TnpscTnpsc Current Affairs

29th & 30th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

29th & 30th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th & 30th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. WTO பரிந்துரைத்தபடி, ‘National Time Release Studies (TRS)’ஐ வெளியிட்ட துறை எது?

அ) DPIIT

ஆ) CBIC 

இ) CBDT

ஈ) GDFT

  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தலைவர் விவேக் ஜோரி, துறையால் நடத்தப்படும் நேர வெளியீட்டு ஆய்வுகளின் தொகுப்பை வெளியிட்டார்.
  • TRS என்பது வர்த்தக வசதி ஒப்பந்தம் மற்றும் உலக சுங்க அமைப்பு (WCO) ஆகியவற்றின்கீழ் WTO பரிந்துரைத்தபடி, பன்னாட்டு வாணிபத்தின் சரக்கு அனுமதி செயல்முறையை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்திறன் அளவீட்டுக் கருவியாகும்.

2. ‘இரும்புக்கற்றை (Iron Beam)’ என்ற பெயரிலான புதிய லேசர் ஏவுகணை-பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்துள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) வட கொரியா

இ) இஸ்ரேல் 

ஈ) பிரான்ஸ்

  • எறிகணைகள், ஏவுகணைகள், பீரங்கி-எதிர்ப்பு எறிகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள்போன்ற பல வான்வழி பொருட்களை இடைமறித்து தாக்கும் ‘இரும்புக்கற்றை – Iron Beam’ என்ற பெயரிலான புதிய லேசர் ஏவுகணை-தற்காப்பு அமைப்பை இஸ்ரேல் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

3. 2023-ஆடவருக்கான FIH ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்துகிற இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஒடிஸா 

இ) புது தில்லி

ஈ) ஹரியானா

  • 2023 – FIH ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கியை ஒடிஸா மாநிலம் நடத்துகிறது. நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டி ஜன.13 முதல் 29 வரை புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறவுள்ளது.
  • ஒடிஸாவின் முதல்வர் நவீன் பட்நாயக் அண்மையில் FIH ஒடிஸா ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி – 2023இன் அதிகாரப்பூர்வ இலச்சினையை வெளியிட்டார். நாட்டின் மிகப்பெரிய ஹாக்கி அரங்கம் ரூர்கேலாவில் கட்டப்பட்டு வருகிறது.

4. ‘FYN’ என்ற தனது புதிய நிறுவன இணையதளத்தை அறிமுகப்படுத்திய இந்திய தனியார் துறை வங்கி எது?

அ) YES வங்கி

ஆ) பெடரல் வங்கி

இ) கோடக் மஹிந்திரா வங்கி 

ஈ) ஆக்சிஸ் வங்கி

  • கோடக் மஹிந்திரா வங்கியானது அண்மையில் வணிக வங்கியியல் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களு -க்காக பிரத்யேகமான அதன் புதிய நிறுவன இணைய தளமான ‘Kotak FYN’-ஐ அறிமுகப்படுத்தியது.
  • வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைத்து வர்த்தக மற்றும் சேவை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

5. 2022 – மால்கம் ஆதிசேஷையா விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்தியப் பொருளாதார வல்லுநர் யார்?

அ) ஜெயதி கோஷ்

ஆ) பிரபாத் பட்நாயக் 

இ) அபிஜீத் பானர்ஜி

ஈ) ஜீன் டிரேஸ்

  • நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான மால்கம் ஆதிசேஷையா விருதுக்கு மூத்த பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது மால்கம் மற்றும் எலிசபெத் ஆதிசேஷையா அறக்கட்டளையால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
  • கேரள மாநிலத்தின் திட்ட வாரியத்தின் துணைத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

6. MyGov நடத்தும், ‘சப்கா விகாஸ் மகா வினாடி-வினா’ போட்டியின் கருப்பொருள் என்ன?

அ) ஆத்மநிர்பார் பாரத் 

ஆ) அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்

இ) குடிமக்களை உணர்வூட்டல்

ஈ) MyGov உங்கள் அரசு

  • மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் உள்ள ‘MyGov’, ‘சப்கா விகாஸ் மகா வினாடி-வினா’ தொடரை ஏற்பாடு செய்கிறது. இந்திய அரசாங்கத்தின் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் மற்றும் நல்லாட்சிபற்றிய விழிப்புணர்வை குடிமக்களிடையே உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய வினாடி-வினா போட்டி இதுவாகும்.
  • PM கரீப் கல்யாண் அன்ன யோஜனா குறித்த தொடக்க வினாடி-வினாவுடன் இந்தப் போட்டி தொடங்கப்பட்டது. ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற கருப்பொருளின்கீழ் இப்போட்டி தொடங்கியது.

7. அலையன்ஸ் ஏரின் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வணிக விமானமான, ‘டார்னியர் 228’ விமானத்தைத் தயாரித்த அமைப்பு எது?

அ) DRDO

ஆ) HAL 

இ) BEL

ஈ) BHEL

  • அலையன்ஸ் ஏரின் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, ‘டார்னியர் 228’ வானூர்தியானது திப்ரூகர்-பாசிகாட் வழித்தடத்தில் தனது முதல் வணிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
  • ‘டார்னியர் 228’ விமானமானது இந்திய வான்படையால் இயக்கப்படும் ‘Do-228’ஐ அடிப்படையாகக்கொண்டது இது இந்தியாவில் HALஆல் தயாரிக்கப்பட்டது ஆகும்.

8. 2022 – உலக புவி நாளுக்கானக் கருப்பொருள் யாது?

அ) Covid and Planet

ஆ) Invest on our Planet 

இ) Sustainable Living

ஈ) No to Pollution

  • சுற்றுச்சூழலைக் காக்கவும், சேதமடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், மேலும் நிலையான வாழ்க்கையை வாழவும் மக்களை உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல்.22ஆம் தேதி அன்று உலக புவி நாள் கொண்டாடப்படுகிறது. புவி நாள், கடந்த 1970 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் முதன்முதலில் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது.
  • 2009ஆம் ஆண்டில், ஐநா அவை ஏப்ரல்.22-ஐ, ‘சர்வதேச தாய்பூமி நாள்’ என அறிவித்தது. “Invest on our Planet” என்பது இந்த ஆண்டில் வந்த உலக புவி நாளுக்கானக் கருப்பொருளாகும்.

9. மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான மின்கல மாற்ற வரைவுக் கொள்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) எரிசக்தி அமைச்சகம்

ஆ) புது & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ) NITI ஆயோக் 

ஈ) ஆற்றல் திறன் பணியகம்

  • முக்கியமாக மின்சார ஈருருளிகள் மற்றும் மூன்று சக்கர வண்டிகள் மின்சார தானிகளில் மின்கலங்களை மாற்றுவதை ஆதரிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் மதியுரையகமான NITI ஆயோக், மின்கல மாற்ற வரைவுக் கொள்கையைத் தயாரித்துள்ளது.

10. ‘பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான பிரதமரின் விருதுகள்’ எந்தெந்தப் பிரிவுகள் / நபர்களுக்கு வழங்கப்படுகின்றன?

அ) முதலமைச்சர்கள்

ஆ) மாவட்டங்கள் / செயல்படுத்தும் அலகுகள் மற்றும் மத்திய / மாநிலஞ்சார் அமைப்புகள் 

இ) முதலமைச்சர்கள் / ஆளுநர்கள்

ஈ) தலைமைப் பொறுப்புகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள்

  • குடிமைப்பணிகள் நாளையொட்டி, ‘பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான பிரதமரின் விருதுகளை’ப் பிரதமர் மோடி வழங்கினார். சாதாரண குடிமக்களின் நலனுக்காக மாவட்டங்கள் / செயல்படுத்தும் அலகுகள் மற்றும் மத்திய / மாநில அமைப்புகளால் செய்யப்பட்ட அசாதாரணமான பணிகளை அங்கீகரிக்கும் நோக்கில் இவ்விருதுகள் நிறுவப்பட்டன. இந்த ஆண்டு மொத்தம் 16 விருதுகள் வழங்கப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நீலப்புரட்சியின் திட்டத்தின்மூலம் நடப்பு நிதியாண்டில் 15 மில்லியன் டன் என்ற இலக்கை அடைய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

நீலப்புரட்சியின் திட்டத்தின்மூலம் நடப்பு நிதியாண்டில் 15 மில்லியன் டன் என்ற இலக்கை அடைய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் Dr L முருகன் தெரிவித்துள்ளார்.

மீனுற்பத்தியை அதிகரிக்கவும், கடல் & நிலப்பகுதிகளில் மீன்வளத்திற்கான அடிப்படை உட்கட்டமைப்பை உருவாக்கவும், மீன்வளம் & மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு நிதி (FIDF) திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

2. தேனி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது: இந்திய தர நிர்ணய அமைவனம்

இந்திய தர நிர்ணய அமைவனத்தால், ‘ஹால்மார்க்’ செய்வது கட்டாயமாக்கப்பட்ட பிறகு நாட்டின் 256 மாவட்டங்களில், தினமும் 3 இலட்சத்துக்கும் அதிகமான தங்கத்தலான பொருட்கள் HUID முத்திரையுடன் ஹால்மார்க் செய்யப்படுகின்றன. தற்போது 2022, ஜூன்.1 முதல் கட்டாய ஹால்மார்க் செய்வதன் 2ஆம் கட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் மேலும் 32 புதிய மாவட்டங்களில் ஹால்மார்க் செய்யும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் செயல்படுத்தப்படவுள்ளது

நுகர்வோர் வாங்கும் HUID எண்ணுடன் கூடிய ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கநகைகளின் நம்பகத் தன்மை மற்றும் தூய்மையை, பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய ‘BIS CARE’ செயலியைப் பயன்படுத்தி நுகர்வோரே சரிபார்க்கலாம் என இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. சித்த மருத்துவப் பல்கலை-க்கு முதல்வரே வேந்தர்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநிலத்தின் முதல்வர் செயல்படும் வகையில் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டப் பேரவையயில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்படவிருக்கும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநிலத்தின் முதல்வரே செயல்படும் வகையில் சட்ட மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

4. நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்: முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வழியாக நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

மேலும், கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய மூன்று இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை முதல்வர் தொடக்கி வைத்தார்.

5. சென்னையில் `10 கோடியில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம்: அமைச்சர் ஆர் காந்தி

சென்னையில் `10 கோடியில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர் காந்தி அறிவித்தார்.

இந்த வடிவமைப்பு நிலையம் இந்திய அரசு, தனியார் பங்குதாரர்கள் மற்றும் மாநில அரசிடமிருந்து நிதியைப் பெற்று கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் தோராயமாக `10 கோடி செலவில் பொது-தனியார் கூட்டாண்மை நிறுவனமாக உருவாக்கப்படும்.

சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு மற்றும் விரிவான செயல்திட்டம் `1 கோடியில் தயாரிக்கப்படும் என்றார்.

6. ராணுவ துணை தலைமைத்தளபதியாக பி எஸ் ராஜு நியமனம்

இந்திய இராணுவப் படையின் துணை தலைமைத் தளபதியாக Lt Gen பி எஸ் ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமைத் தளபதி எம் எம் நரவணேவின் பதவிக்காலம் ஏப்.30 அன்று நிறைவடைகிறது. இராணுவத்தின் அடுத்த தலைமைத்தளபதியாக Lt Gen மனோஜ் பாண்டே மே.1 பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், இராணுவத்தின் துணை தலைமைத் தளபதியாக பி எஸ் ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். மே 1-ஆம் தேதி அவர் பொறுப்பை ஏற்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி பெற்ற ஹெலிகாப்டர் விமானியான பி எஸ் ராஜு, தற்போது ராணுவ செயல்பாடுகள் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். சீனாவுடன் பதற்ற சூழல் நிலவும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ராணுவப் படைகளின் ஒட்டுமொத்த தயார்நிலையை அவரே மேற்பார்வையிட்டார்.

பிரிட்டனில் உள்ள ராயல் பாதுகாப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மேற்படிப்பை அமெரிக்காவின் மான்டெரி நகரில் உள்ள கடற்படைக் கல்லூரியில் பயின்றார். சிறந்த சேவைகளுக்காக உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிஷ்ட சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.

7. 29-04-2022 – ‘பாவேந்தர்’ பாரதிதாசன் அவர்களின் 132-ஆவது பிறந்தநாள்.

8. ‘தேனீக்கள் ரீங்காரம்’ திட்டம் இருந்தும் – 2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இரயிலில் அடிபட்டு 48 யானைகள் இறப்பு

வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் பாதைகளில் இரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரயில்களில் அடிபட்டு யானைகள் தொடர்ந்து இறக்கின்றன. இதை தடுக்க, யானைகள் உள்ள பகுதிகளில் தண்டவாளங்கள் அருகே தேனீக்கள் ரீங்காரமிடும் ஒலியை வெளியிடும் கருவிகளை இரயில்வே பொருத்தியது. தேனீக்கள் ஒலி யானைகளுக்கு பிடிக்காது என்பதால் நாட்டின் பல பகுதிகளில் ‘பிளான் பீ’ என்ற பெயரில் இத்திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

இதன்மூலம் அந்தக் கருவிகள் 600 மீட்டர் தூரம் வரை கேட்கும் அளவில் தேனீக்களின் ரீங்கார ஒலியை தொடர்ந்து எழுப்பும். அதை கேட்கும் யானைகள் தண்டவாளப் பகுதிக்கு வராமல் விலகிச் செல்லும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், இத்திட் டத்தை செயல்படுத்தியும் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 48 யானைகள் இரயில்களில் அடிபட்டு இறந்துள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இரயில்கள் மோதி 48 யானைகள், 188 மற்ற விலங்குகள் இறந்துள்ளன. அதிகபட்சமாக தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் 72 விலங்குகள் இறந்துள்ளன.

1. Which department released ‘National Time Release Studies (TRS), as recommended by WTO?

A) DPIIT

B) CBIC 

C) CBDT

D) GDFT

  • Vivek Johri, Chairman, Central Board of Indirect Taxes and Customs (CBIC), presented a set of Time Release Studies (TRS) conducted by the department.
  • TRS is a performance measurement tool for assessing the cargo clearance process of the international trade, as recommended by the World Trade Organization (WTO) under the Trade Facilitation Agreement (TFA) and the World Customs Organization (WCO).

2. Which country has successfully tested a new laser missile–defence system ‘Iron Beam’?

A) Russia

B) North Korea

C) Israel 

D) France

  • Israel has successfully tested a new laser missile–defence system ‘Iron Beam’ which can intercept several aerial objects starting from missiles, rockets, anti–tank missiles and even drones.

3. Which Indian state is the host of the FIH Hockey Men’s World Cup 2023?

A) Tamil Nadu

B) Odisha 

C) New Delhi

D) Haryana

  • Odisha is the host of the FIH Hockey Men’s World Cup 2023. The quadrennial tournament is scheduled from January 13 to 29 at Bhubaneswar and Rourkela. The state’s Chief Minister Naveen Patnaik recently unveiled official logo of FIH Odisha Hockey Men’s World Cup 2023. The country’s largest hockey stadium is being constructed in Rourkela.

4. Which Indian private sector bank launched its new enterprise portal– ‘FYN’?

A) YES Bank

B) Federal Bank

C) Kotak Mahindra Bank 

D) Axis Bank

  • ‘Kotak Mahindra Bank recently announced the launch of Kotak FYN, its new enterprise portal exclusive for business banking and corporate clients. The Bank’s Customers can use the portal to carry out all trade and services transactions.

5. Which Indian economist has been selected for the 2022 Malcom Adiseshiah Award?

A) Jayati Ghosh

B) Prabhat Patnaik 

C) Abhijeet Banarjee

D) Jean Dreze

  • Veteran economist Prabhat Patnaik has been selected for the 2022 Malcom Adiseshiah Award. The award is annually given by the Malcolm and Elizabeth Adiseshiah Trust to an exemplary social scientist. He has also served as the Vice–Chairman of the Kerala State Planning Board.

6. What is the theme of the ‘Sabka Vikas Maha quiz’ conducted by MyGov?

A) Aatmanirbhar Bharat 

B) Know Government Schemes

C) Sensitising Citizens

D) MyGov Your Gov

  • MyGov under the Ministry of Electronics and Information Technology is organising the Sabka Vikas Mahaquiz Series.
  • The country’s biggest ever Quiz Contest, which aims to build awareness amongst citizens about Government’s various developmental and welfare schemes and good governance, was recently launched with the inaugural quiz on PM Garib Kalyan Anna Yojana. It was launched with the objective of ‘Aatmanirbhar Bharat’.

7. Which organisation manufactured ‘Dornier 228 aircraft’, the first Made–in–India’ commercial plane of Alliance Air?

A) DRDO

B) HAL 

C) BEL

D) BHEL

  • Alliance Air’s made–in–India Dornier 228 aircraft has taken its first commercial flight on Dibrugarh–Pasighat route. The Dornier 228 is based on Do–228 being operated by the Indian Air Force and manufactured by HAL in India.

8. What is the theme of the ‘Earth Day 2022’?

A) Covid and Planet

B) Invest on our Planet 

C) Sustainable Living

D) No to Pollution

  • The Earth Day is celebrated annually on April 22, to sensitise people to protect the environment, restore damaged ecosystems and live a more sustainable life.
  • Earth Day has been celebrated since 1970. It was first observed in the United States. In 2009, the United Nations designated April 22 as ‘International Mother Earth Day’. This year, the theme is ‘Invest in Our Planet’.

9. Which institution has released a draft battery swapping policy for Electric Vehicles?

A) Ministry of Power

B) Ministry of New and Renewable Energy

C) NITI Aayog 

D) Bureau of Energy Efficiency

  • Government thinktank NITI Aayog has prepared a draft battery swapping policy, to support the adoption of battery–swapping, mainly in electric scooters and 3–wheeler electric rickshaw.

10. ‘Prime Minister’s Awards for Excellence in Public Administration’ are conferred on which units/personalities?

A) Chief Ministers

B) Districts / Implementing units and Central / State related Organisations 

C) Chief Ministers/ Governors

D) Non–Resident Indians in Leadership Roles

  • On the occasion of Civil Services Day, Prime Minister Narendra Modi conferred the Prime Minister’s Awards for Excellence in Public Administration.
  • They were instituted to recognize the extraordinary work done by Districts / implementing units and Central / State organisations for the welfare of common citizens. A total of 16 awards were given this year.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content