Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

28th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. குஜராத் மாநில முதலமைச்சர் எந்த நுண்-வலைப்பூ தளத்தின் குஜராத்தி பதிப்பைத் தொடங்கினார்?

அ) டுவிட்டர்

ஆ) கூ 

இ) சிங்காரி

ஈ) ரெடிட்

  • இந்திய பன்மொழி நுண்-வலைப்பூ தளமான ‘கூ’வின் குஜராத்தி பதிப்பை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார். இச்செயலி மக்கள் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைப் பகிரவும் மற்றவர்களுடன் இணைக்கவும் உதவுகிறது.
  • குஜராத்தி பதிப்புடன் ‘கூ’ இப்போது தமிழ், ஹிந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, அஸ்ஸாமி, பஞ்சாபி, பெங்காலி & ஆங்கிலம் உள்ளிட்ட பத்து மொழிகளில் கிடைக்கிறது.

2. ‘சில்வர்லைன்’ என்ற பகுதி அதிவேக இரயில் திட்டம் அமைக்கப்படுகிற மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) கேரளா 

இ) குஜராத்

ஈ) ஒடிசா

  • ‘சில்வர்லைன்’ என்பது கேரள மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் பகுதி அதிவேக இரயில் திட்டமாகும். இத்திட்டத்தில் மாநிலத்தின் வட மற்றும் தென் முனைகளுக்கு இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் இரயில்களை இயக்குவது அடங்கும். கேரள ரயில் மேம்பாட்டுக்கழகம் செயற்படுத்தும் ‘சில்வர்லைன்’ திட்டத்துக்கு எதிராக கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • இதன் திட்ட மதிப்பீடு `63,940 கோடி. இந்தத் திட்டத்தின் காலக்கெடு 2025ஆம் ஆண்டு ஆகும்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “அவமானத்தின் தூண்” நினைவுச்சின்னம் அமைந்துள்ள நாடு / பிராந்தியம் எது?

அ) அமெரிக்கா

ஆ) ஹாங்காங் 

இ) தைவான்

ஈ) ரஷ்யா

  • “அவமானத்தின் தூண்” என்பது பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் ஒரு நினைவுச்சின்னமாக்கும். இது 1997 முதல் ஹாங்காங் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள 8 மீட்டர் உயரச்சிலையாகும். இந்த நினைவுச்சின்னத்தில் ஐம்பது துயரம் தோய்ந்த முகங்களும் சித்திரவதைக்கு உடல்களும் செதுக்கப்பட்டுள்ளன.
  • 1989ஆம் ஆண்டில் தியனன்மென் சதுக்கத்தைச் சுற்றி சீன துருப்புக்களால் கொல்லப்பட்ட ஜனநாயக எதிர்ப்பாளர் -களை நினைவுகூரும் வகையில் இந்தத்தூண் உள்ளது. இச்சிலையை இரவோடு இரவாக கரைக்கும் நடவடிக்கையை ஹாங்காங் பல்கலை மேற்கொண்டது.

4. ‘பெண்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை’ நிறைவேற்றிய நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா 

இ) ரஷ்யா

ஈ) சவூதி அரேபியா

  • தேசிய மக்கள் காங்கிரஸின் சீனாவின் நிலைக்குழு, ‘பெண்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்’ வரைவு திருத்தத்தை அறிவித்தது. பணியிடத்திலும் வீட்டிலும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இச்சட்டத்தின் நோக்கமாகும்.

5. திவால் மற்றும் நொடிப்பு நிலை குறியீட்டை செயல்படு -த்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் 

இ) வெளியுறவு அமைச்சகம்

ஈ) வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (MCA) திவால் மற்றும் நொடிப்புநிலை (IBC) குறியீட்டில் சில கடுமையான விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. ஒரு தீர்மானத் திட்டத்தை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்க, திவால் தீர்ப்பளிக்கும் அதிகாரியை IBC முப்பது நாட்களுக்குள் நியமனம் செய்ய வேண்டும் என்று MCA முன்மொழிந்தது.
  • ஜன.13ஆம் தேதிக்குள் இத்திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது.

6. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் எந்தத் தேதி வரை அடையாளக்குறியாக்க விதிகளை நீட்டித்துள்ளது?

அ) ஜனவரி 1, 2022

ஆ) ஏப்ரல் 1, 2022

இ) ஜூன் 30, 2022 

ஈ) செப்டம்பர் 30, 2022

  • இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அடையாளக்குறியாக்க விதிகளை 2022 ஜூன்.30 வரை நீட்டித்துள்ளது.
  • வணிகத் தளங்களில் அட்டை தரவை அழித்துவிட்டு அடையாளக்குறியாக்கத்தைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வணிகர்கள் மற்றும் பணம் செலுத்தும் நிறுவனங்கள் 2021 டிச.31’க்கு முந்தைய காலக்கெடுவை பூர்த்தி செய்ய இயலாமையை வெளிப்படுத்தியதால், மத்திய வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிக தளத்தில் அட்டை தரவைப் பதிவுசெய்ய, கோப்பு அடையாளக்குறியாக்க அட்டை பயன்படுத்தப்படுகிறது.

7. இந்தியாவில, ‘தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) டிசம்பர் 20

ஆ) டிசம்பர் 22

இ) டிசம்பர் 24 

ஈ) டிசம்பர் 25

  • இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர்.24ஆம் தேதி தேசிய நுகர்வோர் உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இது தேசிய நுகர்வோர் நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற தேதியான 1986 டிச.24 இந்நாளில் நினைவுகூரப்படுகிறது.
  • நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். உலக நுகர்வோர் உரிமை நாள் ஆண்டுதோறும் மார்ச்.15 அன்று கொண்டாடப்படுகிறது.

8. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை (PMEGP) செயல்படுத்துகிற நிறுவனம் எது?

அ) KVIC 

ஆ) NSIC

இ) NABARD

ஈ) SIDBI

  • காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் ஆணையம் (KVIC) பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில். KVIC, உத்தர பிரதேச மாநிலத்தின் பண்டேல்கண்ட் பகுதியில் சுயதொழில் நடவடிக்கைகளைத் தொடங்கியது.
  • ஜான்சி மாவட்டம் மற்றும் புந்தேல்கண்ட் பகுதியின் சில பகுதிகளில் உள்ள கிராமப்புற கைவினைஞர்களுக்கு பானை வனையும் மின்சார சக்கரம், தேனீ வளர்ப்பு பெட்டி மற்றும் அகர்பத்தி எந்திரம் ஆகியவற்றை MSME இணை அமைச்சர் வழங்கினார்.

9. சத்தீஸ்கர் மற்றும் தில்லிக்குப் பிறகு தனது ஆரம்பப் பள்ளிகளில் ‘மகிழ்ச்சி பாடத்திட்ட’த்தைத் தொடங்கவுள்ள மாநில அரசு எது?

அ) பீகார்

ஆ) குஜராத்

இ) மகாராஷ்டிரா

ஈ) உத்தர பிரதேசம் 

  • உத்தர பிரதேசத்தில் உள்ள 150 தொடக்கப் பள்ளிகளில் ஒரு சோதனைத் திட்டமாக ‘மகிழ்ச்சி பாடத்திட்ட’த்தைத் தொடங்க உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது மாணவர்களை இயற்கை, சமூகம் மற்றும் நாட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சத்தீஸ்கர் மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது மாநிலமாக உத்தர பிரதேசம் ‘மகிழ்ச்சி பாடத் திட்டத்தை செயல்படுத்தும். 1-8ஆம் வகுப்பு மாணவர்களு -க்கு இந்தப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

10. திரைப்படங்கள்மீதான தணிக்கையை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்த நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம் 

ஆ) பஹ்ரைன்

இ) ஓமான்

ஈ) ஈரான்

  • இனி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டினரை ஈர்க்கும் ஒரு தாராளவாத மையமாக நாட்டை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
  • அதிகாரிகளின் கூற்றுப்படி, “படங்கள் அவற்றின் சர்வதேச பதிப்பின்படி திரையரங்குகளில் திரையிடப்படும்”.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

கரோனா தொற்று சிகிச்சைக்கான மால்னுபிராவிா் மாத்திரையின் அவசரகாலப் பயன்பாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த நோவோவேக்ஸ் நிறுவனம் கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியைத் தயாரித்தது. அத்தடுப்பூசியை அதிக எண்ணிக்கையில் தயாரித்து, குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிப்பதற்காக சீரம் நிறுவனத்துடன் நோவோவேக்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அத்தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியிருந்தது.

ஹைதராபாதைச் சோ்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம், கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தயாரித்தது. இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-ஆவது கரோனா தடுப்பூசியாகும். அமெரிக்காவைச் சோ்ந்த மொ்க் நிறுவனம், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மால்னுபிராவிா் மாத்திரையைத் தயாரித்தது.

பரிந்துரையும் அனுமதியும்: கோவோவேக்ஸ், கோா்பிவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளையும், மால்னுபிராவிா் மாத்திரையையும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) தடுப்பூசி நிபுணா்கள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியிருந்தது.

அப்பரிந்துரையை டிசிஜிஐ ஏற்றுக் கொண்டு, 3 மருந்துகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கும் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ஒரே நாளில் 3 மருந்துகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் தடுப்பூசிகளையும், மால்னுபிராவிா் மாத்திரையையும் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியானது கரோனா தொற்றுக்கு எதிரான உலகின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும். அப்போராட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி முன்னின்று நடத்தி வருகிறாா். இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த உலகுக்கும் பலனளிப்பவையாக உள்ளன.

‘ஹாட்ரிக்’ தடுப்பூசி: ஆா்பிடி புரதப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கரோனா தடுப்பூசி, கோா்பிவேக்ஸ். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3-ஆவது தடுப்பூசியாக அது விளங்குகிறது. நானோபாா்டிகல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது.

மால்னுபிராவிா் மாத்திரையானது 18 வயதைக் கடந்தவா்களுக்கான கரோனா சிகிச்சையிலும், அத்தொற்றின் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளவா்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படவுள்ளது. அந்த மாத்திரையை இந்தியாவில் 13 நிறுவனங்கள் தயாரித்து விநியோகிக்கவுள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பயன்பாட்டு முறைகள்: கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 28 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்த வேண்டும். கோவோவேக்ஸ் தடுப்பூசியை 21 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளைச் செலுத்த வேண்டும். இரு தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சேமித்துவைக்க வேண்டும்.

மால்னுபிராவிா் மாத்திரையை மருத்துவா்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 18 வயதைக் கடந்தவா்களுக்கு மட்டுமே அந்த மாத்திரை பரிந்துரைக்கப்பட வேண்டும். நாளொன்றுக்கு இரு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். தொடா்ந்து 5 நாள்களுக்கு மேல் அந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது.

அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்: நாட்டில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய கரோனா தடுப்பூசிகள் ஏற்கெனவே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. மாடா்னா, ஜான்சன்&ஜான்சன், சைகோவ்-டி ஆகிய தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

தடுப்பூசிகள் வரிசையில் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகியவை இணைந்துள்ள நிலையில், நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

2. தேசிய அளவிலான மீன் பிடிப்பில் தமிழகம் முதலிடம்

தமிழகம் முழுவதும் 5,500 விசைப்படகுகள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. தேசிய அளவிலான மீன்பிடியில் கடந்தாண்டு குஜராத் முதலிடத்தில் இருந்தது. ஒன்றிய கடல் மீன் ஆராய்ச்சி கூட கணக்கெடுப்பின்படி, நடப்பாண்டு மீன் பிடிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழக கடற்கரையின் நீளம் 1,071 கி.மீ. இதில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையின் நீளம் 237 கி.மீ. மாவட்டத்தில் 1,600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5,700க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. கடந்த 2018ல் தமிழகத்தில் 7.18 லட்சம் டன், 2019ல் 7.75 லட்சம் டன் மீன்கள் பிடிபட்டன. 2020-21ல் 10 லட்சம் டன் மீன்கள் பிடித்து குஜராத் மாநிலத்தை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 2.64 லட்சம் டன் மீன்கள் பிடித்து மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.

3. பாபே, அலெக்ஸியாவுக்கு விருது

துபை உலக கால்பந்து விருதுகளின் 12-ஆவது எடிஷனில், 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக பிரான்ஸின் கிலியன் பாபே, சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸ் தோ்வாகினா்.

துபையில் உள்ள புா்ஜ் கலிஃபாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆண்டின் சிறந்த கோல் ஸ்கோரா் மற்றும் ரசிகா்கள் வரவேற்பை பெற்ற வீரருக்கான மாரடோனா விருதை போலந்தின் ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி பெற்றாா். அதிக கோலடித்த வீரருக்கான விருது போா்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

ஆடவா் பிரிவில் சிறந்த கிளப்பாக செல்சியும், மகளிா் பிரிவில் சிறந்த கிளப்பாக பாா்சிலோனாவும் தோ்வாகின. சிறந்த தேசிய அணியாக இத்தாலி விருது பெற்றது. சிறந்த தடுப்பாட்ட வீரராக லியோனாா்டோ போனுச்சி (இத்தாலி), சிறந்த கோல்கீப்பராக கியான்லுகி டோனாருமா (இத்தாலி), சிறந்த பயிற்சியாளராக ராபா்டோ மான்சினி (இத்தாலி) தோ்வாகினா்.

1. Gujarat’s Chief Minister launched the Gujarati version of which micro–blogging site?

A) Twitter

B) Koo 

C) Chingari

D) Reddit

  • Gujarat Chief Minister Bhupendra Patel launched the Gujarati version of Indian multilingual micro–blogging site ‘Koo’.
  • The application enables people to share content and connect with others using their mother tongue. With Gujarati launch Koo is now available in 10 languages, including Hindi, Marathi, Kannada, Tamil, Telugu, Assamese, Punjabi, Bengali and English.

2. SilverLine, is a semi high–speed railway project being constructed in which state?

A) Karnataka

B) Kerala 

C) Gujarat

D) Odisha

  • SilverLine, is a semi high–speed railway project being constructed in the state of Kerala. The project includes deploying trains running at 200 km/h between the state’s northern and southern ends. Protests are taking place across Kerala against SilverLine, being executed by the Kerala Rail Development Corporation Limited (KRDCL). The estimated cost of the project Rs 63,940 crores. The deadline of the project is 2025.

3. “Pillar of Shame” memorial, which was seen in the news, is located in which country/region?

A) USA

B) Hong Kong 

C) Taiwan

D) Russia

  • “Pillar of Shame” is a statue commemorating those killed in Beijing’s Tiananmen Square. It is a eight–metre high statue located in University of Hong Kong’s (HKU) campus since 1997.
  • The memorial features 50 anguished faces and tortured bodies and commemorates democracy protesters killed by Chinese troops around Tiananmen Square in 1989. Hong Kong’s oldest university launched an overnight operation to dismantle the statue.

4. Which country passed the ‘Law on the Protection of the Rights and Interests of Women’?

A) India

B) China 

C) Russia

D) Saudi Arabia

  • China’s Standing Committee of the National People’s Congress (NPC) announced the draft amendment to the ‘Law on the Protection of the Rights and Interests of Women’. This law aims to protect women’s rights at the workplace and at home.

5. Which Union Ministry is associated with implementing the Insolvency and Bankruptcy Code (IBC)?

A) Ministry of Finance

B) Ministry of Corporate Affairs 

C) Ministry of External Affairs

D) Ministry of Commerce and Industry

  • Ministry of Corporate Affairs (MCA) has proposed some strict norms in the Insolvency and Bankruptcy Code (IBC). The MCA proposed that the IBC should provide the adjudicating authority with 30 days for approving or rejecting a resolution plan. The government has sought public comments on the proposal by January 13.

6. The Reserve Bank of India (RBI) has recently extended the tokenization rules till which date?

A) January 1, 2022

B) April 1, 2022

C) June 30, 2022 

D) September 30, 2022

  • The Reserve Bank of India (RBI) has recently extended the tokenisation rules till June 30, 2022. The deadline for wiping off card data on merchant sites and applying tokenisation has been extended by another six months. This step has been taken by the Central Bank as merchants and payment companies expressed their inability to meet the earlier deadline of December 31, 2021. Card on file tokenisation (CoFT) is used to register card data with a merchant site.

7. When is the ‘National Consumer Rights Day’ observed across India?

A) December 20

B) December 22

C) December 24 

D) December 25

  • December 24 is celebrated annually across India as National Consumer Rights Day. It is also called National Consumer Day. The Day commemorates December 24, 1986, the date when the Consumer Protection Act received assent of the President of India.
  • The purpose of the day is to make consumers aware of their rights and responsibilities. World Consumer Rights Day is celebrated annually on March 15.

8. Which institution is implementing the Prime Minister’s Employment Generation Program (PMEGP)?

A) KVIC 

B) NSIC

C) NABARD

D) SIDBI

  • Khadi and Village Industries Commission (KVIC) is implementing the Prime Minister’s Employment Generation Program (PMEGP). Recently, KVIC launched a series of self–employment activities in Bundelkhand region of Uttar Pradesh.
  • Minister of State for MSME distributed electric potter wheels, bee boxes and Agarbatti making machines to the rural artisans of Jhansi district and some areas of the Bundelkhand region.

9. Which state government is set to launch the ‘happiness curriculum’ in primary schools (after Chhattisgarh and Delhi)?

A) Bihar

B) Gujarat

C) Maharashtra

D) Uttar Pradesh 

  • The Uttar Pradesh Government has decided to launch the ‘happiness curriculum’ in 150 primary schools of Uttar Pradesh under a pilot project. It aims to make the students more sensitive towards nature, society and the country.
  • Uttar Pradesh will be the third state in the country after Chhattisgarh and Delhi to implement the curriculum. The happiness curriculum will be introduced to the students of Classes 1 to 8.

10. Which country has recently announced to end censorship in films?

A) UAE 

B) Bahrain

C) Oman

D) Iran

  • The United Arab Emirates (UAE) announced that it will no longer censor films released in cinemas. It is seen as an effort of the kingdom to boost its brand as a liberal hub attractive to foreigners. As per the authorities, “The movies will be screened in cinemas according to their international version”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!