29th & 30th October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) அதிகாரங்களைக் குறைக்கும் மூன்றாவது மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. உத்தர பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

 • மாநிலத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) அதிகாரங்களைக் குறைக்கும் நாட்டின் மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரா ஆனது. CBI முகமையுடனான பொது ஒப்புதல் ஒப்பந்தத்தை அம்மாநில அரசு திரும்பப்பெற்றது. எனவே, CBI இனி தான் விசாரிக்க வேண்டிய ஒவ்வொரு வழக்கிற்கும் மகாராஷ்டிரா அரசிடம் அனுமதி பெறவேண்டும். இதேபோன்ற நடவடிக்கையை முன்னதாக இராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன.

2. சமீபத்தில், விலை கண்காணிப்பு மற்றும் வளப்பிரிவு அமைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கோவா

இ. உத்தர பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

 • தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) உதவியுடன் கோவா மாநிலத்தில் விலை கண்காணிப்பு மற்றும் வளப்பிரிவு (PMRU) அண்மையில் அமைக்கப்பட்டது. NPPA ஏற்கனவே அதன் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலை கண்காணிப்பு திட்டத்தின்கீழ் 15 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் PMRU’களை நிறுவியுள்ளது.
 • ரசாயனங்கள் & உரங்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இவ்வலகு, மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரின் நேரடி மேற்பார்வையின்கீழ் கோவா மாநில அளவில் செயல்படும்.

3. ஓர் அண்மைய ஆய்வின்படி, காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில், எந்த உயிரினத்தின் வாழ்விடங்கள் வெகுவாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது?

அ. கங்கைவாழ் ஓங்கில்

ஆ. வங்கப்புலி

இ. இமயமலை பழுப்புக்கரடி

ஈ. கானமயில்

 • இந்திய விலங்கியல் ஆய்வு அறிவியலாளர்களால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இமயமலை பழுப்புக் கரடிகுறித்த ஆய்வில், காலநிலை மாற்றம் காரணமாக அவற்றின் பொருத்தமான வாழ்விடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கணித்துள்ளனர். மேற்கிமயமலையில் பாதுகாக்கப்பட்ட பகுதி வலையமைப்பின் தகவமைப்புத் திட்டத்தை பரிந்துரைக்கவும், இமயமலை பழுப்புக்கரடி இனங்களை (Ursus arctos isabellinus) பாதுகாக்கவும் இந்த ஆய்வு அறிவியலாளர்களை வலியுறுத்தியுள்ளது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தரங் சுபோஷித் மகாராஷ்டிரச்சா’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. கல்வி

ஆ. ஊட்டச்சத்து

இ. விளையாட்டு

ஈ. தொழிற்சாலை

 • பாலூட்டும் தாய்மார்கள் & சிறார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்திசெய்வதற்காக மகாராஷ்டிர மாநிலம் அண்மையில், ‘தரங் சுபோஷித் மகாராஷ்டிரச்சா’ என்ற தளத்தை திறந்துள்ளது. இந்தத் தளம், அளவளாவும் குரல்வழி மறுமொழி முறையை அடிப்படையாகக் கொண்டது. மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்ட, ‘போஷான் மா’வில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருந்தது.

5. Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் செவ்வாய் கோள் சுற்றுக்கலன் திட்டமாகும்?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. இரஷ்யா

 • Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) என்பது கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, செவ்வாய் கோள் சுற்றுக்கலன் திட்டமாகும். இது, செவ்வாய் கோளின் மேல்வளிமண்டலம் மற்றும் அயனி மண்டலத்தை ஆராய்கிறது. ISRO’இன் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம் & NASA’இன் MAVEN அனுப்பிய தரவு மற்றும் படங்கள் குறித்த அண்மைய ஆய்வின்படி, சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களுடன் ஒப்பிடும்போது செவ்வாயானது அதன் வளிமண்டலத்தை வேகமாக இழந்துவருகிறது.

6. ஜோகிந்தர் போர் நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட பம் லா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. கேரளா

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. கர்நாடகா

 • இந்திய இராணுவம் அண்மையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பம் லாவில் ஜோகிந்தர் போர் நினைவுச்சின்னத்தின் திறப்புவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. 1962ஆம் ஆண்டில் டோங்பென் லா (பம் லா) போர் நடந்த அக்.23 அன்று இந்த விழா நடைபெற்றது.
 • சீக்கிய படைப்பிரிவில் பணியாற்றிய ஜோகிந்தர் சிங்குக்கு, அவரது மறைவுக்குப்பிறகு, வீரதீரச்செயல் புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகவுயரிய ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. கடந்த 1962ஆம் ஆண்டு நடந்த சீன-இந்திய போரின்போது அவர் தனது இன்னுயிரைத் தியாகஞ்செய்தார்.

7. ‘The world’s women 2020: Trends & Statistics’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. ஐக்கிய நாடுகள்

இ. உலக வங்கி

ஈ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

 • ஐக்கிய நாடுகள் அவையானது ’The World’s Women 2020: Trends and Statistics’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. உலகளவில் பாலின சமத்துவத்தின் நிலையை மதிப்பிடுதற்கு இது 100 தரவுக்கதைகளைத் தொகுக்கிறது. இவ்வறிக்கையின்படி, உழைக்கும் வயதுடை பெண்களுள் 50 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே தொழிலாளர் சந்தையில் உள்ளனர். நூற்றாண்டின் கடைசி காலாண்டிலிருந்து இதே நிலைதான் நீடித்து வருகிறது. COVID-19 கொள்ளைநோய் பெண்களின் பணி மற்றும் வாழ்வாதாரங்களை கூடுதலாக பாதிக்கிறது என்பதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

8. “அணுவாயுதங்களை தடைசெய்வதற்கான ஐநா ஒப்பந்தம்” எப்போது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

அ. டிசம்பர் 2020

ஆ. ஜனவரி 2021

இ. மார்ச் 2021

ஈ. டிசம்பர் 2021

 • அணுவாயுதங்களை தடைசெய்வதற்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தம் 20 செப்டம்பர் 2017 அன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கையொப்பமிட திறக்கப்பட்டது. 50 நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன், அது நடைமுறைக்கு வரும். ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் 50 நாடுகள் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், 2021 ஜனவரி மாதத்திற்குள் 90 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கேங்டாக் – நாதுலா மாற்று சீரமைப்புச்சாலை’யை உருவாக்கிய அமைப்பு எது?

அ. லார்சன் & டூப்ரோ

ஆ. எல்லைபுறச் சாலைகள் அமைப்பு

இ. தளவாடங்கள் தொழிற்சாலை வாரியம்

ஈ. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

 • மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், ‘கேங்டாக் – நாதுலா மாற்று சீரமைப்புச் சாலை’யைத் திறந்து வைத்தார். இச்சாலையை சிக்கிமில் இராணுவத்தின் எல்லைபுறச் சாலைகள் அமைப்பு (BRO) உருவாக்கியுள்ளது. டார்ஜிலிங்கில் இருந்து மெய்நிகர் முறையில் இந்தச் சாலை திறந்து வைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை-310’இல் 19.35 கிமீ நீளமுள்ள இந்த மாற்று வழி கேங்டாக்கை ‘நாது லா’ உடன் இணைக்கிறது.

10. இந்திய வம்சாவளியைச் சார்ந்த வேவெல் ராம்கலவன், எந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. பாகிஸ்தான்

ஆ. இலங்கை

இ. இந்தோனேசியா

ஈ. சீஷெல்ஸ்

 • இந்திய வம்சாவளியைச் சார்ந்த வேவெல் ராம்கலவன், அண்மையில் சீஷெல்ஸின் அதிபராக தேர்ந்தெ -டுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர், 1977’க்குப் பிறகு முதல்முறையாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் அதிபர் பதவியை ஏற்றுக்கொள்கிறார். முப்பதாண்டுகளாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் ஆங்கில பாதிரியாரான வேவெல் ராம்கலவன், தற்போதைய அதிபரான டேனி பாரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

1. Which state became the third State to curtail the Central Bureau of Investigation’s (CBI) powers?

[A] Tamil Nadu

[B] Maharashtra

[C] Uttar Pradesh

[D] Madhya Pradesh

 • Maharashtra became the third state in the country to curtail the Central Bureau of Investigation’s (CBI) powers in the state. The state withdrew its general consent agreement with the CBI agency. Hence forth CBI has to seek permission from the Government of Maharashtra for every case it has to investigate. A similar move was earlier done by Rajasthan and West Bengal.

2. A Price Monitoring and Resource Unit has been recently set up in which Indian state?

[A] Tamil Nadu

[B] Goa

[C] Uttar Pradesh

[D] Madhya Pradesh

 • A price monitoring and resource unit (PMRU has been recently set up in Goa, under the aegis of the National Pharmaceutical Pricing Authority (NPPA). NPPA has already established PMRUs in 15 states/ UTs, under its Consumer Awareness, Publicity and Price Monitoring (CAPPM) scheme. As per the Ministry of Chemicals and Fertilizers, the unit will function at the state level under the direct supervision of the state drug controller.

3. As per a recent study, the habitat of which species has been estimated to decline by 2050, due to climate change?

[A] Gangetic Dolphin

[B] Bengal Tiger

[C] Himalayan Brown Bear

[D] Great Indian Bustard

 • A recent study on the Himalayan brown bear by scientists of Zoological Survey of India, has forecast that there is a decline in their suitable habitat, due to climate change. The study has urged scientists to suggest an adaptive planning of protected area network in the western Himalayas, to conserve the Himalayan brown bear species (Ursus arctos isabellinus).

4. ‘Tarang Suposhit Maharashtracha’, a scheme that was seen in news recently, is associated with which field?

[A] Education

[B] Nutrition

[C] Sports

[D] Industries

 • Maharashtra has recently inaugurated the platform named ‘Tarang Suposhit Maharashtracha’, to fulfil the nutritional requirements of lactating mothers and children in the state. The platform is based on the interactive voice response system. The platform also aims to create awareness about the nutritional requirements of women and children in the state. The state stood first in the ‘Poshan Mah’ observed this year.

5. Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) is the Mars orbiter mission of which country?

[A] India

[B] United States of America

[C] United Arab Emirates

[D] Russia

 • Mars orbiter Mars Atmosphere and Volatile Evolution (Maven) is the Mars orbiter mission launched in the year 2013, to investigate the upper atmosphere and ionosphere of Mars. As per a recent study of data and images sent by ISRO’s Mars Orbiter Mission (MOM) and NASA’s MAVEN, Mars is losing its atmosphere to outer space at a faster rate, when compared to other terrestrial planets in the solar system.

6. Bum La, where the Joginder War Memorial has been inaugurated, is located in which state?

[A] Sikkim

[B] Kerala

[C] Arunachal Pradesh

[D] Karnataka

 • Indian Army has recently organised the Inauguration Ceremony of Joginder War Memorial at Bum La, in Arunachal Pradesh. The ceremony was held on October 23, the same day on which the Battle of Tongpen La (Bum La) took place in 1962.
 • Joginder Singh, who served in the Sikh Regiment, posthumously received the highest gallantry award, ‘Param Vir Chakra’ for his sacrifice during the 1962 Sino– India War.

7. Which organisation released a report titled ‘The World’s Women 2020: Trends and Statistics’?

[A] World Economic Forum

[B] United Nations

[C] World Bank

[D] International Monetary Fund

 • The United Nations has launched a report titled ‘The World’s Women 2020: Trends and Statistics’. It compiles 100 data stories to assess the state of gender equality worldwide. As per the report, less than 50% of working–age women are in the labour market. This has been the same since the last quarter of the century. The report also reveals that COVID–19 pandemic additionally affects women’s jobs and livelihoods.

8. When is the “UN treaty to ban nuclear weapons” expected to come in force?

[A] December 2020

[B] January 2021

[C] March 2021

[D] December 2021

 • The United Nations Treaty on Prohibition of Nuclear Weapons was opened for signature at United Nations headquarters on 20th September 2017. Once 50 countries have ratified or acceded to it, it will enter into force. The United Nations announced recently that 50 countries have ratified the treaty and would come into force within 90 days, by January 2021.

9. Which organisation constructed the ‘Alternate Alignment Gangtok – Nathula Road’, which was seen in news?

[A] Larsen and Toubro

[B] Border Roads Organisation

[C] Ordnance Factory Board

[D] National Highways Authority of India

 • The Union Defence Minister Rajnath Singh inaugurated ‘Alternate Alignment Gangtok – Nathula Road’. The road has been constructed by the Army’s Border Roads Organisation (BRO) in Sikkim.
 • The road was inaugurated by virtual means from Darjeeling. BRO has constructed the 19.35 km long alternate route of National Highway–310, which connects Gangtok to ‘Nathu La’.

10. Indian origin Wavel Ramkalawan has been elected as the President of which country?

[A] Pakistan

[B] Sri Lanka

[C] Indonesia

[D] Seychelles

 • Indian Origin Wavel Ramkalawan, has been recently elected as the President of Seychelles. He belongs to the opposition party and it is the first time since 1977 that a person from opposition is assuming the office of President. Ramkalawan, a former Anglican Priest, defeated incumbent Danny Faure after three decades of unsuccessful runs for the Presidency.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *