Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

28th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

28th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022-23 பயிராண்டுக்கு அறிவிக்கப்பட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கு என்ன?

அ) 278 மில்லியன் டன்கள்

ஆ) 328 மில்லியன் டன்கள் 

இ) 378 மில்லியன் டன்கள்

ஈ) 428 மில்லியன் டன்கள்

  • கரீப் இயக்கம் 2022-23-க்கான வேளாண்மை குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • 2022-23ஆம் ஆண்டுக்கான மொத்த உணவு தானிய உற்பத்திக்கு 3,280 இலட்சம் டன் இலக்கினையும், பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 295.5 மற்றும் 413.4 இலட்சம் டன்களாக இந்தக் கருத்தரங்கில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது மதிப்பீட்டின்படி, (2021-22) மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி 3,160 இலட்சம் டன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2. பின்வரும் எந்தத் திட்டத்தின் கீழ், ‘தேசிய பயிற்சி மேளா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

அ) பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம்

ஆ) ஸ்கில் இந்தியா 

இ) இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்

ஈ) தொடங்கிடு இந்தியா திட்டம்

  • ஸ்கில் இந்தியா, பயிற்சிக்கான தலைமை இயக்குநரகத்து -டன் இணைந்து, நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு நாள் முழுவதும், ‘தொழில் பழகுநர் திருவிழா’வை நடத்துகிறது. இந்த முயற்சியானது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ‘NAPOLREX’ என்ற தேசிய அளவிலான மாசு மறுமொழி பயிற்சியை ஏற்பாடு செய்கிற இந்திய ஆயுதப்படை எது?

அ) இந்திய இராணுவம்

ஆ) இந்திய கடற்படை

இ) இந்திய வான்படை

ஈ) இந்திய கடலோரக் காவல்படை 

  • கோவாவில் உள்ள மர்மகோவா துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைமூலம் தேசிய அளவிலான மாசு மறுமொழி பயிற்சி – ‘NATPOLREX’ நடத்தப்படுகிறது.
  • மத்திய பாதுகாப்புச்செயலாளர் அஜய் குமார் இந்த இரண்டு நாள் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

4. ‘தேசிய உலோகவியல் வல்லுநர் விருது – 2021’ நிகழ்வை நடத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) எஃகு அமைச்சகம் 

இ) MSME அமைச்சகம்

ஈ) வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

  • மத்திய எஃகு அமைச்சகமானது புது தில்லியில், “தேசிய உலோகவியல் விருது – 2021” நிகழ்வை நடத்தியது.
  • இந்த நிகழ்ச்சிக்கு மத்திய உருக்குத்துறை அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் தலைமைதாங்கினார். இரும்பு மற்றும் எஃகு துறையில் பணிபுரியும் உலோகவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. ஆடவருக்கான T20 கிரிக்கெட்டில் 10,000 இரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ) மகேந்திர சிங் தோனி

ஆ) விராத் கோலி

இ) ரோகித் சர்மா 

ஈ) இரவீந்திர ஜடேஜா

  • ஆடவருக்கான T20 கிரிக்கெட்டில் 10,000 இரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை டீம் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார். விராத் கோலி கடந்த ஆண்டு 10,000 T20 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் ஆனார்.
  • அதேவேளையில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் T20 கிரிக்கெட்டில் 5 இலக்க ரன்களை எட்டிய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் ஆவார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா இந்த வரலாற்றுச் சாதனையை எட்டினார்.

6. ‘உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு உச்சிமாநாடு – 2022’ நடத்தப்படுகிற நகரம் எது?

அ) வாரணாசி

ஆ) கொச்சி

இ) காந்திநகர் 

ஈ) சிம்லா

  • ‘உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு உச்சி மாநாடு – 2022’ என்பது ஆயுஷ் அமைச்சகத்தால் இந்தத் துறையில் முதலீடுகளைத் தேடுவதற்கும் பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளுக்கான மையமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இது குஜராத்தின் காந்திநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. இந்தியாவின் முதல் தூய பசுமை ஹைட்ரஜன் ஆலை திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) அஸ்ஸாம் 

இ) மேற்கு வங்கம்

ஈ) ஒடிஸா

  • இந்திய எண்ணெய் நிறுவனம் (OIL) இந்தியாவின் முதல் 99.999% தூய பசுமை கைட்ரஜன் ஆலையை அஸ்ஸாம் மாநிலத்தில் நிறுவியது.
  • இரண்டாவது பெரிய தேசிய உற்பத்தி மற்றும் ஆய்வு நிறுவனமான OIL, அதன் ஜோர்ஹட் பம்ப் நிலையத்தில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை தொடங்கியது. இந்த ஆலை நாளொன்றுக்கு 10 கிகி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. AEM (அயனி பரிமாற்ற சவ்வு) பயன்படுத்தும் இந்தியாவின் முதல் ஆலை இதுவாகும்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Ariosoma indicum சார்ந்த இனம் எது?

அ) ஆமை

ஆ) தவளை

இ) விலாங்கு மீன் 

ஈ) மரப்பல்லி

  • கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து, ‘Ariosoma indicum’ என்ற புதிய விலாங்கு மீன் இனத்தை இந்திய அறிவியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலாங்கு மீன் இனம், காங்கிரிட் ஈல்ஸ் குழுவைச் சேர்ந்தது. இண்டிகம் என்ற சொல்லுக்கு இந்தியாவில் காணப்பட்டது என்று பொருள்.

9. தொலைமருத்துவ சேவையை உறுதிசெய்வதற்காக கீழ்காணும் எந்தெந்த நிறுவனங்களில், ‘இ-சஞ்சீவனி’ வசதி தொடங்கப்படவுள்ளது?

அ) ஆயுஷ்மான் பாரத்–சுகாதார & நலவாழ் மையங்கள் 

ஆ) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்

இ) மாவட்ட மருத்துவமனைகள்

ஈ) AIIMS மருத்துவமனைகள்

  • தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களைப் பாதுகாக்க, 1 லட்சம் ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் தொலைமருத்துவ ஆலோசனை வசதி ஆன, ‘இ-சஞ்சீவனி’ஐத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் & நலவாழ் மையங்களின் 4ஆவது ஆண்டு விழாவில், 1 இலட்சம் மையங்களில் ‘இ-சஞ்சீவனி டெலி-கன்சல்டேஷன்’ வசதி தொடங்கப்படும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சென்னகேசவர் கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா 

ஈ) ஒடிஸா

  • பேளூரில் அமைந்துள்ள சென்னகேசவர் கோவிலின் தேர்த்திருவிழா அதன் பாரம்பரியமான மௌலவி ஒருவர் குர்ஆன் பத்திகளை ஓதியதைத் தொடர்ந்து நிகழ்ந்தது. கர்நாடக மாநில அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்த நடைமுறைக்கு அனுமதியளித்தனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் திட்டம் குறித்த மாநாட்டிற்கு NITI ஆயோக் ஏற்பாடு

விடுதலைப்பெருவிழாவின் ஒருபகுதியாக, முன்னேற்றத் -தை விரும்பும் மாவட்டங்களின் திட்டம் குறித்த ஒரு நாள் மாநாட்டிற்கு NITI ஆயோக் ஏற்பாடு செய்திருந்தது.

‘பங்கேற்பின்மூலம் செழுமை’ என்ற தலைப்பிலான இந்த மாநாட்டில், முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மத்திய அரசின் பொறுப்பு அதிகாரிகள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் NITI ஆயோக்கின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘மாற்றத்தின் கதைகள்’ என்ற தலைப்பில் முன்னேற்றத்
-தைவிரும்பும் மாவட்டங்களின் 30 புதுமை முயற்சிகளும் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது. பழக்கவழக்க கொள்கைகள் பயன்பாடு, புதுமை கண்டுபிடிப்புகள், பிரதிபலிப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இப் புதுமை முயற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

2. திரைத்துறையினருக்கு கருணாநிதி பெயரில் விருது: அமைச்சர் மு பெ சாமிநாதன் அறிவிப்பு

திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அறிவித்தார்.

தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் ஊடக மையத்துக்கு புதிய நவீன தொழில்நுட்பக் கருவிகள், தற்போது வளர்ந்துவரும் நவீன அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு `14 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு MGR திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அமைந்துள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தை முழு அளவில் புனரமைக்கும் பணிகள், பழைய மாணவர் விடுதி, நீதி மன்றம், சிறைச்சாலை, காவல் நிலையம் ஆகிய படப் பிடிப்புக்கட்டடங்களைச்சீரமைக்கும் பணிகள், படப்பிடிப்புத் தளத்தில் மையப்படுத்தப்பட்ட குளிர்சாதனக் கருவிகள் புதிதாக அமைக்கும் பணிகள், இரண்டு புதிய மின் மாற்றிகள் நிறுவும் பணிகள், இதர மின்சீரமைப்புப் பணிகள் ஆகியவை `5.10 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

திரைப்படத்துறையில் மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருபவ -ர்களுக்கு ‘கலைத்துறை வித்தகர்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்.3-இல் வழங்கப்படும். இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விருதாளருக்கு `10 இலட்சம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்படும்.

3. மாயூரம் வேதநாயகத்துக்கு அரங்கம், சிலை: அமைச்சர் மு பெ சாமிநாதன்

தமிழில் முதல் நாவல் (பிரதாப முதலியார் சரித்திரம்) எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு சிலை, அரங்கம் மயிலாடுதுறையில் அமைக்கப்படும் எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அறிவித்தார்.

தமிழில் முதல் நாவல் (பிரதாப முதலியார் சரித்திரம் -எழுதப்பட்டது 1857; வெளியிடப்பட்டது 1879) எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் `3 கோடியில் அரங்கம், சிலை அமைக்கப்படும்.

வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கம், அண்ணா பல்நோக்கு கலையரங்கமாக `10 கோடி செலவில் மாற்றி புதிதாகக்கட்டப்படும். தருமபுரியில் அமைந்துள்ள அதிய
-மான் கோட்டம் `1 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

4. 2023-க்குள் ‘எண்மச் செலாவணி’ அறிமுகம்: மத்திய நிதியமைச்சர்

இந்தியாவில் 2023-க்குள் ‘எண்மச்செலாவணி’ (டிஜிட்டல் கரன்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ‘இந்தியாவின் எண்ம (டிஜிட்டல்) புரட்சியில் முதலீடு’ என்ற மையக்கருத்தில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களின் தொழிற்சார்ந்த யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியாவில் அதிக அளவில் புதிய தொழில் (ஸ்டார்ட்-அப்) தொடங்கும் சூழலை உருவாக்க இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை சார்பில் ஸ்டார்ட்-அப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய தொழில் தொடங்க விரும்புவோர் டிபிஐஐடியை அணுகலாம்.

எண்மமயமாக்கல் முயற்சியில், இந்தியாவில் 2023-ஆம் ஆண்டுக்குள் எண்மச் செலாவணி அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது’ என்றார் அவர்.

1. What is the food–grain production target announced for crop year 2022–23?

A) 278 million tonnes

B) 328 million tonnes 

C) 378 million tonnes

D) 428 million tonnes

  • The ‘National Conference on Agriculture: Kharif Campaign 2022’ was inaugurated by Union Agriculture Minister Narendra Singh Tomar. During the event, the government announced a food–grain production target of 328 million tonnes for 2022–23.
  • Kharif food–grain production target has been fixed at 163.15 million tonnes, while Rabi food–grain production target has been kept at 164.85 million tonnes. Total food grain production has increased by 25% in the last 6 years from 251.54 to 316.01 million tonnes.

2. ‘National Apprenticeship Mela’ has been organised under which mission?

A) PM Rozgar Yojana

B) Skill India 

C) Make in India

D) Start up India

  • Skill India, in association with the Directorate General of Training (DGT), is organising a day–long ‘Apprenticeship Mela’ across the country in more than over 700 locations. The initiative aims to support hiring of more than one lakh apprentices.

3. Which Indian Armed Force organises the National Level Pollution Response Exercise – NATPOLREX?

A) Indian Army

B) Indian Navy

C) Indian Air Force

D) Indian Coast Guard 

  • The National Level Pollution Response Exercise NATPOLREX is being conducted by the Indian Coast Guard of Mormugao harbour in Goa.
  • Union Defence Secretary Ajay Kumar inaugurated the ‘NATPOLREX’, the two–day marine spill preparedness exercise.

4. Which Union Ministry hosted the ‘National Metallurgist Award 2021’ event?

A) Ministry of Science and Technology

B) Ministry of Steel 

C) Ministry of MSME

D) Ministry of Commerce and Industry

  • The Union Ministry for Steel hosted “National Metallurgist Award 2021” event at New Delhi. The program was chaired by the Union Minister of Steel, Ram Chandra Prasad Singh. The program aims to recognise the outstanding contribution of metallurgists and engineers working in the field of Iron and Steel.

5. Who is the first Indian cricketer to hit 10,000 runs in T20 cricket for men?

A) Mahendra Singh Dhoni

B) Virat Kohli

C) Rohit Sharma 

D) Ravindra Jadeja

  • Team India and Mumbai Indians Captain Rohit Sharma has become the second Indian batter to complete 10,000 runs in T20 cricket for men.
  • Virat Kohli became the first Indian batter to score 10,000 T20 runs last year while West Indies legend Chris Gayle was the first cricketer in the world to reach the five–figure mark in T20 cricket. Rohit Sharma achieved this historic milestone during the match against Punjab Kings.

6. Which city is the host of the ‘Global Ayush Investment and Innovation Summit 2022’?

A) Varanasi

B) Kochi

C) Gandhinagar 

D) Shimla

  • ‘Global Ayush Investment and Innovation Summit 2022’ was organised by the AYUSH Ministry to seek investments into the sector and to develop India as the hub for traditional medicine practices. It is organised in the city of Gandhinagar, Gujarat.

7. India’s 1st pure green hydrogen plant has been commissioned in which state?

A) Gujarat

B) Assam 

C) West Bengal

D) Odisha

  • The Oil India Limited (OIL) commissioned India’s first 99.999 percent pure green hydrogen plant in the state of Assam.
  • OIL, the second largest national production and exploration firm commissioned the green hydrogen plant at its Jorhat Pump Station. The plant has an installed capacity of producing 10 kg of hydrogen each day. It is also India’s first plant to use AEM (anion exchange membrane).

8. Ariosoma indicum, which was seen in the news, belongs to which species?

A) Turtle

B) Frog

C) Eel 

D) Gecko

  • A group of Indian scientists have discovered a new species of eel named ‘Ariosoma indicum’ from specimens collected from fishing harbours in Kerala and West Bengal. The newly discovered eel belongs to the Congrid eels’ group. The term Indicum means that it was found in India.

9. The ‘e–Sanjeevani’ facility is set to be launched at which institutions, to ensure coverage in remote areas?

A) Ayushman Bharat–Health and Wellness Centres 

B) Urban Primary Health Centres

C) District Hospitals

D) AIIMS Hospitals

  • To cover maximum number of people from the remote areas, the Government has planneds to launch the tele–consultation facility ‘e–Sanjeevani’ at 1 lakh Ayushman Bharat–Health and Wellness Centres (AB–HWCs).
  • The Health Ministry announced that on the occasion of the 4th anniversary of Ayushman Bharat Health and Wellness Centres, ‘e–Sanjeevani Tele–consultation’ facility will be launched at 1 lakh centres.

10. Chennakeshava temple, which was seen in the news, is located in which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka 

D) Odisha

  • The Chennakeshava temple in Belur continued with its tradition of starting the chariot festival after reciting passages from the Quran by a Maulvi.
  • The Karnataka Endowment department allowed the temple authorities to go ahead with the practice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!