Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

28th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்தியா வானிலை ஆய்வு மையமும் ICMR’உம், கீழ்காணும் எந்த நோய்க்கான வல்லுநர் குழுவை அமைத்துள்ளன?

அ) AIDS

ஆ) மலேரியா

இ) COVID

ஈ) டெங்கு

  • இந்தியா வானிலை ஆய்வு மையமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR), “மலேரியா நோ மோர்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மலேரியா மற்றும் காலநிலை தொடர்பான இந்திய இருமுகமை வல்லுநர் குழுவை உருவாக்கியுள்ளது.
  • இந்தியாவில் மலேரியாவை விரைவாக கண்டறிவதற்கான காலநிலை அடிப்படையிலான தீர்வுகளை ஆராய்ந்து வழங்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. மேற்கூரையில் பொருத்துவதன்மூலம் COVID தொற்றைக் கண்ட -றியக்கூடிய ‘COVID அலாரம்’ என்றவொன்றை உருவாக்கியுள்ள நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) சீனா

இ) ஐக்கியப் பேரரசு

ஈ) இந்தியா

  • மேற்கூரையில் பொருத்துவதன்மூலம் 15 நிமிடங்களில் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறியும் திறன்பெற்ற ‘COVID அலாரம்’ என்றவொன்றை ஐக்கியப்பேரரசைச் சார்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இந்தத் துல்லியமான சாதனத்தை வானூர்தி அறைகள், வகுப்பறைகள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனையிட பயன்படுத்தலாம். தோலால் உற்பத்தி செய்யப்படும் வேதிப்பொருட்களைக் உணர்வதன்மூலமோ அல்லது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் சுவாசத்தின்மூலமோ இதன் உணரி செயல்படுகிறது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘நியூ ஷெப்பர்ட்’ என்பது எந்த விண்வெளி முகமையின் ஏவுகல அமைப்பாகும்?

அ) ஸ்பேஸ்X

ஆ) NASA

இ) புளூ ஆர்ஜின்

ஈ) ரோஸ்கோஸ்மோஸ்

  • அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான புளூ ஆர்ஜின், அண்மையில், நியூ ஷெப்பர்டில் பயணிப்பதற்கான முதல் இருக்கைக்கான இணையவழி ஏலத்தை நிறைவு செய்தது.
  • சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட ஏவுகல அமைப்பு இது. இவ்விருக்கையை ஏலமெடுக்க 159 நாடுகளிலிருந்து 7,600’க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். $28 மில்லியன் டாலருக்கு இதனை ஒருவர் ஏலத்தில் எடுத்தார். அவர், ஜெஃப் பெசோஸுடன் ‘நியூ ஷெப்பர்டில்’ விண்வெளிக்கு பறப்பார்.

4. இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) மத்திய பிரதேசம்

ஈ) கேரளா

  • இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டில் மத்திய பிரதேச மாநிலம் 64.1 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய சுகாதார இயக்க -த்தால் வெளியிடப்படுகிறது. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ஒடிஸா 59.3 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் இந்த ஆண்டு மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது; அது 2018-19ஆம் ஆண்டில் 18ஆவது இடத்தில் இருந்தது.
  • கர்ப்பிணிப் பெண்களில் கிட்டத்தட்ட 50%, ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் 59%, வளரிளம்பருவ பெண்கள் 54% மற்றும் கர்ப்பிணி அல்லாத பாலூட்டாத பெண்களில் 53% பேர் இந்தியாவில் இரத்த சோகை நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

5. ICAN’இன் ஒரு சமீப அறிக்கையின்படி, அணுவாயுதங்களுக்காக அதிக செலவினம் செய்துள்ள நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) சீனா

இ) இந்தியா

ஈ) ரஷ்யா

  • அணுவாயுதங்களை ஒழிப்பதற்கான ஜெனீவாவைச் சார்ந்த பன்னாட்டு இயக்கம் (ICAN) “Complicit: 2020 Global Nuclear Weapons Spending” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ஆயுதங்களுக்காக செலவு செய்த நாடுகள், இலாபமீட்டிய நிறுவனங்கள் குறித்த தகவல்களை இந்த அறிக்கை விவரிக்கிறது. இந்தத் தொகை கடந்த ஆண்டைவிட $1.4 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. $37.4 பில்லியன் டாலர்கள் செலவு செய்து அமெரிக்கா முதலிடத்திலும், $10.1 பில்லியன் டாலர்கள் செலவு செய்து சீனா இரண்டாமிடத்திலும் உள்ளது. இரஷ்யா, இங்கிலாந்து & பிரான்ஸ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

6. 2021 – உலக கொடுக்கும் குறியீட்டை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) சேரிட்டீஸ் எய்ட் பவுண்டேஷன்

ஆ) உலக வங்கி

இ) பன்னாட்டு மன்னிப்பு அவை

ஈ) உலக நலவாழ்வு அமைப்பு

  • நடப்பாண்டிற்கான (2021) உலக கொடுக்கும் குறியீட்டை சேரிட்டீஸ் எய்ட் பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது. COVID-19 மற்றும் அதனுடன் தொடர்புடைய முடக்கங்கள், உலகெங்குமுள்ள நாடுகளின் போக்கை மாற்றியுள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது. உலகின் தாராள மனப்பாங்குடைய நாடுகளில் இந்தியா பதினான்காவது இடத்தில் உள்ளது. அந்தக் குறியீட்டில், இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது.

7. கெல்ஃபாண்ட் சவால் – 2021’ஐ வென்ற செஸ் வீரர் யார்?

அ) கொனேரு ஹம்பி

ஆ) D குகேஷ்

இ) விஸ்வநாதன் ஆனந்த்

ஈ) பெண்டாலா ஹரிகிருஷ்ணா

  • இந்திய செஸ் வீரர் D குகேஷ், $15,000 பரிசு மதிப்புடைய கெல்ஃபாண்ட் சவால் செஸ் பட்டத்தையும், மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப் பயணத்திற்கான நுழைவுச்சீட்டையும் வென்றார். 15 வயதான குகேஷ், பிரக்னானந்தாவுக்கு எதிரான போட்டி உட்பட நான்கு சுற்றுகளையும் வென்றார். 2019 மார்ச்சில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கு தகுதிபெற்ற இரண்டாவது இளம் வீரரானார் இவர்.

8. உலக மூத்தோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) ஜூன்.10

ஆ) ஜூன்.15

இ) ஜூன்.20

ஈ) ஜூன்.25

  • ஐநா அவையானது ஒவ்வோர் ஆண்டும் வரும் ஜூன்.15ஆம் தேதியை உலக மூத்தோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாளாக (World Elder Abuse Awareness Day) அனுசரிக்கிறது. இந்த நாள், மூத்தோர் வன்கொடுமையைத் தடுப்பதற்கான பன்னாட்டு வலையமைப்பால் (INPEA) 2006’இல் தொடங்கப்பட்டது. ஐநா பொது அவை, இது தொடர்பாக 2011ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. “Safeguard older persons during COVID-19 and beyond” என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான நாள் கொண்டாடப்பட்டது.

9. ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கை – 2021’இன்படி SDG குறியீட்டில் முதலிடம் பிடித்த நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) பின்லாந்து

  • நீடித்த வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பானது அண்மையில் நீடித்த வளர்ச்சி அறிக்கை – 2021’ஐ வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, SDG குறியீட்டில் பின்லாந்து 85.9 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், சுவீடன் மற்றும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. 193 நாடுக -ளுள், 60.1 மதிப்பெண்களுடன் இந்தியா 120ஆவது இடத்தில் உள்ளது.

10. அண்மையில் வெளியிடப்பட்ட எந்த அறிக்கை “The race against time for smarter development” என்ற தலைப்பில் இருந்தது?

அ) உலக வளர்ச்சி அறிக்கை

ஆ) உலகளாவிய பொருளாதார முன்னேற்றம்

இ) ஐநா நீடித்த வளர்ச்சி அறிக்கை

ஈ) UNESCO அறிவியல் அறிக்கை

  • UNESCO அறிவியல் அறிக்கையின் ஏழாவது பதிப்பானது அண்மையில், “The race against time for smarter development” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையானது அறிவியல் துறையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடுகள் பின்பற்றி வரும் வளர்ச்சிப்பாதை குறித்து விரிவாக பகுப்பாய்வு செய்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வங்கிகள் தனியார்மயமாக்கம்: அமைச்சரவை செயலர் தலைமையில் முக்கிய கூட்டம்

இரு பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது தொடர்பாக அமைச்சரவை செயலர் தலைமையிலான முக்கிய கூட்டம் நடைபெற்றது. இரு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று நடப்பு 2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, தனியார்மயமாக்கப்பட வேண்டிய வங்கிகள் குறித்த பரிந்துரைகளை NITI ஆயோக் அமைப்பு, அமைச்சரவை செயலர் தலைமையிலான குழுவுக்கு வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் நடவடி -க்கைகளைத் துரிதப்படுத்துவது தொடர்பான கூட்டம் அமைச்சரவை செயலர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான வழிமுறைகளை வகுப்பது தொடர்பாகவும் கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டது. தனியார்மயமாக் -கப்பட வேண்டிய வங்கிகளின் விவரங்களை பங்கு விலக்கலுக்கான அமைச்சர்கள் அடங்கிய குழுவுக்கு அமைச்சரவை செயலர் தலைமையிலான குழு வழங்கவுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இரு பொதுத் துறை வங்கிகள், ஒரு பொதுத்துறை காப்பீட்டுவிநிறுவனம் உள்ளிட்டவற்றைத் தனியாருக் வாயிலாக `1.75 லட்சம் கோடியைத் திரட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள -து. கடந்த நிதியாண்டில் இந்த இலக்கு `2.10 லட்சம் கோடியாக நிர்ண -யிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆண்டுகளில் 14 பொதுத்துறை வங்கிகள் மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும் 10 பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு 4 வங்கிகளாக மாற்றப்பட்டன. மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக, பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27’இலிருந்து 12ஆகக் குறைந்துள்ளது.

2. தேசிய தடகள சாம்பியன்ஷிப்: கம்பு ஊன்றித்தாண்டுதலில் தமிழ்நாட்டு -க்கு தங்கம்

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழ்நாட்டின் பரணிகா இளங்கோவன் முதலிடம் பிடித்தார். அவர் 3.90 மீட்டர் தாண்டி தங்கம் வெல்ல, மத்திய பிரதேச மாநிலத்தின் பபிதா படேல் (3.40 மீ), தமிழ்நாட்டின் ரோசி மீனா பால்ராஜ் (3.30 மீ) ஆகியோர் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர்.

மகளிருக்கான உயரந்தாண்டுதலில், கேரளத்தின் ஏஞ்செல் பி தேவசியா (1.65 மீ) முதலிடமும், தமிழக வீராங்கனை ஜிஜி ஜார்ஜ் ஸ்டீபன் (1.60 மீ) 2ஆம் இடம் பிடித்தனர்.

ஆடவர் 800 மீ ஓட்டத்தில் ஹரியானாவின் கிருஷன் குமார் 1 நிமிடம் 50.15 விநாடிகளில் இலக்கை எட்ட, உத்தரகண்டின் அனு குமார் (1 நிமிடம் 51.05 விநாடி) 2ஆம் இடமும், ஹரியாணாவின் மஞ்சித் சிங் (1 நிமிடம் 51.44 விநாடி) 3ஆம் இடமும் பிடித்தனர்.

மகளிர் பிரிவில் ஹார்மிலன் 2 நிமிடம் 2.57 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்ய, தில்லியின் சந்தா (2 நிமிடம் 3.36 விநாடி) 2ஆம் இடம், நிமலி (2 நிமிடம் 5.69 விநாடி) 3ஆம் இடமும் பிடித்தனர்.

1. India Meteorological Department and ICMR have formed an Expert Committee on which disease?

A) AIDS

B) Malaria

C) COVID

D) Dengue

  • India Meteorological Department (IMD) and the Indian Council of Medical Research (ICMR), in association with Malaria No More, a NGO, has created an India Interagency Expert Committee on Malaria and Climate (IEC). It aims to to explore and provide climate–based solutions for fast–tracking Malaria elimination in India.

2. Which country has developed a ceiling–mounted ‘COVID alarm’ that can detect COVID infection?

A) USA

B) China

C) UK

D) India

  • Scientists from the United Kingdom have developed a ceiling–mounted ‘Covid alarm’ that can detect the persons infected in 15 minutes.
  • This accurate device can be used for screening in aircraft cabins, classrooms, care homes and offices. The sensor works by detecting chemicals produced by the skin or in the breath of the persons infected with coronavirus.

3. New Shephard, which was in the news recently, is the rocket system of which space agency?

A) SpaceX

B) NASA

C) Blue Origin

D) ROSCOSMOS

  • Amazon founder and billionaire Jeff Bezos’s space company Blue Origin recently concluded the online auction for the first seat on New Shephard. It is a rocket system developed to take tourists to space. Over 7,600 people registered from 159 countries to bid for this seat. It went for a winning bidder of USD 28 million, who would fly aboard New Shephard along with Bezos.

4. Which Indian state is ranked first in the Anemia Mukt Bharat Index?

A) Tamil Nadu

B) Maharashtra

C) Madhya Pradesh

D) Kerala

  • Madhya Pradesh is at the first position with a score of 64.1, in the Anemia Mukt Bharat Index. It is released by the National Health Mission. M.P is followed by Odisha with a score of 59.3.
  • Himachal has jumped to third spot this year, against its rank 18 in the year 2018–19. Almost 50% of the pregnant women, 59% of children less than five years of age, 54% of adolescent girls and 53% of non–pregnant non–lactating women in India are anemic.

5. As per ICAN’s recent report, which country spent the highest amount on nuclear weapons?

A) USA

B) China

C) India

D) Russia

  • Geneva–based International Campaign to Abolish Nuclear–weapons (ICAN) has released a report titled “Complicit: 2020 Global Nuclear Weapons Spending”. The report details the spending of nine countries on their weapons, the companies that profited, among others.
  • The amount had an increase of $1.4 billion from last year. USA tops the list with an expenditure of $37.4 billion, followed by China at $ 10.1 billion. Russia, UK and France are in the next places.

6. Which institution releases the ‘World Giving Index 2021’?

A) Charities Aid Foundation

B) World Bank

C) Amnesty International

D) World Health Organisation

  • The World Giving Index (WGI) for the year 2021 has been released by the Charities Aid Foundation (CAF). The report states that COVID 19 and associated lockdowns have changed the giving behaviour of countries across the globe. India stands at 14th most generous countries in the world. Indonesia has been ranked at the 1st spot.

7. Which Chess player has won the Gelfand Challenge 2021?

A) Koneru Humpy

B) D Gukesh

C) Viswanathan Anand

D) Pentala Harikrishna

  • Indian Chess Player D. Gukesh won the $15,000 Gelfand Challenge chess title and eventually a ‘wild card’ for the elite Meltwaters Champions Chess Tour. 15–year–old Gukesh won all four rounds, including the key fight against Praggnanandhaa. He is the second youngest person to qualify for the title of Grandmaster, in March 2019.

8. When ‘World Elder Abuse Awareness Day’ celebrated every year?

A) June.10

B) June.15

C) June.20

D) June.25

  • Every year, the United Nations observes June 15th as World Elder Abuse Awareness Day. This was initiated by the International Network for the Prevention of Elder Abuse (INPEA) in 2006 and the UN General Assembly passed a resolution in this regard in the year 2011. This year’s June 15 is observed under the title “Safeguard older persons during COVID–19 and beyond”.

9. Which country topped the SDG Index as per the ‘Sustainable Development Report 2021’?

A) India

B) China

C) USA

D) Finland

  • The Sustainable Development Report 2021 has been released recently by the Sustainable Development Solutions Network (SDSN). As per the report, Finland topped the SDG index with a score of 85.9, followed by Sweden and Denmark. Among 193 countries, India has been ranked at 120 with a score of 60.1.

10. Which recently–released report was titled “The race against time for smarter development”?

A) World Development Report

B) Global Economic Prospectus

C) UN Sustainable Development Report

D) UNESCO Science Report

  • The 7th edition of the UNESCO Science report has been released recently under the title “The race against time for smarter development”. This report makes a detailed analysis of the development path that countries have been following over the last five years in the field of science.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!