29th August 2020 Current Affairs in Tamil & English

29th August 2020 Current Affairs in Tamil & English

29th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

29th August 2020 Current Affairs Pdf Tamil

29th August 2020 Current Affairs Pdf English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.மேற்கு நைல் காயச்சலுக்கு காரணமான மேற்கு நைல் வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்துள்ள நாடு எது?

அ. ஜெர்மனி

ஆ. ஸ்பெயின்

இ. உகாண்டா

ஈ. இஸ்ரேல்

 • மேற்கு நைல் வைரஸ் கொசுக்களால் பரவுவதாக ஸ்பெயின் நாடு அண்மையில் அறிவித்துள்ளது. இது, கொசுக்களால் பரவி மேற்கு நைல் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. ஸ்பெயினில் இருவரின் மரணத்திற்கு இது காரணமாகியுள்ளது. மேலும் பலர் இந்நோயால் பாதிப்புற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது முதலில், உகாண்டாவில், 1937’இல் கண்டறியப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும் இது. இந்த RNA வைரஸ், ‘Flaviviridae’ குடும்பத்தைச் சார்ந்ததாகும். அக்குடும்பத்தில் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல் வைரஸ் மற்றும் டெங்கு வைரஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.

2.கடலோரக்காவல்படையின் சேவையில் இணைக்கப்பட்ட, ‘ICGS C-454’ என்ற இடைமறிப்புப் படகைக் கட்டிய நிறுவனம் எது?

அ. கொச்சின் கப்பல் கட்டுந்தளம்

ஆ. லார்சன் & டூப்ரோ

இ. DRDO

ஈ. பாரத மிகுமின் நிறுவனம்

 • லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்ட ‘ICGS C-454’ என்ற இடைமறிப்புப்படகானது, சமீபத்தில், கடலோரக்காவல்படையின் சேவையில் இணைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்தியக்கடலோரக்காவல்படையின் இந்தப் புதிய படகு சூரத்திலிருந்து தனது முதல் பணியைத் தொடங்கியது. 27 மீட்டர் நீளங்கொண்ட இந்தப் புதிய படகு, அதிகபட்சமாக 45 கடல் மைல் அல்லது மணிக்கு 83 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லும் திறன் படைத்ததாகும்.

3.பழங்குடி மகளிர் சுய-உதவிக்குழுக்களிடையே வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துடன் கூட்டுசேர்ந்துள்ள அமைச்சகம் எது?

அ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. கலாசார அமைச்சகம்

 • கிராமப்புறங்களில் உள்ள பழங்குடி மகளிர் சுய-உதவிக்குழுக்களிடையே நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் அண்மையில் ஒரு கூட்டு அறிவிப்பில் கையெழுத்திட்டன.
 • பழங்குடியின மகளிர் சுய-உதவிக்குழு உறுப்பினர்களை, ஊரக வளர்ச்சி அமைச்சகம், அடையாளம் கண்டு தகவல் திரட்டும் அதேவேளையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமானது மாநில ஊரக வாழ்வாதாரத் இயக்கத்தால் (SRLM) அடையாளங்காணப்பட்ட பெண்கள் மத்தியில் பல்வேறு துறைகள் மூலம் வாழ்வாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.

4.போர்நிறுத்தத்திற்காக தன் உள்நாட்டு ஆயுதமேந்திய இனக்குழுக்களுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு எது?

அ. தாய்லாந்து

ஆ. இலங்கை

இ. மியான்மர்

ஈ. பாகிஸ்தான்

 • மியான்மர் அரசாங்கம், பத்து ஆயுதமேந்திய இனக்குழுக்களுடன், ‘தேசிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை’ அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. யூனியன் அமைதி ஒப்பந்தம்-III என்று அழைக்கப்படுகிற இந்த அமைதி ஒப்பந்தத்தில், ‘தேசிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை’ செயல்படுத்துவதற் -கான 15 விதிகள் உள்ளன. 21ஆம் நூற்றாண்டு பாங்லாங் என்று பெயரிடப்பட்ட யூனியன் அமைதி மாநாட்டின் 4ஆவது அமர்வின்போது, நெய் பை தவ் என்ற இடத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

5.கீழ்க்காணும் எந்த வங்கி தனக்கு சொந்தமான இரண்டு துணை நிறுவனங்களை, GPL நிதி மற்றும் முதலீடுகள் நிறுவனத்திற்கு விற்க முடிவுசெய்துள்ளது?

அ. HDFC வங்கி

ஆ. ஐசிஐசிஐ வங்கி

இ. YES வங்கி

ஈ. கோட்டக் மஹிந்திரா வங்கி

 • YES, Asset Management Ltd “YESAMC” மற்றும் YES Trustee Ltd “YTL” ஆகியவற்றின் சரிசம பங்குகளை முழுமையாக விற்பனை செய்வதற்காக GPL நிதி மற்றும் முதலீடுகள் நிறுவனத்துடன் YES வங்கி ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் YES வங்கி நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக உள்ளன. அடுத்த எட்டு முதல் பன்னிரண்டு மாதங்களில் விற்பனை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை முடிந்ததும், YES வங்கியின் இந்த இரு நிறுவனங்களும் அதன் பரஸ்பர நிதி வணிகத்திலிருந்து முற்றிலும் வெளியேறும்.

6.21 சிறப்பு மையங்களுடன் நாட்டின் மிகப்பெரிய அடைவுச்சூழலமைப்பைக்கொண்ட அமைப்பு எது?

அ. இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள்

ஆ. மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையம்

இ. கல்வி & ஆராய்ச்சி வலையமைப்பு

ஈ. தேசிய தகவல் மையம்

 • மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள், ஓராண்டில் 21 சிறப்பு மையங்களை அமைக்கவுள்ளதன்மூலம் நாட்டில் மிகப்பெரிய அடைவுச்சூழலமைப்பைக் கொண்டிருக்கவுள்ளது. முன்மொழியப்பட்ட 21 சிறப்பு மையங்கள், பல்வேறு துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கும். 21 சிறப்பு மையங்களுள் 12 ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. அதில் மூன்று மையங்கள், விவசாயத்துடன் தொடர்புடையவையாகும். மேலும் ஒரு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

7.மதம் (அல்லது) நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 22

ஆ. ஆகஸ்ட் 23

இ. ஆகஸ்ட் 24

ஈ. ஆகஸ்ட் 25

 • மதம் (அல்லது) நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாளாக ஆகஸ்ட்.22’ஐ நியமித்து ஐநா பொது அவை அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளுக்கு அடுத்த நாள் இந்த நாள் வருகிறது. சிறுபான்மை மதத்தைச்சார்ந்த மக்களின் மனிதவுரிமைகளை நிலைநிறுத் -துவதை உறுதிசெய்யுமாறு ஐநா அதன் உறுப்பு நாடுகளை இந்நாளின்போது கேட்டுக்கொள்கிறது.

8.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Rules of Origin’ உடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

 • வருவாய்த்துறையும், நிதி அமைச்சகமும் ‘சுங்க (வர்த்தக ஒப்பந்தங்களின்கீழ் தோற்றுவாய் விதிகளின் நிர்வாகம்) விதிகள், 2020’ஐ அறிவித்துள்ளன. ‘தோற்றுவாய் விதிகளை’ அமல்படுத்துவதற்கான விதி முறைகள் அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன. இந்த விதிகள், 2020 செப்டம்பர்.21 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், இறக்குமதியாளரால், விருப்பமான இறக்குமதி தீர்வை விகிதம் கோரப்ப -டுவதற்கும் இது பொருந்தும். FTA நாட்டில், குறைந்தபட்ச செயலாக்கத்தை ‘தோற்றுவாய் விதிகள்’ நிகழ்த்துகின்றன.

9.புதிதாக அமைக்கப்பட்ட, ‘மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசிய கவுன்சிலின்’ தலைவர் யார்?

அ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஆ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

 • மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகளைப்பாதுகாத்தல்) சட்டம், 2019’இன் (2019’இன் நாற்பதாவது சட்டம்) பிரிவு 16’இன்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நடுவணரசு, மாற்றுப்பாலினத்தவர்களுக்கான தேசிய கவுன்சிலை உருவாக்கியுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் இந்தக் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.
 • பத்து மத்திய துறைகளின் பிரதிநிதிகள், மாற்றுப்பாலினச்சமூதாயத்தினரின் 5 பிரதிநிதிகள், தேசிய மனிதவுரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் பிரதிநிதிகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் ஆகியோர் இக்கவுன்சிலின் பிற உறுப்பினர்களாக இருப்பார்கள். மாற்றுப்பாலினத்தவர்கள் தொடர்பாக கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு இந்தக் கவுன்சில் ஆலோசனைகளை வழங்கும்.

10.எந்தவொரு சட்டத்தின்கீழ், தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கொண்டுவருமாறு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது?

அ. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

ஆ. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம்

இ. அத்தியாவசிய பண்டங்கள் சட்டம்

ஈ. இந்திய தர நிர்ணயங்கள் சட்டம்

 • தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013’இன்கீழ் கொண்டுவருமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வழங்கல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உணவு, பொது வழங்கல் துறை அஞ்சல்கள் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டத்தில் பயன்பெறாதவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் புதிதாக குடும்ப அட்டைகள் கொடுக்கவேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் & பிரதமர் கரீப் கல்யாண் உணவுத்திட்டத்தின்கீழ் உரிய உணவுப்பொருள்கள் வழங்கப்படும்.

1. Which country recorded an outbreak of West Nile Virus that causes West Nile Fever?

[A] Germany

[B] Spain

[C] Uganda

[D] Israel

 • Spain has recently reported an outbreak of West Nile Virus spread by mosquitos. It spreads due to mosquitoes and causes West Nile Fever. It has claimed the lives of two people in Spain and several people were admitted in hospital. It was originally discovered in Uganda in 1937. It was indigenous to Asia, Africa, Europe and Australia. This RNA virus belongs to the Flaviviridae family, which also has Zika virus, yellow fever virus and Dengue virus.

2. Which firm built the Interceptor Boat ‘ICGS C–454’ that was launched into the service of the Coast Guard?

[A] Cochin Shipyard

[B] Larsen & Toubro

[C] DRDO

[D] Bharat Heavy Electricals Ltd

 • Interceptor Boat ‘ICGS C–454’, that has been built by Larsen and Toubro, was recently launched into the service of the Coast Guard. The newly–built boat of the Indian Coast Guard (ICG) was launched in Surat, as per the recent notification from the Defence Ministry. It has a length of 27 meters and a maximum speed of 45 nautical miles or 83 kilometers per hour.

3. Which Ministry partnered with Tribal Ministry, to promote opportunities among tribal women SHGs?

[A] Ministry of Social Justice & Empowerment

[B] Ministry of Rural Development

[C] Ministry of Agriculture

[D] Ministry of Culture

 • Union Ministry of Tribal Affairs and Ministry of Rural Development has recently signed a Joint Communication to promote sustainable livelihood opportunities Among Tribal Women SHGs in rural areas. Rural Development Ministry will identify and map tribal women SHG members while Ministry of Tribal Affairs will promote livelihood opportunities among women identified by State Rural Livelihood Mission (SRLM) through several arenas.

4. Which country has signed Peace Agreement with its armed ethnic groups for ceasefire agreement?

[A] Thailand

[B] Sri Lanka

[C] Myanmar

[D] Pakistan

 • The Myanmar government has signed an agreement for implementing “National Ceasefire Agreement” (NCA) with 10 armed ethnic groups. The peace accord is called Union Peace Accord III contains 15 provisions to implement the NCA. The agreement was entered into by the parties at Nay Pyi Taw during the 4th session of the Union Peace Conference named – 21st Century Panglong.

5. Which bank has decided to sell two of its wholly owned subsidiaries to GPL Finance and Investments Limited?

[A] HDFC Bank

[B] ICICI Bank

[C] YES Bank

[D] Kotak Mahindra Bank

 • YES Bank has executed an agreement with GPL Finance and Investments Limited for the complete sale of equity shareholding of YES Asset Management Limited “YESAMC” and YES Trustee Limited “YTL”. Both these firms are wholly owned subsidiaries of YES Bank Limited. It is expected that the sale would be completed in the next 8 to 12 months. After completion of the sale, the two firms Yes Bank will completely exit from its mutual fund business.

6. Which organisation is to have India’s largest incubation ecosystem with 21 centres of excellence?

[A]  Software Technology Parks of India

[B] Centre for Development of Advanced Computing

[C] Education and Research Network

[D] National Informatics Centre

 • Software Technology Parks of India (STPI), under the Ministry of Electronics and Information Technology is set to have the largest ecosystem of incubation ecosystem in the country, in a year by setting up 21 centres of excellence. The proposed 21 centres of excellence (CoEs) will incubate new technologies in various sectors. Out of the 21 CoEs, 12 of them are already operational. Three centres are related to Agriculture and one more is proposed to be launched.

7. When is International Day Commemorating the Victims of Acts of Violence Based on Religion or Belief observed?

[A] August 22

[B] August 22

[C] August 23

[D] August 24

 • The United Nations General Assembly designated 22 August as the International Day Commemorating the Victims of Acts of Violence Based on Religion or Belief. It comes a day after the International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism. The UN asks its members to ensure the upholding of human rights of persons belonging to religious minorities, including their right to exercise their religion or belief freely.

8. ‘Rules of origin’, that was seen in news recently, is associated with which Ministry?

[A] Ministry of Commerce

[B] Ministry of Finance

[C] Ministry of Agriculture

[D] Ministry of MSME

 • The Department of Revenue, Ministry of Finance has notified the ‘Customs (Administration of Rules of Origin under Trade Agreements) Rules, 2020’. The norms for enforcing the ‘rules of origin’ provisions has been released by the Government recently. These rules will come into effect from September 21, 2020 and will apply where preferential rate of duty is claimed by importer. The “Rules of origin” provision mandates minimal processing in the FTA country.

9. Who is the head of the newly formed ‘National Council for Transgender Persons’?

[A] Ministry of Commerce

[B] Ministry of Social Justice & Empowerment

[C] Ministry of Agriculture

[D] Ministry of MSME

 • The Union Government has recently constituted the National Council for Transgender Persons’ under the Transgender Persons (Protection of Rights) Act, 2019. This is the first–of–its–kind council and will be headed by the Union Minister of Social Justice and Empowerment. The council includes representatives from 10 central departments, five states and members of the trans–gender community. It advises the Government on the related policies.

10. Ministry of Consumer Affairs has advised to states to include all eligible disabled persons under which act?

[A] National Food Security Act

[B] National Rural Employment Guarantee Act

[C] Essential Commodities Act

[D] Bureau of Indian Standards Act

 • The Department of Food and Public Distribution, Ministry of Consumer Affairs has advised State Governments and UTs to include all eligible disabled persons under the National Food Security Act, NFSA 2013. As per the direction of the Ministry, those not covered under the scheme should be covered with fresh ration cards. After registration, they will get the entitled quota of food grains under NFSA and Pradhan Mantri Garib Kalyan Anna Yojana as per provisions of the Act.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *