28th October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ரோபார் இந்திய தொழினுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. பஞ்சாப்

இ. உத்தரபிரதேசம்

ஈ. ஹரியானா

 • ரோபார் இந்திய தொழினுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அண்மையில் திறந்துவைத்தார். டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2020’இல் IIT ரோபார் 351-400 தரவரிசையில் இடம்பெற்றுள்ளது. வேளாண்மை மற்றும் நீர் துறைகளில் தொழினுட்ப புத்தாக்க மையத்தை அமைக்க இந்த நிறுவனம் `110 கோடி மதிப்பிலான மானியத்தையும் பெற்றுள்ளது.

2. ‘பரினம் மஞ்சுஷா’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தின் டிஜிட்டல் கல்விக்களஞ்சியமாகும்?

அ. தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம்

ஆ. இந்திய விண்வெளி ஆய்வு மையம்

இ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

ஈ. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்

 • முக அங்கீகார முறைமையைப்பயன்படுத்தி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு டிஜிட்டல் கல்வி ஆவணங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வழங்கவுள்ளது. CBSE சேர்க்கை அட்டையிலுள்ள நிழற்படத்துடன் மாணவரின் நேரடிப்படம் பொருந்தும் வகையில் அது இருக்கும். அவை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் டிஜிட்டல் கல்விக்களஞ்சியமான, ‘பரினம் மஞ்சுஷா’ மற்றும் டிஜி லாக்கரில் கிடைக்கப்பெறும்.

3. தேசிய மூலிகை தாவர வாரியத்தின் இரண்டாவது மண்டல மூல மருந்துக் களஞ்சியம் திறக்கப்பட்ட இடம் எது?

அ. வாரணாசி

ஆ. புது தில்லி

இ. அகமதாபாத்

ஈ. மைசூர்

 • புது தில்லியில் அமைந்துள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் மண்டல மூல மருந்து களஞ்சியம் (RRDR) திறக்கப்பட்டுள்ளது. AYUSH அமைச்சகத்தின் தேசிய மூலிகை தாவர வாரியத்தால் அறிவிக்கப்பட்ட களஞ்சியங்களின் வரிசையில் இந்த RRDR இரண்டாவது இடத்தில் உள்ளது.
 • AYUSH அமைச்சகம் எட்டு RRDR மற்றும் ஒரு NRDR’ஐ முன்மொழிந்துள்ளது; அதில், மூன்று மண்டல மூல மருந்துக்களஞ்சியங்கள் தற்போது தயார்நிலையில் உள்ளன.

4. G-20 ஊழல் தடுப்பு செயற்குழுவின் முதலாவது அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியாவின் சார்பாக உரையாற்றியவர் யார்?

அ. நிதின் கட்கரி

ஆ. ஜிதேந்திர சிங்

இ. நிர்மலா சீதாராமன்

ஈ. பியூஷ் கோயல்

 • G-20 ஊழல் தடுப்பு செயற்குழுவின் முதலாவது அமைச்சர்கள் கூட்டத்தில் நடுவணமைச்சர் ஜிதேந்திர சிங் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். காணொலிவழி நடந்தேறிய இக்கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். அவர் தனது உரையின்போது, ஊழல் (அ) கணக்கில் வராத பணத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் ஊழல் தடுப்புச்சட்டம், 1988 குறித்தும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

5. ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பாண்டுக்கான (2020) சகரோவ் பரிசு, எந்த நாட்டின் எதிரணிக்கு வழங்கப்பட்டுள்ளது?

அ. பெலாரஸ்

ஆ. சிலி

இ. அர்ஜென்டினா

ஈ. சிங்கப்பூர்

 • அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை எதிர்க்கும் பெலாரஸிய இயக்கத்திற்கு, மனிதவுரிமைகளுக்கான நடப்பாண்டுக்கான (2020) சகரோவ் பரிசை ஐரோப்பிய நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. இவ்வணிக்கு, நாடுகடத்தப்பட்ட சுவெட்லானா டிகானோவ்ஸ்கயா தலைமைதாங்கினார். பெலாரஸில் எதிர்ப்பாளர்கள்மீது ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக ஐயப்படும் அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.

6. எந்த நாட்டின் புதிய பிரதமராக சாத் அல் ஹரிரி அறிவிக்கப்பட்டுள்ளார்?

அ. குவைத்

ஆ. லெபனான்

இ. ஜிம்பாப்வே

ஈ. ஈரான்

 • லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெ -டுப்பில் ஒரு சிறிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அவர் பதவி விலகிய ஓராண்டுக்குள்ளாக, தனது நான்காவது அரசாங்கத்தை அமைக்கும் பணி அவருக்கு கிடைத்துள்ளது. அதிபர் மைகேல் ஒளன் அவரை பிரதமர் என அறிவிப்பதற்கு முன்பு, பல்வேறு நாடாளுமன்ற சங்கங்களுடன் கலந்தாலோசித்தார்.

7. இந்தியக்கடற்படையானது சமீபத்தில், கீழ்க்காணும் எக்கப்பலிலிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை (AshM) பரிசோதித்தது?

அ. INS பிரபல்

ஆ. INS கவராட்டி

இ. INS கல்வாரி

ஈ. INS விராத்

 • INS பிரபல் என்ற கப்பலிலிருந்து இந்தியக் கடற்படை தனது கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை (AshM) பரிசோதித்தது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஒரு பழைய கப்பலை இலக்காகக்கொண்டு அரபிக்கடலி -லிருந்து இக்கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை INS பிரபல் ஏவியது. இந்த ஏவுகணை மிகத்துல்லியத்துட -ன் இலக்கைத் தாக்கி இலக்குக்கப்பலை மூழ்கடித்தது.

8. உலகின் மிகப்பெரிய நீரூற்றுக்கான சாதனையை முறியடித்த நகரம் எது?

அ. சென்னை

ஆ. டோக்கியோ

இ. துபாய்

ஈ. நியூயார்க்

 • ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய் நகரம் உலகின் மிகப்பெரிய நீரூற்றுக்கான சாதனையை முறியடித்தது. 14,366 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பாம் நீரூற்று துபாயின் பாம் ஜுமேராவிலுள்ள பாயிண்ட் ஷாப்பிங் மற்றும் டைனிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏழு அமீரகங்களுள் ஒன்றான துபாய், ஏற்கனவே உலகின் மிகவுயரமான கட்டடம் மற்றும் உலகின் அதிவேக காவல்துறை கார் சேவையில் சாதனை படைத்துள்ளது.

9. நிகர சுழிய கரியமிலவாயு உமிழ்வுக்கான (Net Zero Carbon Emission) இலக்கை ஐரோப்பிய ஒன்றியம் எந்த ஆண்டுக்கு நிர்ணயித்துள்ளது?

அ. 2025

ஆ. 2030

இ. 2050

ஈ. 2100

 • லக்ஸம்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில், வரும் 2050ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய ஒன்றியத்தை நிகர சுழிய கரியமிலவாயு உமிழ்வானாக ஆக்குவதற்கு ஒரு சட்டம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துகிறது. இக்காலநிலைச்சட்டம், பல்வேறு தொழிற்சாலைகளில் பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான ஐரோப்பாவின் திட்டங்களுக்கு ஓர் அடிப்படையை உருவாக்கும்.

10. அரசு மின்னணு சந்தையானது (GeM) சமீபத்தில் எந்தத் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது?

அ. ஸ்வயம் வலைதளம்

ஆ. IRCTC வலைதளம்

இ. மத்திய பொதுக் கொள்முதல் வலைதளம்

ஈ. சாம்பியன்ஸ் வலைதளம்

 • அண்மையில், அரசு மின்னணு சந்தையானது மத்திய பொதுக்கொள்முதல் தளத்துடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. அவ்வாறு செய்வதன்மூலம், பண்டங்கள் மற்றும் சேவைகளை பொதுக் கொள்முதல் செய்வதற்கான முழு செயல்முறையும் ஒரே தளத்தின்கீழ் கொண்டுவரப்படும். தனிப்பயன் ஆக்கப்பட்ட ஏலச்செயல்பாடும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, வாங்குபவரை GeM’இல் ஏலமெடுக்க அனுமதிக்கும்.

1. The permanent campus of the Indian Institute of Technology, Ropar was inaugurated. In which state is the institution located?

[A] Rajasthan

[B] Punjab

[C] Uttar Pradesh

[D] Haryana

 • Union Education Minister Ramesh Pokhriyal Nishank has recently inaugurated the permanent campus of the Indian Institute of Technology, Ropar. IIT Ropar has featured in the 351–400 rank in the Times Higher Education World University Rankings 2020. The institute also received a grant of Rs 110 crore to set up the Technology Innovation Hub (TIH) in the fields of agriculture and water.

2. ‘Parinam Manjusha’ is the digital academic repository of which institution?

[A] National Recruitment Agency

[B] Indian Space Research Organisation

[C] Central Board of Secondary Education

[D] All India Council for Technical Education

 • The Central Board of Secondary Education (CBSE) is to enable students their digital academic documents of class X and XII using Facial Recognition System. The live image of the student will be matched with the photograph on the CBSE admit card. The application will be available in the digital academic repository of Central Board of Secondary Education– ‘Parinam Manjusha’ and Digi Locker.

3. Where is the second Regional Raw Drug Repository of National Medicinal Plants Board inaugurated?

[A] Varanasi

[B] New Delhi

[C] Ahmadabad

[D] Mysore

 • The Regional Raw Drug Repository (RRDR) has been inaugurated at All India Institute of Ayurveda, New Delhi. This RRDR is the second in the series of repositories proposed by National Medicinal Plants Board (NMPB), Ministry of AYUSH. Ministry of AYUSH has proposed eight RRDR and one NRDR out of which three Regional Raw Drug Repositories are ready.

4. Who represented India addressed the first–ever Ministerial Meeting of G–20 Anti–Corruption Working Group?

[A] Nitin Gadkari

[B] Jitendra Singh

[C] Nirmala Sitharaman

[D] Piyush Goyal

 • Union minister Jitendra Singh represented India in the first–ever Ministerial Meeting of G–20 Anti–Corruption Working Group. The Minister attended the meeting through video conference. During his address, he said that India is committed to the policy of zero tolerance against corruption and unaccounted money. He also mentioned about India’s Prevention of Corruption Act, 1988.

5. The European Union’s Sakharov Prize 2020 has been awarded to the opposition movement of which country?

[A] Belarus

[B] Chile

[C] Argentina

[D] Singapore

 • The European Parliament has awarded the Sakharov Prize for human rights to the Belarusian movement opposing President Alexander Lukashenko. The opposition movement was led by the exiled Svetlana Tikhanovskaya. The EU also had agreed to impose sanctions against officials suspected of involvement in a security crackdown on protesters in Belarus.

6. Saad al–Hariri has been named as the new Prime Minister of which country?

[A] Kuwait

[B] Lebanon

[C] Zimbabwe

[D] Iran

 • Former Prime Minister of Lebanon Saad Hariri won a small majority of votes in parliament and has been named the next Prime Minister. He has been tasked with forming his fourth government, just under a year after his resignation amid mass–protests. President Michel Aoun had consultations with various parliamentary associations before naming him as the Prime Minister.

7. Which city has broken the record for world’s largest fountain?

[A] Chennai

[B] Tokyo

[C] Dubai

[D] New York

 • The city of Dubai of United Arab Emirates (UAE) has broken the record for the world’s largest fountain. The Palm Fountain which covers an area of 14,366 square feet is located at the Pointe shopping and dining district on Palm Jumeirah of Dubai. Dubai which is one of the seven emirates already holds the record for world’s tallest building and world’s fastest police car in service.

8. Recently, Indian Navy conducted a test launch of an Anti–Ship Missile (AshM) from which vessel?

[A] INS Prabal

[B] INS Kavaratti

[C] INS Kalwari

[D] INS Virat

 • The Indian Navy has made a test launch of its Anti–Ship Missile (AshM) from a Missile Corvette named INS Prabal. According to an official release, the INS Prabal launched and fired an anti–ship missile in the Arabian Sea on a target of an old ship. The missile had hit the target with utmost accuracy and sank the target ship.

9. The European Union has fixed a target for net Zero Carbon Emission by which year?

[A] 2025

[B] 2030

[C] 2050

[D] 2100

 • In a meeting held by the European Union (EU) environment ministers in Luxembourg, a law was formulated was signed to make European Union net zero carbon emitter by 2050. The deal makes it legally binding on all the EU members. This climate law would create a basis for Europe’s plans to reduce greenhouse emissions in various industrial sectors.

10. Government e–Marketplace (GeM) portal has been recently integrated with which portal?

[A] SWAYAM Portal

[B] IRCTC Portal

[C] Central Public Procurement Portal

[D] CHAMPIONS Portal

 • Recently, the Government e Marketplace (GeM) has been successfully integrated with Central Public Procurement Portal (CPPP). By doing so, the entire process of public procurement of goods and services have been brought under a single platform. The function of ”custom bid” is also created in the platform, which will allow a buyer to float a bid on GeM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *