TnpscTnpsc Current Affairs

28th & 29th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

28th & 29th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th & 29th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Attend Free Test - Install Winmeen App

Question Bank Books - Buy Hard Copy

Samacheer Lesson Wise Test Series - MCQ Pdf & Online Test

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. “பரம் யோதா ஸ்தலம்” அமைந்துள்ள நகரம் எது?

அ. புது தில்லி 

ஆ. லக்னோ

இ. ஜம்மு

ஈ. அமிர்தசரஸ்

 • இந்திய நுழைவாயில் உள்ள அமர் ஜவான் ஜோதியின் ஒருபகுதியாக இருந்த நினைவுச்சின்னமான துப்பாக்கி மற்றும் சிப்பாயின் போர் தலைக்கவசம், 2022 மே.27 அன்று தேசிய போர் நினைவகத்திற்குக்கொண்டு செல்லப்பட்டது. இது, 1971 போரில் இறந்த வீரர்களின் நினைவுச்சின்னமாகும். இந்திய நுழைவாயில் உள்ள அமர் ஜவான் ஜோதி 2022 ஜனவரியில் தேசிய போர் நினைவகத்தில் நித்திய சுடருடன் இணைக்கப்பட்டது.
 • அமர் ஜவான் ஜோதி 1971ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் போரில் இறந்த இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது; அப்போரில் இந்தியா வென்றது; அது வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. 26 ஜனவரி 1972 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் இது திறந்து வைக்கப்பட்டது.

2. ஆப்கானிஸ்தான் தொடர்பான 4ஆவது பிராந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் எது?

அ. தாராஸ், கஜகஸ்தான்

ஆ. தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்

இ. துஷான்பே, தஜிகிஸ்தான் 

ஈ. தெஹ்ரான், ஈரான்

 • தஜிகிஸ்தான், இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், கிர்கிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் 2022 மே.26 அன்று ஆப்கானிஸ்தான் தொடர்பான 4ஆவது பிராந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்காக தஜிகிஸ்தானின் துஷான்பேயில் சந்தித்தனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவின் அணுகுமுறை தொடர்ந்து வழிநடத்தும் எனத் தெரிவித்தார்.

3. 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்ற ரெட்ஸ் மௌசோலியம் என்று முதலில் பெயரிடப்பட்ட “டோம்ப் ஆஃப் சாண்ட்” என்ற நாவலின் ஆசிரியர் யார்?

அ. அனிதா தேசாய்

ஆ. அருந்ததி ராய்

இ. கீதாஞ்சலி ஸ்ரீ 

ஈ. சசி தேஷ்பாண்டே

 • ரீட் கா மக்பரா என்பது புது தில்லியைச் சார்ந்த ஒரு சாதாரண இலக்கியவாதியான கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ஹிந்தி நாவல் ஆகும். இது 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றது; அது அமெரிக்காவில் உள்ள டெய்சி ராக்வெல் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. முதலில் ‘ரெட் கி சமதி’ என்று பெயரிடப்பட்டு 2018இல் வெளியிடப்பட்ட சாண்ட் கா மக்பரா, இம்மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் இந்தி படைப்பாகும். பெங்குயின் இந்தியா அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை 2022 மார்ச்சில் வெளியிட்டது. இந்த நூல், ‘இங்கிலிஷ் பெயின்’ விருதையும் வென்றுள்ளது.

4. மாதவிடாய் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 27 மே

ஆ. 26 மே

Attend Free Test - Install Winmeen App

Question Bank Books - Buy Hard Copy

Samacheer Lesson Wise Test Series - MCQ Pdf & Online Test

இ. 25 மே

ஈ. 28 மே 

 • மாதவிடாய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் சவால்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் தீர்வுகளை முன்னிலைப்படுத்தவுமாக ஆண்டுதோறும் மே.28 அன்று மாதவிடாய் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது. “Making Menstruation a Normal Fact of Life by 2030” என்பது இந்த ஆண்டு (2022) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

5. எத்தனை இந்தியர்களுக்கு 2022ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வழங்கப்பட்டுள்ளது?

அ. ஒன்று

ஆ. இரண்டு

இ. நான்கு 

ஈ. ஆறு

 • பத்திரிகை, நூல்கள், நாடகம் மற்றும் இசை ஆகியவற்றில் புலிட்சர் பரிசு (2022) வென்றவர்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். அதில் நான்கு விருதுகளை இந்தியா பெற்றுள்ளது. பிரபல நிழற்படக்கலைஞரான டேனிஷ் சித்திக் (இறப்பிற்குப்பின்) சிறப்பு நிழற்படமெடுத்தல் பிரிவில் புலிட்சர் விருது பெற்றார். மற்ற இந்திய வெற்றியாளர்கள்: அட்னான் அபிடி, சன்னா இர்ஷாத் மட்டூ மற்றும் அமித் டேவ். நான்கு பேருக்கும் இந்தியாவில் COVID தாக்கங்குறித்த அவர்களின் நிழற்படங்களுக்காக மதிப்புமிக்க புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது.

6. உலக லூபஸ் நாளானது ஆண்டுதோறும் மே.10 அன்று அனுசரிக்கப்படுகிறது. ‘லூபஸ்’ என்றால் என்ன?

அ. அழிந்துவரும் ஒரு மீனினம்

ஆ. ஒரு நோய் 

இ. ஒரு சிறுபான்மை இனம்

ஈ. ஒரு மொழி

 • உடலின் எந்தப்பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நாள்பட்ட தன்னுடல் தாக்க நோயான ‘லூபஸ்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே.10 அன்று ‘உலக லூபஸ் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இவ்வகை நோயில், நோயெதிர்ப்பு அமைப்பு செயலிழந்து, நோய்க்கிருமிகளுக்கும் ஆரோக்கியமான திசுக்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்க முடியாமல், நலமான திசுக்களை அழிக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. லூபஸ் நோயின் மிகவும் பொதுவான அறிகுறிகளாக இடைவிடாத காய்ச்சல், வாய்ப்புண்கள், மூட்டு மற்றும் தசை வலி மற்றும் தீவிர சோர்வு ஆகியவை காணப்படுகிறது.

7. பிளாஸ்டிண்டியா 2023 – 11ஆவது சர்வதேச நெகிழிக் கண்காட்சி மற்றும் மாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. புது தில்லி 

ஆ. சென்னை

இ. திருவனந்தபுரம்

ஈ. வாரணாசி

 • மத்திய வேதி & உரங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பிளாஸ்டிண்டியா 2023 – 11ஆவது சர்வதேச நெகிழிக் கண்காட்சி மற்றும் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
 • பிளாஸ்டிண்டியா அறக்கட்டளையானது 11ஆவது சர்வதேச நெகிழிக் கண்காட்சி மற்றும் மாநாட்டை 2023 பிப்.1–5 வரை புது தில்லியில் அமைந்துள்ள ITPO பிரகதி மைதானத்தில் நடத்தவுள்ளது. இந்திய இரசாயனப்பொருட்களின் ஏற்றுமதி 2013–14–ஐவிட 2021–22–இல் 106% வளர்ச்சியைப் பதிவு செய்தது.

8. NATO’இன் இணையவெளிப் பாதுகாப்புக் குழுவில் இணைந்த முதல் ஆசிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. தென் கொரியா 

இ. இலங்கை

ஈ. வங்காளதேசம்

 • தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை NATO–இன் இணையவெளிப் பாதுகாப்புக் குழுவில் இணைந்த ஆசியாவின் முதல் நாடு ஆனது. தென் கொரியாவானது சீனா மற்றும் வட கொரியாவின் சைபர் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளது. நேட்டோவின் கூட்டுறவு சைபர் டிபென்ஸ் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் (CCDCOE)–க்கு பங்களிக்கும் பங்கேற்பாளராக NIS ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2008–இல் எஸ்டோனியாவில் நிறுவப்பட்ட இணைய பாதுகாப்பு மையமாக இருந்தது மற்றும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி, பயிற்சிகளில் இது கவனஞ்செலுத்துகிறது.

9. ‘Gaudi2’ மற்றும் ‘Greco’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சில்லுகளை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. என்விடியா

ஆ. இன்டெல் 

இ. குவால்காம்

ஈ. சாம்சங்

 • உலகளாவிய சில்லு உற்பத்தியாளரான இன்டெல் கார்ப், செயற்கை நுண்ணறிவு கணினியலில் கவனஞ்செலுத்தும் ‘Gaudi2’ என்ற புதிய சில்லை அறிமுகப்படுத்தியது. இன்டெல் ஆனது ‘Greco’ என்ற புதிய சில்லை அனுமானிக்கும் வேலைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அது AI நெறிமுறை ஒன்றை எடுத்து அதனை கணிப்பது அல்லது ஒரு பொருளை அடையாளங்காணுதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. AI சில்லு சந்தையில் தற்போது என்விடிய கார்ப் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

10. ‘இன்டர்சோலார் ஐரோப்பா – 2022’ நிகழ்வை நடத்தும் நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. முனிச் 

இ. டாக்கா

ஈ. லண்டன்

 • ‘இன்டர்சோலார் ஐரோப்பா – 2022’ ஆனது முனிச்சில் உள்ள இந்தோ–ஜெர்மன் ஆற்றல் மன்றத்தால் (IGEF) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சூரிய மின்னுற்பத்தி தொழிற்துறை மற்றும் அதன் கூட்டாளர்களுக்கான உலகின் முன்னணி கண்காட்சித் தொடராகும். நமது ஆற்றல் விநியோகத்தில் சூரிய ஆற்றலின் பங்கை அதிகரிப்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும். இது பல நாடுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணையமைச்சர் ஸ்ரீ பகவந்த் குபா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. மே.28 – உலக இரத்தப் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்

2. அரசு மருத்துவமனை பிரசவங்களை 75%-ஆக உயர்த்த இலக்கு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது, கர்ப்பிணிகளுக்கான ‘பிக்மி 2.0’ இணையதளத்தில், பேறுகாலத்தை சுயமாகப் பதிவு செய்து, பதிவெண் பெறும் திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு 11 வகை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குறிப்பாக, மஞ்சள் காமாலை, தட்டம்மை, போலியோ, ரூபெல்லா, கக்குவான் இருமல், காசநோய், தொண்டை அடைப்பான், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

முழுமையாக தடுப்பூசி பெற்ற குழந்தைகளின் சதவீதம் 76.1-ஆக இருந்து, 90.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 9.31 இலட்சம் பச்சிளங்குழந்தைகளுக்கும், 10.21 இலட்சம் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியுடன், இவ்வகை தடுப்பூசிகளும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் மாதந்தோறும் 75,000 முதல் 81,000 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், 60 சதவீத பிரசவங்கள் மட்டுமே, அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அடுத்த ஈராண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நடைபெறும் ஆயிரம் பிரசவங்களில் 15 குழந்தைகள் இறக்கும் நிலை இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 13-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பிரசவ உயிரிழப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. கேரளம் முதலிடம் பெற்றுள்ளது. விரைவில், அந்தப் பட்டியலில், தமிழ்நாடு முதலிடம் பெறவேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றார் அவர்.

3. ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள்: தமிழக அரசு உத்தரவு

ஆண்டுக்கு ஆறு நாள்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்ட உத்தரவு:

தமிழகத்தில் குடியரசு நாள், உழைப்பாளர் நாள், சுதந்திர நாள், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவை விதி 110-இன்கீழ் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உத்தரவு வெளியிடப்படுகிறது.

ஆண்டுதோறும் மார்ச்.22-ஆம் தேதி உலக தண்ணீர் நாளாகவும், நவ.1-ஆம் தேதி உள்ளாட்சிகள் நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக, இவ்விரு தினங்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், தண்ணீரின் தேவை, சிக்கனத்தை மனதில் வைத்துச் செயல்பட அறிவுறுத்தும் வகையில் உறுதி ஏற்கப்படும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, உயிர்போல் காப்போம் என்ற உறுதிமொழியை அனைவர் மனதில் ஏற்று அதனை நிறைவேற்ற உறுதிமொழி எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் கிராம சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

நவ.1-ஆம் தேதி உள்ளாட்சிகள் நாளையொட்டி, ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்தக் கூட்டங்களில் ஏதேனும் ஓர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டு, நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டும்.

4. 2035-க்குள் நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்க ஜி7 நாடுகள் உறுதி

எரிசக்தித் துறையில் நிலக்கரி பயன்பாட்டை 2035ஆம் ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஜி7 நாடுகள் உறுதி ஏற்றுள்ளன. பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் ஜி7 கூட்டமைப்பில் உள்ளன. அந்தக் கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஜெர்மனியின் எல்மா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜி7 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்றது. அதில், 2035ஆம் ஆண்டுக்குள் எரிசக்தித் துறையில் நிலக்கரியின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதி ஏற்கப்பட்டது.

கரியமிலவாயு வெளியேற்றமில்லாத சாலைப் போக்குவரத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்தவும் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது. இதன்மூலமாக நடப்பு தசாப்தத்தின் இறுதிவாக்கில் பசுமை எரிசக்தியில் இயங்கும் வாகனங்களே பெரும்பாலும் விற்பனையில் இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

5. புக்கர் பரிசு வென்றார் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்பெற்ற ‘புக்கர்’ பரிசு இந்தாண்டு இந்தியாவைச்சேர்ந்த ஹிந்தி நாவலாசிரியை கீதாஞ்சலி ஸ்ரீ-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் ‘புக்கர்’ பரிசுப்போட்டிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் டாமன் கல்கட் எழுதிய ‘தி பிராமிஸ்’ என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டது.

தற்போது, நடப்பாண்டிற்கான (2022) புக்கர் பரிசுப்போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் 135 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதில் இந்தியாவைச் சேர்ந்த தில்லியில் வசிக்கும் எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ (64) ஹிந்தியில் எழுதிய ‘ரெட் சமாதி’ நாவல் ‘டோம்ப் ஆப் சாண்ட்’ (Tomb of Sand) என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கவனத்தை ஈர்த்ததால் இந்த முறை ‘புக்கர்’ போட்டிக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இறுதிச்சுற்றில் பங்குபெற்ற ஆறு புத்தகங்களில் ஒன்றான, ‘டோம்ப் ஆப் சாண்ட்’ நடுவர்களால் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘புக்கர்’ பரிசை வென்றுள்ளது.

‘புக்கர்’ பரிசுத்தொகையான `50 இலட்சத்தை கீதாஞ்சலி ஸ்ரீ-உம் புத்தகத்தை ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த டெய்சி ராக்வெல்லும் பகிர்ந்துகொள்வார்கள். மேலும், இந்திய மொழியொன்றில் எழுதப்பட்ட புத்தகம் ‘புக்கர்’ பரிசு பெறுவது இதுவே முதல்முறையாகும்.

6. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய ஆவணப்படத்துக்கு விருது

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற 75ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய இயக்குநர் ஷெளனக் சென் இயக்கிய, ‘ஆல் தேட் பிரீத்ஸ்’ ஆவணப்படத்துக்கு ‘தங்கக்கண் விருது’ வழங்கப்பட்டது.

தில்லியைச் சேர்ந்த நதீம், சவூத் ஆகிய இரு சகோதரர்கள் புலம்பெயர்ந்து வரும் பருந்து உள்ளிட்ட பறவைகளை காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பதை கருவாகக் கொண்டது இந்தப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில், சிறப்புக் காட்சியின்போது, ‘ஆல் தேட் பிரீத்ஸ்’ படம் திரையிடப்பட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்து தங்கக்கண் விருதை வென்றுள்ளது.

கேன்ஸ் விழாவில் கடந்த 2 ஆண்டுகளில் இது இந்தியாவுக்கான இரண்டாவது விருதாகும். கடந்த ஆண்டில் பாயல் கபாடியாவின், ‘ஏ நைட் ஆப் நோயிங் நத்திங்’ என்ற ஆவணப்படத்துக்கு இதே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

1. In which city is the “Param Yodha Sthal” located?

A. New Delhi

B. Lucknow

C. Jammu

D. Amritsar

 • The iconic rifle and soldier’s war helmet, which were part of the Amar Jawan Jyoti at India Gate, were taken to the National War Memorial on May 27, 2022. It was a symbol of the soldiers who died in the 1971 war. The Amar Jawan Jyoti at India Gate was merged with the eternal flame at the National War Memorial (NWM) in January 2022.
 • The Amar Jawan Jyoti was built as a memorial to the Indian soldiers who died in action in the Indo–Pak war of 1971, which India won, and thus led to the creation of Bangladesh. It was inaugurated by the then Prime Minister Indira Gandhi on 26 January 1972.

2. What was the venue of the 4th Regional Security Dialogue on Afghanistan?

A. Taraz, Kazakhstan

B. Tashkent, Uzbekistan

C. Dushanbe, Tajikistan 

D. Tehran, Iran

 • The National Security Advisors of Tajikistan, India, Russia, Kazakhstan, Uzbekistan, Iran, Kyrgyzstan and China meet in Dushanbe, Tajikistan for the 4th Regional Security Dialogue on Afghanistan on May 26, 2022. India’s National Security Advisor (NSA) Ajit Doval said it will continue to guide India’s approach.

3. Who is the author of the novel “Tomb of Sand”, originally titled Rhett’s Mausoleum, which has won the 2022 International Booker Prize?

A. Anita Desai

B. Arundhati Roy

C. Gitanjali Shree 

D. Shashi Deshpande

 • Reet Ka Maqbara, a Hindi novel written by Gitanjali Shree based in New Delhi, an ordinary literary figure. It won the International Booker Prize 2022, translated into English by Daisy Rockwell based in the United States.
 • Sand Ka Maqbara, originally titled Rhett Ki Samadhi and published in 2018, is the first Hindi work translated into English to receive the prestigious recognition. Penguin India released its English translation in March 2022. The book has also been the winner of the English Pain Award.

4. Menstrual Hygiene Day is observed on which of the following date?

A. 27 May

B. 26 May

C. 25 May

D. 28 May 

 • Menstrual Hygiene Day is held on 28 May to raise awareness about the challenges faced by women and girls around the world due to menstruation and to highlight solutions that address these challenges. This year theme is, “Making Menstruation a Normal Fact of Life by 2030”.

5. How many Indians have been awarded the Pulitzer Prize 2022?

A. One

B. Two

C. Four 

D. Six

 • The winners of Pulitzer Prize 2022 in journalism, books, drama and music were announced recently and India has received four awards. Ace photographer Danish Siddiqui was posthumously awarded a Pulitzer in the category of Feature Photography. Other Indian winners are Adnan Abidi, Sanna Irshad Mattoo, and Amit Dave. All the four are awarded the prestigious prize for their images of the impact of COVID on India.

6. ‘World Lupus Day’ is observed each year on May 10. What is ‘Lupus’?

A. An endangered fish

B. A Disease 

C. A Minority Race

D. A Language

 • The ‘World Lupus Day’ is observed each year on May 10 to raise awareness about Lupus, a chronic autoimmune disease that can cause damage to any part of the body. In this type of disease, the immune system malfunctions and cannot differentiate between pathogens and healthy tissue and thus creates antibodies that destroy healthy tissue. The most common symptoms of Lupus disease are intermittent fever, recurrent mouth ulcers, joint and muscle pain, and extreme fatigue.

7. Which city is the host of the ‘Plastindia 2023 – 11th International Plastic Exhibition & Conference’?

A. New Delhi

B. Chennai

C. Trivandrum

D. Varanasi

 • Union Minister for Chemicals & Fertilizers and Health & Family Welfare, Dr. Mansukh Mandaviya launched Plastindia 2023–11th International Plastic Exhibition & Conference. Plastindia Foundation will organise the 11th International Plastics Exhibition, Conference and Convention from 1st–5th February, 2023 at ITPO Pragati Maidan, New Delhi. Exports of Indian Chemicals registered growth of 106% in 2021–22 over 2013–14.

8. Which is the first Asian country to join NATO’s cyber defence group?

A. India

B. South Korea 

C. Sri Lanka

D. Bangladesh

 • South Korea’s National Intelligence Service became the first in Asia to join NATO’s cyber defence group. South Korea has been under Cyber–threats from China and North Korea. NIS was accepted as a contributing participant for NATO’s Cooperative Cyber Defence Centre of Excellence (CCDCOE). It was a cyber defence hub founded in Estonia, in 2008 and is focused on cyber–security research, training, and exercises.

9. Which company launched new Artificial Intelligence chips called ‘Gaudi2’ and ‘Greco’??

A. Nvidia

B. Intel 

C. Qualcomm

D. Samsung

 • Global chip manufacturer Intel Corp launched a new chip called Gaudi2 focused on artificial intelligence computing. Intel has also launched a new chip called Greco for inferencing work: taking an AI algorithm and making a prediction or identifying an object. The AI chip market is currently dominated by Nvidia Corp.

10. Which city is the host of ‘Intersolar Europe 2022’ event?

A. New Delhi

B. Munich 

C. Dhaka

D. London

 • ‘Intersolar Europe 2022’ is organised by the Indo–German Energy Forum (IGEF) in Munich. It is the world’s leading exhibition series for the solar industry and its partners. The exhibition aims to increase the share of solar power in our energy supply. It will be represented by several countries and major multinational companies of the Renewable Energy sector. Union Minister of State for Ministry of New and Renewable Energy Shri Bhagwant Khuba represents India.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button