Tnpsc

29th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

29th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பசுமை தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை உருவாக்குவதற்காக கீழ்காணும் எந்த வங்கியுடனான கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டது?

அ) IMF

ஆ) உலக வங்கி

இ) AIIB

ஈ) ADB

  • பசுமை தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை உருவாக்குவதற்காக உலக வங்கியுடனான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி அறிவித்தார்.
  • இராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும் சுமார் 781 கிமீ நீள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டம் இதில் அடங்கும். மொத்முள்ள 781 கிமீட்டரில் 287.96 கிமீட்டருக்கு `1664.44 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2025 டிசம்பருக்குள் நிறைவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2. ஜூலை 18 ஆனது நோபல் பரிசு பெற்ற எந்தத் தலைவரின் பிறந்த நாள் ஆகும்?

அ) ஆங் சான் சூகி

ஆ) நெல்சன் மண்டேலா

இ) கோபி அன்னன்

ஈ) யாசர் அராபத்

  • ஜூலை 18ஆம் தேதியானது நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
  • அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக உலகம் முழுவதும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவர், தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராவார். 1993ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புப் புரட்சியாளரான அவர் 1994 முதல் 1999 வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தார்.

3. MH-60R பன்முக ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு வழங்கிய நாடு எது?

அ) சீனா

ஆ) இங்கிலாந்து

இ) அமெரிக்கா

ஈ) நியூசிலாந்து

  • இந்திய கடற்படையானது அமெரிக்காவிலிருந்து இரண்டு MH-60R பன் முக ஹெலிகாப்டர்களைப் பெற்றுள்ளது. சான் டியாகோவில் உள்ள ஒரு கடற்படை வானூர்தி நிலையத்தில் நடந்த விழாவில், இந்திய கடற்படை அமெரிக்க கடற்படையிடமிருந்து முறையாக உலங்கூர்திகளை பெற்றது. இந்த ஹெலிகாப்டர்களை லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்தது.

4. ஐநா தரவுகளின்படி, DTP-1 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறாத குழந்தைகள் அதிகமுள்ள நாடு எது?

அ) ஜிம்பாப்வே

ஆ) இலங்கை

இ) இந்தியா

ஈ) வங்காளதேசம்

  • உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் ஐநா குழந்தைகள் அமைப்பான UNICEF’இன் அண்மைய தரவுகளின்படி, தொண்டை அடைப்பான் (D) -இசிவு நோய் (T) – கக்குவான் (P) ஒருங்கிணைந்த தடுப்பூசியின் முதல் டோஸைப்பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையில், கடந்த 2020’இல் இந்தியா உலகின் மிகப்பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
  • COVID-19 காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, 2020ஆம் ஆண்டில், வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள்மூலம் உலகளவில் 23 மில்லியன் குழந்தைகள் அடிப்படை தடுப்பூசிகளை தவறவிட்டதாக இந்தத் தரவு எடுத்துக்காட்டுகிறது.

5. UNDP நிலநடுக்கோடு பரிசை வென்ற ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் சினேககுஞ்சா அறக்கட்டளை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு மற்றும் கர்நாடகா

ஆ) தமிழ்நாடு மற்றும் கேரளா

இ) கர்நாடகா மற்றும் ஒடிஸா

ஈ) ஒடிஸா மற்றும் தெலுங்கானா

  • ஐநா வளர்ச்சி நிதியத்தின் (UNDP) நடப்பாண்டுக்கான நிலநடுக்கோடு பரிசினைப் பெற்ற பத்து விருதாளர்களுள் ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனமும் சினேககுஞ்சா அறக்கட்டளையும் அடங்கும். இது பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலைத்த பயன்பாட்டிற்கான சமூக முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் ஒரு விருதாகும்.
  • ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது 1,700 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டுறவு அமைப்பாகும். இது, தமிழ் நாட்டின் நீலகிரி உயிர்க்கோளக் காப்புப் பகுதியைச் சேர்ந்த பழங் குடியினரால் நடத்தப்படுகிறது. சினேககுஞ்சா அறக்கட்டளையானது மேற்குத்தொடர்ச்சி மலையிலும் கர்நாடக கடற்கரையிலும் உள்ள ஈர நிலம் மற்றும் கடலோர சூழலமைப்புகளைப் பாதுகாத்துள்ளது.

6. FIDE என்பது எந்த விளையாட்டின் சர்வதேச கூட்டமைப்பாகும்?

அ) கால்பந்து

ஆ) செஸ்

இ) கூடைப்பந்து

ஈ) ஹாக்கி

  • Federation Internationale des Echecs (FIDE) என்பது உலக செஸ் கூட்டமைப்பு ஆகும். இதன் தலைமையகம் சுவிசர்லாந்தின் லோசானில் அமைந்துள்ளது. இது ஜூலை 20, 1924’இல் நிறுவப்பட்டது. இது 195 உறுப்புநாடுகளைக் கொண்டுள்ளது.
  • FIDE உருவானதை நினைவுகூரும் வகையில், உலக செஸ் நாள், 1966 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.20 அன்று கொண்டாடப்படுகிறது. சதுரங்க விளையாட்டை விளையாடுவதற்கும் ரசிப்பதற்கும் இந்த நாள் அதிக மக்களை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் தோன்றிய சதுரங்கம், பெர்சியாவுக்குச் சென்று தெற்கு ஐரோப்பா முழுவதும் பரவியது.

7. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் டுரொயிகா பிளஸ் சந்திப்புக்கு முதல்முறையாக இந்தியாவை அழைத்த நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) அமெரிக்கா

இ) சீனா

ஈ) பாகிஸ்தான்

  • ஆப்கானிஸ்தானில் நடைபெறும் ரஷ்யா-அமெரிக்கா-சீனா டுரொயிகா+ சந்திப்புக்கு ரஷ்யா முதல்முறையாக இந்தியாவை அழைத்துள்ளது.
  • இந்தச் சந்திப்பு தாலிபான்களின் பங்கு மற்றும் அந்த நாட்டின் எதிர்காலம் போன்றவற்றை விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊடக அறிக்கையின்படி, ஈரானுக்கும் இந்தச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கனிமீடு என்பது எந்தக் கோளின் நிலவாகும்?

அ) வெள்ளி

ஆ) புதன்

இ) வியாழன்

ஈ) சனி

  • கனிமீடு என்பது வியாழன் கோளின் நிலவாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் இருக்கும் நிலவுகளிலேயே மிகப்பெரியதாகும்.
  • இது சூரியன் உட்பட சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பதாவது பெரிய வான்பொருளாகும். அண்மையில் NASA ஒரு புதிய காணொலியை வெளியிட்டுள்ளது. அதில், ஜூனோ விண்கலம் வியாழனின் நிலவான கனிமீடிற்கு அருகே பறந்து சென்றது. அது அதன் இருண்ட மற்றும் ஒளி பகுதிகள் மற்றும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான பள்ளத்துள் ஒன்றான டுரோஸ் பள்ளத்தையும் வெளிப்படுத்தியது.

9. இந்தியாவில் கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டிற்கான வரைவு தேசிய உத்தி மற்றும் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) சுற்றுலா அமைச்சகம்

ஆ) தொழிலாளர் அமைச்சகம்

இ) சட்ட அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • இந்தியாவில் கிராமிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு வரைவு தேசிய உத்தி மற்றும் செயல்திட்டத்தை நடுவண் சுற்றுலா அமைச்சகம் வகுத்துள்ளது. ஆத்ம நிர்பார் பாரதத்தை நோக்கிய ஒரு முயற்சியாகும் இது. இக்கொள்கை தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களிடமிருந்தும் கருத்துக்களை நடுவண் சுற்றுலா அமைச்சகம் கேட்டுள்ளது.
  • டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், கொத்துக்களை உருவாக்குதல்போன்ற புதிய யோசனைகளில் இந்த உத்தி கவனம் செலுத்துகிறது. இது சுதேஷ தரிசனத் திட்டத்தின்கீழ், கிராமிய சுற்றுலாவை இனங்கண்டுள்ளது.

10. NEA ஸ்கௌட் என்பது எந்த விண்வெளி முகமையின் புதிய விண்கலமாகும்?

அ ISRO

ஆ) JAXA

இ) NASA

ஈ) ESA

  • NASA அண்மையில் அதன் புதிய விண்கலமான NEA ஸ்கௌட் (Near-Earth Asteroid Scout) அதன் அனைத்து சோதனைகளையும் முடித்து, விண்வெளி ஏவுதள அமைப்பு ஏவுகணைக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
  • ஆர்ட்டெமிஸ்-I’இல் பயணஞ்செய்யும் பலவற்றுள் NEA ஸ்கௌட்டும் ஒன்றாகும், இது, நவம்பரில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின்கீழ், 2024ஆம் ஆண்டில் முதல் பெண்ணை நிலவில் தரையிறக்க NASA இலக்கு வைத்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வங்கிகளில் வைப்புத்தொகைக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வங்கிகளில் பொதுமக்களின் வைப்புத்தொகைக்கு `5 லட்சம் வரை காப்பீடு அளிக்கும் வகையில் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடனுறுதிக் கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி நிதிநெருக்கடியில் தவித்தபோது, அதில் வைப்புத் தொகை வைத்திருந்தவர்கள் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் திணறினார்கள்.

வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடனுறுதிக் கழக சட்டத்தின்படி, அவர்கள் அதிகபட்சமாக `1 லட்சம் வரை மட்டுமே காப்பீடு பெற முடியும் என்ற நிலை இருந்தது. அதைத்தொடர்ந்து, வைப்புத்தொகைகளுக்கான காப்பீட்டுத்தொகை `1 லட்சத்தில் இருந்து `5 லட்சமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்தத் தொகையை, விண்ணப்பித்த 90 நாள்களில் ரிசர்வ் வங்கியின்கீழ் செயல்படும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடனுறுதிக்கழகம் வழங்கும்.

இந்நிலையில், தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், வங்கிகளில் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுத் தொகையை `1 லட்சத்தில் இருந்து `5 லட்சமாக உயர்த்தும் வகையில், 1961ஆம் ஆண்டின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடனுறுதிக் கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

இந்த மசோதா சட்டமானால், நிதி நெருக்கடியில் தவிக்கும் வங்கிகளில் வைப்புத்தொகை வைத்துள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் அடைவார்கள் என்று அவர் கூறினார்.

எல்எல்பி சட்டத்தில் திருத்தம்: பல்வேறு நிறுவனங்கள் தொழில் செய்வதை எளிமையாக்கும் வகையில், நிறுவனங்களுக்கான பொறுப்புகள் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மைச் சட்டத்தில் (எல்எல்பி) உள்ள அபராதம் விதிக்கப்படக் கூடிய பிரிவுகளை நீக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, அந்தச் சட்டத்தில் உள்ள அபராதம் விதிக்கப்படக் கூடிய பிரிவுகள் 22-ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதால், நாடு முழுவதும் 2.30 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தில் முதல் முறையாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்தது.

இதுகுறித்து மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் நிறுவனங்கள் சட்டம் 2013-இல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுபோல புதிய துளிர் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் (எல்எல்பி) முக்கியமானதாகும். இந்த எல்எல்பி சட்டத்தில் இப்போது 24 தண்டனை குற்ற நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன. அதில் 21 விதிகள் கூட்டுக் குற்றங்கள் தொடர்பானது. 3 பிரிவுகள் கூட்டுக்குற்றங்கள் அல்லாதவை. இப்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களின்படி, எல்எல்பி சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் தண்டனை நடைமுறைகள் 22ஆக குறைக்கப்படும் என்பதோடு, கூட்டுக் குற்றப் பிரிவுகள் 7ஆக குறைந்துவிடும். கூட்டுக்குற்றம் அல்லாதவை 3 பிரிவுகள் என்ற நிலையில் இருக்கும். 12 குற்றங்கள் நிறுவனங்களே தீர்வுகாணும் வகையிலான பிரிவுகளாக குறைக்கப்பட உள்ளன.

இதன்மூலம், எல்எல்பி சட்டத்தில் 12 குற்றங்களுக்கான தண்டனை குறைக்கப்படுவதோடு, 3 பிரிவுகள் முழுமையாக நீக்கப்பட உள்ளன. இது, பெரு நிறுவனங்களுடனான வரையறுக்கப்பட்ட கூட்டு நடைமுறைக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய துளிர் நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.

2. உலகப் பாரம்பரிய இடமாக குஜராத்தின்தோலாவிராவை அறிவித்தது யுனெஸ்கோ

இந்தியாவில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

தோலாவிரா

தோலாவிரா என்பது சதுப்புநிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத் மாநிலத்தின் ராண் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே இருக்கிறது. தோலாவிராவின் மிகப்பெரிய ஆச்சரியமே பிரமாண்ட நீர் சேமிப்பு கட்டமைப்புதான். தோலாவிரா நகரத்தின் கட்டமைப்பு இன்றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. சிந்துசமவெளி மக்கள் எப்படியான உச்சநிலை பண்பாட்டில் வாழ்ந்தனர் என்பதை பாலைவனத்துக்கு நடுவே சாட்சியமாக நின்று சொல்கிறது இந்தத் தோலாவிரா.

1. Government of India has signed loan agreement with which Bank to develop Green National Highway Corridors (GNHCP)?

A) IMF

B) World Bank

C) AIIB

D) ADB

  • Union Minister of Road Transport and Highways, Nitin Jairam Gadkari announced that the Government had signed loan agreement with the World Bank to develop Green National Highway Corridors (GNHCP).
  • The project includes upgradation of about 781 km length of various National Highways passing through the states of Rajasthan, Himachal Pradesh, Uttar Pradesh and Andhra Pradesh. Out of total length of 781 km, work on 287.96 km with an outlay of Rs. 1664.44 cr. has been awarded. The project is estimated to be completed by December, 2025.

2. July 18 is the birth anniversary of which Nobel Prize winning leader?

A) Aung San Suu Kyi

B) Nelson Mandela

C) Kofi Annan

D) Yasser Arafat

  • July 18 is celebrated as Nelson Mandela International Day marking his birth date. He is known and remembered all over the world for his efforts to promote peace and reconciliation. He became the first Black President of South Africa and was awarded the Noble Prize for Peace in the year 1993. The South African anti–apartheid revolutionary served as President of South Africa from 1994 to 1999.

3. Which country supplied the MH–60R multi–role helicopters to India?

A) China

B) England

C) USA

D) New Zealand

  • The Indian Navy has received two MH–60R multi–role helicopters from the US. The Indian Navy formally received the choppers from the US Navy in a ceremony held at a naval air station in San Diego. The helicopters were manufactured by Lockheed Martin Corporation.

4. As per the UN Data, which country recorded the greatest increase in children not receiving a first dose of DTP–1 vaccine?

A) Zimbabwe

B) Sri Lanka

C) India

D) Bangladesh

  • As per the recent data from the World Health Organisation (WHO) and the UN children’s agency UNICEF, India recorded the greatest increase in the world in the number of children who didn’t receive the first dose of diphtheria–tetanus–pertussis combined vaccine in 2020.
  • The data highlights that 23 million children globally missed the basic vaccines through routine immunisation services in 2020, due to disruptions caused by COVID–19.

5. Aadhimalai Pazhangudiyinar Producer Company and Snehakunja Trust, which won the UNDP Equator Prize are from which state?

A) Tamil Nadu and Karnataka

B) Tamil Nadu and Kerala

C) Karnataka and Odisha

D) Odisha and Telangana

  • Aadhimalai Pazhangudiyinar Producer Company and Snehakunja Trust are the two Indian institution among the 10 awardees of the United Nations Development Fund (UNDP) Equator Prize 2021.
  • This is a biennial award to recognize community efforts for conservation and sustainable use of biodiversity. Aadhimalai Pazhangudiyinar Producer Company Limited is a 1,700–member cooperative, run by indigenous people from the Nilgiri Biosphere Reserve in Tamil Nadu. Snehakunja Trust has protected wetland and coastal ecosystems in the Western Ghats and the Karnataka coast.

6. FIDE is the international federation of which game?

A) Football

B) Chess

C) Basketball

D) Hockey

  • Federation Internationale des Echecs (FIDE) is the World Chess Federation, headquartered at Lausanne, Switzerland. It was founded on July 20, 1924 and has as many as 195 member countries.
  • To commemorate the formation of FIDE, World Chess Day is celebrated on July 20, every year since 1966. The day encourages more people to play and enjoy the game of chess. Chess originated in India, moved to Persia and spread across the Southern Europe.

7. Which country has invited India for the first time to the Troika Plus meet on Afghanistan?

A) Russia

B) USA

C) China

D) Pakistan

  • Russia has invited India for the first time to the Russia–US–China Troika Plus meet on Afghanistan.
  • The meeting aims to discuss the role of Taliban and the future of the landlocked country, among other issues. As per media reports, Iran has also been invited for the meeting. Pakistan and representatives from Afghanistan are also expected to take part in the meeting.

8. Ganymede, which was making news recently, is the moon of which planet?

A) Venus

B) Mercury

C) Jupiter

D) Saturn

  • Ganymede is a satellite of Jupiter and is the largest and most massive of the moons present in the Solar System. It is also the ninth–largest object of the Solar System, including the Sun.
  • The US space agency NASA has recently released a new video in which its Juno spacecraft was seen flying close to Jupiter’s moon Ganymede. The video shows several of the moon’s dark and light regions as well as the crater Tros, one of the largest and brightest crater scars on Ganymede.

9. Which Union Ministry has formulated a Draft National Strategy and Roadmap for Development of Rural Tourism in India?

A) Ministry of Tourism

B) Ministry of Labour

C) Ministry of Law

D) Ministry of Home Affairs

  • The Ministry of Tourism has formulated a Draft National Strategy and Roadmap for Development of Rural Tourism in India – An initiative towards Atmanirbhar Bharat.
  • The Ministry has also invited feedback from all the State Governments/UT Administrations regarding the policy. The strategy focusses on new ideas like Digital technologies, Developing clusters among others. It has also identified Rural Circuit as one of the thematic circuits under Swadesh Darshan Scheme.

10. NEA Scout, is the new Spacecraft of which space agency?

A) ISRO

B) JAXA

C) NASA

D) ESA

  • NASA recently announced that its new spacecraft, named NEA Scout (Near–Earth Asteroid Scout) has completed all required tests and has been safely tucked inside the Space Launch System (SLS) rocket. NEA Scout is one of several payloads that will ride on Artemis I, which is expected to be launched in November. Under the Artemis programme, NASA has aimed to land the first woman on the Moon in 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!