Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

28th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

28th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 28th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2026ஆம் ஆண்டுக்குள் தேசிய மாசற்ற காற்றுத் திட்டத்தின்கீழ், நகரங்களில் துகள்மப்பொருள்களின் செறிவைக் குறைப்பதற்கான புதிய இலக்கு சதவீதம் என்ன?

அ. 25%

ஆ. 30%

இ. 40%

ஈ. 50%

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 40%

  • 2026ஆம் ஆண்டுக்குள் தேசிய மாசற்ற காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழுள்ள நகரங்களில் துகள்மப்பொருள்களின் செறிவை 40 சதவீத அளவுக்குக் குறைக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டுக்குள் 20 – 30% அளவுக்குக் குறைக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருபது நகரங்கள் ஆண்டு சராசரி செறிவான (ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம்) PM10 என்ற தேசிய தரநிலைகளைச் சந்தித்துள்ளன.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘IinvenTiv’ நிகழ்வு என்றால் என்ன?

அ. வேலைவாய்ப்பு முகாம்

ஆ. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகாம்

இ. திறன் மேம்பாட்டு முகாம்

ஈ. துளிர் நிறுவல்கள் முகாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகாம்

  • இருபத்து மூன்று இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) இணைந்து, “IinvenTiv” என்ற ஒரு பிரம்மாண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகாமை ஏற்பாடு செய்யும். இந்த நிகழ்வு அந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் புதுமைத்திட்டங்களைப்பற்றிய முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புத்தாக்கங்களின் சிறந்த மேம்பாட்டிற்காக பல்கலைகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்துறை மற்றும் ஐஐடிகளுடன் அம்முகாம் ஒத்துழைக்கும்.

3. ‘தேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய மசோதா’வுடன் தொடர்புடைய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தியா

இ. ஆஸ்திரேலியா

ஈ. பாகிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆஸ்திரேலியா

  • ஆஸ்திரேலியாவின் தலைமை வழக்கறிஞர் அண்மையில் தேசிய ஊழல் தடுப்பு ஆணைய மசோதாவை தாக்கல் செய்தார். தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்பது பொதுத்துறையில் உள்ள தீவிரமான அல்லது முறையான ஊழலை விசாரித்து அறிக்கையளிக்கும் ஓர் அமைப்பாகும். இது ஒரு ஆணையரால் வழிநடத்தப்படும்; அவர், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு பதவி வகிப்பார். பொதுநலவாய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், பொதுநலவாய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், அரசாங்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள், பாதுகாப்புப்படை உறுப்பினர்கள், சட்டப்பூர்வ அலுவலகம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோரை விசாரிப்பதற்கான பரந்த அதிகார வரம்பு இந்தத் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு உள்ளது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தாமிரபரணி ஆறு முதன்மையாகப் பாயும் மாவட்டங்கள் எவை?

அ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

ஆ. மதுரை மற்றும் சிவகங்கை

இ. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி

ஈ. சேலம் மற்றும் ஈரோடு

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

  • தாமிரபரணி ஆறு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சிமலையின்கண் பொதிகை மலையிலிருந்து உற்பத்தியாகிறது. பெங்களூருவைச் சேர்ந்த அசோகா ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கான அறக்கட்டளையின் (ATREE) ஆராய்ச்சியாளர்கள் தாமிரபரணி ஆற்றின் மறுசீரமைப்புப் பணியை, ‘தாமிரசெஸ்’ என்ற திட்டத்தின்கீழ் தொடங்கினர். பூர்வீக பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதற்கான சேவைகளை செயல்படுத்துவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. ‘ஜல்தூத்’ என்ற செயலியை உருவாக்கியுள்ள நடுவண் அமைச்சகம் அல்லது அமைச்சகங்கள் எது / எவை?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம்

இ. ஜல்சக்தி அமைச்சகம்

ஈ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம்

  • ‘ஜல்தூத்’ என்ற செயலியை நடுவண் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் நடுவண் பஞ்சாயத்து இராஜ் அமைச்சகமும் இணைந்து உருவாக்கியுள்ளது. ஒரு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தைக் கண்டுபிடிக்க இந்தச் செயலி நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தையது மற்றும் பிந்தையது) காலங்களில் அளவிடுவதற்கான வேலைவாய்ப்புக்கு ‘ஜல்தூத்’ செயலி உதவும். நீர்மட்டத்தை அளவிட நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், நிலக்குறியீடிடப்பட்ட (geo–tagged) நிழற்படங்களை இந்தச் செயலியின்மூலம் பதிவேற்றுவார்கள்.

6. NTPCஆல் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட ஜபுவா மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. மத்திய பிரதேசம்

இ. பஞ்சாப்

ஈ. சத்தீஸ்கர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மத்திய பிரதேசம்

  • இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்னுற்பத்தியாளரான NTPC, பெருநிறுவன நொடிப்புநிலை தீர்மானச் செயல்முறைமூலம் `925 கோடிக்கு ஜபுவா பவர் லிட் (JPL) நிறுவனத்தை வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தேசிய நிறுவனச்சட்டத் தீர்ப்பாயம்மூலம் (NCLT) இந்தச் செயல்முறைகள் தொடங்கப்பட்டன. இது NCLT வழிமூலம் NTPC கையகப்படுத்தும் முதல் சொத்தாகும். JPL என்பது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 600 மெகாவாட் திறன்கொண்ட செயல்பாட்டில் உள்ள ஓர் அனல்மின்னுற்பத்தி நிறுவனமாகும்.

7. ‘ஷிக்ஷாக் பர்வ் கூட்டத்தின்’ தொடக்க விழாவை நடத்திய நகரம் எது?

அ. பெங்களூரு

ஆ. புது தில்லி

இ. வாரணாசி

ஈ. காந்தி நகர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • ‘ஷிக்ஷாக் பர்வ்’ என்பது ஆசிரியர்களைப் பாராட்டவும் தேசியக் கல்விக் கொள்கை–2020ஐ முன்னெடுத்துச் செல்வதற்காகவும் நடத்தப்பட்ட ஒரு கூட்டமாகும். கல்வி அமைச்சகம், CBSE, AICTE மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஆகியவை புது தில்லியில் ஏற்பாடு செய்திருந்த தொடக்க மாநாட்டுடன் ‘ஷிக்ஷாக் பர்வ்’ ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில், ‘தேசிய மனநல ஆய்வறிக்கை’, ‘தேசிய அறக்கட்டளை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் ஆய்வறிக்கை’ மற்றும் ‘குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுக்கான ஸ்கிரீனிங் டூல்ஸ் மொபைல் ஆப்– பிரஷாஸ்ட்’ ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

8. அண்மையில் காலமான இரண்டாம் எலிசபெத் இராணி, பிரிட்டனின் அரசியாக எத்தனை ஆண்டுகள் இருந்தார்?

அ. 30

ஆ. 45

இ. 60

ஈ. 70

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 70

  • அண்மையில் தனது 96ஆவது வயதில் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 1952ஆம் ஆண்டு பிரிட்டன் அரச அரியணை ஏறினார். 70 ஆண்டுகள் ஆட்சிசெய்த மிகநீண்ட கால அரசியாக அவர் திகழ்ந்தார். 1837 முதல் 1901 வரை ஆட்சிசெய்த விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்து, 2015ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மிக நீண்டகால அரசியாக அவர் ஆனார். அவரது மூத்த மகன் சார்லஸ், அவருக்குப் பிறகு மூன்றாம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறுகிறார்.

9. 2023 – ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கியை நடத்துகிற இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. புது தில்லி

இ. ஒடிஸா

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஒடிஸா

  • 2023 – ஹாக்கி ஆடவர் உலகக்கோப்பைப் போட்டிகளை புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்திலும், ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா அரங்கத்திலும் நடைபெறும். 2023 ஜனவரியில் இந்தப்போட்டிகள் தொடங்கும். போட்டியின் டிரா சமீபத்தில் புவனேசுவரத்தில் நடைபெற்றது. கடந்த 2018இல் நெதர்லாந்தைத் தோற்கடித்து முதல் பட்டத்தை வென்றதால், பெல்ஜியம் இவ்வுலகக்கோப்பையின் நடப்புச்சாம்பியனாக உள்ளது. இதில் பங்கேற்கும் இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

10. கீழ்க்காணும் எந்நகரத்தில், ‘கலாம் நோ கார்னிவல்’ என்ற புத்தகக்கண்காட்சியை பிரதமர் தொடக்கி வைத்தார்?

அ. மும்பை

ஆ. அகமதாபாத்

இ. வாரணாசி

ஈ. இராமேசுவரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அகமதாபாத்

  • அகமதாபாத்தில் நவபாரத் சாகித்திய மந்திர் ஏற்பாடு செய்திருந்த, ‘கலாம் நோ கார்னிவல்’ புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். பாரம்பரியமாக நடைபெற்று வரும் இக்கண்காட்சி குஜராத் மாநிலத்தின் இலக்கியம் மற்றும் அறிவை விரிவுபடுத்த பேருதவி புரிகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு (அக்டோபர் 2022-டிசம்பர்2022) மத்திய அரசு நீடித்துள்ளது.

கடந்த 2021இல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டமான பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ், கூடுதல் உணவுப்பாதுகாப்பு வெற்றிகரமாக அமலாவதை அடுத்து இந்த திட்டத்தின் 7ஆவது கட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீட்டிக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நலத்திட்டத்தின்மூலம் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயனடையும் பயனாளிகள் அனைவருக்கும் விலையில்லாமல் ஒவ்வொரு நபருக்கும் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. தற்போது மேலும் 3 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு `44,762 கோடி கூடுதலாக செலவாகும். 7ஆம் கட்டத்திற்கு உணவு தானிய ஒதுக்கீடு 122 இலட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கக்கூடும்.

2. மோதலில் இருந்து பூமியைப் பாதுகாக்கும் திட்டம்: விண்கல்லில் செயற்கைக்கோளை மோதி நாசா சோதனை

எதிர்காலத்தில் பூமியின்மீது விண்கற்கள் மோதி பேரழிவை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அவற்றின் பாதையை மாற்றியமைக்க முடியுமா? என்பதை தெரிந்துகொள்வதற்காக அத்தகைய விண்கல் ஒன்றின்மீது செயற்கைக்கோள் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA மோதச்செய்தது.

பூமியில் மிகப்பெரிய விண்கற்கள் மோதி மிகப்பெரிய அழிவை ஏற்படுவத்துவதற்கான அபாயத்தை தவிர்ப்பதற்காக NASA விஞ்ஞானிகள் நீண்டகாலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களை திசைமாற்றுதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் தேடிவருகின்றனர்.

இந்நிலையில், ஒரு பொருளை விண்கல்லின்மீது பலமாக மோதச்செய்வதன்மூலம் அதன் சுற்றுவட்டப்பாதையை மாற்றியமைக்க முடியுமா? என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, ‘தி டபுள் ஆஸ்டிராய்ட் ரிடைரக்ஷன் டெஸ்ட்’ (டார்ட்) என்ற சோதனையை NASA மேற்கொண்டது. அந்தச் சோதனைத் திட்டத்தின்கீழ், 160 மீட்டர் விட்டம்கொண்ட டிமார்ஃபோஸ் என்ற விண்கல்மீது செயற்கைக்கோளை மோதச் செய்ய முடிவுசெய்யப்பட்டது. அந்த விண்கல், டிடிமோஸ் என்ற 780 மீ விட்டம் கொண்ட மிகப்பெரிய விண்கல்லுக்கு நிலவாகச் சுற்றிவருகிறது.

இந்த நிலையில், டிமார்ஃபோஸ் மீது மோதுவதற்காக NASA அனுப்பிய செயற்கைக்கோள் 10 மாதங்களுக்குப்பிறகு அந்த விண்கல் மீது மோதிச்சிதறியது.

இந்த மோதலையும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட மாற்றத்தையும் ஆய்வுசெய்தற்காக, இத்தாலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த LICIA கியூப் செயற்கைக்கோள், டார்ட் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அது, டார்ட்டிலிருந்து கடந்த 11-ஆம் தேதி தனியாகப் பிரிந்து அதனை பின்தொடர்ந்தது.

டிமார்ஃபோஸ் விண்கலம்மீது டார்ட் செயற்கைக்கோள் மோதுவதையும் அதனால் எழுந்த தூசிமண்டலத்தின் தன்மையையும் LICIA கியூப் செயற்கோள் பதிவுசெய்து பூமிக்கு நேரடியாக அனுப்பி வருகிறது.

இந்தச்சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட விண்கல்லைக் குறிவைத்து, அதன் மீது வேண்டுமென்றே மோதச்செய்து, அதன் பாதையை மாற்றியமைக்கும் திறன் NASAஉக்கு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

28th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the new target for reduction in particulate matter concentration in cities under National Clean Air Programme (NCAP) by 2026?

A. 25%

B. 30%

C. 40%

D. 50%

Answer & Explanation

Answer: C. 40%

  • Union Environment Ministry has set a new target of 40 percent reduction in particulate matter concentration in cities covered under the National Clean Air Programme (NCAP) by 2026. The earlier target of 20 to 30 percent reduction by 2024 has been updated. Twenty cities have met the national standards for annual average PM10 concentration (60 microgram per cubic metre). Under NCAP, city–specific action plans are prepared.

2. What is ‘IInvenTiv’, an event which was seen in the news recently?

A. Employment Fair

B. Research and Development Fair

C. Skill Development Fair

D. Start–Up Fair

Answer & Explanation

Answer: B. Research and Development Fair

  • Twenty–three Indian Institutes of Technology (IITs) will organise a mega research and development fair called “IInvenTiv”. The event is aimed at creating holistic awareness around research and innovation projects being done in the institution. It will also seek collaborations with universities and institutes, industry and the IITs for better development of the innovations.

3. ‘National Anti–Corruption Commission bill’ is associated with which country?

A. USA

B. India

C. Australia

D. Pakistan

Answer & Explanation

Answer: C. Australia

  • Australia’s attorney general recently introduced the National Anti–Corruption Commission bill. The National Anti–Corruption Commission is a body to investigate and report on serious or systemic corruption in the public sector. It will be led by a commissioner, who will serve one fixed term of five years. NACC has a broad jurisdiction to investigate commonwealth ministers, parliamentarians, staff, the heads and employees of commonwealth agencies, government contractors and their employees, defence force members, statutory office holders among others.

4. Which are the districts where Tamiraparani river mainly flows?

A. Tirunelveli and Thoothukudi

B. Madurai and Sivagangai

C. Tirunelveli and Kanyakumari

D. Salem and Erode

Answer & Explanation

Answer: A. Tirunelveli and Thoothukudi

  • The Tamiraparani River originates from the Pothigai hills of the Western Ghats in Tirunelveli district of Tamil Nadu. Bengaluru–based Ashoka Trust for Research and the Environment (ATREE) researchers initiated the restoration of the Tamiraparani River under the ‘TamiraSES’ project. It aims to enable conditions for native biodiversity to flourish and enhance multiple ecosystem services.

5. Which Union Ministry/ Ministries developed the ‘JALDOOT’ app?

A. Ministry of Rural Development

B. Ministry of Rural Development and Ministry of Panchayati Raj

C. Ministry of Jal Shakti

D. Ministry of Agriculture and Farmers Welfare

Answer & Explanation

Answer: B. Ministry of Rural Development and Ministry of Panchayati Raj

  • JALDOOT app has been jointly developed by Ministry of Rural Development and Ministry of Panchayati Raj. This app will be used across the country to capture the water level of selected wells in a village. Manual monitoring of water levels in open wells will be measured twice by Jaldoots, (officers assigned to measure the water levels). They will upload geo–tagged photographs through the app.

6. Jhabua power plant, which was recently acquired by NTPC, is located in which state?

A. Rajasthan

B. Madhya Pradesh

C. Punjab

D. Chhattisgarh

Answer & Explanation

Answer: B. Madhya Pradesh

  • India’s largest integrated power producer NTPC has successfully acquired Jhabua Power Limited (JPL) through Corporate Insolvency Resolution Process for Rs 925 crore. The process initiated by National Company Law Tribunal, Kolkata, (NCLT). This is the first acquisition of a power asset by NTPC through NCLT route. JPL has an operational thermal power capacity of 600 MW located in Madhya Pradesh.

7. Which city hosted the inaugural ‘Shikshak Parv Conclave’?

A. Bengaluru

B. New Delhi

C. Varanasi

D. Gandhi Nagar

Answer & Explanation

Answer: B. New Delhi

  • Shikshak Parv is being to felicitate the Teachers and to take National Education Policy 2020 forward. The beginning of Shikshak Parv was marked with an inaugural conclave organised by Ministry of Education, CBSE, AICTE and Ministry of Skill Development and Entrepreneurship in New Delhi. During the occasion, ‘Report on National Mental Health Survey’, ‘National Foundational Literacy and Numeracy Study report’ and ‘Screening Tools Mobile App for Specific Learning Disabilities – Prashast’ were launched.

8. Queen Elizabeth II, who passed away recently, was the monarch of Britain for how many years?

A. 30

B. 45

C. 60

D. 70

Answer & Explanation

Answer: D. 70

  • Queen Elizabeth II, who passed away recently at the age of 96, ascended the royal Britain throne in the year 1952. As of now, she is the longest serving monarch, who reigned for 70 years. The Queen became the UK’s longest–serving monarch in 2015, when she surpassed the record of Queen Victoria, who had ruled from 1837 to 1901. Her eldest son, Charles, succeeds her on the throne as King Charles III.

9. Which Indian state/UT hosts the Hockey Men’s World Cup 2023?

A. Tamil Nadu

B. New Delhi

C. Odisha

D. Maharashtra

Answer & Explanation

Answer: C. Odisha

  • The Hockey Men’s World Cup 2023 will take place at the Kalinga Stadium in Bhubaneshwar and at the Bisra Munda Stadium in Rourkela in January, 2023. The draw of the tournament was held recently in Bhubaneswar. Belgium is the reigning champion of the world cup, as it defeated Netherlands in 2018 to win its first ever title. The 16 participating teams, including India, Japan, England and Australia, will be divided among four pools.

10. Prime Minister inaugurated the ‘Kalam no Carnival’ Book Fair in which city?

A. Mumbai

B. Ahmedabad

C. Varanasi

D. Rameswaram

Answer & Explanation

Answer: B. Ahmedabad

  • The Prime Minister Narendra Modi addressed the inauguration ceremony of ‘Kalam no Carnival’ Book Fair organised by Navbharat Sahitya Mandir in Ahmedabad. The traditional exhibition helps in expanding the literature and knowledge of Gujarat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!