Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

28th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இரஸ்கின் பாண்ட், வினோத் குமார் சுக்லா உள்ளிட்ட அறுவர், அண்மையில் எந்தப் பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்?

அ) சாகித்ய அகாதமி பெல்லோஷிப் 

ஆ) ஞானபீட விருது

இ) வியாஸ் சம்மான்

ஈ) டாக்டர் B C ராய் விருது

  • ஆங்கில எழுத்தாளர் இரஸ்கின் பாண்ட், ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா உள்ளிட்ட ஆறு பேர் சாகித்ய அகாதமி பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாகித்ய அகாதமியின் பொது கவுன்சில் அதன் உயரிய கௌரவமான பெல்லோஷிப்பை அறிவித்ததாக தேசிய எழுத்துக் -கள் அகாதமி கூறியது. சிர்ஷெண்டு முகோபாத்யாய் (பெங்காலி), எம் லீலாவதி (மலையாளம்), Dr பால்சந்திர நெமேட் (மராத்தி), Dr தேஜ்வந்த் சிங் கில் (பஞ்சாபி), சுவாமி இராமபத்ராச்சார்யா (சமற்கிருதம்), இந்திரா பார்த்தசாரதி (தமிழ்) ஆகியோர் பெல்லோஷிப் பெற்ற மற்றவர்களாவர்.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பங்கஜ் அத்வானியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) பளு தூக்குதல்

ஆ) ஸ்னூக்கர் 

இ) டென்னிஸ்

ஈ) டேபிள்-டென்னிஸ்

  • கத்தாரின் தோகாவில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை ஈரானின் அமீர் சர்கோசை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் பங்கஜ் அத்வானி வென்றார். அவர் கடந்த 2019ஆம் ஆண்டில் பட்டத்தை வென்றார். ஆனால், 2017ஆம் ஆண்டில் இரண்டாமிடத்தைப் பிடித்தார். 2019ஆம் ஆண்டில், அனைத்து வகையான பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர், 6 ரெட்ஸ் மற்றும் 10 ரெட்ஸ் ஆகியவற்றில் பட்டங்களை வென்ற உலகின் ஒரே வீரராக பங்கஜ் அத்வானி ஆனார்.

3. அண்மையில் எந்தத் தளத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் தேசிய தரவுத்தளத்தை, தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டது?

அ) இ-ஷ்ராம் இணையதளம் 

ஆ) சமாதான் இணையதளம்

இ) ஆத்ம நிர்பார் பாரத் இணையதளம்

ஈ) மேற்கூறியவை எதுவுமில்லை

  • இ-ஷ்ராம் இணையதளமானது அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் தேசிய தரவுத்தளமாகும். அமைப்புசாரா தொழிலாளர் -களின் பதிவு செயல்முறையை முடிக்குமாறு உச்சநீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தத் தளம் நடைமுறைக்கு வந்தது. இ-ஷ்ராம் தளத்தில், 1 கோடிக்கும் மேலானோர் பதிவு செய்துள்ளனர். அப் பதிவுகளில் 68% பொது சேவை மையங்கள்மூலம் செய்யப்பட்டன.

4. எதன் ஆராய்ச்சியாளர்கள் மழைத்துளிகளிலிருந்து மின்சாரத்தை உருவாக்கக்கூடிய ஒரு சாதனத்தை வடிவமைத்துள்ளனர்?

அ) ஐஐடி மெட்ராஸ்

ஆ) ஐஐடி பம்பாய்

இ) ஐஐடி தில்லி 

ஈ) ஐஐடி பெங்களூர்

  • தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் நீர் துளிகள், மழைத்துளிகள், நீரோட்டங்கள் மற்றும் கடல் அலைகளில் இருந்தும் மின்சாரத்தை உருவாக்கக்கூடிய ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்தச் சாதனம் மின்னியல் தூண்டல் மற்றும் டிரைபோ-எலக்ட்ரிக் விளைவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
  • இது “திரவ-திட இடைமுகம் டிரைபோஎலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர்” என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சாதனம் நானோகாம்போசிட் பாலிமர் மற்றும் ஒரு தொடர்பு மின்முனையால் ஆனது.

5. CBSE / NCERT பாடத்திட்டத்தில் மாற்றஞ்செய்வதற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட 12 பேர்கொண்ட குழுவின் தலைவர் யார்?

அ) அமித் ஷா

ஆ) கஸ்தூரிரங்கன் 

இ) பிமல் ஜலான்

ஈ) இஞ்செட்டி ஸ்ரீனிவாஸ்

  • CBSE/NCERT பாடத்திட்டத்தில் மாற்றங்களுக்கான வழிகாட்டுதல்களை வகுப்பதற்காக, இந்திய அரசு, கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட தேசிய வழிநடத்துதல் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவுக்கு மூன்றாண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு எனப்படும் இந்த ஆவணம் கடைசியாக 2005’இல் தயாரிக்கப்பட்டது. கஸ்தூரிரங்கன், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கை-2020’ஐ உருவாக்கிய குழுவின் தலைவராகவும் இருந்தார்.

6. அண்மையில் மத கட்டமைப்புகள் (பாதுகாப்பு) மசோதா, 2021’ஐ நிறைவேற்றிய மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) கர்நாடகா 

இ) மகாராஷ்டிரா

ஈ) கேரளா

  • கர்நாடக மாநில சட்டசபையானது சமீபத்தில் கர்நாடக மத கட்டமைப்புக -ள் (பாதுகாப்பு) மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. பொது இடங்களில் மத நிர்மாணங்களை பாதுகாக்கும் நோக்கில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவின்படி, “கோவில், தேவாலயம், மசூதி, குருத்வாரா, பௌத்த விகாரம், மஜார் போன்றவை, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் பொதுவெளி இடத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவை மத கட்டமைப்பு எனப்படும்”.

7. விலங்கு-மனித மோதலை ஒழிப்பதற்காக, எந்த விலங்குகளுக்கு ‘ரேடியோ காலர்’களை பொருத்த ஒடிஸா வனத்துறை திட்டமிட்டு உள்ளது?

அ) புலிகள்

ஆ) யானைகள் 

இ) மான்

ஈ) சொம்புமூக்கு முதலை

  • ஒடிசா மாநிலத்தின் வனத்துறையினர், மாநிலத்தின் 7 யானைகளுக்கு ‘ரேடியோ காலர்’களை பொருத்தவும், அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மனிதக் குடியிருப்புகளுக்குள் அவை நுழைவதைத் தடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது விலங்கு – மனித மோதலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதற்காக சந்தக வனவுயிரி சரணாலயத்தின் மூன்று யானைகளும், சிமிலிபால் புலிகள் காப்பகத்தின் 4 யானைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. இக்கருவியில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும்.

8. “Transforming Food Systems for Rural Prosperity” என்றவோர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) UNESCO

ஆ) FAO

இ) IFAD 

ஈ) NABARD

  • “கிராமப்புற செழிப்புக்கேற்றவாறு உணவு அமைப்புகளை மாற்றுவது” என்றவோர் அறிக்கையை ஐநா’இன் சிறப்பு நிறுவனமான வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம் (IFAD) வெளியிட்டது. இவ்வமைப்பின் தலைமையகம் ரோம், இத்தாலியில் உள்ளது. இந்த அறிக்கை விவசாயம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அரசின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

9. ‘நீலக்கொடி’ சான்றிதழை வழங்குகிற நிறுவனம் எது?

அ) UNESCO

ஆ) UNICEF

இ) சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை 

ஈ) UNFCCC

  • டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை என்பது தற்சமயம்வரை 77 உறுப்புநாடுகளைக்கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு, ‘நீலக்கொடி’ சான்றிதழை வழங்குகிறது. இந்தச் சான்றிதழ் கடற்கரைகளின் சூழல் குறித்த தகவல்களை வழங்குகிறது.
  • சமீபத்தில் இந்த அறக்கட்டளை, இந்தியாவில் அமைந்துள்ள மேலும் இரு கடற்கரைகளுக்கு ‘நீலக்கொடி’ சான்றிதழை வழங்கியது. தமிழ்நாட்டின் கோவளம் மற்றும் புதுச்சேரியில் ஈடன் ஆகியன அவ்விரு கடற்கரைகள் ஆகும். இதன்மூலம், இந்தியாவில் ‘நீலக்கொடி’ சான்றுபெற்ற கடற்கரை -களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

10. பொருளியல் கூட்டுறவு & வளர்ச்சிக்கான அமைப்பின் (OECD) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) துபாய்

ஆ) தாவோஸ்

இ) பாரிஸ் 

ஈ) ஜெனீவா

  • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) என்பது பொருளியல் முன்னேற்றம் மற்றும் உலக வர்த்தகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்ட அரசாங்கங்களுக்கிடையேயான பொருளாதார அமைப்பாகும். இது பிரான்சின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு உள்ளது. இது 36 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
  • அண்மையில், அமெரிக்க அதிபர், OECD’க்கான அமெரிக்காவின் அடுத்த தூதுவராக மூத்த இந்திய-அமெரிக்க அரசியல் வல்லுநர் மனிசா சிங்கை நியமித்தார். பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றியுள்ள அவர், தற்போது பொருளாதாரம் மற்றும் வணிக விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றி வருகிறார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் இருந்து முதல்முறையாக – ‘போயிங்’ நிறுவனத்துக்கு பாகங்கள் தயாரிக்க ஒப்பந்தம்

தமிழகத்தில் முதல்முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனம், உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க நீண்டகால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் நிறுவனம் – போயிங் இடையிலான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது சேலம், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

ரூ.150 கோடி முதலீடு

ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனம், ஓசூரில் ரூ.150 கோடி முதலீட்டில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதியை அடுத்த 24 மாதங்களில் ஏற்படுத்த உள்ளது. மேலும், தற்போது சேலத்தில் உள்ள உற்பத்திக் கூடத்தை50 ஆயிரம் சதுர அடி பரப்பில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இது, தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பார்வையான ‘தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது’ (Made in TamilNadu) என்பதன் ஒருபடியாக அமையும்.

2. பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பங்களை கொண்டுவரும் டிஆர்டிஓ.வின் சென்னை ‘புதுமை ஆராய்ச்சி மையம்’

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, நாட்டின் பாதுகாப்புத் தேவைகளையும் ஆராய்ச்சிப் போக்கையும் இணைக்கும் நோக்கில், ‘புதுமை ஆராய்ச்சி மையம்’ (ஆர்.ஐ.சி) செயல்பட்டு வருகிறது. இம் மையம்சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில், கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கல்வியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்கும் தொடர்புக் கண்ணியாக இருப்பதும், பாதுகாப்புத் துறையில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு, அவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு, அவற்றை எளிதாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுமே இந்த மையத்தின் முக்கிய நோக்கம்.

எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டேஷன் சிஸ்டம்ஸ் (EMECS), கடற்படைஅமைப்பு, கடற்படை தொழில்நுட்பங்கள் (NSNT), மேம்பட்ட வாகனதொழில்நுட்பங்கள் (AVT) போன்றவற்றில் இந்த ஆராய்ச்சி மையம் மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் புதுமையாக உள்ளன. இந்த ஆராய்ச்சி மையத்தின் வெற்றிக்கு, சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட மற்றொரு மையமே சான்று. கடந்த 5 ஆண்டுகளாக இந்தஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றிவரும் வி.நடராஜன், இந்த தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்டுபவராகத் திகழ்கிறார்.

விண்வெளியில் காஸ்மிக் கதிர்வீச்சு பாதிப்பைத் தடுக்கும் விண்வெளி கலங்களின் மீதான மேற்பூச்சு, எல்லையில் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் ஆளில்லா குட்டி விமானம், கடலில் எதிரிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க உதவும் சோனார் தொழில்நுட்பம் போன்றஆராய்ச்சிகள் அவருடைய தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்த அவர், இன்றுஎட்டியிருக்கும் உயரம் அளப்பரியது. கடினமாக உழைத்தால் தடைகளை மீறி சாதிக்கலாம் என்பதை அந்த உயரம் உணர்த்துகிறது.

இந்த ஆராய்ச்சி மையம் விண்வெளி, மென்பொருள் மேம்பாடு, நானோ பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இம்மையத்தின் விஞ்ஞானிகள் சென்னை ஐஐடியில் துணைபேராசிரியர்களாகவும் பணியாற்றுவதன் மூலம், மாணவர்களுக்கு ஆராய்ச்சிகளின் மேல் ஈர்ப்பையும் பிடிப்பையும் ஏற்படுத்துகின்றனர். ஆராய்ச்சிகளில் தனிப்பட்ட நபர்களை அல்லாமல், ஒட்டுமொத்த கல்வி நிறுவனத்தையே இந்த ஆராய்ச்சி மையம் பங்கேற்க வைத்திருக்கிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மாறினாலும், ஆராய்ச்சி தடையின்றி தொடர்வது உறுதிசெய்யப்படுகிறது.

3. பாலிசி கையேடு அச்சிட்டு டெலிவரி செய்ய – இந்திய தபால் துறையுடன் எல்ஐசி நிறுவனம் ஒப்பந்தம்

பாலிசி கையேடுகளை அச்சிட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் சேர்க்கும் வகையில் எல்ஐசி நிறுவனமும் இந்திய தபால் துறையும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இதுதொடர்பாக எல்ஐசி (ஆயுள் காப்பீட்டு கழகம்)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எல்ஐசியின் பாலிசி கையேடுகளை (புக்லெட்) அச்சிட்டு, சம்பந்தப்பட்ட பாலிசிதாரர்களின் முகவரியில் கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய தபால் துறையுடன் ‘பிரின்ட் டு போஸ்ட் சொல்யூஷன்’ என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம்மும்பையில் உள்ள எல்ஐசி தலைமையகத்தில் எல்ஐசி, அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

4. சேதி தெரியுமா?

செப்.19: திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்த டி.இ.எஸ். ராகவன், தாகூரின் ‘கோரா’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த கா.செல்லப்பன் ஆகியோர் 2020-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

செப்.20: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். முன்னதாக உட்கட்சிப் பிரச்சினை காரணமாக கேப்டன் அம்ரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

செப்.21: ஜப்பானைச் சேர்ந்த 107 வயதான இரட்டைச் சகோதரிகள் உமேமோ சுமிம்மா, கவுமே கோடமா ஆகியோர் உலகின் மிக வயதான இரட்டையர்கள் என்று கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

செப்.21: கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. ஜஸ்டின் ட்ரூடோ 2015 முதல் அந்நாட்டுப் பிரதமராக இருந்துவருகிறார்.

செப்.22: சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் மகாத்மா காந்தி கோட், சூட் அணிவதைத் துறந்து, அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நூற்றாண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

செப்.22: தமிழகத்தில் காலியாக இருந்த இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றித் தேர்வா யினர். புதுச்சேரியில் முதன் முறையாக பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி மாநிலங்களவை எம்.பி.யானார்.

செப்.23: தமிழகத்தின் கோவளம், புதுச்சேரியின் ஏடென் ஆகிய கடற்கரைகள் உலகப் புகழ்பெற்ற நீலக்கொடிச் சான்றிதழைப் பெற்றன. இதன் மூலம் இந்தியாவில் இச்சான்றிதழைப் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது.

செப்.23: தோகாவில் நடைபெற்ற ஸ்னூக்கர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பங்கஜ் அத்வானி வென்றார். இது அவர் வெல்லும் 24-ஆவது பட்டமாகும்.

செப்.24: பெருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

செப்.25: இந்திய விமானப் படையின் தளபதி பதவுரியா ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப் பட்டுள்ளார்.

5. அறியப்படாத சுற்றுலா இடங்களைப் பிரபலப்படுத்த ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ நிகழ்ச்சி

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில், ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ என்ற நிகழ்ச்சியை, சுற்றுலாத்துறை அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். சமூக வலைதள ஆா்வலா்கள் மூலம் தமிழகத்தில் அறியப்படாத சுற்றுலாத்தலங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது

அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் பேருந்து மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 10 போ் கொண்ட சமூக ஊடகவியலாளா்கள் (நா்ஸ்ரீண்ஹப் ஙங்க்ண்ஹ ஐய்ச்ப்ன்ங்ய்ஸ்ரீங்ழ்ள் பங்ஹம்) பயணம் மேற்கொள்கின்றனா். இதற்கான வாகனத்தை சுற்றுலாத்துறை அமைச்சா் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதையடுத்து அமைச்சா் மதிவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியது: ‘சமூக வலைதளங்களில் சுற்றுலாத்துறையில் ஆா்வமுள்ள 10 போ் கொண்ட குழு, தமிழ்நாடு முழுவதும் அறியப்படாத ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அந்த இடத்தின் வரலாற்றை புகைப்படங்கள், விடியோக்கள் மூலமாக தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர உள்ளனா்.

செப். 27 முதல் அக்டோபா் 6- ஆம் தேதி வரை இந்தக் குழு பயணம் மேற்கொள்ளவுள்ளனா். மக்கள் அறியாத சுற்றுலாத்தலங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இந்த பயணத்தின் நோக்கமாகும். கரோனாவால் சுற்றுலாத்தலங்கள் நலிவடைந்துள்ளதால், அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கீழடியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு முதல்வா் நிதி அறிவித்திருக்கிறாா். அதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறைக்கென உள்ள செயலியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா். இந்தநிகழ்ச்சியில், சுற்றுலாத் துறையின் முதன்மைச் செயலாளா் சந்திரமோகன், இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

6. 100-ஆவது நாளில் மின்னகம்: 3.50 லட்சம் புகாா்களுக்கு தீா்வு

மின்னகம் தொடங்கப்பட்டு 100 நாள்களை எட்டிய நிலையில், 3.50 லட்சம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா். சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில், மின்னகம் திறந்து வைக்கப்பட்டு திங்கள்கிழமையுடன் நூறு நாள்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி நேரடியாக மின்னகத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மின்னகம் சிறப்பாக செயல்பட துறை சாா்ந்த அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு அவா் ஆலோசனைகளை வழங்கினாா்.

99 சதவீதம் புகாா்களுக்குத் தீா்வு: பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மின் நுகா்வோா் 24 மணி நேரமும் தங்களுடைய புகாா்களைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக மின்னகத்தை (94987 94987) முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 20-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். அன்று முதல் திங்கள்கிழமை வரை 3.53 லட்சம் புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 3.50 லட்சம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. அதாவது, 99 சதவீதம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இதுதவிர இதுவரை 14.69 லட்சம் புகாா்கள் மின் கட்டணம் தொடா்பாக வரப்பெற்றுள்ளன. மின்னகத்துக்கு மட்டும் 44,767 புகாா்கள் வந்தன. இவை அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன.

4 மாதங்களுக்குள் 8,905 மின்மாற்றிகள்: கடந்த ஆட்சியில் மின் பராமரிப்புப் பணிகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எந்த இடத்தில் மின் அழுத்தம் அதிகம், குறைவு என்பதை அறிய 8,905 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதுவரை 2 ஆயிரம் மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன. 4 மாத காலத்துக்குள் திட்டமிட்டபடி புதிய மின்மாற்றிகள் பொருத்தப்படும்.

பருவமழை – 1 லட்சம் மின்கம்பங்கள் தயாா்: இந்த பருவமழையைப் பொருத்தவரை, தடையற்ற மின் விநியோகம் வழங்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அவ்வாறு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளன. தேவையான உபகரணங்களும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. எந்த இடங்களில் இடா்பாடு வருகிறதோ அதை உடனடியாக நிவா்த்தி செய்யக்கூடிய அளவுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியா்களுடன் சோ்ந்து மின்வாரிய அதிகாரிகள் ஒன்றிணைந்து பணி செய்ய உள்ளனா்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 63,000 மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதை மின்வாரியம் அறியும் வண்ணம் டிடி மீட்டா் அமைக்கும் பணிகள், ரூ.1270 கோடி மதிப்பீட்டில் நடைபெற இருக்கின்றன. அனைத்து மின்இணைப்புதாரா்களுக்கும் அவா்களே அவா்களுடைய மின்அளவீட்டை பாா்த்துக் கொள்ளும் வகையில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகளும் டிடி மீட்டா் பொருத்தும் பணி நிறைவடைந்தவுடன் தொடங்கப்படும். விரைவில் மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கொருக்குப்பேட்டை சாலையில் 500 மீட்டருக்குள் 7 டாஸ்மாக் மதுபான கடைகள் அமைந்துள்ள விவகாரம் குறித்து அறிக்கைகள் வரப்பெற்றுள்ளன. புதன்கிழமை அறிக்கையின்படி கடைகள் அகற்றப்படும் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

7. அமெரிக்க கடற்படையில் முதல் முறை:சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய அனுமதி

அமெரிக்க கடற்படையில் பணியாற்றும் 26 வயது சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 246 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கடற்படையில் இந்த சிறப்பு அனுமதியைப் பெறும் முதல் நபா் இவா் ஆவாா். இது தொடா்பாக ‘நியூயாா்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பது: அமெரிக்க கடற்படையில் பணிபுரியும் சீக்கியரான சுக்பீா் தூா் கடந்த ஐந்து ஆண்டுகளாக காலையில் சீருடை அணிவது வழக்கம். இந்நிலையில் சீக்கியா் என்ற முறையில் தலைப்பாகை அணியும் அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து அவா் கடந்த வியாழக்கிழமை தலைப்பாகையும் அணிந்து கொண்டாா்.

அமெரிக்க கடற்படையின் 246 ஆண்டு வரலாற்றில் இதுவரை இதுபோன்ற சிறப்பு அனுமதிகள் அளிக்கப்பட்டதில்லை. எனினும், அண்மையில் கேப்டனாக பதவி உயா்வு அளிக்கப்பட்ட பின், தலைப்பாகை அணிய அனுமதி கிடையாது என்ற நிலையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய தூா் முடிவு செய்தாா். அவருக்கு ஜூன் மாதம் அளிக்கப்பட்ட பததிலில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டது. அப்படையின் தளபதி அளித்த பதிலில் ‘இவ்வாறு ஒரு தனிநபா் தனது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதை அனுமதிப்பது கடற்படையில் ஒழுக்கத்தையும் அா்ப்பணிப்பு உணா்வையும் சீா்குலைத்து விடும். படைகள் மீதான நாட்டின் நம்பிக்கையையும் அது சீரழித்து விடும். தாக்குதல் திறனையும் அது குறைத்து விடும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், சுக்பீா் தூா் தலைப்பாகை அணிவதற்கு கடந்த வியாழக்கிழமை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது வழக்கமான பணியிடங்களில் அவா் தலைப்பாகை அணியலாம். ஆனால் போா் நடக்கும் ஒரு பகுதியில் பணிபுரியும்போதோ, ராணுவ விழா போன்றவற்றில் பங்கேற்கும்போதோ அவா் தலைப்பாகை அணியக் கூடாது. இந்த விவகாரம் தொடா்பாக சுக்பீா் தூா் கூறுகையில் ‘தலைப்பாகை அணியும் உரிமையைப் பெற்றிருக்கும் விவகாரத்தில் நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளோம். இன்னும் நிறைய தூரம் செல்லவேண்டியுள்ளது. கட்டுப்பாடுகளுடன் தலைப்பாகை அணிய அனுமதி அளித்திருப்பதை எதிா்த்து மேல்முறையீடு செய்துள்ளேன். முழுமையான அனுமதி கிடைக்காவிட்டால் கடற்படையை எதிா்த்து வழக்கு தொடா்வேன்’ என்று தெரிவித்தாா். இதனிடையே, அமெரிக்க ராணுவம், விமானப்படையில் பணியாற்றும் சுமாா் 100 சீக்கியா்கள் முழுமையாக தாடி வைத்தும் தலைப்பாகை அணிந்தும் பணியாற்றுகின்றனா்.

8. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்

இந்தியாவிலேயே முதன்முறையாக பிரசித்திபெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்கும் கருவியை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில், வீணாகும் தேங்காய் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீன கருவி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நீர்வளத்துறை துறை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய உணவு பயிர் பதன கழக இயக்குனர் அனந்த ராமகிருஷ்ணன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவிலில் நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்தக் கருவி புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். இதில், தேங்காய் தண்ணீரை சுத்திகரித்து, 50 லிட்டர் வரை நீரை சேமித்து வைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என இந்திய உணவு பதன கழகம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

நிலத்திலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றி பெற்றது. ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையை மேம்படுத்தியபின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1. Ruskin Bond, Vinod Kumar Shukla and six others were selected for which award/ fellowship recently?

A) Sahitya Akademi Fellowship 

B) Jnanpith Award

C) Vyas Samman

D) Dr BC Roy Award

  • English author Ruskin Bond, Hindi writer Vinod Kumar Shukla and six others were selected for the Sahitya Akademi Fellowship. The National Academy of Letters said that the general council of Sahitya Akademi announced its highest honour, the Fellowship.
  • The others who received the Fellowship are Sirshendu Mukhopadhyay (Bengali), M Leelavathy (Malayalam), Dr. Bhalchandra Nemade (Marathi), Dr Tejwant Singh Gill (Punjabi), Swami Rambhadracharya (Sanskrit), Indira Parthasarthy (Tamil).

2. Pankaj Advani, who was in the news recently, is associated with which sports?

A) Weight–lifting

B) Snooker 

C) Tennis

D) Table–tennis

  • India’s Pankaj Advani successfully lifted the Asian Snooker Championship, held in Doha, Qatar, outplaying Amir Sarkhosh of Iran 6–3. He won the title in 2019 but he was the runner–up in 2017. In 2019, Pankaj also became the only player in the world who won the titles in all forms of billiards, snooker, 6Reds, and 10Reds competitions.

3. The Ministry of Labour recently launched India’s first national database on unorganised workers on which portal?

A) e–Shram portal 

B) Samadhan portal

C) AtmaNirbhar Bharat portal

D) None of the above

  • The e–Shram portal is India’s first national database on unorganised workers. The portal came into being after the Supreme Court directed the Government to complete the registration process of unorganized workers. Over 1 crore registered on e–shram portal. 68% of those registrations were done through Common Service Centres (CSC).

4. Researchers from which organization have designed a device that can generate electricity from raindrops?

A) IIT Madras

B) IIT Bombay

C) IIT Delhi 

D) IIT Bangalore

  • Researchers at the Indian Institute of Technology in Delhi have developed a device that can generate electricity from water droplets, raindrops, water currents and even ocean waves. The device is developed using electrostatic induction and triboelectric effect. It is called “liquid–solid interface triboelectric nanogenerator”. The device is composed of a nanocomposite polymer and a contact electrode.

5. Who is the Chairperson of the recently set up 12–member committee for change in CBSE / NCERT curriculum?

A) Amit Shah

B) Kasturirangan

C) Bimal Jalan

D) Injetti Srinivas 🗹

  • The Government of India has constituted a 12–member National Steering Committee, under the chairmanship of K Kasturirangan, for formulating guidelines for changes in the CBSE / NCERT curriculum.
  • The Committee has a term of three years. The document, called as the National Curriculum Framework (NCF), was last prepared in 2005. Kasturirangan is the former Chief of ISRO and has also headed the committee that drafted the National Education Policy (NEP) 2020.

6. Which state has passed the Religious Structures (Protection) Bill, 2021 recently?

A) Odisha

B) Karnataka 

C) Maharashtra

D) Kerala

  • The state assembly of Karnataka has recently passed Karnataka Religious Structures (Protection) Bill, 2021. The bill was introduced by the state Chief Minister Basavaraj Bommai, with an aim to protect the religious constructions on public places.
  • As per the bill, a religious structure is defined as a “temple, church, mosque, gurudwara, Budh Vihar, Majar etc, constructed on a public place without authority of law”

7. The Odisha Forest department proposed to fit ‘Radio Collars’ on which animals, to eliminate animal – human conflict?

A) Tigers

B) Elephants 

C) Deer

D) Gharial

  • The forest department of Odisha has proposed to fit radio collars on 7 Elephants of the state, to track their movement and prevent them from entering the human settlements.
  • It aims to eliminate animal – human conflict. Three elephants of Chandaka Wildlife Sanctuary and four elephants of the Similipal Tiger Reserve have been selected for this purpose. The device is fitted with a GPS device and the location can be tracked real time.

8. “Transforming Food Systems for Rural Prosperity” report has been released by which organization?

A) UNESCO

B) FAO

C) IFAD 

D) NABARD

  • “Transforming Food Systems for Rural Prosperity” report has been released by International Fund for Agricultural Development (IFAD) which is an international financial institution and an UN specialised agency. The organization is headquartered at Rome, Italy. The report has laid emphasis on government investment in farming as well as in small and medium enterprises which support farm activities.

9. Which institution awards the ‘Blue Flag certification’?

A) UNESCO

B) UNICEF

C) Foundation of Environment Education 

D) UNFCCC

  • The Foundation for Environment Education – Denmark is an environment organisation with presently 77 member countries. This organisation awards the Blue Flag certification, which is an eco–label for sustainable beaches across the globe.
  • Recently, the foundation has awarded Blue Flag certification to 2 more beaches in India – Kovalam in Tamil Nadu and Eden in Puducherry. With this, the number of Blue Flag certified beaches in India has gone up to 10.

10. Where is the headquarters of Organisation for Economic Cooperation and Development (OECD) located?

A) Dubai

B) Davos

C) Paris 

D) Geneva

  • Organisation for Economic Cooperation and Development (OECD) is an intergovernmental economic organisation which aims to stimulate economic progress and world trade. It is headquartered at Paris, France and has 36 member countries.
  • Recently, the President of the United States has nominated veteran Indian–American diplomat Manisha Singh as America’s next envoy to OECD. The diplomat had previously served in several significant positions which includes her present role as the Assistant Secretary of State for Economic and Business Affairs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!