Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

28th & 29th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th & 29th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th & 29th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. நுண்நிதி ஊக்கத்தொகை & நிவாரணத்திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் எது?

அ) புதுச்சேரி

ஆ) சிக்கிம்

இ) அஸ்ஸாம் 

ஈ) தெலுங்கானா

  • அஸ்ஸாம் நுண்நிதி ஊக்கத்தொகை & நிவாரணத் திட்டம் (AMFIRS), 2021’ஐ செயல்படுத்துவதற்காக 37 நுண்நிதி நிறுவனங்களுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அஸ்ஸாம் அரசு கையெழுத்திட்டுள்ளது. COVID-19 காலத்தில் நல்ல கடன் ஒழுக்கத்தை தொடர்ந்து பராமரிக்க உதவுவதற்காக, அஸ்ஸாமில் உள்ள நுண்கடன் வாங்குவோர்க்கு நிதி நிவாரணம் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்கள் தங்களின் கடனை, தொடர்ந்து திருப்பிச் செலுத்துவதில் ஊக்கமளிக்கும்.

2. குஜராத்தில் உள்ள ஒரு தொகுதியில் இயற்கை எரிகாற்றைக் கண்டுபிடித்த நிறுவனம் எது?

அ) ரிலையன்ஸ் பெட்ரோலியம்

ஆ) வேதாந்தா 

இ) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

ஈ) எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்று நிறுவனம்

  • வேதாந்தா நிறுவனமானது குஜராத்தில் உள்ள ஒரு இயற்கை எரிவாயு தொகுதியை திறந்த ஏக்கர் உரிமக்கொள்கைமூலம் கண்டறிந்துள்ளது. இந்த வாயு மற்றும் செறிவு வயலை (ஜெயா) கண்டுபிடித்ததாக, DGH & பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் அந்த நிறுவனம் தெரிவித்தது. இது குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் துளையிடப்பட்டு கண்டறியப்பட்டது.

3. இந்தியாவின் முதல் புகைகோபுரம் திறக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ) கொல்கத்தா

ஆ) தில்லி 

இ) மும்பை

ஈ) பெங்களூரு

  • இந்தியாவின் முதல் புகை கோபுரத்தை தில்லியின் கன்னாட் இடத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்துவைத்தார். சோதனை முறையிலான இந்தத் திட்டம், வெற்றியடைந்தால், மேலும் பல புகை கோபுரங்கள் நிறுவப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைத்து, காற்றினை தூய்மையாக்குகிறது. இந்த ஆய்வு ஐஐடி தில்லி மற்றும் ஐஐடி பம்பாயால் மேற்கொள்ளப்படும். இரண்டு நிறுவனங்களும் திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசகர்களாக இருக்கும்.

4. மணிப்பூரின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) தமிழிசை சௌந்தரராஜன்

ஆ) இல கணேசன் 

இ) ஹரிஹரன் ராஜா சர்மா

ஈ) L முருகன்

  • குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் ஆக.22 அன்று தமிழ்நாட்டின் மூத்த பாஜக தலைவர் இல கணேசனை மணிப்பூரின் புதிய ஆளுநராக நியமித்தார். இந்த மாத தொடக்கத்தில், நஜ்மா ஹெப்துல்லா ஓய்வுபெற்ற பிறகு, மணிப்பூர் ஆளுநர் பதவி காலியாகவே இருந்தது. ஆக.10 அன்று ஹெப்துல்லா ஓய்வு பெற்றார்; அதே நாளில், தற்காலிக பொறுப்பு, சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத்திடம் கொடுக்கப்பட்டது.

5. புதைபடிவமற்ற எஃகு தயாரித்த உலகின் முதல் நாடு எது?

அ) ஜெர்மனி

ஆ) இந்தியா

இ) ரஷ்யா

ஈ) சுவீடன் 

  • பசுமை எஃகு என்றும் அழைக்கப்படும் புதைபடிவமற்ற எஃகு தயாரித்த உலகின் முதல் நாடு சுவீடன் ஆகும். இந்தப் பசுமை எஃகு HYBRIT தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் விநியோகம் வோல்வோ AB’க்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2016ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்துவருகிறது. முழு அளவிலான உற்பத்தி 2026 முதல் தொடங்கும். இவ்வறிக்கைகளின்படி, கோக்கிங் நிலக்கரிக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்துவது, எஃகு தயாரிப்பில் இருந்து குறைந்தபட்சம் 90% உமிழ்வைக்குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில், பெண்கள் நீளந்தாண்டுதலில் வெள்ளி வென்றவர் யார்?

அ) தீபிகா குமாரி

ஆ) பிரியங்கா கோஸ்வாமி

இ) சீமா புனியா

ஈ) ஷைலி சிங் 

  • ஆக.22 அன்று நைரோபியில் நடந்த உலக தடகள 20 வயதுக்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6.59 மீட்டர் பாய்ச்சலில் பெண்கள் நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளிவென்றார். சுவீடனின் மஜா அஸ்காக் (6.60 மீ) விட ஒரு சென்டிமீட்டர் குறைவாகப் பாய்ந்து அவர் தங்கத்தை இழந்தார். மும்முறைத் தாண்டலில் அஸ்காக் தங்கம் வென்றார். இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா மூன்று பதக்கங்களுடன் (2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்) போட்டியை நிறைவு செய்தது. எட்டு தங்கம் உட்பட 16 பதக்கங்களுடன் கென்யா முதலிடத்தில் உள்ளது.

7. சாலைகளிலும் சீரற்ற நிலப்பரப்பிலும் பயன்படுத்தக்கூடிய மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ள நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) ஐஐடி மெட்ராஸ் 

இ) டிஆர்டிஓ

ஈ) ஐஐடி பம்பாய்

  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மெட்ராஸ் ஒரு மோட்டார் சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளது. அதனை சாலைகளிலும் சீரற்ற நிலப் பரப்பிலும் பயன்படுத்தப்படலாம். ‘நியோபோல்ட்’ என்ற பெயரிலான மின் கலம்மூலம் இயக்கப்படும் இவ்வாகனம், மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிப்பதோடு ஒரு முறை முழு முன்னேற்றம் செய்தால் 25 கிமீ வரை செல்லும். இந்த வாகனம் ‘நியோமோஷன்’ என்ற துளிர்நிறுவனம்மூலம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

8. இந்தியாவில் உள்ள குழந்தைகள் பருவநிலை நெருக்கடியால் அதிக ஆபத்திலுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ) UNICEF 

ஆ) உலக வங்கி

இ) உலக நலவாழ்வு அமைப்பு

ஈ) NITI ஆயோக்

  • யுனிசெப்பின் புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் பருவநிலை நெருக்கடியால் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த அறிக்கையின்படி, குழந்தைகள் அதிகம் ஆபத்திலிருக்கும் 4 தெற்காசிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். காலநிலை மாற்றம் அவர்களின் உடல்நலம், கல்வி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 4 தெற்காசிய நாடுகளின் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
  • பாகிஸ்தான் 14ஆவது இடத்திலும், வங்கதேசம் 15ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25ஆவது இடத்திலும், இந்தியா 26ஆவது இடத்திலும் உள்ளது. நேபாளம் 51ஆவது இடத்திலும், இலங்கை 61ஆம் இடத்திலும், பூடான் 111ஆவது இடத்திலும் உள்ளன.
  • வரவிருக்கும் ஆண்டுகளில், இந்தியர்கள் ‘கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை’ சந்திக்க நேரிடும். அதே நேரத்தில், உலகளாவிய வெப்பநிலை 2° செல்சியஸாக அதிகரித்தபின் இந்தியாவின் நகர்ப் புறங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் கணிசமாக அதிகரிக்கும். மேலும், கடந்த 2020’இல், உலகின் மாசுபட்ட காற்று உள்ள 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் இருந்தன. இந்த கண்டுபிடிப்புகள் யுனிசெப்பின் “The Climate Crisis Is a Child Rights Crisis: Introducing the Children’s Climate Risk Index (CCRI)” என்ற அறிக்கையில் வெளியிடப்பட்டன. CCRI என்பது குழந்தைகள்மீது கவனம் செலுத்தி வெளிவந்த யுனிசெப்பின் முதல் அறிக்கையாகும்.

9. வேளாண்சார்ந்த துறைகளுக்கு கடன்வசதியுடன்கூடிய இரு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?

அ) சிக்கிம்

ஆ) மணிப்பூர்

இ) அருணாச்சல பிரதேசம் 

ஈ) நாகாலாந்து

  • அருணாச்சல பிரதேச மாநில அமைச்சரவையானது கடன்வசதியுடன் கூடிய இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அது விவசாயம் சார்ந்த துறைகளில் `300 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உதவும்.
  • 2021-22 நிதியாண்டில் விவசாயத்திற்காக ஆத்மநிர்பார் கிருஷி திட்டம் & தோட்டக்கலைக்காக ஆத்ம நிர்பார் பக்வானி திட்டம் ஆகியவற்றுக்கு மாநில அரசு தலா `60 கோடி மானியங்களை ஒதுக்கியுள்ளது. கடன் வசதியுடன் கூடிய இத்திட்டங்கள் 3 கூறுகளைக்கொண்டிருக்கும்.
  • அவை வங்கி கடன்கள், மானியம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ஆகும். உழவர்கள், சுய-உதவிக் குழுக்கள் & உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இந்தத் திட்டங்கள் கிடைக்கும்.

10. COVID தொற்றின் காரணமாக கணவனை இழந்த மகளிர்க்கு உதவுவதற்காக, “மிஷன் வத்சல்யா” என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா 

ஆ) கேரளா

இ) தில்லி

ஈ) ஜார்க்கண்ட்

  • மகாராஷ்டிரா மாநில அரசு COVID-19 நோயால் கணவனை இழந்த பெண்களுக்கு உதவுவதற்காக, “மிஷன் வத்சல்யா” என்ற சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டம் அதுபோன்ற பெண்களுக்கு பல சேவைகள் மற்றும் 18 நன்மைகளை ஒரே கூரையின்கீழ் வழங்கும். இது கைம்பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின்கீழ், சஞ்சை காந்தி நிரதர் யோஜனா மற்றும் கர்குல் யோஜனா போன்ற திட்டங்கள் பெண்களுக்கு பயனளிக்கும். இத்திட்டம் மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டுத்துறையால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் துறையைச் சார்ந்த அதிகாரிகள், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பிரிவு அலுவலர்கள் அந்தப் பெண்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக அவர்களின் வீடுகளுக்கே செல்வர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முகாம் வாழ் இலங்கைத் தமிழா் மேம்பாடுக்கு ரூ.317 கோடியில் 10 புதிய நல திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்காக ரூ.317 கோடியில் பத்து புதிய நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை அறிவித்தாா். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவா் புதிய அறிவிப்புகளைச் செய்தாா். இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் படித்தளித்த அறிக்கை:

1983-ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழா்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனா். அவா்களில் 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சோ்ந்த 58 ஆயிரத்து 822 போ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், 13,540 குடும்பங்களைச் சோ்ந்த 34,087 போ் காவல் நிலையங்களில் பதிவு செய்து, வெளிப் பதிவில் வசித்து வருகிறாா்கள். கடந்த சில ஆண்டுகளாக இலங்கைத் தமிழா்களின் முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

1. இலங்கைத் தமிழா்களின் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் ரூ.231.54 கோடியில் புதிதாகக் கட்டித் தரப்படும். இதில் முதல்கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்ட நிகழாண்டில் ரூ.108.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. முகாம்களில் உள்ள மின்வசதி, கழிப்பிட வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூ.30 கோடி ஒதுக்கப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும் இதுபோன்ற வசதிகளைச் செய்துதர இலங்கைத் தமிழா் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

3. முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஏற்கெனவே அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை உயா்த்தப்படும். அதன்படி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) படிப்புக்கு ரூ.10 ஆயிரம், இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு ரூ.12 ஆயிரம், இளநிலை தொழில்சாா்ந்த படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும். இதற்காக ரூ.1.25 கோடி ஒதுக்கப்படும்.

4. முகாம் வாழ் இலங்கைத் தமிழ் இளைஞா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். ஐந்தாயிரம் இளைஞா்களின் பயிற்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

5. முகாம்களில் உள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூ.1.25 லட்சம் அளிக்கப்படும். கடந்த ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்ட 321 குழுக்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட தொகையுடன் ரூ.75 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும்.

6. முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை இனி குடும்பத் தலைவருக்கு ரூ.1,500 ஆகவும், இதர பெரியவா்களுக்கு ஆயிரம் ரூபாயாகவும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500 ஆகவும் உயா்த்தி அளிக்கப்படும்.

7. முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு விலையில்லாத எரிவாயு இணைப்பு, இலவச அடுப்பு அளிக்கப்படும். மேலும், குடும்பத்துக்கு 5 எரிவாயு உருளைக்குத் தலா ரூ.400 வீதம் மானியம் அளிக்கப்படும். முகாம் வாழ் தமிழா்களுக்கு கிலோ 57 பைசா வீதம் மாதந்தோறும் 20 கிலோ அரிசி தற்போது வழங்கப்படுகிறது. இனி அரிசி விலையில்லாமல் அளிக்கப்படும்.

8. கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஆடைகளும், போா்வைகளும் வழங்கும் திட்டத்துக்கான தொகை குடும்பத்துக்கு ரூ.3,473 ஆக உயா்த்தி அளிக்கப்படும்.

9. முகாம் வாழ் தமிழா்களுக்கு ரூ.1,296 விலையில் சமையல் பாத்திரங்கள் வழங்கப்படும். மொத்தமாக இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்கென ரூ.317.40 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இலங்கைத் தமிழா் நலன் காக்க ஆலோசனைக் குழு

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழா்கள் நலன்களைக் காத்திடவும், உரிய ஆலோசனைகளை வழங்கிடவும் தனியாக குழு அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதுகுறித்து, பேரவை 110-ன் கீழ் அவா் வெளியிட்ட அறிவிப்பு:

முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள், வெளிப்பதிவில் உள்ளவா்களுக்கு உரிய உதவிகள் அளிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், குடியுரிமை வழங்குதல், அவா்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீா்வை கண்டறிந்திட ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.

இந்தக் குழுவில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா், சட்டப் பேரவை உறுப்பினா் தலா ஒருவா், பொதுத் துறைச் செயலாளா், மறுவாழ்வுத் துறை இயக்குநா், பிற அரசு உயா் அலுவலா்கள், அரசு சாரா உறுப்பினா்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழா் பிரதிநிதி, வெளிப்பதிவில் வசிக்கக் கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோா் இடம்பெற்றிருப்பா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

2. தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டீகா் யூனியன் பிரதேச நிா்வாகியாகவும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா். இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை அறிக்கையில் கூறியிருப்பதாது: தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநா் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்படுகிறது. பஞ்சாப் ஆளுநா் பணியிடத்துக்கு முறையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, அம்மாநில ஆளுநா் பணிகளை தமிழக ஆளுநா் கூடுதலாக கவனிப்பாா். மேலும், சண்டீகா் யூனியன் பிரதேச நிா்வாகியாகவும் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டீகா் நிா்வாகியாகவும் வி.பி.சிங் பத்னோா் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. 1940 ஆம் ஆண்டு பிறந்த பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தின் 14-வது ஆளுநராக, 2017-ம் ஆண்டு செப்டம்பா் மாதம் பொறுப்பேற்றாா். அதற்கு முன்பு அவா் அஸ்ஸாம் மாநில ஆளுநராகப் பதவி வகித்தாா். முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி மக்களவை தொகுதியிலிருந்து இரு முறை காங்கிரஸ் சாா்பாகவும், ஒருமுறை பாஜக சாா்பாகவும் அவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

3. அதிக கண்காணிப்பு கேமரா உள்ள நகரங்கள்: உலகளவில் மூன்றாமிடத்தை பிடித்த சென்னை

உலகம் முழுவதும் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களில், சென்னை மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. சென்னை பெருநகரத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மாா்க்கெட்டுகள், பொதுஇடங்கள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

இதில் தனியாா் நிறுவனங்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் நகா் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகின்றன. ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் பொதுமக்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி காவல்துறை தீவிர விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டது. இதன் காரணமாக 50 மீட்டருக்கு ஒரு கேமரா உள்ளது. இதன் அடுத்த இலக்காக 25 மீட்டருக்கு ஒரு கேமரா பொருத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா். நான்கு ஆண்டுகளாக காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக, சென்னையில் இப்போது 2.60 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. நகா் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களின் பாா்வை பரந்து, விரிந்து இருப்பதினால் தங்கச் சங்கிலி பறிப்பு 48 சதவீதம்,கொள்ளை 24 சதவீதம்,அடிதடி 11 சதவீதம், குறைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல செல்லிடப்பேசி பறிப்பும் பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல காவல்துறையின் பணிச்சுமையையும் பெருமளவில் கண்காணிப்பு கேமரா குறைத்துள்ளது. முக்கியமாக 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு கண்காணிப்பு கேமராவே உதவுவதாக காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

மூன்றாவது நகரம்: இந்நிலையில் ‘போா்ஃபஸ் இந்தியா‘ நிறுவனம் உலகம் முழுவதும் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட 20 நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தில்லி, லண்டன், சென்னை ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன மேலும் இப் பட்டியலில் இந்தியாவில் தில்லி, சென்னை, மும்பை ஆகிய 3 நகரங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. உலகளவில் அதிகளவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட நகரங்களில் முதலிடத்தை பிடித்திருக்கும் தில்லியில் 2.5 சதுர கிலோ மீட்டருக்கு 1,826 கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இரண்டாமிடத்தில் இருக்கும் லண்டனில் 2.5 சதுர கிலோ மீட்டருக்கு 1,138 கண்காணிப்பு கேமராக்களும், மூன்றாமிடத்தை பிடித்திருக்கும் சென்னையில் 2.5 சதுர கிலோ மீட்டருக்கு 609 கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் மும்பை 18ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நகரத்தில்.2.5 சதுர கிலோ மீட்டருக்கு 157 கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் உள்ள நகரங்களில் சென்னை மூன்றாமிடத்தை பிடித்திருப்பது, சென்னை பெருநகர காவல்துறையினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. எல்ஐசியின் ‘ஆனந்தா’ செயலி அறிமுகம்

எல்ஐசி நிறுவன முகவா்களுக்கான ‘ஆனந்தா’ என்ற செல்லிடப்பேசி செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. எல்ஐசியின் தலைவா் எம்.ஆா்.குமாா், மேலாண்மை இயக்குநா்கள் முகேஷ் குமாா் குப்தா, ராஜ்குமாா், சித்தாா்த்தா மொஹந்தி மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் காணொலி வாயிலாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் செயலி மூலம் முகவா் அல்லது புது வணிகம் சாா்ந்தோா் மூலமாக ஆயுள் காப்பீட்டு முன்மொழிவாளரின் ஆதாா் மூலம் கே.ஒய்.சியின் அங்கீகாரம் பெற்று ஆயுள் காப்பீட்டைப் பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளா்களை முகவா்களால் தொடா்பு கொள்ளவும் முடியும். மேலும் இதில் தொடக்கம் முதல் முடிவு வரை ஆயுள் காப்பீடு பெறுவது குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

5. 3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள்: அரசு அறிவிப்பு

3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:

”வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, கரூர்‌ மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில்‌ ரூ.30 கோடி மதிப்பில்‌ அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்படும்‌. தற்போது, வேளாண்‌ கல்வி மற்றும்‌ வேளாண்‌ ஆராய்ச்சியின்‌ தேவை அதிகரித்துள்ளது. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு, வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ கிருஷ்ணகிரியில்‌ புதியதாக அரசுத்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.

வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, 2021-2022ஆம்‌ ஆண்டில், கரூர் மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ கீழ்வேளூா்‌, சிவகங்கை மாவட்டத்தில்‌ செட்டிநாடு ஆகிய இடங்களில்‌ மூன்று புதிய அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம்‌ மொத்தம்‌ ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும்”‌. இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.

6. அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இலங்கை அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இந்நிலையில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என அழைப்பதற்கான பெயர் மாற்றத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்துள்ள 7469 வீடுகளை கட்டித்தரவும், குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாழ்க்கை தரம் மேம்பாடு நிதியாக ரூ.5 கோடி, 300 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.6.16 கோடி, விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு உருளை மானியத்திற்காக ரூ.10.50 கோடி ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என ரூ. 317 கோடிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7. ‘BH’ தொடா் வாகனப் பதிவெண் முறை அறிமுகம்

பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களில் அடிக்கடி குடிபெயா்வோா் தங்கள் வாகனங்களுக்கு ‘பிஹெச்’ தொடரில் அமைந்த பதிவெண் முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வாகனங்கள் பதிவு செய்யப்படும் மாநிலங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கான எண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோா் பணி நிமித்தமாக அடிக்கடி வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலைமை உள்ளது.

அவ்வாறான சூழலில், இடம்பெயரும் மாநிலத்துக்குச் சென்ற ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் வரி செலுத்தி புதிய வாகனப் பதிவெண்ணைப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. வாகனத்தை வேறு மாநிலத்தில் மறுபதிவு செய்வதற்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில் இருந்து தடையில்லாச் சான்று பெற்று வழங்க வேண்டியுள்ளது.

இந்த நடைமுறையை எளிதாக்கும் நோக்கில், ‘பிஹெச்’ என்ற பாரத் தொடா் அடிப்படையிலான வாகனப் பதிவெண்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இடையே அடிக்கடி குடிபெயா்வோா் தங்கள் வாகனங்களுக்கு ‘பிஹெச்’ தொடா் அடிப்படையிலான பதிவெண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில், வாகனம் முதலில் பதிவு செய்யப்படும் ஆண்டு (இரு இலக்கம்)-பிஹெச்-வாகனத்துக்கான 4 இலக்க எண்-இரு ஆங்கில எழுத்துகள் என்ற வரிசையில் வாகனப் பதிவெண் அமையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பதிவெண்ணைக் கொண்ட வாகனங்கள் மாநிலங்களுக்கிடையே எளிதில் குடிபெயர முடியும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிஹெச்’ தொடா் அடிப்படையில் பதிவு செய்வதற்கு, வாகனத்தின் விலையைப் பொருத்து 8 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களுக்குக் கூடுதலாக 2 சதவீத வரியும், மின்சார வாகனங்களுக்கு 2 சதவீதம் குறைவான வரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனப் பதிவெண் முறை செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

8. தஞ்சாவூரில் ரூ.25 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை

தஞ்சாவூா் மாவட்டம் புதுக்குடியில் ரூ.25 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் அறிவித்தாா். சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சா.மு.நாசா் வெளியிட்ட அறிவிப்பு: தற்போது மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் கால்நடை தீவனம் கொள்முதல் செய்யப்பட்டு பால் உற்பத்தியாளா்களுக்கு மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோட்டில் உள்ள கால்நடை தீவன ஆலையிலிருந்து 3,500 மெட்ரிக் டன் கால்நடை தீவனமும், இதர கூட்டுறவு அமைப்புகளின் மூலம் 6,500 மெட்ரிக் டன் கால்நடை தீவனமும் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் இதர மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூா் மாவட்டம் புதுக்குடியில் நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். சேலம் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் அளவில் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுடன் கூடிய இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன மற்றும் தொடா்ச்சியான உற்பத்திக்கான இயந்திரங்களுடன் கூடிய அலகு ரூ.8 கோடி மதிப்பில் நிறுவப்படும்.

பால் பொருள்கள், சிப்பம் கட்டும் பொருள்கள் மற்றும் மூலப் பொருள்களுக்கான ஆய்வுக்கூடம், ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் மற்றும் நுண்ணுயிரியல் பகுப்பாய்வுக்கான ஆய்வுக்கூடம் ஆகியன அம்பத்தூா் பால்பண்ணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் அவா்கள் வழங்கும் பாலினை பகுப்பாய்வு செய்து, உடனே பாலின் தரம் மற்றும் பாலின் மதிப்புக்கு ரசீது வழங்க 453 பால் பகுப்பாய்வு கருவிகள் ரூ.2.26 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை: கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் பால் வழங்குகின்ற, பால் உற்பத்தியாளா்களுடைய கறவை மாடுகளுக்கு இலவச சிகிச்சை இனப்பெருக்க வசதி மற்றும் அவா்களுக்கு தூய முறையில் பால் உற்பத்தி பயிற்சி, சமச்சீா் தீவனம், தாது உப்புக் கலவை, பசுந்தீவனத்தின் முக்கியத்துவம் மற்றும் கறவை மாடுகள் பராமரிப்பு பற்றிய ஆலோசனைகள் ஆகியன வழங்குவதற்காக கால்நடை மருத்துவ வழித்தடங்களில் 162 கால்நடை மருத்துவ ஆலோசகா்களை ரூ.6.80 கோடி திட்டமதிப்பில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

9. கரூா், நாகப்பட்டினம், சிவகங்கையில் வேளாண்மை கல்லூரிகள்

கரூா், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய இடங்களில் 3 புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அத்துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா். வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்: வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021-22-இல் கரூா் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூா், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் 3 புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள் துவங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியினை ஒதுக்கும்.

அரியலூா், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, விருதுநகா் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 200 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளின் நலன்களுக்காக தமிழக வரலாற்றில் முதல்முறையாக 2021-22-இல் நிலத்தடி நீா் பாதுகாப்பான குறுவட்டங்களின் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின்வசதியுடன் மின்மோட்டாா் பொருத்தி, நுண்ணீா் பாசன வசதிகள் 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.12 கோடி நிதி செலவிடப்படும். உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் பொருள்களைச் சந்தைப்படுத்த சென்னை, கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்.

வேளாண் விளைபொருள்களைச் சேமிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் திருப்பூா் பூளவாடி, புதுக்கோட்டை சிதம்பரவிடுதி, நாமக்கல் எருமைப்பட்டி, ஈரோடு பா்கூா் ஆகிய இடங்களில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள சேமிப்புக் கிடங்குகள் ரூ.2 கோடி செலவில் கட்டப்படும்.

நெய்தல் பூங்கா: 2021-22-இல் நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா 3.06 ஹெக்டேரில் ரூ.2 கோடி நிதியில் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையின் ஒருங்கிணைப்புடன் அமைக்கப்படும். இது இளம் தலைமுறையினருக்கு பண்டைய தமிழா்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் செயல்படும்.

2021-22-இல் 100 பெண் விவசாயிகளுக்கு, ஒருவருக்கு ரூ.1 லட்சம் என்கிற விகிதத்தில் குடிசை தொழிலாக குறைந்த பரப்பிலான காளான் உற்பத்திக்கூடம் அமைத்திட மானியம் வழங்க மகளிா் திட்டத்துடன் இணைந்து ரூ.1 கோடி செலவிடப்படும். நிலமில்லாத விவசாயத் தொழிலாளா்களை தொழில் முனைவோா்களாக உருவாக்கும் வகையில் 2021-22-இல் 1,077 நபா்களுக்கு 6 மாத கால உறைவிடத் தோட்ட தொழில்நுட்பவியலாளா் பயிற்சி ரூ.1.77 கோடி நிதியிலும், 3 ஆயிரம் நபா்களுக்கு பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீா் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளா்ப்பு குறித்த 30 நாள் பயிற்சிகள் ரூ.1.69 கோடி நிதியிலும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் பெண் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வேளாண் பொறியியல் பட்டயப் படிப்பு: வேளாண் இயந்திரங்கள் தொடா்பான அடிப்படை கல்வியினை பரவலாக்கும் வகையில் 2021-22-இல் திருச்சி குமுளூா் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2 ஆண்டு வேளாண்மை பொறியியல் பட்டயப் படிப்பு ரூ.1 கோடி நிதியில் தொடங்கப்படும். இந்தப் படிப்பில் ஆண்டுக்கு 40 மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இதன் மூலம் கிராமப்புற மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு உயரும் என்பதுடன் விவசாயிகளின் வேளாண் இயந்திரங்களை அவரவா் பகுதியிலேயே பழுதுபாா்க்க இயலும்.

திருப்பூரில் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை சாா்பில் 2021-22-இல் புதிதாக விதை பரிசோதனை நிலையம் அமைக்கப்படும். 2021-22-இல் கோயம்புத்தூரில் இயங்கி வரும் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறையின் தலைமை அலுவலகம் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு மாற்றப்படும் என்றாா்.

10. 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம்

நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் வாயிலாக மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் குடும்ப அட்டைகளை விநியோகித்து வருகின்றன. அந்த அட்டைகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே உணவு தானியங்களைப் பெறும் சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், குடும்ப அட்டைகளைப் பெற்ற புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தில் இதுவரை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இணைந்துள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் ஆகஸ்டிலும், தில்லி கடந்த ஜூலையிலும் இத்திட்டத்தை அமல்படுத்தின. அஸ்ஸாம், சத்தீஸ்கா் மாநிலங்கள் மட்டும் இத்திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. விரைவில் அவ்விரு மாநிலங்களும் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைச் செயல்படுத்தும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சராசரியாக 2.2 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பலனடைந்து வருகின்றனா். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இத்திட்டத்தின் கீழ் சுமாா் 40 கோடி முறை உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பிகாா் (10.14 கோடி முறை), ஆந்திரம் (6.92 கோடி முறை), ராஜஸ்தான் (4.56 கோடி முறை) ஆகிய மாநிலங்களில் அதிக முறை உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளுடன் ஆதாா் எண்ணை இணைத்தது, நியாய விலைக் கடைகளில் மின்னணு இயந்திரத்தின் வாயிலாக உணவுப் பொருள்களை விநியோகிப்பது ஆகிய நடைமுறைகளின் வாயிலாக இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

11. ரூ.188 கோடியில் புதிய ரோந்துக் கப்பல் ‘விக்ரகா’: நாட்டுக்கு அா்ப்பணித்தாா் அமைச்சா் ராஜ்நாத் சிங்

இந்தியக் கடலோரக் காவல் படையின் ரோந்துப் பணிக்காக சுமாா் ரூ.188 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட ‘விக்ரகா’ எனப் பெயரிடப்பட்ட அதிநவீன கப்பலை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அன் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு கடற்படை, கடலோரக் காவல் படைக்குத் தேவையான ரோந்துக் கப்பல்கள், அதிநவீன இடைமறிக்கும் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டு 7 ரோந்துக் கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை எல் அன் டி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இதில் விக்ரம், வீரா, விஜயா, வராக, வரத், வஜ்ரா ஆகிய 6 ரோந்துக் கப்பல்கள் ஏற்கனவே கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து சுமாா் ரூ.188 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ‘விக்ரகா’ எனப் பெயரிடப்பட்ட புதிய ரோந்துக் கப்பல் கடந்த ஆண்டு அக்.5-இல் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு முதல் முறையாக கடல் நீரில் இறக்கி வெள்ளோட்டம் விடப்பட்டது. கடந்த 10 மாதங்களாக இக்கப்பலில் நவீன ஆயுதங்கள், தொலைத் தொடா்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன்பிறகு கடலோரக் காவல் படையில் முறைப்படி இணைக்கப்படும் நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலோரக் காவல் படை தலைமை இயக்குநா் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ’விக்ரகா’-வை முறைப்படி நாட்டுக்கு அா்ப்பணித்தாா். பின்னா் கப்பலின் பெயா் பலகையை அமைச்சா் திறந்து வைத்தாா்.

கப்பலின் சிறப்பம்சங்கள்: கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ள ’விக்ரகா’ 2,200 மெட்ரிக் டன் எடையும், 98 மீட்டா் நீளமும், 15 மீட்டா் அகலமும் கொண்ட இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் கரைக்குத் திரும்பாமல் சுமாா் 5,000 கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் ஹெலிகாப்டா் இறங்கும் வசதி உள்ளது. மேலும் மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கண்காணிப்புக் கருவிகள் அதிநவீன ரக துப்பாக்கிகள், கடல் வழித்தடத்தை துல்லியமாகக் காட்டும் கருவிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. 11 அதிகாரிகள், 110 பணியாளா்கள் உள்ளிட்ட 121 படை வீரா்களுடன் பயணிக்க உள்ள ’விக்ரகா’ – வின் உத்தேச ஆயுள் காலம் சுமாா் 25 ஆண்டுகள் ஆகும்.

12. ரயில் பயணிகள் குறைகளை தெரிவிக்க – ‘ரயில் மதாத்’ புதிய செயலி அறிமுகம் :

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் பயணிகளின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ‘ரயில் மதாத்’ (MADAD – Mobile Application for Desired Assistance During travel) என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது புகார்களை தொலைபேசி, இணையதளம், சமூக ஊடகம் வாயிலாக பதிவு செய்கின்றனர். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உடனடி நடவடிக்கைக்காகவே 24 மணி நேரமும் செயல்படும் செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தமிழ் உட்பட 12 மொழிகள் மூலம் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

இந்த செயலியை இணையதளம், குறுஞ்செய்தி, சமூக ஊடகம் மற்றும் உதவி எண் 139 மூலம் அணுகலாம். இதன்மூலம் பாதுகாப்பு, மருத்துவ உதவி, விபத்து பற்றிய தகவல்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கான உதவிகள், பொதுப்புகார், லஞ்சப்புகார், பார்சல் சரக்கு போக்குவரத்து பற்றிய விசாரணை, ஐஆர்சிடிசி ரயில்கள் விவரங்கள், ஏற்கெனவே அளித்த புகாரின் நிலையை பற்றியும் அறிந்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்த முடியாத காலங்களில் ரயில் பயணச்சீட்டு பரிசோதகர், நிலைய அதிகாரி, பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. கீழடி அகழாய்வில் தானியக் கொள்கலன் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தானியக் கொள்கலன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சிவகங்கை மாவட்டம், கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் 7 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இதில் சுடுமண் முத்திரை, உறை கிணறுகள், காதணிகள், தந்தத்தினாலான பகடை, முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய புழங்குப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் சிவப்பு நிறத்திலான சுடுமண்ணால் ஆன தானியக் கொள்கலன் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகழாய்வுப் பணி மேற்கொள்ளும் தொல்லியலாளா்கள் சனிக்கிழமை கூறியது : கீழடியில் நடைபெற்று வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பணி மேற்கொள்ளும் போது 348 செ.மீ ஆழத்தில் பெரிய வாய்ப்பகுதி கொண்ட சுடுமண் பானையின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. தொடா்ந்து, அதே பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் 30 செ.மீ விட்டமும், 60 செ.மீ உயரமும், 2 செ.மீ. தடிமனும் கொண்ட முழு பானையாக அண்மையில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இந்த பானை அழகிய வேலைப்பாடுகளுடன் அமையப் பெற்றுள்ளது. மேலும், இதன் வெளிப்புற மையப்பகுதியில் கயிறு போன்ற வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பழங்கால மக்கள் தானியங்களை சேமித்து வைப்பதற்கு தானியக் கொள்கலனாக பயன்படுத்தி இருக்கலாம் என்றனா்.

1. Which state has announced a Microfinance Incentive and Relief Scheme?

A) Puducherry

B) Sikkim

C) Assam 

D) Telangana

  • The Assam government has signed a memorandum of understanding with 37 microfinance lenders for implementation of the Assam Microfinance Incentive and Relief Scheme (AMFIRS), 2021.
  • The scheme is aimed at providing financial relief to the microfinance borrowers in Assam to help them continue maintaining good credit discipline in COVOD–19 times.

2. Which organization has made a natural gas discovery in a block in Gujarat?

A) Reliance Petroleum

B) Vedanta 

C) Indian Oil Corporation

D) Oil and Natural Gas Corporation

  • Vedanta has made a natural gas discovery in a block in Gujarat that it had won in the open acreage licensing policy (OALP) round. It had notified the DGH and Ministry of Petroleum and Natural Gas of a gas and condensate discovery [named ‘Jaya’] in its exploratory well Jaya1. It was drilled in OALP Block in Bharuch District of Gujarat.

3. In which city, India’s first smog tower has been inaugurated?

A) Kolkata

B) Delhi 

C) Mumbai

D) Bengaluru

  • Chief Minister Arvind Kejriwal has inaugurated India’s first smog tower in Delhi’s Connaught Place. If the pilot project is successful, more smog towers will be installed in the national capital. The tower constitutes a pilot study to assess the reduction of particulate air pollution in urban areas through ‘air cleaning.’ The 2–year–long pilot study will be carried out by IIT Delhi and IIT Bombay. The two institutions are technical advisors for the project.

4. Who has been appointed as the new governor of Manipur?

A) Tamilisai Soundararajan

B) La Ganesan 

C) Hariharan Raja Sharma

D) L Murugan

  • President Ram Nath Kovind on 22nd August appointed senior BJP leader from Tamil Nadu La Ganesan as the new governor of Manipur. The post of the governor had fallen vacant after the retirement of Najma Heptulla earlier this month. Heptulla had demitted office on August 10 and on the same day the temporary charge was given to Sikkim Governor Ganga Prasad.

5. Which country has become the first country in the world to manufacture fossil–free steel?

A) Germany

B) India

C) Russia

D) Sweden 

  • Sweden has become the first country in the world to manufacture fossil–free steel which is also known as green steel. Green steel has been developed by HYBRIT Technology and the first delivery was done to Volvo AB as a trial run. This initiative was in process since the year 2016 and the full–scale production will begin from 2026. According to reports, replacing coking coal with hydrogen is expected to reduce emissions from steelmaking by at least 90%.

6. Who has won silver in women’s long jump at World Athletics under–20 championships?

A) Deepika Kumari

B) Priyanka Goswami

C) Seema Punia

D) Shaili Singh 

  • Shaili Singh won the women’s long jump silver with a 6.59m leap (wind advantage +2.2) at the World Athletics under–20 championships in Nairobi on August 22, 2021. She missed the gold by just one centimetre to Sweden’s Maja Askag (6.60m). Askag also won gold in triple jump. India finished with three medals (two silver and a bronze) in the five–day meet for its best–ever tally at a World championship. Host Kenya topped the table with 16 medals, including eight gold.

7. Which organization has designed a motorised wheelchair that can be used on roads as well as on uneven terrain?

A) NITI Aayog

B) IIT Madras 

C) DRDO

D) IIT Bombay

  • The Indian Institute of Technology (IIT) Madras has designed a motorised wheelchair that can be used on roads as well as on uneven terrain. ‘ ‘Neobolt’ is a battery–operated vehicle capable of travelling at a speed of 25km/h and move up to 25 km per charge. The vehicle has been commercialised through a start–up named NeoMotion.

8. Which organization has released a report which states that children in India are at extreme high risk of impacts of climate crisis?

A) UNICEF 

B) World Bank

C) World Health Organisation

D) NITI Aayog

  • According to a new report by UNICEF, Children in India are at extreme high risk of impacts of climate crisis. As per report, India is among four South Asian countries where children are most at risk. Climate change threatens their health, education, and protection. Pakistan, Bangladesh, Afghanistan and India are the four South Asian countries where children are at extremely high risk. Pakistan was ranked at 14th position, Bangladesh at 15th, Afghanistan at 25th while India at 26th.
  • Nepal is ranked at 51st, Sri Lanka 61st, while Bhutan is ranked 111th. Indians will face ‘acute water shortages’ in upcoming years. At the same time, flash flooding will increase significantly in India’s urban areas once the global temperature increases to 2° Celsius. Further, 21 of world’s 30 cities with the most polluted air were in India in 2020.
  • These findings were published in UNICEF’s report titled: “The Climate Crisis Is a Child Rights Crisis: Introducing the Children’s Climate Risk Index” (CCRI). CCRI is the first focussed report on children by UNICEF.

9. which state has approved two credit–linked schemes for the agro–based sectors?

A) Sikkim

B) Manipur

C) Arunachal Pradesh 

D) Nagaland

  • The Arunachal Pradesh cabinet has approved two credit–linked schemes, which will facilitate Rs 300 crore investments in the agro–based sectors.
  • The state government has earmarked Rs 60 crore of subsidies each for Atma Nirbhar Krishi Yojana for agriculture and Atma Nirbhar Bagwani Yojana for horticulture during the fiscal year 2021–22. The credit–linked programmes will have three components – bank loans, subsidy and beneficiaries’ contribution. The schemes will be available for cultivators, self–help groups and farmer producer organisations.

10. Which state/UT has launched a special mission called “Mission Vatsalya” in order to help women who lost their husbands to COVID?

A) Maharashtra 

B) Kerala

C) Delhi

D) Jharkhand

  • Maharashtra government launched a special mission called “Mission Vatsalya” in order to help women who lost their husbands to COVID–19. Mission Vatsalya will provide several services and some 18 benefits under one roof to those women. It been designed for widows, with special focus on widows coming from rural areas, poor backgrounds and deprived sections.
  • Under this mission, schemes like Sanjay Gandhi Niradhar Yojana and Gharkul Yojana will benefit those for women. This mission is being implemented by women and child development (WCD) Department. Officers from WCD department, child development project officers, Anganwadi workers and local unit officers are visiting homes these women to provide them services.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!