Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

28th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, நில ஒதுக்கீட்டுக்கொள்கை 2021-30 என்பதை வெளியிட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) கர்நாடகா

ஆ) கேரளா

இ) ஜம்மு & காஷ்மீர்

ஈ) குஜராத்

  • ‘நில ஒதுக்கீட்டுக் கொள்கை 2021-30’ என்ற புதிய கொள்கையை ஏற்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. தொழிற்துறை பகுதிகளின் மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வகுக்க இந்த கொள்கை நோக்கம் கொண்டுள்ளது. இது, சுகாதார நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான நில ஒதுக்கீட்டையும் உள்ளடக்கும்.
  • ஜம்மு & காஷ்மீரில் நியாயமான தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தக்கொள்கையின் முதன்மை நோக்கமாகும்.

2. அண்மையில், ‘Ooceraea joshii’ என்ற ஓர் எறும்பு இனம் கண்டறியப்பட்ட மாநிலம் எது?

அ) தெலுங்கானா

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கர்நாடகா

  • இந்தியாவில் புதிதாக இரண்டு அரியவகை எறும்பினங்கள் கண்டுபிடிக்கப் -பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளாவில் ‘ஊசரே’ (Ooceraea) என்ற புதிய எறும்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணர்வுக்கொம்பு பிரிதலில் இந்த எறும்புகள் பிற எறும்புகளிலிருந்து வேறுபடுகின்றன.
  • கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்தில் கண்டறியப்பட்ட இந்த இன எறும்புக்கு ‘ஊசரே ஜோஷி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் ஜவஹர்லால் நேரு உயரிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைசிறந்த உயிரியலாளரான பேராசிரியர் அமிதாப் ஜோஷியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரிய வகை எறும்பினத்தை பஞ்சாபி பல்கலையின் குழு கண்டுபிடித்தது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஆபரேஷன் சர்த் ஹவா” என்பதை ஏற்பாடுசெய்த அமைப்பு எது?

அ) DRDO

ஆ) ISRO

இ) BSF

ஈ) ITBP

  • எல்லைப் பாதுகாப்புப் படையானது (BSF) கோடைகாலத்தில் “கரம் ஹவா” என்றும் குளிர்காலத்தில் “சர்த் ஹவா” என்றும் பயிற்சிகளை நடத்துகிறது. BSF, அண்மையில், இந்த ஆண்டின் “ஆபரேஷன் சர்த் ஹவா”ஐ தொடங்கியது.
  • இதன்கீழ், ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடியரசு நாளை முன்னிட்டு ஜன.21-27 வரை இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது.

4. அண்மையில், ‘வரைவு ஆர்க்டிக் கொள்கை’யை வெளியிட்ட நாடு எது?

அ) சீனா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) இந்தியா

ஈ) தென்னாப்பிரிக்கா

  • புதிய வரைவு ‘ஆர்க்டிக்’ கொள்கை அண்மையில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த வரைவுக் கொள்கை, 2021 ஜனவரி.26 வரை பொதுமக்களின் கருத்துக்கேட்புக்கு விடப்படும்.
  • பல்வேறு அமைச்சகங்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியா -வின் அறிவியல் ஆராய்ச்சி, நிலையான சுற்றுலா மற்றும் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஆகியவற்றை விரிவுபடுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.

5. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் வெளியீட்டின்படி, அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கையில், இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

  • கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வெளியாகும் அறிவியல் சார் வெளியீடுகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளதாக என்றும் அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகளவில் 3ஆவது இடத்தில் உள்ளது என்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சமீபத்தில் கூறியது.
  • இந்தப் பட்டியலில், சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. 2017-18ஆம் ஆண்டில், மொத்தம் 13,045 காப்புரிமைகளில் 1,937 இந்தியர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

6. “Promoting a culture of peace and tolerance to safeguard religious sites” என்ற தலைப்பிலான தீர்மானமொன்றை ஏற்றுக் கொண்டுள்ள அமைப்பு எது?

அ) WHO

ஆ) WTO

இ) ஐக்கிய நாடுகள்

ஈ) WIPO

  • ஐநா அவையின் பொதுச்சபையில், “Promoting a culture of peace and tolerance to safeguard religious sites” என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சகிப்புத்தன்மை மற்றும் அமைதி கலாச்சாரத்தை அனைத்து மட்டங்களிலும் ஊக்குவிப்பதற்
    -கான முயற்சிகளை இந்தத் தீர்மானம் கோருகிறது.
  • ஐநா’இன் “மத தளங்களை பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை” முன்னெடுத்துச்செல்வதற்கு, உலகளாவிய மாநாட்டைக் கூட்டுமாறு பொதுச்செயலாளரை இது அழைக்கிறது.

7. 2021’ஆம் ஆண்டில் இந்தியா நடத்தவுள்ள இந்தியப்பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறும் இடம் எது?

அ) சென்னை

ஆ) பெங்களூரு

இ) புது தில்லி

ஈ) மதுரை

  • 2021 பிப்ரவரி.21 அன்று பெங்களூரு நகரில் இந்தியப் பெருங்கடல் விளிம்பில் அமைந்திருக்கும் நாடுகளைச் சார்ந்த பாதுகாப்பு அமைச்சர் -களின் சந்திப்பை இந்தியா நடத்தவுள்ளது. இம்மாநாடு பெங்களூரு நகரத்தில் நடைபெறவிருக்கும் ஏரோ இந்தியா கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும். “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘வாசுகி’ என்ற இரயில், பின்வரும் எந்த இரயில்வே மண்டலத்துடன் தொடர்புடையது?

அ) தென்கிழக்கு மத்திய இரயில்வே

ஆ) மத்திய இரயில்வே

இ) தெற்கு இரயில்வே

ஈ) மேற்கு இரயில்வே

  • தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும் ‘வாசுகி’ என்ற சரக்கு இரயில் மிகநீண்ட சரக்கு இரயில் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த இரயில், சுமார் 3.5 கி.மீ நீளத்திற்கு உள்ளது. இந்த இரயில், பிலாய் மற்றும் கோர்பா இடையே மொத்தம் 224 கி.மீ தொலைவு பயணத்தை மேற்கொள்கிறது.

9. பின்வரும் எந்த உயிரினத்தை காப்பாற்ற, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், “ஃபயர்ஃபிளை பறவை திசைதிருப்பிகள்” என்ற முன்னெடுப்பை நிறுவியுள்ளது?

அ) செங்கால் நாரை

ஆ) இருவாய்ச்சி

இ) கானமயில்

ஈ) பெரிய பச்சைக்கிளி

  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் இந்திய வனவுயிரி பாதுகாப்பு சங்கமும் இணைந்து கானமயில்களைக் காப்பாற்றுவதற்காக, “ஃபயர்ஃபிளை பறவை திசைதிருப்பிகள்” என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளன.
  • ‘திசை திருப்பிக்கள்’ என்பது காடுகளில் கானமயில்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் உள்ள மேல்நிலை மின்னிணைப்புகளில் நிறுவப்பட்ட ஒரு மடல் ஆகும். அவை மின்மினிப் பூச்சிகளைப் போல தோற்றமளிக்கும்; அது கானமயில்கள் போன்ற பறவையினங்களுக்கு பிரதிபலிப்பாளர்களாக செயல்படுகின்றன. அவை, தொலைவிலிருந்து கண்டறிந்து மின்வழிகளில் மோதாமல் பறவைகளின் திசையைத் திருப்ப உதவுகின்றன.

10. பின்வரும் எப்பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவின் போது, பிரதமர் ஒரு நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டார்?

அ) மெட்ராஸ் பல்கலைக்கழகம்

ஆ) அலிகார் பல்கலைக்கழகம்

இ) பனாராஸ் பல்கலைக்கழகம்

ஈ) அண்ணா பல்கலைக்கழகம்

  • அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமானது அலிகரில் அமைந்துள்ள ஒரு மத்திய பல்கலைக்கழகமாகும். இது முதலில் சர் சையத் அகமத் கானால் 1875’இல் நிறுவப்பட்டது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சட்டத்திற்குப்பிறகு, அதன் அசல் பெயரான, ‘முகம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி’ என்பது 1920ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
  • இந்தப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் போது, பிரதமர், மற்றும் இந்தப் பல்கலைக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவு அஞ்சல் தலையயை வெளியிட்டார்.

28th January 2021 Tnpsc Current Affairs in English

1. The Land Allotment Policy 2021–30, which was making news recently, was released by which state/UT?

A) Karnataka

B) Kerala

C) Jammu & Kashmir

D) Gujarat

  • The Jammu and Kashmir administration approved the adoption of a new policy named ‘Land Allotment Policy 2021–30’. The policy aims to lay down a framework to regulate zoning of industrial areas.
  • It will also cover land allotment for health institutions and educational institutions. The policy aims to promote fair industrial growth in the UT.

2. ‘Ooceraea joshii’, is an Ant species recently discovered in which state?

A) Telangana

B) Kerala

C) Andhra Pradesh

D) Karnataka

  • Two new species of a rare ant genus have been recently discovered in Kerala and Tamil Nadu by a team of scientists from Punjabi University. One of the two species which was discovered found in the Periyar Tiger Reserve of Kerala has been named Ooceraea Joshii, to honour the veteran biologist ‘Amitabh Joshi’.

3. “Operation Sard Hawa”, which was making news recently, was organised by which organisation?

A) DRDO

B) ISRO

C) BSF

D) ITBP

  • Border Security Force (BSF) organises the Operation “Garam Hawa” in summer season and operation “Sard Hawa” during the winter season every year. BSF has recently launched “Operation Sard Hawa” of this year, under which it aims to increase security on the borders in Jaisalmer, Rajasthan. This operation was scheduled from January 21 to 27, coinciding with the Republic Day.

4. Which country has recently revealed a “Draft Arctic Policy”?

A) China

B) United States of America

C) India

D) South Africa

  • A new draft ‘Arctic’ policy has been released recently by the Government of India. The draft policy would be available for public opinion till Jan 26, 2021. It has been prepared after deliberations with several Ministries. The policy aims to expand India’s scientific research, sustainable tourism and mineral oil and gas exploration in the Arctic region.

5. As per the release by Department of Science and Technology, what is India’s position in number of scientific publications?

A) 2

B) 3

C) 4

D) 5

  • Department of Science and Technology has stated recently that the number of scientific publications from India has increased exponentially over the last ten years and that India stands at 3rd position globally in number of scientific publications.
  • China and USA are ahead of India in the list. In the year 2017–18, 1,937 out of the total 13,045 patents were filed by Indians.

6. Which organization has adopted a resolution titled “Promoting a culture of peace and tolerance to safeguard religious sites”?

A) WHO

B) WTO

C) United Nations

D) WIPO

  • A resolution titled “Promoting a culture of peace and tolerance to safeguard religious sites” has been adopted in the United Nations General Assembly recently. The resolution calls for efforts to promote a culture of tolerance and peace at all levels.
  • It also invites the Secretary General to convene a global conference to advance the UN’s “Plan of Action to Safeguard Religious Sites”.

7. Which is the venue of the Indian Ocean Region (IOR) Defence Ministers Conclave, to be hosted by India in 2021?

A) Chennai

B) Bengaluru

C) New Delhi

D) Madurai

  • India is to host the Defence Ministers of the countries of the Indian Ocean Region in Bengaluru city on February 4, 2021. This conclave will be organised alongside the upcoming Aero India in Bengaluru. The theme of the conclave will be ‘Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean’.

8. The train named ‘Vasuki’, that is seen in news recently, is associated with railway zone?

A) South East Central Railway

B) Central Railway

C) Southern Railway

D) Western Railway

  • The freight train named ‘Vasuki’ operated by South East Central Railway has created a new record for longest ever freight train. This train has been formed by amalgamation five rakes of goods trains as a single unit of around 3.5 km. The train has covered a total distance of 224 km between Bhilai and Korba.

9. Union Environment Ministry has installed “Firefly bird diverter” initiative to save which species?

A) White Stork

B) Hornbill

C) Great Indian Bustard

D) Alexandrine Parakeet

  • The Union Ministry of Environment Forest and Climate Change (MoEFCC) along with the Wildlife Conservation Society (WCS) India has launched a unique initiative named a “firefly bird diverter”, to save Great Indian Bustard. The diverter is a flap installed on overhead power lines in areas where GIB populations are found in the forests.
  • They look like fireflies and act as reflectors for bird species like the GIB, which can spot them from distance and change their path of flight without colliding on power lines.

10. The Prime Minister released a postage stamp during the centenary celebrations of which University?

A) Madras University

B) Aligarh University

C) Banaras University

D) Anna University

  • Aligarh Muslim University (AMU) is a Central university in Aligarh. It was originally established by Sir Syed Ahmad Khan in 1875. After the Aligarh Muslim University Act, its original name of ‘Muhammadan Anglo–Oriental College’ was changed to Aligarh Muslim University in 1920. The Prime Minister addressed the Centenary celebrations of the University and also released a postage stamp dedicated to AMU.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!