TnpscTnpsc Current Affairs

29th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

29th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 29th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இந்திய அரசால் முன்மொழியப்பட்ட ஆறுகளின் நீடித்த மேம்பாட்டுக்கான புதிய மாதிரியின் பெயரென்ன?

அ. நமாமி பாரத்

ஆ. அர்த்த கங்கை

இ. ஆறு SDG

ஈ. நமாமி நதி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அர்த்த கங்கை

  • தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அண்மையில் ஸ்டாக்ஹோமில் கடைப்பிடிக்கபட்ட 2022 உலக நீர் வாரம் கொண்டாட்டத்தில் ஆற்றிய தனது உரையின்போது, ‘அர்த்த கங்கை மாதிரி’பற்றி குறிப்பிட்டார். இது ஆறுகளின் நிலையான மேம்பாட்டிற்கான புதிய மாதிரியாகும்; இது பொருளாதாரத்தின்மூலம் மக்களை ஆற்றுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘அர்த்த கங்கை’ முனைவானது, ‘GDPஇல் குறைந்தது 3 சதவீதத்தை கங்கைப்படுகையிலிருந்து பெறுவதற்கு’ எண்ணுகிறது.

2. ‘சிறார்கள் பாதுகாப்பு கருவித்தொகுப்பு’ மற்றும் ‘இணையவெளிப்பாதுகாப்பு குறித்த திறனூட்டுப் பயிற்சித் திட்டத்தை’ வெளியிட்டுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ. மைக்ரோசாப்ட்

ஆ. கூகுள்

இ. ஆப்பிள்

ஈ. ஆமசான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கூகுள்

  • கூகுள் நிறுவனம் அதன் இரண்டாம் பதிப்பு, ‘Safer with Google’ முனைவு நிகழ்வில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில நாடு முழுவதும் உள்ள சுமார் 100,000 டெவலப்பர்கள், ஐடி மற்றும் துளிர் நிறுவல் நிபுணர்களுக்கான, ‘சிறார்கள் பாதுகாப்பு கருவித்தொகுப்பு’ மற்றும் ‘இணையவெளிப்பாதுகாப்பு குறித்த திறனூட்டுப் பயிற்சித்திட்டம்’ ஆகும்.

3. ‘தேசிய விளையாட்டு நாளானது’ கீழ்க்காணும் எந்த விளையாட்டு வீரரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது?

அ. மேஜர் தியான் சந்த்

ஆ. மில்கா சிங்

இ. P T உஷா

ஈ. பல்பீர் சிங்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மேஜர் தியான் சந்த்

  • இந்தியாவின் ஹாக்கி மேதையான மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ‘தேசிய விளையாட்டு நாள்’ கொண்டாடப்படுகிறது. இது, ஆண்டுதோறும் ஆகஸ்ட்.29 அன்று கொண்டாடப்படுகிறது. மேலும் இது, விளையாட்டு மற்றும் உடலியல் செயல்பாடுகளை நமது அன்றாட வாழ்வில் இணைப்பதன் அவசியம் மற்றும் நன்மைகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. மேஜர் தயான்சந்த் 1928, 1932 மற்றும் 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்றதில் முக்கியப்பங்கு வகித்தார்.

4. பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுவோருக்காக 300 மீ நீளமுள்ள ‘அடல் பாலம்’ திறக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. பீகார்

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. குஜராத்

  • ஆமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் குறுக்கே பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுவோருக்காக 300 மீ நீளமுள்ள, ‘அடல் பாலத்தை’ பிரதமர் மோடி திறந்து வைத்தார். ‘அடல் பாலமானது’ சபர்மதி ஆற்றின் இருகரைகளையும் புகழ்பெற்ற காத்தாடி திருவிழாவால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக்கொண்டு இணைக்கிறது. ‘காதி உத்சவ்’ நிகழ்ச்சியின் போது இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற லிந்தோய் சனம்பம் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. டென்னிஸ்

ஆ. பூப்பந்து

இ. ஜூடோ

ஈ. வாள்சண்டை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஜூடோ

  • ஜூடோ உலக சாம்பியன்ஷிப்பில், மகளிர் 57 கிகி பிரிவில் தங்கத்துடன் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று லிந்தோய் சனம்பம் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். மணிப்பூரைச் சார்ந்த 15 வயதான ஜூடோ வீராங்கனை உலக ஜூடோ கேடட் (U18) சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பின் எந்த வயதுப்பிரிவிலும் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனை இவராவார். அவர், இந்திய அரசாங்கத்தின் TOPS திட்டத்தின் ஒருபகுதியாகவும் வீற்றுள்ளார்.

6. விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் தலா 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் யார்?

அ. M S தோனி

ஆ. விராட் கோலி

இ. ரோகித் சர்மா

ஈ. ஷிகர் தவான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. விராட் கோலி

  • விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவங்களிலும் தலா 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் மற்றும் இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோலி, 2008 ஆகஸ்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமானதிலிருந்து 102 டெஸ்ட் மற்றும் 262 ஒருநாள் போட்டிகளுடன் சேர்த்து இப்போது 100 T20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். அண்மையில் ஓய்வுற்ற நியூசிலாந்து பேட்டர் ராஸ் டெய்லர்தான் இந்தச் சாதனையைப் படைத்த முதல் வீரராவார்.

7. தேசிய மருந்து விலையிடல் ஆணையத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. நடுவண் சுகாதார அமைச்சகம்

ஆ. நடுவண் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இ. நடுவண் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. நடுவண் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நடுவண் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

  • நடுவண் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தேசிய மருந்து விலையிடல் ஆணையத்தின் (NPPA) வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களில் உரையாற்றினார். NPPA என்பது இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்தாக்கத் தொழிற்துறையின் ஓர் இணைக்கப்பட்ட அலுவலகமாகும். இது மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் ஒரு தன்னாட்சிமிக்க கட்டுப்பாட்டாளராக செயல்படுகிறது.

8. 2022 – BWF உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற விளையாட்டு வீரர் / வீராங்கனை யார்?

அ. P V சிந்து

ஆ. K ஸ்ரீகாந்த்

இ. விக்டர் ஆக்சல்சென்

ஈ. கரோலினா மரின்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. விக்டர் ஆக்சல்சென்

  • டோக்கியோவில் நடந்த இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் குன்லௌட் விடிட்சானை வீழ்த்தி டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன் தனது இரண்டாவது பேட்மிண்டன் உலக பட்டத்தை வென்றார். கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உலகின் நெ:1 வீரரான ஆக்செல்சன், 2017இல் கிளாஸ்கோவில் உலகப்பட்டத்தையும் வென்றார். 28 வயதான அவர் ஓர் ஆட்டத்தில்கூட தோல்வியடையாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளார். இந்தச் சீசனில் இது அவர் வெல்லும் ஆறாவது பட்டமாகும்.

9. அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.26

ஆ. ஆகஸ்ட்.28

இ. ஆகஸ்ட்.29

ஈ. ஆகஸ்ட்.31

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆகஸ்ட்.29

  • ஐநா அவை ஆகஸ்ட்.29 அன்று, ‘அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான உலக நாளை’ அனுசரிக்கிறது. அணு ஆயுதங்களைச் சோதிப்பதால் ஏற்படும் பேரழிவு விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அணுவாயுதப் பெருக்கத்தை நிறுத்தவும், அத்தகைய சோதனைகளை நிறுத்தவும் உலக அரசாங்கங்களை இந்த நிகழ்வு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. 1945 ஜூலை.16 அன்று அமெரிக்காவால் ‘டிரினிட்டி’ எனப்படும் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

10. ஷுமாங் லீலா என்பது கீழ்க்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் நிகழும் ஒரு பாரம்பரிய விழாவாகும்?

அ. கேரளா

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. மணிப்பூர்

ஈ. அஸ்ஸாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மணிப்பூர்

  • 50ஆவது அனைத்து மணிப்பூர் ஷுமாங் லீலா விழா 2021-2022 ஆனது இம்பாலில் உள்ள இபோயைமா ஷுமாங் லீலா ஷாங்லெனில் தொடங்கியது. மணிப்பூர் ஆளுநர் இல கணேசன், முதலமைச்சர் N பைரன் சிங் ஆகியோர் இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். ‘ஷுமாங் லீலா’ என்பது மணிப்பூரில் உள்ள ஒரு பாரம்பரிய நாடக வடிவமாகும். இதில் பெண் கலைஞர்களின் பாத்திரங்கள் அனைத்தும் ஆண் நடிகர்களாலும் ஆண் கதாபாத்திரங்கள் பெண் கலைஞர்களாலும் நடிக்கப்படுகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர உறுதி அங்கீகாரம்

தமிழகத்தில் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு நாட்டிலேயே முதன்முறையாக தேசிய தர உறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) வழங்கியது.

தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின்கீழ் இயங்கும் திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டினம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பத்தூர் மாவட்டம், பாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம், இராமநாதபுரம் மாவட்டம், வெங்கிட்டாங்குறிச்சி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரிய அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து, நாட்டிலேயே முதன்முறையாக தர உறுதிச்சான்றிதழைப்பெற்றுள்ளன.

29th August 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the name of the new model of sustainable development of rivers proposed by Indian Government?

A. Namami Bharat

B. Arth Ganga

C. River SDG

D. Namami Nadhi

Answer & Explanation

Answer: B. Arth Ganga

  • The Chief of National Mission for Clean Ganga recently mentioned about the ‘Arth Ganga model’ during his address to the Stockholm World Water Week 2022. It is the new model of sustainable development of rivers, which aims to connect people with the river through economy. The Arth Ganga initiative ‘strives to contribute at least 3% of the GDP from the Ganga Basin’.

2. Which tech company has released the ‘Child safety toolkit’ and ‘Cyber–security up–skilling program’?

A. Microsoft

B. Google

C. Apple

D. Amazon

Answer & Explanation

Answer: B. Google

  • Google has made some several major announcements at its second edition of Safer with Google initiative event. Some of them are ‘Child safety toolkit’ and ‘Cyber–security up–skilling program’ for approximately 100,000 developers, IT, and start–up professionals across the country.

3. The ‘National Sports Day’ is celebrated to commemorate the birth anniversary of which sportsperson?

A. Major Dhyan Chand

B. Milkha Singh

C. P T Usha

D. Balbir Singh

Answer & Explanation

Answer: A. Major Dhyan Chand

  • ‘National Sports Day’ or Rashtriya Khel Divas is celebrated to commemorate the birth anniversary of Major Dhyan Chand, the hockey wizard of India. It is an annual observance that falls on August 29 and it aims to create awareness about the need and benefits of incorporating sports and physical activities into our day to life. Major Dhyanchand played a key role in India’s gold medal victory at the Olympics in 1928, 1932, and 1936.

4. The 300–metre long ‘Atal Bridge’ for pedestrians and cyclists has been inaugurated in which city?

A. Uttar Pradesh

B. Bihar

C. Gujarat

D. Karnataka

Answer & Explanation

Answer: C. Gujarat

  • Prime Minister Narendra Modi inaugurated the 300–metre long ‘Atal Bridge’ for pedestrians and cyclists across the Sabarmati River in Ahmedabad. Atal Bridge connects the two banks of Sabarmati River with the design inspired by the famous kite festival. Prime Minister Modi inaugurated the bridge from the Khadi Utsav event.

5. Linthoi Chanambam, who was seen in the news, is associated with which sports?

A. Tennis

B. Badminton

C. Judo

D. Fencing

Answer & Explanation

Answer: C. Judo

  • Linthoi Chanambam scripted history by winning India’s first–ever medal in Judo World Championships with gold in the Women’s 57kg category. The 15–year–old Manipur–based judoka clinched gold at the World Judo Cadet (U18) Championships. She is the first Indian judoka to win a medal at any age–group category of the World Championships. She is also part of the Indian government’s TOPS programme.

6. Who has become first Indian player to have played 100 matches each in all three formats of the game?

A. M S Dhoni

B. Virat Kohli

C. Rohit Sharma

D. Shikhar Dhawan

Answer & Explanation

Answer: B. Virat Kohli

  • Virat Kohli has become the first Indian and the second player overall in international cricket history to have played 100 matches each in all three formats of the game. Kohli has now 100 T20Is to his name in addition to 102 Tests and 262 ODIs since he made his international debut in August 2008. The first player with the record was New Zealand batter Ross Taylor who retired recently.

7. National Pharmaceutical Pricing Authority (NPPA) is associated with which Union Ministry?

A. Union Health Ministry

B. Union Chemicals and Fertilisers Ministry

C. Union Women and Child Development Ministry

D. Union Social Justice and Empowerment Ministry

Answer & Explanation

Answer: B. Union Chemicals and Fertilisers Ministry

  • Union Minister of Chemical and Fertilizers Mansukh Mandaviya addressed the Silver Jubilee Celebrations of National Pharmaceutical Pricing Authority (NPPA). NPPA is an attached office of the Department of Pharmaceuticals (DoP), Ministry of Chemicals and Fertilizers. It acts as an independent Regulator for pricing of drugs and to ensure availability and accessibility of medicines at affordable prices.

8. Which sportsperson has won the BWF World Championship title in 2022?

A. P V Sindhu

B. K Srikanth

C. Viktor Axelsen

D. Carolina Marin

Answer & Explanation

Answer: B. K Srikanth

  • Denmark’s Viktor Axelsen won his second badminton world title, beating Thailand’s Kunlavut Vitidsarn in the final in Tokyo. World number–one Axelsen, who won Olympic gold last year, also claimed the world title in Glasgow in 2017. The 28–year–old has reached the final without losing a single game. This is also his sixth title of the season.

9. When is the ‘International Day against Nuclear Tests’ observed?

A. August.26

B. August.28

C. August.29

D. August.31

Answer & Explanation

Answer: C. August.29

  • The United Nations observes ‘the International Day against Nuclear Tests’ on August 29. It aims to raise awareness about the devastating effects of testing nuclear weapons. The event urges world governments to end nuclear proliferation and stop such tests. The first nuclear test called Trinity was conducted by the United States on July 16, 1945.

10. Shumang Leela is a traditional festival held in which state/UT?

A. Kerala

B. Himachal Pradesh

C. Manipur

D. Assam

Answer & Explanation

Answer: C. Manipur

  • The 50th All Manipur Shumang Leela Festival 2021–2022 kicked off at Iboyaima Shumang Leela Shanglen in Imphal. Manipur Governor La Ganesan and Chief Minister N. Biren Singh attended the inaugural function. Shumang Leela is a traditional form of theatre in Manipur and the roles of female artists are all played by male actors and male characters are played by female artists.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!