28th August 2020 Current Affairs in Tamil & English

28th August 2020 Current Affairs in Tamil & English

28th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

28th August 2020 Current Affairs Pdf Tamil

28th August 2020 Current Affairs Pdf English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. COVID-19 தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரால் தொடங்கப்பட்ட ஊடாடும் காணொளி ஆட்டத்தின் பெயரென்ன?

அ. Healthy Fighter

ஆ. Social Warriors

இ. Corona Warriors

ஈ. Corona Fighters

 • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் COVID-19 குறித்த ஊடாடும் விளையாட்டு ஒன்றை தொடங்கிவைத்தார். இந்த வகையில் முதல் விளையாட்டான கொரோனா போராளிகள் (www.thecoronafighters.in) மற்றும் COVID-19’க்கு உரிய நடத்தையைப் பின்பற்றுவதை வலியுறுத்தும் இரண்டு புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டார்.
 • இவ்விளையாட்டு, COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்துக்கு உரிய நடத்தைகள் மற்றும் சரியான கருவிகளை மக்களுக்கு கற்பிக்கும் சிறந்த, புதிய படைப்பாற்றலை வழங்குகிறது. இத்துடன் வெளியிடப்பட்டு இரண்டு காணொளிகள், பொதுமக்களுக்கு பரந்த அளவில் முக்கியமான தகவல்களை, சுவாரசியமான முறையில் வழங்கும் ஊடகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

2.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அடல் பிமித் வியாகி கல்யாண் யோஜனா’வுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. தேசிய காப்பீட்டு நிறுவனம்

ஆ. பணியாளர்கள் & அரசுக்காப்பீட்டுக் கழகம்

இ. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

ஈ. இந்திய சிறு தொழிலகங்கள் மேம்பாட்டு வங்கி

 • ESI திட்டத்தின்கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் நிவாரணத்தொகை அளிக்கப்படுகிறது. இத் திட்டத்தை, 2021 ஜூன்.30 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென ESI நிறுவனம் தீர்மானித்துள்ளது.
 • COVID-19 தொற்றுக்காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அளிப்பதற்காக, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்ட நிவாரணத்தொகை 24.03.2020’லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 – 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இத்திட்டம் தொடரும். 31.12.2020’க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மீளாயப்படும்.

3.தேசிய ஆட்சேர்ப்பு முகமையின் பொதுத்தேர்வுமூலம், ஆட்சேர்ப்பு செய்யவுள்ள முதல் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. மத்திய பிரதேசம்

ஈ. உத்தர பிரதேசம்

 • தேசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) தேர்வின் அடிப்படையில் அரசுப்பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் திகழவுள்ளது. இந்த முடிவை முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார். தற்போது IBPS, RRB, SSC ஆகியவற்றால் தனித்தனியே நடத்தப்படும் தேர்வுகளுக்கு பதிலாக எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே பொதுத்தகுதித்தேர்வை (CET) நடத்துவதற்கு, NRA’ஐ அமைக்க, மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

4. அண்மையில் எந்த நாட்டுடனான கலாசார ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ. சவுதி அரேபியா

ஆ. இஸ்ரேல்

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜப்பான்

 • இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஒத்துழைத்து வலுப்படுத்தும் மூன்றாண்டு வேலைத்திட்டத்திற்காக, இந்தியா, இஸ்ரேலுடனான கலாசார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளின் வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-23ஆம் ஆண்டு வரையிலான இந்த இந்தியா மற்றும் இஸ்ரேல் ஒத்துழைப்புத்திட்டம், கடந்த 1993 மே.18 அன்று இவ்விரு நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட கலாசார ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

5. ரெலிகேர் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய பெயரென்ன?

அ. ஹெல்த் கேர் லிட்

ஆ. கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்

இ. ரெலி ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்

ஈ. யூனியன் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்

 • ரெலிகேர் எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமான, ‘ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிட்’இன் பெயர் ‘கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயர்மாற்றம், 2020 ஆக.19 முதல் நடைமுறைக்கு வந்தது. ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸை ரெலிகேர் எண்டர்பிரைஸ் லிட், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை கடந்த 2012ஆம் ஆண்டில் நிறுவின. இந்நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ளது.

6.பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு & அஞ்சலி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 21

ஆ. ஆகஸ்ட் 22

இ. ஆகஸ்ட் 23

ஈ. ஆகஸ்ட் 24

 • ஐநா பொது அவையானது ஆகஸ்ட்.21ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளாக அறிவித்து அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப்பிழைத்தவர்களையும் கெளரவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், அவர்களின் மனிதவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பாடுபடுகிறது. நடப்பாண்டில் (2020), ஐக்கிய நாடுகளின் பொது அவையானது, இந்த நாளின் மூன்றாவது ஆண்டு தினத்தை அனுசரித்தது.

7.பாரத வங்கியின் (SBI) புதிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. இரஜ்னிஷ் குமார்

ஆ. உர்ஜித் படேல்

இ. அஸ்வானி பாட்டியா

ஈ. ஷியாம் சீனிவாசன்

 • இந்தியப் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவால் அஸ்வானி பாட்டியா பாரத வங்கியின் (SBI) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். P K குப்தாவைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு வரவுள்ளார்.
 • இந்நியமானத்திற்கு முன், அஸ்வானி பாட்டியா, SBI பரஸ்பர நிதியத்தின் துணை மேலாண்மை இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். SBI’இன் தலைமை பொது மேலாளராகவும், SBI மூலதன சந்தைகளின் முழுநேர இயக்குநராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

8.கேல் ரத்னா விருது பெற்ற மணிகா பத்ராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஹாக்கி

ஆ. டேபிள் டென்னிஸ்

இ. டென்னிஸ்

ஈ. தடகளம்

 • ஐந்து விளையாட்டு வீரர்கள் இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்களாகவும், 27 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதிப்புமிக்க கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா (கிரிக்கெட்), இராணி இராம்பால் (ஹாக்கி), பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, வினேஷ் போகத் (மல்யுத்தம்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆக.29 – தேசிய விளையாட்டு நாளன்று அவர்களுக்கு விருது வழங்கப்படும்.

9.கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டறிந்துள்ள நாடு எது?

அ. துருக்கி

ஆ. ஜார்ஜியா

இ. பல்கேரியா

ஈ. ருமேனியா

 • கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பை கண்டறிந்துள்ளததாக துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் சமீபத்தில் அறிவித்தார். சுமார் 302 பில்லியன் கன மீட்டர் பரப்பளவுகக்கு இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது, இயற்கை எரிவாயுக்காக அந்நாடு பிறநாட்டை சார்ந்திருந்திருப்பதை பேரளவுக்கு குறைக்கும். துருக்கி நாட்டின் அறிவிப்பின்படி, துருக்கி குடியரசு நிறுவப்பட்டு நூற்றாண்டு நிறைவைக்குறிக்கும் 2023ஆம் ஆண்டளவில், அந்த இயற்கை எரிவாயுவைப் பிரித்தெடுக்கவும் பயன்படுத்தவும் அந்நாடு தொடங்கும்.

10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சொஜிலா சுரங்கப்பாதையானது ஜம்மு-காஷ்மீரை எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் இணைக்கிறது?

அ. பஞ்சாப்

ஆ. சண்டிகர்

இ. லடாக்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

 • ஆசியாவின் மிகநீளமான இருதிசை சுரங்கமாக சொஜிலா சுரங்கப்பாதை திட்டத்திற்கு, பிரதமர் மோடி, கடந்த 2018ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். `4,509 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஜம்மு-காசுமீர் மற்றும் லடாக் பிராந்தியத்துக்கு இடையே தரைவழி இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், மேகா பொறியியல் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம், இந்தச் சொஜிலா கணவாய் சுரங்கப்பாதையை நிர்மாணிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. What is the name of the interactive video game launched by the Union Health Minister, regarding COVID–19?

[A] Health Fighter

[B] Social Warrior

[C] Corona Warriors

[D] Corona Fighters

 • A first–of–its–kind interactive game on COVID–19 named the “Corona Fighters” has been launched by the Union Health Minister Dr. Harsh Vardhan.
 • The game has been designed creatively to teach people about the right tools and behaviours to fight the COVID–19 pandemic. In addition to the game, the Minister also launched two new videos to inculcate appropriate behaviours, to be followed during the pandemic.

2. ‘Atal Bimit Vyakti Kalyan Yojana’, that was in news, is associated with which organization?

[A] National Insurance Company Ltd.,

[B] Employees and State Insurance Corporation (ESIC)

[C] Life Insurance Corporation of India

[D] Small Industries Development Bank of India

 • ESIC is implementing the Atal Bimit Vyakti Kalyna Yojna under which unemployment benefit is paid to the workers covered under ESI Scheme. The ESI Corporation has decided to extend the scheme for one more year upto 30th June 2021.
 • It has been decided to relax the existing conditions and the amount of relief for workers who have lost employment during the COVID–19 pandemic period. The enhanced relief under the relaxed conditions will be payable during the period of 24.03.2020 to 31st December 2020. Thereafter the scheme will be available with original eligibility condition during the period 01.01.2021 to 30.06.2021. Review of these conditions will be done after 31.12.2020 depending upon the need and demand for such relaxed condition.

3. Which state is to become the first to recruit through National Recruitment Agency (NRA)’s common test?

[A] Tamil Nadu

[B] Maharashtra

[C] Madhya Pradesh

[D] Uttar Pradesh

 • Madhya Pradesh is set to be the first state in the country to recruit candidates to government jobs on the basis of National Recruitment Agency (NRA) test. This decision has been informed by the Chief Minister Shivraj Singh Chauhan, a day after the Union cabinet approved setting up of NRA to conduct a Common Eligibility Test (CET), for conducting examinations which are presently conducted by IBPS, RRB, SSC among others

4. India has signed a cultural agreement with which country recently?

[A] Saudi Arabia

[B] Israel

[C] Australia

[D] Japan

 • India has signed a cultural agreement with Israel for a three–year programme of cooperation and strengthening of bilateral ties between the two countries. This cooperation is expected to raise awareness on the history and culture of both countries. This cooperation programme India & Israel for the years 2020–23 is based on the cultural agreement signed between them on May 18, 1993.

5. What is the new name of Religare Health Insurance Company Ltd?

[A] Health Care Ltd

[B] Care Health Insurance Ltd

[C] Reli Health Insurance Ltd

[D] Union Health Insurance Ltd

 • The name of the “Religare Health Insurance Company Ltd” which is a subsidiary of Religare Enterprises has been changed to “Care Health Insurance Ltd”. The change of name is effective from 19th August 2020. Religare Health Insurance was establishedby Religare enterprise limited, Union Bank of India and Corporation Bank in the year 2012. The company is headquartered in Gurgaon, Haryana.

6. When is International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism observed?

[A]  August 21

[B] August 22

[C] August 23

[D] August 24

 • The United Nations General Assembly proclaimed 21 August as the International Day of Remembrance of and Tribute to the Victims of Terrorism. The day is observed to honour and support the victims and survivors of terrorism.
 • It also strives to promote and protect their human and fundamental rights. This year, the UN held a virtual commemoration of the 3rd International Day of Remembrance of and Tribute to the Victims of Terrorism.

7. Who has been appointed as the new Managing Director of the State Bank of India?

[A] Rajnish Kumar

[B] Urjit Patel

[C] Ashwani Bhatia

[D] Shyam Srinivasan

 • Ashwani Bhatia has been appointed as the managing director of State Bank of India by the Appointments Committee of the Cabinet, headed by Prime Minister of India. He will be appointed in the place of P K Gupta. Ashwani has been serving as the deputy MD and CEO of SBI Mutual Fund. He also served as the Chief General Manager of SBI and a fulltime director of SBI Capital Markets.

8. Manika Batra, who was conferred with the Khel Ratna award, is associated with which sport?

[A] Hockey

[B] Table Tennis

[C] Tennis

[D] Athletics

 • Five sportspersons were named as the Rajiv Gandhi Khel Ratna awardees and 27 sportspersons as Arjuna awardees.
 • Rohit Sharma (Cricket), Rani Rampal (Hockey), para athlete Mariyappan Thangavelu, Vinesh Phogat (Wrestling) and Manika Batra (Table Tennis) were selected for the prestigious Khel ratna award. They will be virtually conferred with the award on August 29 on the National Sports Day.

9. Which country has discovered a large natural gas reserve along Black Sea coast?

[A] Turkey

[B] Georgia

[C] Bulgaria

[D] Romania

 • The President of Turkey Recep Tayyip Erdogan has recently announced that the country has discovered a large natural gas reserve along the Black Sea coast. Around 302 billion cubic meters area of natural gas reserve has been discovered that will reduce the import dependency of the country. As per the country, it will start extracting and using the gas by 2023, when Turkey marks the centenary of the founding of Republic.

10. Zojila tunnel, that was seen in news recently, connects Jammu and Kashmir with which state / UT?

[A] Punjab

[B] Chandigarh

[C] Ladakh

[D] Himachal Pradesh

 • Prime Minister Narendra Modi had laid the foundation stone for Zojila tunnel project in 2018, as the Asia’s longest bi–directional tunnel. The project with estimated cost of Rs 4,509 crore, aims to provide all–year connectivity between Jammu and Kashmir and Ladakh region. Recently, Megha Engineering and Infrastructure is set to construct the Zojila pass tunnel. The project is expected to completed in six years.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *