Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

29th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

29th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, இராஜேந்திர குமார் பண்டாரிம், பின்வரும் எந்த விருதை வென்றுள்ளார்?

அ) சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்

ஆ) பிரதமர் ராஷ்டிரிய பால புரஸ்கார்

இ) ஜீவன் ரக்ஷா விருதுகள்

ஈ) அசோக சக்ரா

  • பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றிவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்னும் வருடாந்திர விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான ஜன.23 அன்று ஒவ்வொரு வருடமும் இந்த விருது அறிவிக்கப்படும். இந்த வருட விருதிற்கு அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் (SEEDS) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2. ஆயுஷ்மான் CAPF திட்டமானது தேசிய சுகாதார ஆணையம் மற்றும் பின்வரும் எந்த அமைச்சகத்தின் கூட்டு முயற்சியாகும்?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) கல்வி அமைச்சகம்

ஈ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயுஷ்மான் CAPF திட்டத்தை தொடங்கிவைத்தார். இது மத்திய ஆயுதமேந்திய காவல்படைகளின் (CAPF) சுமார் பத்து இலட்சம் பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் பயனளிக்கும். இந்தத் திட்டமானது, உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் கூட்டு முயற்சியாகும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற முகமது இஷ்தாயே, எந்த நாட்டின் பிரதமராவார்?

அ) பாலஸ்தீனம்

ஆ) இஸ்ரேல்

இ) பெரு

ஈ) அர்ஜென்டினா

  • நிறுத்தப்பட்ட அமைதிசார்ந்த முன்னெடுப்புகளுக்கு புத்துயிரளிப்பது தொடர்பாக புதிய ஐநா தூதருடன் கலந்துரையாடியதை அடுத்து பாலஸ்தீனிய பிரதமர் முகமது இஷ்தாயே அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார்.
  • ஐநா தூதர் டோர் வென்னஸ்லேண்ட், மத்திய கிழக்கு அமைதிசார் முன்னெடுப்புகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அமெரிக்கா, ஐக்கிய நாடுகள்., இரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘குவார்டெட்’ நிதியளிக்கும் எந்தவொரு அரசியல் முன்னெடுப்பிலும் பாலஸ்தீனத்தின் வெளிப்படைத் தன்மையை அவர் அப்போது எடுத்துரைத்தார்.

4. இந்தியாவில் எந்த ஆண்டு முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் நாள்’ கொண்டாடப்படுகிறது?

அ) 2000

ஆ) 2004

இ) 2008

ஈ) 2012

  • 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.24 அன்று இந்தியாவில், ‘தேசிய பெண் குழந்தைகள் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய பெண் குழந்தைகள் நாளைக் குறிக்கும் வகையில், இந்திய அரசு பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ திட்டத்தின்கீழ், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்கிறது.
  • இந்நாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். பாலின சார்பு மற்றும் இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் குறித்து கவனஞ்செலுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறுமியரின் கல்வி, உடல்நலம் மற்றும் சிறுமியரின் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. எந்த ஆண்டுக்குள், இந்திய புவியியல் ஆய்வுமையமானது தேசிய புவி-வேதியியல் வரைபடமாக்கல் திட்டத்தை நிறைவு செய்யவுள்ளது?

அ) 2022

ஆ) 2024

இ) 2025

ஈ) 2030

  • இந்திய புவியியல் ஆய்வுமையமானது (GSI) அதன் முக்கியமான சில தேசிய அளவிலான ஆய்வுகளை விரைவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. GSI தனது தேசிய புவி வேதியியல் வரைபடமாக்கல் திட்டத்தை 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டின் அனைத்து புவி அறிவியல் தரவுகளையும் சேகரிப்பதற்காக, GSI, தேசிய புவி அறிவியல் தரவு களஞ்சியம் என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது.

6. சமீபத்தில், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ஏற்பாடு செய்த ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வுத் திட்டத்தின் பெயர் என்ன?

அ) ஆயுஷ் வேதா

ஆ) ஆயு சம்வத்

இ) ஆரோக்கிய சேது

ஈ) கோவிஷீல்டு

  • அண்மையில், புது தில்லியின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், ஆயுர்வேதம் மற்றும் COVID-19 தொற்றுநோய் குறித்து மிகப்பெரிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டத்தை நடத்தியது. அதற்கு, “ஆயு சம்வத்”என்று பெயரிடப்பட்டிருந்தது.
  • இந்தப் பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகம் ஆதரித்தது. இதன்போது, ஆயுர்வேத மருத்துவர்களால் நாடு முழுவதும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

7. “The Inequality Virus” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) WHO

ஆ) NITI ஆயோக்

இ) IMF

ஈ) Oxfam International

  • “The Inequality Virus” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை அண்மையில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டது. COVID தொற்றுநோய், தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தியுள்ளது என்று இவ்வறிக்கை கண்டறிந்துள்ளது.
  • இந்தியாவில் நாடடங்கு நடப்பிலிருந்த காலத்தில், இந்தியாவின் முதல் 100 பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை `1299 டிரில்லியன் ஆலவுக்கு அதிகரித்துள்ளனர். அதேவேளையில், 2020 ஏப்ரலில் சுமார் 70,000 பேர், ஒவ்வொரு மணி நேரமும் வேலை இழந்தனர் என்று அவ்வறிக்கை ஒப்பிட்டுள்ளது.

8. பிரதமர் இராஷ்டிரிய பால புரஸ்காரை வழங்குகிற அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஈ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • நடப்பாண்டுக்கான (2021) பிரதம அமைச்சரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள், 32 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை & கலாசாரம், பொதுச்சேவை, மற்றும் வீரதீரமிக்க துறைகளில் தலைசிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள்கொண்ட குழந்தைகளுக்கு பிரதம அமைச்சரின் ராஷ்ட்ரிய பாலசக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய சிறார்கள் விருதுகளை நடுவணரசு வழங்குகிறது.
  • தமிழ்நாட்டில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

9. தாய்லாந்து ஓப்பன் பூப்பந்து போட்டியில், ஒற்றையர் பெண்கள் பட்டத்தை வென்ற கரோலினா மரின் சார்ந்த நாடு எது?

அ) ஸ்பெயின்

ஆ) பிரேசில்

இ) தாய்லாந்து

ஈ) தென்னமெரிக்கா

  • ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினைச் சார்ந்த கரோலினா மரின் மற்றும் டென்மார்க்கைச் சார்ந்த முன்னாள் உலக சாம்பியன் விக்டர் ஆக்செல்சன் ஆகியோர் முறையே தங்களது இரண்டாவது தாய்லாந்து ஓப்பன் பூப்பந்து மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்றனர். 27 வயதான கரோலினா மரின் இரு போட்டிகளிலும் ஒரு ஆட்டத்தைக்கூட இழக்காமல் இறுதிப்போட்டிக்குச் சென்றார்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘AMPHEX-21’ என்றால் என்ன?

அ) இந்திய பாதுகாப்புப்படைகளின் கூட்டுப்பயிற்சி

ஆ) இந்திய வான்படை பயிற்சி

இ) இந்திய கடற்படைப் பயிற்சி

ஈ) இந்திய தொழிலதிபர்கள் சந்திப்பு

  • தரைப்படை, கடற்படை, வான்படை, கடலோரக் காவல்படை ஆகியவை இணைந்து “AMPHEX-21” என்ற பெயரில் மாபெரும் கூட்டுப்பயிற்சியை அந்தமான் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் நடத்தின. கூட்டு செயல்பாடு தயார்நிலையை அதிகரிப்பதற்காக இப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதும், முப்படைகளிடையே ஒருங்கிணைந்த இயக்கத்தை மேம்படுத்துவதும், பாதுகாப்புப் படையின் திறன்களை உறுதிப்படுத்துவதுமே இந்தப் பயிற்சியை நடத்துவதன் நோக்கமாகும்.

29th January 2021 Tnpsc Current Affairs in English

1. Rajendra Kumar Bhandarim, who was seen in news recently, is the winner of which award?

A) Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar

B) Pradhan Mantri Rashtriya Bal Puraskar

C) Jeevan Raksha Awards

D) Ashoka Chakra

  • The Ministry of Home Affairs has recently announced the Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar for 2021.
  • As per the notification, Rajendra Kumar Bhandari has been selected in the individual category of the award, while the Sustainable Environment and Ecological Development Society (SEEDS) has been selected for the award in the institutional category.

2. Ayushman CAPF scheme is a joint initiative of National Health Authority (NHA) and which Ministry?

A) Ministry of Defence

B) Ministry of Home Affairs

C) Ministry of Education

D) Ministry of Social Justice and Empowerment

  • Union Home Minster Amit Shah launched Ayushman CAPF scheme, which will benefit around 10 lakh personnel of Central Armed Police Forces (CAPFs) and their family members.
  • The scheme is a joint initiative of National Health Authority (NHA) with the Ministry of Home Affairs. Cashless and paperless medical treatment will be given to the beneficiaries at 24,000 hospitals in the country.

3. Mohammed Ishtaye, who was seen in the news recently, is the Prime Minister of which country?

A) Palestine

B) Israel

C) Peru

D) Argentina

  • Palestinian Prime Minister Mohammed Ishtaye was seen in the news recently as he had a discussion with the new UN envoy on reviving the stalled peace process.
  • The UN envoy Tor Wennesland, is the Special Coordinator for Middle East Peace Process. He also highlighted the openness of the country on any political process sponsored by the Quartet, comprising of the US, the UN, Russia and the European Union.

4. ‘National Girl Child Day’ has been celebrated in India from which year?

A) 2000

B) 2004

C) 2008

D) 2012

  • ‘National Girl Child Day’ has been celebrated in India on January 24 from the year 2008. To mark National Girl Child Day, the Indian Government organises awareness campaigns under Beti Bachao, Beti Padhao scheme.
  • This Day is an initiative of the Ministry of women and child development. It aims to focus on solutions for gender bias and the challenges faced by girls in Indian society. It also aims to create awareness on girl education, health and nutrition of girls.

5. By which year, the Geological Survey of India (GSI) is set to complete National Geochemical Mapping (NGCM) programme?

A) 2022

B) 2024

C) 2025

D) 2030

  • The central government has recently stated that, Geological Survey of India (GSI) is in the process of expediting some of its important national level surveys. The GSI has proposed to complete its National Geochemical Mapping (NGCM) programme by 2024.
  • The GSI has also commenced an initiative named National Geoscience Data Repository for collecting all the geoscience data of the country.

6. What is the name of the public awareness campaign program on Ayurveda organised recently by the All–India Institute of Ayurveda?

A) Ayush Veda

B) Ayu Samvad

C) Arokya Setu

D) Covishield

  • Recently, the All–India Institute of Ayurveda, New Delhi has conducted a large largest public awareness campaign program on Ayurveda and COVID–19 pandemic and it has been named as “Ayu Samvad”. This campaign is supported by Ministry of Ayush.
  • Morethan five lakh lectures were organised across the country by Ayurveda Physicians, during the campaign.

7. Which organisation has released the report titled “The Inequality Virus”?

A) WHO

B) NITI Aayog

C) IMF

D) Oxfam International

  • The report titled “The Inequality Virus” has been released recently by Oxfam International. The report has found that the COVID pandemic has deepened the existing inequalities. The report has made a comparison that during the national lockdown in India its top 100 billionaires saw their fortunes increase by Rs 12.97 trillion while 70,000 people lost their jobs every hour in the month of April 2020.

8. Pradhan Mantri Rashtriya Bal Puraskar is awarded by which ministry?

A) Ministry of Defense

B) Ministry of Home Affairs

C) Ministry of External Affairs

D) Ministry of Women & Child Development

  • 32 children across the county have been recently awarded the Pradhan Mantri Rashtriya Bal Puraskar, 2021.
  • Union Ministry of Women and Child Development, Government of India has been giving away this award to children with outstanding abilities and accomplishments in the fields of innovation, scholastics, sports, arts & culture, social service and bravery. Prasiddhi Singh, a resident of Tamil Nadu, has been awarded the Social Service Award.

9. Carolina Marin, who won the singles women title at the Thailand Open badminton tournament, is from which country?

A) Spain

B) Brazil

C) Thailand

D) South America

  • Reigning Olympic champion, Carolina Marin from Spain and former World Champion Viktor Axelsen from Denmark recently claimed their second Thailand Open badminton men’s and women’s singles titles respectively. Carolina Marin went into the final without losing a single game across both tournaments.

10. What is AMPHEX – 21, that was seen in the news recently?

A) Tri–service Joint Exercise of India

B) Indian Air Force Exercise

C) Indian Navy Exercise

D) Meeting of Indian Entrepreneurs

  • AMPEX – 21 is India’s tri–service joint amphibious exercise which was conducted in the Andaman & Nicobar group of islands. It involved the participation of Naval vessels, Army’s amphibious troops and flying machines of the Air force.
  • The aim of conducting this exercise is to validate the security force’s capabilities to safeguard the territorial integrity and enhance interoperability among the three forces.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!