Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

27th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் முதல் யூரோ பசுமைப் பத்திரத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ) NTPC

ஆ) பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் 

இ) AIIMS

ஈ) TANGEDCO

  • மின்துறையில் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமான, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிட் தனது முதல் யூரோ 300 மில்லியன், 7 ஆண்டு யூரோ பசுமைப் பத்திரத்தை வெளியிட்டது.
  • இதன்மூலம் பெறப்பட்ட 1.841 சதவீத விலை, யூரோ சந்தையில் இந்திய வெளியீட்டு நிறுவனத்தால், பெறப்பட்ட மிகக்குறைந்த வசூல். இது, இந்திய வங்கி சாரா நிதி நிறுவனம் வெளியிட்ட முதல் யூரோ பத்திரம் மற்றும் 2017ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்ட முதல் யூரோ பசுமைப் பத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பத்திர வெளியீட்டின்போது, ஆசிய மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 82 முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இது 2.65 மடங்கு மிகையானது.

2. 2021’க்கான உலகளாவிய விருதுகளில் யூரோமணி வழங்கிய ‘உலகின் சிறந்த வங்கி – 2021’ பட்டத்தை வென்ற வங்கி எது?

அ) SBI வங்கி

ஆ) DBS வங்கி 

இ) ஐசிஐசிஐ வங்கி

ஈ) ஆக்சிஸ் வங்கி

  • இங்கிலாந்தைச் சார்ந்த நிதியியல் வெளியீடான ‘யூரோமணி’ அதன் உலகளாவிய விருதுகள் – 2021’இல், DBS’ஐ ‘உலகின் சிறந்த வங்கி 2021’ என்ற பட்டத்துடன் கௌரவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில், DBS வங்கி இந்தப் பட்டத்தை வெல்வது இது இரண்டாவது முறையாகும். DBS வங்கி ‘உலகின் சிறந்த டிஜிட்டல் வங்கி 2021’ என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு பட்டங்களையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் உலகின் முதல் வங்கியாக இது உள்ளது.

3. பாரத மிகுமின் நிறுவனமானது (BHEL) இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சோலார் PV ஆலையை எம்மாநிலத்தில் தொடங்கியுள்ளது?

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா

இ) பீகார்

ஈ) கர்நாடகா

  • இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு (PV) ஆலையானது ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள NTPC சிம்மாத்ரியில் பாரத மிகுமின் நிறுவனம் தொடக்கியுள்ளது. இந்த 25 MW திட்டம், 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தூய மின்சாரத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், நீர் ஆவியாவதையும் குறைக்கும்.

4. “சுற்றுச்சூழல் உணர்திறன், காலநிலை தகவமைப்பு மற்றும் சமூக உள்ளடக்கங்கொண்ட நகர்ப்புற ஆற்றங்கரை திட்டமிடல் & மேம்பாட்டுக்கான வழிகாட்டல் குறிப்பை” அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ) தேசிய தூய்மை கங்கை திட்டம் 

ஆ) ஜல் சக்தி அமைச்சகம்

இ) நமாமி கங்கே

ஈ) துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிகள் அமைச்சகம்

  • தேசிய தூய்மைகங்கை திட்டம் “சுற்றுச்சூழல் உணர்திறன், காலநிலை தகவமைப்பு & சமூக உள்ளடக்கங்கொண்ட நகர்ப்புற ஆற்றங்கரை திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக்கான வழிகாட்டல் குறிப்பை” வெளியிட்டு உள்ளது. இது ‘கனெக்ட் கரோ’இல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் உலக வள நிறுவனம் இதனை ஏற்பாடு செய்தது.

5. APEDA சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

அ) 1970

ஆ) 1980

இ) 1985 

ஈ) 1995

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டமானது (APEDA சட்டம்) கடந்த 1985ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, APEDA தயாரிப்புகளின் ஏற்றுமதி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2021 வரை 21.8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

6. “ஆதார் அடிப்படையிலான e-KYC”, “சுய KYC” மற்றும் “OTP அடிப்படையிலான மாற்றம்” ஆகியவை இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட எந்தச் சீர்திருத்தங்களின் ஒருபகுதியாகும்?

அ) LPG சீர்திருத்தங்கள்

ஆ) மின் துறை சீர்திருத்தங்கள்

இ) MSME சீர்திருத்தங்கள்

ஈ) தொலைத்தொடர்பு சீர்திருத்தங்கள் 

  • உலகத்தரம் வாய்ந்த இணைய / டெலி-இணைப்பை வழங்குவதற்கும், KYC செயல்முறைகளை எளிமையாக்குவதற்குமாக இந்திய அரசாங்கம் தொலைத்தொடர்பு துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் “ஆதார் அடிப்படையிலான e-KYC”, “சுய-KYC” ஆகியவை சிம் கார்டுகளை வீட்டுக்கேச் சென்று வழங்குதல் மற்றும் “OTP அடிப்ப
    -டையில் மொபைல் இணைப்பை பிரீபெய்டிலிருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்றுவது” ஆகியவை அடங்கும்.

7. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, “VR சௌதாரி” என்பவருடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ) இஸ்ரோ

ஆ) இந்திய விமானப்படை 

இ) ஓஎன்ஜிசி

ஈ) இந்தியன் ஆயில்

  • இந்திய வான்படையின் தற்போதைய துணைத்தலைவர் VR சௌதாரி, இந்திய வான்படையின் அடுத்த தலைமை மார்ஷலாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செப்.30 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் பதௌரியாவுக்குப் பின் இப்பதவிக்கு வருவார். VR சௌத்ரி, 1982 டிசம்பரில் ஐஏஎஃப்’இல் பணி நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு அளவிலான விமானங்களில் 3,800 மணி நேரங்களுக்கு மேல் அவர் பறந்துள்ளார்.

8. ஆசாத் கா அம்ரித் மகோத்சவத்தை நினைவுகூரும் வகையில், ‘Sailing regattas and Sail parade’ என்றவொன்றை நடத்தவுள்ள அமைப்பு எது?

அ) இந்திய இராணுவம்

ஆ) இந்திய கடற்படை 

இ) இந்திய கப்பல் கழகம்

ஈ) இந்திய அகழ்வு நிறுவனம்

  • சுதந்திர இந்தியாவின் வைரவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, கடற்படையின், 3 கட்டுப்பாட்டு மையங்களின் தலைமையிடங்களில் பாய்மரப் படகுப்போட்டிகள் மற்றும் அணிவகுப்புகளை நடத்த இந்தியக் கடற்படையின், பாய்மரப் படகுச் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர் மக்களிடையே பாய்மரப் படகு விளையாட்டுகள் பிரபலப்படுத்த -ப்படும். முதல் நிகழ்ச்சியை, கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் படகு வீரர்கள் பயிற்சி மையம், எர்ணாகுளம் கால்வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்துகிறது. இந்தியக் கடற்படையின் 75 வீரர்கள், இதில் கலந்துகொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்துவர்.

9. UGCஉடன் இணைந்து “அனைத்தும் உள்ளடங்கிய நிர்வாகத்தை உறுதி செய்வது: ஒவ்வொருவரையும் உருவாக்குவது தான் முக்கியமான விஷயம்” என்ற தலைப்பிலான வலையரங்கத்தை ஏற்பாடு செய்துள்ள அமைச்சகம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) சமூக நீதி அமைச்சகம்

இ) மகளிர் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ) கல்வி அமைச்சகம் 

  • அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் தொலைநோக்கின் ஒரு பகுதியாக, “அனைத்தும் உள்ளடங்கிய நிர்வாகத்தை உறுதி செய்வது: ஒவ்வொருவரையும் உருவாக்குவதுதான் முக்கியமான விஷயம்” என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கை மத்திய கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் நடத்தின. இந்த இணையக் கருத்து அரங்கில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
  • இந்த இணையக் கருத்தரங்கு அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களை ஒரே தளத்தில் கொண்டுவரும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு லக்னோவில் உள்ள பாபாசாகிப் பிம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகமும் ஆதரவு தெரிவித்தது.

10. விண்வெளி ஆய்வு தொடர்பான செய்திகளில் இடம்பெறுகிற VIPER’இல் I என்பது எதைக் குறிப்பிடுகிறது?

அ) Intelligence

ஆ) Investigating 

இ) Interesting

ஈ) Information

  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, சந்திரனுக்கு VIPER (Volaterles Investigating Polar Exploration Rover) என்ற ஒரு நடமாடும் ரோபோ அமைப்பை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்படவுள்ளது. மேலும் இது நிலவின் மேற்பரப்பில் மற்றும் அதற்குக் கீழே பனி மற்றும் பிற வளங்களைத் தேடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சந்திரனின் தென் துருவமானது நமது சூரிய மண்டலத்தின் குளிரான பகுதிகளுள் ஒன்றாகும். இதுவரை அது ஆராயப்படாமலேயே உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மங்கள்யான் விண்கலத்தின் 7 ஆண்டுகள் நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கள்யான் விண்கலம், வெற்றிகரமாக 7-வது ஆண்டை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: மங்கள்யான் திட்டத்தில் அனைத்துவித அம்சங்களும் எதிர்பார்த்ததைவிட சாதகமாகவே அமைந்துள்ளன. இதில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள்தான் நமது எதிர்கால திட்டங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.

மங்கள்யானின் 5 ஆய்வு சாதனங்கள் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகின்றன. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் பருவநிலை மாறுபாடுகள், வளிமண்டல சூழல்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போதைய நிலவரப்படி விண்கலத்தின் ஆய்வுக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வழக்கமாக தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைக் கோள்கள்தான் 7 முதல் 9 ஆண்டுகள் வரை செயல்படும். ஆனால், ஒரு விண்கலத்தையும் 7 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க வைக்க முடியும் என்பதை மங்கள்யான் நிரூபணம் செய்திருப்பது நமக்கு பெருமிதமான தருணமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2. தமிழக ஏற்றுமதி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி செய்யும்:

மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சார்பில் வர்த்தக வார விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி சென்னை தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள சிடிஎஸ் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய மீன்வளம், கால்நடை, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உள்ளூர் தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சுயசார்பு பாரதம் என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

கால்நடை, கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய வேளாண் ஏற்றுமதியில் 17-18 சதவீதம் வரை கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியின் பங்களிப்பு ஆகும். கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 50 சதவீதம் மானியம் அளிக்கிறது. கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டு திட்டம் எனபல்வேறு திட்டங்கள் கால்நடை துறை வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படுகின்றன. ஒரு லட்சம் கால்நடைகள் கொண்ட பகுதியில் நடமாடும் கால்நடை மருத்துவ கிளினிக் (மொபைல் கிளினிக்) இயக்க மத்திய அரசு உதவுகிறது.

இந்திய அளவிலான ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. சென்னையில் இருந்து கார், உதிரிபாகங்களும், நாமக்கல் பகுதியில் கால்நடை சார்ந்தபொருட்களும், தூத்துக்குடியில் இருந்து கடல்சார் பொருட்களும் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. தமிழகத்தின் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துதரும்.

கிராமப் பொருளாதாரம்

வளரும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கிராமப்புறங்களில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது கிராம பொருளாதாரம் வளரும். அதன்மூலம் கிராமங்கள் வளர்ச்சி அடைவதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

‘மேட் இன் இந்தியா’என்று பெருமையாக கூறிக்கொள்ளும் வகையில் இந்தியாவில் இருந்து சிறப்புமிக்க பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலை உருவாக வேண்டும். நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், மீனவ பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், விவசாய உற்பத்தியாளர் குழுவினர் பெரி தும் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

3. நாக நதியை மீட்ட தமிழக பெண்கள் – பிரதமர் மோடி

மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு முழுவதும் நதிகளை மீட்க, தூய்மைப்படுத்த அரசும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அந்த மாவட்டங்களின் நீர் ஆதாரமான நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டுவிட்டது. அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து நாகநதியை மீட்கும் பணியில் இறங்கினர். அவர்கள் மக்களை ஒன்று திரட்டினர், கால்வாய்களை தோண்டினர். தடுப்பணைகளை உருவாக்கினர், மறுசெறிவு குளங்களை வெட்டினர். இதன்விளைவாக இன்று நாகநதியில் தண்ணீர் ததும்பி ஓடுகிறது.

தேசத்தந்தை காந்தியடிகள் சபர்மதி நதிக்கரையில் ஆசிரமத்தை அமைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பே சபர்மதி நதி வறண்டுவிட்டது. ஓராண்டில் 7 மாதங்கள் வரை நதியில் தண்ணீர் இருக்காது. இதன்பிறகு நர்மதையும், சபர்மதியும் இணைக்கப்பட்டன, இன்று சபர்மதியில் தண்ணீர் நிறைந்திருக்கிறது. தமிழக பெண்களைப் போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நதிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. நம்முடைய துறவிகள் நதிகள் மீட்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாக நிதியை மீட்கும் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வாழும் கலை அமைப்பின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த நதி மீட்பு திட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டு 3,500-க்கும் மேற்பட்ட மீள் கிணறு, மறுசெறிவு குளங்களை வெட்டினர். 250 தடுப்பணைகள் கட்டப்பட்டன. 5 ஆண்டு உழைப்பின் பலனாக நாகநதி மீண்டும் உயிர் பெற்றது.

4. தமிழக அரசுப் பள்ளிகளுக்கு 100% குடிநீா் இணைப்பு: மத்திய அமைச்சா் பாராட்டு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு 100 சதவீத குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சா் பிரகலாத் சிங் படேல் பாராட்டு தெரிவித்தாா். தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை மற்றும் ஜல் சக்தி இணை அமைச்சா் பிரகலாத் சிங் படேலை தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினாா். அப்போது ஊரக பகுதிகளில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது மத்திய அமைச்சா் கூறியதாவது: ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளைச் சாா்ந்த 79,395 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள சுமாா் 1 கோடியே 27 லட்சம் வீடுகளில் இதுவரை 46.33 லட்சம் வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசுக்கட்டடங்களுக்கு 100 சதவீதம் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதற்கு எனது பாராட்டுக்கள். மேலும் இக்குடிநீா் இணைப்புகளை உரிய முறையில் பராமரித்து பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களின் சுகாதார வாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழித்திட தனி நபா் கழிப்பறைகள் மற்றும் சமுதாய வளாகங்கள் கட்டி மக்களைப் பயன்படுத்த ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகள் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.366.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் திட மற்றும் திரவக்கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்திட ஏதுவாக பற்பல முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் பாராட்டுக்குரியது. அதே நேரம், மக்களிடையே சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்திடவும், நெகிழி கழிவுகள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

5. எண்ம சுகாதாரத் திட்டம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமா்

பிரதமரின் எண்ம (டிஜிட்டல்) சுகாதார இயக்கம் இன்று தொடங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முன்முயற்சியை இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கிவைத்து பிரதமர் உரையாற்றினார். தேசிய எண்ம சுகாதார இயக்கத்தின் மாதிரி திட்டத்தை கடந்த 2020 ஆகஸ்ட் 15-இல் செங்கோட்டை கொத்தளத்தில் உரையாற்றுகையில் பிரதமா் அறிவித்தாா். தற்போது 6 யூனியன் பிரதேசங்களில் இந்த மாதிரித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய பிரதமரின் எண்ம சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சா் மாண்டவியா உள்ளிட்டோா் பங்கேற்க இருக்கின்றனா்.

இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு நபருக்கும் சுகாதார அடையாள அட்டை அளிக்கப்படும். மக்களின் மருத்துவ சிகிச்சைக்கான ஆவணமாக செயல்படும் இந்த அடையாள அட்டையுடன் தனிநபா் பெற்ற மருத்துவ சிகிச்சைகள் உள்பட மருத்துவம் சாா்ந்த அனைத்து தகவல்களும் இணைக்கப்படுவதுடன் செல்லிடப்பேசி செயலி உதவியுடன் அவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். மற்றொரு முக்கிய அம்சமான சுகாதார தொழில்சாா் நிபுணா்களின் பதிவேடு மற்றும் சுகாதார வசதிகளின் பதிவுகள், நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மருத்துவா்கள் குறித்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக செயல்படும். மருத்துவா்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குபவா்கள் உள்ளிட்டோா் எளிதான பணியை மேற்கொள்வதை இது உறுதி செய்யும்.

அதேவேளையில் பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் மருத்துவம் சம்பந்தமான தனிநபா் தகவல்களின் தனியுரிமை உறுதி செய்யப்படும். மக்களின் அனுமதி பெற்று அவா்களது மருத்துவ ஆவணங்களை அணுகுவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் இந்த இயக்கம் வழிவகை செய்யும்.

6. ஆஸ்ட்ரவா ஓபன் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்

செக் குடியரசு நாட்டில் நடந்த ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் ஸாங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் கெய்ட்லின் – எரின் ரவுட்லைப் (நியூசி.) ஜோடியுடன் மோதிய சானியா ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது. இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் சானியா வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது. முன்னதாக, கடந்த மாதம் கிறிஸ்டினா மெகேலுடன் இணைந்து விளையாடிய கிளீவ்லேண்ட் ஓபனில் அவர் பைனல் வரை முன்னேறி 2வது இடம் பிடித்திருந்தார்.

7. எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட்

ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் (25 வயது, 30வது ரேங்க்) சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் கிரீஸ் நாட்டின் மரியா சாக்கரியுடன் (26 வயது, 12வது ரேங்க்) நேற்று மோதிய கோன்டாவெய்ட் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 32 நிமிடத்துக்கு நீடித்தது.

8. டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள்: கோலி சாதனை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 51 ரன்கள் எடுத்தார். இதில், ஜாஸ்பிரித் பும்ரா பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு 13 ரன்களைக் கடக்கும்போது டி20 கிரிக்கெட்டில் கோலி 10,000 ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார். இந்த சாதனையை 314-வது டி20 ஆட்டத்தில் அவர் படைத்துள்ளார்.

1. Which organization has issued India’s first–ever Euro Green Bond?

A) NTPC

B) Power Finance Corporation 

C) AIIMS

D) TANGEDCO

  • Power Finance Corporation Ltd (PFC), the leading NBFC in power sector, has successfully issued its maiden Euro 300 million 7–year Euro Bond. The pricing of 1.841% achieved is the lowest yield locked in by an Indian Issuer in the Euro markets.
  • It is the first ever euro denominated green bond issuance from India. Moreover, it is the first ever Euro issuance by an Indian NBFC and the first Euro bond issuance from India since 2017.

2. Which bank has won the ‘World’s Best Bank 2021’ title given by Euromoney in its Global Awards for Excellence 2021?

A) SBI Bank

B) DBS Bank 

C) ICICI Bank

D) Axis Bank

  • UK–based financial publication Euromoney in its Global Awards for Excellence 2021, has honoured DBS with the ‘World’s Best Bank 2021’ title. This is the second time DBS bank has won this title in three years. DBS Bank was also named as ‘World’s Best Digital Bank 2021’, thus making it the 1st bank in the world to hold both the titles at the same time.

3. In which state, Bharat Heavy Electricals Limited has successfully commissioned India’s largest Floating Solar PV plant?

A) Andhra Pradesh 

B) Maharashtra

C) Bihar

D) Karnataka

  • India’s largest floating solar photovoltaic system (PV) plant has been successfully commissioned by Bharat Heavy Electricals Limited (BHEL) at NTPC Simhadri in the state of Andhra Pradesh.
  • This 25 MW project covers an area of 100 acres. The project will not only generate clean electricity, but will also reduce water evaporation by shielding the covered area.

4. Which organization has launched “Guidance Note for Environmentally Sensitive, Climate Adaptive and Socially Inclusive Urban Riverfront Planning and Development?”

A) National Mission for Clean Ganga 

B) Jal Shakti Ministry

C) Namami Gange

D) Ministry of Ports, Shipping and Waterways

  • The National Mission for Clean Ganga (NMCG) has launched “Guidance Note for Environmentally Sensitive, Climate Adaptive and Socially Inclusive Urban Riverfront Planning and Development.” This was launched by NMCG at ‘Connect Karo’ which was organised by World Resources Institute (WRI), India.

5. In which year, was the APEDA Act was passed in the Parliament?

A) 1970

B) 1980

C) 1985 

D) 1995

  • The Agricultural and Processed Food Products Export Development Authority Act (APEDA Act) was passed in the Parliament in the year 1985 which led to the establishment of APEDA. As per a recent estimate by the Directorate General of Commercial Intelligence and Statistics, the export of APEDA products has registered a 21.8% growth during April to August 2021.

6. “Aadhaar based e–KYC”, “self KYC” and “OTP based conversion” are a part of which reforms initiated by the Government of India?

A) LPG Reforms

B) Power Sector Reforms

C) MSME Reforms

D) Telecom Reforms 

  • With an aim to provide world class internet / tele–connectivity for the marginalised and to simplify the KYC processes, the Department of Telecommunications – Ministry of Communications, Government of India has initiated reforms in the telecom sector.
  • These include “Aadhaar based e–KYC”, “Self–KYC” for getting SIM cards delivered at doorstep and “OTP based conversion of mobile connection” from prepaid to postpaid.

7. “VR Chaudhari”, who is seen in the news recently, is associated with which organisation?

A) ISRO

B) Indian Air Force 

C) ONGC

D) Indian Oil

  • The present Vice Chief of the Indian Air Force Shri. VR Chaudhari, has been appointed by the Government of India as the next Chief Marshal of the Air Force. He would succeed Air Chief Marshal RKS Bhadauria, who would retire from the service on 30th September.
  • VR Chaudhari was commissioned into the IAF in December 1982 has a flying experience of more than 3,800 hours on a wide spectrum of aircrafts.

8. Which organisation is set to conduct ‘Sailing regattas and Sail parade’ to commemorate Azadi ka Amrit Mahotsav?

A) Indian Army

B) Indian Navy 

C) Shipping Corporation of India

D) Dredging Corporation of India

  • As part of commemorative activities of Azadi ka Amrit Mahotsav, Indian Navy under the aegis of Indian Naval Sailing Association (INSA) has planned to conduct Sailing regattas and a sail parade by Sailing boats and dingies in all three Command Headquarters locations for poularising Sailing sports among local population.
  • The first event is scheduled to be conducted by Indian Naval Watermanship Training Center, Kochi in Ernakulam channel on 23 Sep 21. A total of 75 Naval personnel will participate and showcase their yachting skills during the event.

9. Which Ministry in association with UGC has organised a Webinar on “Ensuring Inclusive Governance: Making Every Person Matter”?

A) Ministry of Finance

B) Ministry of Social Justice

C) Ministry of Women Development

D) Ministry of Education 

  • The Union Ministry of Education along with the UGC has organised a Webinar titled “Ensuring Inclusive Governance: Making Every Person Matter”. This has been a part of the Ministry’s vision of quality education to all. Arjun Munda – Union Minister of Tribal Affairs was the Chief Guest for the function.
  • This webinar created an opportunity to bring academicians, educationists and administrators on a single platform and was supported by the Babasaheb Bhimrao Ambedkar University, Lucknow.

10. What does I denote in VIPER, which is seen in the news regarding space exploration?

A) Intelligence

B) Investigating 

C) Interesting

D) Information

  • The US Space agency NASA has announced the deployment of VIPER (Volatiles Investigating Polar Exploration Rover), which is a mobile robot to the Moon. This would be sent as a part of the Artemis programme in the year 2023, and is aimed to search ice and other resources on and below the lunar surface.
  • The Moon’s South Pole is one of the coldest areas in our solar system. No prior missions to the Moon’s surface have explored it yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!