TnpscTnpsc Current Affairs

29th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

29th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. INS கேசரி, சமீபத்தில் எந்த நாட்டுக்கு உணவு உதவி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியது?

அ) மடகாஸ்கர்

ஆ) மொசாம்பிக் 

இ) மாலத்தீவுகள்

ஈ) மியான்மர்

  • சாகர் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையின் INS கேசரி போர்க்கப்பல், மொசாம்பிக் நாட்டின் மபுடோ துறைமுகத்து -க்கு 500 டன் உணவு பொருட்கள் மற்றும் உதவிப்பொருட்களை கொண்டுசென்றது.
  • அதோடு, மொசாம்பிக் இராணுவத்துக்கு அளிக்க இரண்டு அதிவிரைவு படகுகள் மற்றும் தற்காப்பு பாதுகாப்பு தளவாடங்களையும் கொண்டுசென்றது. முன்னதாக INS கேசரி மாலத்தீவுகள், மொரிசியஸ், சீஷெல்ஸ், மடகாஸ்கர் மற்றும் கொமோரோசு ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது.

2. அண்மையில் குடியரசுத்தலைவரால் PN பணிக்கரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அவருடன் தொடர்புடைய இயக்கம் எது?

அ) பெண்கள் அதிகாரமளித்தல்

ஆ) எழுத்தறிவு மற்றும் நூலகம் 

இ) குழந்தை வளர்ச்சி

ஈ) சுத்தமான தண்ணீர்

  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள P N பணிக்கர் சிலையை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். P N பணிக்கர் கேரளத்தில் எழுத்தறிவியக்கம் & நூலகங்களை மேம்படுத்துதற்காக 1945’இல் ‘கிரந்தசாலா சங்கம்’ தொடங்கினார்.
  • “வாசித்து வளர்ச்சியடைவீர்” என்று பொருள்படும் “வாயிச்சு வளர்க” என்ற செய்திக்காக அவர் புகழ்பெற்றார். எழுத்தறிவு இயக்கத்தை ஒரு பிரபலமான சமூக-கலாசார இயக்கமாக மாற்றினார்.

3. மிகவும் தீவிரமான காந்தப்புலம்கொண்ட சிதைந்த நியூட்ரான் நட்சத்திரத்தின் பெயர் என்ன?

அ) மீட்டியோர்

ஆ) மேக்னடார் 

இ) பிளேசர்

ஈ) குவாசர்

  • ராட்சத நட்சத்திரங்கள் வீழ்ச்சியடையும் போது, ​​அவை நியூட்ரான் நட்சத்திரங்களை உருவாக்குகின்றன. மேலும் இந்த நியூட்ரான் நட்சத்திரங்களில் சில, காந்தப்புலங்கள் எனப்படும் மிகவும் தீவிரமான காந்தப்புலத்துடன் ஒரு சிறிய குழுவை உருவாக்குகின்றன.
  • இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் தலைமையில், வானியலாளர்கள் சமீபத்தில் ‘GRB2001415’ என்றவொரு திடீர் ஒளியை ஆய்வுசெய்தனர். 2020 ஏப்ரல்.15 அன்று நிகழ்ந்த அது ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே நீடித்தது. ஓர் ஆய்வின்படி, வெளியிடப்பட்ட அந்த ஆற்றல் நமது சூரியன் 1,00,000 ஆண்டுகளில் வெளியிடும் கதிர்வீச்சு ஆற்றலுக்குச் சமமாகும்.

4. ‘குப்பைகளற்ற நகரங்களுக்கான நட்சத்திர மதிப்பீடு வழிமுறை – கருவித்தொகுப்பு 2022’ஐ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 

இ) விவசாய அமைச்சகம்

ஈ) வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் குப்பைகளற்ற நகரங்களுக்கான நட்சத்திர மதிப்பீடு வழிமுறை – கருவித்தொகுப்பு 2022’ஐ வெளியிட்டது.
  • 2021 அக்டோபர்.1 அன்று “குப்பைகளற்ற நகரங்களை” உருவாக்குவதற்காக, ஸ்வச் பாரத் மிஷன்-அர்பன் 2.0’ஐ பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நட்சத்திர மதிப்பீடு வழிமுறையின்படி ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பையும் குறைந்தபட்சம் மூன்று நட்சத்திர குப்பை இல்லா நகரமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

5. அண்மையில், ‘சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பை’ அறிமுகப்படுத்திய நாடு எது?

அ) சீனா

ஆ) இரஷ்யா 

இ) UK

ஈ) இஸ்ரேல்

  • கடற்புற மற்றும் தரைசார் இலக்குகளை தாக்கக்கூடிய ‘சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பை’ ரஷ்யாவின் தற்காப்புப் படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. உக்ரைன் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவிவரும் நிலையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

6. எந்த மாநிலத்தின் விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) உத்தரகாண்ட் 

ஆ) உத்தர பிரதேசம்

இ) பீகார்

ஈ) மேற்கு வங்காளம்

  • இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உத்தரகாண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டு, விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், மாநில இளையோர் இடையே மனநல விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளார். இது தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். 24 வயதான அவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டத்தில் பிறந்தவர்.

7. சமீப செய்திகளில் இடம்பெற்ற பராலன் தீவுகள் தேசிய வனவுயிரி புகலிடம் அமைந்துள்ள நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) ரஷ்யா

இ) ஜப்பான்

ஈ) இத்தாலி

  • அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரை ஆணையம், பாரலன் தீவுகளின் தேசிய வனவுயிரி புகலிடத்தில் எலி விஷத்தை காற்றில் விடுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தீவுகளில் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்மூலம் அரிய கடற்பறவைகளைக் காக் -கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

8. சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) டிசம்பர் 18 

ஆ) டிசம்பர் 21

இ) டிசம்பர் 24

ஈ) டிசம்பர் 27

  • உலகளாவிய குடியேற்றத்தின் பிரச்சனை & சவால்களை சமாளிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.18 அன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • ஐநா பொதுச்சபையானது 1999ஆம் ஆண்டில் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச தீர்மானத்தை உருவாக்கியது. “Harnessing the potential of human mobility” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டில் வரும் இந்நாளிற்கான கருப்பொருளாகும்.

9. 1 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை ஐநாடுகள் அவையின் ஆதரவுபெற்ற COVAX திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) இஸ்ரேல் 

இ) இந்தியா

ஈ) பிரான்ஸ்

  • ஐநாடுகள் அவையின் ஆதரவுபெற்ற COVAX திட்டத்திற்கு 1 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் வரும்வாரங்களில் வழங்கப்படும் என இத்தாலியின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுடன் இஸ்ரேலின் உறவுகளை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.
  • கென்யா, உகாண்டா மற்றும் ருவாண்டா உட்பட பல ஆப்பிரிக்க நாடுகளுடன் இஸ்ரேல் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சூடானுடனான உறவை இஸ்ரேல் ஏற்படுத்தியது.

10. UNESCO கலாசார பாரம்பரிய பட்டியலில் ஆசியாவில் இருந்து முதன்முறையாக சேர்க்கப்பட்ட திருவிழா எது?

அ) தைவான் ஒளிவிளக்குத் திருவிழா

ஆ) ஆருத்ரா தரிசனம், தில்லை நடராஜர் கோவில்

இ) ஓணம் பண்டிகை

ஈ) துர்கா பூஜை 

  • UNESCO தனது ‘மனிதகுலத்தின் தொட்டுணரமுடியா கலாசார பாரம்பரியங்கள் பட்டியலில்’ துர்கா பூஜையை சேர்த்துள்ளது. UNESCO’இன் பதினாறாவது குழுவானது பாரிஸில் நடைபெற்ற தொட்டுணரமுடியா கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அதன் கூட்டத்தில், கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜையை அப்பட்டியலில் சேர்த்தது. இது, ஆசியாவிலிருந்து இந்த மதிப்புமிக்க பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் திருவிழாவாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ‘அடல்’ தரவரிசை பட்டியல் வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 13 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு திறன், தொழில்முனைவோரை உருவாக்கும் திறன், ஸ்டார்ட் அப் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை’ என்ற திட்டத்தை மத்தியகல்வித் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மூலம் செயல்படுத்தி வருகிறது.

கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைக்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை, புதுமை தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான சிறப்புக் கட்டமைப்பு வசதி போன்ற அம்சங்கள் தரவரிசைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டுக்கான தரவரிசைக்கு 1,438 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. வழக்கமாக, தொழில்நுட்பம் சார்ந்த கல்விநிறுவனங்களுக்கு மட்டுமே 5 பிரிவாக தரவரிசை வெளியிடப்படும். ஆனால், நடப்பாண்டு முதல் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள் 2 பிரிவாக இணைக்கப்பட்டு, மொத்தம் 7 பிரிவுகளாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இப்பட்டியலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, சிறந்த மத்திய கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3-வது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை மும்பை ஐஐடி, 3-வது இடத்தை டெல்லி ஐஐடி பிடித்தன.

மாநில பல்கலைக்கழக பிரிவில் பஞ்சாப் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலை. 5-வது இடத்தையும், சேலம் பெரியார்பல்கலைக்கழகம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் பிரிவில் 2-வது இடத்தில் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியும், 4-வது இடத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியும் உள்ளன. தனியார் நிகர்நிலை பல்கலை. பிரிவில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (4-வது இடம்), கலசலிங்கம் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் (6), வேலூர் விஐடி (8) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தனியார் கல்லூரிப் பிரிவில் ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி2-வது இடத்தையும், ஸ்ரீகிருஷ்ணாபொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல, தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களின் பிரிவில் பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி 4-வது இடத்திலும், திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி 5-வது இடத்திலும் உள்ளன.

2. சுற்றுலா ஆலோசனைக் குழு பெயா் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு சுற்றுலா ஆலோசனைக் குழு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவானது, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சிக் குழு என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு விவரம்:-

மறுசீரமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சிக் குழுவின் துணைத் தலைவராக, அரசு முதன்மைச் செயலாளரும், உறுப்பினா் செயலாளராக சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்திய சுற்றுலா முகவா்கள் சங்கம், இந்திய சுற்றுலா சேவை நிறுவன சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சந்தை, தென்னிந்திய ஹோட்டல்கள், உணவகங்கள் சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சுற்றுப் பயணம் விருந்தோம்பல் சங்கம், இந்திய தொழில் வா்த்தக சபைகளின் கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு, தென்னிந்திய தொழில் வா்த்தக சபை, தென்னிந்திய கூட்டங்கள், சலுகைகள், மாநாடுகள், கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் சங்கம் உள்ளிட்ட சுற்றுலா மையப்படுத்திய சங்கங்கள் இடம்பெற்றிருக்கும்.

சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கும் குழு உறுப்பினா்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. சிபிஐ இணை இயக்குநராக வித்யா குல்கர்னி நியமனம்

சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக வித்யா குல்கர்னியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகக் காவல் துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐஜியாகப் பணியாற்றியவர் வித்யா குல்கர்னி. இந்நிலையில், அவர் கடந்த நவம்பரில் மத்திய அரசு பணிக்குச் சென்றார். இதற்கிடையே அவரை சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவருடன் ஒடிசா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி ஞான்சிஷியாம் உபாத்யா, மகாராஷ்டிரா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி நாவல் பஜாஜ் ஆகியோரும் சிபிஐ இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

4. உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு 2021ம் ஆண்டுக்கான சிறந்த புவிசார் குறியீடு விருது

புவிசார் குறியீடு பதிவில் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி முக்கிய பங்கு வகித்துள்ளார். தஞ்சாவூர் தட்டு, காஞ்சிபுரம் பட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பதவி வகித்து வரும் இவருக்கு தஞ்சாவூரில் நடைபெற்ற இந்திய ஏற்றுமதி பொருட்களில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் இதற்கான விருதை தஞ்சாவூர் மாவட்ட கலைத்தட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கியது. இவர் அறிவுசார் சொத்துரிமை சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகள், கைவினை மற்றும் கைத்தறி துறை கலைஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

1. INS Kesari has recently delivered Food aid and Defence Aid to which country?

A) Madagascar

B) Mozambique 

C) Maldives

D) Myanmar

  • Indian Naval Ship (INS) Kesari has reached Port of Maputo, Mozambique to deliver 500 tonnes of food aid under Mission Security and Growth for All in the Region (SAGAR).
  • INS Kesari is also carrying two Fast Interceptor Craft and self–defence equipment to be handed over to the Armed Forces of Mozambique. Earlier INS Kesari delivered humanitarian and medical assistance to Maldives, Mauritius, Seychelles, Madagascar and Comoros.

2. “P.N. Panicker”, whose statue was recently unveiled by the President, was associated with which movement?

A) Women Empowerment

B) Literacy and Library 

C) Child Development

D) Clean Water

  • President of India Ram Nath Kovind unveiled of the statue of P N Panicker at Thiruvananthapuram, Kerala. P.N. Panicker started the ‘Granthashala Sangam’ in 1945 to promote literacy movement and libraries in the state. He was famous for the message of – “Vayichu Valaruka” which means “Read and Grow”. He made the literacy movement into a popular socio–cultural movement

3. What is the name of the Disintegrated Neutron Star with the most intense magnetic field?

A) Meteor

B) Magnetar 

C) Blazar

D) Quasar

  • When giant stars collapse, they form neutron stars, and some of these neutron stars form a small group with the most intense magnetic field, known as Magnetars.
  • Led by Institute of Astrophysics (IAA–CSIC), astronomers have recently studied a flash ‘GRB2001415’, which occurred on April 15, 2020 and lasted only around one tenth of a second. As per the study, the energy that was released is equivalent to the energy that our Sun radiates in 1,00,000 years.

4. Which Union Ministry launched the “Star Rating Protocol of Garbage Free Cities– Toolkit 2022”?

A) Ministry of Rural Development

B) Ministry of Housing and Urban Affairs 

C) Ministry of Agriculture

D) Ministry of Forest, Environment and Climate Change

  • Ministry of Housing and Urban Affairs launched the “Star Rating Protocol of Garbage Free Cities– Toolkit 2022”. On 1st October 2021, Prime Minister Narendra Modi launched Swachh Bharat Mission–Urban 2.0, to create “Garbage Free Cities” (GFC).
  • The aim of the programme is to make every urban local body at least 3–star Garbage Free as per the Star Rating protocol.

5. Which country has recently launched the ‘Tsirkon hypersonic missile system’?

A) China

B) Russia 

C) UK

D) Israel

  • Russia’s Defence forces have successfully test–launched the Tsirkon hypersonic missile system that can strike both naval and ground targets. The launch was undertaken amidst the continuing tensions on the Ukraine border.

6. Indian cricketer Rishabh Pant has been appointed as the brand ambassador of which state?

A) Uttarakhand 

B) Uttar Pradesh

C) Bihar

D) West Bengal

  • Indian cricketer Rishabh Pant has been appointed the brand ambassador of the state of Uttarakhand, to promote sports and create mental health awareness among the state’s youth. Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami made the announcement regarding the same. The 24–year–old was born in the state’s Haridwar district.

7. Farallon Islands National Wildlife Refuge, which was seen in the news, is located in which country?

A) USA 

B) Russia

C) Japan

D) Italy

  • The California Coastal Commission in the United States has approved a plan for air dropping rat poison on the Farallon Islands National Wildlife Refuge. This is an attempt to save rare seabirds, by helping to curb the mice population on the islands.

8. When is the International Migrants Day observed?

A) December 18 

B) December 21

C) December 24

D) December 27

  • The International Migrant Day is observed every year on December 18, to tackle the problem and challenges of global migration. The United Nations General Assembly in the year 1999 created the International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of their Families. The theme for the year 2021 is ‘Harnessing the potential of human mobility’.

9. Which country has announced to donate 1 million coronavirus vaccines to the U.N.–backed COVAX programme?

A) Russia

B) Israel 

C) India

D) France

  • The Israeli government has announced to donate 1 million coronavirus vaccines to the U.N.–backed COVAX programme. Italy’s Foreign Ministry said the AstraZeneca vaccines would be transferred in the coming weeks. This decision is seen as a part of Israel’s strengthening ties with the African countries.
  • Israel has close ties with several African nations, including Kenya, Uganda & Rwanda. Last year, Israel established relations with Sudan.

10. Which festival has been added to UNESCO Cultural Heritage List, for the first time in Asia?

A) Taiwan Lantern Festival

B) Arudra Darshan, Thillai Natarajar Temple

C) Onam Festival

D) Durga Pooja 

  • The UNESCO has added Durga Puja to its ‘Representative List of Intangible Cultural Heritage of Humanity’.
  • The 16th Committee of UNESCO for safeguarding of the Intangible Cultural Heritage (ICH) at its meeting held in Paris added Durga Puja in Kolkata on the Representative List. This is the first festival of Asia, to be included in the prestigious list.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!