Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

28th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

28th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 28th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘உலக அறிவுசார் சொத்து குறிகாட்டிகள்’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் அறிக்கை ஆகும்?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி

இ. NITI ஆயோக்

ஈ. உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO)

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO)

  • ஜெனீவாவைச்சார்ந்த உலக அறிவுசார் சொத்து அமைப்பானது (WIPO) உலக அறிவுசார் சொத்து குறிகாட்டிகள் என்ற அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் வடிவமைப்புகளின் உலகளாவிய அறிவுசார் சொத்துரிமைகளின் தாக்கல்கள் சாதனை அளவை எட்டியது. இந்தியா, சீனா மற்றும் தென்கொரியா ஆகிய ஆசிய நாடுகளிலிருந்து அதிக தாக்கல்கள் பெறப்பட்டுள்ளன.

2. ‘சர்வதேச தினை ஆண்டு’ என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2021

ஆ. 2022

இ. 2023

ஈ. 2025

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 2023

  • நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கும் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டார். கடந்த 2018ஆம் ஆண்டில், 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவை கடந்த 2018ஆம் ஆண்டில் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) அங்கீகரித்தது.

3. GST சட்டத்தின்படி, GST தொடர்பான வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு எத்தனை ஆண்டுகள் வரை இழப்பீடு வழங்கப்படும்?

அ. மூன்று

ஆ. ஐந்து

இ. ஏழு

ஈ. பத்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐந்து

  • 2017 ஜூலை.01 முதல் இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. GST (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டம், 2017இன் விதிகளின்படி, GSTஐ அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு ஐந்தாண்டு காலத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். 2022 ஏப்ரல்–ஜூன் காலகட்டத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரிக்கான (GST) இருப்பு இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடுவண் அரசு அண்மையில் `17,000 கோடியை வழங்கியுள்ளது.

4. ISROஆல் PSLV–C54 ஏவுகலம்கொண்டு ஏவப்பட்ட செயற்கைக்கோள் எது?

அ. OceanSat–3

ஆ. ICRISat–3

இ. AstroSat–3

ஈ. RISAT–3

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. OceanSat–3

  • புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்–6 எனப்படும் ஓசன்சாட்–3 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) PSLV–C54 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. எட்டு நானோ செயற்கைக்கோள்களில் பூட்டானுக்கான ISRO நானோ செயற்கைக் கோள்–2 (INS–2B), ஆனந்த், ஆஸ்ட்ரோகாஸ்ட் (நான்கு செயற்கைக்கோள்கள்) மற்றும் 2 தைபோல்ட் செயற்கைக் கோள்கள் அடங்கும்.

5. காசநோய் முக்த் பாரத் பரப்புரையின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. விராத் கோலி

ஆ. தீபிகா படுகோனே

இ. தீபா மாலிக்

ஈ. P V சிந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தீபா மாலிக்

  • ‘பத்மஸ்ரீ’, ‘கேல் இரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ பெற்ற தீபா மாலிக் நி–க்ஷய் மித்ரா மற்றும் காசநோய் முக்த் பாரத் பரப்புரை திட்டத்தின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தீபா மாலிக், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார். மேலும், இந்தியாவின் பாராலிம்பிக் குழுமத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். நி–க்ஷய் மித்ரா என்பது இந்தியக் குடியரசுத்தலையவர் திரௌபதி முர்முவால் தொடங்கப்பட்ட ஒரு முனைவாகும். அது காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து, கூடுதல் நோயறிதல் மற்றும் தொழிற்சார் ஆதரவின் மூன்று நிலைகளில் உதவி வழங்க முற்படுகிறது.

6. இந்தியாவின் ஐம்பதாவது தலைமை நீதியரசராக பதவியேற்றவர் யார்?

அ. நீதியரசர் D Y சந்திரசூட்

ஆ. நீதியரசர் U U லலித்

இ. நீதியரசர் இரஞ்சன் கோகாய்

ஈ. நீதியரசர் சஞ்சை கிஷன் கௌ

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நீதியரசர் D Y சந்திரசூட்

  • இந்தியாவின் ஐம்பதாவது தலைமை நீதியரசராக D Y சந்திரசூட் பொறுப்பேற்றார். சமீபத்தில் முன்னாள் தலைமை நீதியரசர் UU லலித் அவர்களால் நீதியரசர் D Y சந்திரசூட் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான நீதியரசர் D Y சந்திரசூட், 74 நாட்கள் மட்டுமே பதவியிலிருந்த உதய் உமேஷ் லலித்துக்குப் பிறகு, ஈராண்டுகளுக்கு தலைமை நீதியரசாராக பணியாற்றவுள்ளார். நீதியரசர் D Y சந்திரசூட் 2024 நவம்பர் மாதம் வரை தலைமை நீதியரசராக பொறுப்பு வகிப்பார்.

7. இந்தியாவில், ‘தேசிய சட்ட சேவைகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.03

ஆ. நவம்பர்.05

இ. நவம்பர்.09

ஈ. நவம்பர்.11

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நவம்பர்.09

  • தேசிய சட்ட சேவைகள் நாளானது ஆண்டுதோறும் நவம்பர் 9 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூருவதும், சட்டம் தொடர்பான விதிகள்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும். இந்தியாவில் ஒரே மாதிரியான முறையில், “சட்ட உதவி திட்டங்களுக்கு சட்டப்பூர்வ தளத்தை” வழங்குவதற்காக 1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1995 நவ.9இல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் நோக்கம், நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூக–பொருளாதார சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு தகுதியான மற்றும் இலவச சட்ட உதவிகளை வழங்குவதாகும்.

8. 2023ஆம் ஆண்டில், IBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை நடத்தவுள்ள ஆசிய நாடு எது?

அ. இலங்கை

ஆ. பாகிஸ்தான்

இ. நேபாளம்

ஈ. இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. இந்தியா

  • 2023 – IBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை நடத்தும் நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (IBA) மற்றும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (BFI) இடையே இந்த நிகழ்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவில் நடத்தப்படும் மூன்றாவது மகளிர் உலக சாம்பியன்ஷிப்பும் ஆறு ஆண்டுகளுக்குள் நடத்தப்படும் இரண்டாவது போட்டியுமாகும்.

9. 2022 நவம்பர் நிலவரப்படி, காலநிலைக்கான சதுப்புநிலக்காடுகள் கூட்டணியில் உள்ள நாடுகள் எத்தனை?

அ. மூன்று

ஆ. ஐந்து

இ. ஏழு

ஈ. ஒன்பது

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐந்து

  • எகிப்தில் உள்ள ஷர்ம் எல்–ஷேக்கில் நடந்த COP27 அமர்வில், காலநிலைக்கான சதுப்புநிலக்காடுகள் கூட்டணியில் இணைந்த முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தக் கூட்டணியில் இணைந்த பிற நாடுகள்: ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் இலங்கை. இந்த நடவடிக்கையானது 2.5–3 பில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வினைக் (CO2) கட்டுப்படுத்தும் இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கு இணங்கும் வகையில் உள்ளது.

10. ‘சர்வதேச வறட்சியை எதிர்க்கும் கூட்டணி (IDRA)’ தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2022

ஆ. 2010

இ. 2015

ஈ. 2020

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2022

  • ஸ்பெயின் மற்றும் செனகல் தலைமையில் முப்பது நாடுகள் மற்றும் இருபது உலகளாவிய நிறுவனங்கள், ‘சர்வதேச வறட்சியை எதிர்க்கும் கூட்டணியை (International Drought Resilience Alliance–IDRA)’ தொடங்கியுள்ளன. இது ஷர்ம் எல்–ஷேக்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டின் (UNFCC) COP27 மாநாட்டில் தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு குறிப்பிட்ட தீர்வாக இக்கூட்டணி கருதப்படுகிறது; ஏனெனில், இது எதிர்காலத்தில் நிகழப்போகின்ற வறட்சிகளுக்கு ஒருவருக்கொருவர் சிறப்பாக தயாராக இருப்பதற்கு உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மலேசியாவில் தொடங்கியது இந்திய– மலேசிய கூட்டு இராணுவப் பயிற்சி

“ஹரிமாவு சக்தி–2022” என்ற இந்திய– மலேசிய கூட்டு இராணுவப்பயிற்சி மலேசியாவின் குலுவாங்கில் உள்ள புலாயில் தொடங்கியது. இந்தப் பயிற்சி டிசம்பர்.12–ஆம் தேதி நிறைவடையும். “ஹரிமாவு சக்தி” என்பது 2012 முதல் இந்திய மற்றும் மலேசிய இராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டுப்பயிற்சியாகும்.

இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படையும், மலேசிய இராணுவத்தின் ராயல் மலாய் படையும் இந்தக் கூட்டு பயிற்சியில் கலந்துகொண்டு, வனப்பகுதிகளில் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முறையை மேம்படுத்துவதற்கான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன. உத்திசார்ந்த திறன்கள் மற்றும் படைகளுக்கு இடையேயான இயங்குதன்மையை மேம்படுத்துவது, இராணுவங்களுக்கு இடையேயான உறவை ஊக்குவிப்பது முதலியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் இரண்டு நாள் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்திய மற்றும் மலேசிய இராணுவங்களுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தக் கூட்டுப்பயிற்சியால், இருநாடுகளின் உறவும் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

2. சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன

2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான ‘சில்ப் குரு’ மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. 30 பேருக்கு ‘சில்ப் குரு’ விருதுகளும். 78 பேருக்கு தேசிய விருகளும் வழங்கப்பட்டன. கைவினைஞர்களின் சிறப்பான செயல்திறன், இந்திய கைவினைப்பொருட்கள் மற்றும் ஜவுளித்துறையில் மதிப்புமிக்க பங்களிப்புக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘சில்ப் குரு’ விருதுகள் மிகச்சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. 2002–ஆம் ஆண்டு, இந்திய கைவினைத் தொழில்கள் பொன்விழாவையொட்டி இந்த விருது நிறுவப்பட்டது.

‘சில்ப் குரு’ விருதில் தங்க நாணயம் ஒன்று `2 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவை அடங்கும். தேசிய விருதுகள் கடந்த 1965ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ரொக்கப்பரிசு `1 இலட்சம், தாமிரப்பத்திரம், சால்வை மற்றும் சான்றிதழ் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக்கலைஞர் வி பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டுக்கான ‘சில்ப் குரு’ விருதைப் பெற்றுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த கே வெங்கடேசன், டெரக்கோட்டா வேலைப்பாட்டுக்காகவும், மாசிலாமணி, ஷோலாபித் வேலைப்பாட்டுக்காகவும், தேசிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.

3. குடியரசு நாள் விழா தலைமை விருந்தினர் எகிப்து அதிபர் எல்–சிசி: வெளியுறவு அமைச்சகம்

தில்லியில் வரும் ஜன.26இல் நடைபெறவுள்ள குடியரசு நாள் விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபர் அப்தல் பதா எல்–சிசி பங்கேற்கவிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இந்திய குடியரசு நாள் விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் பங்கேற்கவிருப்பது இதுவே முதல்முறை என்று அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடியரசு நாளையொட்டி, தேசத்தின் ராணுவ வல்லமையையும் பல்வேறு மாநிலங்களின் கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில் தில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதில் தலைமை விருந்தினராக நட்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பது வழக்கம். 1950 முதலே இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது. 1952, 1953, 1966 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்பின்றி குடியரசு நாள் விழா நடைபெற்றது. கடந்த 2021இல் அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அவரது இந்திய பயணம் இரத்து செய்யப்பட்டது. 2022இல் 5 மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், COVID சூழல் காரணமாக அவர்கள் பங்கேற்கவில்லை. 2020இல் பிரேஸில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ தலைமை விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். 2016இல் அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், 2015இல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2007இல் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தனர்.

4. பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ (வானவில் மன்றம்)

திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு விழாவில் பள்ளி மாணாக்கர்களுக்காக வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தை (எங்கும் அறிவியல்–யாவும் கணிதம்) முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து 38 மாவட்டங்களில் 13,210 அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வானவில் மன்றம் தொடங்கிவைக்கப்பட்டது. இதன்மூலம் 25 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். இந்தத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு `25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துகள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத்திட்டத்திற்கு ‘ஸ்டெம் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் முதல் எழுத்தை இணைத்து ‘STEM’ என உருவகப்படுத்தி உள்ளனர். அரசுப்பள்ளிகளில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

28th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘World Intellectual Property Indicators’ is a report released by which institution?

A. World Economic Forum

B. Asian Development Bank

C. NITI Aayog

D. World Intellectual Property Organisation (WIPO)

Answer & Explanation

Answer: D. World Intellectual Property Organisation (WIPO)

  • Geneva–based World Intellectual Property Organisation (WIPO) released the World Intellectual Property Indicators (WIPI) report. As per the report, global intellectual property filings of patents, trademarks, and designs–reached record levels in 2021 are driven largely by increases from Asian countries of India, China, and South Korea.

2. Which year is declared as the ‘International Year of Millets’?

A. 2021

B. 2022

C. 2023

D. 2025

Answer & Explanation

Answer: C. 2023

  • Union External Affairs Minister Dr S Jaishankar attended the pre–launch celebration of International Year of Millets (IYM) 2023. In 2018, India proposed to the United Nation to declare 2023 as the International Year of Millets. It was approved by the Food and Agriculture Organisation (FAO) in 2018.

3. As per GST Act, states are assured for compensation for loss of revenue regarding GST, up to how many years?

A. Three

B. Five

C. Seven

D. Ten

Answer & Explanation

Answer: B. Five

  • Goods and Services Tax was introduced in the country with effect from July 1, 2017. The states were assured for compensation for loss of any revenue arising on account of implementation of GST as per the provisions of the GST (Compensation to States) Act, 2017 for a period of five years. Centre has recently released Rs 17,000 crore to States and Union Territories as balance compensation for goods and services tax (GST) for the period, April–June 2022.

4. Which satellite was launched aboard the PSLV–C54 rocket by ISRO?

A. OceanSat–3

B. ICRISat–3

C. AstroSat–3

D. RISAT–3

Answer & Explanation

Answer: A. OceanSat–3

  • The Indian Space Research Organisation (ISRO) launched successfully PSLV–C54 carrying Oceansat–3 also known as Earth Observation Satellite–6, and 8 nano–satellites. The satellite was launched from Satish Dhawan Space Centre at Sriharikota, Andhra Pradesh. The eight nanosatellites include ISRO Nano Satellite–2 for Bhutan (INS–2B), Anand, Astrocast (four satellites), and two Thybolt satellites.

5. Who has been named as the national ambassador for TB Mukt Bharat Campaign?

A. Virat Kohli

B. Deepika Padukone

C. Deepa Malik

D. PV Sindhu

Answer & Explanation

Answer: C. Deepa Malik

  • Padma Shri Khel Ratna and Arjuna Awardee Deepa Malik has been named Ni–Kshay Mitra and national ambassador for TB Mukt Bharat Campaign. Deepa Malik is India’s First Woman Paralympic Medalist and President of the Paralympic Committee of India. Ni–Kshay Mitra is an initiative launched by the President of India Droupadi Murmu which seeks to provide aid to TB afflicted patients on three levels of nutritional, additional diagnostic, and vocational support.

6. Who has sworn in as the 50th Chief Justice of India?

A. Justice D Y Chandrachud

B. Justice U U Lalit

C. Justice Ranjan Gogoi

D. Justice  Sanjay Kishan Kau

Answer & Explanation

Answer: A. Justice D Y Chandrachud

  • Justice D Y Chandrachud took charge as the 50th Chief Justice of India. He was recommended for the top post by former CJI UU Lalit recently. The senior–most judge of the apex court– Justice Chandrachud is set to serve as CJI for a period of two years, succeeding Uday Umesh Lalit, who had a brief tenure of 74 days. Justice Chandrachud will serve as Chief Justice till November 2024.

7. When is the ‘National Legal Services Day’ observed in India?

A. November.03

B. November.05

C. November.09

D. November.11

Answer & Explanation

Answer: C. November.09

  • ‘National Legal Services Day’ is observed across the country annually on 9 November. It aims to commemorate the enactment of the Legal Services Authorities Act and to create awareness about the provisions related to the act. The Legal Services Authorities Act was enacted in 1987 to provide a “statutory base to legal aid programmes” in India on a uniform pattern. The Act came into existence on 9 November 1995. The purpose of the Act is to provide competent and free legal aid to people who belonged to marginalised socio–economic communities in the country.

8. Which Asian country is named as the host of 2023 IBA Women’s World Boxing Championship?

A. Sri Lanka

B. Pakistan

C. Nepal

D. India

Answer & Explanation

Answer: D. India

  • India has been named as the host country for the 2023 IBA Women’s World Boxing Championship. The Memorandum of Understanding regarding the event was signed between the International Boxing Association (IBA) and the Boxing Federation of India (BFI). It will be the third Women’s World Championships to be conducted in India and the second event within a span of six years.

9. How many countries are part of Mangrove Alliance for Climate (MAC), as of November 2022?

A. Three

B. Five

C. Seven

D. Nine

Answer & Explanation

Answer: B. Five

  • India is among the first five countries to join the MAC, at the 27th session of the Conference of the Parties (COP27) at Sharm el–Sheikh in Egypt. The other countries are Australia, Japan, Spain, and Sri Lanka. The move is in line with India’s Nationally Determined Contributions (NDCs) to create an additional carbon sink of 2.5–3 billion tonnes of carbon dioxide (CO2) equivalent.

10. The ‘International Drought Resilience Alliance (IDRA)’ was launched in which year?

A. 2022

B. 2010

C. 2015

D. 2020

Answer & Explanation

Answer: A. 2022

  • Spain and Senegal led 30 countries and 20 global organisations to launch the ‘International Drought Resilience Alliance (IDRA)’. It was launched at the 27th Conference of Parties (COP27) to the United Nations Framework Convention on Climate Change (UNFCC) at Sharm El–Sheikh. The alliance is seen as a specific solution for the United Nations to the impacts of climate change, as it will help each other to be better prepared for future droughts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!