Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

29th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

29th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைந்து ‘காலநிலை & தூய ஆற்றல் நிகழ்ச்சிநிரல் 2030 கூட்டணி’யை தொடங்கியுள்ளது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) ஜெர்மனி

இ) பிரான்ஸ்

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் ஜோ பைடன் கூட்டிய காலநிலை மாற்றம் குறித்த மெய்நிகரான உச்சிமாநாட்டின்போது, இந்தியாவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இணைந்து பசுமை ஒத்துழைப்பு குறித்த “நிகழ்ச்சி நிரல் 2030” கூட்டணியைத் தொடங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
  • “இந்தியா-அமெரிக்கா காலநிலை மற்றும் தூய ஆற்றல் நிகழ்ச்சி நிரல் 2030 கூட்டாண்மை”, காலநிலை மாற்றத்தை எதிர்த்து விரைவாகவும், உலக அளவில் பெருமளவிலும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் போன்ற பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

2. வேதி ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் வெளியக தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) வெங்கையா

ஆ) G C முர்மு

இ) இராஜேஷ் குமார்

ஈ) S A பாப்டே

  • வேதி ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பின் வெளியக தணிக்கையாளராக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி G C முர்மு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாண்டு காலத்திற்கு இப்பதவியில் பணியாற்றுவார். வெளியக தணிக்கையாளராக அவரது பதவிக்காலம் நடப்பு 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
  • வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு என்பது நெதர்லாந்தின் தி ஹேக் நகரத்தில் அமைந்துள்ள பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும்.

3. பின்வரும் எந்தத் திட்டத்தின்கீழ், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏழைகளுக்கு, இந்திய அரசாங்கம், இலவச உணவு தானியங்களை வழங்கவுள்ளது?

அ) பிரதமர் ஜன் தன் யோஜனா

ஆ) பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா

இ) பிரதமர் முத்ரா யோஜனா

ஈ) பிரதமர் ஆத்மா நிர்பார் கல்யாண் யோஜனா

  • மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏழை எளியோருக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதை மீண்டும் தொடங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. PDS பயனாளிகளுக்கு ஐந்து கிலோ கூடுதல் உணவு தானியங்கள், PMGKAY’இன்கீழ் மே & ஜூன் ஆகிய இரு மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளன. ஆனால், இம்முறை, பருப்புவகைகள் ஏழைகளுக் -கு வழங்கப்படமாட்டாது. ஏழை எளிய மக்கள், தொற்றுநோய் காலத்தை கையாளுவதற்காக, PMGKAY திட்டம் அறிவிக்கப்பட்டது.

4. ITUஆல் நடப்பாண்டுக்கான (2021) “பன்னாட்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்கள்” நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?

அ) ஏப்ரல் 21

ஆ) ஏப்ரல் 22

இ) ஏப்ரல் 23

ஈ) ஏப்ரல் 24

  • பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியமானது (ITU) ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வரும் நான்காவது வியாழக்கிழமை அன்று பன்னாட்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழினுட்பத்தில் பெண்கள்” நாளை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, ஏப்ரல்.22 அன்று, அந்நாளின் 10ஆவது ஆண்டு நிறைவை “Connected Girls; Creating Brighter Futures” என்ற கருப்பொருளுடன் அது கொண்டாடியது.
  • பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியமானது ஐநா அமைப்பின் சிறப்பு நிறுவனமாகும். அது ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

5. சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, பின்வரும் எந்த இரு நாடுக -ளுடன் இணைந்து ஜப்பான் தனது முதல் கூட்டு இராணுவப் பயிற் -சியை மேற்கொள்ளவுள்ளது?

அ) இந்தியா மற்றும் அமெரிக்கா

ஆ) அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்

இ) ரஷியா அமெரிக்கா

ஈ) ரஷியா மற்றும் பிரான்ஸ்

  • மண்டல நீரில் சீனாவின் எல்லைமீறிய நடவடிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா (US) மற்றும் பிரெஞ்சு துருப்புக்களுடன் இணைந்து ஜப்பான் தனது முதல் கூட்டு இராணுவப்பயிற்சியை நடத்தவுள்ளது. இந்தப்பயிற்சி மே 11-17 வரை நடைபெறும். இது மூன்று நாடுகளின் தரைப்படைகளை உள்ளடக்கிய முதல் மிகப்பெரிய அளவிலான பயிற்சியாகும். இப்பயிற்சி, 3 நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும்.

6. வளரும் நாடுகளின் காலநிலை நிதியை இரட்டிப்பாக்க, ‘சர்வதேச காலநிலை நிதித் திட்டத்தை’ அறிவித்த நாடு எது?

அ) சீனா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ஜெர்மனி

ஈ) பிரான்ஸ்

  • அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், “அமெரிக்க சர்வதேச காலநிலை நிதி திட்டத்தை” வெளியிட்டார். பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கு ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில். நாட்டின் காலநிலை நிதியை இரட்டிப்பாக்கும் என்று அவர் அறிவித்தார். புதிய காலநிலை நிதி திட்டம், 2005ஆம் ஆண்டின் வாயு உமிழ்வை ஒப்பிடும்போது அதிலிருந்து 50% -52% பைங்குடில் வாயு உமிழ்வை குறைக்கும் புதிய குறிக்கோளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

7. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, அன்னபூர்ணா மலைச்சிகரம் அமைந்துள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) நேபாளம்

இ) வங்காளதேசம்

ஈ) சீனா

  • இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலைத்தொடர் வடக்கு மத்திய நேபாளத்தில் அமைந்துள்ளது. இது உலகின் பத்தாவது மிகவுயரமான (8000 மீ) மலைச்சிகரமாகும். சமீபத்தில், மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த பிரியங்கா மோகித், இம்மலைச்சிகரத்தை அடைந்த முதல் இந்தியப்பெண்மணி என்ற பெருமையைப்பெற்றார். அவர், ஏற்கனவே எவரெஸ்ட் மலைச்சிகரம் உட்பட பல சிகரங்களை அடைந்துள்ளார்.

8. கைவிடப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, ‘ஹரிஹர்’ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) உத்தர பிரதேசம்

இ) ஹரியானா

ஈ) பஞ்சாப்

  • ஹரியானா மாநில அமைச்சரவையானது ‘ஹரிஹர்’ – வீடற்ற கைவிடப் -பட்ட மற்றும் சரணாகதி அடைந்த சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முன்னெடுப்புக்கு ஹரியானா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
  • ஐந்து அகவைக்குக்கீழ் கைவிடப்பட்டிருந்தாலோ அல்லது ஒரு அகவை முடியும் முன்னரோ சரணாகதி அடைந்த சிறார்களுக்கு அவர்களின் 25 அகவை வரை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவி அளிக்கப்படும். திருமணத்திற்கும் உதவி வழங்கப்படும்.

9. மனித உடலின் ஒத்த மாதிரியாக செயல்படும் பல்வேறு உயிரணு வகைகளைக்கொண்ட மனித உறுப்புகளின் சிறிய மாதிரிகளுக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன?

அ) உடல் மாதிரிகள்

ஆ) திசு சில்லுகள்

இ) செல் மாதிரிகள்

ஈ) திசு மரபணுக்கள்

  • ‘திசு சில்லுகள்’ மனித உறுப்புகளின் சிறிய மாதிரிகள் ஆகும்; அவை, மனிதவுடலுக்கு ஒத்ததாக செயல்படும் பல்வேறு உயிரணு வகைகளை கொண்டுள்ளன. வர்த்தக குழு திட்டத்தின்கீழ், NASA மற்றும் ஸ்பேஸ் X இடையேயான ஒத்துழைப்பின் ஒருபகுதியாக 4 விண்வெளி வீரர்கள் சமீபத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். விண்வெளி ஆய்வுகளில் திசு சில்லுகளின் பயன்பாடு குறித்து ஆராய்வ -தில் அவர்கள் கவனம் செலுத்துவர்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘இ-2025 முன்னெடுப்பு’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) பருவநிலை மாற்றம்

ஆ) மலேரியாவை ஒழித்தல்

இ) நிதியியல் தொழில்நுட்பம்

ஈ) ஊட்டச்சத்து

  • உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தனது ‘E-2025 முன்னெடுப்பின்’கீழ் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்கும் திறனுடன் 25 நாடுகளை அடையாளம் கண்டுள்ளது. மலேரியா ஒழிப்பு தொடர்பான WHO-ஜீரோயிங்கின் புதிய அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூன்று நாடுகள் உட்பட இந்த 25 நாடுகளும், மலேரியா மற்றும் COVID-19 ஆகிய இரட்டை அச்சுறுத்தலுக்காகவும் செயல்பட வேண்டியிருக்கும்.
  • இந்த நாடுகளுக்கு உலக நலவாழ்வு அமைப்பு தனது ஆதரவு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. போர் தேவையில்லை!

COVID பெருந்தொற்றை வீழ்த்த போர் எதையும் நடத்தத் தேவையில்லை. மாறாக, முகக்கவசம் – சமூக இடைவெளி – கை தூய்மை ஆகியவற்றை மக்கள் கடைப்பிடித்தாலே போதுமானது. கரோனா தீநுண்மியிடம் மட்டும் தீண்டாமை கொண்டால் மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ வழி கிடைக்கும். அதற்கு வீட்டிலிருந்தாலும் வெளியில் சென்றாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்றினால் COVID தீநுண்மி மனிதகுலத்தை நெருங்காது.

குறிப்பாக, ஏதேனும் பொருளையோ (அ) இடத்தையோ தொடநேர்ந்தால், உடனே சோப்பினால் கைகளைக் கழுவிக்கொள்ளவேண்டும். வெளியிடங்களில் இருக்கும்போது சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொள்ளலாம். சானிடைசர் இல்லையென்றாலும், சாதாரண சோப்பின்மூலம் கைகளைக் கழுவினாலே கரோனாவை விரட்டியடிக்க முடியும்.

மனிதனிடமிருந்து பிரிக்க முடியாத ஓர் உறுப்பாகவே தற்போது திறன்பேசி மாறியுள்ளது. அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதுவே கரோனாவைப் பரப்பும் காரணியாக மாறக்கூடும் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, கடைகளுக்கும், பிற இடங்களுக்கும் செல்ல நேர்ந்தால், திறன்பேசியைத் தவிர்ப்பது நல்லது.

நல்ல காற்றோட்டம் கரோனா பரவலைத் தடுக்கும்; குறைக்கும். அதனால், வீடுகளில் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். சூரிய ஒளியும், சுத்தமான காற்றும் வீட்டுக்குள் வரவேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்களாகவே இருந்தாலும் அரட்டை, நெருக்கம், நெரிசல் பாராட்டுவது நமக்குப் பகை. கவசம், காற்று, தொலைவு, தூய்மை ஆகியவை மட்டுமே நமக்கு நன்மைதரும். COVID தீநுண்மி குறித்த விழிப்புணர்வே நோய்த்தடுப்பின் முதல் ஆயுதம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நமது உயிர்க்கவசம்

முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும். மூக்கையும் வாயையும் மூடவேண்டும். இறுக்கமாக இல்லாமல் முகக்கவசம் சற்றே தளர்வாக இருப்பது நல்லது.

2. பெண் காவலர்களுக்கு ‘குறைதீர்க்கும் மனுபெட்டி’ திட்டம் தொடக்கம்

சென்னை காவல்துறையில் பணிபுரியும் பெண்காவலர்களுக்காக, ‘குறை தீர்க்கும் மனுபெட்டி’ என்ற திட்டத்தை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடக்கிவைத்தார்.

3. தேஜஸ் போர் விமானத்தில் ‘பைத்தான்-5’ ஏவுகணை இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தேஜஸ் இலகு இரக போர் விமா -னத்தில் வானிலிருந்தபடி வானிலக்கை துல்லியமாகத் தாக்கியழிக்கும் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஏவுகணையான ‘பைத்தான்-5’ ஏவுகணையை ஏந்திச்செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

‘பைத்தான்-5’ ஏவுகணையுடன் போர் விமானத்தின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் வகையில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரி -வித்தனர். இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தில் ஏற்கனவே ‘டெர்பி’ ஏவுகணை இணைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்கையும் மிக வேகமாகச்சென்று துல்லியமாகத் தாக்கியது. அதனைத் தொடர்ந்து ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பைத்தான்-5 ஏவுகணையும் அதில் இணைக்கப்பட்டு கோவாவில் பரிசோதிக்கப்பட்டது. மிகவும் கடினமான சூழல்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், தேஜஸ் போர் விமானம் வானிலிருந்தபடி அனைத்து இலக்குகளையும் 100 சதவீதம் துல்லியமாக வான் இலக்கை தாக்கி அழித்தது. அதனடிப்படையில், பைத்தான்-5 ஏவுகணையும் தேஜஸ் விமானத்தில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் நடத்தப்பட்ட இப்பரிசோதனைக்கு முன்பாக, போர் விமானம் ‘பைத்தான்-5’ ஏவுகணையை தாங்கிச்செல்லும் திறன்குறித்து பெங்களூ -ரில் சோதனை செய்யப்பட்டது.

வானில் ஏற்படும் உயர் அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொள்ளும் திறன் படைத்த தேஜஸ் போர் விமானம் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் விமானம் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டதாகும். கடந்த பிப்ரவரியில் ஹெச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து `48,000 கோடியில் 83 தேஜஸ் இலக இரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

4. 17 நாடுகளில் இந்திய வகை கரோனா கண்டுபிடிப்பு: உலக சுகாதார அமைப்பு

இந்திய வகையைச் சேர்ந்த இருமுறை உருமாறிய கரோனா தீநுண்மி, பதினேழு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த வாரம் மேலும் 57 இலட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல இலட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு B.1.617 என்ற வகையைச் சேர்ந்த இந்திய வகை கரோனா தீநுண்மி காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், உலக நலவாழ்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட -து. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஏப்.27 வரை, 17 நாடுகளில் இருந்து 1,200 முறை B.1.617 வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து அதிகம் இந்த வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பரவும் மற்ற வகை கரோனா தீநுண்மிகளைவிட B.1.617 வகை தீநுண்மி வேகமாக வளர்ந்து பரவும் தன்மைகொண்டது.

இதனால்தான் இந்தியாவில் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், பொதுசுகாதார விதிகளைப்பின்பற்றாமல் இருப்பது, கரோனா நெறிமுறைக -ளைப் பின்பற்றாமல் தேர்தல், திருவிழா, கலாசார நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றாகக் கூடுவதும் கரோனா பரவலுக்கு காரணமாக இருக்கலாம். இவை தொடர்பாக மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. மத்திய நிதித்துறை செயலராக டி வி சோமநாதன் நியமனம்

மத்திய நிதித்துறை செயலராக தமிழ்நாடு பிரிவு இ ஆ ப அதிகாரி டி வி சோ -மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டின் தமிழக பிரிவு இஆப அதிகாரியான டி வி சோமநாதன் மத்திய நிதியமைச்சகத்தின் செல -வினத்துறை செயலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவர் மத்தி -ய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சகத் -தில் உள்ள செயலர்களில் மிக மூத்த அதிகாரி நிதித்துறை செயலராக நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

6. சுங்கத்துறை குற்றங்களைத் தடுக்க பிரிட்டனுடன் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுங்கத்துறை தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் பிரிட்டனுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதவது: பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரிட்டன், வட அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் சுங்கத்துறை விவகாரங்களில் பரஸ் -பர நிர்வாக உதவி, ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு ஒப்பந்தம் மேற்கொ -ள்ளவும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுங்கத்துறை தொடர்பான குற்றங்களைத் தடுப்பதிலும், அவற்றை விசாரிப் -பதிலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். மேலும், இருநாட்டு சுங்கத்துறை நிர்வாகத்துக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு சட்டரீதியிலான வழிமுறையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தித் தரும். நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் விரைவில் ஒப்புதல் கிடைக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. கீழடி ஏழாம்கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகளிலிருந்து பானைகள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகைப் பகுதியில் கிடைத்த 2600 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளிலிருந்து குறியீடுகளுடன் கூடிய பானைகள் கண்டெடுக்கப்பட்டன. கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஏழாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்.13ஆம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

அப்போது கொந்தகையில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு ஏழு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 3 மற்றும் நான்காம் எண்கொண்ட முதுமக்கள் தாழிகளில் இருந்த பொருள்கள் ஆய்வுக்காக வெளியே எடுக்கப்பட்டன. மூன்றாம் எண்கொண்ட தாழி முழுமையாக கிடைத்ததால் அதற்குள் மனித எலும்புகள், பானைகள் மற்றும் இரும்பு ஆயுதம் உள்ளிட்ட -வை இருந்தன. இதில் சிறிய வடிவிலான பானைகளில் ஒரேமாதிரியான குறியீடுகள் காணப்படுகின்றன. இது உணவுப்பாத்திரம் (அ) குவளையாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

19 செமீ விட்டமுள்ள ஓர் உணவுப் பாத்திரத்தின் உயரம் 4.5 செமீ உள்ளது. மற்றொரு பாத்திரம் 14 செமீ விட்டமும், 16 செமீ உயரமும் உள்ளது. மற்றொ -ரு பாத்திரம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. 3 குறியீடுகளும் எதனைக் குறிக்கிறது என்பது குறித்து அடுத்த கட்ட ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் 42 குழிகளில் 39 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றிலிருந்து 20 எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டன. இதில் சிலவற்றில் இதுபோன்ற பாத்திரங்கள் இருந்தன. ஆனால் அதில் குறியீடுகள் எதுவும் காணப்படவில்லை.

ஏழாம்கட்ட அகழாய்வில் இதுவரை வெளியே எடுக்கப்பட்டுள்ள 2 முதுமக்க -ள் தாழிகளிலும் குறியீடுகளுடன் பாத்திரங்கள் கிடைத்துள்ளது குறிப்பிட -த்தக்கது. மேலும் ஆறாம்கட்ட அகழாய்வில் வெளியே எடுக்கப்பட்ட எலும்பு -க்கூடுகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் லக்னோவில் உள்ள பீர்பால் ஷாகினி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்ஸ் ஆய்வு கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளது.

ஆனால் வடமாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அந்த ஆய்வகம் மூடப்பட்டு, அது கரோனா வார்டாக மாற்றப்பட்டு -ள்ளதாக கூறப்படுகிறது. எனவே எலும்புகளின் DNA பரிசோதனை முடிவு -கள் வருவதில் அதிக காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

8. 2020’இல் இராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம்

கடந்த 2020ஆம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ உள்ளது.

உலகளாவிய இராணுவ செலவினம் மற்றும் ஆயுத வர்த்தகத்தை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. உலக நாடுகளின் இராணுவ செலவினம் தொடர்பான இதன் சமீபத்திய அறிக்கை வெளியானது. இதன்படி கடந்த 2020ஆம் ஆண்டில் இராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த இராணுவ செலவில் அமெரிக்காவின் பங்கு 39 சதவீதமாக உள்ளது. இதையடுத்து சீனாவின் பங்கு 13 சதவீதமாகவும் இந்தியாவின் பங்கு 3.7 சதவீதமாகவும் உள்ளது.

அமெரிக்கா தனது இராணுவத்துக்கு கடந்த 2020’ல் 77,800 கோடிடாலர் செலவிட்டுள்ளது. சீனா 25,200 கோடி டாலரும் இந்தியா 7,290 கோடி டாலரும் செலவிட்டுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டில், கரோனா வைரஸ் பரவல் இருந்தாலும் இந்த மூன்று நாடுகளும் முந்தையை ஆண்டைவிட கூடுதலாக இராணுவத்துக்கு செலவிட்டுள்ளன. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட்டுள் -ளது. சீனா 1.7 சதவீதமும் இந்தியா 2.9 சதவீதமும் செலவிட்டுள்ளன.

2011-2020 வரை அமெரிக்க இராணுவ செலவு 10% குறைந்துள்ளது. ஆனால் சீனாவின் ராணுவ செலவு 76 சதவீதமும் இந்தியாவின் ராணுவ செலவு 34 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் இராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து, ரஷியா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. 2020’ல் உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவு முந்தைய ஆண்டைவிட 2.6% அதிகரித்துள்ளது. முதல் ஐந்து நாடுகளின் இராணுவ செலவு, மொத்த இராணுவ செலவில் 62 சதவீதமாக உள்ளது.

1. India launched a “Climate and Clean Energy Agenda 2030 Partnership”, with which country?

A) Australia

B) Germany

C) France

D) USA

  • During the virtual summit on climate change convened by US President Joe Biden, India Prime Minister Narendra Modi announced that India and the US are launching an “Agenda 2030” partnership on green collaborations. “India–US Climate and Clean Energy Agenda 2030 Partnership”, aims to implement actions at high speed and on a large scale globally, to combat climate change.
  • The summit was attended by various country leaders like Chinese President Xi Jinping, his Russian counterpart Vladimir Putin etc.

2. Who has been selected as the external auditor to the Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW)?

A) Venkaiah Naidu

B) GC Murmu

C) Rajesh Kumar

D) SA Bobde

  • The Comptroller and Auditor General (CAG) GC Murmu has been selected as the external auditor of Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW). He would serve the position for a term of three years. His term as an external auditor commences from the year 2021.
  • OPCW is an intergovernmental organisation and the implementing body for the Chemical Weapons Convention, which is headquartered in The Hague, Netherlands.

3. The Indian government is to provide free food grains to the poor in May and June under which scheme?

A) PM Jan Dhan Yojana

B) PM Garib Kalyan Anna Yojana

C) PM Mudra Yojana

D) PM Atma Nirbhar Kalyan Yojana

  • The Indian Government has decided to resume providing free food grains to the poor in May and June. The 5–kg additional food grains to PDS beneficiaries are to be provided under the PMGKAY for two months – May and June. But this time, pulses are not being provided to the poor. PMGKAY was announced to help poor people tackle the pandemic.

4. When was the 2021 International Girls in ICT Day observed by ITU?

A) April 21

B) April 22

C) April 23

D) April 24

  • Every year, the International Telecommunication Union (ITU) celebrates the fourth Thursday of April as the International Girls in ICT Day. This year, 22nd April marked the 10th Anniversary of the day and was observed with the theme Connected Girls; Creating Brighter Futures.”
  • The International Telecommunication Union is an UN specialized agency and is headquartered in Geneva.

5. Japan is set to hold its first joint military drill with which two countries against China’s aggression?

A) India and US

B) US and France

C) Russia and US

D) Russia and France

  • Japan is set to hold its first joint military drill with the US and French troops, amidst the increased actions of China in the regional waters. The exercise would be held from May 11 to 17 and will be the first large–scale exercise in Japan involving ground troops from all three countries. The exercise also would deepen the Defence cooperation between the three countries.

6. Which country announced the “International Climate Finance Plan”, to double climate finance to developing countries?

A) China

B) USA

C) Germany

D) France

  • The United States President Joe Biden unveiled the “US International Climate Finance Plan”. He announced that the country would double public climate finance to help poor countries reduce greenhouse gas emissions. The new climate finance plan has been released in lines with a new goal to cut emissions by 50%–52% from 2005 levels.

7. ‘Mt Annapurna’, which was making news recently, is located in which country?

A) India

B) Nepal

C) Bangladesh

D) China

  • The Annapurna Mountain Range in the Himalayas is located in north–central Nepal. It is the tenth highest mountain peak in the world, which includes a peak over 8000 metres.
  • Recently, Priyanka Mohite from Satara in Maharashtra became the first Indian woman to scale Mt Annapurna. She had earlier summitted several peaks including Mt Everest.

8. Which state launched the ‘HARIHAR’ policy, for Rehabilitation of abandoned children?

A) Bihar

B) Uttar Pradesh

C) Haryana

D) Punjab

  • The Haryana Cabinet approved HARIHAR– Homeless Abandoned and Surrendered Children Rehabilitation Initiative Haryana Policy. The children abandoned when below 5 years of age and surrendered before turning one–year–old will be eligible for benefits of education, employment, and financial support, up to the age of 25 years or marriage.

9. What is the name given to small models of human organs that contain multiple cell types that behave similarly to the human body?

A) Body models

B) Tissue Chips

C) Cell Models

D) Tissue Genes

  • Tissue Chips are small models of human organs that contain multiple cell types that behave similarly to the human body. Four astronauts were recently launched to the International Space Station (ISS) as part of a collaboration between NASA and SpaceX under the Commercial Crew Program. Their prime focus during this time will be to carry out a series of Tissue Chips in Space studies.

10. ‘E–2025 Initiative’, which was making news recently, is associated with which field?

A) Climate Change

B) Eradication of Malaria

C) Fintech

D) Nutrition

  • The World Health Organization (WHO) has identified 25 countries, with the potential to eradicate malaria by 2025 under its ‘E–2025 Initiative’. As per a new report of the WHO–Zeroing in on malaria elimination, these 25 countries including three from Africa will have to work by responding to the dual threat of malaria and COVID–19. The WHO will provide support and technical guidance to these countries.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!