Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

29th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

29th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. சுகாதாரமற்ற கழிப்பறைகள், மனிதக்கழிவுகளை அகற்றுவோர் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிப் -பதற்காக ‘ஸ்வச்சதா அபியான்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

  • மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது, ‘ஸ்வச்சதா அபியான்’ என்னும் திறன்பேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த நம்பகத்தன்மையான தகவ
    -லை தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவோர் குறித்து இச்செயலியின்மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம். அதன்மூலம் சுகாதாரமான கழிவறை பொருத்தப்பட்டு, மனிதக்கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, கண்ணியமான வாழ்க்கையை அவர்களால் வாழவியலும்.

2. திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இணையவழி கற்றல் தளத்தின் பெயர் என்ன?

அ. Bharatskills

ஆ. India Skills

இ. Skill on line

ஈ. Skill on board

  • தொழிற்பயிற்சி நிறுவனங்களின் (ITI) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் உதவியுடன் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம், ‘பாரத்ஸ்கில்ஸ்’ என்ற இணையவழி கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் திறன்களை வழங்கி இந்திய இளையோரின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் NASSCOM அறக்கட்ட -ளையுடன் ஒப்பந்தமொன்றில் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் கையெழுத்திட்டுள்ளது.
  • நாடு முழுவதுமுள்ள 3000 ITI’களில் படிக்கும் சுமார் ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் மாணவர்களுக்கு இதன்மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

3. `10,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்கள் 100 நாட்களில் முடிக்கப்படும் என்று அறிவித்துள்ள இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • கேரள மாநில அரசானது `10,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்கள் அடுத்த நூறு நாட்களுக்குள் முடிக்கப்படும் அல்லது தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பாலக்காட்டில் உள்ள இராணுவப்பூங்கா உள்ளிட்ட 9 புதிய தொழிற்துறை பிரிவுகளும் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ‘குடும்பஸ்ரீ’ என்ற வறுமை ஒழிப்புத்திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அம்மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பிரம்மபுத்ரா ஆமந்திரன் அபியான்’ என்பது கீழ்க்காணும் எவ்விரு மாநிலங்களில் நடைபெறவுள்ளது?

அ. அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம்

ஆ. அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா

இ. அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம்

ஈ. அஸ்ஸாம் மற்றும் மேகாலயா

  • மத்திய விளையாட்டு & இளையோர் நலத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, “பிரம்மபுத்ரா ஆமந்திரன் அபியான்” என்னும் ஆற்றுவழியிலான பயணத்திட்டத்தை கொடியசைத்து தொடக்கிவைத்துள்ளார். 917 கிமீ நீளமுள்ள இந்தப்பயணத்திட்டம், அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி நடைபெறவுள்ளது. அருணாச்சல பிரதேச மாநில அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் NDRF ஆகியவற்றுடன் இணைந்து ஜல் சக்தி அமைச்சகம் இந்த 1 மாதகால பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

5. நிமோனியாவுக்கு எதிரான நாட்டின் முதல் உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கிய இந்திய நிறுவனம் எது?

அ. சீரம் இந்தியா நிறுவனம்

ஆ. Dr ரெட்டி’ஸ்

இ. சன் பார்மா

ஈ. சிப்லா நிறுவனம்

  • சிறார்களுக்கு, ‘ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா’ காரணமாக ஏற்படும் நுரையீரல் அழற்சி நோய்க்கு எதிராக நோய்த்தடுப்பு செய்வதற்காக, நிமோனியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசியை சீரம் இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தத்தடுப்பூசி, பைசர் & கிளாக்சோஸ்மித் கிலைன் ஆகிய இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை விட மலிவு விலையில் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

6. யோக்தான் பயிற்சியுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. இந்திய விண்வெளி ஆய்வு மையம்

ஆ. தேசிய மாணவர் படை

இ. செஞ்சிலுவைச் சங்கம்

ஈ. புலனாய்வகம்

  • தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநரக மின்னணு மன்றமானது சமீபத்தில் புது தில்லியில் தொடங்கப்பட்டது. தேசிய மாணவர் படை (NCC) தலைமை இயக்குநரகத்தின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள இம்மின்னணு மன்றத்தின்மூலம் நாடு முழுவதுமுள்ள தேசிய மாணவர் படையினர் (NCC), தேசிய மாணவர் படைகுறித்த தங்களது பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். COVID-19 பெருங்கொள்ளைநோய்க்கு எதிரான நாட்டின் போரில் முன்கள வீரர்களாக ஒரு லட்சத்துக்கும் மேலான தேசிய மாணவர் படையினர் பெரும்பங்காற்றியுள்ளனர்.

7. மத்திய தரைக்கடல் & கருங்கடல் மீன்வள நிலை குறித்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. IMF

ஆ. FAO

இ. உலக வங்கி

ஈ. WTO

  • மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் மீன்வளத்தின் நிலை – 2020 (SoMFi 2020)’ஐ உணவு மற்றும் உழவு அமைப்பின் மத்திய தரைக்கடலுக்கான பொது மீன்வள ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 75 சதவீத மீன்வளங்கள் அதிகப்படியான மீன்பிடிக்கு ஆளாகியுள்ளன. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக இதுபோன்ற அதிகப்படியான மீன்பிடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

8. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?

அ. 1995

ஆ. 1986

இ. 1984

ஈ. 1996

  • 1986 டிச.24 அன்று, நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் இந்திய குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெற்று நடைமுறைக்கு வந்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், நுகர்வோர் முக்கியத்துவம், அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிச.24 அன்று தேசிய நுகர்வோர் நாள் இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. ‘The Sustainable Consumer’ என்பது நடப்பாண்டில் (2020) வரும் தேசிய நுகர்வோர் நாளுக்கான கருப்பொருளாகும்.

9. இந்தியாவின் நூறாவது கிசான் இரயிலானது, மகாராஷ்டிர மாநிலத்திற்கும் கீழ்க்காணும் வேறெந்த மாநிலத்திற்கும் இடையே பயணப்படுகிறது?

அ. பீகார்

ஆ. மேற்கு வங்கம்

இ. கர்நாடகா

ஈ. உத்தர பிரதேசம்

  • மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரையிலான நூறாவது ‘விவசாயிகள் இரயிலை’ காணொலி மூலம் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மீன் உள்ளிட்ட விரைவில் அழுகும் பொருள்களை முழு பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடமாடும் குளிர்பதன சேமிப்பு வசதிதான் ‘விவசாயிகள் இரயில்’.
  • காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுசெல்வதற்கான கட்டணத்தில் 50% மானியத்தையும் இந்திய அரசு வழங்குகிறது. இந்த ‘விவசாயிகள் ரயில்’ விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல உதவுகிறது.

10. ஐநா அவையால் முதல் ‘பன்னாட்டு கொள்ளைநோய் தயார்நிலை நாள்’ கடைபிடிக்கப்பட்ட தேதி எது?

அ. 25 டிசம்பர், 2020

ஆ. 15 டிசம்பர், 2020

இ. 27 டிசம்பர், 2020

ஈ. 22 டிசம்பர், 2020

  • ஐநா அவையானது 2020 டிச.27 அன்று உலகெங்கும் முதன்முறையாக, ‘பன்னாட்டு கொள்ளைநோய் தயார்நிலை நாள் – International Day of Epidemic Preparedness’ஐ அனுசரித்தது. கொள்ளைநோய் உருவாதல், பரவுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்போன்றவர்களின் பங்கை இந்நாள் அங்கீகரிக்கிறது. கொள்ளைநோய்களுக்கு எதிரான தடுப்பு, தயார்நிலை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இது ஊக்குவிக்கிறது.

1. Which Union Ministry launched ‘Swachhata Abhiyan’ mobile application to geotag insanitary latrines and manual scavengers?

[A] Ministry of Housing and Urban Affairs

[B] Ministry of Social Justice and Empowerment

[C] Ministry of Rural Development

[D] Ministry of Road Transport and Highways

  • Union Minister for Social Justice and Empowerment Thaawarchand Gehlot launched a Mobile Application “Swachhata Abhiyan”. The application aims to identify and geotag the data of insanitary latrines and manual scavengers. With this, the insanitary latrines can be replaced with sanitary latrines and rehabilitate all the manual scavengers.

2. What is the name of the online learning platform for it is, launched by the Skill Development Ministry?

[A] Bharatskills

[B] India Skills

[C] Skill on line

[D] Skill on board

  • The Directorate General of Training (DGT) under the aegis of Ministry of Skill Development & Entrepreneurship (MSDE) launched an online learning platform called the Bharatskills, for the students and teachers of Industrial Training Institutes (ITI). The DGT joined hands with Microsoft and NASSCOM Foundation to provide digital employability skilling program for nearly 1.2 lakh ITI students in around 3000 ITI’s across India.

3. Which Indian state has announced Rs 10,000 crore worth development projects to be completed in 100 days?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Andhra Pradesh

[D] Karnataka

  • The state government in Kerala has announced Rs 10,000 crore worth development projects would be completed or launched in the next 100 days. The Chief Minister also announced that nine new industrial units, including the Defence Park in Palakkad would be inaugurated. The state also targets job openings through poverty eradication mission, Kudumbashree.

4. The ‘Brahmaputra Aamantran Abhiyaan’, which was seen in the news recently, is to be held in which two states?

[A] Arunachal Pradesh and Assam

[B] Arunachal Pradesh and Meghalaya

[C] Arunachal Pradesh and Mizoram

[D] Assam and Meghalaya

  • Union Sports and Youth Affairs Minister Kiren Rijiju has flagged off the “Brahmaputra Aamantran Abhiyaan”, a river rafting expedition. The 917 km long expedition cum public outreach programme is to be held in Arunachal Pradesh and Assam. The month–long expedition is organised by the Ministry of Jal Shakti with the Government of Arunachal Pradesh, Assam & NDRF.

5. Which Indian company has developed the country’s first indigenous vaccine against pneumonia?

[A] Serum Institute of India

[B] Dr Reddy’s

[C] Sun Pharma

[D] Cipla Ltd

  • India’s first indigenous vaccine against pneumonia has been developed by Serum Institute of India (SII), for active immunisation against invasive disease and pneumonia caused by ‘Streptococcus pneumonia’ in infants. This vaccine is expected to be more affordable than existing vaccines manufactured by two foreign companies – Pfizer and GlaxoSmithKline.

6. Exercise Yogdan is associated with which category of association?

[A] ISRO

[B] National Cadet Corps

[C] Red Cross

[D] Intelligence Bureau

  • The DGNCC Digital Forum was launched recently in New Delhi. This Forum will provide a platform to National Cadet Corps (NCC) cadets across the country to share their experiences of various NCC activities. Since April 2020, over one lakh NCC Cadets served as the frontline volunteers in the fight against COVID–19 across the country under Exercise NCC Yogdan.

7. National Startup Awards was first launched in which year?

[A] IMF

[B] FAO

[C] World Bank

[D] WTO

  • The State of the Mediterranean and Black Sea fisheries – 2020 (SoMFi 2020) was released by the Food and Agricultural Organisation’s General Fisheries Commission for the Mediterranean (GFCM). As per the report, 75 percent of fish stocks in the Mediterranean and Black Sea marine ecosystems were subject to overfishing. But the number of such overfished stocks has decreased for the first time in the past decades.

8. In which year, did the Consumer Protection Act come into effect?

[A] 1995

[B] 1986

[C] 1984

[D] 1996

  • On December 24, 1986, the Consumer Protection Act received the approval of the President of India and came into effect. To mark the occasion, the National Consumer Day is observed every year on December 24 in India, to spread awareness about consumer importance, their rights and responsibilities. The theme of the National Consumer Day is ‘The Sustainable Consumer’.

9. The 100th Kisan Rail of India has been flagged off between Maharashtra and which other state?

[A] Bihar

[B] West Bengal

[C] Karnataka

[D] Uttar Pradesh

  • Indian Prime Minister Narendra Modi has recently flagged off the 100th Kisan Rail from Sangola in Maharashtra to Shalimar in West Bengal. The multi–commodity train service will carry vegetables and fruits. The Government of India has also extended a subsidy of 50% on transportation of fruits and vegetables. Kisan Rail enables the farmers to transport their agricultural produce across the country.

10. When was the 1st ever ‘International Day of Epidemic Preparedness’ observed globally by the United Nations?

[A] 25th December, 2020

[B] 15th December, 2020

[C] 27th December, 2020

[D] 22nd December, 2020

  • The United Nations observed the first ever International Day of Epidemic Preparedness across the globe on 27th December 2020. The day recognises the role of government and other stakeholders like healthcare workers in controlling and managing the outbreak of epidemic. to promote the importance of the prevention of, preparedness for and the partnership against epidemics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!