Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

28th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

28th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. $600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உலகளாவிய உட்கட்டமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கூட்டமைப்பு எது?

அ. BRICS

ஆ. G7 

இ. G20

ஈ. ஐரோப்பிய ஒன்றியம்

  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் பிற G7 தலைவர்கள் ஜெர்மனியில் உள்ள சுக்லோஸ் எல்மாவ் என்ற இடத்தில் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில், ‘உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டாண்மை’யை மீண்டும் தொடங்கினர். இது வளரும் நாடுகளின் உட்கட்டமைப்புக்கு நிதியளிப்பதற்கும், சீனாவின் பட்டை மற்றும் பாதை திட்டத்தை எதிர்ப்பதற்கும் 5 ஆண்டுகளில் $600 பில்லியன் டாலர்களை தனியார் மற்றும் பொது நிதியில் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா $200 பில்லியன் டாலர்களை மானியங்கள், கூட்டாட்சி நிதிகள் மற்றும் தனியார் முதலீட்டில் திரட்டும், ஐரோப்பா 300 பில்லியன் யூரோக்களை திரட்டும்.

2. ‘EIU உலகளாவிய வாழத்தகுந்த நகரங்கள் குறியீட்டின்’படி, உலகில் மிகவும் வாழத்தகுந்த நகரம் எது?

அ. லண்டன்

ஆ. வியன்னா 

இ. நாகர்கோவில்

ஈ. ஜெனிவா

  • Economist Intelligence Unit (EIU) ஆனது, 2022ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்களின் (Global Liveability Index) வருடாந்திர தரவரிசையை வெளியிட்டது. உட்கட்டமைப்பு, அரசியல் நிலைத்தன்மை, குற்ற விகிதங்கள் & பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மொத்தம் 173 நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வியன்னா (ஆஸ்திரியா), கோபன்ஹேகன் (டென்மார்க்) மற்றும் சூரிச் (சுவிச்சர்லாந்து) ஆகியவை இந்தக்குறியீட்டில் முதல் மூன்று இடங்களில் உள்ள நகரங்களாகும்.

3. ‘குறு–சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.18

ஆ. ஜூன்.21

இ. ஜூன்.27 

ஈ. ஜூன்.30

  • ஜூன் 27, குறு–சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) நாளாகக் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு MSME–களின் பங்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்டது இந்த நாள். ஐநா பொதுச்சபையானது 2017ஆம் ஆண்டு இந்நாளை அறிவித்தது.

4. ‘சுல்ஜானா’ என்ற திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணையை ஏவியுள்ள நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ஈரான் 

இ. ரஷ்யா

ஈ. வட கொரியா

  • ஈரான், ‘சுல்ஜானா’ என்ற பெயரில் திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணையை விண்ணில் செலுத்தியுள்ளது. 25.5 மீ நீளமுள்ள இந்த ஏவுகணை, 220 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்துசெல்லும் திறன்கொண்டது. இச் செயற்கைக்கோள்கள் பூமியின் தாழ்சுற்றுப்பாதையில் தரவுகளைச் சேகரிக்கும். முகமது நபியின் பேரனான இமாம் ஹுசைனின் குதிரையின் பெயர் ‘சுல்ஜானா’ ஆகும்.

5. NITI ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக (அமிதாப் காந்த்க்குப் பிறகு) நியமிக்கப்பட்டவர் யார்?

அ. உர்ஜித் படேல்

ஆ. சுபாஷ் சந்திர கார்க்

இ. பரமேஸ்வரன் 

ஈ. ராஜேஷ் பன்சால்

  • 1981ஆம் ஆண்டு உத்தரபிரதேச தொகுதியின் இஆப அதிகாரியான பரமேஸ்வரன், NITI ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசாங்கத்தின் தூய்மை இந்தியா இயக்கத்தை வழிநடத்திய குடி நீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரும் ஆவார் இவர். இந்த ஆண்டு ஜூன்.30ஆம் தேதி ஓய்வுறும் அமிதாப் காந்த்க்குப் பிறகு புதிய தலைமைச் செயலதிகாரி அவர் பதவியேற்றார்.

6. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அணு எரிபொருளை வழங்கிய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா 

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. சீனா

  • கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 1 & 2–க்கு, ரஷ்யாவின் ரோசாட்டம் ஸ்டேட் கார்ப்பரேஷன், ஏற்கனவே உள்ளதைவிட நம்பகமான மற்றும் மலிவான அணு எரிபொருளின் முதல் தொகுதிகளை வழங்கியது. தற்போதுள்ள எரிபொருள் ‘TVS–2M அணு எரிபொருள்’ ஆகும். அது தீரந்தவுடன் இந்தப் புதிய எரிபொருள் நிரப்பப்படும். அதன்பின், அணுமின்னுற்பத்தி அலகு–1 18 மாத எரிபொருள் சுழற்சியில் செயல்படத் தொடங்கும்.

7. உலக வர்த்தக அமைப்பின் (WTO) 12ஆவது அமைச்சர்கள் மாநாடு (MC12) நடைபெறும் இடம் எது?

அ. ஜெனிவா 

ஆ. டோக்கியோ

இ. நியூயார்க்

ஈ. பாரிஸ்

  • ஜெனிவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் (WTO) 12ஆவது அமைச்சர்கள் மாநாட்டில் (MC12) இந்தியா சார்பில் மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். MC12–இன் முழுமையான அமர்வில் அமைச்சர் பேசுகையில், உணவுப்பாதுகாப்பிற்கான பொது இருப்புப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண்பது முதன்மையான முன்னுரிமையாக இருக்கவேண்டும் எனக்கூறினார். 2021–இல் WTOஇல் நிரந்தர பங்கு வைத்திருப்பதற்கான தீர்வுக்கான G–33 திட்டத்திற்கு இந்தியா இணை அனுசரணை வழங்கியது.

8. விண்வெளியில் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. சீனா 

ஈ. தென் கொரியா

  • புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் ஒருபகுதியாக, 2028ஆம் ஆண்டில் வற்றாத மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை விண்வெளியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
  • முன்னதாக, 2030ஆம் ஆண்டுக்குள் 1 MW சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை விண்வெளியில் நிறுவ சீனா இலக்கு வைத்துள்ளது. 400 கிமீ உயரத்திலிருந்து தரைக்கு கம்பியில்லா மின்சாரப் பரிமாற்ற தொழில்நுட்பத்தைச் சோதிக்க 2028ஆம் ஆண்டில் சீனா ஒரு செயற்கைக்கோளை ஏவவுள்ளது. இது சூரிய ஆற்றலை நுண்ணலை அல்லது லேசர் அலைகளாக மாற்றும்.

9. இந்தியக் கடற்படையின் எந்த உள்நாட்டு ஏவுகணை தாங்கிக்கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது?

அ. INS விக்ராந்த்

ஆ. INS குக்ரி 

இ. INS கட்டபொம்மன்

ஈ. INS ஷிவாலிக்

  • இந்தியக் கடற்படையின் முதல் உள்நாட்டு ஏவுகணையான INS குக்ரி (P49), தேசத்திற்கும் கடற்படைக்கும் 32 ஆண்டுகள் சேவாயாற்றிய பிறகு, கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்படுவதற்காக டையூ நிர்வாகத்திற்குக்கொண்டு செல்லப்பட்டது. சமீபத்தில் குக்ரி அருங்காட்சியகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைத்தார். புதிதாக திறக்கப்பட்ட இக்கப்பல் அருங்காட்சியகமும் தற்போதுள்ள INS குக்ரி நினைவகமும் டையூவில் உள்ளன.

10. United in Making Our Voice Heard” என்பது 2022 ஜூனில் கடைப்பிடிக்கப்படும் எந்த உலக நாளின் கருப் பொருளாகும்?

அ. உலக அல்பினிசம் விழிப்புணர்வு நாள் 

ஆ. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் உலக நாள்

இ. குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாள்

ஈ. உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நாள்

  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது கடந்த 2015இல் ஜூன்.13ஆம் தேதியை உலக அல்பினிசம் விழிப்புணர்வு நாள் என அறிவித்தது. அல்பினிசம் உள்ளவர்களின் உரிமைகள்பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஒரு பிறவிக்கோளாறு ஆகும். இது தோல், கண்கள் மற்றும் முடியில் நிறமி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இல்லாததால் ஏற்படுகிறது. “United in Making Our Voice Heard” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்நாளிற்கான கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2022 ஜூன்.29 அன்று புள்ளியியல் தினம் கொண்டாடப்படவுள்ளது

பொருளாதார திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறைக்கு மறைந்த பேராசிரியர் பிரசந்த சந்திர மகாலனோபிஸ் வழங்கிய மதிப்புமிகு பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான ஜூன்.29 ஒவ்வோர் ஆண்டும் புள்ளியியல் நாளாக மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டின் சமூக-பொருளாதார திட்டமிடல், வளர்ச்சிக்கான கொள்கை வகுத்தல் ஆகியவற்றில் புள்ளியியலின் பங்களிப்பும், முக்கியத்துவமும் குறித்து பொதுமக்களிடையே குறிப்பாக இளந்தலைமுறையினரிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது புள்ளியியல் நாளின் முக்கிய நோக்கமாகும். ஒவ்வோர் ஆண்டும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையப்பொருளில் இந்த விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு “நீடித்த வளர்ச்சிக்கான தரவுகள்” என்பது மையப்பொருளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

2. மாணவிகளுக்கு மாதம் `1,000: விண்ணப்பிக்க தனி இணையதளம்

பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பான விவரம்பெற கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியன படிக்கும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அரசுப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று இருக்க வேண்டும். கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ், தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று அதன்பின்பு 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இந்த நிதியுதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளிகள் எவை? ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், நகராட்சிப்பள்ளிகள், மாநகராட்சிப்பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப்பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனம், சமூக பாதுகாப்புத் துறைகளின் பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் நிதியுதவித் திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.

எந்தெந்த படிப்புகள்? எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே திட்டம் பொருந்தும். ஐடிஐ., ஆசிரியர் பட்டயப்படிப்பு, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ, உள்பட அனைத்து கலை மற்றும் அறிவியல், கவின்கலை கல்லூரி பாடங்கள், பிஇ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., பி.எஸ்.சி., (வேளாண்மை), இளங்கலை கால்நடை அறிவியல், சட்டம், இணை மருத்துவப்படிப்புகள் (நர்சிங், பார்மஸி, பிசியோதெரபி) ஆகியன படிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம், மூன்றாம் ஆண்டுகள்: தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. நிகழ் கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாமாண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டு செல்வோரும் விண்ணப்பிக்கலாம். தொழில் மற்றும் மருத்துவப்படிப்புகளில் இறுதி ஆண்டு செல்லும் மாணவிகளும் இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கடந்த கல்வியாண்டில் (2021-22) இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இந்தத்திட்டத்தின்கீழ் பயனடைய இயலாது. இந்த மாணவிகள் ஒரு சில மாதங்களில் தங்களது படிப்பை நிறைவு செய்வர். இந்தத்திட்டத்தின்கீழ், இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய முடியும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் பயன்பெற இயலாது. இந்தத் திட்டத்தின் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லாத தொலைபேசி (14417) எண்ணை தொடர்புகொண்டு பெறலாம் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Which global bloc launched a USD 600 billion – Global Infrastructure Plan?

A. BRICS

B. G7 

C. G20

D. European Union

  • US President Joe Biden and other G7 leaders re–launched the “Partnership for Global Infrastructure and Investment” at their annual gathering at Schloss Elmau in Germany. It aims to raise USD 600 billion in private and public funds over five years, to finance infrastructure in developing countries and counter China’s Belt and Road project.
  • The United States would mobilise USD 200bn in grants, federal funds and private investment over five years, while Europe will mobilise 300 billion euros.

2. Which is the most liveable city in the world, as per the ‘EIU Global Liveability Index’?

A. London

B. Vienna 

C. Nagercoil

D. Geneva

  • The Economist Intelligence Unit (EIU) launched its annual ranking of the world’s most liveable cities– Global Liveability Index for 2022. 173 cities were ranked based on a range of criteria, including infrastructure, availability to green space, political stability, crime rates, and health care. Vienna (Austria), Copenhagen (Denmark) and Zurich (Switzerland) were the top three cities in the index.

3. When is the ‘Micro–Small and Medium–sized Enterprises (MSMEs) Day’ celebrated?

A. June.18

B. June.21

C. June.27 

D. June.30

  • June 27 is celebrated as the Micro–Small and Medium–sized Enterprises (MSMEs) Day. The day is aimed at raising public awareness of the contribution of MSMEs to global economic growth and sustainable development. The United Nations General Assembly declared the day in the year 2017.

4. Which country has launched a solid–fueled rocket named ‘Zuljanah’?

A. Israel

B. Iran 

C. Russia

D. North Korea

  • Iran has launched a solid–fueled rocket into space named ‘Zuljanah’. It is a a 25.5–meter–long rocket, capable of carrying a satellite of 220 kgs. The satellites will gather data in low–earth orbit. Zuljanah is named after the horse of Imam Hussein, the grandson of the Prophet Muhammad.

5. Who has been appointed as the Chief Executive Officer of NITI Aayog (after Amitabh Kant)?

A. Urjit Patel

B. Subash Chandra Garg

C. Parameswaran 

D. Rajesh Bansal

  • Parameswaran, a 1981–batch IAS officer of Uttar Pradesh cadre has been appointed as the Chief Executive Officer of NITI Aayog. He is also the former Secretary of the Ministry of Drinking Water and Sanitation, who led the government’s Swachh Bharat Mission. The new CEO succeeds Amitabh Kant, who retires on June 30 this year.

6. Which country has supplied nuclear fuel to the Kudankulam Nuclear Power Plant (KNPP)?

A. USA

B. Russia 

C. UAE

D. China

  • Rosatom State Corporation of Russia has supplied the first batches of reliable and cost–efficient nuclear fuel over the existing one, to India for the Units 1 & 2 of Kudankulam Nuclear Power Plant (KNPP). The existing fuel is ‘TVS–2M nuclear fuel’ and after the refuelling, the power unit 1 will start operations in 18–month fuel cycle.

7. Which is the venue of the 12th Ministerial Conference (MC12) of the World Trade Organization (WTO)?

A. Geneva

 B. Tokyo

C. New York

D. Paris

  • Union Commerce and Industry Minister Piyush Goyal represented India in the 12th Ministerial conference (MC12) of the World Trade Organization (WTO) at Geneva.
  • The Minister while speaking at the plenary session of MC12, said that finding a permanent solution to the issue of public stockholding for food security should be the top–most priority. India co–sponsored a G–33 proposal for solution to permanent stock holding at WTO in 2021.

8. Which country has announced plans to launch a solar power plant in space?

A. India

B. UAE

C. China 

D. South Korea

  • China has announced that it is planning to launch a solar power plant in space for producing inexhaustible power in 2028, as part of the updated plan. Earlier, China aimed to establish a 1–megawatt solar power station in space by 2030. China will launch a satellite in 2028 to test wireless power transmission technology from space to the ground from an altitude of 400km. It would convert solar energy to microwaves or lasers.

9. Which indigenous missile corvette of the Indian Navy was converted to a ship museum?

A. INS Vikrant

B. INS Khukri 

C. INS Kattabomman

D. INS Shivalik

  • INS Khukri (P49), the first indigenous missile corvette of the Indian Navy, was transferred to the Diu Administration after 32 years of glorious service to the nation and Navy, to be converted to a ship museum. Recently the Khukri Museum was inaugurated by Union Home Minister Amit Shah. The newly inaugurated ship museum and the existing Khukri Memorial are housed in Diu.

10. “United in making our voice heard” is the theme of which international day in June 2022?

A. International Albinism Awareness Day 

B. International Day of Innocent Children Victims of Aggression

C. World Day Against Child Labour

D. World Elder Abuse Awareness Day

  • UN’s General Assembly proclaimed 13 June as International Albinism Awareness Day with effect from 2015. The day is marked every year to bring about awareness among the people about albinism and the rights of people with albinism. It is a congenital disorder that occurs due to absolute or partial absence of a pigment in the skin, eyes and hair. The theme for the year 2022 is “United in making our voice heard”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!