Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

29th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

29th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘India’s Booming Gig and Platform Economy’ என்ற தலைப்பில் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. உலக தொழிலாளர் அமைப்பு

இ. NITI ஆயோக் 

ஈ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • “இந்தியாவில் பெருகிவரும் வேலைவாய்ப்பு மற்றும் சாலையோர பொருளாதாரம்” என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை NITI ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்திய சாலையோர தொழில்புரிகுவோரின் எண்ணிக்கை 2029-30 ஆம் ஆண்டுக்குள் 23.5 மில்லியனாக விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது; அது தற்போதுள்ள 7.7 மில்லியனை ஒப்பிடும்போது 200 சதவீதம் அதிகமாகும். 2029-2030-க்குள் இந்தியாவில் உள்ள மொத்த பணியாளர்களில் இவர்களின் சதவீதம் மட்டும் 4.1 சதவீதத்தைக் கொண்டிருக்கும் என இவ்வறிக்கை மதிப்பிடுகிறது; அது தற்போது 1.5 சதவீதமாக உள்ளது.

2. மாவட்டங்களுக்கான செயல்திறன் தர அட்டவணையை (PGI-D) வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம் 

ஈ. ஜல் சக்தி அமைச்சகம்

  • கல்வி அமைச்சகமானது 2019-20ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டை (PGI-D) வெளியிட்டது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் டிஜிட்டல் கற்றல் வகையின்கீழ் மிகமோசமாக செயல்பட்டதாக அது குறிப்பிட்டது. இராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், சிகார் மற்றும் ஜுஞ்சூனு மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. PGI-D அமைப்பு ஆறு வகைகளின்கீழ் 600 புள்ளிகளைக்கொண்டு இதனை தயார் செய்துள்ளது.

3. கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைக்காகமானது கீழ்க்காணும் எந்த நகரத்தில் ‘One Health – ஒரு சுகாதாரம்’ என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கவுள்ளது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு 

இ. ஆமதாபாத்

ஈ. மைசூர்

  • நடுவண் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, இந்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து ‘ஒரு சுகாதார’ முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.
  • மனிதர்கள், விலங்குகள் எதிர்கொள்ளும் சுகாதாரப்பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஒரே தளத்தில் எதிர்கொள்வதற்கான இம்முன்னோடித் திட்டம், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இந்திய தொழில்கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையால் கர்நாடகா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ளன.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற T-ஹப் என்பது எந்த மாநிலத்தில் உள்ள துளிர் நிறுவன அடைவகமாம்?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா 

இ. திரிபுரா

ஈ. கர்நாடகா

  • தெலுங்கானா மாநில முதலமைச்சர் K சந்திரசேகர் இராவ் அண்மையில் ஹைதராபாத்தில் ‘T-ஹப்’ என்ற வணிக அடைவகத்தை திறந்து வைத்தார். ‘T-Hub 2.0’ என்று அழைக்கப்படும் இந்தப் புதிய கட்டிடம், உலகின் மிகப்பெரிய புத்தாக்க வளாகம் எனக் கூறப்படுகிறது. இந்த வசதி ஒரே கூரையின் கீழ் 2,000 துளிர்நிறுவல்களை ஆதரிக்கும். கடந்த 2015இல் நிறுவப்பட்ட, T-ஹப் (தொழில்நுட்ப மையம்) என்பது ஹைதராபாத் நகரத்தைச் சார்ந்த ஒரு புத்தாக்க மையமாகும்.

5. 2023-இல் G20 உச்சிமாநாட்டை நடத்தும் இந்திய மாநிலம்/UT எது?

அ. கேரளா

ஆ. ஜம்மு காஷ்மீர் 

இ. ஒடிஸா

ஈ. சிக்கிம்

  • 2023இல் இந்தியா நடத்தும் G20 உச்சிமாநாட்டின்போதான கூட்டங்களுக்கு ஜம்மு மற்றும் காஷ்மீரை வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பிற்காக ஐந்துபேர் கொண்ட உயரதிகாரங்கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் முதல் G20 கூட்டங்களாம் இவை. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துசெய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச மாநாடு இதுவாகும்.

6. விரிவான புற்றுநோய் கண்டறியும் சேவைகளுக்காக நாட்டின் முதல் புற்றுநோயியல் ஆய்வகத்தை தொடக்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

  • விரிவான புற்றுநோய் கண்டறியும் சேவைகளுக்கான நாட்டின் முதல் புற்றுநோயியல் ஆய்வகமான புற்றுநோய் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கார்கினோஸ் ஹெல்த்கேரின் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சிக்கான இம்மேம்பட்ட மையம் ஒரு மைய ஆய்வகமாக செயல்படும். தொடக்கக்கால நோயறிதல் கருவிகள், துல்லியமான மருத்துவத்திற்கான மூலக்கூறு மதிப்பீடுகள் ஆகியவற்றில் கவனஞ்செலுத்தப்படுகிறது. TATA குழுமம் `110 கோடியை கார்கினோஸில் முதலீடு செய்கிறது. இரகுடென் மெடிக்கல், மேயோ கிளினிக் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஹெல்த் முதலானவை மற்ற பங்குதாரர்கள் ஆகும்.

7. ‘இந்திய இரயில்வேக்கான புதுமைக்கொள்கையின்’படி, கண்டுபிடிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்தின் அதிகபட்ச வரம்பு என்ன?

அ. ரூ.10 இலட்சம்

ஆ. ரூ.25 இலட்சம்

இ. ரூ.50 இலட்சம்

ஈ. ரூ 1.5 கோடி 

  • துளிர்-நிறுவல்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘இந்திய இரயில்வேக்கான புதுமைக்கொள்கை’யை அறிமுகப்படுத்தினார். ‘இரயில்வேக்கான துளிர்-நிறுவல்கள்’ என்றும் குறிப்பிடப்படும் இந்தக் கொள்கையானது `1.5 கோடி மதிப்பில் சம பகிர்வு அடிப்படையில் கண்டுபிடிப்பாளர்களுக்கு மூலதன மானியத்தை வழங்கும்.

8. தொற்றுநோய் காலத்தில் இந்தியாவிலிருந்து அரிசியை அதிகம் வாங்கிய நாடு எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. சீனா

ஈ. தென் கொரியா

  • 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த அரிசி ஏற்றுமதியில் 16.34 லட்சம் மெட்ரிக் டன்கள் (LMT) அல்லது 7.7 சதவீதத்தை இறக்குமதி செய்து, தொற்றுநோய்களின்போது இந்திய அரிசியை அதிக அளவில் வாங்கிய நாடாக சீனா உருவெடுத்தது. 2021-22இல், இந்தியாவின் மொத்த அரிசி ஏற்றுமதி (பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத இரண்டும்) 212.10 LMT ஆக இருந்தது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனாவின் மொத்த அரிசியில், கிட்டத்தட்ட 97% உடைந்த அரிசியாகும்; இது அந்த நாட்டின் அதீத தேவையை உணர்த்துகிறது. இந்தியா முன்பு பெரும்பாலும் உடைந்த அரிசியை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

9. இந்தியா சமீபத்தில் அந்தமான் கடல் மற்றும் மலாக்கா நீரிணையில் எந்த நாட்டுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப்பயிற்சியை மேற்கொண்டது?

அ. வங்காளதேசம்

ஆ. இந்தோனேசியா 

இ. இலங்கை

ஈ. பிரான்ஸ்

  • இந்திய மற்றும் இந்தோனேசிய கடற்படைக்கு இடையிலான 38ஆம் இந்தியா-இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்துப்பயிற்சி (IND-INDO CORPAT) அந்தமான் கடல் மற்றும் மலாக்கா நீரிணையில் நடத்தப்படுகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் படைப்பிரிவின் கடற்படைப் பிரிவுகள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் தொற்றுநோய்க்குப் பிந்தைய ஒருங்கிணைந்த ரோந்து (CORPAT) இதுவாகும். இருகடற்படைகளும் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு கடல் எல்லைக்கோட்டின் வழியாக ‘CORPAT’ஐ மேற்கொண்டு வருகின்றன.

10. ‘பிரதம மந்திரி தேசிய தொழிற்பயிற்சி மேளா’வுடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் 

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. கல்வி அமைச்சகம்

  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பயிற்சி மேளாவை ஏற்பாடு செய்யும். ஒரு நபரின் பயிற்சிக்காலத்தின் முடிவில், அவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக் -கான தேசிய கவுன்சில்மூலம் (NCVET) அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இம்மேளாவின் முதன்மை நோக்கம் நகரங்களிலிருந்து தொழில்பழகுநரை பணியமர்த்துவதை ஊக்குவிப்பதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நெகிழி தடை ஜூலை 1 முதல் அமல்

ஒருமுறை மட்டும் பயனபடுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நெகிழி கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை, பயன்பாட்டிற்கு வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும், ஆழ்கடல் பரப்பிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

2019-இல் நடைபெற்ற ஐ.நா.வின் நான்காவது சுற்றுச்சூழல் மாநாட்டில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து உலக அளவில் கவனஞ்செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியா முன்மொழிந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தடை செய்யப்படும் நெகிழிப் பொருள்கள்: நெகிழி குச்சிகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, நெகிழி குச்சிகளுடன் கூடிய பலூன்கள், நெகிழி கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மோகோல், நெகிழி தட்டுகள், குவளைகள், நெகிழி கத்தி, ஸ்பூன், போர்க், உறிஞ்சுக்குழல், டிரே, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கும் குறைவான நெகிழி அல்லது பிவிசி பேனர்கள் போன்றவை தடைசெய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதில் அரசுக்கு உதவும் வகையில், மக்களுக்கு அதிகாரம் அளிக்க குறைதீர்ப்பு செயலியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது என்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘பிரக்ரித்தி’ என்ற இலட்சினை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2. 29-06-2022 – தேசிய புள்ளியியல் நாள்

பொருளாதார திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறைக்கு மறைந்த பேராசிரியர் பிரசந்த சந்திர மகாலனோபிஸ் வழங்கிய மதிப்புமிகு பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான ஜூன்.29 ஒவ்வோர் ஆண்டும் புள்ளியியல் நாளாக ஒன்றிய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டின் சமூக-பொருளாதார திட்டமிடல், வளர்ச்சிக்கான கொள்கை வகுத்தல் ஆகியவற்றில் புள்ளியியலின் பங்களிப்பும், முக்கியத்துவமும் குறித்து பொதுமக்களிடையே குறிப்பாக இளந்தலைமுறையினர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது புள்ளியியல் நாளின் முக்கிய நோக்கமாகும். ஆண்டுதோறும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருளில் இந்த நாள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு (2022) “நீடித்த வளர்ச்சிக்கான தரவுகள்” என்பது கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3. தொழில்நுட்ப குளறுபடியை தீர்க்க 50 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி

கல்லுாரி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும், ‘நாளைய திறன்’ பயிற்சி திட்டம் விரைவில் தொடக்கப்படும் என, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், ‘நாளைய திறன்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்கான பயிற்சியளிக்கப்படும்.

4. தொழிலணங்கு – பெண்களை தொழில்முனைவோராக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம்

தமிழ்நாட்டில் துளிர் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு புத்தொழில்கள் மற்றும் புத்தாக்க இயக்கம் (Tamil Nadu Startup and Innovation Mission) மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது பெண்களின் மறுமலர்ச்சிக்காக ‘தொழிலணங்கு’ என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது தமிழ்நாடு புத்தொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனம்.

சுய உதவிக் குழுக்களின் செயல்முறையை முற்றிலுமாக மாற்றி அதன் உறுப்பினர்களை ஆக்கபூர்வமான தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே இம்முயற்சியின் நோக்கம். இதனடிப்படையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ‘Smart SHG’ குழுக்களில் இருந்து உருவாகும் தொழிற்முயற்சிகளுக்கு பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்யவிருக்கின்றன.

5. உயர்நீதிமன்றத்தில் முதல் முறை பெண் தபேதார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக திலானி என்ற பெண் தபேதாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த சென்னை உயர்நீதிமன்ற பணியாளர்கள் நியமனத்தில், இவர் தேர்வு செய்யப்பட்டு, தற்போது தபேதாராக நீதிபதி மஞ்சுளாவிடம் பணிபுரிந்து வருகிறார்.

6. 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெறும்

11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சார்ஜாவில் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சிகாகோவில் 10ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி ஆனது 1966ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது.

1. Which institution recently released a report titled ‘India’s Booming Gig and Platform Economy’?

A. World Bank

B. International Labour Organisation

C. NITI Aayog 

D. International Monetary Fund

  • NITI Aayog released a report titled ‘India’s Booming Gig and Platform Economy’ recently. The Indian gig workforce is expected to expand to 23.5 million workers by 2029–30, a 200 percent jump from 7.7 million now. The report estimates that gig workers will form 4.1 per cent of the total workforce in India by 2029–2030, from 1.5 per cent now.

2. Which Union Ministry released the ‘Performance Grading Index for Districts (PGI–D)’?

A. Ministry of MSME

B. Ministry of Electronics and IT

C. Ministry of Education 

D. Ministry of Jal Shakti

  • Ministry of Education released the Performance Grading Index for Districts (PGI–D) for 2019–20, and noted that schools across India performed poorly under the category of digital learning. The top performing districts were Jaipur, Sikar and Jhunjhunu in Rajasthan. The PGI–D structure has 600 points, under six categories.

3. Department of Animal Husbandry and Dairying is set to launch ‘One Health’ Pilot project in which city?

A. Chennai

B. Bengaluru 

C. Ahmedabad

D. Mysuru

  • The Department of Animal Husbandry and Dairying is set to launch the One Health Pilot project in Bengaluru. It will help develop a roadmap for a national project to prevent future outbreaks of zoonotic diseases by using better response mechanism and management and incorporating global best practices. DAHD in collaboration with the Bill & Melinda Gates Foundation and CII as partner is implementing the One–Health Framework project in Karnataka and Uttarakhand.

4. T–Hub, which was seen in the news, is a start–up incubator based in which state?

A. Tamil Nadu

B. Telangana 

C. Tripura

D. Karnataka

  • Telangana Chief Minister K Chandrasekhar Rao recently inaugurated the new facility of business incubator T–Hub in Hyderabad. The new building, called T–Hub 2.0 is claimed to be world’s largest innovation campus. The facility will support over 2,000 startups under one roof. Established in 2015, T–Hub (Technology Hub) is an innovation hub and ecosystem enabler based in the city of Hyderabad.

5. Which Indian state/ UT is the host of G–20 summit in 2023?

A. Kerala

B. Jammu and Kashmir 

C. Odisha

D. Sikkim

  • Jammu and Kashmir has been selected by the Ministry for External Affairs (MEA) for meetings during the G–20 summit, to be hosted by India in 2023. The Jammu and Kashmir government has constituted a five–member high–powered panel for overall coordination of G20 meetings to be held in the union territory. This will be the first major international summit to be held in Jammu and Kashmir after abrogation of its special status.

6. Which state inaugurated the country’s first oncology laboratory for comprehensive cancer diagnostic services?

A. Tamil Nadu

B. Kerala 

C. Gujarat

D. Karnataka

  • Kerala Chief Minister Pinarayi Vijayan inaugurated a cancer diagnostics and research centre, which is the country’s first oncology laboratory for comprehensive cancer diagnostic services.
  • Karkinos Healthcare’s advanced centre for cancer diagnostics and research will serve as a central lab. The focus is on early diagnostic tools, molecular assays for precision medicine. The Tata Group is investing Rs 110 crore in Karkinos while other stake holders are Rakuten Medical, Mayo Clinic and Reliance Digital Health.

7. As per the ‘Innovation Policy for Indian Railways’, what is the maximum limit of grant provided to innovators?

A. Rs 10 lakh

B. Rs 25 lakh

C. Rs 50 lakh

D. Rs 1.5 Crore 

  • Minister of Railways Ashwini Vaishnaw has launched ‘Innovation Policy for Indian Railways’, to encourage participation of start–ups. Also referred as ‘Start–Ups for Railways’, the policy seeks to provide up to Rs. 1.5 Crore to innovators on equal sharing basis.

8. Which country was the top buyer of Indian rice during the pandemic?

A. Maldives

B. UAE

C. China 

D. South Korea

  • China emerged as the top buyer of Indian rice during the pandemic, importing 16.34 lakh metric tonnes (LMT) or 7.7 per cent of India’s total rice export in financial year 2021–22. In 2021–22, India’s total rice export (both basmati and non–basmati) was 212.10 LMT. Out of China’s total rice import from India, nearly 97 percent was broken rice, which has seen a rise in demand from that country. India used to export broken rice mostly to African countries, earlier.

9. India recently conducted a Coordinated Patrol exercise with which country on the Andaman Sea and Straits of Malacca?

A. Bangladesh

B. Indonesia 

C. Sri Lanka

D. France

  • The 38th India–Indonesia Coordinated Patrol (IND–INDO CORPAT) between the Indian and Indonesian Navy is being conducted in the Andaman Sea and Straits of Malacca. The Navy Units of Andaman and Nicobar Command (ANC) represent India. This is the first post pandemic Coordinated Patrol (CORPAT) between the two countries. The two Navies have been carrying out CORPAT along their International Maritime Boundary Line since 2002.

10. ‘Pradhan Mantri National Apprenticeship Mela’ is associated with which Union Ministry?

A. Ministry of Skill Development and Entrepreneurship 

B. Ministry of Commerce and Industry

C. Ministry of MSME

D. Ministry of Education

  • The Ministry of Skill Development and Entrepreneurship will organise the Pradhan Mantri National Apprenticeship Mela every month. At the end of a candidate’s training period, they will be awarded an Apprenticeship certificate, acknowledged by the National Council for Vocational Education and Training (NCVET). The primary objective of the Mela is to encourage the hiring of apprentices from the cities.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!