TnpscTnpsc Current Affairs

28th & 29th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th & 29th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th & 29th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. “குளோபல் ஸ்டேட் ஆப் டெமாக்ரசி 2021” அறிக்கையின்படி, எந்த நாடு முதன்முறையாக “பின்சறுக்கும்” மக்களாட்சி நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது?

அ) இந்தியா

ஆ) அமெரிக்கா 

இ) பிரேசில்

ஈ) UK

 • மக்களாட்சி மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம் (IDEA) தனது அறிக்கையை “குளோபல் ஸ்டேட் ஆப் டெமாக்ரசி 2021” என்ற தலைப்பில் வெளியிட்டது. அது முதன்முறையாக அமெரிக்காவை அதன் ஆண்டுப்பட்டியலில் “பின்சறுக்கிச்செல்லும்” மக்களாட்சி நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்தப் பின்னடைவு, 2019’இல் தொடங்கியது என்று தரவு தெரிவிக்கிறது.
 • 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 98 மக்களாட்சிக் குடியரசுகள் உள்ளன. இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற சில நாடுகள் மக்களாட்சிக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை விதித்தன.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘மடோசின்கோஸ் மேனிபெஸ்டோ’, எந்த விண்வெளி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

அ) ISRO

ஆ) NASA

இ) ESA 

ஈ) JAXA

 • ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) கவுன்சில், ஐரோப்பாவில் விண்வெளிப் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்காக ‘Matosinhos Manifesto’க்கு ஒப்புதல் அளித்தது. ESA’இன் 22 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கையொப்பமிட்ட புதிய ஆவணம் “முடுக்கிகள்” என்ற மூன்று அவசர முயற்சிகளை கோடிட்டுக் காட்டுகிறது.
 • விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கும், வியாழனின் உறைந்த நிலவு என்செலடஸை ஆய்வு செய்வதற்கும் ESA’இன் சொந்த அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இரு திட்டங்களிலும் அவர்கள் கையெழுத்திட்டனர்.

3. கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆற்றுப்படுகைகள் குறித்த WMO கூட்டம் நடைபெறுகிற இடம் எது?

அ) வாரணாசி

ஆ) புது தில்லி 

இ) பாட்னா

ஈ) லக்னோ

 • உலக வானிலை அமைப்பு (WMO), புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா (GBM) ஆற்றுப்படுகைகள்குறித்த கூட்டம் சமீபத்தில் புது தில்லியில் தொடங்கியது. நேபாளம், வங்கதேசம், பூடான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
 • இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் எல்லைக்குட்பட்ட GBM ஆற்றுப் படுகைகளைப் பகிர்ந்துகொள்வது, நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் அணைநீர்பற்றிய தரவுகளைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் அமைப்பான ஹைட்ராலஜிக்கல் SOS அமைப்பை உருவாக்கத்திட்டமிட்டுள்ளன.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற தாந்தியா மாமா, எந்த மாநிலத்தின் பழங்குடியினத் தலைவராவார்?

அ) கர்நாடகா

ஆ) மகாராஷ்டிரா

இ) மத்திய பிரதேசம் 

ஈ) ஜார்கண்ட்

 • மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், இந்தூரில் உள்ள பதல்பானி ரயில் நிலையம், ‘தாந்தியா மாமா இரயில் நிலையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார். தாந்தியா, மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த பழங்குடி ஆதிவாசி சமூகமான பில் பழங்குடி இனத்தைச்சேர்ந்தவர். பில்லின் மாமா தாந்தியா, டிச.4ஆம் தேதி அன்று ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

5. 12 மணி நேரத்திற்குள் பதவியை ராஜினாமா செய்த “மக்டலேனா ஆண்டர்சன்”, எந்த நாட்டின் முதல் பெண் பிரதமராவார்?

அ) டென்மார்க்

ஆ) ஆஸ்திரேலியா

இ) சுவீடன் 

ஈ) அயர்லாந்து

 • சமூக மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த மக்டலேனா ஆண்டர்சன் சுவீடனின் முதல் பெண் பிரதமராவார். அவர் சமீபத்தில் பன்னிரண்டு மணிநேரத்திற்குள் அந்தப் பதவியில் இருந்து விலகினார். கூட்டணியில் சிறுபான்மையாக இருந்த பசுமைக்கட்சி விலகியதை அடுத்து, கூட்டணி -யின் பலம் குறைந்ததால் அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

6. அனைத்து NFSA பயனாளிகளுக்கும் நபர் ஒன்றுக்கு மாதம் 5 கிகி தானியத்தை இலவசமாக வழங்கும் திட்டத்தின் பெயரென்ன?

அ) PM – KVY

ஆ) PM – JDY

இ) PM – FBY

ஈ) PM – GKAY 

 • COVID தொடர்பான இடையூறுகள் மற்றும் பொதுமுடக்கங்களை அடுத்து இந்திய அரசாங்கத்தால் “பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா” தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் அனைத்து NFSA பயனாளிகளுக்கும் நபர் ஒன்றுக்கு மாதம் ஐந்து கிலோ தானியங்களை இலவசமாக வழங்க முற்படுகிறது. சமீபத்தில், இந்தத் திட்டத்தை 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரை நீட்டிப்பதாக இந்திய அரசு அறிவித்தது.

7. தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வின்படி (NFHS-5), 2019-2021’இல் நாட்டில் 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர்?

அ) 1000

ஆ) 941

இ) 1020 

ஈ) 916

 • இந்திய அரசின் மத்திய சுகாதார அமைச்சகம், 2019 மற்றும் 2021’க்கு இடையில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வின் (NFHS-5) ஐந்தாவது சுற்று முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வின்படி, 2019-2021’இல், நாட்டில் ஆயிரம் ஆண்களுக்கு ஆயிரத்து இருபது பெண்கள் உள்ளனர். மேலும், மொத்த கருவுறுதல் விகிதம் இரண்டு சதவீதமாக குறைந்துள்ளது.

8. புராஜெக்ட் 75’இன்கீழ், அண்மையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்ட நான்காவது மறைந்திருந்து தாக்கும் ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக்கப்பல் எது?

அ) INS சக்ரா

ஆ) INS ஹம்சா

இ) INS ஹம்லா

ஈ) INS வேலா 

 • புராஜெக்ட் 75’இன்கீழ் கட்டப்பட்ட இந்தியாவின் 4ஆவது மறைந்திருந்து தாக்கும் ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக்கப்பலான INS வேலா இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை பிரான்ஸின் கடற்படைக் குழுவுடன் இணைந்து மசகான் கப்பல்கட்டும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஐஎன்எஸ் கல்வாரி, கந்தேரி, கரஞ்ச் ஆகிய மூன்று ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்பட்டு கடற்படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன.

9. 50,000 டன் கோதுமை மற்றும் உயிர்க்காக்கும் மருந்துகளை எந்த நாட்டுக்கு கொண்டுசெல்வதற்கு பாகிஸ்தான் இந்தியாவை அனுமதித்துள்ளது?

அ) துர்க்மெனிஸ்தான்

ஆ) ஈரான்

இ) ஆப்கானிஸ்தான் 

ஈ) தஜிகிஸ்தான்

 • இந்தியாவிலிருந்து 50,000 டன் கோதுமை மற்றும் உயிர்க்காக்கும் மருந்துகளை வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
 • இந்த அனுமதி ஆப்கானிஸ்தானுக்கு ஒரு நல்லெண்ண முறையாக அளிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் கோதுமை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எந்த விமானப் போக்கு வரத்துமில்லாத காரணத்தாலும், பாகிஸ்தானின் அனுமதி நிலுவையில் இருந்த காரணத்தாலும் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது.

10. ஐநா பொது அவையின் சமீபத்திய தீர்மானத்தின்படி, வங்காள தேசமும் நேபாளமும் எப்புதிய வகையின்கீழ் வைக்கப்பட்டுள்ளன?

அ) குறைந்த வளர்ச்சியடைந்த நாடு

ஆ) வளரும் நாடு 

இ) ஏழை நாடு

ஈ) நடுத்தர வருமானம் கொண்ட நாடு

 • வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட மூன்று நாடுகளை, “குறைந்த வளர்ச்சியடைந்த நாடு’கள் என்ற வகையிலிருந்து ‘வளரும் நாடு’ என்ற வகையில் வைப்பதற்கான தீர்மானத்தை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது. வங்காளதேசம், நேபாளம் மற்றும் லாவோ மக்களாட்சிக் குடியரசு உள்ளிட்ட 3 நாடுகளுக்கு இந்தத் தகுதியை வழங்கிய UNGA 76ஆவது அமர்வில் இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

உலக தமிழ் நிறுவனம் சார்பில் லண்டன் 4ஆவது சர்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

2. கங்கை நதி புனரமைப்புத் திட்டம்: பிரிட்டனில் 4 குழுக்கள் தொடக்கம்

கங்கை நதி புனரமைப்புத் திட்டத்தின் பகுதியாக தேசிய கங்கை நதி தூய்மை அமைப்பும், பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து அந்நாட்டில் 4 குழுக்களை தொடங்கியுள்ளன. லண்டன், மிட்லேண்ட்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நான்கு கங்கை இணைப்பு குழுக்கள் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு குழுவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பர். அவர்கள் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஆர்வமுள்ள விஞ்ஞானி -கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைப்பர். அவர்கள்மூலம் கங்கை நதியை புனர
-மைக்கும் முயற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்படும்.

3. சென்னையில் நவம்பரில் அதிகபட்ச மழை: 200 ஆண்டுகளில் 3ஆவது முறையாக பதிவு

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளநிலையில், 200 ஆண்டுகளில் 3ஆவது முறையாக சென்னையில் நவம்பர் மாதத்தில் அதிகபட்ச மழைஅளவு (1000 மிமீ மழை அளவு தாண்டி) பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தற்போது மிகத் தீவிரமாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்துவருகிறது. அதிலும், சென்னையில் கடந்த சில நாள்களாக மிதமானது முதல் பலத்தமழை வரை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மிகப்பலத்தமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நவம்பர் மாதத்தில், 200 ஆண்டுகளில் 3ஆவது முறையாக அதிகபட்ச மழை அளவு (1000 மிமீ) தற்போது பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்.1 முதல் நவ.27) சென்னையில் சராசரி மழை அளவு 600.2 மிமீ ஆகும். தற்போது வரை 1064.2 மிமீ பெய்துள்ளது. இது 77% அதிகம். மேலும், சென்னையில் 200 ஆண்டுகளில் நவம்பரில் அதிகபட்ச மழை அளவு பொருத்தவரை, 3ஆம் முறையாக, நிகழாண்டில் 1000 மிமீ மழை அளவைத் தாண்டியுள்ளது.

கடந்த 1918ஆம் ஆண்டு நவம்பரில் 1088 மிமீ மழை அளவும், 2005ஆம் ஆண்டு அக்டோபரில் 1078 மிமீ மழை அளவும், 2015ஆம் ஆண்டு நவம்பரில் 1049 மிமீ மழை அளவும் பதிவாகியது. 2021ஆம் ஆண்டு நவ.27’இல் 1064 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. 200 ஆண்டுகளில் நவம்பரில் 3ஆவது முறையாகவும், மற்ற மாதங்களைப் பொருத்தவரை 4ஆவது முறையாகவும் ஆயிரம் மிமீ மழை அளவைத் தாண்டியுள்ளது.

4. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற இயக்கத்தை முன்னெடுக்க முடிவு

மக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுத்து துணிப்பைகளை உபயோகிக்கும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற இயக்கத்தை தமிழக அரசு முன்னெடுக்க இருக்கிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிளாஸ்டிக் தீங்கு

பிளாஸ்டிக்கால் இந்த உலகம் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறது. ஒருமுறை உபயோகித்து வீசப்படும் பிளாஸ்டிக்குகள் 40 சதவீதம் உலகளவில் தயார் செய்யப்படுகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை தூக்கி வீசப்பட்ட பிறகு சுற்றுச்சூழலில் பல ஆயிரம் ஆண்டுகள் தங்கி விடுகின்றன. இவற்றால் மண், ஆறுகள், கடல்களில் மிகப்பெரிய பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக்குகள் எரிக்கப்படும்போது, அவற்றில் இருந்து வரும் புகை கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த பிளாஸ்டிக்கினால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மிருகங்கள் பலியாகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகள்

சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு, ஆண்டுதோறும் உலகளவில் 14 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் கடலில் சென்று சேருவதாக ஒரு புள்ளி விவரத்தை கூறுகிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி 2019-20-ம் ஆண்டில் 34 லட்சத்து 69 ஆயிரத்து 780 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தேக்கமடைந்தன. தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 472 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அந்த ஆண்டில் தேங்கியிருந்தன.

பிளாஸ்டிக்குக்கு எதிரான மக்கள் இயக்கம்

எனவே ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக்குகளை தயாரிப்பது, சேமித்து வைப்பது, வினியோகம் செய்வது, போக்குவரத்துக்கு கொண்டுசெல்வது, விற்பனை செய்வது போன்றவற்றை 25.6.2018-ல் இருந்து தடை செய்தது. ஒருமுறை உபயோகித்து வீசப்படும் பிளாஸ்டிக்குகளான உணவை பொட்டலம் போடும் பிளாஸ்டிக், சாப்பாடு மேஜையில் விரிக்கும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பிளேட்டுகள், டீ கப்புகள், டம்ளர்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பிளாஸ்டிக்குகள், ஸ்டிரா, கேரி பேக், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை இதில் அடங்குகின்றன. இந்த தடை உத்தரவு 1.1.2019-ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த தடை உத்தரவு அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்றையும் அரசு அமைத்திருந்தது.

இந்தநிலையில் சட்டசபையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 3.9.2021 அன்று தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அமல்படுத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் வர்த்தக சங்கங்கள், சமூக நல அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை இணைத்து அமல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர்களின் வழிகாட்டுதலின்படி பிளாஸ்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதை 4 வகைகளாக பிரித்து அரசு அமல்படுத்தும்.

‘மீண்டும் மஞ்சப்பை’

இந்த பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை அரசு ஆதரிக்கும். மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும்.

இந்த பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிப்பதற்கு குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். அதன்படி ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற தலைப்பில் மாநில அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். மஞ்சப்பை என்பது தமிழக கலாசாரத்தில் இணைந்த ஒன்றாகும்.

ஜெர்மன் நாட்டின் அமைப்புடன் இணைந்து…

இந்த மஞ்சப்பை பிரசாரத்தின் மூலம் மக்கள் பிளாஸ்டிக் பைகளை புறக்கணித்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஜெர்மன் நாட்டின் அமைப்புடன் இணைந்து செயல்படுத்தும். பொட்டலம் போடுவதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் அடையாளம் காணப்படும்.

பள்ளி-கல்லூரிகளில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படும். இளைஞர்கள் இந்த பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படுவார்கள். இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழுக்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1. As per the “Global State of Democracy 2021” report, which country was added to the list of “backsliding” democracies, for the first time?

A) India

B) USA 

C) Brazil

D) UK

 • The International think tank International Institute for Democracy and Electoral Assistance (IDEA) released its report titled “Global State of Democracy 2021”. It added the United States to its annual list of “backsliding” democracies for the first time. It also stated that their data suggests that the backsliding episode began at least in 2019.
 • As of 2021, the world will have 98 democracies, the lowest number in many years, some countries like India, the Philippines and the USA imposed measures that amount to democratic violations.

2. ‘Matosinhos Manifesto’, which was seen in the news, is approved by which space agency?

A) ISRO

B) NASA

C) ESA 

D) JAXA

 • The European Space Agency (ESA) council approved the ‘Matosinhos Manifesto’ to accelerate the use of space in Europe. The new document signed by ministers from the ESA’s 22 member states outlines three urgent initiatives named “Accelerators”. They also signed two missions, which aim to establish the ESA’s own system to launch astronauts into space and to probe Jupiter’s frozen moon Enceladus.

3. WMO Meeting on the Ganga-Brahmaputra-Meghna (GBM) river basins is being held in which place?

A) Varanasi

B) New Delhi 

C) Patna

D) Lucknow

 • A meeting on the Ganga–Brahmaputra–Meghna (GBM) river basins, jointly organised by the World Meteorological Organisation (WMO), Ministry of Earth Sciences (MoES) and India Meteorological Department (IMD), recently began in New Delhi. Scientists from Nepal, Bangladesh, Bhutan and China are attending the meeting.
 • India and its neighbouring countries sharing the trans–boundary GBM basins are planning to develop a Hydrological SOS system, a system to share data on reservoirs, rivers and dam waters.

4. Tantya Mama, who was seen in the news, was a tribal leader of which state?

A) Karnataka

B) Maharashtra

C) Madhya Pradesh 

D) Jharkhand

 • Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan announced that Patalpani railway station in Indore will be renamed as Tantya Mama railway station. Tantia was a member of the Bhil tribe, of the indigenous Adivasi community, born in Madhya Pradesh. Mama Tantya Bhil’s was hanged by the British on 4th December.

5. “Magdalena Andersson” was the first female prime minister of which country, who has resigned in less than 12 hrs of office?

A) Denmark

B) Australia

C) Sweden 

D) Ireland

 • The Social Democrat Magdalena Andersson was Sweden’s first female prime minister, who has recently resigned from the top post in less than 12 hours. She was forced to resign as the PM because of the collapse of the coalition when the Green party, a minority in the coalition, had quit.

6. What is the name of the scheme, which provides five kg grain per person per month free of cost to all NFSA beneficiaries?

A) PM – KVY

B) PM – JDY

C) PM – FBY

D) PM – GKAY 

 • The Pradhan Mantri Garib Kalyan Anna Yojana was launched by the Government of India in wake of COVID 19 related disruptions and lockdown. The scheme envisages to provide five kg grain per person per month free of cost to all NFSA beneficiaries.
 • Recently, the Government of India has announced to extend the scheme from December 2021 till March 2022.

7. As per the National Family and Health Survey (NFHS–5), there are how many women for 1000 men in the country in 2019–2021?

A) 1000

B) 941

C) 1020 

D) 916

 • The Government of India’s Union health ministry has recently released the results of the fifth round of the National Family and Health Survey (NFHS–5), conducted in two phases between 2019 and 2021. As per the survey, in 2019–2021, there are 1020 women for 1000 men in the country. Also, the total fertility rate has come down to 2.

8. Which is the 4th stealth Scorpene class submarine that was commissioned to the Indian Navy recently, under Project 75?

A) INS Chakra

B) INS Hamsa

C) INS Hamla

D) INS Vela 

 • The Indian Navy has commissioned and inducted INS Vela, which is India’s fourth stealth Scorpene class submarine built under Project 75. The vessel was built by Mazagon Dock Shipbuilders Ltd in association with Naval Group of France.
 • INS Kalvari, Khanderi, Karanj are the other three Scorpene class submarines built and inducted into the Navy.

9. Pakistan has permitted India to transport 50,000 tonnes of wheat and life–saving medicines to which country?

A) Turkmenistan

B) Iran

C) Afghanistan 

D) Tajikistan

 • The Government of Pakistan has officially permitted India to transport 50,000 tonnes of wheat and life–saving medicines from India to Afghanistan, through the Wagah land border. This permission comes as a goodwill gesture to the Afghan. India has offered to supply wheat and other essential items on humanitarian grounds to Afghanistan. But, with no flight operations to Afghanistan, the supply was not being carried out pending clearance from Pakistan.

10. What is the new category of Bangladesh and Nepal, as per UN General Assembly’s recent resolution?

A) Least developed country

B) Developing country 

C) Poor Country

D) Middle Income Country

 • The UN General Assembly has adopted a historic resolution to graduate three nations, including Bangladesh and Nepal, from the least developed country category to the developing country grouping. The UNGA adopted the resolution at its 76th session, which graduated three countries including Bangladesh, Nepal and the Lao People’s Democratic Republic.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button