TnpscTnpsc Current Affairs

28th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

28th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘செயற்கை நிலவு’ திட்டத்தை உருவாக்கிய நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா 

இ) ரஷ்யா

ஈ) இஸ்ரேல்

  • சீன தேச அறிவியலாளர்கள் “செயற்கை நிலவு” ஆராய்ச்சி வசதியை உருவாக்கியுள்ளனர். இது காந்தத்தன்மையைப் பயன்படுத்தி குறை-ஈர்ப்புவிசைகொண்ட சூழல்களை உருவகப்படுத்துகிறது. இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் இவ்வசதி, புவியீர்ப்பு விசையை மறையச் செய்வதற்காக வெற்றிட அறைக்குள் சக்திவாய்ந்த காந்தப் புலங்களைப்பயன்படுத்தும். இந்த விளைவு ‘Diamagnetic Levitation’ என்று அழைக்கப்படுகிறது.

2. ‘தேசிய துளிர்நிறுவனங்கள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 1

ஆ) ஜனவரி 16 

இ) ஜனவரி 17

ஈ) ஜனவரி 25

  • ஆண்டுதோறும் ஜன.16 தேதி தேசிய துளிர்நிறுவனங்கள் நாள் கொண்டாடப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார்.
  • இத்தசாப்தம் ‘இந்தியாவின் தொழினுட்பம்’ என்றும் பிரதமர் கூறினார். தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட 61,000’க்கும் மேற்பட்ட துளிர்நிறுவனங்களுடன், இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய துளிர்நிறுவனங்களுக்கு உகந்த சூழலமைப்பாக விளங்குகிறது.

3. இந்திய காடுகளின் அறிக்கை-2021’இன்படி, நாட்டின் காடுகளின் பரப்பளவானது இந்திய புவியியல் பரப்பளவில் எவ்வளவு சதவீதம் அதிகரித்துள்ளது?

அ) 19.71%

ஆ) 21.71% 

இ) 25.71%

ஈ) 30.71%

  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது இந்திய காடுகள் அறிக்கை – 2021’ஐ வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, வனப்பகுதி 7,13,789 சகிமீ அல்லது இந்தியாவின் புவியியல் பகுதியில் 21.71% ஆக அதிகரித்துள்ளது. இது 1,540 சதுரகிலோமீ பரப்பளவு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. ஆந்திரம், தெலுங்கானா, ஒடிஸா, கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் ஆகியவை காடுக -ளின் பரப்பை அதிகரிப்பதில் பெரும் பாங்காற்றியுள்ளன.

4. ‘I4F இந்தியா-இஸ்ரேல் தொழிற்துறை ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புதுமை நிதியம்’ என்பது இந்தியாவுக்கும் கீழ்காணும் எந்நாட்டிற்கும் இடையிலான ஒத்துழைப்பாகும்?

அ) இந்தோனேசியா

ஆ) இஸ்ரேல் 

இ) ஜெர்மனி

ஈ) பிரான்ஸ்

  • ‘I4F இந்தியா-இஸ்ரேல் தொழிற்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புதுமை நிதியம்’ என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசு மற்றும் இஸ்ரேல் புத்தாக்க ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பாகும். இது இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே கூட்டு தொழிற்துறை R&D’ஐ மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இருநாடுகளும் சமீபத்தில் $5.5 மில்லியன் மதிப்பிலான 3 கூட்டு R&D திட்டங்களுக்கு (சுகாதாரப் பராமரிப்பில் நோய் அறிதலுக்கான IoT நானோ உணரிகள்; ‘NoMoreMos’ – கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் ரீதியான தீர்வு; & ‘IoT அடிப்படையில் இந்தியா முழுவதும் உழவு மற்றும் சுற்றுச்சூழல் தரவுகளை நிகழ்நேரத்தில் சேகரிப்ப -தற்காக செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை செயல் முறைப்படுத்துவது) ஒப்புதல் அளித்துள்ளன.

5. ‘இந்திய உதவியுடன் கட்டப்பட்ட சமூக வீட்டுவசதித் திட்டம்’ தொடங்கப்பட்ட நாடு எது?

அ) மடகாஸ்கர்

ஆ) மொரிஷியஸ் 

இ) மாலத்தீவுகள்

ஈ) மியான்மர்

  • இந்திய உதவியுடன் கட்டப்பட்ட சமூக வீட்டுவசதி அலகுகளை பிரதமர் மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் ஆகியோர் திறந்துவைத்தனர். இந்தியாவின் வளர்ச்சி ஆதரவுடன் மொரிஷியஸில் நிறுவப்படும் குடிமை சேவை கல்லூரி மற்றும் 8 MW சூரியசக்தி ஒளிமின்னழுத்த பண்ணை திட்டங்களையும் இருதலைவர்களும் தொடங்கிவைத்தனர்.
  • மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா மொரிஷியசுக்கு வழங்கும் $190 மில்லியன் டாலர் கடனுக்கான ஒப்பந்தம், சிறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவையும் பகிர்ந்துகொள்ளப்படும்.

6. எந்த இந்திய மாநிலம் தனது மாநிலத்தின் பொன்விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி, ‘உட்கட்டமைப்பு நிதி ஆணையத்தை’ அமைக்க முடிவுசெய்துள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) அருணாச்சல பிரதேசம் 

இ) தெலுங்கானா

ஈ) அஸ்ஸாம்

  • அருணாச்சல பிரதேச அரசு, உட்கட்டமைப்பு வளர்ச்சியை துரிதப்படுத்த, ‘அருணாச்சல பிரதேச உட்கட்டமைப்பு நிதி ஆணையத்தை’ நிறுவவுள்ளது.
  • அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை விடுதலையின் அடையாளமாக தொடக்கப்பட்டதை முதலமைச்சர் பேமா கந்து நினைவு கூர்ந்தார். மாவட்ட அளவிலான நல்லாட்சி குறியீட்டை உருவாக்கவும் அ பி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

7. திருத்தப்பட்ட ‘கிராமப்புற வளர்ச்சித்திட்ட உருவாக்கம் மற்றும் அமலாக்க வழிகாட்டுதல்களை’ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 

இ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

  • மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது திருத்தப்பட்ட ‘கிராமப்புற வளர்ச்சித்திட்ட உருவாக்கம் & அமலாக்க வழிகாட்டுதல்களை’ வெளியிட்டது.
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கிராமப்புற வழிகாட்டுதல்கள் கிராமப்புற இந்தியாவை மாற்றுவதையும் கிராமப்புற செழிப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு உள்ளன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் SVAMITVA திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் RURBAN திட்டம்போன்ற முன்னெடுப்புகளுக்கு இது துணைபுரியும்.

8. “2021’இல் இந்தியாவின் காலநிலை” அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) நபார்டு

ஆ) இந்திய வானிலை ஆய்வு மையம் 

இ) NITI ஆயோக்

ஈ) சுற்றுச்சூழல் அமைச்சகம்

  • இந்திய வானிலை ஆய்வுத்துறை சமீபத்தில் தனது ‘2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை’ அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த 1901இல் நாடுதழுவிய அளவில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து ‘2021’ ஆனது இந்தியாவில் ஐந்தாவது மிகவெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது.
  • மேலும், கடந்த ஆண்டில் (2021) நிகழ்ந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் நாட்டில் 1,750 உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், மகாராஷ்டிரா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை காட்டுகிறது.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘(ALH) 84001’ விண்கல், பின்வரும் எக்கோளிலிருந்து வந்து பூமியில் விழுந்தது?

அ) வியாழன்

ஆ) செவ்வாய் 

இ) வெள்ளி

ஈ) சனி

  • ‘(ALH) 84001’ என்று அழைக்கப்படும் விண்கல் 1984இல் செவ்வாய்க்கோளில் இருந்து பூமியில் வந்து விழுந்தது. 4 தசாப்தங்களுக்கும் மேலாக அறிவியலாளர்கள் இந்த விண்கல்லின் மேற்பரப்பில் காணப்படும் கரிமசேர்மங்கள் செவ்வாய்க்கோளின் முதுகாலத்திற்கு ஆதாரமா? என்று விவாதித்து வருகின்றனர்.

10. இந்தியா அண்மையில் எந்த நாட்டுடன் இணைந்து வங்கக்கடலில், ‘கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை’ மேற்கொண்டது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) ஜப்பான் 

இ) பிரான்ஸ்

ஈ) இலங்கை

  • இந்திய கடற்படைக் கப்பல்களான ஷிவாலிக் மற்றும் கட்மட் ஆகியவை வங்காள விரிகுடாவில் ஜப்பான் கடல் சார் தற்காப்புப்படை (JMSDF) கப்பல்களான உரகா மற்றும் ஹிராடோவுடன் இணைந்து கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை மேற்கொண்டன.
  • இந்தப் பயிற்சியானது வான்பயிற்சிகள் மற்றும் உத்திசார் சூழ்ச்சிகள் உட்பட பல்வேறு கடல்சார் நடவடிக்கைகளை உள்ளடக்கியது. இரு கடற்படைகளுக்கு இடையிலான பரந்த உத்திசார் கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. செப்.10-ல் ஆசிய விளையாட்டு போட்டி: சீனாவில் தொடங்குகிறது

19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி செப்.10-25ம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுகளான நீச்சல், வில்வித்தை, தடகளம், பூப்பந்து, குதிரையேற்றம், வாள்வீச்சு, கால்பந்து, ஹாக்கி, ஜூடோ, கபடி உள்ளிட்ட 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஈ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரேக்டான்சிங்கிற்கு இந்த ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதால் இவை பதக்க விளையாட்டுகளாக அறிமுகமாகிறது. மேலும், பார்வையாளர்களின் உற்சாகத்தை உயர்த்தும் வகையில் 11 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தெற்காசிய மண்டலத்தில் இந்தியா உறுப்பினராக உள்ளது. மேலும் ஆசிய விளையாட்டுகளின் அனைத்து பதிப்புகளிலும் போட்டியிட்ட 7 நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா குறைந்தபட்சம் ஒருதங்கப் பதக்கத்தையாவது வென்றுள்ளது. 1990ம் ஆண்டு போட்டியை தவிர, பதக்கப் பட்டியலில் முதல் 10 நாடுகளுக்குள் எப்போதும் இடம் பிடித்துள்ளது. இதுவரை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 139 தங்கம், 178 வெள்ளி மற்றும் 299 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓசியானியா நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட ஓசியானியா விளையாட்டு வீரர்கள், டிரையத்லான், தடகளம், வுசு, ரோலர்ஸ்கேட்டிங், பளுதூக்குதல் ஆகிய 5 விளையாட்டுகளில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள். ஆசிய விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் சோனி தொலைக்காட்சி நேரலை செய்கிறது.

2. தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி-ல் 5-ஜி தொழில்நுட்ப மேம்பாட்டு ஆராய்ச்சி

5ஜி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பாக சென்னை ஐஐடில் ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட L&T இன்போடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் இருநிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பத்தில் புதுமைகளையும், கிராமப்புறங்களில் குறைந்த செலவில், குறைந்த அலைவரிசையில் மேம்படுத்தப்பட்ட 5ஜி நெட்வொர்க் வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.

3. காடு அதிகரிப்பு: உண்மையை மறைக்கும் கணக்கெடுப்பு

இந்தியக் காடுகளின் நிலை குறித்த அறிக்கையை (ISFR) 2021, இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு (FSI) ஜனவரி இரண்டாவது வாரம் வெளியிட்டது. இந்தியக் காடுகள் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்த அறிக்கை 1987 முதல் வெளியிடப்பட்டுவருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி 2,261 ச.கி.மீ. காடு-மரஅடர்த்தி அதிகரித்திருக்கிறது. இந்தியப் புவியியல் பரப்பில் 24% காடு என்கிறது இந்த அறிக்கை.

இந்தக் கணக்கெடுப்பில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் காட்டுப் பரப்பு அதிகரித்துக்கொண்டே வருவதாக ஆரோக்கியமான சித்திரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அழகானதொரு சித்திரத்தைத் தீட்ட இந்த அறிக்கை முயன்றாலும் காட்டுப் பரப்பு அதிகரித்திருப்பதற்குக் களத்தில் எந்த ஆதாரமும் இல்லை. காடு என்றால் என்ன என்பதற்குக் காடு கணக்கெடுப்பு அமைப்பு வைத்துள்ள தவறான-திரிபான வரையறையே பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்கிறார் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த காட்டுயிர் அறிவியலர் எம்.டி.மதுசூதன்.

ஒரு ஹெக்டேர் நிலப்பகுதியில் வெறும் 10% மரங்கள் இருந்தாலே, அது பசுமைப்பரப்பு என்கிறது இந்த அமைப்பு. இந்தப் புதிய வரையறை அடிப்படையிலேயே காடு-மரஅடர்த்தி அதிகமுள்ள பகுதிகளை பசுமைப்பரப்பு என்று அடையாளப்படுத்தி இந்த அமைப்பு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. புதிய கணக்கெடுப்பு அறிக்கையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி மதுசூதன் உள்ளிட்ட காட்டுயிர் அறிவியலர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். சிலவற்றைப் பார்ப்போம்.

தேயிலையும் தென்னையும் காடுகள்?

இந்தியாவில் மிக மோசமாக காடு அழிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று அசாமில் உள்ள சோனித்பூர். ஆனால், இப்பகுதியில் காட்டுப் பரப்பு அதிகரித்துவருவதாகக் காடுகளின் நிலை குறித்த அறிக்கை தெரிவிக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? சோனித்பூரின் ரங்கபரா பகுதியைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைக் காடுகள் என இந்த அறிக்கை காட்டியுள்ளது.

சோனித்பூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வால்பாறை பகுதியிலும் தேயிலைத் தோட்டங்கள் காடுகளாகக் காட்டப்பட்டுள்ளன; பொள்ளாச்சி தென்னந்தோப்புகளும் காடுகளாகக் காட்டப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்னால் விலைமதிப்பற்ற பசுமைமாறா ஈரப்பதக் காடுகள் வால்பாறையில் துவம்சம் செய்யப்பட்டுத் தேயிலை, காபித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. 150 ஆண்டுகள் கழித்து அதே தேயிலை, காபித் தோட்டங்கள் காடுகளாகக் கணக்கெடுக்கப்படுவது வேடிக்கை!

இந்தியாவில் 90%-ம் அதிகமாகக் காடு இருக்கும் பகுதியாக லட்சத்தீவு கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தீவுகளில் இருப்பவை பெருமளவு தென்னை மரங்களே. அரசுக் கணக்குப்படி ‘அடர்த்தியான அந்தக் காட்டுப் பகுதி’யில் ச.கி.மீ.க்குத் தலா 2,000 மக்களும் வசித்துவருவதுதான் ஆச்சரியம். இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ஒன்றான கொல்கத்தாவில் மூச்சு முட்டும் கட்டிடங்களுக்கு மத்தியில் இருக்கும் 10-15 மரங்களும் காடாகவே கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

அதேபோல், டெல்லியில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டுவரும் பகுதிக்கு அருகே மத்திய அரசின் அலுவலகக் கட்டிடங்கள் அடங்கியுள்ள பகுதியும்கூட காடாகவே காட்டப்பட்டுள்ளது. நம் நாட்டு உயிரினப் பன்மைக்கு எதிரியாகக் கருதப்படும் சீமைக் கருவேல ஆக்கிரமிப்புப் பகுதியையும் காடாகவே இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு காட்டியுள்ளது. ராஜஸ்தானில் கடுமையாக வறண்ட பாலைவனப் பகுதியான ஜெய்சால்மரிலும்கூடக் காடு இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளதுதான் உச்சம்.

இந்தியாவில் காடுகளை அழிக்கும் செயல்பாடு 1980-களிலிருந்து சீராக அதிகரித்துவருகிறது. அதேநேரம் காட்டின் பரப்போ புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவருவதாக அறிக்கை கூறுகிறது. காடுகளின் பரப்பு குறைவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எந்தப் பின்னணியும் இல்லாமல் காட்டின் பரப்பு அதிகரிப்பதாக முன்வைக்கப்படும் சித்திரம் எப்படி நம்பகமான ஒன்றாக இருக்க முடியும்?

ஆதாரமற்ற சித்திரம்

மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு, தனது மதிப்பீடுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுகிறதே ஒழிய, எந்தக் காலத்திலும் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்திய செயற்கைக்கோள் வரைபடங்களை வெளியிட்டதே இல்லை. வரைபடங்கள்தானே உண்மையை எடுத்துரைக்கும்? தனது வரைபடங்கள் யாருக்காவது தேவையென்றால், ஒரு வரைபடக் கட்டத்தை `2,000-க்கு அந்த அமைப்பு விற்பனை செய்கிறது. இப்படி மொத்த வரைபடங்களையும் யாராவது வாங்க நினைத்தால் `50 லட்சத்துக்குக் குறையாமல் தேவை.

“இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு தனது அறிக்கைகளைச் சரிபார்ப்பதற்கான எந்த ஆதாரத்தையும் பொதுவெளியில் வெளியிடுவதில்லை. அப்படி ஆதாரங்கள் வெளியிடப்பட்டால், ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை காட்டுப்பரப்பு அதிகரித்துவருகிறது எனபோலியான சித்திரத்தைக் கட்டியெழுப்பும் அந்த அமைப்பின் முயற்சி படாரென்று உடைந்துவிடும். ஒரு காலத்தில், புலிகளின் கால்தடத்தை அடிப்படையாகக் கொண்டு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகக் கூறப்பட்டு, பிறகு அது பொய் என்று நிரூபணமானது. அதைப் போன்றதுதான் காட்டுப் பரப்பு அதிகரித்துவருகிறது என்கிற கணக்கெடுப்பும்” என்கிறார் எம்.டி. மதுசூதன்.

நோக்கம் என்ன?

சரி, தவறான புரிதலின் காரணமாகத் தோட்டங்களையும் தோப்புகளையும் இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு காடு என வகைப்படுத்துகிறதோ என்கிற கேள்வி எழலாம். அப்படிச் சொல்ல முடியாது. மற்றொரு அரசு அமைப்பான ‘தேசிய தொலையுணர்வுமையம்’ (NRSC) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் வரைபடங்கள் காடு, தேயிலைத் தோட்டம், தென்னந்தோப்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை தெளிவாகக் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல், 2015-க்குப் பிறகு இந்தியக் காடுகளின் நிலை மிக மோசமாகச் சரிந்துவருவதையும் தேசியத் தொலைவுணர்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால், மேற்கண்ட அம்சங்களைத் தெரிந்துகொண்டே காடு கணக்கெடுப்பு அமைப்பு தவறான சித்திரத்தை வலிந்து உருவாக்க முனைகிறது என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படிச் செய்வதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

எரிபொருள், கனிமச் சுரங்கம், போக்குவரத்துக்கான சாலை வசதி, தொழிற்சாலைகளுக்குக் காடுகளைத் திருப்பிவிட அரசு முயல்கிறது. நடப்பில் காடுகளின் பரப்பு குறைந்துகொண்டே போகும்போது, காட்டை மேலும் அழிக்கும் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே பெருத்த கேள்விகள் எழக்கூடும். இந்தப் பின்னணியில் காடுகளுக்கான வரையறையையே மாற்றியமைத்துவிட்டால், காடுகளின் பரப்பு அதிகரித்ததாகக் காட்டிவிடலாம். மற்றொரு பக்கம், காடுகளை அழிப்பதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகிவிடும் என அரசு நினைக்கிறது.

அத்துடன், புவி வெப்பமாதலுக்கு எதிராகக் காடுகளின் பரப்பை அதிகரித்துக் காட்டுவதால், கார்பன் வர்த்தகத்தில் அதைப் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். காட்டின் பரப்பை அதிகரிக்கும் மூன்றாம் உலக நாடுகள் அதற்குப் பதிலீடாக பணக்கார நாடுகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, அந்த நாடுகள் கூடுதல் கார்பன் வெளியிட வழியமைக்க முடியும்.

உணர்ந்திருக்கிறோமா?

கரோனா வைரஸ் பரவலுக்குக் காடழிப்புதான் முதன்மைக் காரணம் என்பது உறுதியாகத் தெரிந்த பின்னரும் காடழிப்பை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். கரோனா வைரஸை விடவும் தீவிரமான-நீடித்த பிரச்சினைகளைக் காடழிப்பினால் இந்தியா எதிர்கொண்டுள்ளது. அஸாம் சோனித்பூர் பகுதியில் மட்டுமல்லாமல், காடழிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களுக்கும் யானை/புலி/சிறுத்தைகளுக்கும் இடையிலான எதிர்கொள்ளல் கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமாக அதிகரித்திருக்கிறது. இரு தரப்பிலும் உயிர்ப் பலிகளும் அதிகமாகவே உள்ளன. அதேபோல் சோனித்பூர் பகுதியில் மலேரியா காய்ச்சல் வழக்கத்தைவிட 8 மடங்கு அதிகரித்திருக்கிறது. காடுகளுக்கான வரையறையை அரசு மாற்றலாம். ஆனால், இதுபோன்ற மோசமான பக்கவிளைவுகளை வரையறை மாற்றங்கள் தடுக்கப் போவதில்லை. காடழிப்பு ஏற்படுத்தும் இதுபோன்ற நிஜமான பாதிப்புகளை அரசும் மக்களும் புறந்தள்ளிவருவதுதான் பிரச்சினைக்கு மூல காரணம்.

இயற்கையான காடுகள் உயிரினப் பன்மைக்கும், மக்களுக்கும் கணக்கற்ற பலன்களை வழங்கிவருகின்றன. காடும் இயற்கையும் வழிவழியாக நம்மை வந்தடைந்துள்ள உயிருள்ள மரபுச் சொத்துகள், பண்பாட்டு அடையாளங்கள். காட்டு வளம் என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளத்தின் அடையாளமும்கூட. யுனெஸ்கோ, ஐ.நா. சபை போன்ற அமைப்புகள், அந்த மரபுச் சின்னங்களை உரிய வகையில் அங்கீகரிக்கின்றன, போற்றுகின்றன, பாதுகாக்க வலியுறுத்துகின்றன. மாறாக, காடுகளுக்கும் இயற்கை வளத்துக்கும் உரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் வழங்காமல் வெறும் மேற்பூச்சை நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு உத்தரவாதமான வருங்காலம் இல்லை என்பதே காலம் உணர்த்தியுள்ள நிதர்சனம்.

4. ‘மகிழ் கணிதம்’ திட்டம்: பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் கணிதம்’ திட்டத்தை செயல்படுத்துவதற்காக பள்ளி ஒன்றுக்கு `1,350 வீதம் மொத்தம் `93.79 லட்சம் (6,948 பள்ளிகள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இரா. சுதன், முதன்மைக்கல்வி அதிகாரிக -ளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ -ர்களுக்கு எளிய முறையில் கணிதப் பாடத்தை கற்பிக்க ஏதுவாக ‘மகிழ் கணிதம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதுசார்ந்து ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக கடந்த ஜனவரி 20, 21ஆம் தேதிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அடுத்தகட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பள்ளி ஒன்றுக்கு `1,350 வீதம் மொத்தம் `93.79 லட்சம் (6,948 பள்ளிகள்) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

1. Which country has built an ‘Artificial Moon’ project?

A) India

B) China 

C) Russia

D) Israel

  • Chinese scientists have built an “artificial moon” research facility, to simulate low–gravity environments using magnetism. The facility, which is to be officially launched this year, will use powerful magnetic fields inside vacuum chamber to make gravity disappear. This effect is called ‘Diamagnetic levitation’.

2. When is the ‘National Start–up Day’ celebrated?

A) January 1

B) January 16 

C) January 17

D) January 25

  • Prime Minister Narendra Modi announced that January 16 will be celebrated as National Start–up Day every year. The prime minister also said this decade is the ‘techade of India’.
  • With over 61,000 recognised startups by the Department for promotion of industry and internal trade (DPIIT), the government acknowledges India as the world’s 3rd largest start–up ecosystem.

3. As per the India State of Forest Report 2021, the country’s forest cover increased to ………. of India’s geographical area.

A) 19.71%

B) 21.71% 

C) 25.71%

D) 30.71%

  • The Ministry of Environment, Forests and Climate Change (MoEFCC) released the India State of Forest Report (ISFR) 2021. As per the report, the forest cover has increased to 7,13,789 sq km, or 21.71% of India’s geographical area. It is an increase of 1,540 sq km.
  • Andhra Pradesh, Telangana, Odisha, Karnataka and Jharkhand contributed the most to increase in forest cover.

4. ‘I4F Industrial R&D and Technological Innovation Fund’ is a collaboration between India and which country?

A) Indonesia

B) Israel 

C) Germany

D) France

  • ‘I4F– India–Israel Industrial R&D and Technological Innovation Fund’ is collaboration between the Department of Science and Technology (DST), Government of India, and the Israel Innovation Authority. It aims to promote joint Industrial R&D between India & Israel.
  • The two countries have recently approved three joint R&D projects worth $5.5 million including ‘Centrally monitored IoT nano–sensors for diagnostics in healthcare; ‘NoMoreMos’ – a mosquito control biological solution; and ‘IoT enabled satellite communication for real–time collection of agriculture and environment data across India’.

5. Which country has inaugurated the ‘India–assisted social housing units project’?

A) Madagascar

B) Mauritius 

C) Maldives

D) Myanmar

  • Indian Prime Minister Narendra Modi and his Mauritian counterpart Pravind Jugnauth jointly inaugurated India–assisted social housing units project in Mauritius virtually. They also laid foundation stone for Civil Service College and an 8 MW Solar PV Farm, undertaken with India’s support
  • They also signed agreement for the extension of USD 190M Line of Credit from the India to Mauritius for the Metro Express and other infrastructure projects, and an MoU on the implementation of small development projects.

6. Which Indian state has launched the Golden Jubilee Celebrations of the state and decided to set up ‘Infrastructure Financing Authority’?

A) Tamil Nadu

B) Arunachal Pradesh 

C) Telangana

D) Assam

  • Arunachal Pradesh government will establish ‘Arunachal Pradesh Infrastructure Financing Authority’, to fast–track infrastructure development. Chief Minister Pema Khandu commemorated the launch of the Golden Jubilee Celebrations of Arunachal Pradesh as an independent identity. The Cabinet also decided to formulate District Level Good Governance Index.

7. Which Union Ministry released revised ‘Rural Area Development Plan Formulation and Implementation (RADPFI) Guidelines’?

A) Ministry of Rural Development

B) Ministry of Panchayati Raj 

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Environment, Forest and Climate Change

  • Ministry of Panchayati Raj released the revised ‘Rural Area Development Plan Formulation and Implementation (RADPFI) Guidelines’. The newly introduced Rural guidelines aim to transform rural India and to promote rural prosperity. It would supplement the efforts of the Centre such as the SVAMITVA scheme of Ministry of Panchayati Raj and RURBAN Mission of Ministry of Rural Development.

8. Which institution released the ‘Climate of India during 2021’ Report?

A) NABARD

B) India Meteorological Department 

C) NITI Aayog

D) Environment Ministry

  • India Meteorological Department (IMD) recently released its ‘Climate of India during 2021’ report. As per the report, 2021 was the fifth warmest year in India since nation–wide records commenced in the country in 1901. It also shows that the country reported loss of 1,750 lives due to extreme weather events last year and Maharashtra was the most adversely affected state.

9. ‘(ALH) 84001’ meteorite which was making news, landed on the Earth from which planet?

A) Jupiter

B) Mars 

C) Venus

D) Saturn

  • A meteorite called (ALH) 84001 landed on the Earth from Mars in 1984. For more than four decades scientists have debated if the organic compounds found on the surface of the meteorite were proof of ancient life on Mars.

10. India recently undertook a ‘Maritime Partnership Exercise’ in the Bay of Bengal with which country?

A) Australia

B) Japan 

C) France

D) Sri Lanka

  • Indian Naval Ships Shivalik and Kadmatt undertook Maritime Partnership Exercise with Japan Maritime Self–Defence Force (JMSDF) ships Uraga and Hirado in the Bay of Bengal. The Maritime Partnership Exercise included several maritime operations including Flying Operations and Tactical Manoeuvres. It aims to further strengthen the wide–ranging strategic partnerships between the navies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!