -வோம். தகவல் தொழில்நுட்பத் துறை நமது லட்சியமான 1 லட்சம் கோடி டாலர் இலக்கை அடைய உதவும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

3. ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் – 2 சுரங்கங்களுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து:

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டு சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு மத்திய அரசின் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.

இதுகுறித்து ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாடு முழுவதுமுள்ள 1,029 சுரங்கங்கள் ஆன்லைனில் சுயமதிப்பீட்டை தாக்கல் செய்தன. பின்னர் அவை இந்திய சுரங்க பணியகத்தால் 2019-20-ம் ஆண்டுக்கான 5 நட்சத்திர விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன. இதில் 40 சுரங்கங்கள் (பல்வேறு உலோகங்கள் மற்றும் கனிமங்கள்) 5 நட்சத்திர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலவெங்கடேஸ்வரபுரம், புதுப் பாளையம் & பெரியங்களூர் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு மத்திய அரசின் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.

4. 2070’க்குள் ஆலைக் கழிவு வெளியேற்றம் பூஜ்ய நிலையை அடைய அரசு இலக்கு:

சர்வதேச பருவநிலை கவுன்சில் கூட்டத்தில் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனையின் போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது:

நாடு முழுவதும் 2070ஆம் ஆண்டுக்குள் வளிமண்டலத்தை பாதிக்காத கழிவுகளை வெளியேற்றாத ஆலைகள் உள்ள நாடாக உருவாக வேண்டும். அந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். வளிமண்டல பாதிப்பு என்பது யூகத்தின் அடிப்படையிலானது அல்ல என்பதை தற்போது கால நிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நமக்கு உணர்த்தி வருகின்றன.

எதிர்பாரா வறட்சி, பெரு வெள்ளம், புயல், நீடித்திருக்கும் அனல் காற்று, மாறிவரும் பருவ சூழல் ஆகிய பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். பருவ நிலை மாறுபாட்டில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் தொழில் நிறுவனங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியத்தொழில்நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான தருணங்களில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது.

அதேபோல நமது புவியைக் காப்பதிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பருவமழை மாறுபாடு, காடுகளில் தீ, அதிக அளவிலான வெள்ளப்பெருக்கு, சூறாவளி உள்ளிட்ட பருவ நிலை மாறுபாடுகள் நம்மைச் சுற்றி நிகழ்வதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இவ்வாறு பூபேந்தர் யாதவ் கூறினார். – பிடிஐ

5. பிஹார், உ.பி., ஜார்க்கண்ட் ஏழை மாநிலமாக அறிவிப்பு: நிதி ஆயோக் ஆய்வில் தகவல்

நிதி ஆயோக் அமைப்பு இந்திய மாநிலங்களின் பொருளாதார நிலையை பன்முக ஏழ்மை குறியீட்டெண் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் வாழ்க்கை தரம் உள்ளிட்ட 12 காரணிகளைக் கணக்கில் கொண்டு நிதி ஆயோக் தயாரித் துள்ள மாநிலங்களின் ஏழ்மை குறியீட்டெண் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 3 ஏழை மாநிலங்களாக உள்ளன. பிஹார் மக்கள் தொகையில் 51.91 சதவீதத்தினரும், ஜார்க்கண்டில் 42.16 சதவீதத்தினரும், உபியில் 37.79 சதவீதத்தினரும் ஏழ்மையில் உள்ளனர். மபியில் 36.65, மேகாலயாவில் 32.67 சதவீதம் ஏழை மக்கள் உள்ளனர். பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் கேரளா (0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%), தமிழ்நாடு (4.89%), பஞ்சாப் (5.59%) மாநிலங்கள் உள்ளன.

NITI ஆயோக்கின் இந்த ஏழ்மை குறியீட்டெண் அறிக்கை சர்வதேச அளவில் அங்கீகரிக் கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஏழ்மை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐநா வளர்ச்சித் திட்டம் ஆகியன இணைந்து உருவாக்கிய ஆய்வுமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

6. ‘இன்டர்போல்’ நிர்வாக குழுவுக்கு சிபிஐ சிறப்பு இயக்குநர் தேர்வு

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வேதேச போலீஸ் அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்கா தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ சர்வதேச அளவில் தீவிரவாதம், போதை கடத்தல், இணையதள குற்றங்களுக்கு எதிராக செயல்படுகிறது. ‘இன்டர்போல்’ அமைப்பின் 89ஆவது பொதுச்சபை கூட்டம் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்து வருகிறது.

‘இன்டர்போல்’ அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு ஆசியாவில் இருந்து தேர்ந் தெடுக்கப்படும் 2 உறுப்பினர்கள் இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் இந்தியா, சிங்கப்பூர், சீனா, கொரியா, ஜோர்டான் நாடுகளிடையே போட்டி நிலவி யது. இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்கா நிர்வாக குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிரவீன் சின்காவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்தன. இதற்காக பல்வேறு நாடுகளின் தூதரகங்களை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டினர். உலக அளவில் ஒருங்கிணைந்த இந்தியாவின் தீவிர பிரச்சாரத்துக்கு வெற்றி கிடைத்துள்ளதாக வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சின்கா தற்போது சிபிஐ சிறப்பு இயக்குநராக பணியாற்றி வருகிறார். பிரவீன் சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் சர்வதேச அளவிலான குற்றங்களைத் தடுக்கும் ‘இன்டர்போல்’ அமைப்பின் முயற்சியில் இந்தியா மேலும் தீவிர பங்காற்றும் என்று வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

6. அவசர அவசிய‌ம்! | இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த தலையங்கம்

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய கொவைட் கால இந்தியாவின் நிலை குறித்த ஆய்வின்படி, 23 கோடி இந்தியர்கள் அந்த காலகட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அக்டோபர் 2021 நிலவரப்படி, வேலைவாய்ப்பின்மை 7.7% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தானியங்கி இயந்திரங்களின் உதவியுடன் நிறுவப்படும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதற்கான இன்னொரு காரணம்.

இந்திய தொழில்துறையினரின் கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 6.34 கோடி குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஏறத்தாழ 12 கோடி தொழிலாளர்கள் அவற்றில் பணியாற்றுகிறார்கள். மொத்த உற்பத்திப் பொருள்களில் 33.4% அங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆய்வின்படி, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு தொழிற்சாலைகளும், சுயதொழில் செய்பவர்களும் பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு தொழில் இழந்திருக்கிறார்கள். அரசின் பல்வேறு திட்டங்களாலும், நிதியுதவிகளாலும்கூட அவர்களால் மீண்டெழ முடியவில்லை.

உற்பத்தித் துறைக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தும்கூட கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு 17% என்பதைத் தாண்டி உயரவில்லை. அதுமட்டுமல்லாமல், 2016-17- இல் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தோரின் எண்ணிக்கை 5.1 கோடி என்றால், 2020-21-இல் அது 2.73 கோடியாகக் குறைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது நமது பொருளாதார அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் தெரிகிறது.

அதிநவீன தொழிற்சாலைகளையும், மிகப்பெரிய இயந்திரமய அமைப்புகளையும் ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நம்முடைய கவனம் குறு, சிறு நடுத்தரத் தொழிற்சாலைகளையும், சுய தொழில்களையும் ஊக்குவிப்பதில்தான் இருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவி, போதுமான முதலீடு ஆகியவற்றை வழங்கி வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் சுய தொழில் செய்வதற்கும், பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் வழிவகை செய்வது இப்போதைய அவசியத் தேவை.

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மைக்கு தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக இருக்கும் என்பதை வரலாறு பலமுறை உணர்த்தியிருக்கிறது. மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குதிரை வண்டி, மாட்டு வண்டி ஓட்டியவர்கள் வேலைவாய்ப்பிழந்தார்கள். மோட்டார் வாகனங்கள் ஓடுவதற்காக சாலைகள் போடப்பட்டபோது அதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாயின. மோட்டார் வாகன பழுது பார்த்தல் தொழில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. அவை அதிகரித்த வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கியதுபோல, எல்லா தொழில்நுட்ப அறிமுகமும் முதலில் வேலைவாய்ப்பிழப்பையும், பிறகு புதிய வகையிலான அதிகரித்த வேலைவாய்ப்பையும் உருவாக்குவதை நாம் பார்க்கிறோம்.

அதிகரித்த வளர்ச்சி விகிதம், குறைந்த அளவு வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு வழிகோலுகிறது என்கிற கருத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த இருபது ஆண்டுகளில் கைப்பேசி பழுதுபார்த்தல், வாடகை கார் ஓட்டுதல், ஹோட்டல் தொழில், சுற்றுலா தொழில், சுய தொழில்கள் உள்ளிட்டவை பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கின்றன. வேலைவாய்ப்பு இழத்தலைவிட அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஏற்படுமேயானால் அது வளர்ச்சியின் அடையாளம்.

மத்திய அரசின் ஆய்வறிக்கை ஒன்றின்படி, 2012-2018-க்கு இடையே நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 2018-இல் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடையேயானவர்களில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 28.5%. அதே காலகட்டத்தில் ‘ஊதிய விகிதம்’ குறைந்திருக்கிறது.

ஊதியத்தைவிட விலைவாசி கூடுதலாக அதிகரிக்கும்போது அதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்களே தவிர பயனடைவதில்லை.

இப்போதைய நிலையில், ஆண்டுதோறும் 1.2 கோடி பேர் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் பட்டியலில் இணைகிறார்கள். அவர்களில் சுமார் 70 லட்சம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு உருவாகிறது. இது ஆபத்தான போக்கு. உடனடியாக நாம் வேலைவாய்ப்பு குறித்து சிந்தித்தாக வேண்டும்.

அதற்கு நமது கல்வி முறையில் சீர்திருத்தம் அவசியத் தேவை. இப்போது பெரும்பாலான இளைஞர்களும் அரசுப் பணி கிடைப்பதற்காக படிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசுப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், தனியார் துறையில் திறன் சார்ந்த செவிலியர்களுக்கோ கணினி தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கோ தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கோ கிடைப்பதில்லை. நமது கல்வி முறை அரசுப் பணியை ஊக்குவிப்பதாக இருக்கும் நிலை மாற வேண்டும்.

அடுத்ததாக, தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம் அவசியம். தொழிலாளர் நலச் சட்டங்கள் கடுமையாக இருப்பதால், ஒருவர் திறன் குறைந்தவராக இருந்தாலும், முறையாகச் செயல்படாமல் இருந்தாலும் அவரை எளிதில் பணி நீக்கம் செய்ய முடிவதில்லை. அதனால் எல்லா நிறுவனங்களும் மனித சக்தியைக் குறைத்து தானியங்கி இயந்திரங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. கூடுதல் மக்கள்தொகையுள்ள இந்தியா போன்ற நாடுகளில், வேலைவாய்ப்பை அதிகரித்தாக வேண்டும். அதேநேரத்தில், உற்பத்தித் துறையும் பலவீனப்பட்டுவிடக் கூடாது.

ஆண்டொன்றுக்கு 12 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதுதான் மத்திய – மாநில அரசுகளின் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு நமது கல்வி முறையிலும், தொழிலாளர் நலச் சட்டங்களிலும் மாற்றம் அவசியம்!

7. தேசிய பாதுகாப்பு நலனின் அடிப்படையிலேயே ராணுவ கொள்முதல்: வெளியுறவு அமைச்சகம்

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணை தொகுப்புகளை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவின் ஒப்புதல் குறித்து ஐயப்பாடு நிலவி வரும் நிலையில், ‘இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையைக் கொண்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு நலனின் அடிப்படையிலேயே ராணுவ கொள்முதலை மேற்கொள்கிறது’ என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரஷியா – இந்தியா – சீனா ஆகிய 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆா்ஐசி மாநாட்டில், எஸ்-400 ஏவுகணை தொகுப்பு கொள்முதல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இப்பதிலை தெரிவித்தார். மேலும், ‘இந்தியாவும் அமெரிக்காவும் விரிவான சர்வதேச பாதுகாப்பு துறை சார்ந்த கூட்டுறவை கொண்டுள்ளன.

அதுபோல, ரஷியாவுடன் சிறப்புவாய்ந்த சுதந்திரமான ராணுவ கூட்டுறவை இந்தியா கொண்டுள்ளது. மேலும், இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையைக் கொண்டுள்ளது. அந்த வகையில், தேசிய பாதுகாப்பு நலனின் அடிப்படையிலேயே பாதுகாப்புத்துறைசார் கொள் முதல்களை இந்தியா மேற்கொள்கிறது’ என்றும் அவர் பதிலளித்தார்.

ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர்கள் (சுமார் `37,172 கோடி) மதிப்பில் அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைத் தொகுப்புகளைக் கொள்முதல் செய்வதற்கு அந்நாட்டுடன் இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதற்கிடையே ரஷியாவுடனான ஆயுதக் கொள்முதலைக் கைவிடுமாறு அனைத்து நட்பு நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ரஷியாவிடமிருந்து பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்கா இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தபோதிலும், இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைத் தொகுப்புகளை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக, ரஷிய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவை அமைப்பின் இயக்குநர் கடந்த வாரம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்ற ஆர்ஐசி மாநாட்டில், ‘ஐநா பாதுகாப்புகவுன்சில் வரையறையை மீறி ஒருதலைபட்சமான ஒப்புதல்களை அளிப்பதும், அதிகார வரம்பை நீட்டிக்க முயற்சிப்பதும் சர்வதேச சட்ட கொள்களைகளுக்கு முரணான
-வை’ என்று மூன்று நாடுகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்படதாகவும் அவர் தெரிவித்தார்.

8. இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு

இந்தியா-பிரான்ஸ் ராணுவம் இணைந்து நடத்திய 12 நாள் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது.

பிரான்ஸில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கூட்டுத் திட்டமிடல், செயல்பாடுகளின் பரஸ்பர புரிதல், ஐநா சபையின் சாசனத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்புச் சூழலில் கூட்டாகச் செயல்படுவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு அம்சங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

களப்பயிற்சி, கடினப்பணிச்சூழல்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் வீரர்கள் ஈடுபட்டனர். இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட பயிற்சியின் போது இருதரப்பு வீரர்களும் தங்களது சிறந்த செயல்முறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இரு நாட்டு படைகளின் பயிற்சிகளில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் விளை
-யாட்டு மற்றும் கலாசார நடவடிக்கைகளிலும் இணைந்து ஈடுபட்டு நட்புறவை வளர்த்தனர். பயிற்சி குறித்து நாட்டு ராணுவப் பிரிவுகளும் திருப்தியை வெளிப்படுத்தின. பயங்கரவாதம் இல்லாத உலகத்தை உறுதி செய்யும் பயணத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்தப் பயிற்சி விளங்கியது என்று மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. தில்லி திகார் சிறையில் திருவள்ளுவர் சிலை திறப்பு

தில்லி திகார் சிறையின் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் எட்டாவது பட்டாலியன் கமாண்டட் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை சிறப்பு ஆயுதப்படை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் அபய்குமார்சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

மேலும், அரசியலமைப்பு சட்ட நாளையொட்டி கமாண்டன்ட் டி செந்தில் குமார் முன்னிலையில் அதிகாரிகள், காவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரையை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்தத் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த காவலர் சி விஷ்ணு சங்கர்.

10. `1302 கோடியில் 15.60 லட்சம் தணிக்கை மறுப்புகள் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த தணிக்கை பிரிவு நிதித்துறையின் கட்டுப்பாட்டில் தனித்துறையாக இயங்கும்: தமிழக அரசு உத்தரவு

அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருந்த தணிக்கை பிரிவு நிதித் துறையின் கட்டுபாட்டில் தனித்துறையாக செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

கோயில்களின் தணிக்கைக்கென இந்து சமய அறநிலையத்துறை ஆணையரது கட்டுப்பாட்டின் கீழ் இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கைப் பிரிவானது உள்ளாட்சி நிதி தணிக்கை துறையிலிருந்து பிரித்து, ஏற்படுத்தப்பட்டது. தற்போது சமய அறநிறுவனங்களின் தணிக்கையினை மேற்கொள்ள தணிக்கைப் பிரிவானது 19 மண்டலங் -களாக பிரிக்கப்பட்டு 4 துணைத் தலைமை தணிக்கை அலுவலர் அலுவலகங்களும், 15 மண்டல தணிக்கை அலுவலர் அலுவலகங்களும் இவர்களுக்கு உதவியாக 27 உதவி தணிக்கை அலுவலர் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது.

தணிக்கை மற்றும் மேலாய்வு பணிகளை மேற்கொள்ள 295 தணிக்கை பணியிடங்களில் தணிக்கை பிரிவின் அலுவலக பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர்த்து உள்ள 274 தணிக்கை பணியிடங்களில் காலி பணியிடங்கள் போக 235 தணிக்கை பணியாளர்கள் தணிக்கை பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கையாளர்களைக் கொண்டு கோயில்களின் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கைகள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு செய்யப்பட வேண்டிய தணிக்கை தடைகள் கடந்த 31.3.2021 அன்று நிலவரப்படி ரூ.1302 கோடி உள்ளடக்கிய 15,60,574 தணிக்கை மறுப்புகள் தீர்வு செய்யப்படாமல் நிலுவையாக உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையரது கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகப் பிரிவு மற்றும் தணிக்கைப் பிரிவுகள் செயல்பட்டு வருவதால், தணிக்கைப் பணி தனித்துவமாக நடைபெறவில்லை. இந்து சமய அறநிலையத்துறை தணிக்கைப்பிரிவினை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, தணிக்கைப் பணி மேற்கொள்வதுடன் தணிக்கைத் தடைகள் மீது அளிக்கப்படும் பதிலறிக்கைகள் பரிசீலித்து, இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை பிரிவினை விடுவித்து தனியாக அறநிலையங்களின் தணிக்கைத் துறை ஒன்றினை நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வகையில் ஏற்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள தணிக்கை பிரிவினை நிதித்துறையின் கீழ் செயல்படும் தனித்துறையாக்கும் பட்சத்தில் மேற்கண்ட சட்ட விதிகளுக்கு திருத்தம் மேற்கொள்ள தனியாக அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்படவுள்ளது. இந்து சமய அறநிறுவனங்களில் தணிக்கை மேற்கொள்வதற்கு அறநிலையய கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 92(2)’இன்படி உரிய விகிதத்தில் தணிக்கை கட்டணங்கள் சம்பந்தப்பட்ட அறநிறுவனங்களால் அரசுக்கு ஈடுசெய்யப்படும் என்ற விவரமும் இதனால், அரசுக்கு கூடுதல் செலவினங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரது செயல்குறிப்பினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர், கோயில்களின் தணிக்கைக்கென இந்து சமய உள்ளாட்சி தணிக்கை துறையிலிருந்து பிரித்து தோற்றுவிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறைக்கான தணிக்கை பிரிவினை அறநிலையத்துறையின் கட்டுபாட்டி -லிருந்து விடுவித்து, அறநிலையங்களின் தணிக்கை துறை ஒன்றினை நிதித்துறையின் கட்டுபாட்டின்கீழ் தனித்துறையாக செயல்படும் வகையில் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1. When is the ‘World Television Day’ celebrated?

A) November 18

B) November 21 

C) November 23

D) November 25

  • World Television Day is celebrated across the world on November 21 to mark the impact of television in the contemporary world. The UN General Assembly decided November 21 to be marked as World Television Day since the first World Television Forum was held on November 21–22 in 1996.

2. ‘DEAFinitely Leading the Way’, which won the ABU – UNESCO Peace Media Awards 2021, is a programme of which media company?

A) Doordarshan 

B) NDTV

C) Times Now

D) Zee TV

  • In the Asia Pacific Broadcasting Union (ABU)–UNESCO Peace Media Awards 2021, Doordarshan’s ‘DEAFinitely Leading the Way’ won the award under ‘Living Well with Super Diversity’ category. All India Radio’s program called ‘Living on the edge – The coastal lives’ won the award in ‘Ethical & Sustainable Relationship with Nature’ category. The awards ceremony was held at Kuala Lumpur in Malaysia.

3. ‘Jigyasa programme’, which was seen in the news recently, is associated with which field?

A) Science and Technology 

B) Economics

C) Sports

D) Nutrition

  • India’s first virtual science lab for children under the ‘CSIR Jigyasa’ programme was launched recently, by the Union Minister of State for Science & Technology, Jitendra Singh. CSIR has partnered with IIT Bombay to develop a virtual lab platform under the ‘CSIR Jigyasa’ programme, which enables classroom learning with laboratory research for school students. The target audience for the virtual lab is students of classes 6–12.

4. Who is the Chief of the Joint Parliamentary Committee on Personal Data Protection Bill 2019?

A) V Muraleedharan

B) N Ravi

C) P P Chaudhary 

D) S Jaishankar

  • The Joint Parliamentary Committee on Personal Data Protection Bill 2019 has defended the controversial exemption clause that allows the Government to keep any of its agencies outside the purview of the law. The committee, headed by P P Chaudhary, has retained the Clause with minor change. The report will now be presented in the Parliament.

5. Kanaka Dasa, was a 15th century poet, saint & social reformer of which state?

A) Tamil Nadu

B) Karnataka 

C) Andhra Pradesh

D) Odisha

  • Kanaka Dasa Jayanthi is celebrated in Karnataka to pay tribute to the 15th century poet, saint and social reformer Kanaka Dasa. Kaginele, the birthplace of Saint Kanaka Dasa is refurbished by the Government for public visiting.
  • The kirtans sung by Kanaka Dasa and other Dasas of the Bhakti movement including Puranadara Dasa, Vijaya Dasa and Gopala Dasa are known as Dasa Sahitya and Devaranamas in Kannada literature.

6. Which country has sign key deal in nuclear submarine alliance, with the USA and the UK?

A) France

B) Australia 

C) Italy

D) Israel

  • Australia signed an agreement with the USA and UK allowing the exchange of sensitive “naval nuclear propulsion information” between their nations. This three–way deal gives Australia US nuclear–powered submarine technology. It is the first agreement on the technology to be publicly signed since the three countries announced the formation of a defence alliance, AUKUS.

7. Karnataka Rajyotsava and Kerala Piravi Day are celebrated on which day, every year?

A) November 3

B) November 1 

C) November 3

D) November 5

  • Kerala, Karnataka Madhya Pradesh, Haryana, Chhattisgarh, and Andhra Pradesh celebrate their statehood or foundation days on November 1. In Kerala, the foundation day is celebrated as ‘Kerala Piravi Day’ while in Karnataka the foundation day is celebrated as ‘Karnataka Rajyotsava’.

8. Which international organisation launched the journal ‘Solar Compass’ at COP26 conference?

A) International Solar Alliance 

B) International Energy Agency

C) International Atomic Energy Agency

D) International Renewable Energy Agency

  • The International Solar Alliance (ISA) and Netherlands–based publishing company Elsevier has launched journal ‘Solar Compass’ with Ambassador Stephane Crouz at the COP26 Climate Conference. The ISA is an inter–governmental treaty–based international organisation initiated by India.
  • Ajay Mathur, Director–general of International Solar Alliance released the first official call for papers to authors around the world.

9. What is the name of the mobile application launched by Union Minister of Law & Justice, to offer legal advice and consultation?

A) Citizen’s Tele–Law 

B) Bharat Tele–Law

C) Atmanirbhar Nyayalay

D) Nyay For All

  • Union Minister of Law and Justice Kiren Rijiju launched the Citizen’s Tele–Law Mobile Application. This app would connect the beneficiaries directly with panel lawyers offering legal advice and consultation. Kiren Rijiju has also announced the expansion of Tele–Law in 75,000 Gram Panchayats covering all states and UTs.

10. Where is India’s first Food Museum launched?

A) Varanasi

B) Ghaziabad

C) Pune

D) Thanjavur 

  • The union minister for Commerce, Industry, Food and Public Distribution Piyush Goyal has virtually inaugurated the India’s first Food Museum at Thanjavur, Tamil Nadu.
  • The museum has been developed jointly by Food Corporation of India and Visvesvaraya Industrial and Technological Museums at a project cost of Rs.1.10 crore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!