Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

28th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேச பொது உயர்நீதிமன்றத்தின்’ புதிய பெயர் என்ன?

அ) ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம்

ஆ) ஜம்மு-காஷ்மீர் & லடாக் யூனியன் பிரதேச பொது உயர்நீதிமன்றம்

இ) ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் சிறப்பு உயர்நீதிமன்றம்

ஈ) மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம்

  • “‘ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச & லடாக் யூனியன் பிரதேசத்தின் பொது உயர்நீதிமன்றம்” என்ற நீண்ட மற்றும் சிக்கலான பெயரானது “ஜம்மு-காஷ்மீர் & லடாக் உயர்நீதிமன்றம்” என மாற்றப்பட்டுள்ளது.
  • இந்த ஆணையை சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை அறிவித்தது. அசல் பெயரை கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (சிரமங்களை நீக்குதல்) ஆணை, 2021’இல் இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.

2. மனிதர்களில் குரங்கம்மையின் முதல் பாதிப்பானது 1970’இல், பின்வரும் எந்த நாட்டில் பதிவானது?

அ) கென்யா

ஆ) காங்கோ மக்களாட்சிக் குடியரசு

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) நைஜீரியா

  • நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் டெக்சாஸில் குரங்கம்மையின் ஓர் அரிய பாதிப்பு கண்டறியப்பட்டது. பெரியம்மைபோன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்ததுதான் குரங்கம்மை. இது காய்ச்சல், நிணநீர் வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளைத் ஏற்படுத்துகிறது.
  • குரங்கம்மை வைரஸின் இரண்டு தனித்துவமான மரபணு குழுக்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை, மத்திய ஆப்பிரிக்க மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குழுக்களாம். மனிதர்களில் குரங்கம்மையின் முதல் பாதிப்பு, கடந்த 1970’இல், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பதிவு செய்யப்பட்டது.

3. 2021’இல் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மன்றத்தை நடத்தும் நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) அமெரிக்கா

ஈ) நியூசிலாந்து

  • ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மன்றத்தை நியூசிலாந்து நடத்த உள்ளது. இதன் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள முறையான கூட்டத்திற்கு முன்னதாக, அண்மையில், நியூசிலாந்து, முன்னோட்டமாக இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கியது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின், சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் பிறநாட்டுத்தலைவர்கள் மெய்நிகராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். COVID தொற்று மற்றும் அதன் பொருளாதார தாக்கங்களை கையாளுவதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அப்போது விவாதித்தனர்.

4. “வடக்கு-தெற்கு எரிவாயு திட்டம்” என்பது எவ்விருநாடுகளுக்கு இடையேயான எரிவாயு குழாய் ஒப்பந்தமாகும்?

அ) இந்தியா மற்றும் ஈரான்

ஆ) இந்தியா மற்றும் ரஷ்யா

இ) பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா

ஈ) அமெரிக்கா மற்றும் கனடா

  • கராச்சியில் உள்ள காசிம் துறைமுகம் முதல் லாகூர் வரை 1,100 கிமீ நீளத்துக்கு எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டம் பொதுவாக “வடக்கு-தெற்கு எரிவாயு திட்டம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பாக்ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • பாகிஸ்தானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 74:26 சதவீத பங்கில் ஒரு சிறப்பு நோக்கங்கொண்ட வாகனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

5. ‘COVID டீகா சங் சுரக்ஷித் வான், தன் ஔர் உத்யம்’ திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ) பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

  • பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, “COVID டீகா சங் சுரக்ஷித் வான், தன் ஔர் உத்யம்” என்ற நாடுதழுவிய இயக்கத்தை மெய்நிகராக தொடங்கினார். இந்தியாவில் உள்ள பழங்குடியினருக்கு COVID-19 தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவாக்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
  • இது இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் 45,000 வான் தன் விகாஸ் கேந்திரங்கள் மீது கவனஞ் செலுத்தும். கிராமங்களில் உள்ள பாரம்பரிய கிராமத்தலைவர்கள், சுய உதவிக்குழுக்கள் உதவியுடன் இது செயல்படுத்தப்படும்.

6. அண்மையில் தொடங்கப்பட்ட தேசிய லாஜிஸ்டிக்ஸ் எக்ஸலன்ஸ் விருதுகளுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ) எம்.எஸ்.எம்.இ அமைச்சகம்

ஆ) வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இ) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஈ) எரிசக்தி அமைச்சகம்

  • தேசிய லாஜிஸ்டிக்ஸ் எக்ஸலன்ஸ் விருதுகளை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இவ்விருதுகள் 2 பிரிவுகளாக உள்ளன, முதல் குழுவானது லாஜிஸ்டிக்ஸ் உட்கட்டமைப்பு / சேவை வழங்குநர்களுக்கானதாகவும் இரண்டாவது குழுவானது பல்வேறு தொழிற்துறைசார் பயனர்களுக்கு உரியதாகவும் உள்ளது.
  • வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் வலைத்தளம்மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நிறுவனங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. வெற்றியாளர்கள் 2021 அக்டோபர்.31 அன்று அறிவிக்கப்படுவார்கள்

7. இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.24

ஆ) ஜூன்.25

இ) ஜூலை.01

ஈ) ஜூலை.03

  • 1967 ஜூன்.24 அன்று கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.24 அன்று இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிறது. சிறப்பாக செயல்படும் கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களுக்காக கடவுச்சீட்டு சேவை விருதுகளும் இந்நாளில் வழங்கப்பட்டு வருகின்றன.

8. பன்னாட்டு கடல்சார் அமைப்பால் கொண்டாடப்படும் மாலுமிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Seafarers are Key Workers

ஆ) Importance of Seafarers

இ) Seafarers: at the core of shipping’s future

ஈ) Support Seafarers

  • பன்னாட்டு வணிகம் மற்றும் உலகப்பொருளாதாரத்தில் மாலுமிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.25 அன்று, “மாலுமிகள் நாள்” கொண்டாடப்படுகிறது.
  • 2010ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில், ஒரு தீர்மானத்தின்மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டில் இருந்து “மாலுமிகள் நாள்” கொண்டாடப்பட்டு வருகிறது. “Seafarers: at the core of shipping’s future” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

9. எந்த இந்திய ஆளுமையின் பிறந்தநாள், உலக மாணவர்கள் நாளென கொண்டாடப்படுகிறது?

அ) இராதாகிருஷ்ணன்

ஆ) APJ அப்துல் கலாம்

இ) ஹோமி J பாபா

ஈ) விக்ரம் சாராபாய்

  • இந்தியாவின் பதினோராவது குடியரசுத்தலைவரான டாக்டர். APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்.15ஆம் தேதியை உலக மாணவர் நாளாக ஐநா அவை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது.
  • சமீபத்தில், ஜூலை.27 அன்று, ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என அழைக்கப்படும் APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஷில்லாங்கிலுள்ள IIM’இல் மாணவர்கள் இடையே உரையாற்றும்போது, மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.

10. இந்திய பாரம்பரிய நிறுவனம் நிறுவப்படவுள்ள நகரம் எது?

அ வாரணாசி

ஆ) ஆமதாபாத்

இ) நொய்டா

ஈ) காந்தி நகர்

  • நொய்டாவில் இந்திய பாரம்பரிய நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்கீழ் நாட்டில் உள்ள அனைத்து பாரம்பரிய நிறுவனங்களும் செயல்படும். இந்த நிறுவனம் கலை, தொல்பொருள், கையெழுத்துப் பிரதியியல் ஆகியவற்றில் முதுநிலை மற்றும் முனைவர் நிலை படிப்புகளை வழங்கும்.
  • இது தொல்பொருள் நிறுவனம், கலாச்சார பண்புடைய சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆராய்ச்சி ஆய்வகம், தேசிய அருங்காட்சியகம் பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கல்விப் பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட “பல்கலைக்கழகமாகக் கருதப்படும்”.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவரான N சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ என்ற விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் N சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேலும், விடுதலை நாளன்று சங்கரய்யாவுக்கு இவ்விருதினை வழங்கி முதல்வர் மு க ஸ்டாலின் கௌரவிக்கவுள்ளார்.

2. 33 லட்சம் வீடுகளுக்கு குழாய்வழி சமையல் எரிவாயு திட்டத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

குழாய் வழியே 33 லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தினை முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் திட்டத்தை டோரன்ட் கேஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனமானது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோகத் திட்டத்துக்காக `5,000 கோடி முதலீடு செய்துள்ளது. அதன்மூலமாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத்திட்டத்தின் முதல் கட்டமாக, எண்ணூர் அருகே வல்லூரில் சிட்டிகேட் நிலையம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

1.4 ஏக்கரிலான இந்தத் திட்டத்தின்மூலம் 33 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு குழாய்மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திட முடியும். சென்னை & திருவள்ளூர் மாவட்டங்களில் 25 அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளத் தயார் நிலையில் உள்ளன.

வல்லூரில் உள்ள சிட்டிகேட் நிலையத்திலிருந்து 25 நிலையங்களுக்கு எரிவாயு கொண்டு வரப்பட்டு, வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. டீசல் & பெட்ரோலுக்கு மாற்றாக இது மாற்றாக அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். இப்போது பயன்பாட்டிலுள்ள இயற்கை எரிவாயு அடிப்படையிலான வாகனங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3. தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 12.5 லட்சம் பெண்கள் பணிபுரிகின்றனர்

தமிழகத்தில் 12,65,588 பெண்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிவதாக மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெளி மக்களவையில் தெரிவித்துள்ளார். பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்கள் நலன் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கரூர் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் செ ஜோதிமணி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் ராமேஷ்வர் தெளி எழுத்து மூலம் அளித்துள்ள பதில்:

2019-20ஆம் ஆண்டில், மத்திய புள்ளியியல், திட்டச் செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய தொழிலாளர் ஆற்றல் மதிப்பீடு கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் பணியிலிருப்பவர்களில் 30 சதவீதத்தினர் பெண்கள். தமிழ்நாட்டில் 40.2% பெண்கள் பணிசெய்து வருகின்றனர். அதிக அளவில் பெண்கள் பணியாற்றுவது ஹிமாசல பிரதேசம் (65 %).

சிக்கிம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பெண்கள் அதிகமாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மிகக் குறைவாக பிகாரில் 9.5 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 17.7 சதவீதம் மட்டுமே பெண்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 2021 ஜூலை 20-ஆம் தேதி வரை 15 வயதுக்கு மேலாக உள்ள பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 12,65,588 ஆகும். அதிக அளவாக சென்னை, திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் முறையே 2.44 லட்சம், 1.50 லட்சம், 1.17 லட்சம் பெண்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான உதயம் பதிவு வலைதளத்தில் தகவல்படி, இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நாட்டில் 6,28,447 பெண் தொழில் முனைவோர் (பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள்) இருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டில் 89,400 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுகின்றன. மேலும் உத்யோக் ஆதார் பதிவின்படி 2020 ஜூன் வரை நாடு முழுக்க 14,75,207 பெண்களும், தமிழகத்தில் 1,88,061 பெண்களும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

4. அப்துல் கலாம் நினைவு நாள்:

‘மக்களின் குடியரசுத் தலைவர்’ என்று போற்றப்படும் அப்துல் கலாம், 2015 ஜூலை.27ஆம் தேதி தனது 83ஆவது வயதில் காலமானார்.

1. What is the new nomenclature of the ‘Common High Court of UT of Jammu and Kashmir and UT of Ladakh’?

A) High Court of Jammu and Kashmir and Ladakh

B) Common High Court of UT of Jammu and Kashmir and Ladakh

C) Special High Court of Jammu and Kashmir and Ladakh

D) High Court of Reorganised Jammu and Kashmir and Ladakh

  • The long and cumbersome nomenclature ‘Common High Court of UT of Jammu and Kashmir and UT of Ladakh’ has been changed to ‘High Court of Jammu and Kashmir and Ladakh’. The order was notified by the Department of Justice in the Law Ministry. President Ram Nath Kovind has signed the Jammu and Kashmir Reorganisation (Removal of Difficulties) Order, 2021, which spelled out the original name.

2. The first case of monkeypox in humans was recorded in 1970 in which country?

A) Kenya

B) Democratic Republic of Congo

C) USA

D) Nigeria

  • A rare case of monkeypox was detected in Texas, in the United States, as per the Center for Disease Control and Prevention (CDC). Monkeypox belongs to the same family of viruses as smallpox. It induces flu–like symptoms, swelling of the lymph nodes and rashes.
  • Scientists have discovered two distinct genetic groups of monkeypox virus—Central African and West African. The first case of monkeypox in humans was recorded in 1970 in the Democratic Republic of Congo.

3. Which country is the Asia–Pacific Economic Cooperation forum host in 2021?

A) China

B) India

C) USA

D) New Zealand

  • New Zealand is the revolving host of the Asia–Pacific Economic Cooperation (APEC) forum. It is headquartered in Singapore. Recently, New Zealand chaired an extraordinary meeting ahead of a formal meeting in November.
  • US President Joe Biden, Russia’s Vladimir Putin, China’s Xi Jinping and other world leaders met virtually. They discussed on collective actions to tackle the Covid–19 pandemic and its economic impacts.

4. “North–South Gas project” is a gas pipeline agreement between which of the two countries?

A) India and Iran

B) India and Russia

C) Pakistan and Russia

D) USA and Canada

  • Pakistan and Russia have signed an agreement for construction of a 1,100–km gas pipeline from Port Qasim in Karachi to Lahore.
  • This project is commonly named as North–South Gas project and is also called the Pakstream Gas Pipeline Project. A special purpose vehicle has been formed between Pakistan & Russia, with a shareholding of 74:26 %.

5. Which Union Ministry launched the ‘COVID Teeka Sang Surakshit Van, Dhan aur Uddyam’ programme?

A) Ministry of Environment and Climate Change

B) Ministry of Tribal Affairs

C) Ministry of Home Affairs

D) Ministry of Health and Family Welfare

  • Arjun Munda, Minister of Tribal Affairs, virtually launched the nationwide campaign “COVID Teeka Sang Surakshit Van, Dhan aur Uddyam”. It aims to fast–track the pace of COVID vaccination among tribals, in India.
  • The campaign will focus on the 45,000 Van Dhan Vikas Kendras (VDVK) of the Tribal Co–operative Marketing Development Federation of India (TRIFED). It will be implemented with the help of traditional village headsmen, SHGs and ground level workers in villages.

6. Which Ministry is associated with the National Logistics Excellence Awards, launched recently?

A) Ministry of MSME

B) Ministry of Commerce and Industry

C) Ministry of Road Transport and Highways

D) Ministry of Power

  • The Government has launched the National Logistics Excellence Awards. The awards are in two categories, the first group includes logistics infrastructure/service providers and second one is for various user industries. Organisations will be invited to submit entries through the Ministry of commerce and industry website. The winners will be announced on 31 October 2021

7. When is ‘Passport Seva Divas’ celebrated in India every year?

A) June.24

B) June.25

C) July.01

D) July.03

  • Every year ‘Passport Seva Divas’ is celebrated on 24 June in India, to commemorate the enactment of the Passports Act on 24 June, 1967. Passport Seva Puraskars were announced for the best performing Passport Offices and their personnel.

8. What is the theme of the “Day of the Seafarer”, celebrated by the International Maritime Organisation (IMO)?

A) Seafarers are Key Workers

B) Importance of Seafarers

C) Seafarers: at the core of shipping’s future

D) Support Seafarers

  • Every year, 25 June is celebrated as the “Day of the Seafarer”, to recognise the contribution of seafarers in international trade and the global economy. The Day of the Seafarer was first celebrated in 2011 after it was designated by a resolution in the Conference of Parties to the International Convention, held in Philippines, in 2010.
  • The theme of the Day of the Seafarer is “Seafarers: at the core of shipping’s future”.

9. The birth anniversary of which Indian personality has been celebrated as ‘World Students’ Day’?

A) RadhaKrishnan

B) A P J Abdul Kalam

C) Homi J Bhabha

D) Vikram Sarabhai

  • The birth anniversary of 11th President of India Dr APJ Abdul Kalam, October 15 has been recognised by the United Nations to be celebrated as World Students’ Day.
  • Recently, the country remembered the Missile Man of India on his 6th death anniversary, on July 27. While addressing students at IIM –Shillong, the former President died of cardiac arrest.

10. Indian Institute of Heritage has been proposed to be set up in which city?

A) Varanasi

B) Ahmedabad

C) Noida

D) Gandhi Nagar

  • The Union Government has decided to set up the Indian Institute of Heritage in Noida, under which all heritage institutes in the country will operate. The institute will offer masters and PhD courses in history of arts, archaeology, manuscriptology among others.
  • It will be a “deemed to be university” institute formed by integrating the Institute of Archaeology, National Research Laboratory for Conservation of Cultural Property, National Museum Institute of History of Conservation and Museology (NMICHM) and the academic wing of Indira Gandhi National Centre for the Arts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!