Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

28th & 29th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

28th & 29th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th & 29th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. IMFஇன் (ஜூலை 2022) சமீபத்திய அறிக்கையின்படி, 2022–23–க்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு என்ன?

அ. 6.8%

ஆ. 7.0%

இ. 7.4% 

ஈ. 8.0%

  • பன்னாட்டு செலவாணி நிதியமானது (IMF) 2022–23 நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை சாதகம் குறைந்த வெளிப்புறச் சூழல்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் விரைவான கொள்கை இறுக்கம் ஆகியவற்றைக் காரணங்காட்டி 7.4 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி சமீபத்தில் இந்தியாவின் வளர்ச்சியை 7.5 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகக் குறைத்துள்ளது.

2. சமீபத்தில் யாருக்கு சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது?

அ. ஜோ பைடன்

ஆ. நரேந்திர மோதி

இ. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 

ஈ. ஜெசிந்தா ஆர்டெர்ன்

  • இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை வழங்கினார். லண்டன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொளி வழியாக ஜெலென்ஸ்கி அவ்விருதை ஏற்றுக்கொண்டார். ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனுக்குச் சென்ற முதல் மேற்கத்திய தலைவர் போரிஸ் ஜான்சன் ஆவார். சர்ச்சில் தலைமைத்துவ விருது முதன்முதலில் 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

3. 2024–க்குப்பிறகு பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா 

இ. அமெரிக்கா

ஈ. இஸ்ரேல்

  • மாஸ்கோவின் விண்வெளி முகமையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவரின் கூற்றுப்படி, 2024–க்குப் பிறகு பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவும் அமெரிக்காவும் 1998ஆம் ஆண்டு முதல் சுற்றுப்பாதையில் இருக்கும் ISS–இல் பணியாற்றி வருகின்றன. சோவியத் விண்வெளி திட்டத்தின் சில முக்கிய சாதனைகளாக கடந்த 1961–இல் மனிதனை முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பியது மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதல் செயற்கைக்கோளை அனுப்பியது உள்ளது.

4. பின்வரும் எந்த ஆண்டு நடைபெறும் ICC பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் தொகுப்பாளராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது?

அ. 2023

ஆ. 2025 

இ. 2027

ஈ. 2030

  • பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சில் (ICC) வாரியம் வங்கதேசம், இந்தியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நான்கு நாடுகளையும் ICC பெண்கள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகளாக அங்கீகரித்துள்ளது. ICC பெண்கள் T20 உலகக்கோப்பைப் போட்டியானது 2024–இல் வங்கதேசத்தால் இரண்டாவது முறையாக நடத்தப்படும் அதே வேளையில், 2026ஆம் ஆண்டில் இங்கிலாந்தால் நடத்தப்படும். அடுத்த ICC பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025–இல் இந்தியாவும், 2027–இல் இலங்கையும் நடத்தும்.

5. அரசின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை புலிகள் இறந்துள்ளன?

அ. 29

ஆ. 129

இ. 229

ஈ. 329 

  • மக்களவையில் நடுவண் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் சமர்ப்பித்த தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் வேட்டையாடுதல், இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான காரணங்களால் இந்தியா 329 புலிகளை இழந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் புலிகளின் தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. வேட்டையாடுதல், மின்சாரம் தாக்குதல், நஞ்சுத்தாக்கம் மற்றும் இரயில் விபத்துகள் காரணமாக இக்காலகட்டத்தில் சுமார் 307 யானைகள் இறந்துள்ளன. இவற்றில் கடந்த மூன்று ஆண்டுகளில் 222 யானைகள் மின்சாரந்தாக்கி உயிரிழந்துள்ளன.

6. ‘கார்ச்சி’ என்பது எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகும்?

அ. அஸ்ஸாம்

ஆ. திரிபுரா 

இ. மத்திய பிரதேசம்

ஈ. குஜராத்

  • ‘கார்ச்சி’ என்பது ஒரு வார காலம் நீளும் பாரம்பரிய பண்டிகையாகும்; இதில் 14 தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. திரிபுராவின் கயர்பூரில், நாடு முழுவதும் இருந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அந்தத் திருவிழா தொடங்கியது. ஹௌரா ஆற்றில் அத்தெய்வங்களின் திருமஞ்சன ஊர்வலத்துடன் அது தொடங்கியது.

7. சமீபத்திய NSO கணக்கெடுப்பின்படி, 2019–இல் 15–29 வயது வரையிலான திருமணமாகாதவர்களின் விகிதம் என்ன?

அ. 9%

ஆ. 15%

இ. 23% 

ஈ. 32%

  • தேசிய புள்ளியியல் அலுவலக அறிக்கையின்படி, 2011–2019–க்கு இடைப்பட்ட காலத்தில், 15–29 வயதுக்குட்பட்ட திருமணமாகாதவர்களின் விகிதம் 17.2 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்களில் திருமணமாகாதோரின் சதவீதம் 2011–இல் 20.8 சதவீதத்திலிருந்து 2019–இல் 26.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், பெண்களில் அது 2011–இல் 13.5 சதவீதத்திலிருந்து 2019–இல் 19.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

8. 2022 – இலண்டன் இந்திய திரைப்பட விழாவில், எந்த இந்திய திரைப்பட இயக்குநர்களுக்கு, ‘ஐகான் விருது’ வழங்கப்பட்டது?

அ. அபர்ணா சென் மற்றும் நந்திதா தாஸ் 

ஆ. லீனா மணிமேகலை மற்றும் நந்திதா தாஸ்

இ. சங்கர் மற்றும் லோகேஷ் கனகராஜ்

ஈ. நந்திதா தாஸ் மற்றும் சுதா கொங்கரா

  • 2022 – இலண்டன் இந்திய திரைப்பட விழாவில் இந்திய மற்றும் உலகளாவிய சினிமாவுக்கு அவர்களாற்றிய பங்களிப்பிற்காக திரைப்பட இயக்குநர்கள் அபர்ணா சென் மற்றும் நந்திதா தாஸ் ஆகியோருக்கு ‘ஐகான் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இலண்டன் இந்திய திரைப்பட விழா (LIFF) லண்டன், பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய நான்கு நகரங்களில் நடந்தேறியது.

9. ஆயுஷ் மருந்துகளின் விற்பனை குறித்து மின்னணு வணிக தளங்களுக்கு சமீபத்தில் ஆலோசனை வழங்கிய ஆணையம் எது?

அ. நடுவண் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 

ஆ. ஆயுஷ் அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஈ. NITI ஆயோக்

  • நடுவண் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமானது (CCPA) ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி (ஆயுஷ்) மருந்துகளை விற்பனை செய்வது குறித்து மின்னணு வணிக தளங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஆலோசனையின்படி, பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களிடமிருந்து செல்லத்தக்க மருந்துக் குறிப்புகளை வாடிக்கையாளர்கள் பதிவேற்றிய பின்னரே, மின்னணு வணிக தளங்கள் ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருந்துகளை விற்பனை வேண்டும்.

10. அண்மையில் காலமான பிரிஜேந்திர குமார் சிங்கால், கீழ்க்காணும் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

அ. பசுமைப் புரட்சியின் தந்தை

ஆ. இந்தியாவில் இணையத்தின் தந்தை 

இ. வெண்மை புரட்சியின் தந்தை

ஈ. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை

  • ‘இந்தியாவில் இணையத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் பிரிஜேந்திர குமார் சிங்கால், சமீபத்தில் தனது 82ஆம் வயதில் காலமானார். அவர் விதேஷ் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். அவரது தலைமையின்கீழ், அந்த நிறுவனம் இந்தியாவில் இணைய சேவையை அறிமுகப்படுத்தியது. இவர் இதற்கு முன்பு இன்மார்சாட் என்ற செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனத்துடன் தொடர்புடையவராக இருந்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. தமிழ்நாட்டில் 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் 1 கிராமத்திலும் 4G மொபைல் சேவை வழங்கப்படவுள்ளது

நாட்டில் 4G மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் `26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 534 கிராமங்களிலும், புதுச்சேரி 1 கிராமத்திலும் 4G மொபைல் சேவை அளிக்கப்படவுள்ளது. மொத்தம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4G மொபைல் சேவை அளிக்கப்படவுள்ளது.

2. அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி

கைது செய்வது, சொத்துகளை முடக்குவது, சோதனையிடுவது, பறிமுதல் செய்வது ஆகிய அதிகாரங்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறைக்கு உள்ளதாக உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

அமலாக்கத் துறைக்கு பல்வேறு சட்ட அதிகாரங்கள் இல்லை என்றும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நோக்கில் அரசு இந்தச்சட்டங்களைக் கையாள்கிறது என்றும் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் 545 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதிகள் ஏ எம் கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி டி ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை அறிவித்தது. அதன் விவரம்:

உலக நிதி விவகாரங்களுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை சாதாரண குற்றமாக கருத முடியாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் 45-ஆவது பிரிவின்படி, தெரிந்து செய்யும் குற்றங்களுக்கும், பிணையில் வெளியே வர முடியாத குற்றங்களுக்கும் பின்னர் பிணை வழங்க இரண்டு நிபந்தனை விதிப்பது சரியானது.

கைது செய்யும் அதிகாரம் அளிக்கும் பிரிவு 19, அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும். அதில் பல்வேறு பாதுகாப்பு ஷரத்துகளும் உள்ளன. சொத்துக்களை முடக்க அதிகாரம் அளிக்கும் பிரிவு 5, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகும். ஒருவரை கைது செய்யும்போது அமலாக்கத் துறை வழக்கின் முதல் அறிக்கை (ECIR) காண்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை. அமலாக்கத் துறை அதிகாரிகளை குற்றவியல் சட்டத்தின்படி இயங்கும் காவல் துறையினருக்கு நிகராக கருதக் கூடாது.

அதேபோல், நிதி மசோதாவாக நிறைவேற்றப்படாத, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத் திருத்தத்தின் சில ஷரத்துகளை நீதிமன்றம் ஆராயவில்லை. இது, ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.

3. முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம்:

தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14,095 மாணவர்கள் பயன்பெறுவர்.

1920-இல் உணவுத் திட்டம்…

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 102 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அப்போதைய சென்னை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான தமிழக அரசின் உத்தரவு: ஏழை, எளிய சமூகக் குழந்தைகளின் காலடிகள் கல்விச் சாலையை எட்ட முடியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பள்ளியில் உணவளிக்கும் திட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றியது, அப்போதைய சென்னை மாநகராட்சி நிர்வாகம். மன்றத்தின் தலைவராக இருந்த சர் பிட்டி தியாகராயர் தலைமையில் மாநகராட்சி மன்றக்கூட்டம் நடந்தது. 1920 செப்.16 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1957-இல் மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வர் கு. காமராஜர் தொடக்கி வைத்தார். இதற்காக ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு `18 என்ற அளவில் `10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. முதல்வராக இருந்த எம் ஜி ஆர் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அறிவித்த சத்துணவுத் திட்டம் 1982 ஜூலை.1-இல் திருச்சி மாவட்டம் பாப்பாகுறிச்சியில் தொடக்கப்பட்டது. சத்துணவுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்குவதை 1989-இல் அறிமுகப்படுத்தினார். 2008-ஆம் ஆண்டில் சத்துணவுடன் வாரம் 5 முறை முட்டைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

4. மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக்கலைத்தூண்

மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில், 45 அடி உயர சிற்பக்கலைத்தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக ‘கைவினை சுற்றுலா கிராமம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய சிற்பக்கலைத்தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு என்ன? சிற்பக்கலைத்தூணில் கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்துக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில், சதுரங்க வீரர்களையும், போட்டியைக்காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொது மக்களையும் கவரும் வகையில் சிற்பக்கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

5. ‘விக்ராந்த்’ போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. திட்டமிட்டதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் ஒப்படைத்துள்ளது.

விமானந்தாங்கி போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அத்திட்டத்தின்கீழ் முதல் விமானந்தாங்கி போர்க் கப்பலாக ‘விக்ராந்த்’, சுமார் `20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அக்கப்பலைக் கட்டும் பணியை 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.

இத்துடன் விமானந்தாங்கி போர்க் கப்பலை உள்நாட்டிலேயே கட்டும் வலிமை கொண்ட ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்பம்சங்கள்:

நீளம் – 262 மீட்டர்; அகலம் – 62 மீட்டர்; உயரம் – 59 மீட்டர்

டர்பைன்களின் எண்ணிக்கை – 4

எஞ்சின் திறன் – 88 மெகா வாட்

அதிகபட்ச வேகம் – மணிக்கு 28 நாட் (சுமார் 52கிமீ)

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் செல்லும் தொலைவு – சுமார் 7,500 கடல்மைல்

இயக்கவல்ல போர் விமானங்கள் – மிக்-29கே, கமோவ்-31 உள்ளிட்டவை

இயக்கவல்ல ஹெலிகாப்டர்கள் – எம்ஹெச்-60ஆர், இலகுரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை

அறைகளின் எண்ணிக்கை – சுமார் 2,300

1. As per the recent update from the IMF (July 2022), what is India’s growth forecast for 2022–23?

A. 6.8%

B. 7.0%

C. 7.4% 

D. 8.0%

  • The International Monetary Fund (IMF) has cut India’s growth forecast for 2022–23 (FY23) to 7.4 per cent, citing less favourable external conditions and fast policy tightening by RBI. Asian Development Bank recently slashed its growth projection for India to 7.2 per cent for FY23, from 7.5 percent.

2. Sir Winston Churchill Leadership Award was recently presented to which leader?

A. Joe Biden

B. Narendra Modi

C. Volodymyr Zelenskyy 

D. Jacinda Ardern

  • British Prime Minister Boris Johnson presented Ukrainian President Volodymyr Zelenskyy with the Sir Winston Churchill Leadership Award. Zelenskyy accepted the award by video link during a ceremony at the London office. Boris Johnson was the first Western leader to visit Ukraine after Russia’s invasion. The Churchill leadership award was first presented in the year 2006.

3. Which country has announced to quit the International Space Station after 2024?

A. China

B. Russia 

C. USA

D. Israel

  • Russia has decided to quit the International Space Station after 2024, as per the newly–appointed chief of Moscow’s space agency. Russia and the United States have worked on the ISS, which has been in orbit since the year 1998. Some of the key accomplishments of the Soviet space programme are sending the first man into space in 1961 and launching the first satellite four years earlier.

4. India has been elected as the host of ICC Women’s Cricket World Cup in which year?

A. 2023

B. 2025 

C. 2027

D. 2030

  • The International Cricket Council (ICC) Board approved Bangladesh, India, England and Sri Lanka as the four host countries of the ICC women’s cricket events. While the ICC Women’s T20 World Cup 2024 will be hosted by Bangladesh for the second time, the 2026 edition goes to England. The next ICC Women’s Cricket World Cup in 2025 will be hosted by India and Sri Lanka will host the Women’s T20 Champions Trophy 2027.

5. As per recent government data, how many tigers died in the last three years in India?

A. 29

B. 129

C. 229

D. 329 

  • According to data presented by Union Minister of State for Environment in the Lok Sabha, India lost 329 tigers in the last three years due to poaching, natural and unnatural causes. It also added that 125 people have been killed in tiger attacks in this period. Around 307 elephants have died in this period due to poaching, electrocution, poisoning and train accidents. Out of them, 222 elephants died due to electrocution in the last three years.

6. ‘Kharchi’ is a traditional festival is celebrated in which state/UT?

A. Assam

B. Tripura 

C. Madhya Pradesh

D. Gujarat

  • ‘Kharchi’ is a week–long traditional festival, in which prayer to 14 Gods and Goddess is offered with religious fervour. The festival began in presence of thousands of devotees from across the country at Khayerpur, Tripura. It started with the bathing procession of the deities at River Haora.

7. What is the proportion of unmarried persons in the range of 15–29 years in 2019, as per a recent NSO Survey?

A. 9%

B. 15%

C. 23% 

D. 32%

  • The National Statistical Office report said that from 2011–2019, the proportion of unmarried persons within the age bracket of 15–29 years has increased from 17.2 per cent to 23 per cent. Among males the percentage of unmarried population raised from 20.8 per cent in 2011 to 26.1 per cent in 2019 while in female, increased from 13.5 per cent in 2011 to 19.9 per cent in 2019.

8. Which Indian Film makers were awarded the Icon Award at the 2022 London Indian Film Festival?

A. Aparna Sen and Nandita Das 

B. Leena Manimekalai and Nandita Das

C. Shankar and Lokesh Kanagaraj

D. Nandita Das and Sudha Kongara

  • Filmmakers Aparna Sen and Nandita Das have been awarded the Icon Award at the 2022 London Indian Film Festival for their contribution to Indian and global cinema. The London Indian Film Festival (LIFF) was held across four cities of London, Birmingham, Manchester and Leeds.

9. Which authority recently issued an advisory to e–commerce platforms on the sale of AYUSH Drugs?

A. Central Consumer Protection Authority 

B. Ministry of AYUSH

C. Ministry of Health and Family Welfare

D. NITI Aayog

  • The Central Consumer Protection Authority (CCPA) has issued an advisory to e–commerce platforms on the sale of Ayurvedic, Siddha and Unani (AYUSH) drugs. As per the advisory, e–commerce platforms should sell Ayurvedic, Siddha and Unani drugs only after customers upload valid medical prescriptions from the registered practitioners on the platforms.

10. Brijendra Kumar Syngal, who passed away recently, was also called as?

A. Father of Green Revolution

B. Father of Internet in India 

C. Father of White Revolution

D. Father of PSUs in India

  • Brijendra Kumar Syngal, who is also referred to as father of Internet in India, passed away recently at the age of 82. He was the former chairman of Videsh Sanchar Nigam Limited. Under his leadership, the company rolled out India’s internet service. He was earlier associated with satellite communications company Inmarsat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!