Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

28th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

28th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட MRSAM (Medium Range Surface to Air Missile) என்ற ஏவுகணை, கீழ்க்காணும் எந்த நாட்டோடு இணைந்து உருவாக்கப்பட்டது?

அ. இரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. பிரான்ஸ்

  • தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர இரக ஏவுகணையை (Medium Range Surface to Air Missile) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா மாநில கடற்கரைக்கு அருகேயுள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்தச் சோதனையை செய்தது. விமானம்போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன்மூலம் முக்கிய மைல்கல்லை DRDO எட்டியது. இந்த நடுத்தர இரக ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் IAI ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் சார்ந்த நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. அகமதாபாத்

ஈ. புனே

  • தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகமானது மும்பையைச் சார்ந்த ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். அது, 1975ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இந்திய திரைப்படத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
  • அண்மையில், திரைப்படப்பிரிவு, திரைப்படத்திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்துட –ன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

3. இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (ISRO) கீழ்க்காணும் எந்த நிறுவனத்தில், விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையத்தை (RAC–S) நிறுவவுள்ளது?

அ. IIT– BHU

ஆ. IIT– கெளகாத்தி

இ. IISC, பெங்களூரு

ஈ. IIT– ரூர்க்கி

  • இந்திய விண்வெளி ஆய்வுமையமானது இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (BHU) ஒரு பிராந்திய கல்வி மையத்தை நிறுவவுள்ளது. மாணவர்களிடையே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி எண்ண ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக, இந்தக் கல்விமையம் அமைக்கப்படும். மாநாடுகள், கண்காட்சிகள் போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்களும் ஏற்பாடு செய்யப்படும்.

4. நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகமானது CoWIN’க்கு வலுசேர்க்கும் விதமாக கீழ்க்காணும் எந்த அமைச்சகத்துடன் இணைந்து போட்டியொன்றைத் தொடங்கியுள்ளது?

அ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. கல்வி அமைச்சகம்

  • COVID–19 பெருங்கொள்ளை நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதனை தேசிய அளவில் முறையாக வழங்கும் நோக்கத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் இணைந்து பிரம்மாண்ட சவாலான ‘CoWIN’ என்ற புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளன.
  • ‘MSH’ என்று அழைக்கப்படும் ‘MeitY Startup Hub’ என்னும் இணையதளத்தில் இத்தளம் அமைக்கப்பட உள்ளது. பங்கேற்பாளர்கள் ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம். சிறந்த ஐந்து விண்ணப்பதாரர்களுக்கு தங்களது தீர்வுகளை தளத்தினோடு ஒருங்கிணைத்து செயல்பட வாய்ப்பு வழங்கப்படும்.

5. சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட, பத்தாம் வகுப்புக்குப்பிறகு கல்வியைத் தொடர்வதற்கு பட்டியல் பிரிவு (SC) மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் நடுவணரசின் பங்கு என்ன?

அ. 40%

ஆ. 50%

இ. 60%

ஈ. 90%

  • நான்கு கோடி பட்டியலின மாணாக்கர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் `59,000 கோடியை கல்வி உதவித்தொகையாக வழங்க பொருளாதார விவ –காரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் `35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியிலிருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும். பட்டியல் பிரிவைச் சார்ந்த மாணாக்கர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக ‘PMS–SC’ என்னும் திட்டத்தை நடுவணரசு செயல்படுத்தி வருகிறது.

6. அண்மையில் வெளியிடப்பட்ட, ‘சிறுத்தைகளின் நிலை 2018’இன்படி, அதிக அளவில் சிறுத்தைகளைக் கொண்ட மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. குஜராத்

  • 2018’இல் நாட்டிலுள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் வெளியிட்டார். நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது.
  • மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிகபட்சமாக முறையே 3421; 1783; 1690 சிறுத்தைகள் தற்போது உள்ளன.

7. தேசிய துளிர் நிறுவனங்கள் விருதுகளானவை முதன்முதலில் எந்த ஆண்டில் வழங்கப்பட்டன?

அ. 2017

ஆ. 2018

இ. 2019

ஈ. 2020

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழியங்கும் தொழிலகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது 2019’ஆம் ஆண்டு முதல் தேசிய துளிர் நிறுவனங்கள் விருதுகளை வழங்கி வருகிறது. புதுமையான தயாரிப்புகள் அல்லது தீர்வுகளை உருவாக்கி சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த துளிர் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிப்பதை இவ்விருது நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த விருதின் 2021ஆம் ஆண்டுக்கான பதிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. 15 பரந்த துறைகளாக வகைப்படுத்தப்பட்ட 49 பகுதிகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

8. அண்மையில் எந்தத் தேதியில், பன்னாட்டு மனித ஒருமைப்பாடு நாள் கடைப்பிடிக்கப்பட்டது?

அ. டிசம்பர் 20

ஆ. டிசம்பர் 21

இ. டிசம்பர் 22

ஈ. டிசம்பர் 23

  • ஐநா அவையானது கடந்த 2002 டிச.20 அன்று பன்னாட்டு மனித ஒருமைப்பாடு நாளை அறிவித்தது. வளர்ந்துவரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது, மனித ஒருமை –ப்பாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது மற்றும் மனித சமூகமேம்பாட்டுக்கு உதவுவதே இந்நாளின் நோக்கமாகும்.

9. எங்கு இயங்கும் இந்தியாவின் முதல் ஓட்டுநரில்லா இரயிலை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார்?

அ. சென்னை

ஆ. தில்லி

இ. மும்பை

ஈ. பெங்களூரு

  • இந்தியாவில் முதன்முறையாக ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையை தில்லி மெட்ரோவின் மஜந்தா மார்க்கத்திலும் (மேற்கு ஜனக்புரி – தாவரவியல் பூங்கா), வானூர்தி நிலைய மார்க்கத்தில் முழுவதுமாக இயங்கக்கூடிய தேசிய பொதுப்போக்குவரத்து அட்டை சேவையையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

10. DRDO’ஆல் வழங்கப்படும் ‘ஆண்டின் சிறந்த அறிவியலாளருக்கான விருது–2018’ஐ பெற்றவர் யார்?

அ. ஹேமந்த் குமார் பாண்டே

ஆ. டெஸ்ஸி தாமஸ்

இ. சுதிர் காமத்

ஈ. பிரவீன் K மேத்தா

  • வெண்தோல்நோய் சிகிச்சைக்கான, ‘லூகோஸ்கின்’ மருந்தை உள்ளடக்கிய மூலிகை மருந்துகளை உருவாக்குவதில் அவராற்றிய பங்களிப்புக்காக Dr ஹேமந்த் குமார் பாண்டேவுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது ‘ஆண்டின் சிறந்த அறிவியலாளருக்கான விருது–2018’ வழங்கியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோர்கரில் உள்ள DRDO’இன் உயிரி–ஆற்றல் ஆராய்ச்சிக்கான ராணுவ நிறுவனத்தில் (DIBER) கடந்த 25 ஆண்டுகளாக பாண்டே ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

28th December 2020 Tnpsc Current Affairs in English

1. The MRSAM (Medium Range Surface to Air Missile), which was test–fired recently, was developed in association with which country?

[A] Russia

[B] Israel

[C] United States

[D] France

  • India has successfully conducted the first Army version test of the Medium–Range Surface–to–Air Missile (MRSAM) from a test range off Odisha coast. This advanced missile has been jointly developed by Defence Research and Development Organisation (DRDO) and Israel Aerospace Industries. The new generation MRSAM can neutralise airborne threats including projectiles.

2. National Film Development Corporation which was making news recently, is based at which city?

[A] New Delhi

[B] Mumbai

[C] Ahmedabad

[D] Pune

  • National Film Development Corporation (NFDC) is a Central Public Sector Undertaking, based at Mumbai. It was incorporated in the year 1975. The objective of the agency is to promote the integrated development of Indian Film industry. Recently, the Union Cabinet has approved to merge four of its film media units, namely Films Division, Directorate of Film Festivals, National Film Archives of India, and Children’s Film Society, India with NDFC.

3. The Indian Space Research Organisation (ISRO) is to establish a Regional Academic Centre for Space (RAC–S) at which institution?

[A] IIT– BHU

[B] IIT– Guwahati

[C] IISC, Bengaluru

[D] IIT– Roorkee

  • The Indian Space Research Organisation (ISRO) is to establish a Regional Academic Centre for Space (RAC–S) at Indian Institute of Technology (BHU). The Academic Centre would be set up to facilitate short– and long–term projects at the institute, to promote the culture of research and development among students. Capacity building programmes like conferences, exhibitions will also be organised.

4. Ministry of Health & Family Welfare, along with which Ministry launched a contest to strengthen CoWIN?

[A] Ministry of Youth Affairs and Sports

[B] Ministry of Electronics and IT

[C] Ministry of External Affairs

[D] Ministry of Education

  • Ministry of Health and Family Welfare and the Ministry of Electronics and IT have jointly launched a contest to strengthen digital platform CoWIN. The contest has been developed to invite solutions from IT companies and start–ups the platform, which will be used for rolling out COVID vaccine distribution across the country. The top 5 applicants will be provided CoWIN Application Programming Interface.

5. What is the share of the Centre in the recently approved Post Matric Scholarship for SC students?

[A] 40%

[B] 50%

[C] 60%

[D] 90%

  • The Union Cabinet has recently approved ₹59,000 crore Post Matric Scholarship for more than four crore Scheduled Caste (SC) students. In the scheme, which is to be implemented in the next five years, the total investment is ₹59,048 crore, out of which 60% will be borne by the Central Government. The rest will be spent by the state Government. Transfer of financial assistance to the students would be on DBT method.

6. As per the ‘Status of Leopard in India 2018’ released recently, which state has the highest number of leopards?

[A] Tamil Nadu

[B] Madhya Pradesh

[C] Uttar Pradesh

[D] Gujarat

  • The Union Environment Minister Prakash Javadekar released the Status of Leopard in India 2018’ report. As per the report, the population of leopard in India has increased by 60 per cent with 12,852 leopards. Madhya Pradesh has the highest number of leopards (3421). It is followed by Karnataka and Maharashtra.

7. National Startup Awards was first launched in which year?

[A] 2017

[B] 2018

[C] 2019

[D] 2020

  • Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Ministry of Commerce and Industry had initiated the first National Start up Awards in 2019. The Award aims to reward outstanding start–ups that build innovative products or solutions and have a social impact. The second edition of the award NSA 2021 has been recently launched. The awards will be presented in 49 areas classified into 15 broad sectors.

8. On which date, the International Human Solidarity Day was observed recently?

[A] December 20

[B] December 21

[C] December 22

[D] December 23

  • The International Human Solidarity Day is observed every year on December 20 to raise public awareness of the importance of solidarity. This day aims to celebrate unity in diversity and remind people of the importance of solidarity in working towards eradicating poverty. It is a day to encourage debate on the ways to promote solidarity for the achievement of the Sustainable Development Goals (SDGs) including poverty eradication.

9. Where did PM Narendra Modi virtually launch India’s 1st Driverless operated train?

[A] Chennai

[B] Delhi

[C] Mumbai

[D] Bengaluru

  • On December 28, Prime Minister Narendra Modi virtually inaugurated India’s 1st ever Driverless Train Operations on Delhi Metro’s Magenta Line which connects Janakpuri West and Botanical Garden in Noida. Prime Minister Modi also inaugurated the fully operational National Common Mobility Card (NCMC) services on the Airport Express Line of Delhi Metro Rail Corporation (DMRC).

10. Who received “Scientist of the Year Award–2018” by DRDO?

[A] Hemant Kumar Pandey

[B] Tessy Thomas

[C] Sudhir Kamath

[D] Pravin K Mehta

  • Dr Hemant Kumar Pandey has been conferred ‘Scientist of the Year Award – 2018’ by Defence Research & Development Organization (DRDO) for his contributions towards developing herbal medicines which includes ‘Lukoskin’ a drug for treatment of leucoderma. Pandey has been undertaking research at DRDO’s Defence Institute of Bio–Energy Research (DIBER) at Pithoragarh in Uttarakhand for 25 years.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!